Showing posts with label தேர்தல்-2011. Show all posts
Showing posts with label தேர்தல்-2011. Show all posts

சீமானை வீழ்த்த நடக்கும் சதி..!

02-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உண்மையாகவே பெரிதும் வருத்தப்படுகிறேன்..!

நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..!

எனக்கு சீமானுடன் நேரடி பழக்கமில்லை. கை குலுக்கியிருப்பதோடு சரி..! இருந்தாலும் நான் இப்போதும் உறுதியுடன் சொல்கிறேன்.. விஜயலட்சுமி என்னும் இந்த நடிகை சொல்லியிருப்பது அபாண்டமானது..!

ஒரு பெண்ணி்ன் நடத்தையை வைத்து அவரை எடை போட முடியுமா..? அல்லது ஒரு சம்பவத்தினாலேயே அவரை பலி கடாவாக்க முடியுமா..?

முன்பு அப்படியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது திருந்தியிருக்கலாமே..?

ஏன் சீமானே மாறியிருக்கலாமே.. ஒரு நிமிடத்தில் அப்படி நடந்திருக்கலாமே..?

இப்படியெல்லாம் பகுத்தறிவோடு சிந்திக்காமல் இந்தச் செய்தியைப் படித்த காலை பொழுதிலேயே நான் உணர்ந்துவிட்டேன் இது நிச்சயம் பொய்யான புகாராகத்தான் இருக்கும் என்று..!

முதல் காரணம் செல்வி.விஜயலட்சுமியின் குணநலன்கள் அவர் சின்னத்திரைக்குள் கால் வைத்த தினத்தில் இருந்து என் காதுகளுக்கு எட்டியபடியே இருந்ததினால்தான்..! அவரைப் பற்றிய பல திடுக்கிடும் செய்திகள் பலவிதமான நண்பர்களிடமிருந்து ஒரே மாதிரியாக வந்து சேர்ந்து கொண்டேயிருந்தன.

அது ஒன்றே ஒன்றுதான்.. அவர் தகுதிக்குரியவர் என்று யாரை நினைக்கிறாரோ அவரிடமெல்லாம், “ஐ லவ் யூ..” சொல்வார்..! சிலரை இப்படியே கிறங்கடித்திருக்கிறார். பலர் அது உண்மையோ என்று நம்பி விஜயலட்சுமியுடன் சின்சியராகப் பழகத் துவங்க, சில நாட்களிலேயே வேறொருவருக்கு “ஐ லவ் யூ..” சொல்லிவிட்டு தாவி விடுவார் என்றார்கள்..!

சின்னத்திரை உலகம் மிகவும் சிறியது.. முதல் நாள் ஓரிடத்தில் கேமிரா உதவியாளராகவும், செட் உதவியாளராகவும், தயாரிப்பு உதவியாளராகவும் பணியாற்றுபவர் மறுநாள் வேறொரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேரிடும். மறுநாள் மீண்டும் முதல் நாள் சீரியலுக்கே திரும்பி வர வேண்டியிருக்கும்.. இப்படி இவர்கள் குண்டுச் சட்டிக்குள் ஓடுவதைப் போலவே ஓடிக் கொண்டிருப்பதால் ஒரு ஷூட்டிங்கில் நடப்பது, அடுத்த நாள் வேறொரு ஷூட்டிங்கில் லைவ் ரிலேவாக ஓடிக் கொண்டிருக்கும்.

அவைகளனைத்தையும் மீண்டும் இங்கே சொல்லி அவரைக் கேவலப்படுத்துவது எனது நோக்கமல்ல..! ஆனால் உண்மையே அவருடைய நடத்தையைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதால் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது..!

சீரியல்களில் நடிக்கும்போது, “நான் உங்களைக் காதலிக்கிறேன்..” என்று சில புரொடெக்ஷன் மேனேஜர்கள், கேமிராமேன்கள், இயக்குநர்களிடத்தில் விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இரண்டாவது யூனிட் இயக்குநரைக்கூட அவர் விட்டுவைத்ததில்லை.

“ஏன் லேட்டா வர்றீங்க..?” என்று கேட்டால்கூட 'கையைப் பிடித்து இழுத்தார்' என்ற ரேஞ்ச்சுக்கு ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார் விஜயலட்சுமி. இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைச் சமாளித்தார்கள் இயக்குநர்கள்..!

அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோதுதான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராடன் டிவி நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டு பஞ்சாயத்தாக்கப்பட்டது. அப்போதுதான் விஜயலட்சுமி சொன்ன “ஐ லவ் யூ” கதைகள் அனைத்தும் அம்பலமாகின..!

'தங்கவேட்டை' நிகழ்ச்சியின் இயக்குநர் ரமேஷ் மீது தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி பொய்யாக, போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு போன பின்புதான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் ரமேஷ்.. சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்..!

2008-ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தமும் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார். விஜயலட்சுமி மீண்டும் இப்போதுதான் 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் தமிழில் ரீ எண்ட்ரீயாகியிருந்தார்..!

இவருடைய இந்த நிலைமையோடு, சீமானின் நிலைமையையும்  கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்..!

வீடு முழுவதும் உதவி இயக்குநர்கள்.. தற்போதைய நிலையில் 10 இளைஞர்கள், அவருடைய வீட்டில் அவருடனேயே தங்கியிருக்கிறார்கள். ஒரு முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டு சாதா சிறைவாசம் அனுபவித்தார். அப்போதெல்லாம் இந்த விஜயலட்சுமி எங்கேயும் தென்பட்டதில்லை. 2 ஆண்டுகளாக காதலித்தோம் என்று கதை விடுவதற்கும் ஒரு அளவில்லையா..?

சீமானின் வீடு 24 மணி நேரமும் ஜாபர்சேட்டின் கண் பார்வையில்தான் இருந்தது. அவருடைய உதவி இயக்குநர்கள் அனைவருமே சீமானைப் போன்று தமிழ்த் தேசியம், ஈழம், பிரபாகரன் என்ற எண்ணத்திலேயே இருப்பவர்கள். இது போன்ற சின்னப்புள்ளத்தனத்திலெல்லாம் ஈடுபட சீமானுக்கெங்கே நேரமிருக்கப் போகிறது..?

அத்தோடு கட்சி வேறு ஆரம்பித்த கையோடு எப்பவும் நிருபர்களின் கண் பார்வையிலேயே இருந்தவர் இந்த விவகாரம் உண்மையாக இருந்திருந்தால் இந்நேரம் மாட்டியிருப்பார். சீமானை நன்கு அறிந்தவர்கள் இதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பார்கள்..! அவருக்கு காதல், கல்யாணம் இதிலெல்லாம் அக்கறையில்லை என்பது திரையுலகத்தினருக்கே தெரிந்த விஷயம்தான்.

இப்போதுதான் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினரின் வற்புறுத்தலினால் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணை மணக்கலாம் என்ற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்று சிலிர்க்கிறார்கள் அவரது உதவி இயக்குநர்கள்..!

விஜயலட்சுமியுடனான அவரது தொடர்பு ஒன்றே ஒன்றுதான். அது விஜயலட்சுமியின் அக்கா உஷாவின் வரதட்சணை புகார் பற்றியது. விஜயலட்சுமியின் அக்கா கணவர் என்னைப் போன்ற சற்று யூத்தான தமிழ் இளைஞர்களுக்கு நன்று அறிமுகமானவர். 'திருட்டு புருஷன்' என்று ஆண்டு முழுவதும் காலை காட்சியாக ஓடி சாதனை படைத்த திரைப்படத்தின் கதாநாயகன் ராஜ்பாபு. இவர் நடிகை ஜெயப்ரதாவின் சொந்தத் தம்பி.

இவருடனான குடும்ப உறவு முறிந்த நிலையில், தனது அக்காவின் மகனை மீட்டுக் கொடுக்கும்படி 2008-ம் ஆண்டு விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்தச் சமயத்தில்தான் சீமானை விஜயலட்சுமி சந்தித்ததாக சீமானின் வழக்கறிஞர் சொல்கிறார். சீமானை விஜயலட்சுமி தெரிந்து வைத்திருந்ததற்கு காரணம் சீமான் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் அவரும் நடித்திருந்ததுதான். இந்தச் சின்னத் தொடர்பை வைத்து 3 ஆண்டுகள் கழித்து சூப்பரான திரைக்கதை அமைத்து கதை கட்டிவிட்டிருக்கிறார்கள் சிலர்..!

நேற்று இந்தத் தகவல் நிருபர்களுக்கு எப்படி சென்றது என்பதும் ஒரு சுவாரசியம்..! காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர்தான் சினிமா பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கமிஷனர் அலுவலகத்துக்குப் போகும் முன்பேயே, விஜயலட்சுமி புகார் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்..!

ஆக முன்பே நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகமாகவே இதனை நான் கருதுகிறேன்..! இதற்கு விஜயலட்சுமி என்ற பெண்ணும் உடந்தை என்பதுதான் வேதனை..!

ஒருவரின் கொள்கைகளை, கருத்துக்களை நேருக்கு நேராகச் சந்திக்கத் தைரியமில்லாத கோழைகள், அவரை எப்பாடுபட்டாவது வீழ்த்திவிட வேண்டும் என்று நினைத்து கேரக்டர் அஸாஸினேஷன் செய்ய முயற்சிப்பது கேவலமானது..!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீமானின் புயல்வேகப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் டவுசர் கிழிந்தது, அக்கட்சியினருக்கு பெரும் கோபத்தைக் கிளறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!

தி.மு.க. நின்ற இடங்களிலெல்லாம் தோல்வி என்றால் அது ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த கடுப்பு என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் மீது..? அவர்கள் ஆளும் கட்சியினரின் தோழமைக் கட்சி என்ற ஒரு விஷயம் மட்டும்தான். ஆனால் இந்த ஒன்றுக்காகவேதான் காங்கிரஸுக்கு இவ்வளவு பெரிய தோல்வியா என்றால் இதை நான் நம்பவில்லை..!

ஊழலில் கூட்டணி அமைத்தது.. உயர்ந்து கொண்டேயிருந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திராணியற்ற நிலையில் ஆட்சி நடத்தியது.. கூடவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களை கொந்தளிக்க வைத்திருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி செய்த துரோகமும், அந்தத் துரோகத்தை சீமான் தோலுரித்துக் காட்டியதாலும்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு இந்த அளவுக்கான படுதோல்வி கிடைத்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்..!

இல்லையெனில் தி.மு.க. கூட்டணி தோற்றிருந்தாலும், காங்கிரஸுக்கு சுமாராக 15 தொகுதிகளாவது கிடைத்திருக்கும்.. அதிலும் மாதத்தில் 20 நாட்கள் தொகுதியிலேயே இருந்து வீடு, வீடாக சென்று தனது பெயரை நிலை நாட்டி, கோடியை செலவிட்டிருந்த ஹெச்.வசந்தகுமாரும், வேலூரில் சிறந்த எம்.எல்.ஏ. என்று 4 முறையும் பெயரெடுத்திருந்த சி.ஞானசேகரனும், ராமநாதபுரத்தில் மதப் பெரியவர்களின் முழு ஆசியைப் பெற்றிருந்த ஹசன் அலியும் தோற்றிருக்கவே மாட்டார்கள்..!

பாரதீய ஜனதா என்ற கட்சி இடையில் புகுந்து ஓட்டுக்களைக் களவாடிய காரணத்தினால்தான் தற்போதைய 5 சீட்டுக்களே காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. பா.ஜ.க.வும் வராமல் இருந்திருந்தால் முட்டைதான் கிடைத்திருக்கும்..! 

ஆக.. காங்கிரஸின் இந்தத் தோல்வியில் சீமானுக்கு பெரும் பங்கு உண்டு என்பது அக்கட்சியினருக்கு கோபத்தைக் கிளப்பி, இப்படியொரு பொய்யான புகார் கொடுக்க பின்புலமாக இருந்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது..!

