வந்துவிட்டார்கள் கொள்ளையர்கள்..! மக்களே எச்சரிக்கையாக இருங்கள்..!

03-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்துடன் கொள்ளையடிக்கவும், மொட்டையடிக்கவும் வரவிருக்கும் மெகா கொள்ளைக் கும்பலைத் தேர்வு செய்யும் திருவிழாவிற்கான அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டுவிட்டது.

இப்போதைய கொள்ளைக் கூட்டக் கும்பலின் பதவிக் காலம் 2009 ஜூன் 1-ல் முடிகிறதாம்.. புதிய கும்பல் ஜூன்-2-ம் தேதி கூடியே ஆக வேண்டுமாம்..!

இதன்படி பதினைந்தாவது கொள்ளைக்கூடத்தின் அங்கத்தினர்களுக்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறப் போகிறதாம். முதற்கட்ட ஓட்டுப் பதிவு ஏப்ரல் 16-ம் தேதி துவங்குகிறது. ஐந்தாவது மற்றும் இறுதி கட்டம் மே 13-ம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தல் அட்டவணை

முதல் கட்டத் தேர்தல்

தொகுதிகள் 124
ஓட்டுப் பதிவு ஏப்ரல் 16
இரண்டாவது கட்டத் தேர்தல்

தொகுதிகள் 141
ஓட்டுப் பதிவு ஏப்ரல் 23

மூன்றாவது கட்டத் தேர்தல்

தொகுதிகள் 107
ஓட்டுப் பதிவு ஏப்ரல் 30
நான்காம் கட்டத் தேர்தல்

தொகுதிகள் 85
ஓட்டுப் பதிவு மே 7

ஐந்தாம் கட்டத் தேர்தல்

ஓட்டுப் பதிவு மே 13
ஓட்டு எண்ணிக்கை மே 16.

இந்த மெகா மோசடித் தேர்தலுடன் ஆந்திரா, ஒரிசா, சிக்கிம் மாநிலங்களில் பேட்டை ரவுடிகளின் சட்டசபை தேர்தலும் நடைபெறப் போகிறது.
மாநில வாரியாக லோக்சபா தேர்தல் நடக்கும் தேதிகள்

