06-03-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நேற்றையவரையிலான தேர்தல் பற்றிய விஷயங்களைத் தொகுத்துள்ளேன்..
மேற்கு வங்கம்
சென்ற பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதீய ஜனதாவோடு கூட்டணி வைத்திருந்த திருணாமூல் காங்கிரஸ், இப்போது திடீரென்று காங்கிரஸுடன் கூட்டணி வைக்க ஒத்துக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு திடீர் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
மார்க்சிஸ் கட்சியோ, மக்கள் செல்வாக்கில் குறைச்சல் என்று கணக்கிட்டு இந்த முறை எம்.பி.யாக இருப்பவர்களில் 8 பேருக்கு சீட் கொடுப்பதாக இல்லை என்று முடிவெடுத்துள்ளதாம். கூடவே ஒரு அரசியல் ராஜதந்திரத்தையும் செய்திருக்கிறது. ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிடப் போகும் ஆக்ட்டிங் பிரைம் மினிஸ்டர் பிரணாப்முகர்ஜி மிக எளிதாக ஜெயிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளதாம். பிரணாப் மேற்கு வங்கத்திற்கு நிறைய உதவிகளைச் செய்திருப்பதால் இது பதில் மரியாதையாம்..
பிரணாப்பிற்கு எதிராக அந்த ஊரின் நகராட்சித் தலைவர் மிரிகங்க பட்டாச்சார்ஜியை நிறுத்த முடிவு செய்துள்ளதாம். இவரை நிறுத்தினால், பிரணாப் தொகுதிக்கு வரவே வேண்டாம்.. ஜெயித்தது போல்தான் என்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்..
இந்த மாதிரியான கம்யூனிஸ ராஜதந்திரத்தை மேற்கு வங்க கம்யூனிஸ்ட்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? மார்க்ஸா, ஏங்கெல்ஸா? லெனினா..? ஸ்டாலினா..? யோசிக்க வேண்டிய கேள்விதான்..
மகாராஷ்டிரா
இங்கே காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சீட்டு தள்ளமுள்ளுவில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த இடைவெளியில் பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் முந்திக் கொண்டு தங்களுக்குள் உடன்படிக்கையை செய்துகொண்டு விட்டன. இதன்படி மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 26 தொகுதிகளில் பாரதீய ஜனதாவும், 22 தொகுதிகளில் சிவசேனாவும் போட்டியிடப் போகின்றன.
அசாம்
பாரதீய ஜனதா கட்சி காங்கிரஸை முந்திக் கொண்டு பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் கூட்டணியை அமைத்துக் கொண்டிருக்கிறது. அதன்படி அசாமில் அசாம் கணபரிஷத் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்துள்ளது பி.ஜே.பி. 8 தொகுதிகளில் பி.ஜே.பியும், 6 தொகுதிகளில் அசாம் கணபரிஷத்தும் போட்டியிடப் போகின்றன.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் முலாயம்சிங்கின் சமாஜ்வாதிக் கட்சிக்கும் இடையேயான தேர்தல் ஒப்பந்தம் இழுபறியில் இருக்கிறது. ஒரு காலத்தில் மாநிலத்தையே ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ், இன்றைக்கு முலாயமின் பின்னால் ஒளிந்து கொண்டு மக்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயம். அமர்சிங்கையும், முலாயமையும் கண்டுகொள்ளாமல் துரத்திய காங்கிரஸ் தலைமைக்கு, இன்றைக்கு அவர்களையே விருந்தாளிகளைப் போல் வரவழைத்து பேச வேண்டிய துர்பாக்கியம்.. ஓடமும் ஒரு நாள் கரையேறுமே..!
