பசங்க - ஒரு சிறிய விமர்சனம்..!

25-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



இந்தாண்டு இதுவரையில் வெளி வந்த திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த திரைப்படம் இதுதான்.

குடும்பத்துடன் அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

காணத் தவறாதீர்கள்..!

முடிவுக்கு வந்ததா தமிழீழ கனவு..!?

18-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முடிந்ததா 35 ஆண்டு கால சகாப்தம்..!?




புத்த பகவானே.. உன் பெயரைச் சொல்லித்தான் இந்தப் படுகொலைகள்..! வணங்குகிறேன் உன்னை..!



சிங்கள மக்களே..! தமிழீழ கோரிக்கையை வேரோடு அழித்துவிட்டேன்..! இனி போர்க்கொடி உயர்த்த நாதியில்லை..! அடுத்த தேர்தலிலும் நானே ஜனாதிபதி..!


வெல்டன் பாய்.. இப்பத்தான் மகிந்த ராகபக்சே போன் பண்ணி 'செஞ்ச உதவிக்கு நன்றி'ன்னு சொன்னார்.. அவர் கொடுத்துவி்ட்ட
பூங்கொத்துதான் இது..!



ஐயையோ மேடம்..! என்ன இது.. நீங்க சொன்னீங்க.. நான் செஞ்சேன். அவ்வளவுதான்.. உண்மையா இந்தப் பூங்கொத்து உங்களுக்குத்தான்.. பிடிங்க..!



சிங்களவனுக்கு கொண்டாட்டங்கள்..!


மீண்டும் பறக்குது சிங்களக் கொடி..!


கோலாகலங்கள்..!


வீதியெங்கும் விழாக்கள்..!


இனி இந்த தமிழ் மக்களின் கதி..?








விஜயகாந்த் கட்சியின் எதிர்காலம்..!

18-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே.!


தமிழகத்தை மொட்டையடித்து தங்களது குடும்பத்தின் மொத்த சொத்துக்களை அதிகரிப்பதில் போட்டோ போட்டியில் இருக்கும் இரண்டு பெரிய திராவிட அரசியல் கட்சிகளுமே ஒரு விஷயத்தில் மட்டுமே உறுதியுடன் உள்ளன. அது தங்களைத் தவிர வேறு யாரையும் இப்போதைக்கு மட்டுமல்ல.. எப்போதுமே வளர விடக்கூடாது என்பதில்தான்.

அடிக்கின்ற கொள்ளையைத் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வது. முடிந்தால் தங்களுக்குள் மட்டுமே விட்டுக் கொடுத்துவிட்டுப் போவது.. மற்றபடி வேறு எவனாவது நானும் திராவிடன் என்று சொல்லி வந்தால் அவனை வெட்டிவிடுவது என்பதை இந்தத் தேர்தல் வரையிலும் பின்பற்றி வருகின்றன திமுகவும், அதிமுகவும்.

இரண்டு கழகங்களும் வைகோவுக்கு தேர்தல் நேரத்தில் கழுத்தில் கத்தி வைப்பதுபோல் நெருக்கடி கொடுத்தது இதனால்தான். தங்களுக்கு அடங்கியிருக்கும் கட்சி என்பதோடு, நாய்க்கு போடும் பிஸ்கட்டைப் போல் 1, 2-ஐ வாங்கிக் கொண்டு வாங்கியதற்கு நன்றியாக கேட்கும்போதெல்லாம் வாலாட்டும் கட்சிகள்தான் அவர்களுக்குத் தேவை..

இன்றுவரையிலும் விஜயகாந்த் மீது தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் இரு கட்சியினருமே தாக்குதலைக் கொடுக்காமல் வருவதற்குக் காரணமே நாம் ஏன் வளர்த்து விட வேண்டும் என்று இந்த சிவனும், ஆண்டாளும் (அப்படி என்று நினைப்பு ரெண்டு பேருக்கும்..!) நினைப்பதுதான்..

இவர்களுடைய புறக்கணிப்பில் இன்னொரு லாபமும் உண்டு. அது விஜயகாந்தால் பிரியப் போகும் பொதுவானவர்களின் ஓட்டு. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தமிழ்நாட்டில் நிரந்தரமான ஓட்டு வங்கி ஒன்று உண்டு. அந்த இரு கட்சியின் ரசிகர்களைத் தவிர பொதுவாக இருப்பவர்களில் அதிகம்பேர் எந்தப் பக்கம் வாக்களிக்கிறார்களோ, அவர்களே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஜெயித்து வருகிறார்கள்.

அப்படி பொதுவாக இருப்பவர்களில் லட்சணக்கணக்கானோர் இந்த இரண்டு திருடர்களைத் தவிர வேறு யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் விஜயகாந்துக்கு கடந்த தேர்தலிலும், இந்தத் தேர்தலில் தங்களது வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதன் பயனாக சென்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8.38 சதவிகித ஓட்டுக்களைப் பெற்றிருந்த தே.மு.தி.க., இந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் 10.1 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று தனது ஓட்டு வங்கியை உயர்த்தியிருக்கிறது.

இந்த தேர்தலில் திமுக 22 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இக்கட்சி பெற்றிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 76 லட்சத்து 25 ஆயிரத்து 421. இது 25.10 சதவிகிதம்.

அதிமுக 23 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களை வென்றிருக்கிறது. இக்கட்சி வாங்கியிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 69 லட்சத்து 63 ஆயிரத்து 510. இக்கட்சியின் ஓட்டு சதவிகிதம் 22.91.


இந்த மக்களவைத் தொகுதியில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் பதிவான ஓட்டுக்கள் 3 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்து 49. இதில் 30 லட்சத்து 72 ஆயிரத்து 881 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது தே.மு.தி.க.

35 தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளியுள்ளது தேமுதிக.

25 தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றி வித்தியாசத்தைவிட தேமுதிக வேட்பாளர் பெற்ற ஓட்டுக்கள் அதிகம்.

தேமுதிக தனித்துப் போட்டியிட்டு ஓட்டுக்களைப் பிரித்ததினால் அதிகப்பட்சமாக அதிமுக 8 தொகுதிகள், காங்கிரஸ் 7 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 1 தொகுதி, மதிமுக 1 தொகுதி, விடுதலைச்சிறுத்தைகள் 1 தொகுதி, மற்றும் பாரதீய ஜனதா 1 தொகுதி என்று பல தொகுதிகளை இழந்திருக்கிறார்கள்.

ஏழு தொகுதிகளில் திமுக வெற்றி பெற உதவியிருக்கிறது தேமுதிக.

வடசென்னை, திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி வித்தியாசத்தைவிடவும், தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதிகம்.

அதே போல் திருவள்ளூர், தென்சென்னை, சேலம், திருப்பூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கும் தேமுதிக வேட்பாளர்கள் பிரித்தெடுத்த வாக்குகளே காரணம்.

ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என்று மதிமுக ஈரோட்டில் வென்ற கதையிலும் தேமுதிகவின் வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய 7 தொகுதிகளில் அக்கட்சி பெற்ற வெற்றிக்கும் காரணம் தேமுதிகதான்.

நான் பெரிதும் வருத்தப்படுவது வைகோவின் தோல்விக்காகத்தான்.. அவர் தோற்றது 15764 வாக்குகள் வித்தியாசத்தில். ஆனால் அந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மாபா பாண்டியராஜன் பெற்றிருக்கும் வாக்குகள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 229. நடிகர் கார்த்திக் வாங்கியிருந்த ஓட்டுக்களும் பத்தாயிரத்துக்கும் மேல்..

இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக இவர் ஜெயித்திருக்க வேண்டும். கதையை முடித்துவிட்டார்கள் விருதுநகர் தொகுதி மக்கள். இனிமேல் நல்லவர்கள் ஜெயிக்க முடியவில்லை என்று யாரும் புலம்பக் கூடாது..

கடைசி நிமிடத்தில் புதுமனைபுகுவிழா வீட்டில் நடந்த பேரம் நல்லபடியாக நடந்து முடிந்து காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்தால், தேமுதிக மூலம் திமுக கூட்டணிக்கு 12 இடங்களாவது கூடுதலாக கிடைத்திருக்கும்.

அல்லது கொட்டிவாக்கம் பங்களாவில் நடத்திய பேச்சுவார்த்தை ஜெயித்து பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும் ‘அம்மா'வுடன் இணைந்திருந்தால், அந்தக் கூட்டணிக்கும் 12 இடங்களாவது கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.

கூடவே விஜயகாந்திற்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக இருவருமே கொடுக்க முன் வந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மாத்திரை கொடுக்காமலேயே மருத்துவர் ராமதாஸுக்கு பேதியை வரவழைத்திருக்கலாம்.

இப்படி ஜெயிக்க முடிந்த விஷயங்களையெல்லாம் கைவிட்டுவிட்டு, தங்களது கட்சிக்காரர்களை அல்லல்பட வைத்தாலும் தைரியமாக தனித்து நின்று வீரம் காட்டிய அண்ணன் விஜயகாந்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன்..

அதோடு காங்கிரஸுடனான தேமுதிகவின் கூட்டணியை முறியடித்த பெருமையும் கலைஞரையே சேரும். திமுகவின் தொகுதிப் பட்டியலில் ஒதுக்க முடியாது. வேண்டுமானால் உங்களது பட்டியலிலேயே 5 தொகுதிகளை ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

முடிந்தவரை கேட்டுப் பார்த்தும், போராடிப் பார்த்தும் 8 தொகுதிகளுக்குக் குறையாமல் விஜயகாந்த் கேட்க.. இழுபறி நிலைமை இருக்கும்போதே விஜயகாந்துக்கே 5 போய்விடும் என்றால் உங்களது மற்றத் தலைவர்களுக்கும், அவர்களுடைய அடிப்பொடிகளுக்கும் சீட்டு எப்படி கிடைக்கும் என்று டெல்லிக்கு காவடி எடுக்க வைத்து அந்தத் திட்டத்தையே முறியடித்தது திமுக.

இந்தப் பக்கம் வழக்கம்போல அம்மா.. சும்மா பேச்சுக்கு ஒரு பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு 4 தர்றோம்.. இஷ்டம்னா வாங்க.. இல்லாட்டி மரியாதை படத்துக்கு டப்பிங் இருக்காம்ல.. போய்ச் செய்யுங்க என்று சொல்லி கவுரவமாக அனுப்பி வைத்தார் அம்மா..

வேறு வழியில்லாமல் தனித்தே நின்று ஓட்டு வங்கியை உயர்த்திக் கொண்ட பெருமையை மட்டுமே இத்தேர்தல் விஜயகாந்திற்குக் கொடுத்துள்ளது.

அடுத்தத் தேர்தலில் கேப்டன் திராவிட பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் அவருக்கு தற்போது இருக்கும் பத்து சதவிகித வாக்குகள் அப்படியே இனிமேல் கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. “இரண்டு திருட்டுக் கட்சிகளுமே வேண்டாம் என்றுதான் உன்னை கூப்பிடுறோம்.. நீயும் அவங்களோட சேர்ந்துக்கிட்டு வோட்டு கேட்டு வந்தா என்ன அர்த்தம்..?” என்று மக்கள் திருப்பி பொடனியில் அடித்துக் கேட்பார்கள்.