இன்று காலையில் இருந்தே சினிமா துறையினர் பலரும் நிச்சயம் இது கட்டுக் கதை என்றே சொல்கின்றனர். இந்த அளவுக்கு சீமானின் நிஜ சுயரூபம் சினிமாவுலகில் தெரிந்திருக்கிறது..! இது ஒன்று போதும் அவருக்கு..!

எனக்கு சாபமிட மனசு வரவில்லை. ஆனாலும் மனம் பொறுக்காமல் சொல்கிறேன்.. விஜயலட்சுமியும், இந்தப் பழிக்குப் பின்னால் இருப்பவர்களும் வருங்காலத்தில் நிச்சயம் வெம்புவார்கள்..!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்-2011 - வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்..!

16-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2011, ஏப்ரல் 13 அன்று நடந்து முடிந்த 14-வது சட்டப் பேரவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய முழு விபரங்களைத் தொகுத்து வழங்கலாம் என்று நினைத்து தேடிக் கொண்டிருந்தேன்.  பல்வேறு பத்திரிகைகளும் அவற்றை முழுப் பக்க அளவில் வெளியிட்டிருந்ததால் இணையத் தொகுப்பில் அவற்றை இணைக்கவில்லை. இதனால் பி.டி.எஃப் மற்றும் இமேஜ் பைலாக அவைகள் கிடைக்கவில்லை.

பார்த்து, பார்த்து அனைத்தையும் தட்டச்சு செய்தால்தான் முடியும் என்ற நிலை. ஆனால் தற்போதைய எனது வேலைப் பளுவில் அது முடியாத காரியம் என்பதால் அதையும் தவிர்த்தேன். கடைசியில் இன்று ஒரு நண்பரின் உதவியுடன் தினகரன் பத்திரிகையில் வெளி வந்த அனைத்து முழுப் பக்க மாவட்ட வாரியான தொகுதி முடிவுகளை ஸ்கேன் செய்து இங்கே வெளியிடுகிறேன்..!

படிப்பதற்கு சிறியதாக இருந்தால் அதனை கிளிக் செய்து புதிய பிரவுசரில் பெரிதுபடுத்திப் படித்துப் பார்க்கவும்..!

தொந்தரவிற்கு மன்னிக்கவும்..










பொறுமையாகப் படித்து, முடித்த கழகத்தின் கண்மணிகளுக்கு எனது பணிவான நன்றிகள்..! 

தகவல்களுக்கு பெரிதும் நன்றி : தினகரன் நாளிதழ்

அ.தி.மு.க. அமைச்சரவையின் முதல் பட்டியல் வெளியீடு..!

15-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


நமது மதிப்பிற்குரிய ஆத்தா, டாக்டர் புரட்சித் தலைவி இந்த 2011-2016-ம் ஆண்டிற்கான அமைச்சரவையின் முதல்கட்டப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளார்கள்..!

இதில் 11 பேர் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்.  23 பேர் தற்போதுதான் முதல்முறையாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்கிறார்கள்..! அமைச்சரவையில் ஜெயலலிதா உட்பட 3 பேர் மட்டுமே பெண்கள்..!

இந்தப் பட்டியலில் உள்ளவர்களை நீங்கள் மனப்பாடம் செய்து வைப்பதற்குள் அவர்கள் மாற்றப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல..!

அத்தோடு இவர்களில் சிலர் புதுமுகங்கள் என்பதால் அவர்கள் எக்குத்தப்பாக எதிலாவது மாட்டிக் கொண்டால் அடுத்த நிமிடமே சீட்டு கிழிக்கப்படுவது உறுதி என்பதால் இந்தப் பட்டியலில் ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் உறுதியாக ஐந்தாண்டுகளுக்கு அமைச்சர்களாகத் தொடர்வார்கள் என்று நாம் கருதக் கூடாது..! அவர்கள் தலையெழுத்து நன்றாக இருந்தால், நிச்சயமாக நீடிப்பார்கள்..!


பட்டியல் இதோ :



ஜெயலலிதா(ஸ்ரீரங்கம்) - முதலமைச்சர்

1. பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர் தொகுதி)  - நிதியமைச்சர்

2. செங்கோட்டையன் (கோபிசெட்டிப்பாளையம்)  - விவசாயம்

3. நத்தம் விசுவநாதன் (நத்தம்)  - மின்சாரம், மதுவிலக்கு

4. கே.பி.முனுசாமி (கிருஷ்ணகிரி) -  உள்ளாட்சித் துறை

5. சி.சண்முகவேலு (மடத்துக்குளம்) - தொழில்துறை 

6. பி.தங்கமணி (குமாரபாளையம்) -  வருவாய்த் துறை

7. கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு) - பொதுப்பணித் துறை

8. வி.செந்தில்பாலாஜி (கரூர்) - போக்குவரத்து துறை

9. டாக்டர் வி.எஸ்.விஜய் (வேலூர்) - மக்கள் நல்வாழ்வுத் துறை

10. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (கலசப்பாக்கம்) - உணவுத் துறை 

11. டி.கே.எம். சின்னய்யா (தாம்பரம்) - பிற்படுத்தப்பட்டோர் நலன் 

12. வைத்தியலிங்கம் (ஒரத்தநாடு) - வீட்டு வசதித் துறை

13. சி.வி.சண்முகம் (விழுப்புரம்) - பள்ளிக் கல்வித் துறை

14. பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி) - உயர்கல்வித் துறை

15. செல்லூர் ராஜூ (மதுரை மேற்கு) - கூட்டுறவுத் துறை

16. எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி) - நெடுஞ்சாலைகள்

17. சி.கருப்பசாமி (சங்கரன்கோவில்) - கால்நடைத் துறை

18. எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்) - இந்து சமய அறநிலையத் துறை

19. எம்.சி.சம்பத் (கடலூர்) - ஊரகத் தொழில் துறை

20. ஜி.செந்தமிழன் (சைதாப்பேட்டை) - செய்தி மற்றும் விளம்பரத் துறை

21. திருமதி கோகுல இந்திரா (அண்ணா நகர்) - வணிக வரித் துறை

22. திருமதி செல்வி ராமஜெயம் (புவனகிரி) -  சமூக நலம்

23. பி.வி.ரமணா (திருவள்ளூர்) -  கைத்தறித் துறை

24. ஆர்.பி.உதயகுமார் (சாத்தூர்) - தகவல் தொழில் நுட்பம்

25. என்.மரியம் பிச்சை (திருச்சி-மேற்கு)  - சுற்றுச்சூழல் துறை

26. என்.சுப்பிரமணியன் () - ஆதிதிராவிடர் நலன்

27. இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) -  சட்டத் துறை

28. புத்தி சந்திரன் (ஊட்டி) - சுற்றுலா துறை

29. எஸ்.டி.செல்லப்பாண்டியன் (தூத்துக்குடி) - தொழிலாளர் நலன்

30. கே.டி.பச்சைமால் (கன்னியாகுமரி) - வனத்துறை

31. எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்) - சிறப்புத் திட்ட அமலாக்கம்

32. கே.ஏ.ஜெயபால் (நாகப்பட்டினம்) - மீன் வளத் துறை

33. என்.ஆர்.சிவபதி (முசிறி) - விளையாட்டுத் துறை



இதில் மாதந்தோறும் தோட்டத்துக்குக் கப்பம் கட்டும் துறைகளான வணிகவரித் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை போன்ற முக்கியத் துறைகளில் அமைச்சர் பொறுப்பேற்க இருப்பவர்களின் நிலைமைதான் ரொம்பவும் சிக்கல்..! பார்ப்போம்.. எவ்ளோதான், எப்படித்தான்.. கொடுத்து தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று..!!!

அன்னை ஜெயலலிதாவுக்கும், அவர்தம் அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகள்..!

தேர்தல்-2011-49-ஓ வாக்களித்தவர்களின் எண்ணிக்கை

15-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்னும் விருப்ப உரிமைப் பிரிவான 49-ஓ என்னும் பிரிவின் கீழ் வாக்களித்தவர்கள் 24,859..!

இதில் விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் ஒரு ஓட்டுகூட 49-ஓ-வில் விழுகவில்லை. அதிகபட்சமாக சிங்காநல்லூர் தொகுதியில்தான் 646 வாக்குகள் பதிவாகியுள்ளன. 

சென்னை எழும்பூர் தொகுதியில் 202 வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த பரிதி இளம்வழுதியின் தோல்விக்கு மட்டுமே, 49-ஓ ஆதரவாளர்கள் கை கொட்டி சிரிக்கலாம்.. சந்தோஷப்படலாம். இந்தத் தொகுதியில் கிடைத்துள்ள 49-ஓ வாக்குகளின் எண்ணிக்கை 274. 

ஆனால் இந்த 49-ஓ இயக்கம் மக்களிடையே தொடர்ந்து வெற்றியடையுமா என்பது சந்தேகமே..! ஏனெனில் இந்தத் தேர்தலில் மக்கள் பொங்கியெழுந்து எதிர்க்கட்சிக்கு வாக்களித்திருக்கும் விதத்தைப் பார்த்தால், யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்பதைவிட தவறு செய்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில்தான் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது..!

இதுவும் நல்லதுதானே..! இந்த வகையில் நான் பொதுமக்களையே ஆதரிக்கிறேன்..!

இனி.. இந்த 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான 49-ஓ வாக்குகள் பற்றிய முழு விபரத்தை பார்ப்போம்.. அனைத்துத் தகவல்களும் இமேஜ் ஃபைலாக இங்கே பதியப்பட்டுள்ளன.

விருப்பமுள்ளவர்கள் இமேஜின் மீது கிளிக் செய்து பெரிதாக்கி படித்துப் பார்க்கவும்..!

நன்றி..!





தேர்தல்-2011-வாக்களித்தவர்களின் முழு பட்டியல்

15-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் வாக்குப் பதிவு கடந்த 2011 ஏப்ரல் 13-ம் தேதியன்று நடந்தது. அன்றைய தினம் நடைபெற்ற வாக்குப் பதிவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விபரம் இங்கே இமேஜ் ஃபைலாக பதிவு செய்யப்பட்டுள்ளது..!

விருப்பமுள்ளவர்கள் இமேஜை கிளிக் செய்து படித்துப் பார்க்கவும்..!












5 மாநிலத் தேர்தல் முடிவுகள் - புள்ளி விபரங்கள்...!

15-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களின் புள்ளி விபரங்கள் இனிமேல் அவ்வப்போது கிடைக்கும்போதெல்லாம் தொடர்ச்சியாக எனது தளத்தில் பதிவு செய்து வைக்கப்படும்..  அதன் முதல் பகுதி இது :

5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் :


தமிழ்நாடு





மொத்த இடங்கள் : 234

அ.இ.அ.தி.மு.க. கூட்டணி : 203

அ.இ.அ.தி.மு.க. : 146

தே.மு.தி.க. : 29

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் : 10

இந்திய கம்யூனிஸ்ட் : 9

மனிதநேய மக்கள் கட்சி : 2

புதிய தமிழகம் : 2

சமத்துவ மக்கள் கட்சி : 2

இந்திய குடியரசுக் கட்சி : 1

பார்வர்டு பிளாக் : 1

கொங்கு இளைஞர் பேரவை : 1

 

தி.மு.க. கூட்டணி : 31

தி.மு.க. : 23

காங்கிரஸ் : 5

பாட்டாளி மக்கள் கட்சி : 3


2. புதுச்சேரி


 


மொத்த இடங்கள் - 30

என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி - 20

என்.ஆர்.காங்கிரஸ் - 15,

அ.தி.மு.க. - 5


காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி - 9

காங்கிரஸ் -7

தி.மு.க.-2

சுயேச்சை - 1


3. கேரளா


 


மொத்த இடங்கள் - 140

ஐக்கிய ஜனநாயக முன்னணி - 72

காங்கிரஸ் 38

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் - 20

கேரள காங்கிரஸ் (மணி) - 9

இதர கட்சிகள் - 5

 

இடதுசாரி ஜனநாயக முன்னணி 68

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 45

இந்திய கம்யூனிஸ்டு - 13

ஜனதா தளம் (எஸ்) -4

தேசியவாத காங்கிரஸ் -2

புரட்சிகர சோசலிஸ்டு -2

இடதுசாரி ஆதரவு சுயேச்சைகள் -2


4. மேற்கு வங்காளம்


 


மொத்த இடங்கள் 294

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 226

திரிணாமுல் காங்கிரஸ் -184

காங்கிரஸ் - 42

இடதுசாரி கட்சிகள் கூட்டணி - 60

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 40

அகில இந்திய பார்வர்டு பிளாக்-11

புரட்சிகர சோசலிஸ்ட் -7

இந்திய கம்யூனிஸ்டு -2

சமாஜ்வாடி கட்சி -1

இதர கட்சிகள் -7


5. அசாம்


 

மொத்த இடங்கள்-126

காங்கிரஸ்-78

போடோலேண்ட் மக்கள் முன்னணி-12

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி-18

அசாம் கனபரிஷத்-10

பா.ஜனதா-5

இதர கட்சிகள்-3

மரண அடி.. சந்தேகமேயில்லை..!