காங்கிரஸ் 25 தொகுதிகளை எதிர்பார்க்க, சமாஜ்வாதியோ “17 தர்றோம்.. வந்தா வா.. வராட்டி போ..” என்று மிரட்டியது. கடைசி கட்டமாக அமர்சிங்கையும், முலாயமையும் அன்னை சோனியாஜி வாசலில் வந்து நின்று வரவேற்றும் பலனில்லை. குடித்த காபிக்காககூட அமர்சிங் ஒரு தொகுதியைக்கூட விட்டுத் தர முன் வரவில்லையாம். ஸோ.. “என்னதான் நடக்கும்..? பார்த்துவிடுவோம்..!” என்கிற துணிச்சலில் 24 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார் அன்னை சோனியாஜி.
இந்த 2009 பாராளுமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் இதுவேயாகும்.
இந்தப் பட்டியலில் சோனியாவின் பெயரும், ராகுல்காந்தியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சோனியா ரேபரேலி தொகுதியிலும், ராகுல்காந்தி அமேதி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். காசியாபாத் தொகுதியில் சுரேந்திர பிரகாஷ் கோயல், அலிகார் தொகுதியில் பிஜேந்திரசிங், மதுரா தொகுதியில் மன்வேந்திரசிங், தவுராஹ்ரா தொகுதியில் ஜிதின்பிரசாதா, கான்பூர் தொகுதியில் பிரகாஷ் ஜெய்ஸ்வால், பஸ்கான் தொகுதியில் மகாவீர் பிரசாத், வாரணாசி தொகுதியில் ராஜேஷ் மிஸ்ரா என்று இப்போதைய எம்.பி.க்களையே மீண்டும் இதே தொகுதியில் நிறுத்துகிறது காங்கிரஸ்.
மேலும் பேகம்பூர் பானு(ராம்பூர்), ரத்னாசிங்(பிரதாப்கார்), சல்மான் குர்ஷித்(பரூக்காபாத்), பி.எல்.புனியா(பாராபங்கி), அன்னு டான்டன்(உன்னாவோ), போலாபாண்டே(சலீம்பூர்), சுதாராய்(கோஷி), ஹரேந்திர மாலிக்(முசாபர் நகர்), ராஜ்பாப்பர்(பதேபூர் சிக்ரி), பேனி பிரசாத் வர்மா(கோண்டா), தேவி தயாள்(புலாந்சகார்), பிரவீன்சிங் ஆரோன்(பரேலி) நிர்மல்கத்ரி(பைசாபாத்), ஜகதாம்பிகா பால்(தோமரியா கஞ்ச்), ஆர்.பி.என்.சிங்(குஷி நகர்) என்று இன்னும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது.
இந்தத் துணிச்சலை எண்ணி மாயாவதியும், பாரதீய ஜனதாவுமே கொஞ்சம் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். 24 தொகுதியில் நின்று ஜெயித்துவிடுவார்களா? எந்த நம்பிக்கையில் ஆட்களை நிறுத்தியிருக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது பந்து மறுபடியும் அமர்சிங், முலாயம்சிங்கின் வசம் வந்துவிட்டது. கூட்டணி இல்லை என்று சொல்லி காங்கிரஸை ஒரேயடியாக முறைத்துக் கொள்வதா அல்லது விட்டுப் பிடிப்பதா என்கிற குழப்பத்தில் இருக்கிறார் முலாயம். ஏனெனில் தப்பித் தவறி காங்கிரஸ் ஜெயித்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் தன் மீதுள்ள கேஸ்களிலிருந்து தப்பிப்பது முடியாத காரியம் என்றும், சோனியா இன்னொரு முறை தன்னை மன்னிப்பாரா என்று அவரும் நம்பாமல் இருக்கிறார். ஸோ, முலாயம் பணிந்து போகவே அதிகம் வாய்ப்புண்டு என்கிறார்கள்.
இதே உ.பி.யில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஜித்சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் இணைந்துள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது மாயாவதிதான்.. உ.பியின் உட் பகுதிகளில் விவசாயிகளிடம் அதிகம் செல்வாக்கானவர் அஜீத்சிங்.. அவரை காங்கிரஸிடமிருந்து பிரித்து வந்து மடக்கிப் போட்டுவிட்டது பாரதீய ஜனதா.