1. ஜம்முகாஷ்மீர், உத்தரபிரதேசம் - ஏப்ரல் 16, 23, 30, மே 7, மே 13
2. பீகார் - ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7
3. மகாராஷ்டிரா - ஏப்ரல் 16, 23, மற்றும் 30
4. மேற்கு வங்கம் - ஏப்ரல் 30, மே 7, 13
5. ஆந்திரா - ஏப்ரல் 16, மற்றும் 23
6. அசாம் - ஏப்ரல் 16 மற்றும் 23
7. கர்நாடகா - ஏப்ரல் 23 மற்றும் 30
8. மத்தியப்பிரதேசம் - ஏப்ரல் 23, மற்றும் 30
9. மணிப்பூர் - ஏப்ரல் 16, மற்றும் 23
10. ஒரிசா - ஏப்ரல் 16, மற்றும் 23
11. பஞ்சாப் - மே 7 மற்றும் 13
12. ஜார்க்கண்ட் - ஏப்ரல் 16 மற்றும் 23
13. அருணாச்சல பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சட்டீஸ்கர் - ஏப்ரல்-16
14. கோவா, திரிபுரா - ஏப்ரல் 23
15. குஜராத், சிக்கிம் - ஏப்ரல் 30
16. டில்லி, அரியானா, மற்றும் ராஜஸ்தான் - மே 7
17. இமாச்சலப்பிரதேசம், தமிழகம், உத்தரகாண்ட் - மே 13
யூனியன் பிரதேசங்கள்
18. தாத்ரா மற்றும் நகர்ஹவேலி, டாமன் மற்றும் டையூ - ஏப்ரல் 30
19. சண்டிகார், புதுச்சேரி - மே 13
20. அந்தமான், நிகோபார் தீவுகள், லட்சத்தீவு - ஏப்ரல் 16
தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே தேதியில் ஓட்டுப் பதிவு நடைபெறவிருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுவைக்கான தேர்தல் அட்டவணை
வேட்புமனு தாக்கல் ஆரம்பம் - 17.04.09
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - 24.04.09
வேட்பு மனு பரிசீலனை கடைசி நாள் - 25.04.09
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் - 27.04.09
ஓட்டுப் பதிவு - 13.05.09
ஓட்டு எண்ணிக்கை - 16.05.09
தமி்ழக நிலவரப்படி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கும், தேர்தல் பிரச்சார கடைசி நாளிற்குமான கால அவகாசம் 14 நாட்களே உள்ளதால், இந்த முறை தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் சூறாவளி சுற்றுப்பயணமாகத்தான் இருக்கப் போகிறது. உள்ளூர் கட்சித் தொண்டர்களின் கடும் உழைப்பினால் மட்டுமே வெல்ல முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு குறையினால் வேட்பாளரின் பெயர் மாற்றப்பட்டாலோ அல்லது பதிலி வேட்பாளர் உண்மையான வேட்பாளராக ஆக்கப்பட்டாலோ, ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளருக்கான விளம்பரங்கள் அனைத்தும் வீணாகிவிடும் என்பதால் இந்த முறை கட்சிக்கே வாக்களியுங்கள் என்ற பொதுவான கோஷங்கள்தான் முதலில் ஆரம்பிக்கும். பின்புதான் வேட்பாளரின் பெயர் பிரபலப்படுத்தப்படலாம்.
மாநிலங்களில் 3 கட்டத் தேர்தல்
ஜம்மு காஷ்மீரில் 6 தொகுதிகளுக்கு ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மற்ற இரு தொகுதிகளுக்கு மே 13-ல் வாக்குப்பதிவு நடைபெறப் போகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளுக்கு ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7, 13-ம் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்.
பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஏப்ரல் 16, 23 தேதிகளில் தலா 13 தொகுதிகளுக்கும், எஞ்சிய 11 தொகுதிகளுக்கு ஏப்ரல் 30ம் தேதியும், மீதமுள்ள 3 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.
கர்நாடகாவில் 28 தொகுதிகளில் ஏப்ரல் 23-ல் 17 தொகுதிகளிலும், ஏப்ரல் 30-ம் தேதி 11 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கவுள்ளது.
ஆந்திராவில் உள்ள 42 தொகுதிகளில் ஏப்ரல் 22-ம் தேதி 22 தொகுதிகளிலும், ஏப்ரல் 23-ம் தேதி 20 தொகுதிகளிலும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் ஏப்ரல் 16-ம் தேதி 13 தொகுதிகளுக்கும், 23-ம் தேதி 25 தொகுதிகளுக்கும், 30-ம் தேதி 10 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இத்துடன் கோவாவில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் 23-ம் தேதி தேர்தல் நடக்கும்.
மே 13-ம் தேதி தமிழ்நாடு, புதுவையுடன் இமாச்சலப்பிரதேசத்தில் 4, சட்டீஸ்கரில் 1, உத்தரகாண்டில் 5, பஞ்சாப்பில் 9, மேற்குவங்கத்தில் 11, காஷ்மீரில் 2 மற்றும் உ.பி.யில் 14 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.
ஆந்திரா, ஒரிசா சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 16 மற்றும் 23 தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 23-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால், அங்கு மட்டும் ஏப்ரல் 22-ம் தேதி தேர்தல் நடைபெறுமாம்.
தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்ட பின்னர் முதல் தேர்தல்
மக்களவைத் தொகுதிகளின் எல்லைகள் பல ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படாததால் ஒரு சில தொகுதிகளில் 30 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களும், ஒரு சிலவற்றில் ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்காளர்களும் இருந்தனர். இந்த நிலையை மாற்றி எல்லா தொகுதிகளிலும் ஒரே அளவு வாக்காளர்கள் இருக்கும்படி செய்ய தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
இதன்படி நாடு முழுவதும் தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 499 தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் நடக்கும் முதல் பொதுத்தேர்தல் இதுதான். அருணாச்சல பிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், காஷ்மீர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகமானது

கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலின்போது ஆறு லட்சத்து 87 ஆயிரத்து 402 ஓட்டுச் சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. இந்தாண்டு எட்டு லட்சத்து 28 ஆயிரத்து 804 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளனவாம்.
தேவையான ஓட்டு இயந்திரங்கள்

இந்த பொதுத்தேர்தலை நடத்த 11 லட்சத்துல 12 ஆயிரம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தேவை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் 13 லட்சத்து 68 ஆயிரம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் கையிருப்பு உள்ளதால் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் வராதாம்.
இத்தேர்தல் பணிகளில் நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் 40 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுவார்களாம்.
மத்திய ரிசர்வ் போலீஸார், மாநில போலீஸார் என 21 லட்சம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் நடக்கும் 543 தொகுதிகளில் 522 தொகுதிகளில் முதன்முறையாக வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.
வரக்கூடிய தேர்தலில் 71.4 கோடி பேர் ஓட்டளிக்கவுள்ளனராம். இது 2004-ம் ஆண்டின் வாக்காளர் எண்ணிக்கையைவிட 4.3 கோடி அதிகம்.

