ஒரு நிமிடம்தான்..! ஆனால் என்ன விலை..?!

05-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேஷனல் ஜியாகிரபிக் சேனலும், டிஸ்கவரி சேனலும்தான் சீரியல் நேரங்களில் நம்மைக் காப்பாற்றும் தெய்வங்கள். இவர்கள் இல்லாவிடில் இரவு நேரங்களில் வீட்டில் இருக்கவே முடியாது..

அன்றைக்கு நேஷனல் ஜியாகிரபிக்கில் தென் தமிழ்நாட்டில் நடைபெறும் சேவல் சண்டையைப் பற்றிக் காட்டினார்கள்.


அந்தச் சேவலை வளர்ப்பது எப்படி? எவ்வளவு தீனி போட வேண்டும்? என்ன மாதிரியான தீனி போட வேண்டும்? என்பதையெல்லாம் கோழியின் உரிமையாளர்கள் விலாவாரியாக விளக்கிச் சொன்னார்கள்.

அந்தக் கோழியை எப்பவும் சீண்டிக் கொண்டேயிருக்க வேண்டுமாம். அப்போதுதான் அந்தக் கோழி சண்டைக் கோழியாக இருக்குமாம்.. சாதாரண கோழிக்குத்தான் முதலில் தீனி போடுவார்களாம். அதன் பின்புதான் சண்டைக் கோழிக்காம்.. அப்போதுதான் அதற்குள் கோபம் ஏற்பட்டு சாதா கோழியை விரட்டிவிட்டு சாப்பிடுமாம்.. அந்த விரட்டல், மிரட்டல் குணத்தை இப்படித்தான் உருவாக்குகிறார்களாம்..

இதைப் பார்த்த பின்னாடி, கடவுள் எல்லாத்தையும் நல்லாத்தான், ஒரே மாதிரிதான் படைச்சான். நம்ம பயபுள்ளைகதான் அவனவன் வசதிக்காகவும், வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும் ஒண்ணொண்ணையும் அடிமைப்படுத்த ஆரம்பிச்சான். அதான் தண்டனையையும் சேர்த்து அனுபவிக்கிறான்னு எனக்குத் தோணுது..

இதில் ஒரு இடத்தில் சாதா கோழியைக் காட்டியபோது ஒரு சம்பவம்..

தாய்க்கோழி ஒன்று, தனது சிறிய குஞ்சுகளுடன் குப்பை மேட்டைக் கிளறிக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு நாய் திடீரென்று ஒரு குட்டியை வாயில் கவ்வ.. தாய்க்கோழி ஆக்ரோஷத்துடன் தனது சிறகை விரித்து அந்த நாயின் மேல் விழுந்து கொத்தத் துவங்கியது.. ஆனாலும் நாய் குஞ்சை விடாமல் தூக்கிக் கொண்டு ஓட.. தாய்க்கோழியும் விடாமல் துரத்திச் சென்று கொத்த.. ஒரு சில வினாடிகளில் குஞ்சை கீழே போட்டுவிட்டு நாய் ஓடிவிட்டது. கோழிக்குஞ்சு இறந்து கிடந்தது. கோழி தனது குஞ்சை காலால் எத்திப் பார்த்தது. குஞ்சு காலி என்பதை உணர்ந்ததும் மெல்ல விலகி மறுபடியும் குப்பையைக் கிளறப் போய்விட்டது.


எதிர்ப்பு ஒரு நிமிடமாகவே இருக்கட்டும்.. ஆனால் அந்த உணர்விற்கு என்ன விலை..? எப்படி மதிப்பிடுவது..?

தாய்ப்பாசம் தாய்ப்பாசம்தான்..!

என்ன சொல்றீங்க..!?

16 comments:

மடல்காரன்_MadalKaran said...

உணர்வுக்கு விலை ஏது?
அன்புடன், கி.பாலு

வால்பையன் said...

அம்மான்னா சும்மா இல்லடா!
அவ இல்லைனா யாரும் இல்லடா!

எல்லா விலங்கினங்களுக்கும் ஒரே ஒற்றுமை அம்மாவின் பாசம் தானே!

உண்மைத்தமிழன் said...

//மடல்காரன்_MadalKaran said...
உணர்வுக்கு விலை ஏது?
அன்புடன், கி.பாலு//

கோழிக்கு இருக்குற அந்த உணர்வுகூட மனிதர்களில் சிலருக்கு இல்லையே ஸார்..!

உண்மைத்தமிழன் said...

//வால்பையன் said...
அம்மான்னா சும்மா இல்லடா!
அவ இல்லைனா யாரும் இல்லடா!//

இது ஒண்ணும் ஜெயலலிதாவோட உண்ணாவிரத அறிவிப்பை பார்த்துட்டு போட்ட பின்னூட்டம் இல்லியே..!

//எல்லா விலங்கினங்களுக்கும் ஒரே ஒற்றுமை அம்மாவின் பாசம்தானே!//

அப்பாடா தப்பிச்சேன்..

இந்தப் பதிவைப் பத்தித்தான் எழுதியிருக்கீங்க..

நன்றி வாலு.

ILA (a) இளா said...