மாயாவதியோ தாழத்தப்பட்டோர், பழங்குடியினர் மசோதாவை நிறைவேற்றுவதற்காகவே தான் மத்தியில் பிரதமராக வேண்டும் என்கிறார். மேலும் சென்ற மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தான் செய்த அதே தில்லாலங்கடி வேலைகளை இப்போதும் செய்து வருகிறார். பிராமணர்களின் ஓட்டுக்களை அப்படியே லம்பமாக அள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் மாயாவதி. இந்தத் தேர்தலிலும் உ.பி.யில் பிராமணர்களின் ஓட்டு யாருக்கு விழுகப் போகிறதோ, அந்த அணியே அதிகத் தொகுதிகளை அள்ளும் என்கிறார்கள் அரசியல் கணிப்பாளர்கள்.
தமிழகம்
பாரதீய ஜனதா இந்த முறை அனைத்துத் தொகுதிகளிலும் ஆட்களை நிறுத்தி அல்லல்படுவதற்குப் பதிலாக ஜெயிக்க, வாய்ப்புள்ள சில தொகுதிகளில் மட்டும் நிறுத்தி ஒட்டு மொத்த தொண்டர்களையும் பிரித்தனுப்பி வெற்றிக்கு வழி காண்போம் என்று முடிவு செய்துள்ளதாம்.
9 முதல் 14 தொகுதிகள்வரையிலும் பாரதீய ஜனதா தமிழகத்தில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
தென் சென்னை தொகுதியில் இல.கணேசனே போட்டியிடப் போகிறாராம். வட சென்னையில் தமிழிசை செளந்தர்ராஜன், ராமநாதபுரத்தில் சந்தேகமே இல்லாமல் திருநாவுக்கரசர், நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ‚பெரும்புதூர் தொகுதியில் குமாரவேலு ஆகியோர் நிறுத்தப்படலாம் என்று அக்கட்சிக்காரர்களே பத்திரிகையாளர்களிடம் கிசுகிசுத்திருக்கிறார்கள்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் லலிதா குமாரமங்கலமோ, சுகுமாரன் நம்பியாரோ போட்டியிடப் போகிறார்களாம்.. இந்த 9 தொகுதிகள் தவிர, வேலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கள் உள்ளிட்ட தொகுதிகளிலும் பி.ஜே.பி. போட்டியிடும் போல் தெரிகிறது.
இப்போது 46 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதீய ஜனதாவின் தலைமை வெளியிட்டுள்ளது. அகில இந்திய அளவில் பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் நாகர்கோவிலில் இருந்துதான் துவங்கவிருக்கிறது. 7-ம் தேதி லால்கிஷன் அத்வானி அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறாராம்.. வாழ்க வளர்க..!
அஜீத்சிங்கின் கட்சி உ.பி.யில் பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதை அடுத்து அஜீத்சிங்கின் தமிழக ராஷ்ட்ரீய லோக்தளக் கட்சியினர் தமிழகத்தில் பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்து ஏதாவது சில தொகுதிகளில் போட்டியிடலாம் என்று முடிவு செய்துள்ளனராம்.
தி.மு.க.வில் வேட்பாளருக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.. உடன்பிறப்புகள் மிக ஆர்வமாக திரண்டு வந்து அறிவாலயத்தை பண மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுத் தொகுதிக்கு பத்தாயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கு ஐந்தாயிரமும், பெண் வேட்பாளர்களுக்கு ஐந்தாயிரம் என்றும் விண்ணப்பக் கட்டணங்கள் உள்ளன.