ஆக புரட்சிக் கலைஞர் அடுத்தத் தேர்தலிலும் தனித்து நின்று ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பெறலாம்.

அல்லது இந்த இரண்டு பெரிய திருட்டுக் கட்சிகளைத் தவிர மற்ற சில சில்லரை உதிரி பாகங்களைக் கொண்ட கட்சிகளை வைத்து மூன்றாவது அணி அமைத்தால் ஒரு பத்து, பதினைந்து தொகுதிகளாவது அண்ணனுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். விஜயகாந்திற்கு இன்னும் வயது இருக்கிறது.. ஒரு வேளை அடுத்தடுத்தத் தேர்தல்களின்போது அவருக்கான வாய்ப்பு இருக்குமானால் அதனை அவர் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்..

பார்ப்போம்..!

தம்பி சரத்பாபுவிற்கு ஒரு சல்யூட்..!

17-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



அரசியல் ஒரு சாக்கடை என்று திருக்குறளைப் போல் எழுதி வைத்துக் கொண்டு ஒப்பாரி மேல் ஒப்பாரி வைக்கும் ஒப்பற்ற தமிழர்களில் நானும் ஒருவன்.

புலம்புகிற நேரத்தில் அந்தச் சாக்கடைக்குள் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்யலாமே என்று எவராவது கேட்டுவிட்டால், பதில் சொல்ல நெஞ்சக்கூட்டில் மாஞ்சா இல்லை என்பதால் அப்போதைக்கு ஜூட் விடுவதுதான் இதுவரையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

அன்னைக்குச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும்போது இருப்பதையும் தொலைத்துவிட்டு பின்பு எதனை வைத்து வயிற்றை நிரப்புவது என்கின்ற பிரச்சினையால்தான் பெருவாரியான அரசியல் மீது அனுதாபமுள்ள இளைஞர்கள் அரசியலை பேசுவதோடு சரி.. உள்ளே இறங்காமல் தவிர்க்கிறார்கள். அதில் நானும் ஒருவன்.

அதோடு இன்றைய அரசியலில் கவுன்சிலர் தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்றால்கூட குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். போட்டதை அள்ள வேண்டும் என்று நினைத்தால் சாக்கடையைச் சுத்தம் செய்த வந்தவனாகத் தன்னைக் கருதக் கூடாது.. தன்னையும் ஒரு பன்றியாக நினைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இது இல்லாமல் நிஜமாகவே கவுன்சிலராகி மக்கள் சேவை செய்ய பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் முன் வரும் இந்தியர்கள் அல்லது தமிழர்களை தேடித்தான் பிடிக்க வேண்டும். இங்கு யாருக்கும் பணம் வீட்டில் முளைப்பதில்லை. வேறெங்கும் மரத்தில் காய்ப்பதில்லை. கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம்.

கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பதை மக்கள் பணியில் செலவழிக்கலாம். ஆனால் இங்கு இறக்கப்படும் பணம் முறைகேடாக பல்வேறு வழிகளில் அரசியல்வியாதிகளின் சின்னவீடு வரையிலும் சென்று சேர்வதால்தான் அந்த தயாள எண்ணம் கொண்டவர்கள்கூட இந்தச் சாக்கடையில் இறங்காமல் வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவியளித்து வருகிறார்கள்.

தேர்தல்களில் போட்டியிடுவது ஒரு பெயருக்காக அல்லது பிரபலத்துக்காக என்று வைத்துக் கொண்டாலும், தோற்கத்தான் போகிறோம் என்பது தெரிந்துதான் அனைத்து சுயேச்சைகளும் களத்தில் நிற்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் எதிர்ப்பது கட்சிகளை வைத்து அரசுப் பணத்தை சுரண்டி தங்களது மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டு அரசு மரியாதையோடு செத்துப் போக விரும்புகின்ற அரசியலில் செத்த தலைவர்களுக்கும், அவர்தம் கொள்ளைக்கூட்டக் கம்பெனிக்கும் எதிரானவை என்பதால் நிச்சயம் வரவேற்கத்தக்கதுதான்.


இதற்கெல்லாம் ஒரு தனி தைரியம் வேண்டும்தான்.. தோற்றால் பணமும் காலியாகும். மீண்டும் அந்தப் பணத்தை சம்பாதிக்க பெரும் கஷ்டப்படத்தான் வேண்டும் என்பதெல்லாம் தெரிந்தும், உண்மையான
அக்கறையோடும், சமூக நோக்கத்தோடும் இந்தத் தேர்தலில் நின்றிருக்கிறார் அருமைத் தம்பி சரத்பாபு.


தென்சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தம்பி சரத்பாபு அத்தொகுதியில் போட்டியிட்ட அனைத்து சுயேச்சைகளிலும் அதிகப்படியான ஓட்டுக்களை வாங்கியுள்ளார்.

தேசியக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இல.கணேசன் பெற்ற ஓட்டுக்கள் 42,925.

பல வருடங்களாக மாநில அரசுகளையும், தொழிலதிபர்களையும், காவல்துறையினரையும் கலங்கடித்து வரம் டிராபிக் ராமசாமி என்கிற சமூக சேவகர் பெற்ற ஓட்டுக்கள் 1693.

ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே பிரபலமான நமது அன்புத் தம்பி சரத்பாபு பெற்றுள்ள ஓட்டுக்கள் 14101.

வலையுலகத்தில் தம்பி பற்றி வெளியான செய்திகளினாலும், பத்திரிகைகள் அவருக்குக் கொடுத்த விளம்பரத்தினாலும் இந்தத் தம்பி அனைத்து சுயேச்சைகளையும் முந்தியிருக்கிறார் என்பது புரிகிறது.

இந்த விளம்பரம் சும்மா கிடைக்கவில்லை. அதற்கான தகுதி அவருக்கு உண்டு. இப்படியொரு பொடியன் தேர்தலில் நிற்கிறானே என்கிற ஆச்சரியும், மகிழ்ச்சியும் 14101 பேரை திருப்தி செய்து அவருக்கு வாக்களிக்க வைத்துள்ளது.

வெற்றிக்கும், தோல்விக்குமான ஓட்டு வித்தியாசத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றியிருக்கும் இவரால்தான் திமுகவுக்கு தோல்வி என்பதில்லை. ஆனால் அவர்களையும் தாண்டி 14101 வாக்காளர்கள் இந்தத் தம்பியும் ஜெயித்து வந்தால் நல்லதுதான் என்றெண்ணி தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளார்களே. அந்த நம்பிக்கையைப் பெற்றதற்காகவாவது அந்தத் தம்பியை மனதார வாழ்த்துகிறேன்.

இந்த 14101 ஓட்டுக்களில் நான் செலுத்திய எனது ஓட்டு ஒன்றும் சேர்ந்துள்ளது என்பதால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தம்பி இதில் பணத்தை இழந்திருக்கலாம். ஆனால் அவருடைய தைரியமான மனத்திடத்தினால், பல ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.

இது போன்ற நிகழ்வுகள் இனி வரும் தேர்தல்களில் தொடரும்பட்சத்தில் ஏதேனும் ஒரு நாளில் ஒரு தொகுதியில் சக்தியுள்ள யாரேனும் ஒருவர் தேர்தலில் நிற்க முன் வரும் சாத்தியக் கூறுகள் உண்டு. அந்த ஒருவர் ஜெயித்தால்கூட அதற்கு சரத்பாபு மாதிரியான தம்பிகளே காரணமாக இருப்பார்கள் என்பதால் இவர் போன்றவர்களை மனதார வரவேற்போம். ஆதரிப்போம்..

வாழ்க சரத்பாபு..

நியூட்டனின் 3-ம் விதி..! நம் தலைவிதி..!

13-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

காமாந்திரத்தனமான கதையை வைத்து, காமாந்திரத்தனமாக காட்சியமைப்புகளால், காமாந்திரத்தனமான நடிகரை வைத்து, காமாந்திரத்தனமான இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இதனைப் பார்த்துத் தொலைத்தற்கு பேசாமல் ஏஸி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று 'பசங்க' திரைப்படத்திற்கே சென்றிருக்கலாமே என்று தோன்றுகிறது.

உடம்பு சொகுசு கேட்டதுக்காக தியேட்டர் மாறிப் போய் உட்கார்ந்த எனக்கு இதுவும் வேணும்..! இன்னமும் வேணும்..!

ஒரேயொரு ஆறுதல் கதாநாயகி ஷயாலி. கதாநாயகனைவிடவும் நன்கு நடிப்பு வருகிறது.

இதில் கதாநாயக நடிகர், “பொதுவா இந்த மாதிரி ஐடியால்லாம் எனக்குத்தானே வரும்..” என்று தனது கெரகத்தை ஒத்துக் கொள்வதும் ஒரு கொடுமைதான்.

சில பேருக்கு என்ன சொன்னாலும், எப்படிச் சொன்னாலும் புத்தி வராது என்பார்கள். அந்த லிஸ்ட்டில் இந்தக் கதாநாயகரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

முன்பாதியில் வருகின்ற வசனங்களில் முக்கால்வாசியை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. செவிட்டு மிஷினையே தூக்கியெறிந்துவிடலாமா என்று கோபம் கோபமாக வந்தது. அம்புட்டும் டபுள், டிரிபுள் அர்த்தங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. ஏதோ அந்தக் காலத்து சினிமித்ரன், விருந்து, மருதம் புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது.

'ஏ சர்டிபிகேட்' என்று பெரிதாக எழுதிப் போட்டு '18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதியில்லை' என்று சொல்லியும் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து அருகில் அமர்ந்திருந்த ஒரு தகப்பனை பார்த்தவுடன் வெட்டலாமா என்ற வெறியே வந்தது..

இந்தப் படத்துக்கு விமர்சனம் ஒரு கேடா..!

ஆனாலும் ஏன் எழுதினேன் என்றால், இனிமேலும் போக விரும்பியிருப்பவர்கள் தங்கள் மனதை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். காசாவது மிச்சமாகும்..

திரைப்படத்தின் ஸ்டில்லை போடக்கூட மனசில்லை..!

'நல்லாயிருக்குண்ணே!' என்று சொல்லி தூண்டிவிட்ட பார்ட்டிக்கு, ஒரு நாள் மாப்பு இருக்கு..

ஆகவே வாக்காளர்களே.. தயவு செய்து வாக்களியுங்கள்..

12-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இந்தியத் திருநாட்டு அப்பாவிகளான நமக்கு இருக்கின்ற ஒரேயொரு ஆயுதமான நமது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாளைய ஒரு தினத்தில் மட்டும் எத்தனையோ வேலைகள் இருந்தாலும், சிரமங்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் தூசி போல் ஊதித் தள்ளிவிட்டு பஞ்சாய்ப் பறந்து வந்து வாக்களித்து விடுங்கள்.

இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நம்மால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இந்த அரசியல்வியாதிகளின் முன்னால் நடக்க முடிகிறது என்றால் அது இது போன்ற வாக்குப்பதிவு அன்றுதான்..

அந்த ஒரு நாளை தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைவிடவும் அமோகமாக நாம் கொண்டாட வேண்டும்.

“அவன் சரியில்லை.. இவன் சரியில்லை.. அவன் நொட்டை.. இவன் குட்டை.. இவன் கெட்டவன்.. அவன் கெட்டவனிலும் கெட்டவன்..” என்றெல்லாம் வருடக்கணக்காக எழுதியும், படித்தும், பேசியும் வரும் நாம், நாளைய தினத்தில் மட்டும் வாக்கு என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தும் போர் வீரனாக மாறுவோம்.

மாறத்தான் வேண்டும்.

கடந்த சில தேர்தல்களில் ஒட்டு மொத்த வாக்காளர்களில் 55 சதவிகிதம்பேர்தான் வாக்களிக்க முன் வருகிறார்கள். மீதமிருப்பவர்களில் நிச்சயமாக 45 சதவிகிதம்பேர் ஓட்டளிக்க முன் வராதவர்கள்தான். மீதி பத்து சதவிகிதம்பேர் வர முடியாமல் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கியவர்களாக இருப்பார்கள்.

வாக்களிக்க முன் வராத 45 சதவிகித வாக்காளர்களில் அதிகம் பேர் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள்.. “ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகுது..? ஓட்டு வாங்குறவன் எப்படியும் திருந்த மாட்டான்.. மறுபடியும் கொள்ளையடிக்கத்தான் போறான்.. இதுல நம்ம ஓட்டுப் போட்டா என்ன போடாட்டி என்ன..?” என்கிற அவநம்பிக்கையோடு இருப்பவர்கள்.

இதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் மகா சுயநலவாதிகள்.. இந்தச் சுயநலவாதிகளை நீங்கள் நாளை காலை சத்யம், ஐநாக்ஸ் திரையரங்களுக்குச் சென்றால் மிக எளிதாக அடையாளம் காணலாம்.

“எவன் வந்தால் என்ன..? வராவிட்டால் என்ன..? எனக்கு வேண்டியது இங்கே இருக்கிறது.. கிடைக்கிறது.. அனுபவிப்பேன்.. எந்த அரசுகள் வந்தாலும் எங்களுக்கு அவர்களால் கஷ்டமில்லை. ஏனெனில் என்னிடம் அளவுக்கதிமான பணமும், அதனால் வாழ்க்கை பற்றிய எவ்வித பயமும் இல்லாத தன்மையும் உள்ளது.. எவன் போய் ஓட்டு போடுவான்..?” என்கிற மேட்டுக்குடி வர்க்க மனோபாவத்தை உடையவர்கள்.

இன்னும் சிலர் வாக்களிக்க கியூவில் நிற்கவே தயக்கம் காட்டுபவர்கள். இவர்கள் சொல்லும் காரணம் “போனா ஏதாவது சண்டை வரும்.. அடிச்சுக்குவாங்க.. போலீஸ் வரும்.. நமக்கெதுக்கு வம்பு..” இப்படியொரு கூட்டமும் இருக்கிறது.

இந்தக் கூட்டத்தை அடையாளம் காண வேண்டுமெனில் ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் வாக்குச்சாவடிகளுக்கு நீங்கள் சென்றால் எளிதில் பார்க்க முடியும். வரவே மாட்டார்கள். காரணம், கியூவில் நிற்பதற்கு அவ்வளவு சோம்பேறித்தனம்.

முன்பெல்லாம் திராவிடக் கட்சிகள் தங்களுடைய குஞ்சுகளைத் தவிர வேறு யாரும் ஓட்டளித்துவிட முடியாத அளவுக்கு பல தந்திரங்களை செய்திருந்தார்கள். அதில் ஒன்றுதான் தேர்தல் கமிஷனை நிர்ப்பந்தித்து பாதுகாப்பு அளிக்க முடியாது என்கிற பெயரில் மிகக் குறைந்த அளவு வாக்குச்சாவடிகளை அமைத்தது.. முணுக்கென்றாலே சோடாபாட்டிலை வீசும் கட்சியின் உயிருக்குயிரான தொண்டர்களை பூத் ஏஜெண்டுகளாகப் பயன்படுத்துவது.. காவலர்களை குறைந்த அளவில் பயன்படுத்துவது.. பூத்திற்குள்ளேயே ரவுடிகளை நிறுத்தி வைத்து மிரட்டுவது என்று சகலத்தையும் பயன்படுத்தித்தான் வாக்களிக்க நினைக்கும், நினைத்த இது போன்ற மேட்டுக்குடியினரை வாக்குச்சாவடிக்கு வராமலேயே தடுத்தார்கள்.

நல்லவேளையாக இப்போது வாக்குச்சீட்டுகளுக்குப் பதிலாக இயந்திரங்களும், இவ்வளவு கடுமையான விதிமுறைகள் அடங்கிய தேர்தலாகவும் மாற்றிய பின்புதான் கொஞ்சமாவது அந்த மேன்மக்கள் வீட்டுப் படியிறங்கி வருகிறார்கள். இந்த நிலைமை மென்மேலும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தத் தேர்தலில் 14 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாகக் காட்டி வாக்காளர்கள் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1.புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை

2.ஓட்டுநர் உரிமம்

3.பாஸ்போர்ட்

4.ரேஷன் கார்டு

5.மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் பொது நிறுவனப் பணியாளர்களுக்கு வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்.

6.பொதுத்துறை வங்கிகள், அஞ்சலக மற்றும் விவசாயிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்.

7.அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை.

8.பான் கார்டு

9. புகைப்படத்துன் கூடிய ஆவணங்கள், முன்னாள் படை வீரர் பென்ஷன் புத்தகம், பென்ஷனுக்கான ஆணை..

10.புகைப்படத்துடன் கூடிய முதியோர் பென்ஷன் ஆணை, குடும்ப ஓய்வூதிய ஆணை

11.புகைப்படத்துடன் கூடிய துப்பாக்கி லைசென்ஸ்

12.ஊனமுற்றோர் இயக்குனரகத்தால் வழங்கப்பட்டுள்ள ஊனமுற்றோருக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.

13.புகைப்படத்துடன் கூடிய ரயில்வே அடையாள அட்டை.

14. புகைப்படத்துடன் கூடிய சுதந்திரப் போராட்ட வீரர் அடையாள அட்டை.

இந்த 14 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று உங்கள் கையில் இருந்தால் நீங்கள் தாராளமாக வாக்களிக்க வரலாம்.

நாளைய தினம் வேலை இருக்கிறது.. கண்டிப்பாக போயே தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் விடியற்காலையிலேயே கிளம்பி ஆறரை மணிக்கெல்லாம் பூத்துக்கு போய்விடுவது நல்லது.

ஏனெனில் காலையில் இருந்து மதியத்திற்குள்தான் கட்சித் தொண்டர்கள் தங்களது குடும்பம், குடும்பமாக வாக்களிக்க வருவார்கள். கூட்டம் அமோகமாக இருக்கும். மிகத் தாமதம் ஏற்படும்.

பூத்திற்குள் நுழைவதற்கு முன்னர் உங்களுடைய வாக்குச் சீட்டு எந்த வட்டத்தின் எண்ணில் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு தேர்தல் சாவடிகளுக்குள்ளும் வட்ட எண்ணின் அடிப்படையில்தான் வாக்கு அளிக்கும் அறைகளைப் பிரித்துள்ளார்கள். பூத்திற்கு மிக தொலைவில் பல்வேறு கட்சியினரும் பூத் ஸ்லிப்போடு அமர்ந்திருப்பார்கள். அவர்களிடத்தில் உங்களது வீட்டு முகவரியைச் சொல்லி பூத் ஸ்லிப்பை பெற்றுக் கொண்டு பின்பு பூத்தின் உள்ளே நுழையுங்கள்.

கூட்டமாக இருந்தால் நிற்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு அப்படியே திரும்பிப் போய்விடக் கூடாது.. உங்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு நோய் என்று மருத்துவமனைக்குச் சென்றால் கூட்டம் அதிகமாக இருந்தால் திரும்ப மாட்டீர்கள் அல்லவா.. அது போன்று நாளைய தினத்தை நினைத்துக் கொள்ளுங்கள். இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது.. நோயை விரட்டுவதில் நமக்கும் பங்கு உள்ளது. எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து எனது கையில் இருக்கும் மருந்தை புகட்டுவேன் என்றெண்ணி உங்களது பொன்னான வாக்குகளை அளியுங்கள்.


வரிசையில் நிற்கும்போது அவ்வப்போது ஏதாவது கூச்சல், குழப்பம் இருக்கத்தான் செய்யும். வரத்தான் செய்யும்.. அதற்காகவெல்லாம் தலைதெறிக்க ஓடி வரக்கூடாது.. குழப்பம், அடிதடி என்று நடந்தால்கூட முடிந்த அளவு உங்களை முதலில் தற்காத்துக் கொள்ளுங்கள். பின்பும் அங்கேயே இருந்து வாக்குகளை அளிக்க மறந்துவிடாதீர்கள்.

சில இடங்களில் தங்களை எதிர்க்கும் கூட்டத்தினர் அதிகமாக இருப்பது தெரியவந்தால் சில கட்சிக்காரர்களே வேண்டுமென்றே ஏதாவது தகராறு செய்து கூட்டத்தைக் கலைத்துவிடுவார்கள். காரணம் அவர்கள் கட்சிக்கு எதிரான வாக்குகள் குறையுமல்லவா அதற்காகத்தான். இந்த டெக்னிக்கை முழுமையாகக் கற்றறிந்தவர்கள் திராவிடக் கட்சியினர்தான்.. எதற்கும் ஜாக்கிரதையாகவே இருங்கள்.

கியூவில் நிற்கும்போதுகூட தப்பித் தவறி நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை சும்மாவாச்சும்கூட சொல்லிவிடாதீர்கள். கேட்பவன் நம்ம குசும்பனுக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா மகனாக்கூட இருந்து தொலைக்கலாம். பின்பு துபாயில் இருந்து குசும்பன்தான் வந்து நமது புண்ணுக்கு மருந்திட வேண்டும். இது ஒன்றை வைத்தே யாராவது ஒருவர் ஏதாவதொரு பிரச்சினையைக் கிளப்பிவிட வாய்ப்புண்டு.

குடும்பத்தோடு உள்ளே செல்பவர்கள் குடும்பத்தோடுதான் வாக்களிப்போம் என்று பின்னவீனத்துவம் பாணியில் வாதாடக்கூடாது.. அங்கே ஆண்கள், பெண்கள் தனித்தனி கியூதான்.. குழந்தைகள் இருந்தால் பொறுப்பாக நீங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, மகளிரை முதலில் அனுப்பி வாக்கைப் பதிவு செய்ய வைத்துவிட்டு பின்பு நீங்கள் சென்று வாக்களியுங்கள். இப்படியெல்லாம் செய்தீர்களானால் ஆதிமூலகிருஷ்ணாவை தலைவராக கொண்டிருக்கும் உலகமகா இளிச்சவாயர்கள் சங்கத்தில் உங்களுக்கு ஆயுட்கால உறுப்பினர் பதவி உறுதி.