14-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1996-ல் மே-13-ல் அன்றைய ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தபோது தமிழ்நாடே சந்தோஷப்பட்ட அதே நிகழ்வு, மீண்டும் நேற்றைய. மே 13-ல் நடந்தேறியுள்ளது..!

தி.மு.க. தோல்வியடையும் என்றுதான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால் இந்த அளவுக்கு படுதோல்வியைத் தழுவும் என்று எதிர்பார்க்கவே இல்லை..! தற்போதைய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் தோல்வியடைந்த பரிதாபத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பரிதாபமாக இழந்திருக்கிறது தி.மு.க.


மக்களின் இந்த பொங்கித் தீர்த்த உணர்விற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை மற்றக் கட்சிகளைவிடவும் தி.மு.க.வினருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவர்களால் வெளியில் சொல்ல முடியவில்லை..! கட்சியின் கொள்கைகளில் குறைபாடு என்றால் கட்சித் தலைமையிடம் முறையிட்டு மாறுதல் செய்யலாம்..! ஆனால் கட்சித் தலைமையிலேயே குறைபாடு என்றால் வருவதை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்..!

“ஈழப் பிரச்சினையில் தி.மு.க. செய்த துரோகம்.. ஸ்பெக்ட்ரம் ஊழலில் மகா கொள்ளையடித்தது.. இன்றோடு இந்த 5 மாத காலத்திலேயே 9 முறை விலையேற்றப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வு.. இந்த உயர்வினால் விலைவாசி உயர்ந்து.. தக்காளியையும், முருங்கைக்காயையும் கண்ணால் பார்த்தே திருப்திபட்டுக் கொள்ள வேண்டுமென்று ஏழை ஜனங்களை நிர்ப்பந்தப்படுத்தியது..! கடுமையான மின் வெட்டு.. இதனால் தொழிற்சாலைகள் முடக்கம்.. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறி போனது.. அனைத்து அரசுத் துறைகளிலும் வஞ்சகமில்லாமல் புகுந்து விளையாடிய உடன்பிறப்புக்களின் லஞ்ச லாவண்யம்..! கட்சிக்காரர்களின் அடிதடி, மிரட்டல்,. கட்டப் பஞ்சாயத்து.. அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் சொத்துக் குவிப்புகள்.. அத்தனை துறைகளிலும் தனது குடும்பத்தினரின் ஆதிக்கம்.. திரும்பிய பக்கமெல்லாம் தனது வாரிசுகளின் அராஜகச் செயல்கள்..” என்று அப்பாவி மக்களின் கூக்குரல்கள்..! ஆனால் இதெல்லாம் இந்த முதலமைச்சரின் காதுகளை எட்டவில்லை..!

அவரோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக.. தன்னைப் பற்றிய பாராட்டுக் கவிதைகளை ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.

தேர்தல்தானே.. வரட்டும்.. அரசுதானே.. நம்ம சொந்தக் காசில்லீல்ல.. அப்புறமென்ன..? கடனை வாங்குவோம்.. அதில் கொஞ்சத்தை மக்களிடம் அள்ளி வீசுவோம். எச்சி இலை பொறுக்கும் மக்களாகிய இவர்கள், நாம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு நமக்கு வாக்களிப்பார்கள்.. மீண்டும் நாமே ஜெயிப்போம். நமது குடும்பத்தினரை மட்டும் வாழ வைப்போம் என்ற எட்டு அம்சத் திட்டத்தோடு ஆட்சிக் கனவில் இருந்தவரைத்தான் இப்போது நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள் மக்கள்..!

நல்லதையே செய்தோம்.. சொல்லாததையும் செய்தோம் என்றெல்லாம் வீர வசனம் பேசியவர்கள்தான் செய்த திட்டங்கள் அனைத்திலும் கமிஷன் அடித்ததையும், அதன் மூலம் தனது குடும்பத்தினரை மட்டும் வாழ வைத்துள்ளதையும் காலம் இப்போது கண்கூடாக தமிழகத்து மக்களுக்குக் காட்டிவிட்டது..!

தொட்டால் கமிஷன்.. கொடுத்தாலும் கமிஷன் என்று அனைத்துத் திட்டங்களிலும் மேலிடத்தில் இருந்து கீழ் மட்டும் வரையிலும் பரவியிருக்கும் லஞ்சத்தால் அவதிப்பட்டிருக்கும் அப்பாவிகளைப் பற்றிக் கவலைப்படாமல், கோடீஸ்வரனாக இருந்தும் அரசு செலவிலேயே தனக்கான மருத்துவ சிகிச்சையைக்கூட செய்து கொண்ட இந்தப் பிச்சைக்காரத்தனத்தையும் பொதுமக்கள் பார்த்தபடியேதான் இருந்தார்கள்..!

தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு கடுமை காட்டியிருக்காவிட்டால் இந்த ஆட்சியாளர்கள் தங்களுக்காக சட்டத்தையே வளைத்திருப்பார்கள். தேர்தல் கமிஷனின் கறார் தன்மையால் பாதிக்கப்பட்டு உறுதியுடன் நேர்மையாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீதே அரசு ஊழியர்களை வைத்து பொய் வழக்குப் போட வைத்து மிரட்டிக் காண்பித்ததையெல்லாம் பொதுஜனங்கள் ரசிக்கவில்லை என்பதை அந்தக் கோட்டை இன்றைக்கு பீரங்கி குண்டு தாக்குதலில் சிதறியிருப்பதைப் பார்த்தாலே தெரிகிறது..!


ஓட்டுக்காகக் கொடுத்த பணம்கூட தங்களுடைய பணம்தான் என்பதையும் புரிந்து கொண்டு பல பொதுமக்கள் எதிர்ப்பு ஓட்டுக்களைக் குத்தியிருப்பதை கொளத்தூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது..!

அரசியல்வாதிகள் திருந்தாவிட்டால் மக்களின் கடைசி ஆயுதமான வாக்களிப்புதான் பேசும் என்பதை அழுத்தம்திருத்தமாக மீண்டும் ஒரு முறை செய்து காட்டியிருக்கும் தமிழகத்து மக்களை மனதாரப் பாராட்டுகிறேன்..!

இதே நேரத்தில் இத்தனை பெரிய கொள்ளைக் கூட்ட அரசியல்வாதிகளை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு சட்டத்தை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு இரண்டு மாத காலமாக இந்த மாநிலத்தில் ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க வைத்து இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை அவர்களுக்கு வழங்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எனது கோடானு கோடி நன்றிகள்..!

யார் வேண்ணாலும் வாங்க..! ஆனா கொஞ்சமா திருடுங்க..!

15-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு வழியாகத் தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. அடுத்து எந்தத் திருடன் வரப் போகிறான் என்பதற்காக நம்மை ஒரு மாதம் காலத்திற்கு ஏங்க வைத்துவிட்டது தேர்தல் கமிஷன்..!

இருக்கின்ற மெயின் திருடர்களில் இரண்டு பேரில் ஒருவர்தான் வரப் போவது உறுதியென்றாலும், அது யார் என்பதை அறிய ரொம்பத்தான் மனசு ஆவலாக இருக்கிறது..!

இப்போது இருக்கும் கொள்ளைக்காரர்களே மீண்டும் வந்தால் அசுர வேகத்தில் தங்கள் மீதிருக்கும் குற்றச்சாட்டுக்களை அழிக்கும் வேலையில்தான் ஈடுபடுவார்கள்..!

ஆட்சிக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு கொள்ளைக்காரர்கள்.. தங்கள் மீது ஏற்கெனவே இருக்கின்ற வழக்குகளை சப்தமில்லாமல் எப்படி முடிப்பது என்று யோசித்து செயல்படுவார்கள்..!




ஆனாலும் இந்தத் தேர்தலின் மூலம் ஒன்று மட்டும் உறுதியாகிறது. நாம் எவ்வளவு கொள்ளையடித்தாலும் சரி.. அந்தக் கொள்ளைப் பணத்தில் கொஞ்சத்தை மக்களுக்கு அள்ளி வீசினால் போதும். அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதை இரண்டு கொள்ளைக் கூட்டமும் புரிந்துதான் வைத்திருக்கிறது.!

இந்தத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஆளும் கட்சித் தரப்பிலும், எதிர்க் கட்சித் தரப்பிலும் பணக்கட்டுக்கள் அள்ளி வீசப்பட்டுள்ளன. இப்படி பணத்தினால் வாங்கப்படுகின்ற ஓட்டுக்களை வைத்து ஆட்சி அமைக்கிறோமே என்கிற வெட்கமும், சூடும், சொரணையும் இல்லாமலேயே இதுவரையில் மைனாரிட்டி ஆட்சியை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார் தாத்தா..!

இனி அடுத்து ஜெயித்தாலும் இதே உணர்வோடு மீண்டும் முதல்வராகிவிடுவார். எதிர்த்தரப்பு ஆத்தாவும் மக்கள் மனநிறைவோடு தன்னைத் தேர்ந்தெடுத்ததாகக் கூசாமல் பொய் சொல்லி அரியணை ஏறப் போகிறார். இவர் வெற்றி பெற்றால் இவர் முதல்வர் பதவியேற்கவே கூடாது.. தார்மீக அரசியல் அறத்தின் அடிப்படையில் தன் மீதான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றத்தில் முறைப்படி சந்தித்து அதில் வெற்றி பெற்ற பின்பு இவர் ஆட்சிப் பொறுப்பேற்கலாம்..!

ஆனால் இந்தத் தார்மீக அரசியல் நெறி இரண்டு கழகங்களிடமும் இல்லை என்பதால் இது நமது அதீதமான ஆசையாக, கனவாகவே இருந்து தொலையும் என்று நினைக்கிறேன்..! இது இப்படியே இருநது தொலையட்டும்..!

தற்போது நடந்து முடிந்த தேர்தலின் வாக்குப் பதிவு பற்றிய புள்ளிவிவரங்களை எனது தளத்தில் பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். அதற்காக பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை இங்கே தொகுத்தளித்துள்ளேன்..!

இதுவரை நடந்து முடிந்த மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒப்பிட்டுப்  பார்க்கையில் தற்போதைய தேர்தலின் வாக்குப் பதிவு 10 முதல் 15 சதவீதம்வரை உயர்ந்துள்ளது.  தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நடவடிக்கையும், அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும்தான் வாக்குப் பதிவு அதிகரிக்கக் காரணம் என்று கருதப்படுகிறது.




தமிழகம் முழுவதும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப்படுத்தியும், ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் விடியோ வாகனம் மூலம் படக் காட்சிகளை நடத்தி விளம்பரப்படுத்தியதும் இன்னுமொரு முக்கிய காரணமாகும்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 77.8 சதவீதம் ஓட்டுக்கள் இப்போது பதிவாகியுள்ளது. அதிக அளவாக கரூர் மாவட்டத்திலும், குறைந்தபட்சமாக  கன்னியாகுமரி மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன.

