05-03-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 மார்ச் மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1-ம் தேதி முதல் 8-ம் தேதிவரையிலும் பெண்கள் திரைப்பட விழா சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான மேல் விபரங்களை 044-24361224 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம்.. (கால தாமதமான செய்திக்கு பெரிதும் வருந்துகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்.. நானும் போகவில்லை)
16-03-2009 முதல் 19-03-2009 வரையிலும் இஸ்ரேல் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
திரையிடப்படவிருக்கும் திரைப்படங்கள்
16-03-09 - மாலை 6.30 மணிக்கு Turn Left At The End Of The World(2004)
17-03-09 - மாலை 6.30 மணிக்கு Someone To Run With(2006)
18-03-09 - மாலை 6.15 மணிக்கு Aviva My Love(2006)
இரவு 8 மணிக்கு Big Eyes(1974)
19-03-09 - மாலை 6.30 மணிக்கு Colombian Love (2004)
இரவு 7.45 மணிக்கு Band's Visit (2007)
இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் திரையிடப்படும்.
21-03-09 அன்று இந்தோ-ஸ்லோவக் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாடு செய்திருக்கும் MUSIC CONCERT நிகழ்ச்சி மியூஸிக் அகாடமி அரங்கில் நடைபெறவுள்ளது.
23.03.2009 முதல் 26-03-2009 வரையிலும் ஸ்பானிஷ் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
திரையிடப்படவிருக்கும் திரைப்படங்கள்
23.03.09 - மாலை 6.15 மணிக்கு 13 Roses (2007)
24-03-09 - மாலை 6.30 மணிக்கு Fermat's Room (2007)
25.03.09 - மாலை 6.30 மணிக்கு Suso's Tower (2007)
26.03.09 - மாலை 6.30 மணிக்கு The Oxford Murders (2008)
இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் திரையிடப்படும்.
27-03-09 அன்று மாலை 6.30 மணிக்கு அமெரிக்க நடிகர் PAUL NEWMAN நடித்த அமெரிக்க திரைப்படம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் திரையிடப்படும்.
விருப்பமுள்ள திரை ஆர்வலர்கள் இந்த அமைப்பில் சேர்ந்து திரைப்படங்களைக் கண்டுணர்ந்து பயன் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்..
|
Tweet |
10 comments:
இத்தனை படங்களையும் பார்த்து முடித்தால்,அந்த மனிதரைச் சத்தியமாக நான் பார்க்க வேண்டும் சரவணன்
முடிந்தவரை பார்த்து விடுவேன்.
அனைத்தையும் பார்த்தால் ஷண்முகப்பிரியன் அய்யாவை சந்திக்கலாம்..
முயற்ச்சிக்கிறேன்.
frida வரும்னு எதிர்பார்த்தேன்!
அருமையான படம்
பெண்கள் திரைப்பட விழா !
பெண்கள் மட்டும் தான் கலந்துக்கணுமா ?
அருமையான தகவல்.
அன்புடன், கி.பாலு
//ஷண்முகப்ரியன் said...
இத்தனை படங்களையும் பார்த்து முடித்தால்,அந்த மனிதரைச் சத்தியமாக நான் பார்க்க வேண்டும் சரவணன்//
விரைவில் சந்திப்பீர்கள் ஸார்.. நூறு சதவிகிதம் கியாரண்டி தருகிறேன்..
காத்திருங்கள்..
//வண்ணத்துபூச்சியார் said...
முடிந்தவரை பார்த்து விடுவேன்.
அனைத்தையும் பார்த்தால் ஷண்முகப்பிரியன் அய்யாவை சந்திக்கலாம்..
முயற்ச்சிக்கிறேன்.//
ஐயோ முருகா.. எனக்குப் போட்டியா..?
//வால்பையன் said...
frida வரும்னு எதிர்பார்த்தேன்!
அருமையான படம்.//
வாலு..
ஸ்பானிஷ் படமா? இஸ்ரேல் படமா..?
//ஆகாயமனிதன்.. said...
பெண்கள் திரைப்பட விழா! பெண்கள் மட்டும்தான் கலந்துக்கணுமா?//
அதெல்லாம் இல்ல ஸார்..
யார் வேண்ணாலும் கலந்துக்கலாம்..!
//மடல்காரன்_MadalKaran said...
அருமையான தகவல்.
அன்புடன், கி.பாலு//
நன்றி பாலு ஸார்..
Post a Comment