ஒரே ஒருவருக்காக வாக்குச்சாவடி
குஜராத் மாநிலம் ஜூனாகாபாத் தொகுதிக்கு உட்பட்ட கிர் வனவிலங்கு சரணாலயத்தில் நடுக்காட்டில் பானேஜ் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பரத்தாஸ் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இவர் கோவிலேயே தங்கியிருக்கிறார். ஜூனாகாபாத் மக்களவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால், இவர் வாக்களிக்க வசதியாக கோவிலேயே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலில் பரத்தாஸின் பெயர் மட்டுமே உள்ளதால் வாக்குச்சாவடி அமைத்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாம்.
தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் அதிகரிப்பு
14-வது மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு 79 தொகுதிகளும், மலைஜாதியினருக்கு 41 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. மற்றவை பொதுத் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. தொகுதி மறுசீரமைப்பால் தனித்தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் 84 ஆகவும், மலை ஜாதியினருக்கான தொகுதிகளின் எண்ணிக்கை 47 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் தாழ்த்தப்பட்டோருக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எல்லாம் வியாழக்கிழமை மயம்..!
ஏப்ரல், மே மாதங்களில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகள் வியாழக்கிழமையாகும். கடைசி கட்டத் தேர்தல் மட்டுமே மே 13-ம் தேதி புதன்கிழமை நடக்கிறது. வியாழக்கிழமைகளை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்தது ஏன் என்று தெரியவில்லை..

தேர்தல் கமிஷனின் மூன்று அம்சத் திட்டம்

இந்தத் தேர்தலில் தேர்தல் கமிஷன் மூன்று அம்சத் திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாம்.
முதலாவது புகைப்பட வாக்காளர் பட்டியல் அறிமுகம். இதன் மூலம் கள்ள ஓட்டுக்கள் பதிவாவது தடுக்கப்படும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது அம்சமாக, ஓட்டுச் சாவடிகள் அளவில் அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகளை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாக்காளர் பட்டியல் முன்பே சரிபார்க்கப்படுவதோடு, கள்ள ஓட்டுப் போட வருவோரையும் எளிதாக அடையாளம் காண முடியும் என்று தேர்தல் கமிஷன் நம்புகிறது.
புதிதாக கட்சிகளை பதிவு செய்ய முடியாது
தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டதால் புதிதாக எந்தவொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியாது. மே 29-ம் தேதிவரையிலும் இந்தத் தடை இருக்குமாம்.
பொதுவாகவே தேர்தல் கமிஷன் எந்தவொரு அறிவிப்பு வெளியிட்டாலும். "இது ஆளும்கட்சியின் சதி" என்று எதிர்க்கட்சிகளும், "எதிர்க்கட்சிகளுக்கு பலியாகிவிட்டது தேர்தல் கமிஷன்" என்று ஆளும்கட்சியினரின் புலம்பல்களும் பொங்கி வரும்.
ஆனால் இந்த முறை காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டு கட்சிகளுமே தேர்தல் கமிஷனின் இந்தத் தேர்தல் கால அட்டவணையை வரவேற்றுள்ளனர்.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதுள்ளது.
இதன் காரணமாக நேற்று மாலை சென்னை கோயம்பேட்டில் நடைபெறுவதாக இருந்த கலைஞர் சட்டப் பேரவை பொன்விழா நினைவு வளைவின் திறப்பு விழாவை அவசரம், அவசரமாக அமைச்சர் பரிதி இளம்வழுதியை வைத்து திறந்து வைத்துவிட்டார்கள். ஏற்கெனவே இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்டாலின்தான் கலந்து கொண்டு நினைவு வளைவை திறந்து வைப்பதாக இருந்தது. பின்னாளில் வழக்கு, பேச்சு என்று வந்தால் தளபதியைக் குறி வைக்கக்கூடாது என்பதால் துணைத் தளபதியைக் கொண்டு திறந்து வைத்துவிட்டார்கள் புத்திசாலி அதிகாரிகள்..!
ஆரம்பித்துவிட்டது அதிரடிக்காரர்களின் அட்டகாசங்கள்..
இனி மேடைகளில் "உங்கள் வீட்டுக்கு கிணற்றில் இருந்து தண்ணி சுமந்து வந்து ஊத்துவோம்..” என்றுகூட வாக்குறுதிகள் வழங்கப்படும்.. நம்புபவர்கள் வாசலில் குடத்தோடு காத்திருக்கலாம்..

மக்களே.. வேறு வழியில்லை..
இவர்கள் கொடுக்கப் போகின்ற அனைத்து வாக்குறுதிகளும் கடைசியில் குப்பைக்கூடத்திற்குத்தான் போகும் என்பது நமக்குத் தெரியாமாதலால், இதையும் புன்சிரிப்புடன் சகித்துக் கொண்டு கூடுமானவரையில் "இவர் குறைந்தபட்சமாக கொள்ளையடிப்பார், ஆனால் அதிகபட்சம் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்வார்" என்று தெரிந்தால், அந்த நபருக்கே, உங்களது பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்யுமாய் தமிழக வலைப்பதிவர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வேண்டி விரும்பி, சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்.