தொகுதிவாரியாகப் பார்த்தால் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் - 91.89 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

குறைந்த அளவாக, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் - 64.07 சதவீதம் ஓட்டுப் பதிவாகியிருந்தது.

ஓட்டு சதவீதம் முழு விபரம் :

திருவள்ளூர் மாவட்டம் - 75.79

1) கும்மிடிப்பூண்டி - 83.25
2) பொன்னேரி - 80.37
3) திருத்தணி - 80.36
4) திருவள்ளூர் - 81.85
5) பூந்தமல்லி - 79.13
6) ஆவடி - 71.84
7) மதுரவாயல் - 70.60
8) அம்பத்தூர் - 71.04
9) மாதவரம் - 70.10
10) திருவொற்றியூர் - 74.36

சென்னை மாவட்டம் - 68.02

11) ஆர்.கே.நகர் - 72.40
12) பெரம்பூர் - 69.71
13) கொளத்தூர் - 68.25
14) வில்லிவாக்கம் - 67.61
15) திருவிக நகர் - 68.31
16) எழும்பூர் (தனி) - 68.07
17) ராயபுரம் - 70.64
18) துறைமுகம் - 63.65
19) சேப்பாக்கம் - 69.29
20) ஆயிரம்விளக்கு - 66.83
21) அண்ணாநகர் - 66.74
22) விருகம்பாக்கம் - 67.82
23) சைதாப்பேட்டை - 70.33
24) தி.நகர் - 66.46
25) மயிலாப்பூர் - 65.16
26) வேளச்சேரி - 66.84

காஞ்சிபுரம் மாவட்டம் - 76.00

27) சோழிங்கநல்லூர் - 67.68
28) ஆலந்தூர் - 69.86
29) ஸ்ரீபெரும்புதூர் (தனி) - 81.82
30) பல்லாவரம் - 72.15
31) தாம்பரம் - 69.86
32) செங்கல்பட்டு - 73.91
33) திருப்போரூர் - 82.73
34) செய்யூர் (தனி) - 81.68
35) மதுராந்தகம் (தனி) - 81.68
36) உத்திரமேரூர் - 86.32
37) காஞ்சிபுரம் - 80.51

வேலூர் மாவட்டம் - 79.86

38) அரக்கோணம் (தனி) - 78.89
39) சோளிங்கர் - 84.92
40) காட்பாடி - 80.14
41) ராணிப்பேட்டை - 79.57
42) ஆற்காடு - 83.54
43) வேலூர் - 73.77
44) அணைக்கட்டு - 78.88
45) கே.வி.குப்பம் (தனி) - 80.16
46) குடியாத்தம் (தனி) - 76.96
47) வாணியம்பாடி - 78.89
48) ஆம்பூர் - 77.74
49) ஜோலார்பேட்டை - 81.82
50) திருப்பத்தூர் - 82.13

கிருஷ்ணகிரி மாவட்டம் - 81.09

51) ஊத்தங்கரை (தனி) - 81.87
52) பர்கூர் - 82.14
53) கிருஷ்ணகிரி - 79.80
54) வேப்பனஹள்ளி - 85.52
55) ஓசூர் - 74.77
56) தளி - 84.02

தர்மபுரி மாவட்டம் - 81.21

57) பாலக்கோடு - 86.65
58) பென்னாகரம் - 82.86
59) தர்மபுரி - 77.48
60) பாப்பிரெட்டிபட்டி - 80.52
61) அரூர் (தனி) - 79.33

திருவண்ணாமலை மாட்டம் - 83.80

62) செங்கம் (தனி) - 84.25
63) திருவண்ணாமலை - 80.71
64) கீழ்பென்னாத்தூர் - 84.40
65) கலசப்பாக்கம் - 86.54
66) போளூர் - 85.11
67) ஆரணி - 83.53
68) செய்யாறு - 84.78
69) வந்தவாசி (தனி) - 81.51

விழுப்புரம் மாவட்டம் - 81.80

70) செஞ்சி - 81.50
71) மயிலம் - 82.37
72) திண்டிவனம் (தனி) - 80.92
73) வானூர் (தனி) - 80.83
74) விழுப்புரம் - 82.04
75) விக்கிரவாண்டி - 81.37
76) திருக்கோவிலூர் - 80.79
77) உளுந்தூர்பேட்டை - 83.24
78) ரிஷிவந்தியம் - 82.75
79) சங்கராபுரம் - 81.69
80) கள்ளக்குறிச்சி - 82.00

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 9,13,391 ஆண் வாக்காளர்களும், 9,14,944 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் மொத்தம் 18,28,346 பேர் வாக்களித்துள்ளனர். 101 இதர வாக்காளர்களில் 8 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிகபட்சமாக 83.24 சதவீதமும், குறைந்தபட்சமாக வானூர் தொகுதியில் 80.83 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ரிஷிவந்தியம் தொகுதியில் ஆண்களைவிட 12,475 பெண் வாக்காளர்களும், சங்கராபுரத்தில் 3,607 பெண் வாக்காளர்களும், கள்ளக்குறிச்சியில் 3,506 பெண் வாக்காளர்களும் கூடுதலாக வாக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் - 82.05

81) கெங்கவல்லி (தனி) - 81.53
82) ஆத்தூர் (தனி) - 80.53
83) ஏற்காடு (தனி) - 85.25
84) ஓமலூர் - 83.03
85) மேட்டூர் - 79.46
86) எரப்பாடி - 85.36
87) சங்ககிரி - 86.00
88) சேலம் மேற்கு - 79.73
89) சேலம் வடக்கு - 74.23
90) சேலம் தெற்கு - 78.71
91) வீரபாண்டி - 89.07

நாமக்கல் மாவட்டம் - 82.52

92) ராசிபுரம் (‌தனி) - 82.97
93) சேந்தமங்கலம் - 81.35
94) நாமக்கல் - 81.67
95) பரமத்தி வேலூர் - 81.07
96) திருச்செங்கோடு - 81.82
97) குமாரபாளையம் - 86.36

ஈரோடு மாவட்டம் - 81.36

98) ஈரோடு கிழக்கு - 77.49
99) ஈரோடு மேற்கு - 78.98
100) மொடக்குறிச்சி - 81.34
103) பெருந்துறை - 83.81
104) பவானி - 81.64
105) அந்தியூர் - 82.21
106) கோபிசெட்டிப்பாளையம் - 83.29
107) பவானிசாகம் (தனி) - 81.82

திருப்பூர் மாவட்டம் - 78.01

101) தாராபுரம் ( தனி) - 78.86
102) காங்கேயம் - 81.53
112) அவிநாசி ( தனி) - 80.09
113) திருப்பூர் - 74.37
114) திருப்பரூர் ( தெற்கு ) - 72.83
115) பல்லடம் - 77.30
125) உடுமலைப்பேட்டை - 77.98
126) மடத்துக்குளம் - 81.22

நீலகிரி மாவட்டம் - 71.94

108) உதகமண்டலம் - 71.07
109) கூடலூர் ( தனி) - 71.51
110) குன்னூர் - 73.26

கோவை மாவட்டம் - 76.56

111) மேட்டுப்பாளையம் - 80.86
116 ) சூளூர் - 80.10
117) கவுண்டம்பாளையம் - 73.52
118) ‌கோவை வடக்கு - 69.79
119) தொண்டாமுத்தூர் - 75.09
120) ‌கோவை ( தெற்கு) - 71.45
121) சிங்காநல்லூர் - 68.90
122) கிணத்துக்கடவு - 77.98
123) பொள்ளாச்சி - 79.82
124) வால்பாறை (தனி) - 76.56

திண்டுக்கல் மாவட்டம் - 81.55

127) பழநி - 80.70
128) ஒட்டன்சத்திரம் - 85.91
129) ஆத்தூர் - 83.81
130) நிலக்கோட்டை ( தனி) - 78.94
131) நத்தம் - 84.89
132) திண்டுக்கல் - 76.61
133) வேடசந்தூர் - 79.37

கரூர் மாவட்டம் - 86.06

134) அரவக்குறிச்சி - 85.63
135) கரூர் - 83.59
136) கிருஷ்ணராயபுரம் - 86.56
137) குளித்தலை - 88.66

திருச்சி மாவட்டம் - 79.12

138) மனப்பாறை - 79.73
139) ஸ்ரீரங்கம் - 80.95
140) திருச்சி மேற்கு - 74.93
141) திருச்சி கிழக்கு - 75.24
142) திருவெரும்பூர் - 71.94
143) லால்குடி - 83.29
144) மனச்சநல்லூர் - 84.05
145) முசிறி - 81.72
146) துறையூர் ( தனி ) - 81.74

பெரம்பலூர் மாவட்டம் - 81.74
 
147) பெரம்லூர் ( தனி) - 82.37
148) குன்னம் - 81.74

அரியலூர் மாவட்டம் - 83.91
 
149)அரியலூர் - 84.73
150)ஜெயங்கொண்டம் - 83.09

கடலூர் மாவட்டம் - 80.75

151) திட்டக்குடி ( தனி) - 79.01
152) விருத்தாச்சலம் - 80.45
153) நெய்வேலி - 81.93
154) பன்ருட்டி - 83.02
155) கடலூர் - 77.77
156 ) குறிஞ்சிப்பாடி - 86.38
157) புவனகிரி - 81.62
158) சிதம்பரம் - 77.36
159) காட்டுமன்னார் கோயில் ( தனி) - 79.23

நாகப்பட்டினம் : 80.25

160 ) சீர்காழி (தனி) - 78.65
161) மயிலாடுதுறை - 76.39
162) பூம்புஹார் - 79.70
163) நாகப்பட்டினம் - 79.24
164) கீழ்வேளூர் (தனி) - 91.89
165 ) வேதாரண்யம் - 77.99

திருவாரூர் மாவட்டம் - 81.42

166) திருத்துறைப்பூண்டி (தனி) - 80.46
167)மன்னார்குடி - 80.62
168) திருவாரூர் - 82.13
169 ) நன்னிலம் - 82.33

தஞ்சாவூர் மாவட்டம் - 79.97

170) திருவிடைமருதூர் ( தனி)- 80.82
171) கும்பகோணம் - 80.26
172 ) பாபநாசம் - 80.71
173) திருவையாறு - 83.93
174) தஞ்சாவூர் - 73.32
175) ஒரத்தநாடு - 82.07
176) பட்டுக்கோட்டை - 77.67
177 ) பேராவூரணி - 80.97

புதுக்கோட்டை மாவட்டம் - 79.81

178) கந்தர்வகோட்டை - 79.99
179) விராலிமலை - 85.93
180) புதுக்கோட்டை - 78.38
181) திருமயம் - 78.57
182 ) ஆலங்குடி - 81.65
183) அறந்தாங்கி - 74.81

சிவகங்கை மாவட்டம் - 75.59

184) காரைக்குடி - 74.06
185) திருப்பத்தூர் - 79.08
186) சிவகங்கை - 73.45
187) மானாமதுரை - 76.61

மது‌ரை மாவட்டம் - 77.63

188)மேலூர் - 80.02
189) மதுரை கிழக்கு -76.99
190) சோழவந்தான் - 82.90
191 ) மதுரை வடக்கு -72.98
192) மதுரை தெற்கு -75.70
193) மதுரை மத்திய தொகுதி -74.78
194) மதுரை மேற்கு - 74.77
195) திருப்பரங்குன்றம் - 76.13
196) திருமங்கலம் -82.04
197) உசிலம்பட்டி - 80.03

தேனி மாவட்டம் - 79.56

198) ஆண்டிப்பட்டி - 81.92
199) பெரியகுளம் - 78.94
200) போடிநாயக்கனூர் - 81.07
201) கம்பம் - 76.43