தப்பித் தவறி உங்களுடைய வாக்கை வேறு எந்தவொரு இந்தியக் குடிமகனாவது போட்டிருந்தால் அதற்காக அந்த நேரத்தில், அந்த இடத்தில் ஒப்பாரி வைக்காதீர்கள். நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள். “இது என்னுடைய வாக்கு.. நான் பதிலி வாக்கினைப் பதிவு செய்தாக வேண்டும். இது எனது உரிமை..” என்று வாதிடுங்கள். உங்களுடைய வாக்கினை தனிப் பதிவேட்டில் பூத் அதிகாரி பதிவு செய்ய வேண்டியது அவருடைய கடமை.

சும்மாவாச்சும்கூட கைகளை விரித்துக் காட்டியோ, ரெண்டு விரலைக் காட்டியோ விடாதீர்கள். கையை சும்மா சொரிஞ்சேன்.. அவ்வளவுதான் என்றோ, ரெண்டுக்கு வந்தது.. அதான் எங்க இருக்குன்னு காட்டினேன் என்றோ கையில் ஒண்ணுமேயில்லைன்னு காட்டத்தான் சிம்பாலிக்கா கையை விரிச்சுக் காட்டினேன் என்றோ நீங்கள் உதாரும், சுதாரும் விடலாம். ஆனால் உள்ளேயிருக்கும் கட்சிக்காரர்கள் அல்வா கிண்டிவிடுவார்கள். எத்தனை வருட அனுபவசாலிகள் அவர்கள். ஓட்டுப் போட விடாமல் தடுத்து வெளியேற்றி விடுவார்கள். உள்ளே போய் வெளியே வரும்வரையிலும் வாக்களிப்பது என்ற ஒன்றைத் தவிர வேறு ஒரு சிந்தனையிலும் இருக்காதீர்கள்.

வேலை இருக்கு.. முடியலை.. நேரமாச்சு என்றெல்லாம் சொல்லிவிட்டு மாலை 4.30 மணிக்கு பூத்துக்கு செல்லாதீர்கள். அதற்கும் முன்னதாகவே செல்வதற்கு தயவு செய்து முயற்சி செய்யுங்கள்.

சிற்சில இடங்களில் கலவரங்கள் வெடிக்கலாம். அல்லது தூண்டப்படலாம். அப்போதெல்லாம் சற்று ஓரம் தள்ளி வேடிக்கை பார்த்துவிட்டு கலவரம் ஓய்ந்தவுடன் பூத்தின் உள்ளே செல்லுங்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ரிப்பன் பில்டிங்கில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கீழ்க்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - 9445191463
பெரம்பூர் - 9445191464
கொளத்தூர் - 9445191465
திரு.வி.க. நகர் - 9445191466
ராயபுரம் - 9445191467
எழும்பூர் - 9445191468
துறைமுகம் - 9445191469
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - 9445191470
அண்ணா நகர் - 9445191471
ஆயிரம் விளக்கு - 9445191472
வில்லிவாக்கம் - 9445191473
தி.நகர் - 9445191474
விருகம்பாக்கம் 9445191475
சைதாப்பேட்டை - 9445191476
மயிலாப்பூர் - 9445191477
வேளச்சேரி - 9445191478
திருவொற்றியூர் - 9445191479
சோழிங்கநல்லூர் - 9445191480

மேற்குறிப்பிட்ட ஏதேனும் தொகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டால் உடனடியாக பொறுப்பான இந்தியக் குடிமகனைப் போல அலைசேயில் அழைத்து விஷயத்தைத் தெரிவித்துவிடுங்கள். புண்ணியம் கிடைக்கும்.

கடைசியாக ஒன்று..

புதிய போஸ்ட் எழுத ஒரு மேட்டர் கிடைக்கிறதே என்றெண்ணி ஆங்காங்கே நடைபெறவிருக்கும் கலவரத்தில் தலையைக் கொடுத்து உடம்பை புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள்..

பின்பு கட்டுப் போட்ட நிலையில் உங்களது போட்டோவுடனான செய்தியை நாங்கள் எங்கள் பதிவில் போட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஜாக்கிரதை..

மறந்தும் இருந்து விடாதீர்கள் தோழர்களே..

நாளைய தினம் நமது தினம்..

சேலத்தில் பாரதிராஜா-சீமான் கூட்டணியின் முழக்கம்..!

10-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாரதிராஜா தலைமையிலான திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் சேலத்தில் கடந்த 5-ம் தேதி பொதுக்கூட்டம் நடந்துள்ளது.

அக்கூட்டம் பற்றி நேற்று வெளிவந்திருந்த ஜூனியர் விகடன் பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கே உங்களுக்காக தருகிறேன்..

இனி ஜூனியர் விகடனில் இருந்து..!

‘இருப்பாய் தமிழா நெருப்பாய்..' என்ற முழுக்கத்தோடு தமிழ்த்திரை உலகினர் காங்கிரஸுக்கு எதிரான அனல் பறக்கும் பிரச்சாரத்தில் குதித்திருக்கிறார்கள்.

“தமிழ் இனத் துரோகிகளை அடையாளம் காட்டுகிறோம். அவர்களுக்கு வாக்காளிக்காதீர்கள்..” என்பதுதான் இவர்களது பிரதான குரல். காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகள்தான் இவர்களின் டார்கெட்.

இயக்குநர்கள் பாரதிராஜாவும், சீமானும் அனல் கக்கும் பிரச்சாரத்துக்குத் தலைமையேற்று செல்கிறார்கள். பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் கடந்த 40ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள். அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பிடிபிடியெனப் பிடித்துவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார் சீமான். வழி நெடுக, காங்கிரஸின் கை சின்னத்துக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டபடியே சேலம் போய் சேர்ந்தார்கள்.

5-ம் தேதி மாலை சேலம் போஸ் மைதானத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடைக்கு முதல் ஆளாக வந்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. “கேப்டன் பிரபாகரனை உருவாக்கியவன் நான்தான். தமிழ்நாட்டில் பிரபாகரனைப் பற்றி அதிகம் பேச வைத்தவனும் நான்தான்.. தமிழகத்தில் தமிழினத் துரோகிகள் பதினாறு பேர் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்கள். வாக்குச்சீட்டு என்கிற ஆயுதம் இப்போது நம் கையில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி அந்தப் பதினாறு துரோகிகளையும் ஓட ஓட விரட்டியடிப்போம்..” என்று அறிமுக உரை கொடுத்தார்.

அந்தச் சமயத்தில் பாரதிராஜாவும், சீமானும் மேடையேற, 'தென்னகத்து பிரபாகரன் சீமான் வாழ்க..!' என்ற கோஷங்களும், கரவொலியும் விண்ணைப் பிளந்தது.

கவிஞர் அறிவுமதி பேசும்போது, “தலைவன் பிரச்சாரத்துக்கு வந்தாலே காசு கொடுத்துத்தான் ஆளைப் பிடிச்சிட்டு வர்றாங்க.. ஆனா வராத ஒரு தலைவனுக்கு(பிரபாகரன்) இங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையா இருக்கு. தமிழ் உணர்வுள்ள அத்தனை கட்சியினரும் இங்கே கூடியிருக்கீன்னு எனக்குத் தெரியும். நாங்க சென்னைல இருந்து வரும்போது, தி.மு.க.வினர் பலர் எங்களைச் சந்திச்சு உணவு கொடுத்து உபசரிச்சாங்க..” என்று பேசினார்.

சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பாகப் பேச வந்த ராஜபிரபு, “சேலத்துல சத்தியமா தங்கபாலுவை ஜெயிக்கவிட மாட்டோம். அந்த ஆளு மட்டும் ஜெயிச்சிட்டா.. இந்த போஸ் மைதானத்துலேயே நான் தீக்குளிச்சு சாவேன்.. எங்க தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது ஆச்சுன்னா.. ஜாக்கிரதை..” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

அடுத்து மைக் பிடித்தவர் பாரதிராஜா,

“என் இனிய தமிழ் மக்களே..” என்று தன் வழக்கமான பாணியில் ஆரம்பித்தவர், “என் அப்பனும், ஆத்தாளும் அந்தக் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இருந்தவர்கள். நானே பல காங்கிரஸ் மேடைகளில் பொய்யாகப் பேசியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு உணர்வோடு, உண்மையாக உங்கள் முன் பேச வந்திருக்கிறேன். சினிமாவில் நாங்கள் எப்போதுமே கதாநாயகனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால் இங்கே வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். வில்லன் யார் என்பதை நாங்கள் உங்களுக்கு அடையாளம் காட்டப் போகிறோம்.. கதாநாயகன் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..” என்றவர் சற்றே தொனியை மாற்றிக் கொண்டு


“சோனியாம்மா.. நீங்க வெளிநாட்டுப் பொம்பளையா இருந்தாலும் எங்க மண்ணுக்கு வந்ததால உங்களைப் பெருந்தன்மையோட ஏத்துக்கிட்டு அழகு பார்த்தது எங்க மண். ஆனா, உங்களுக்கு அந்தப் பெருந்தன்மை கொஞ்சம்கூட இல்லாமப் போச்சேம்மா.. உங்களோட ஒரு தாலி அறுந்ததுக்காக எம்தமிழச்சிகளோட ஒரு லட்சம் பேரோட தாலிகலை அறுத்துப் போட்டிருக்கீங்களே.. இது நியாயமா தாயி..” என்று வடக்கு நோக்கி இறைஞ்சிவிட்டுத் தொடர்ந்தார்.

“ஈழத்தில் எம் தமிழ்ப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக விட்டு ரசித்துப் பார்க்கிறான் சிங்கள வெறியன். குழந்தைகள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் பார்த்து பார்த்து ஆறு மாத காலமாக என்னால் தூங்கக்கூட முடியவில்லை. கண்ணை மூடினால் ரத்தமும் சதையுமாகக் கிடக்கும் பிஞ்சுக் குழந்தைகள்தான் வந்து நிற்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய யாருமே கேட்கவில்லை. மாறாக அவர்களுடன் கைகோர்த்துக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

சேலத்தில் என் அன்புக்குரிய நண்பர் தங்கபாலு போட்டியிடுகிறார். ஈரோட்டில் பெரியாரின் பேரன் என்று அவருடைய பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கும் இளங்கோவன் போட்டியிடுகிறார். சிவகங்கையிலே ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி சிதம்பரம் நிற்கிறார். உங்க அத்தனை பேருக்கும் கண்டிப்பாக எம்தமிழர்கள் பாடம் புகட்டுவார்கள். உலகத் தமிழர்களுக்கெல்லாம் ஒரே அடையாளம் எங்கள் பிரபாகரன்தான் என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் நிரூபிப்பார்கள்..” என்று உணர்ச்சிப் பிழம்பாக பேசி முடிக்க மேடையிலிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

நிறைவாக இயக்குநர் சீமான் சிவந்த கண்களோடு வந்து நின்றார்.