46 comments:

Anonymous said...

//"இவர் குறைந்தபட்சமாக கொள்ளையடிப்பார், ஆனால் அதிகபட்சம் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்வார்//

நாடு இருக்கற நிலைமைல ""இவர் அதிகபட்சம் கொள்ளையடிப்பார், ஆனால் குறைந்தபட்சமாக மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்வார்" என்று தோன்றினாலே வாக்களிக்கலாம்!!

முரளிகண்ணன் said...

நன்றி அண்ணா

நவநீதன் said...

இந்த தேர்தலிலாவது (ஈழ) தமிழினத்திற்கு தமிழக கட்சிகள் செய்த துரோகத்தை எண்ணி பார்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்...!

நையாண்டி நைனா said...

இதில் "49-O" உண்டா?

ஷண்முகப்ரியன் said...

தேர்தலுக்கு முன்னரே நான் உங்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டேன்.எனவே எனது முதல் வேட்பாளரே நீங்கள்தான்,சரவணன்!

puduvaisiva said...

"தேவையான ஓட்டு இயந்திரங்கள்"
it is refer people???

:-)))))))))))))))

me the 6th..

Unknown said...

சார்!

ஏன் சார் பேப்பர்ல வந்த நீயுஸ இவ்வளவு கஷ்டப் பட்டு திருப்பிப் போட்டு படுத்திரீங்க.இவ்வளவு பெரிய பதிவு தேவையா?

இதுக்குப் பதிலா வழக்கமா போடற ஒரு நல்ல பதிவு போடலாமே சார்!

வாங்க நம்ம வலைக்கு! பதிவுகளைப்
படிச்சிட்டுக் கருத்துச் சொல்லுங்க!

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...
//"இவர் குறைந்தபட்சமாக கொள்ளையடிப்பார், ஆனால் அதிகபட்சம் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்வார்//

நாடு இருக்கற நிலைமைல "இவர் அதிகபட்சம் கொள்ளையடிப்பார், ஆனால் குறைந்தபட்சமாக மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்வார்" என்று தோன்றினாலே வாக்களிக்கலாம்!!//

ஓ.. இப்படியொரு எண்ணம் வந்திருச்சா..

அந்த அளவுக்கு வெறுப்பா..?

புவனேஷ் ஸார்.. முதல் பின்னூட்டமே நெத்தியடி..

நன்றி..

உண்மைத்தமிழன் said...

//முரளிகண்ணன் said...

நன்றி அண்ணா//

அண்ணாவா..? விட்டா அப்பா, தாத்தான்னுவீங்களே..?

முரளியண்ணே.. நான் உங்களுக்குத் தம்பிதாண்ணே..!

உண்மைத்தமிழன் said...

//நவநீதன் said...
இந்த தேர்தலிலாவது (ஈழ) தமிழினத்திற்கு தமிழக கட்சிகள் செய்த துரோகத்தை எண்ணி பார்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்!//

அப்படியொரு நிலை வர வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடும்..

மக்கள் சிந்திக்க வேண்டுமே..?

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
இதில் "49-O" உண்டா?//

நிச்சயமா உண்டு..

ஆனால் தயவு செய்து இதனைப் பயன்படுத்தி உங்களது பொன்னான வாக்கை வீணாக்கிவிடாதீர்கள்.

அதிகப்பட்ச தகுதியுடையவர் யார் என்று பார்த்து, அவருக்கு ஓட்டளித்துவிடுங்கள்..

உண்மைத்தமிழன் said...

//ஷண்முகப்ரியன் said...
தேர்தலுக்கு முன்னரே நான் உங்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டேன்.எனவே எனது முதல் வேட்பாளரே நீங்கள்தான், சரவணன்!//

ஸார்.. அந்த ஒரு ஓட்டுக்குச் சொந்தக்காரர் நீங்கதானா..!

நன்றி.. நன்றி.. நன்றி..

உங்க கை ராசி இனிமேலாச்சும் என் தளம் ஏதாவது ஓஹோன்னு போகுதான்னு பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

//♠புதுவை சிவா♠ said...
"தேவையான ஓட்டு இயந்திரங்கள்"
it is refer people???
:-)))))))))))))))
me the 6th..//

ஏதோ இது ஒண்ணு இருக்கிறதால சில ரவுடிகள் வடிகட்டப்படுகிறார்கள்.. சில அத்துமீறல்களும், அநியாயங்களும் தடுக்கப்படுகின்றன. அந்த மட்டுக்கும் நமது வாத்தியார் சுஜாதாவுக்கு நன்றியோ நன்றி..!