விருதுநகர் : 81.45

202)ராஜபாளையம் - 80.09
203) ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - 81.10
204 ) சாத்தூர் - 82.18
205) சிவகாசி -80.85
206 ) விருதுநகர் - 78.93
207) அருப்புக்கோட்டை - 83.06
208) திருச்சுழி - 83.91

ராமநாதபுரம் - 70.73

209) பரமக்குடி (தனி) -72.21
210) திருவாடனை - 71.47
211) ராமநாதபுரம் - 70.79
212) முதுகுளத்தூர் - 68.88

தூத்துக்குடி மாவட்டம் - 74.83

213)விளாத்திக்குளம் - 76.05
214) தூத்துக்குடி - 73.66
215) திருச்செந்‌தூர் - 76.52
216) ஹவைகுண்டம் - 75.07
217) ஒட்டப்பிடாரம் - 75.63
218) கோவில்பட்டி - 72.27

திருநெல்வேலி மாவட்டம் : 75.27

219) சங்கரன்கோவில் - 75.50
220) வாசுதேவநல்லூர் - 76.46
221) கடயநல்லூர் - 75.40
222) தென்காசி - 78.64
223) ஆலங்குளம் - 80.68
224) திருநெல்வேலி- 76.58
225) அம்பாசமுத்திரம் - 75.13
226) பாளையங்கோட்டை - 68.22
227) நாங்குனேரி - 74.57
228) ராதாபுரம் -71.00

கன்னியாகுமரி மாவட்டம் - 68.93

229) கன்னியாகுமரி - 75.57
230) நாகர்கோவில் - 69.84
231) கொளச்சல் - 64.13
232)பத்மநாபபுரமம்- 69.98
233) விளவன்கோடு - 69.56
234 ) கிள்ளியூர் - 64.07

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதமும் வெற்றியும் :

 
1967 - 76.57% (திமுக வெற்றி)
 
1971 - 72.10% (திமுக வெற்றி)
 
1977 - 61.58% (அதிமுக வெற்றி)
 
1980 - 65.42% (அதிமுக வெற்றி)
 
1984 - 73.47% (அதிமுக வெற்றி)
 
1989 - 69.69% (திமுக வெற்றி)
 
1991 - 63.84% (அதிமுக வெற்றி)
 
1996 - 66.95% (திமுக வெற்றி)
 
2001 - 59.07% (அதிமுக வெற்றி)
 
2006 - 70.56% (திமுக வெற்றி)

இந்தக் கணக்குப்படி பார்த்தால் தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அக்கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் நினைக்கிறார்கள். இன்னொருபுறம்.. அதெல்லாமில்லை.. மக்கள் அலை, அலையாக வந்தது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் என்கிறது எதிர்க்கட்சிக் கூட்டணியினர்...!

இந்த நேரத்தில் பாரதி என்னும் பஸ்ஸுலக பதிவர் வேறொரு முக்கியச் செய்தியொன்றை இன்று பதிவிட்டிருந்தார்.

இதுவரையில் தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைத்து இருக்கிறது. அதே செண்டிமெண்ட் இந்த முறையும் தொடருமா என்று ஆதாரத்துடன் வினவியுள்ளார்..!

 
1971 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1977 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1980 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1984 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1989 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1991 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1996 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
2001 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
2006 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)

இதன்படி பார்த்தால் கன்னியாகுமரி தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற கணக்கைத் தோண்டிப் பார்த்து கொஞ்சம் லேசுபாசாக நாம் மூச்சுவிட்டுக் கொள்ளலாம்..!

தி.மு.க. தரப்பில் அமைச்சர் சுரேஷ்ராஜனும், அ.தி.மு.க. தரப்பில் கே.டி.பச்சைமாலும், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் காந்தியும் போட்டியிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் சுரேஷ்ராஜனுக்கு ஆதரவு குறைவாக இருந்ததினால் சில நாட்கள் இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு அந்த நேரத்தில் பணக் கவர்கள் தொகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக ஜூ.வி.யின் ஸ்கூப் நியூஸ் சொல்கிறது.

சுரேஷ்ராஜன் ம.தி.மு.க. நகரச் செயலாளரின் வீட்டிற்கே நேரில் சென்று ஆதரவு கேட்டு உறுதிமொழியையும் பெற்றுவிட்டதாக அதே ஜூ.வி. அடுத்த இதழில் சொல்கிறது..!

இவருடைய வெற்றியைத் தடுப்பது பாரதீய ஜனதாவுக்குக் கிடைக்கவிருக்கும் ஓட்டுக்கள்தான் என்று நக்கீரன் சொல்லியிருக்கிறது..!

எது எப்படியோ.. எந்தத் திருட்டுப் பயலுக வந்தாலும் நான் அவுககிட்ட ஒரே ஒரு கோரிக்கையைத்தான் வைக்கிறேன்..

இந்தத் தடவையாச்சும் கொஞ்சமா திருடங்கடா அயோக்கியப் பசங்களா..! உங்க குடும்பத்துக்கு கொஞ்சமாச்சும் புண்ணியத்தைச் சேர்த்து வையுங்கப்பா.. வருங்காலத்துல எங்க பேரப்புள்ளைக, உங்க பேரப் புள்ளைகளை பார்த்து "குடும்பமாடா?"ன்னு மூஞ்சில காறித் துப்புற மாதிரி செஞ்சுட்டுப் போயிராதீங்க..!

அவ்வளவுதான் சொல்லுவோம்..!

அதிர்ச்சி.. ஆனால் உண்மை..!

14-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மு்ன்னாள் முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகனான கெளதமன், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுள்ளார் என்ற செய்தி இன்றைக்குத்தான் எனக்குக் கிடைத்தது..!


இன்னமும் தி.மு.க. மீது பற்றோடு இருந்துவரும் அண்ணாவின் குடும்பத்தில் இருந்து ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதும், அதுவும் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்பதும் ஆச்சரியமாக இல்லை..!?

இது பற்றி கெளதமன் கூறியிருப்பது இது :

“நான் தற்போது புத்தகப் பதிப்பாளராக உள்ளேன். எனது தந்தை எழுதிய புத்தகங்களை மட்டுமே மறுபதிப்பிட்டு வெளியிடுகிறேன். எனது தந்தை முதல்வராக இருந்தபோது என்னையோ, எனது மற்ற சகோதரர்களையோ அரசியலில் ஈடுபட அனுமதிக்கவில்லை. மூத்த அண்ணன் பரிமளத்திற்கு கடந்த 1980-ம் ஆண்டு லோக்சபா சீட் தருவதாக தி.மு.க. சார்பில் கூறினார்கள். ஆனால் தரவில்லை.


தேர்தலுக்கு முன்பாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்திக்கப் பல முறை முயற்சி செய்தேன். முடியவில்லை. இந்தத் தேர்தலில் போட்டியிட இரு பெரும் கட்சிகளிடமும் நான் சீட்டு கேட்டு அணுகவில்லை. நானே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். நான் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரமும் செய்ய மாட்டேன். என்னைப் பற்றி இப்பகுதி பொதுமக்களுக்கு நன்கு தெரியும்..” என்கிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்தபோது பிரமாண பத்திரத்தில் தனக்குச் சொந்தமாக ஒரு வீடும், 75 ஆயிரம் ரூபாயும் கையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் கெளதமன். இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அறிவழகன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் கோகுல இந்திரா போட்டியிடுகிறார்.

அண்ணாவின் மரணத்துக்குப் பின்பு அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையாருக்கு எம்.எல்.சி. பதவி கொடுத்து கவுரவித்தது தி.மு.க. அந்த ஒரு முறை அவர் அந்தப் பதவியை வகித்ததோடு சரி.. அன்றோடு அந்தக் குடும்பத்துக்கும் அரசியலுக்குமான தொடர்பு அறுந்து போனது..!

இதற்கு பின் அண்ணாவின் மூத்த வளர்ப்பு மகனான பரிமளத்தை அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் நிற்கும்படி எம்.ஜி.ஆர். வற்புறுத்தியபோது, அவர் தனது தந்தையை மனதில் வைத்து மறுத்துவிட்டார் பரிமளம். ஆனால் காலம் கடந்து நிகழ்கால அரசியல் புரிந்து பிற்காலத்தில் தி.முக.வில் பரிமளம் சீட் கேட்டபோது அரசுப் பணியைக் கைவிட வேண்டி வரும் என்ற விதிமுறைகளினால் பயந்து பின் வாங்கிவிட்டாராம்.. சென்னை அரசு பொது மருத்துவமையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றார் பரிமளம். இவருக்கு தலைவரிடம் சொல்லி ராஜ்யசபா எம்.பி. சீட் வாங்கித் தருகிறேன் என்று சொல்லியே ஆற்காடு வீராசாமி காலத்தை ஓட்டிவிட்டார் என்கிறார்கள் உடன்பிறப்புக்கள்..! பாவம் பரிமளமும் குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.

இப்போது 'சீலிங்பேன்' சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டிருக்கும் கெளதமனை பார்த்தாவது, அண்ணா நடத்திய அரசியல் எப்பேர்ப்பட்ட தியாகங்களை உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்..!

நன்றி : புதிய தமிழகம் வார இதழ்

வாக்காளர்களே சிந்திப்பீர்..! தி.மு.க.வின் ஊழல் சாம்ராஜ்யம்..!

12-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1. தங்களுடைய குடும்பத்தில் நடந்த சண்டைக்காக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனை ஆரம்பித்து நடத்துகிறேன் என்று சொல்லி 400 கோடி ரூபாயை செலவு செய்துவிட்டு குடும்பப் பிரச்சினை முடிந்ததும் அல்லேலுயா பாடி கேபிள் டிவி கார்ப்பரேஷனின் கதையை முடித்த கருணாநிதிக்கா உங்களது ஓட்டு..? இந்த 400 கோடி காசும், அவருடைய அப்பன் வீட்டுக் காசில்லை மக்களே.. என் பணம்.. உங்களது பணம்.. நம்முடைய பணம்..!

2.
மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது சென்னை மாநகரில் உள்ள குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் அனைத்தையும் புதுப்பிப்பது என்று சொல்லி 60 கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டிக் கொண்டு போனதை லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலமாக ஒன்றுமே இல்லாமல் ஆக்கிக் கொண்ட தற்போதைய துணை முதல்வர் ஸ்டாலினுக்காக உங்களது ஓட்டு..? சிந்திப்பீர் மக்களே..!

3. 2003-ல் இருந்து புதிய பென்ஷன் திட்டத்திற்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து உருவப்பட்ட 10 சதவிகிதப் பணம் இன்றைக்கு 6000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது.. இந்தப் பணம் தற்போது எங்கே போனது என்றுதான் தெரியவில்லை..! அரசு மூலமாகவே பல்வேறு துறைகளின் சுருட்டல்களுக்கு திசை திருப்பப்பட்டு பென்ஷன் தொகையே கிடைக்காமல் இறைவனடி போய்ச் சேர்ந்துவிட்டார்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள். இந்த நிர்வாகத் திறமையற்ற தி.மு.க. அரசுக்கா உங்களது ஓட்டு..?

4. தாங்கள் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக பன்றி காய்ச்சல் நோயை ஊக்குவித்த அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தியது இவர்கள்தான்..! எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் நடந்த கோல்மால்களை தணிக்கைத் துறை சுட்டிக் காட்டியும் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமல் வைத்திருக்கும் இந்த திறமையற்ற ஆட்சிக்கா உங்களது ஆதரவு..?

5. மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதாகச் சொல்லி முறையற்ற விதத்தில் டெண்டர்களை அறிவித்தும், அதனை ஏற்றும் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி தங்களது வாரிசுகளுக்கு லஞ்சத்தைக் கூட்டி இந்த ஐந்தாண்டுகளின் கணக்குப்படி 1000 கோடியை முழுங்கியிருக்கும் இந்தத் திருடர்களுக்கா உங்களது ஓட்டு.. சிந்திப்பீர் மக்களே..!