“காமராஜர் ஆட்சி அமைக்கிறோம்னு காங்கிரஸ்காரங்க சொல்றாங்க.. ரொம்ப சந்தோஷம்.. ஆனா உங்கள்ல யாரு காமராஜர்னு முதல்ல சொல்லுங்க.. ஈழத்து எம்தமிழர்கள் செத்து ஊரே அழுதுட்டு இருக்காங்க. இங்கே நீங்க வாயெல்லாம் பல்லைக் காட்டிகிட்டு வாக்குக் கேட்க வர்றீங்களே.. வெட்கமா இல்லே..? எழவு வீட்டுல வந்து ஓட்டுக் கேட்குறீங்களே..? உங்களுக்கெல்லாம் மானமே கிடையாதா..? எங்ககிட்ட வாக்கு இல்லடா.. வாக்கரிசிதான் இருக்கு.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரியாருக்கு உறவு வழியில் பேரனா இருக்கலாம். நான் உணர்வு வழிப் பேரன்.


ஈரோட்டு நான் இப்படி சொன்னதைக் கேட்ட இளங்கோவன், “எங்க தாத்தா சின்ன வயசுல கொஞ்சம் அப்படி, இப்படின்னு இருப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. அப்படி இருந்ததுல இவரு பொறந்திருக்கலாம்னு என்னைக் கிண்டல் பண்ணியிருக்காரு.. அந்த ஈனப் பயலை என்னன்னு சொல்றது..?

நான் தப்பாப் பேசியதாச் சொல்லி என்னைக் கைது செய்யச் சொன்னார் கருணாநிதி. பெரியாரைப் பத்தி இப்படி தரக்குறைவா பேசும் லூசுப்பயல் இளங்கோவன் மேல கருணாநிதி என்ன நடவடிக்கை எடுக்கப் போறாரு..?

அங்கே ஈழத்தில் செத்துப் போன தாயின் மடியில் குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கிறது. எந்தக் கல்நெஞ்சக்காரனுக்கும் இதைப் பார்த்தால் இரக்கம் வரும். ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்களோ.. அங்குள்ள நம் தமிழர்களை அழிக்க உதவி செஞ்சுக்கிட்டிருக்காங்க.. இங்கே இலை மலர்ந்தால்தான்.. அங்கே ஈழம் மலரும்.. அதனால இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க..” என்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டு இரவு பத்து மணிக்குள் தன் பேச்சை முடித்தார்.

பாவம் காங்கிரஸ்.. தி.மு.க. கூட்டணி..!

கொட்டல் குடைச்சலை இன்னும் எத்தனை திசையிலிருந்துதான் சமாளிக்க வேண்டுமோ..?


நன்றி : ஜூனியர் விகடன்(மே 13, 2009)

இ-மெயில் மூலமாக ஒரு அமைதிப் போராட்டம்..!

09-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தச் செய்தி இ-மெயில் கடிதம் மூலமாக எனக்கு வந்தது.. நானும் என் நண்பர்கள் பலருக்கும் அனுப்பியுள்ளேன்.

அப்படியே இங்கேயும் இதனை பதிவு செய்கிறேன்.

படித்துப் பாருங்கள்.


"U CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY

BY FOLLOWING FEW SIMPLE STEPS.

Please spare a couple of minutes here... for the sake of India ... our country.

I got this article from one of my friends, but it's true, we can see this in day to day life,

Small example,

Before 5 months 1 US $ = IND Rs 39

After 5 months. Now it is 1 $ = IND Rs 50

Do you think US Economy is booming?

No, but Indian Economy is Going Down.

Our Economy is in u'r hands

INDIAN economy is in a crisis.

Our country like many other ASIAN countries is undergoing a severe economic crunch.

Many INDIAN industries are closing down.

The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation.

More than 30000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages... etc which are grown, produced and consumed here.

A cold drink that costs only 70 / 80 paisa to produce is sold for NINE rupees, and a major chunk of profits from these are sent abroad.

This is a serious drain on INDIAN economy.

We have nothing against Multinational companies, but to protect our own interests we request everybody to use

INDIAN products only for next two years.

With the rise in petrol prices, if we do not do this, the rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future.

What you can do about it?

1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.

2. ENROLL as many people as possible for this cause.

Each individual should become a leader for this awareness.

This is the only way to save our country from severe economic crisis.

You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.

All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.


LIST OF PRODUCTS

COLD DRINKS:

USE: -

LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JALJEERA,
ENERJEE, and MASALA MILK...

INSTEAD OF: -

COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:

USE -

CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA,
MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

INSTEAD OF -

LUX, LIFEBOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE


TOOTH PASTE: -

USE -

NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK


INSTEAD OF -

COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.



TOOTH BRUSH: -

USE

PRUDENT, AJANTA , PROMISE


INSTEAD OF

COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B



SHAVING CREAM:

USE - GODREJ, EMANI

INSTEAD OF - PALMOLIVE, OLD SPICE, GILLETE


BLADE:-

USE - SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA

INSTEAD OF - SEVEN-O -CLOCK, 365, GILLETTE


TALCUM POWDER:

USE - SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS

INSTEAD OF - PONDS, OLD SPICE, JOHNSON BABY POWDER, SHOWER TO SHOWER


MILK POWDER:

USE - INDIANA, AMUL, AMULYA

INSTEAD OF - ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.


SHAMPOO:

USE - LAKME, NIRMA, VELVET

INSTEAD OF - HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE

MOBILE CONNECTIONS:

USE - BSNL, AIRTEL

INSTEAD OF - HUTCH


Every INDIAN product you buy makes a big difference.

It saves INDIA . Let us take a firm decision today.

BUY INDIAN TO BE INDIAN we are not against of foreign products.

WE ARE NOT ANTI-MULTINATIONAL.

WE ARE TRYING TO SAVE OUR NATION. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM.

WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.

THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY.

THE CURRENT TREND IS VERY THREATENING.

MULTINATIONALS CALL IT GLOBALISATION OF INDIAN ECONOMY.

FOR INDIANS LIKE YOU AND ME IT IS RECOLONISATION OF INDIA ...

THE COLONIST'S LEFT INDIA THEN. BUT THIS TIME THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES.

WHO WOULD LIKE TO LET A" GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY.

PLEASE REMEMBER : POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE .

RUSSIA , S.KOREA , MEXICO ...........THE LIST IS VERY LONG!!

LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY.

LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.

FINALLY: IT'S OBVIOUS THAT U CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE,

SO GIVE UP ATLEAST ONE ITEM TO FOR THE SAKE OF OUR COUNTRY.

Instead please forward this mail to all your friends to create awareness.

"LITTLE DROPS MAKE A GREAT OCEAN "

JAI HIND

ஈரோட்டில் பாரதிராஜாவின் முழக்கம்

08-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் துவக்கப்பட்ட பரப்புரைப் பயணத்தின் முதல் கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியது இது..



“நான் எத்தனையோ சினிமா சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எழுத்தாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். ஆனால் அரசியல் மேடைகளில் பேசி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

என்னுடைய அம்மா, அப்பா, என் குடும்பம் முழுவதும் காங்கிரஸ் குடும்பம். 1962-67-களில் காங்கிரஸ் கட்சிக்காக மேடையேறி பேசியிருக்கிறேன். அப்போது எதை எல்லாம் பேச வேண்டும் என்று ஒரு குறிப்பு தருவார்கள். நான் கேட்பேன் “எல்லாம் பொய்யாக இருக்கிறதே..” என்று.. “அரசியல் என்றால் இப்படி எல்லாம் பேச வேண்டும்..” என்று சொல்லி பேசச் சொல்வார்கள். பிறகு எதற்கு பொய் சொல்லும் அரசியல்..? கலைத்தொழிலே போதும் என்று அரசியலைவிட்டு விலகிவிட்டேன். அன்று ‘பொய் பேச வேண்டாம்' என்று அரசியலை விட்டேன். இப்போது ‘மெய் பேச வேண்டும்' என்று இந்தக் கூட்டத்தில் பேச வந்திருக்கிறேன். என்னை இழுத்து வந்துவிட்டார்கள்.

டெல்லி அரசு எனக்கு ‘பத்மஸ்ரீ' விருது கொடுத்தது. ‘பத்மஸ்ரீ பாரதிராஜாவா'..? ‘தமிழன் பாரதிராஜாவா..?' எனற கேள்வி வந்தபோது ‘தமிழன் பாரதிராஜா' என்கிற பெருமை மட்டும் போதும் என்று முடிவு செய்தேன். தமிழன் என்பதற்கு இணையான வேறு பட்டமே கிடையாது.

“பாரதிராஜா யார் என்று வயலார் ரவிக்குத் தெரியுமா..?” என்கிறார் இளங்கோவன். அவருக்குத் தெரியுமா? நானும், வயலார் ரவியும் 25 ஆண்டு கால நண்பர்கள் என்று.

“முத்துக்குமாரை தெரியாது..” என்கிறார். முத்துக்குமாரை தெரியாமல் தமிழன் இருக்கலாமா? அவருக்கு ஓடுவது தமிழ் ரத்தமா..?
தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். நல்லவர்களைத் தேடிக் கொள்ளுங்கள். 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இப்போது புரட்சியைத் தொடங்க இருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் தேர்தலில் அது பிரளயமாக மாற வேண்டும்.

ஓட்டு கேட்க சோனியா வரக்கூடாது. அப்படி அவர் சென்னைக்கு வந்தால் மிக பலத்த எதிர்ப்பு காட்ட வேண்டும். தாய்மார்களே.. பொதுமக்களே.. நீங்கள் உங்கள் வீடுகளில் கருப்புத் துணியைக் கட்டுங்கள். சிறு கருப்புத் துணியை அணிந்து கொள்ளுங்கள். யராவது கேட்டால் ‘சோனியா வரும் நாள் எங்களுக்குத் துக்க நாள்..' என்று சொல்லுங்கள்..”

இதே கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியது..


“தந்தை பெரியாருக்கு காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளியில் வந்துள்ளேன். இன்னும் 10 நாடகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன்.

இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொல¨யை நடத்துகிறது சிங்கள ராணுவம். அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம் தலாய்லாமா நாட்டைப் பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது. அப்போது சீனாவுக்கு இறையாண்மை ஒருமைப்பாடு இல்லையா..?

யாரும் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் ‘தனி ஈழம்தான் தீர்வு..' என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவரை வணங்குகிறேன்.