உண்மைத்தமிழன் said...

//கே.ரவிஷங்கர் said...
சார்! ஏன் சார் பேப்பர்ல வந்த நீயுஸ இவ்வளவு கஷ்டப்பட்டு திருப்பிப் போட்டு படுத்திரீங்க.இவ்வளவு பெரிய பதிவு தேவையா? இதுக்குப் பதிலா வழக்கமா போடற ஒரு நல்ல பதிவு போடலாமே சார்! வாங்க நம்ம வலைக்கு! பதிவுகளைப் படிச்சிட்டுக் கருத்துச் சொல்லுங்க!//

இருந்தால் என்ன ரவி..?

பத்திரிகைகளில் படிக்க முடியாதவர்கள் படித்துக் கொள்வார்கள் அல்லவா..?

அதோடு கூடவே நாளை உங்களுக்கே ஒரு தகவல் வேண்டியிருக்கலாம். பழைய பத்திரிகைகள் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்.. இங்கேதானே வருவீர்கள்.. அதற்காகத்தான்..

தங்களது தளத்திற்குத்தானே.. வருகிறேன்..

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி!

எம்.எம்.அப்துல்லா said...

//முரளியண்ணே.. நான் உங்களுக்குத் தம்பிதாண்ணே..!
//

எனக்குண்ணே??

:))))

Anonymous said...

useful information about an election of a superpower.
Sathi

இரா.சுகுமாரன் said...

செய்தி பழையதாகிவிட்டது, ஆனால் நீங்கள் கொடுத்துள்ள வடிவம் புதிது நன்றாக இருக்கிறது நன்றி

உண்மைத்தமிழன் said...

//வால்பையன் said...
தகவலுக்கு நன்றி!//

வருகைக்கு நன்றி வாலு...!

உண்மைத்தமிழன் said...

///எம்.எம்.அப்துல்லா said...
//முரளியண்ணே.. நான் உங்களுக்குத் தம்பிதாண்ணே..!//
எனக்குண்ணே??:))))///

இதிலென்ன சந்தேகம் அப்துல்லாஜி..!

அடியேன் தங்களுக்கும் தம்பிதான்..!

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
useful information about an election of a superpower..
Sathi//

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

//இரா.சுகுமாரன் said...
செய்தி பழையதாகிவிட்டது, ஆனால் நீங்கள் கொடுத்துள்ள வடிவம் புதிது நன்றாக இருக்கிறது நன்றி//

நன்றி சுகுமாரன் ஸார்..

வலையுலகத்தில் பதிவு செய்து வைப்போமே.. பின்னாளில் தேவைப்படும் என்பதால்தான் பதிவிட்டுள்ளேன்..

தமிழர் நேசன் said...

சுவாரசியமான பதிவு... மீண்டும் படித்துவிட்டு பின்னோட்டம் இடுகிறேன்... இப்போது மனிதாபிமானிகள் மத்தியில் பரபரப்பாக உள்ள விஷயம் பற்றி எனது பதிவில்.. நேரம் இருந்தால் வரலாம்..
http://kottumurase.blogspot.com/2009/03/blog-post_03.html

நித்யன் said...

///
இனி மேடைகளில் "உங்கள் வீட்டுக்கு கிணற்றில் இருந்து தண்ணி சுமந்து வந்து ஊத்துவோம்..” என்றுகூட வாக்குறுதிகள் வழங்கப்படும்.. நம்புபவர்கள் வாசலில் குடத்தோடு காத்திருக்கலாம்..

மக்களே.. வேறு வழியில்லை..
///

வேறு வழியே இல்லை...

நித்யன்

Vidya Poshak said...

Why kovam, better start a political party :)

நையாண்டி நைனா said...

//நையாண்டி நைனா said...
இதில் "49-O" உண்டா?//

நிச்சயமா உண்டு..

ஆனால் தயவு செய்து இதனைப் பயன்படுத்தி உங்களது பொன்னான வாக்கை வீணாக்கிவிடாதீர்கள்.

அதிகப்பட்ச தகுதியுடையவர் யார் என்று பார்த்து, அவருக்கு ஓட்டளித்துவிடுங்கள்..*/

உங்க கணிப்பிலே, இப்போதைக்கு அப்படி ஒரு கட்சியை சொல்லுங்க பார்போம்?.... வேண்டாம், வேண்டாம், ஒரு ஆளை சொல்லுங்க பார்போம்.

Anonymous said...

ஓட்டுப்போட்டால் கொள்ளையருக்குத் துணைபோவது போல்தான். போடாவிட்டால் ஜனநாயகவிரோதி.
வழி என்ன? சொல்லுவீர்களா?
கொள்ளைபோகும் தேசபக்தன்

Anonymous said...