6. தன் தள்ளுவண்டியைத் தள்ளுபவரில் இருந்து வீட்டுச் சமையலறையில் கத்திரிக்காய் நறுக்குபவர் முதற்கொண்டு அனைவரையும் அழைத்து அவருக்கு சமூக சேவகர் பேட்ஜ் குத்தி வீட்டு வசதி வாரிய வீடுகளை வாரிக் கொடுத்த வள்ளல் இந்த முதல்வர்தானே..! வாங்கிய வீடுகளை மிகக் குறுகிய காலத்தில் விற்று பணமாக கிடைத்ததில் கமிஷனாக சில கோடிகளை அள்ளியதும் தலைவரின் குடும்பம்தானே..? இந்தக் குடும்பத்திற்கா உங்களது ஓட்டு..?

7. பெரம்பலூரில் எம்.ஆர்.எஃப் நிறுவனத்துக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் பல அப்பாவிகளை மிரட்டியும், பொய் வழக்குப் போட்டும், சித்ரவதை செய்தும், அடித்து உதைத்தும் பாடாய்ப்படுத்தி தான் கோடீஸ்வரரான இந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா குடியிருக்கும் இந்தக் கட்சியா நமக்கு வேண்டும்..?

8. பெரம்பலூரில் அமையவிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக பொதுமக்கள் நிலங்களை டிட்கோ மூலமாக குறைந்தவிலைக்கு விற்று அதனை அதிக விலைக்கு நிறுவனங்களுக்கு விற்று, கோடியில் லாபம் பார்த்த ராசாவின் பாசத்துக்குரிய இந்தத் திமு.க.வை தோற்கடிக்க வேண்டாமா தோழர்களே..?

9. மத்தியச் சுற்றுப் புறச் சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்காமலேயே எக்கோ பார்க் விழாவுக்கெல்லாம் ஏற்பாடு செய்த கடமையுணர்ச்சி தவறாத ஊழியர்களைக் கொண்ட இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா..? முதலில் அந்த நிலத்தை முறைப்படி இன்னமும் வாங்காமலேயே அந்த இடத்தில் கட்டிடம் கட்ட முனையும் இந்த முட்டாள்களின் ஆட்சியை முறியடிக்க வேண்டாமா..?

10.  தனது நிர்வாகத் திறமையின்மையால் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தை பல்வேறு வங்கிகளில் 1800 கோடி ரூபாய் அளவுக்கு கடனை வாங்க வைத்து, கடன்களை அடைக்க முடியாமல் பெருமைக்கு வக்கீல் நோட்டீஸ்களை வாங்கி வைத்துக் கொண்டு பொருட்களை கொள்முதல் செய்வதில் உடன்பிறப்புக்களுக்கு கொள்ளை லாபம் பார்க்க வழி வகை செய்திருக்கும் இன்றைய தி.மு.க. அரசு போய்த்தானே தீர வேண்டும்..!

11. தி.மு.க.வின் நம்பர் ஒன் புரோக்கரான ராசா, சென்னை அருகே மினி துறைமுகம் அமைக்க விரும்பி மகாபலிபுரம் சாலையில் கொள்ளையடித்த பணத்தில் பல கோடிகளை செலவழித்து நிலங்களை வாங்கியும், சில இடங்களில் நிலங்களை பிடுங்கியும், 10000 கோடி செலவில் தி்ட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறாரே..! இவ்வளவு பணம் இந்த ராசாவுக்கு எங்கேயிருந்து வந்தது என்று நாம் யோசித்துப் பாருங்கள்..!  எல்லாம் கொள்ளையடித்ததில் வந்ததுதானே..? ச்சும்மா விடலாமா இவர்களை..?

12. மருத்துவ சேவைக் கழகத்தின் சார்பில் தரம் குறைந்த மருந்துகளையும், தடை செய்யப்பட்ட மருந்துகளையும் விலைக்கு வாங்கி ஊழலில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களைக் காப்பாற்றி வைத்திருக்கும் இந்த நிர்வாகத் திறமையற்ற ஆட்சியை விரட்டத்தானே வேண்டும்..!

13. கலர் டிவி வாங்குவதற்காக ஆதி திராவிடர் நல நிதியில் இருந்து 74 கோடி ரூபாயைச் சுரண்டியெடுத்து பயன்படுத்தியிருக்கும் ஆதிதிராவிட மக்களின் நலனுக்காக பாடுபடும் உத்தமசீலர்கள்தான் இந்த தி.மு.க. ஆட்சியாளர்கள்.. இதே கலர் டிவி கொள்முதலில் வீடியோகான் நிறுவனத்திற்கு அளவுக்குக அதிகமான மு்ன்னுரிமை கொடுத்து மக்கள் பணத்தை கரியாக்கியிருக்கும் இந்த ஆட்சியை விரட்ட வேண்டாமா..? இவர்கள்தான் அடுத்து மிக்ஸியும், கிரைண்டரும் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்..? இவர்களே அடுத்து வந்தால் எவ்வளவு சுருட்டுவார்கள்..? யோசியுங்கள் மக்களே..!
 

14. கலர் டிவிகளை மக்களுடைய பணத்திலேயே வாங்கி, அதனை இலவசமாக வழங்குவதாக ஏதோ தன்னை கர்ணன் ரேஞ்சுக்கு உயர்த்திப் பேசும் இந்தக் கயவன் கருணாநிதி, இந்த கலர் டிவியை மிக அதிகமாக வீடுகளுக்கு வழங்குவதன் மூலம் அந்த மக்கள் மாதந்தோறும் பெறும் கேபிள் டிவி இணைப்பின் மூலம் வருடத்திற்கு 3000 கோடி ரூபாயை தனது குடும்பத்திற்காக மட்டுமே பெறுகிறார் என்பதை ஏன் மக்களே சிறிதுகூட உணர மறுக்கிறீர்கள்.. இப்போதும் நீங்கள் தெளிவடையவில்லையெனில் உங்களுக்கான இடம் சுடுகாடு மட்டும்தான்..!

15. தனக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் அமர்த்த வேண்டி அவர்களுடைய சர்வீஸ் புக்கிலேயே திருத்தம் செய்து கில்லாடித்தனம் செய்திருக்கும் இந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாக லட்சணத்திற்கு ஒரு குட்டு வைத்து இவர்களை விரட்டியடியுங்கள் தோழர்களே..!

16. கண் சிகிச்சை முகாம் என்ற பெயரில் திருச்சி புனித ஜோஸப் கண் மருத்துவனையால் 66 ஏழை கிராமத்து மக்கள் கண் பார்வையை இழந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் பிச்சைக் காசாக ஒரு லட்சத்தைத் தூக்கி வீசியது தி.மு.க. அரசு. இதே ஜோஸப் கண் மருத்துவமனைக்குத்தான் இத்திட்டத்திற்கான மொத்தச் செலவில் பாதியைத் தூக்கிக் கொடுத்திருக்கிறது தி.மு.க. அரசு. ஏன் தமிழ்நாட்டில் வேறு எங்குமே கண் மருத்துவமனைகளே கிடையாதா..? எவ்வளவு கமிஷன் கை மாறியிருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்..!




17.   ஒரு காலத்தில் தனது மகன் மு.க.முத்து ஹீரோவாக நடித்த சினிமாவை விலைக்கு வாங்கித் தன்னைக் காப்பாற்றிய விநியோகஸ்தர்கள் என்ற நன்றிக் கடனுக்காக, மக்கள் பணமான 1500 கோடி ரூபாயை இன்ஸூரன்ஸ் பணியில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத ஸ்டார் ஹெல்த் இன்ஸூரன்ஸுக்கு அள்ளிக் கொடுத்து, அதில் கமிஷனை மட்டும் வக்கனையாக சுருட்டிக் கொண்டிருக்கும் இந்த தாத்தாவை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டாமா..?
 

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தவிர மேற்கண்ட ஊழல்களும் இந்த ஆட்சியில்தான் தி்ட்டமிட்டு நடந்தேறியுள்ளது..!

இது அத்தனைக்கும் இவர்கள் நமக்கு பதில் சொல்ல வேண்டியது கட்டாயம்.

அந்த நிலைமைக்கு இவர்களைத் தள்ள வேண்டியதும் நமது கடமை..!

மறக்க வேண்டாம் தமிழக மக்களே..!

நாளைய வாக்குப் பதிவில் ஆளும் கட்சி கூட்டணியை எதிர்த்து வாக்களியுங்கள்..!

இந்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டால் அடுத்த முறை 3.50 லட்சம் கோடி ஊழலை நமது வாரிசுகள் சந்திக்க நேரிடும்..!

சிந்திப்பீர்..! செயல்படுவீர்..!

தி.மு.க. ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்..?

12-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நாளைய தினம், நம் தலையெழுத்தை மாற்றப் போகும் நாள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்ளையர் கூட்டம் நமது சொத்துக்களைக் கொள்ளையடிக்க நம்மிடமே அனுமதி பெறும் நாள். இதுவரை பட்டது போதும். இனிமேலாவது விழித்துக் கொள்வோம்..

தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி வீட்டுக்குப் போயாக வேண்டும். அடித்துத் துரத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை..!

அதற்கான காரணங்களாக எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


1. ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. செய்த துரோகம்

டெசோ மாநாடு நடத்தினோம். அகில இந்திய அளவில் ஈழத் தமிழர் பிரச்சினையை கொண்டு சென்றோம் என்ற தி.மு.க. கட்சியினரின் கூச்சலெல்லாம் கடந்த காலத்தோடு முடிவுற்றுப் போனது..

இறுதி யுத்தம் என்று ராஜபக்சேவால் அறிவிக்கப்பட்டு இந்திய கைக்கூலி அரசின் ஆயுத உதவியால் லட்சணக்கணக்கான தமிழ் மக்கள் ஒதுங்க இடம் கிடைக்காமல் ஒரு நாள் இரவு நிம்மதியாகத் தூங்கக்கூட முடியாமல் ஊர் விட்டு ஊராக ஓடிக் கொண்டிருக்கும்போது தமிழர்களுக்கெல்லாம் தலைவன் நானே என்று தன்னைத்தானே பீத்திக் கொண்ட இந்த உத்தமர், என்ன செய்தார்..?

ஆயுதம் கொடுப்பது இந்தியா. உலகச் சமுதாயம் இதில் தலையிடாமல் இலங்கையைக் காப்பது இந்தியா. ஐ.நா. சபைக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லவிடாமல் தடுப்பது இந்தியா என்று அத்தனை படுகொலைகளுக்கும் முழு முதற்காரணமான அன்றைய மத்திய அரசுக்கு முட்டுக் கொடுத்து தனது கட்சி எம்.பி.க்களின் ஆதரவினால் ஆட்சி நடத்த உதவிய இந்தக் கருணாநிதி கயவனில்லையா..?

புலிகள் தொடர்பான கருத்து வேறுபாட்டை பற்றிப் பிரச்சாரம் செய்ய இதுவா நேரம்..? அங்கே முள்ளிவாய்க்காலில் குடிப்பதற்கு பால்கூட இல்லாமல் குழந்தைகள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தபோது இந்த அருந்தவத் தமிழ்த் தலைவரின் புத்திரர்களும், வாரிசுகளும் நீரா ராடியாவுடன் “எனக்குத்தான் மந்திரி பதவி.. இல்லை.. இல்லை.. எனக்குத்தான் மந்திரி பதவி..” என்று பதவி ஆசை உரையாடலில் திளைத்திருக்கிறார்களே.. இவர்களெல்லாம் மனிதர்கள்தானா..?

தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு எத்தனை மந்திரி பதவி வேண்டும். எந்தெந்த இலாகாக்கள் வேண்டும் என்பதற்காக இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியில் போய் பிச்சையெடுக்கத் தெரிந்த இந்தத் தரித்திரத் தலைவருக்கு ஈழத் தமிழன் கொல்லப்படுகிறான் என்றவுடன் டெல்லியுடன் பேச முடியவில்லை.. அவர்களுக்கு நெருக்கடி கொடு்க்க முடியவில்லை. தான் கொடுத்திருக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்ற எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் தனது சீமந்தபுத்திரனுக்கு அமைச்சர் பதவி தராமல் போனால் நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம். வெளியேறுவோம் என்று மட்டும் சொல்லத் தெரிகிறது.