நான் இப்போது இந்தியா உட்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம் நீங்கள் விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதமோ எந்த உதவி வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவர்களுக்கான தடையை மட்டும் நீக்கிவிடுங்கள். தனி ஈழம் மலர பிரபாகரன் நடவடிக்கை எடுப்பார். இந்தியாவில் மட்டும் விடுதலைப்புலிகளுக்கான தடை நீக்கப்பட்டு எங்களை இலங்கைக்கு செல்ல அனுமதித்தால் 15 லட்சம் பேர் இலங்கை செல்ல தயாராக இருக்கிறார்கள். 10 நாட்களில் தமிழ் ஈழம் மலரும்..”


இக்கூட்டத்தில் இயக்குனர்கள் ஆர்.சுந்தர்ராஜன், கவுதமன், சிபிசந்தர், பாடலாசிரியர் அறிவுமதி, எழுத்தாளர் தேவிசந்திரா, பெப்ஸி செயலாளர் சிவா, கலை இலக்கிய சங்கத் தலைவர் சண்முகம், ம.தி.மு.க. தலைமை கழகப் பேச்சாளர் வக்கீல் ராமசிவசங்கர் ஆகியோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் சீனாவின் முற்றுகையில் இந்தியா என்ற புத்தகத்தை பாரதிராஜா வெளியிட்டார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வரவேற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

நன்றி : தினத்தந்தி

இட்லி-தோசை-வடை-சட்னி-சாம்பார்-07-05-09

07-05-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஊனமுற்றோர் அடையாள அட்டை

மிகவும் போராடி எனக்கான ஊனமுற்றோர் அடையாள அட்டையை வாங்கிவிட்டேன். சென்னை மாவட்டத்தில் இருக்கும் மனநலம் குன்றியவர்கள், காது கேளாதவர்கள், வாய்பேச முடியாதவர்களுக்கு உதயம் தியேட்டர் அருகேயிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் இதற்கான பரிசோதனை நடத்தப்படுகிறது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டுமே இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. இருப்பிடச் சான்றிதழ், (ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதேனும் ஒன்று) 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இதனுடன் வந்தால் உடனேயே பரிசோதித்து உடனேயே கொடுத்துவிடுகிறார்கள். இதன் பெயர் தேசிய உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டை.

எனக்கு என்னைக்கு ஒரு விஷயத்தை உருப்படியா செஞ்சு கொடுத்திருக்கான் அந்த கோவணான்டி..?

முதல் வாரம் காலை பத்தரை மணிக்கு போனபோது, “காலைல 9 மணிக்குள்ள வந்து டோக்கன் வாங்கினால்தான் அன்றைக்கு பார்க்க முடியும். நீங்க போயிட்டு அடுத்த வாரம் வாங்க..” என்றார்கள்.

அடுத்த வாரம் காலையில் எட்டரை மணிக்கே போன போது எனக்கு முன்பாக 20 பேர் நின்றிருந்தார்கள். உட்கார்வதற்கு இருந்த பெஞ்சுகள் குறைவாக இருந்ததால், அடுத்த 4 மணி நேரமும் கியூவில்தான் நின்றிருந்தோம். நான் சென்ற அன்றைக்கு அடுத்த சோதனையாக மருத்துவர் சற்றுத் தாமதமாக வந்தார். அதனாலேயும் கியூவில் நின்றிருந்த நேரம் நீண்டுவிட்டது.

பரிசோதனை முடிந்து கையெழுத்தாகும்போது தலைமை மருத்துவர் ஒரு வார விடுமுறையில் போய்விட்டதாக சொன்னார்கள். “அடுத்த வாரம் வாருங்கள்..” என்றார்கள். மறுவாரம் சென்றேன்.. மிகச் சரியாக என்னுடைய அட்டையை மட்டும் காணவில்லை. தேடோ, தேடு என்று தேடினார்கள். கையைப் பிசைந்து கொண்டார்கள். பின்பு “அடுத்த வாரம் வாருங்களேன். தேடி வைக்கிறோம்..” என்றனர்.

கோவணான்டி வேலையைக் காட்டுறான்னு நல்லாப் புரிஞ்சு போச்சு. அவனை எதிர்க்க முடியுமா..? தலையாட்டிட்டு சென்ற வாரம் திரும்பவும் சென்றேன். தேடி வைத்திருந்தார்கள். வாங்கி விட்டேன். “நீண்ட தூர பேருந்து கட்டணங்களில்(ஏஸி வசதியுள்ள பேருந்துகளைத் தவிர) 4-ல் ஒரு பங்குதான் ஊனமுற்றோருக்கு. அந்த சலுகையை இதை வைத்துப் பெற்றுக் கொள்ளுங்கள்..” என்று அறிவுறுத்தினார்கள். சந்தோஷம் என்று வந்துவிட்டேன்.

எதையும் அவ்வளவு சுலபமாக எனக்குக் கொடுத்துவிட மாட்டான் என் அப்பன். போட்டு புரட்டி எடுத்திட்டு புண்ணுல மருந்து தடவுறதுதான் அவன் எனக்குச் செய்ற கருணை.. இப்பவாவது புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்..

இளிச்சவாய மிடில் கிளாஸ் கேணையர்கள்..!

பணமும், பணத்திற்கு வளைந்து கொடுக்கும் அதிகாரமும் இருந்தாலே போதும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சட்டத்தையே வளைக்கலாம் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் மிகச் சமீபத்தில் நடந்துள்ளது.

மடிப்பாக்கம் வேலாயுதம் என்பவர் விழுப்புரம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதுவரையில் இவர் யார், எவர் என்று அக்கட்சித் தொண்டர்களுக்கே தெரியாது. ஆனால் இதனைவிடவும் இவர் மீதிருந்த 171 கோடி ரூபாய் மோசடி புகாரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான், இவரை மிகவும் பிரபலப்படுத்தியது.

விஷயம் ரொம்ப சிம்பிள். தரமணி அருகே இருந்த ஏக்கர் கணக்கிலான நிலத்தை தனது சொந்த நிலம் என்றும் அதனை விற்பனை செய்ய விரும்புவதாகவும் புரூடா விட்டு மும்பையைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து 171 கோடி ரூபாயை முன் பணமாகப் பெற்றுள்ளார் இந்த வேலாயுதம்.

பணம் கொடுத்த பின்புதான் அந்த நிறுவனத்திற்குத் தெரிந்ததாம் தரமணியில் ஒரு துண்டு நிலம்கூட வேலாயுதம் பெயரில் இல்லை என்பது.. நிறுவனம் பணத்தைத் திருப்பிக் கேட்க கைக்குக் கிடைத்த பணத்தை வேலாயுதம் பல வழிகளிலும் அள்ளிவீச தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள் பணத்தால் அடிக்கப்பட்டுள்ளனர். எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை என்பதால் அந்த நிறுவனமே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

மும்பையில் இருக்கும் நிறுவனம், மிகப் பெரிய தொகை, மற்றும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன், மத்திய குற்றப் பிரிவு, கமிஷனர் அலுவலகம் என்று எங்கெல்லாமோ முட்டி மோதியும் நீதி கிடைக்காதது.. இதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றியுள்ளது. இதுவே மாநில அரசுக்கு கேவலம்தான்.. கேவலத்தையெல்லாம் யார் பார்க்கப் போறா..?

சிபிஐ வழக்குப் பதிவு செய்த பின்பும் உடனடி கைதெல்லாம் இல்லை. மனிதர் ரொம்பவே கூலாக முன் ஜாமீன் கோரினார். வழக்கு சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிமன்றத்தில் பணத்தை வாங்கியதை ஒப்புக் கொண்டது வேலாயுதம் தரப்பு. அதில் பாதி தொகையை நீதிமன்றத்தில் உடனே கட்டும்படி நீதிபதி சொல்லியிருக்கிறார். அப்போதே கட்டிவிட்டார்கள். மீதமிருந்த தொகைக்கு வங்கியில் இருந்து ஷ்யூரிட்டி காட்டச் சொன்னார் நீதிபதி. அதையும் வேலாயுதரம் தரப்பு உடனேயே செய்து கொடுத்தது. அன்று மாலையே அவருக்கு முன் ஜாமீன் கிடைத்துவிட்டது.

முடிந்ததா..? இது அத்தனையும் ஒரே நாளில் நடந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாதச் சம்பளத்தில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து கிடைக்கின்ற சொற்பத்திலேயே இன்கம்டாக்ஸ் என்று கை வைத்து எடுத்துவிட்டுத்தான் பாக்கியைக் கொடுக்கிறார்கள். கட்டாவிட்டால் கோர்ட், கேஸ் என்று நாயாய் அலைய விடுகிறது வருமான வரித்துறை.

ஆனால் இந்த விஷயத்தில் என்னதான் செய்ததாம்..? அப்படி ஒரு துறை இருக்கிறதா இல்லையா என்பதுகூட இந்தக் கூத்தையெல்லாம் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது. வங்கி மூலமாக இவ்வளவு பெரிய தொகை பட்டுவாடா செய்யப்படுவதை பார்த்து ஏதும் கேட்க மாட்டார்களா..? எதற்காக இது..? என்ன காரியம் நடக்கிறது..? வாங்குகின்ற நபர் வரி கட்டுபவர்தானா..? நிலம் கொடுக்கல் வாங்கல் என்றால் அதற்கான ஆதாரங்களைக் கேட்க மாட்டார்களா..?

ம்.. பெருமூச்சுதான் வருகிறது.. மிடில் கிளாஸ் மகாதேவன்கள்தான் இளிச்சவாயர்கள்..

100 ரூபாய் மாமூல் கேட்ட வழக்கிற்காக 3 வருட சிறைத் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்கள் சிலர். இவர்களுக்கு எத்தனை வருட சிறைத்தண்டனை கொடுக்கலாம்..? கிடைக்குமா..?

இதயமுள்ள நடிகர் பாலாஜி


இதயக்கனி திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் வயது கடந்து பாசத்துடன் பழகும் எனது நண்பர்.

சில வருடங்களுக்கு முன்பு அவரிடத்தில் ஒரு முறை மலையாளத் திரைப்படத்திற்கான கதை ஒன்றை சொன்னேன். கேட்டுவிட்டு “நன்றாக இருக்கிறது.. மலையாளத்தில் செய்யலாம்..” என்றார்.

சொல்லிவிட்டால் போதுமா? முயற்சி செய்ய வேண்டுமே என்பதற்காக மோகன்லாலை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். சென்னை எழும்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் கேரளாவிற்கே குடிபோய்விட்டதாகச் சொன்னார்கள்.

மோகன்லால் பழம்பெரும் நடிகர் பாலாஜியின் மருமகன்தான் என்பதால் பாலாஜியைப் பிடித்தால் மோகன்லால் எப்போது சென்னை வருவார் என்பது தெரியும் என்று நினைத்தேன். ஜெகந்நாதன் ஸார் மூலமாக பாலாஜி வீட்டு நம்பர் கிடைத்தது.