நீங்கள் தேர்தலில் நில்லுங்கள். கண்டிப்பா ஏதாவது மாற்றம் வரும். செலவுக்கு எல்லோருமாச் சேர்ந்து பணம் தரலாம். இப்பொழுது செய்யாவிட்டால் எப்பொழுது? எனக்கு உங்களில் நம்பிக்கை இருக்கிறது. வித்தியாசமா ஏதாவது பண்ணனும். ஆரம்பியுங்கள். அணிவகுக்க பலர் தயாராக உள்ளார்கள். இப்பொழுது உள்ள வேகத்தையும், விவேகத்தையும் பயன்படுத்துங்கள். துணை தர தோழர்கள் பலருண்டு. நிச்சயம் இது காமெடி இல்லை. கொஞ்சூண்டு யோசியுங்கள். எது தான் முடியாதது? வேட்டி கட்டத் தெரியாததுகளும், டெல்லி எங்கே இருக்கென்று வரை படத்திலே காட்டத் தெரியாததுகள் எல்லாம் போகும் போது ஒரு இந்தியனால் முடியாதா?

Unknown said...

எனக்கு ஒரு அடிப்படை ஐயம்: இன்றிருக்கும் பொருளாதார மந்தநிலையில் இவ்வளவு பண விரயமும் அரசு பணி முடக்கமும் தேவையா ? தேர்தல்களை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போடக் கூடாதா ? வேண்டுமானால் ஆளும்கட்சியும் எதிர்கட்சிகளும் இணைந்து ஒரு CMP வைத்துக் கொள்ளலாமே ? அல்லது,அட.. சொன்னால் சுட்டுவிடப் பொவதில்லை, குடியரசுத் தலைவர் எமர்ஜென்சி அறிவிக்கலாமே :(

Unknown said...

இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசுறிங்கன்னு உள்ளே பிடிச்சுப் போட்டுடப் போறாங்க சார்...

//வியாழக்கிழமைகளை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்தது ஏன் என்று தெரியவில்லை..//

வெள்ளிக்கிழமைல நடந்தா மூணு நாளா லீவ்ல மக்கள் ஊரச் சுத்தப் போய்டுவாங்கன்னு தெரியும்ல

http://urupudaathathu.blogspot.com/ said...

///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நையாண்டி நைனா said...
இதில் "49-O" உண்டா?//

நிச்சயமா உண்டு..

ஆனால் தயவு செய்து இதனைப் பயன்படுத்தி உங்களது பொன்னான வாக்கை வீணாக்கிவிடாதீர்கள்.

அதிகப்பட்ச தகுதியுடையவர் யார் என்று பார்த்து, அவருக்கு ஓட்டளித்துவிடுங்கள்////


அதிகப்பட்ச தகுதி என்பதே இங்கு வெத்து தான்.. குறைந்தப்பட்ச தகுதி கூட இங்க யாருக்கும் கிடையாதுங்கோ....

அதனால 49- 0 தான் பெஸ்ட்.. ( அப்போ தான் இந்த சணியன் பிடிச்ச அரசியல்வாதிகள் தெரிந்துக்கொள்வார்கள்...)

Unknown said...

"//எல்லாம் வியாழக்கிழமை மயம்..!

ஏப்ரல், மே மாதங்களில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகள் வியாழக்கிழமையாகும். கடைசி கட்டத் தேர்தல் மட்டுமே மே 13-ம் தேதி புதன்கிழமை நடக்கிறது. வியாழக்கிழமைகளை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்தது ஏன் என்று தெரியவில்லை..//"

குரு'வாரம் ஆகா இருக்குமோ ?

உண்மைத்தமிழன் said...

//தமிழர் நேசன் said...
சுவாரசியமான பதிவு... மீண்டும் படித்துவிட்டு பின்னோட்டம் இடுகிறேன்...//

அட முருகா.. நான் எழுதியிருக்கிறதே ரெண்டே கால் பக்கம்தான்.. இதை படிக்க இன்னொரு வாட்டி வர்றீங்களா.. சரி.. போங்க.. போங்க..

//இப்போது மனிதாபிமானிகள் மத்தியில் பரபரப்பாக உள்ள விஷயம் பற்றி எனது பதிவில்.. நேரம் இருந்தால் வரலாம்..
http://kottumurase.blogspot.com/2009/03/blog-post_03.html//

இதைவிட வேறென்ன பெரிய வேலை..? வர்றேன்.. வர்றேன்..

உண்மைத்தமிழன் said...