ஆக.. இவருக்கு தன் குடும்பம், சொந்தங்கள், உற்றார், உறவினர்கள் மட்டுமே முக்கியம். அவர்களுக்காகத்தான் ஆட்சி, அதிகாரத்தைப் பெற விரும்புகிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..! போதுமே.. இவரை வைத்துக் கொண்டு இனிமேல் நம்மால் கக்கூஸ்கூட கழுவ முடியாது. வீட்டுக்கே அனுப்பி ரெஸ்ட் எடுக்க வைப்போம்..! இந்த ஒரு காரணத்துக்காவே இந்த ஆட்சி தொலைய வேண்டியதுதான்..!

2. ரவுடித்தனம் செய்த அமைச்சர்கள்..!

சமூகத்தில் ரவுடித்தனம் செய்பவர்களைத் தடுக்க வேண்டிய அரசு நிர்வாகமே ரவுடித்தனம் செய்தால் என்னவென்று சொல்வது..?

தான் கொள்ளையடிக்க நினைத்த சொத்தை தராத ஒரே காரணத்துக்காக அந்த நிலத்தின் தற்போதைய உரிமையாளரை பொய் வழக்கில் சிக்க வைத்து, ஜெயிலுக்கு அனுப்பி வைத்து... இரவோடு  இரவாக  புல்டோசரை வைத்து அந்த இடத்தையே தரைமட்டமாக்கிய ஒரு மாபெரும் ரவுடியே இந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தால் அது எவ்வளவு பெரிய கொடுமை..!

அது மட்டுமா..? தன்னை எதிர்த்து பத்திரிகைகளிடம் பேட்டி கொடுத்ததற்காகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காகவும் அந்த நிலத்தின் உரிமையாளரின் மகனை நட்ட நடு இரவில் தனது வீட்டுக்கு எதிரே பகிரங்கமாக கட்டி வைத்து சவுக்கால் அடித்திருக்கும் கொடுமையைச் செய்திருப்பதும் அதே அமைச்சர்தான்..!

என்ன நடவடிக்கை எடுத்தார்கள்..? ராஜாவின் அமைச்சர் பதவியைப் பறித்தார்கள். கண் துடைப்புக்காக சிறையில் அடைத்தார்கள். மிக, மிக விரைவாக இந்த வழக்கை நடத்தி முடித்தார்கள். சாட்சி சொல்ல ஒருவர்கூட இல்லாத நிலையில் அந்த வழக்கு தள்ளுபடியானது. அந்தத் தாக்கப்பட்ட தமிழரின் உடலில் இன்னமும் இருக்கும் வரி, வரியான கோடுகள்தான் இந்த உத்தமச்சோழனின் பரம்பரையின் லட்சணத்தை படம் பிடித்துக் காட்டுகிறது..

இதைக் கேள்விப்படும்போது நம் மனசு கொதிக்கிறது..! யாரோ ஒரு பதிவர் வார்த்தைகளால் திட்டிவிட்டாரே என்றபோதே ஆள், அம்பு, படையணி திரட்டி ஒரு வாரத்திற்கு அவர் மீது சொல்லம்பு தொடுக்கும் வலையுகப் பதிவர்கள் கொஞ்சம் இதைப் பற்றி ஒரு நிமிடமாவது யோசித்துப் பாருங்கள்..!

இதுபோல் நம்மில் யாருக்காவது.. நமது உடன்பிறந்தாருக்கு நேர்ந்திருந்தால் நமக்கு எந்த அளவுக்கு ரத்தம் கொதித்திருக்கும்.? ஆனாலும் இந்த ஆட்சியை ஆதரிக்க நம்மில் சிலருக்கு எப்படி  மனம் வருகிறது என்றே தெரியவில்லை..! இதோடு விட்டார்களா இந்தக் கயவர்கள்..?

இதே ரவுடி அமைச்சருக்கு மீண்டும் தேர்தலில் நிற்க சீட் கொடுத்து நிற்க வைத்து “இவரையும் ஜெயிக்க வையுங்கள்” வெட்கமில்லாமல் நம்மிடமே வந்து கேட்கிறார்கள். இப்படி கேட்கும் அளவுக்கு இந்த ஆட்சியாளர்களுக்கு தைரியம் இருக்கிறது என்றால் மக்களாகிய நம்மை எந்த அளவுக்கு இவர்கள் எடை போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது..!

இவருக்குப் போட்டியாக சேலம் மாவட்டத்து குறுநில மன்னரான வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், ஒருவரின் குடும்பச் சொத்தை அபகரிக்க வேண்டி அந்தக் குடும்பம் மொத்தத்தையும் ஆள் வைத்து கொலை செய்திருக்கிறார். அந்தக் குற்றத்தை இவர்தான் செய்திருக்கிறார் இன்று இன்றைய ஆட்சியின் காவல்துறையே கைது செய்கிறது. அந்தக் கைது செய்யப்பட்டவனையே அமைச்சராக இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம் சிறைக்குச் சென்று பார்க்கிறார்..! போதுமே.. இந்த வழக்கு என்னாகும் என்று இப்போதே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..!

இவர்கள் நம் மீது காட்டும் இந்த மரியாதைக்கு நாம் பதில் மரியாதையை செய்ய வேண்டாமா..? தயவு செய்து இவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்..!

3. ஸ்பெக்ட்ரம் மகா ஊழல்

இனிமேல் இதுபோன்ற ஊழலை உலகத்திலேயே யாருமே செய்ய முடியாது என்று உலக அரசியல்வியாதிகளே சொல்கின்ற அளவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்திருக்கும் இவர்களை எந்த விளக்கமாற்றை வைத்து அடிப்பது..!

அந்த ஊழல் பணம் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கே வந்து சேர்ந்திருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பும், இவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நம்மிடம் ஓட்டுக் கேட்க வருகிறார்கள்..?

நாம் எப்படி இவர்களை அனுமதிப்பது..? நம் அனுமதி பெற்றே இந்தக் கொள்ளையை இவர்கள் செய்திருக்கிறார்கள் என்னும்போது அடுத்த முறை தேர்வு செய்யும்போது நாம் கவனமாக இருக்க வேண்டாமா? ஆகவே தோழர்களே.. தயவு செய்து இந்தக் கூட்டணியை ஒதுக்கித் தள்ளுங்கள்..!

4. ஆட்சி நிர்வாகம் செய்த லட்சணம்..!

நடக்கவே முடியாத முதலமைச்சரை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தினால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு உதாரணத்தையும் கருணாநிதிதான் செய்து காட்டியிருக்கிறார்.

அவருடைய கட்சி உறுப்பினரான ஒரு நகர மன்றத் தலைவர் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டிருக்கிறார். மாநிலத்தின் முதல்வரான இவருக்கு அந்தத் தகவல் மாலைவரை சொல்லப்படவில்லை. மாலையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட பின்பு ஆச்சரியத்துடன் “அப்படியா..?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்கிறார்.. இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தினால் வெளங்குமா..?

முதல் அமைச்சரின் குடும்பச் சண்டை பகிரங்கமாக வெடித்தது. இதனால் அப்பாவிகள் 3 பேரின் உயிர்கள் பிரிந்தன. அந்தக் கொலைகாரர்களை அப்பட்டமாக வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தும், அந்த வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியடையச் செய்யும் அளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து முடித்து தனது மகனை காப்பாற்றிக் கொண்ட இந்த ராஜராஜசோழனை வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா..? அந்த வழக்கில் இறந்து போன அப்பாவிகளுக்கு என்னதான் பதில்..?

முத்துக்குமார் என்னும் வீர இளைஞன் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான். அந்த இளைஞனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அதேவேளையில் தான் பெற்றெடுத்த ரவுடி மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அறிக்கை வெளியிட்ட இந்த மகா உத்தமத் தலைவனை தமிழகம் பெற்றெடுத்ததற்கு நாம் நிச்சயமாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..!
பிரபாகரன் என்னும் ஒரு தமிழரின் தாயார்.. 80 வயது மூதாட்டி. பெயர் பார்வதியம்மாள். சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகிறார். படுத்தப் படு்க்கையாகக் கிடக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுமாம்..! அதனால் அவரை அப்படியே திருப்பியனுப்பிவிட்டார் இந்த மனுநீதிச் சோழன்.

இதாவது பரவாயில்லை. இதற்காக அவர் சொன்ன விளக்கங்கள்தான் மகா கொடுமை. முதலில் "எனக்குத் தெரியாது.." என்றார். பின்பு "அந்த அம்மையாரை திருப்பி அனுப்பிய பின்புதான் என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.." என்றார். மீண்டும் வேறொரு அறிக்கையில் "அந்த இடத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால்தான் காவல்துறையினர் அனுப்பப்பட்டார்கள். ஆனால் இதுவும் எனக்குத் தெரியாது. நான் தூங்கிவிட்டேன்.." என்று அண்டப்புளுகு புளுகினார்.

இவர் எதுக்காக முதல் அமைச்சர் பதவியில் உட்கார்ந்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்..!? வீட்டில் ஓய்வெடுத்து தூங்கலாமே..? யார் வேண்டாம் என்று மறுத்தது..?

தன் கண்ணெதிரே தமிழகத்து வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் நான் பேசினேன் என்று தைரியமாக இவருடைய வாய் சொல்கிறது என்றால் எவ்வளவு தைரியம் இவருக்கு..? அதைப் பார்த்தவர்களும், செய்தியைக் கேட்பவர்களும் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றுதானே இவர் நினைத்திருக்கிறார்..!? இந்த மனிதரை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டாமா..!?

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை கை கட்டி வேடிக்கை பார்த்தது இவருடைய காவல்துறைதான். ஆள் மாற்றி ஆள் கை காட்டி இப்போது கோர்ட்டின் நடவடிக்கையில்தான் உண்மைகளே வெளி வருகிறது. இவருடைய ஆட்சியின் லட்சணம் இதிலிருந்தும் தெரிகிறது..! கேட்டால் இந்தியாவிலேயே இவர்தான் ஆட்சி நடத்துவதில் சிறந்தவராம்..! தூக்குப் போட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறது..!

உயர்நீதிமன்றத்தி்ல் வழக்கறிஞர்கள், காவல்துறையினருக்கு இடையில் மோதல்.. மீண்டும் ஒரு அமளி.. நிலைமையைக் கட்டுக்குள் அடக்க வேண்டிய வழி வகைகளை ஆராய வேண்டிய இவரோ சாவகாசமாக வீட்டில் அமர்ந்து லைவ் ரிலே பார்த்துக் கொண்டிருக்கிறார்..!

இவருடைய வீட்டில் ஒரே ஒரு நாள் காவல்துறை புகுந்ததற்காக எத்தனை, எத்தனை ஒப்பாரிகளையும், கூச்சல்களையும் கிளப்பினார் இவர்..? அப்போது மற்றவர்களை இவர் என்னவென்று நினைக்கிறார்..? இவர் முதல்வராக இருக்க வேண்டுமென்று இங்கே யார் அழுதது..?

இங்கே நான் கேள்விப்பட்ட, படித்த இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் தோழர்களே..!

உலகத்தின் 214-வது பணக்காரர் சிவ்நாடார். மொத்தச் சொத்துக்கள் 4 பில்லியன்.. HCL நிறுவனத்தின் தலைவர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. தினத்தந்தியின் நிறுவனர் அமரர் ஆதித்தனாரின் உடன் பிறந்த அக்காளி்ன் மகன். நடிகர் சரத்குமாரின் சொந்த அத்தை மகன். பிரபல தமிழ்ப் பெண் எழுத்தாளர் ரமணி சந்திரனின் உடன்பிறந்த தம்பி..!

இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். இவர் மூலமாக சிவ்நாடாருக்கு ஒரு மகன் உண்டு. ஏதோ ஒரு காரணத்தினால் இந்த மனைவியை விலக்கிவிட பெரும் முயற்சி செய்தார் சிவ்நாடார். முடியவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டார் அவரது மனைவி.

மனைவியுடன் சமரசமாக போக முயற்சி செய்தார். முடியாமல் போக இப்போதைய ஆட்சியாளர்களை அணுகினார். கொடுக்க வேண்டியதை கொடுத்திருக்கிறார். உத்தரவுகள் பறந்தன. அந்த 2-வது மனைவி மீது அதிரடியாக ஒரு வழக்கு பாய்ந்தது. என்ன வழக்கு தெரியுமா..? பேருந்து நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக..! இது எப்படியிருக்கு..? 4 பில்லியன் சொத்துள்ள ஒருவரின் மனைவி கத்தியைக் காட்டி வழிப்பறி செய்தாராம்.. அப்படியே அவரைக் கொத்தாகத் தூக்கிச் சென்று சிறையில் அடைத்தார்கள். இது போன்ற கொடுமைகளை பிரிட்டிஷ்காரர்கள்கூட செய்திருக்க மாட்டார்கள்..!

அந்த மனைவி வெளியில் வர வேண்டுமெனில் பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்ல வேண்டும் என்றார்கள். அந்தப் பெண்ணும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள.. பணம் கை மாறியது.. வழக்கும் கைவிடப்பட்டது. திருமண ஒப்பந்தம் முறிந்து போன சந்தோஷத்தில் சிவ்நாடார் விமானமேறினார். அவரது முன்னாள் மனைவிக்குக் கொடுக்கப்பட்டதில் பாதியை ஆட்சியில் இருந்தவர்களும், ஏற்பாடு செய்த உளவுத்துறையின் மூத்த அதிகாரியொருவரும் பங்கு போட்டுக் கொள்ள.. கணவர் கொடுத்தப் பணத்தில் பாதிதான் மனைவிக்கு நஷ்ட ஈடாகக் கிடைத்தது.

எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவரை, பத்திரிகையாளர்களுடன் பேச விடாமல் செய்ததில் அந்த மூத்த உளவுத்துறை அதிகாரிக்கு பெரும் பங்குண்டு. இந்த ஆட்சி போன பின்பு இந்த விவகாரம் வெளிவரும் என்று நினைக்கிறேன்..!

ஆட்சி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த மாட்டேன் என்றெல்லாம் பொய் சொல்லி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட இந்த முதலமைச்சரும், அமைச்சரவை சகாக்களும் இது போன்ற எத்தனை, எத்தனை குற்றங்களைச் செய்கிறார்கள்.. செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு நன்கு தெரியும்..!  இவர்களை ச்சும்மா விட்டு வைக்கலாமா..? வாய்ப்பு நாளை மறுநாள் வந்திருக்கிறது.. விட்டுவிடாதீர்கள் தோழர்களே..!

இது மட்டுமல்ல.. விலைவாசி உயர்வு, மின் வெட்டு என்ற இரண்டு பூதங்களையும் வளர்த்துவிட்டதில் இவர்களுக்கும் பங்குண்டு..!

யார் ஆட்சி செய்தாலும் விலைவாசி உயரத்தான் செய்யும் என்பார்கள் சிலர்..! ஆனால் பெட்ரோல், டீசலின் விலையை தன்னிச்சையாக அந்த நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றியது இந்தத் தர்மதுரையின் கட்சியின் முழு ஆதரவைப் பெற்றிருக்கும் மத்திய ஆட்சிதான்.

ஒரே மாதத்தில் 2 முறைகள் ஏற்றப்பட்டு நிமிடத்துக்கு நிமிடம் காய்கறிகளின் விலையை உச்சத்தைத் தொட காரணகர்த்தாகவாக இருந்து தொலைந்திருக்கும் இந்தக் கயவர்களைத் தண்டிக்க வேண்டாமா..?

இந்த ஐந்தாண்டு காலத்தில் அத்தனை அமைச்சர்களும் சொல்லி வைத்தாற்போல் தங்களது சொத்துக்களை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால் அதேபோல் மாநிலத்தின் அத்தியாவசியத் தேவையான மின் சப்ளையை பல மடங்கு உயர்த்தாமல்.. அதற்கான வழிமுறைகளைக் கண்டறியக்கூட மனமில்லாமல் இருந்திருக்கும் இந்த திறமையில்லாதவர்கள் எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும்..?

தங்களுடைய சொத்து மதிப்புகளை மட்டும் உயர்த்தத் தெரிந்த இவர்களுக்கு மாநிலத்திற்கு மிகத் தேவையான மின் உற்பத்தியை பெருக்கத் தெரிய வேண்டாமா..? எல்லாவற்றிலும் கமிஷன் அடித்தே பழகித் தொலைத்திருக்கும் இவர்களால் கமிஷனைத் தாண்டி எதையும் செய்ய முடியாமையே இதற்குக் காரணம் என்று கோட்டை வட்டாரத்தில் தெளிவாகவே பேசுகிறார்கள். இந்தத் திருடர்கள் நமக்குத் தேவைதானா..?

கடைசியாக மீனவர்கள் பிரச்சினை..! மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்கிறார்கள். அப்படிச் செல்ல வேண்டாம் என்று கூப்பாடு போடும் மத்திய அரசும், தமிழக அரசும், எல்லை தாண்டிப் போய்விடும் நம் தமிழகத்து அப்பாவி மீனவர்களை பங்களாதேஷும், பரமவைரி பாகிஸ்தானும் துப்பாக்கியால் சுடாமல் பத்திரமாகத் திருப்பியனுப்புவதை அறிவார்களா..?

சுண்டைக்காய் பயலாட்டம், ஒண்ணுக்கடித்தாலே வரைந்துவிடும் அளவுக்கு சின்ன நாடாக இருக்கும் இந்த இலங்கைக்கு எத்தனை தைரியம் இருந்தால் இத்தனை தமிழர்களை கொன்று குவித்திருப்பார்கள்..? ஒன்றா இரண்டா..? இதுவரையில் 550-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கேட்பார் உண்டா..?

இந்தியாவில் இருந்து அத்தனையையும் இறக்குமதி செய்து கொண்டு, நாம் போடும் பிச்சைக் காசில் உட்கார்ந்து சாப்பிடும் அந்த நாட்டு கொழுப்பெடுத்த ராணுவத்திற்கு தமிழன் என்றாலே இளக்காரமாகப் போகிறதே..? இதற்கென்ன காரணம்..? கேள்வியே கேட்காத, கேட்க விரும்பாத, மத்திய அரசும், தமிழக அரசும்தானே..!

மத்திய அரசுதான் இதற்கு பொறுப்பு என்றால், அந்த அரசுக்கு நீங்கள் ஏன் ஆதரவு கொடுக்கிறீர்கள்..? உங்களது கட்சிக்காரர்கள் ஏன் வெட்கமில்லாமல் மந்திரி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்..?

இதே தமிழன் ஓட்டுப் போட்டு உன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியதால்தானே உங்களது மனைவி, துணைவியுடன் மக்கள் பணத்திலேயே விமானத்தில் ஊர், ஊராகச் சுற்றுகிறீர்கள்..? உங்க அப்பன் வீட்டுக் காசுலயா போறீங்க..? துரோகிகளா..!

அன்பு பதிவர்களே..! வாசகர்களே..! பொதுமக்களே..! இவர்கள் இருந்தென்ன? போயென்ன..? நாட்டு மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாத இந்தக் கோழைகளை ஆட்சிக் கட்டிலில் ஒரு நிமிடம்கூட இனியும் உட்கார வைக்கக் கூடாது..! வீட்டுக்கு அனுப்பி வைப்போம். வாருங்கள்..!

சரி.. தி.மு.க. வேண்டாம். அப்படியானால் இந்தக் கூட்டணி..? கூட்டணி வேறு இவர்கள் வேறா..? இந்தக் கூட்டணியே வேண்டாம். இவர்களுடன் கூட்டணி வைத்த பாவத்திற்காக அவர்களுக்கான தண்டனையை அவர்களும் அனுபவிக்கத்தான் வேண்டும்.

அதிலும் இந்தக் கூட்டணியின் பிரதான அங்கமாக இருக்கும் காங்கிரஸை ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவிடாமல் செய்தால்தான், முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த நமது தமிழர்களின் ஆன்மா சாந்தியாகும்..!

இந்தப் பக்கமும் பேசுவோம்.. அந்தப் பக்கமும் பேசுவோம் என்ற நினைப்பில், “ஏய் இந்திய அரசே..” என்று ஏதோ அமெரிக்க ஒபாமாதான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துகிறார்போல் கூச்சலிடும் திருமாளவன், அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான இத்தாலியம்மாவுடன் ஒரே மேடையில் காட்சி தந்து அந்தம்மாவுக்கும் சல்யூட் அடித்து தன்னை கொடுந்தமிழனாகக் காட்சி தருகிறார். இவரையும் சேர்வார் சேர்க்கை சரியில்லை என்கிற காரணத்திற்காகத் தண்டிக்கத்தான் வேண்டும்.

இந்தக் கூட்டணி வேண்டாம் என்றால் வேறு எவருக்கு..?

எதிரில் நிற்பது ஜெயலலிதாவின் அதிமுக கூட்டணி. இவர்கள் இல்லாமல் இந்திய ஜனநாயகக் கட்சி, மற்றும் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் சுயேச்சைகள் என்று பல பிரிவினரும் நிற்கிறார்கள்..!

என்னுடைய முதல் சாய்ஸ்.. இரண்டு கம்யூனிஸ இயக்கங்களின் சார்பில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றாக வேண்டும். ஏழை, எளிய மக்களுக்காக இன்றளவும் சட்டமன்றத்திலும், வெளியிலும் கூட்டணி தர்மத்தைக்கூட பொருட்படு்த்தாமல் பேசக் கூடிய தலைவர்கள் கம்யூனிஸ இயக்கத் தலைவர்கள்தான்.

ஆகவே இந்த கம்யூனிஸ இயக்கங்களின் சார்பில் போட்டியிடும் தொகுதிகளில் இவர்களை நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கலாம். இவர்களுக்குப் போடுகின்ற ஓட்டு நிச்சயம் வீண் போகாது..!

மீதம் இருக்கின்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியைத் தவிர மற்றவர்களில் உங்களது தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள்..? யார் வந்தால் உங்களால் அவர்களை எளிதாக அணுகமுடியும்..? யார் சம்பாதிக்க நினைக்காமல் இருக்கிறார்கள்.? என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்..! அதுவே போதும்..!

இறுதியில் குழப்பங்கள் வரலாம். வரட்டும்.. தி.மு.க. கூட்டணியை முதலிலேயே முற்றாக வெளியேற்றிவிட்டதால் அடுத்து இருப்பவர்களில் ஒருமித்தக் கருத்து கொண்டவர்கள் தங்களுக்குத் தாங்களே விலங்கு போட்டுக் கொண்டு குறைந்தபட்சம் ஒரு நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டுமே என்கிற பய உணர்வோடு ஆட்சி நடத்த முன் வருவார்கள் என்று நம்புகிறேன்..!

என் இனிய தோழர்களே..! இந்த முறையும் தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள்..!

தி.மு.க. கூட்டணியை முற்றாகப் புறக்கணித்து இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுத்து ஒளி பாய்ச்சுங்கள்..!

பொறுமையாகப் படித்தமைக்கு எனது அன்பான நன்றிகள்..!

குறிப்பு : கொஞ்சம் கஷ்டத்தோடு கஷ்டமாக இந்தப் பதிவுக்கு ப்ளஸ் ஓட்டளித்தீர்களேயானால், இன்னும் பல நூறு பேர்கள் இந்தப் பதிவைப் படிக்க வாய்ப்பு கிடைக்கும்..!

நன்றி..!