அன்றைக்கு ஒரு நாள் போன் செய்தேன். வீட்டில் ஒரே சப்தம். சலசலவென்று இருந்தது. பாலாஜியே லைனுக்கு வந்தார். விஷயத்தைச் சொன்னேன். கொஞ்சம் சன்னமான குரலில், “மோகன்லால் இப்ப இங்கதான் இருக்கார்.. ஆனா கொஞ்சம் பிஸியா இருக்கார்.. இப்ப வந்தா பேச முடியாது.. நீங்க எதுக்கும் ஒரு மூணு, நாலு நாள் கழிச்சு என் வீட்டுக்கு வாங்களேன்.. பார்க்க முடியும்..” என்றார்.

நான் சும்மா இல்லாமல், “நல்ல கதைதான் ஸார்.. ஜெகந்நாதன் ஸாரே படிச்சிட்டு உங்ககிட்ட சொல்லச் சொன்னார் ஸார்.. ஒரு பதினைஞ்சு நிமிஷம் சந்திச்சா போதும் ஸார்.. இன்னிக்கே வர்றனே ஸார்..” என்றேன். “இல்லப்பா.. இன்னிக்கு முடியாதுப்பா.. கொஞ்சம் கோச்சுக்காத தம்பி.. நீ மெட்ராஸ்தான.. மூணு நாள் கழிச்சு வாயேன்..” என்றார்.

இதன் பின்பும் விடாமல் சில நிமிடங்கள் அனத்திப் பார்த்து ஓய்ந்து சத்தம் அளவுக்கதிகமாக இருந்ததால் எனது ஓட்டைக் காதில் சில வார்த்தைகள் புரியாததாலும் அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வைத்து எனக்கே வெறுத்துப் போனது.. “சரிங்க ஸார்.. மூணு நாள் கழிச்சு வர்றேன் ஸார்..” என்று சொல்லி டொக்கென்று போனை வைத்தேன்.

மறுநாள் காலை தினத்தந்தியை புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு செய்தி கண்ணில் பட்டது.

நடிகர் பாலாஜியின் மனைவி மரணம். நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது என்று இருந்தது.

இதற்குப் பின் அந்த மலையாளக் கதை விஷயமாக யாரையுமே நான் அணுகவில்லை. அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன்..

எப்படி முடிந்தது..!

ஒரு அலுவலகத்தின் வாசலில் நின்றிருந்தேன். பக்கத்தில் குடியிருக்கும் பெண்மணி தனது குழந்தைக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். குழந்தை படு சுட்டி. ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்க.. தாயும் பின்னாலேயே ஓடியபடியே சமாளித்து ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.

அங்கிருந்த ஒரு ஹீரோ ஹோண்டோ பைக்கில் கால் வைத்து ஏற முயற்சி செய்து கொண்டிருந்தது குழந்தை. அம்மா அவளைத் தூக்கி கீழே விடுவதும், குழந்தை அதில் விடாப்பிடியாக ஏறுவதுமாக விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நொடியில் தாயின் கவனம் திசை திரும்ப குழந்தை பட்டென்று மேலே ஏறி சீட்டில் அமர பேலன்ஸ் தவறி கீழே விழுக.. ஈர மண்ணில் போட்டிருந்த ஸ்டேண்ட் அமுங்கி வண்டியே குழந்தை மீது விழுந்துவிட்டது.

நொடியில் தாய் சோற்றுக் கிண்ணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு வந்த வேகத்தில் ஹோண்டா வண்டியை நொடியில் தூக்கி பின்புறமாகத் தள்ளிவிட்டாரே பார்க்கணும்.. அசந்து போனேன்.. காரணம்..

அந்தப் பெண் என்னைவிட ஒல்லியானவர்.. அவருக்கே தினமும் நான்கைந்து குளுகோஸ் பாட்டிலை ஏற்ற வேண்டும் போலிருந்தது அவருடைய உடல் வாகு.. இதை வைத்துக் கொண்டு எப்படி முடிந்தது அவரால்..? ஆச்சரியம்தான் போங்க..

யாரைத்தான் நம்புவதோ..?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து பெண்கள் இதழ்களிலும் முகப்பு அட்டையை அலங்கரித்தவர் சென்னை பாஸ்போர்ட் அலுவலக மண்டல அதிகாரி சுமதி ரவிச்சந்திரன். இந்தப் பதவிக்கு வரும் முதல் பெண் அதிகாரி என்பதால் அவ்வளவு பப்ளிசிட்டி.

“லஞ்சத்தை ஒழிப்பேன்.. அது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.. அதுக்காகத்தான் ஆபீஸ் முழுக்க கேமிரா பொருத்தியிருக்கேன். எந்த முறைகேட்டுக்கும் வழியில்லை.. ஒரே நாள்ல எல்லா பார்மாலிட்டியும் முடிஞ்சிரும்..” என்றெல்லாம் தனது பராக்கிரமங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.

இன்றைக்கு அவர் ஆட்டம் போட்ட அதே அலுவலகத்தின் மேல் மாடியில் இருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து குற்றவாளியாக கையெழுத்துப் போட்டுவிட்டு போவதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.

இனிமேல் அரசு அதிகாரிகளில் ஆண், பெண் என்ற பேதமெல்லாம் பார்க்காமல் ஒரே கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பதுதான் நமக்கு நல்லது என்று நினைக்கிறேன்.

இவர் இந்தப் பதவிக்கு வந்ததே சிபாரிசானால்தானாம்.. நியாயமான வழியில் இல்லையாம். தி.மு.க. மூத்த அமைச்சர் அன்பழகனின் அக்கா மருமகளாம் இவர். மத்திய அரசில் இருக்கும் அமைச்சர்கள் மூலம் சிபாரிசு செய்யப்பட்டுத்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறாராம்.

ஆரம்பமே அனர்த்தம் என்றால் அனைத்துமே அப்படித்தான் இருக்கும்..

கலைஞரை ஏன் திட்டுகிறேன்..!


மறுபடியுமாடா என்று நீங்கள் முறைப்பது எனக்கு நன்கு தெரிகிறது. ஆனால் ஒரு விஷயம்.. வேண்டுமென்றே யாரும் அவரைத் திட்டுவதில்லை. பேசுவதில்லை. அவர் செய்கின்ற செயல்களைப் பொறுத்துத்தான் பேசுகிறோம். கடிந்து கொள்கிறோம்..

இப்போது பாருங்கள்..

உண்ணாவிரதம் முடிந்த மறுநாளோ, அல்லது அடுத்த நாளா நினைவில்லை. அறிவாலயத்தில் பேட்டியளிக்கிறார். முகத்தில் அப்படியொரு சிரிப்பு. பூரிப்பு.. கேட்கின்ற கேள்விகளோ இலங்கை பிரச்சினை பற்றியது..

“உங்களுடைய உண்ணாவிரதத்திற்குப் பின்பும் ஈழத்தில் குண்டு மழை பொழிகிறதே..” என்பது பத்திரிகையாளர்களின் கேள்வி. ஐயா புன்சிரிப்போடு சொன்ன பதில், “மழை விட்டும் தூவானம் விடவில்லை..”

“யார் சொல்லியும் கேட்காமல் ராஜபக்சே போரை நடத்துகிறாரே.. என்ன செய்யப் போகிறீர்கள்..?” இது கேள்வி.. ஐயாவிடமிருந்து உடனுக்குடன் பதில் வருகிறது “நாம என்ன செய்யறது? வாங்க போய் ஒரு காபி குடிச்சிட்டு வரலாம்..” சொல்லிவிட்டு வெடிச்சிரிப்பு சிரித்தார் பாருங்கள்..

அப்படியே கைல ஒரு கல்லு இருந்திருந்தா..

அப்பன் முருகனிடம் ஒரு பேச்சு

இது எனக்கும் என் அப்பன் முருகனுக்கும் மட்டும் புரியுற விஷயம்.. உங்களுக்குப் புரியாது.. விட்ருங்க..

“அன்பு அப்பனே..

உன்னிடம் நான் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. எனக்கு நல்ல வேலை கொடுன்னு நான் கேக்கலை.. பணம் கொடுன்னு நான் கேக்கலை.. நல்ல வாழ்க்கையைக் கொடுன்னு நான் கேக்கலை.. ஆனா புதுசு, புதுசா பிரச்சினையை மட்டும் கொடுக்காதடா சாமி.. அதைச் சமாளிக்கவே எனக்கு நேரம் சரியாயிருக்கு. தாங்க முடியலை... இதைத்தான கேட்டேன்.

கேட்டியா.. என்னிக்காவது நான் கேட்டதை செஞ்சிருக்கியா நீயி.. இப்ப என்ன பண்ணிருக்க..? கேட்கும்போதெல்லாம் செய்யாம.. இப்ப வண்டவாளம் தண்டவாளத்துல ஏறுற நேரத்துல உதவின்னு சொல்லி ஒரு உபத்திரவத்தைச் செஞ்சு தொலைஞ்சிருக்க..

உன்கூட மோதுற அளவுக்கெல்லாம் எனக்கு சக்தியில்லடா சாமி.. நீதான செஞ்ச.. ஏதாவது ஒண்ணுன்னா உன்கிட்டயே தள்ளி விடுறேன்.. நீயாச்சு.. அவங்களாச்சு..

சோனியாவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்-பழ.நெடுமாறன் அறிவிப்பு

05-05-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இலங்கையுடன் கள்ளத்தனமான உறவு வைத்துக் கொண்டு தமிழ் ஈழத்து மக்களைக் கொன்று குவிப்பதற்கு முழு முதற் காரணமாகத் திகழும் அன்னை சோனியா தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை சென்னை வருகிறார்.

ஏற்கெனவே சோனியாவோ, மன்மோகன்சிங்கோ தமிழகத்திற்குள் கால் வைத்தால் எப்பாடுபட்டாவது எங்களது எதிர்ப்பைக் காட்டுவோம் என்று தமிழ்த் திரைப்பட தமிழீழ ஆதரவு இயக்கம் அறிவித்துள்ளது.

சொன்னது போலவே தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் ஐயா தலைமையில் பாரதிராஜாவும் இணைந்து நாளை சென்னை வரவிருக்கும் சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப் போவதாக நெடுமாறன் ஐயா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இது குறித்து அவர் நேற்று நெல்லையில் கூறியது,

"இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் ஏழாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளன. இன்னும் ராணுவத் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மூன்று லட்சம் தமிழர்கள் உணவு, மருந்து இன்றி காடுகளிலும், சாலையோரங்களிலும் தவிக்கின்றனர். பட்டினிச் சாவுகள் நடக்கின்றன.

தற்போதும் இலங்கை ராணுவம் கடல் வழியே போரை நடத்துகிறது. போர் நிறுத்தத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கவில்லை. எனவே சோனியா சென்னைக்கு நாளை வரும்போது அவர் வரும் வழியில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

இதில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், அவருடைய அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் சோனியாவுக்கு எதிராக வீடுகளில் கறுப்புக் கொடி கட்டப்படும். கறுப்புச் சின்னங்கள் அணிவோம். இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டால், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கலை பொருட்டாக மதிப்பார்கள்.

இலங்கை பிரச்சினை மட்டுமல்லாது காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றில் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுப்பர். அ.இ.அ.தி.மு.க.-மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையில் தற்போது ஆதரவு தெரிவித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு தங்களது ஆதரவு நிலையை மாற்றிக் கொண்டால், அதற்கும் தமிழகத்து மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.."