///நித்யகுமாரன் said...
//இனி மேடைகளில் "உங்கள் வீட்டுக்கு கிணற்றில் இருந்து தண்ணி சுமந்து வந்து ஊத்துவோம்..” என்றுகூட வாக்குறுதிகள் வழங்கப்படும்.. நம்புபவர்கள் வாசலில் குடத்தோடு காத்திருக்கலாம்.. மக்களே.. வேறு வழியில்லை..//
வேறு வழியே இல்லை...
நித்யன்///

நீயுமா தம்பீ..?!

உண்மைத்தமிழன் said...

//Venky said...
Why kovam, better start a political party :)//

நான் ரெடி.. கோஷம் போடவாச்சும் ஆள் வேணுமா..? நீங்க வர்றீங்களா வெங்கி..?

உண்மைத்தமிழன் said...

///நையாண்டி நைனா said...
//நையாண்டி நைனா said...
இதில் "49-O" உண்டா?//
நிச்சயமா உண்டு.. ஆனால் தயவு செய்து இதனைப் பயன்படுத்தி உங்களது பொன்னான வாக்கை வீணாக்கிவிடாதீர்கள். அதிகப்பட்ச தகுதியுடையவர் யார் என்று பார்த்து, அவருக்கு ஓட்டளித்துவிடுங்கள்..*/
உங்க கணிப்பிலே, இப்போதைக்கு அப்படி ஒரு கட்சியை சொல்லுங்க பார்போம்? வேண்டாம், வேண்டாம், ஒரு ஆளை சொல்லுங்க பார்போம்.//

தேடித்தான் பார்க்க வேண்டும். ஆனால் ஆட்கள் நிறுத்தப்பட்ட பின்பு அவர்களில் ஒருவரை இப்படி தகுதி பார்த்து தேர்வு செய்யலாம் என்பது எனது அபிப்ராயம்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ஓட்டுப் போட்டால் கொள்ளையருக்குத் துணை போவது போல்தான். போடாவிட்டால் ஜனநாயக விரோதி.
வழி என்ன? சொல்லுவீர்களா?
கொள்ளை போகும் தேசபக்தன்//

போடாமல் இருக்காதீர்கள் என்றுதான் சொல்கிறேன்..

நிற்பவர்களில் யார் பரவாயில்லை என்று ஆராய்ந்து பார்த்து அவருக்கு வாக்களியுங்கள்..

உண்மைத்தமிழன் said...

//pukalini said...
நீங்கள் தேர்தலில் நில்லுங்கள். கண்டிப்பா ஏதாவது மாற்றம் வரும். செலவுக்கு எல்லோருமாச் சேர்ந்து பணம் தரலாம். இப்பொழுது செய்யாவிட்டால் எப்பொழுது? எனக்கு உங்களில் நம்பிக்கை இருக்கிறது. வித்தியாசமா ஏதாவது பண்ணனும். ஆரம்பியுங்கள். அணிவகுக்க பலர் தயாராக உள்ளார்கள். இப்பொழுது உள்ள வேகத்தையும், விவேகத்தையும் பயன்படுத்துங்கள். துணை தர தோழர்கள் பலருண்டு. நிச்சயம் இது காமெடி இல்லை. கொஞ்சூண்டு யோசியுங்கள். எதுதான் முடியாதது? வேட்டி கட்டத் தெரியாததுகளும், டெல்லி எங்கே இருக்கென்று வரை படத்திலே காட்டத் தெரியாததுகள் எல்லாம் போகும் போது ஒரு இந்தியனால் முடியாதா?//

புகழினி.. என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றிகள்.. முடிகிற காரியமா..?

செய்து பார்க்கலாம். அவ்வளவுதான்.

உண்மைத்தமிழன் said...

//மணியன் said...
எனக்கு ஒரு அடிப்படை ஐயம்: இன்றிருக்கும் பொருளாதார மந்தநிலையில் இவ்வளவு பண விரயமும், அரசு பணி முடக்கமும் தேவையா? தேர்தல்களை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போடக் கூடாதா? வேண்டுமானால் ஆளும்கட்சியும் எதிர்கட்சிகளும் இணைந்து ஒரு CMP வைத்துக் கொள்ளலாமே ? அல்லது, அட.. சொன்னால் சுட்டுவிடப் பொவதில்லை, குடியரசுத் தலைவர் எமர்ஜென்சி அறிவிக்கலாமே:(//

அதெப்படி? அப்புறம் எப்படி எம்.பி.க்கள் மந்திரியாவது.. மந்திரிகள் போட்ட காசை அள்ளுவது..

என்ன பேச்சு பேசுறீங்க மணியன்.. நீங்க ஒரு உண்மையான இந்தியனா..? இப்படியா ஆசைப்படுறது..? இதெல்லாம் நம்மை மாதிரி அடிமைகள் நினைச்சுக்கூட பார்க்கக் கூடாத விஷயம்..