இந்த வருசம் உங்க பதிவுகள் எல்லாமே பட்டைய கெளப்புதுங்களே, என்னங்க விசேசம்?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தாயுணர்வில் மிருகங்கள் மனிதரை விட மேல்...
தண்டித்த மனிதத் தாயைக் கண்டிருப்பீர்கள்...மிருகத்தாயை!!!!????

Arun Kumar said...

நல்ல பதிவு.
அந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யும் நேரம் தெரிந்தால் சொல்லவும்

உண்மைத்தமிழன் said...

//ILA said...
இந்த வருசம் உங்க பதிவுகள் எல்லாமே பட்டைய கெளப்புதுங்களே, என்னங்க விசேசம்?//

அனுபவம் அப்படி கிடைக்குது இளா..!

உண்மைத்தமிழன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
தாயுணர்வில் மிருகங்கள் மனிதரை விட மேல்... தண்டித்த மனிதத் தாயைக் கண்டிருப்பீர்கள்... மிருகத்தாயை!!!!????//

இதுவரையிலும் கண்டதில்லை யோகன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//Arun Kumar said...
நல்ல பதிவு. அந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யும் நேரம் தெரிந்தால் சொல்லவும்.//

கண்டிப்பாகச் சொல்கிறேன் தம்பீ..

ILA (a) இளா said...

இப்படித்தான் ஒரு தாயை கட்டிப்போட்டு மகளை.... ____. அப்புறம் எதுக்கு பிரச்சினைன்னு தாயையும் கொன்னுட்டாங்களாம்.. சில மனிதர்கள்

உண்மைத்தமிழன் said...

//ILA said...

இப்படித்தான் ஒரு தாயை கட்டிப்போட்டு மகளை.... ____. அப்புறம் எதுக்கு பிரச்சினைன்னு தாயையும் கொன்னுட்டாங்களாம்.. சில மனிதர்கள்//

இவர்கள் மனிதர்கள் அல்ல.. மனித வடிவில் உள்ள மிருகங்கள்..!

Anonymous said...

படத்தில் இருக்கும் குஞ்சுகள் கோழிக் குஞ்சுகள் மாதிரித் தெரியலையே?

உண்மைத்தமிழன் said...

//pukalini said...
படத்தில் இருக்கும் குஞ்சுகள் கோழிக் குஞ்சுகள் மாதிரித் தெரியலையே?//

எனக்கும் அப்படித்தான் தோணுச்சு..

ஒருவேளை கோழில ஒரு வெரைட்டியா இருக்குமோ..!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்படத்துக்கு ஒரு விளக்கம்!
நான் அறிந்தவரையில் வளர்ப்பு வாத்தினங்கள் அடைகாப்பதில்லை. அதனால் வாத்துமுட்டைகளைக்
கோழி மூலமே அடைகாத்து குஞ்சு பொரிக்கவைப்பது கிராமிய முறை... வாத்து முட்டை அடை வைத்த
7 ஆம் நாள் சில கோழிமுட்டைகளையும் அடைவைப்பது வழமை. சரியாக 28 நாள் குஞ்சுகள் பொரிக்கும்; அந்த வயதில் தாய்க்கு வித்தியாசம் தெரியாமல் பராமரிக்கும் - ஒன்று அல்லது ஒன்றைரை மாதத்தில் வாத்துக்குஞ்சுகள் நீர்ப் பிரியர்களானதால் தாயைப் பிரிந்தே வாழப் பழகிவிடும்.
அதனால் இப்படத்திலுள்ளது... இக் குஞ்சுகள் பொரிப்பதற்குக் காரணமாக இருந்த தாயே...
எனது சொந்த அனுபவதை வைத்து இதைக் கூறுகிறேன்.

உண்மைத்தமிழன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்படத்துக்கு ஒரு விளக்கம்!
நான் அறிந்தவரையில் வளர்ப்பு வாத்தினங்கள் அடைகாப்பதில்லை. அதனால் வாத்துமுட்டைகளைக்
கோழி மூலமே அடைகாத்து குஞ்சு பொரிக்கவைப்பது கிராமிய முறை... வாத்து முட்டை அடை வைத்த
7 ஆம் நாள் சில கோழிமுட்டைகளையும் அடைவைப்பது வழமை. சரியாக 28 நாள் குஞ்சுகள் பொரிக்கும்; அந்த வயதில் தாய்க்கு வித்தியாசம் தெரியாமல் பராமரிக்கும் - ஒன்று அல்லது ஒன்றைரை மாதத்தில் வாத்துக்குஞ்சுகள் நீர்ப் பிரியர்களானதால் தாயைப் பிரிந்தே வாழப் பழகிவிடும்.
அதனால் இப்படத்திலுள்ளது... இக் குஞ்சுகள் பொரிப்பதற்குக் காரணமாக இருந்த தாயே...
எனது சொந்த அனுபவதை வைத்து இதைக் கூறுகிறேன்.//

உண்மைதான் ஜோகன்..

அவசரமாக படத்தினை கூகிளில் தேடி இட்டதில் இந்த ஒரு படம் மட்டுமே பளிச்சென்று இருநதது. அதனால் பாதகமில்லை என்று சொல்லி போட்டுவிட்டேன்..

நீங்கள் சொல்வதிலும் உண்மையிருக்கும் என்றே நம்புகிறேன்..