இவ்வாறு பேசியுள்ளார்.

இன்று சேலத்திலும், நாளை திண்டுக்கல்லிலும் பிரச்சாரம் செய்யவிருக்கும் பாரதிராஜாவின் குழுவினர் இதற்காகவே இன்று இரவு சென்னை கிளம்பி வருகிறார்களாம்.

நடத்தட்டும்.. நம்மால் முடிந்த ஒரு எதிர்ப்பையாவது நாம் காட்டி நாம் மனிதர்கள்தான் என்பதை அந்த விலங்கினத்தினருக்கு உணர்த்துவோம்..

போராட்டம் வெல்லட்டும்..!

பெரியவர்களை வாழ்த்துகிறேன்.. வணங்குகிறேன்..!

கிளம்பியது திரையுலகத் தமிழீழ ஆதரவுப் படை - கலக்கத்தில் காங்கிரஸ்..!

03-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்றைக்குக்கூட ஈழத்தில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த தற்காலிக மருத்துவமனையில் சிங்கள ராணுவம் குண்டு வீசியதில் அப்பாவி நோயாளிகள் 64 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆனாலும் இன்று வரையிலும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்ற கோயபல்ஸ் பிரச்சாரம் இந்தியாவில் நடந்து கொண்டுதான் வருகிறது.






பிச்சைக்காரர்களே இருந்திராத தேசத்தில் அத்தனை மக்களையும் பிச்சைக்காரர்களாக மாற்றிய சிங்கள இனவாத அரசுக்குத் துணை போகும் காங்கிரஸ் அரசையும், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வையும் தோலுரிக்க வேண்டிய கட்டாயம் அத்தனை பேருக்கும் உண்டு. சிங்கள அரசு சொல்லும் அனைத்துப் பொய்களுக்கும் ஆமாம் சாமி போட்டு ஆதரவு அளிப்பது மத்திய, மாநில அரசுகள்தான்..


இப்படி தங்களது சுயலாபத்திற்காக அப்பாவி தமிழக மக்களின் கண்ணீரைக்கூட பகடைக்காயாகப் பயன்படுத்தும் நம்மிடையே இருக்கின்ற தமிழர் விரோத அரசியல் வியாதிகளைத்தான் முதலில் கண்டிக்க வேண்டும்.. மக்களிடம் அவர்களுடைய முகமூடிகளை கிழிக்க வேண்டும் என்கிற ஆவலில் தமிழகத் திரைப்படத் துறையில் இருக்கும் தமிழீழ ஆதரவு இயக்கத்தினர் இறங்கியுள்ளனர்.

சென்ற வாரம் அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் கலைஞரை அண்ணா சமாதிவரைக்கும் கொண்டு வந்து தூங்க வைத்தது. அந்தப் போராட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்ற தொகுதிகளில் அவர்களுக்கெதிராக பிரச்சாரம் செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

23-ம் தேதியன்று நடந்த தொடர் முழக்கப் போராட்ட தினத்தன்றுகூட காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தங்கபாலு மீது மட்டுமே கோபத்தில் இருந்தது திரையுலகப் படை.. ஆனால் அன்று காலையில் வெளிவந்த நக்கீரன் இதழில் காங்கிரஸ் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் “யார் அந்த முத்துக்குமார்..?” என்று கேள்வி கேட்டதாக வெளி வந்த செய்தியைப் பார்த்ததும் அத்தனை பேருமே கொதித்துப் போனார்கள்.

முதலில் இந்த காங்கிரஸ்காரர்களின் இந்தத் திமிரை அடக்கியாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அவர்களை எதிர்த்து தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். அப்படித்தான் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அந்த போராட்ட மேடையில் எதிர்பாராதவிதமாக கவிஞர் தாமரையின் பேச்சு பெரும் புயலைக் கிளப்பிவிட உலகத் தமிழர்களிடையே அந்தப் போராட்டத்திற்கு விளம்பரமும், ஆதரவும் கிடைத்துவிட்டதாலும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரு ரவுண்டு அடிப்போம் என்று இப்போது முடிவு செய்துள்ளார்கள்.

சொன்னதைப் போலவே அந்த இயக்கத்தினர் தங்களது பிரச்சாரப் பயணத்தை நாளை மதியம் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து துவக்குகிறார்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டம் முடிந்ததும் அத்தொகுதிக்கென்று சிலரைப் பொறுப்பாளர்களாக நியமித்து அவர்கள் தலைமையில் இளைஞர் பட்டாளத்தினரை நியமித்து அந்தத் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அனுப்பிவிட்டு அடுத்தத் தொகுதிக்கு போகலாம் என்று முடிவு செய்திருக்கிறது திரையுலக் குழு.

அதற்கேற்றாற்போல் எத்தனை பேர் வருகிறார்கள்? யார் யார் எந்ததெந்தத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்..? அவர்களுக்குக் கீழ் உள்ள இளைஞர் பட்டாளத்தினர் யார், யார் என்பதையெல்லாம் ரகசியமாக வைத்துள்ளனர்.

இதில் அதிகம் பேர் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 24 சங்ககங்களில் ஏதேனும் ஒரு சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்கள். அது போலத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். போலீஸார் மூலம் கைது, வழக்கு, சிறை என்று வந்தால் அதனைச் சமாளிப்பதற்கும், முறியடிப்பதற்கும் எந்த விதத்திலும் தயாராகவே உள்ளது இப்படை.

இதற்கிடையில் வருகின்ற 6-ம் தேதி புதன்கிழமை சோனியா சென்னை வருகிறார். தீவுத்திடலில் பொதுக்கூட்டம். சோனியா வரும்போது எங்களது எதிர்ப்பை எப்படி காட்ட வேண்டுமோ அப்படி காட்டுவோம் என்று இந்த அமைப்பினர் ஏற்கெனவே சொல்லியிருப்பதால், போலீஸாரும் தற்போது பதட்டத்தில் உள்ளனர்.

வேறு கட்சியினராகவோ, அமைப்பினராகவோ இருந்திருந்தால் முன் எச்சரிக்கைக் கைது என்று சொல்லி இளிச்சவாயர்கள் நான்கைந்து பேரை கைது செய்து சிறையில் தள்ளி கணக்குக் காட்டியிருக்கும் காவல்துறை. ஆனால் இப்போது திரைப்படத் துறையினர் என்பதால் தேர்தல் நேரத்தில் “அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் ஒட்டு மொத்தமாக சிலிர்த்து எழும் வாய்ப்பை தரவே கூடாது. எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்..” என்று மேலிடம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம்.

முன் எச்சரிக்கை கைதுகள் நடைபெறப் போவதில்லை என்பது நன்கு தெரிந்ததினால்தான், பகிரங்கமாக போராட்டத்தினை அறிவித்துள்ளது இந்தத் திரையுலகப் படை.

இது பற்றி நேற்று முன்தினம் திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் அமைப்பாளர், இயக்குநர் இமயம் பாரதிராஜா அளித்துள்ள பேட்டி இது..


“தமிழர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழர் விரோத சக்தியாக வளர்ந்துள்ள அரசியல் சக்திகளை அடையாளம் காட்டவும் திரையுலகத் தமிழ் இன உணர்வாளர்கள் இன்று ஒன்றுபட்டுள்ளோம்.

எந்தவித அதிகாரப் பங்கீடோ, அரசியல் ஆதாயமோ இல்லாமல், ஓர் இன விழிப்புணர்வை தமிழக மக்களிடம் கொண்டு வரும் நோக்கத்தில், தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

இலங்கையில் போர் நிறுத்தம் என்பது பொய். ஆறு மாத காலமாக தமிழகத்தில் பேரணிகள் உண்ணாவிரதங்கள் மேற்கொண்டும் பல உயிர் பலிகள் கொடுத்தும் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. அவர்கள்தான் நடத்துகிறார்களோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு சூழ்நிலைக் கைதியாக உள்ளது. ஆகையால் தமிழின விரோதிகளை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்.

எங்களது பிரச்சாரப் பயணம் நாளை மறுதினம் காஞ்சிபுரத்தில் இருக்கும் அண்ணா சிலையில் துவங்கி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, கடலூர் எனத் தொடர்ந்து வரும் 11ம் தேதி புதுவையில் முடிவடைகிறது.

இதன்படி

மே-4-ம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோட்டில்..

மே 5-ம் தேதி மாலை 6 மணிக்கு சேலத்தில்..

மே 6-ம் தேதி மாலை 6 மணிக்கு திண்டுக்கல்லில்..

மே 7-ம் தேதி பகலில் திருமங்கலத்திலும்..

மே 7-ம் தேதி மாலை 6 மணிக்கு விருதுநகரிலும்..

மே 8-ம் தேதி பகலில் தென்காசியிலும்..

மே 8-ம் தேதி மாலை 6 மணிக்கு நெல்லையிலும்..

மே 9-ம் தேதி பகலில் சிவகங்கையிலும்..

மே 9-ம் தேதி மாலை 6 மணிக்கு காரைக்குடியிலும்..

மே 10-ம் தேதி மாலை 6 மணிக்கு கடலூரிலும்..

மே 11-ம் தேதி பகலில் பாண்டிச்சேரியிலும்

பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.


இப்பிரச்சாரக் கூட்டத்தில் சீமான், செல்வமணி, சேரன், அமீர், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், சரவணசுப்பையா, செல்வபாரதி, பிரவீன்காந்த், மனோஜ்குமார், நடிகர் வடிவேலு, கவிஞர்கள் அறிவுமதி, கவிஞர் சினேகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழர்கள் அல்லாத பிற இனத்தவர்களும் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு சோனியா வரும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்..”

என்று கூறியுள்ளார் பாரதிராஜா.

தொடர் முழக்கப் போராட்ட தினத்தன்று பாதியிலேயே ஜூட் விட்ட நடிகர் வடிவேலு இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது ஊர், ஊராக வருவதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்.

எப்படியோ இவர்களது பிரச்சாரத்தின் பயனாக சில தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி தோற்றால்தான், தமிழர்கள் மீது அக்கட்சித் தலைவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும். அதன் பின் ஏதேனும் அரசியல் மாற்றங்கள் நிகழுமா என்று பார்ப்போம்..

எனக்கும் உடன் செல்லத்தான் ஆசை. ஆனால் வயித்துப்பாடு என்ற ஒன்று இருக்கிறதே.. அதுதான் இடிக்கிறது.. வருத்தமாகத்தான் உள்ளது. ஒரு நாள் என்றால் பரவாயில்லை.. விடுமுறை எடுத்துவிடலாம். தொடர்ச்சியான 7 நாட்கள் என்பதுதான் என்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. அந்தக் குற்றவுணர்வோடுதான் இதனை தட்டச்சு செய்கிறேன்.

இந்தத் திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

புகைப்படங்களின் உதவிக்கு நன்றி : திரு.கரிகாலன்