உண்மைத்தமிழன் said...

///KVR said...
இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசுறிங்கன்னு உள்ளே பிடிச்சுப் போட்டுடப் போறாங்க சார்...///

அடப் போங்க ஸார்.. இப்பல்லாம் உள்ள போறதும், வெளில வர்றதும் ரொம்ப ஈஸிதான்..

//வியாழக்கிழமைகளை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்தது ஏன் என்று தெரியவில்லை..//
வெள்ளிக்கிழமைல நடந்தா மூணு நாளா லீவ்ல மக்கள் ஊரச் சுத்தப் போய்டுவாங்கன்னு தெரியும்ல.//

அட ஆமாம்.. இது ஏன் என் மரமண்டைக்கு அப்பவே தோணலை..

சரியாக கணித்தமைக்கு நன்றிகள் ஸார்..

உண்மைத்தமிழன் said...

///உருப்புடாதது_அணிமா said...
//உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
/நையாண்டி நைனா said...
இதில் "49-O" உண்டா?/
நிச்சயமா உண்டு.. ஆனால் தயவு செய்து இதனைப் பயன்படுத்தி உங்களது பொன்னான வாக்கை வீணாக்கிவிடாதீர்கள். அதிகப்பட்ச தகுதியுடையவர் யார் என்று பார்த்து, அவருக்கு ஓட்டளித்துவிடுங்கள்/

அதிகப்பட்ச தகுதி என்பதே இங்கு வெத்துதான்.. குறைந்தப்பட்ச தகுதிகூட இங்க யாருக்கும் கிடையாதுங்கோ. அதனால 49-0தான் பெஸ்ட்..(அப்போதான் இந்த சணியன் பிடிச்ச அரசியல்வாதிகள் தெரிந்துக்கொள்வார்கள்...)///

உருப்படாதது ஸார்..

கொஞ்சம் யோசிங்க..

ஏதாவது ஒரு தொகுதில ஒரு பத்து ஓட்டு, இருபது ஓட்டுல குறைந்தபட்சம் நல்லது செய்ய நினைக்குறவங்க தோத்துப் போனாங்கன்னு வைச்சுக்குங்க அதுவே நமக்கு கெட்டதுதானே..

ரெண்டு பேர்ல அதிகபட்சம் நல்லவங்க யாருன்றதை பார்த்து அவங்களுக்கு போட்டுத் தொலைச்சா, ஒருவேளை நம்மளால அவங்க ஜெயிச்சாலும் நமக்கு கொஞ்சுண்டூ நல்லதுதானே..

அதுனாலதான் சொல்றேன்.. உங்க முடிவை தயவு செய்து மாத்திக்குங்க.

உண்மைத்தமிழன் said...

///ஆகாயமனிதன்.. said...

//எல்லாம் வியாழக்கிழமை மயம்..!

ஏப்ரல், மே மாதங்களில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகள் வியாழக்கிழமையாகும். கடைசி கட்டத் தேர்தல் மட்டுமே மே 13-ம் தேதி புதன்கிழமை நடக்கிறது. வியாழக்கிழமைகளை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்தது ஏன் என்று தெரியவில்லை..//"

குரு'வாரம் ஆகா இருக்குமோ?///

இருக்கலாம்.. குரு இப்போதைக்கு யாருக்கு அருள் பாலிக்கப் போகிறார் என்று தெரியவில்லையே..!

மக்களுக்கா..? அரசியல் கட்சிகளுக்கா..!?

குருவே காப்பாற்றுவீராக..!

kankaatchi.blogspot.com said...

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று தமிழில் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.
யார் இலவசங்களை அள்ளி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் வோட்டு விழும்

கொடும்பாவி-Kodumpavi said...

தவமுக தலைவர் வாழ்க.. அட உங்களத்தான் சொல்றேன் உண்மைதமிழன்.
- கொடும்பாவி

உண்மைத்தமிழன் said...

//enpaarvaiyil said...
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று தமிழில் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.
யார் இலவசங்களை அள்ளி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் வோட்டு விழும்.//

நிச்சயமாக ஸார்..

மக்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் போலும்..!

நீ என்ன வேண்ணாலும் சம்பாதிச்சுக்க.. ஆனா எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்திரு..

ஒரு உடன்படிக்கை..

எங்க போய் முடியப் போகுதோ..?

உண்மைத்தமிழன் said...

//கொடும்பாவி-Kodumpavi said...
தவமுக தலைவர் வாழ்க.. அட உங்களத்தான் சொல்றேன் உண்மைதமிழன்.
- கொடும்பாவி//

கொடும்பாவி ஐயா,

இதையெல்லாம் உன்னிப்பா கவனிச்சிட்டீங்களா..?!

நல்லாயிருங்க..