ஆனாலும் மதுரைத் தொகுதி கேட்டு யாராவது வந்தால் அன்பாக அவர்கள் விசாரிக்கப்படுகின்றனராம். மதுரையில் அண்ணன் அழகிரிதானாம்.. தென் சென்னையில் தொடர்ந்து 4 முறையும் வெற்றி பெற்றிருக்கும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, இந்த முறை ‚பெரும்புதூருக்குச் செல்கிறாராம். தென் சென்னையில் ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், வடசென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும் இன்றைய நிலவரப்படி களத்தில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
காங்கிரஸில் தேர்தல் பணிக்குழுவினர் என்று சொல்லி தங்கபாலு நேற்று ஒரு லிஸ்ட் வெளியிட்டார். காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே அதில் இடம் பெற்றுவிட்டனர். இன்னும் அந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் சத்தியமூர்த்தி பவன் வாட்ச்மேனும், அங்கு வேலை செய்யும் பணியாட்களும்தான்..
ஆனாலும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கும் தலைவர்கள் லிஸ்ட்டில் அதிருப்தியடைந்த வாசன் சோனியாவிடம் புகார் செய்துள்ளார். பின்பு குலாம் நபி ஆசாத்தின் அறிவுறுத்தலில் அந்த லிஸ்ட் மறுபடியும் மாற்றப்பட இருக்கிறதாம். சந்தோஷம்தான்..
கூடவே கூட்டணிக் கட்சிகளிடம் சீட் பற்றி பேசுவதற்காக தங்கபாலு, இளங்கோவன், ப.சிதம்பரம், சுதர்சனம், வாசன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். இவர்கள்தான் தி.மு.க.வுடன் சீட் பற்றிப் பேசுவார்களாம்.. பேசட்டும்.. எத்தனை சீட் கொடுத்தாலும் காங்கிரஸ் ஜெயிப்பது உறுதி என்கிறார்கள் தொண்டர்கள். காரணம் தேர்தல் பணிக் குழுவில் இருக்கும் காங்கிரஸின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி.. போதாதா.. காங்கிரஸ் ஜெயிப்பது உறுதி..! எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..
பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி என்பதை இந்தத் தேர்தலுக்குள் முடிவு செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 7-ம் தேதியன்று சென்னையில் நடைபெறவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க மாநாட்டில்தான் முடிவு எடுக்கப்படும் என்று சிலர் சொல்கிறார்கள். மகன் தி.மு.க. பக்கம், அப்பா அ.தி.மு.க. பக்கம் என்று ஆளுக்கொரு பக்கமாக முகத்தைத் திருப்பியிருக்கிறார்கள். ஒரு சேர எப்போது பார்ப்பது..? ஆனாலும் யார் அதிக சீட்டு தருகிறார்களோ அவர்கள் பக்கமே செல்வது என்கிற ஒரே கொள்கையில், லட்சியப் பிடிப்பில் டாக்டர் இருப்பதால் இப்போது இவர் எந்தக் கூட்டணியில் இருப்பார் என்பது கலைஞர், ஜெயலலிதா இருவரின் கையில்தான் உள்ளது.
சென்னையும், டெல்லியும் இப்படி தேர்தல் வேலையில் மும்முரமாக இருக்க ஈழத் தமிழர்களுக்காக நடைப் பயணத்தில் இருக்கிறார் திருமாவளவன். நடைப்பயணத்தை முடித்த பின்பு அவர் அறிவாலயம் போவாரா அல்லது போயஸ் கார்டன் போவாரா அல்லது கியூபாவுக்கு போவாரா என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.. திருமாவின் கட்சிக்காரர்கள் தனித்தே நிற்கலாம் என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். திருமா என்ன செய்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இந்த நிமிடம்வரையிலும் தான் தி.மு.க. கூட்டணியில்தான் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் திருமா.
நம்ம கேப்டனின் மைத்துனரும், அக்கட்சியின் முதுபெரும் தலைவரும், தூணுமான சுதிஷ் சென்னை சாலிகிராமத்தில் கட்டியிருக்கும் புதிய வீட்டு கிரஹப்பிரவேசம் இன்று நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் கண்டிப்பாக பரிசுப் பொருளுடன் வந்து கலந்து கொள்ளும்படி பணிக்கப்பட்டுள்ளனராம். இந்த திறப்பு விழாவில் யாருடன் கூட்டணி என்பதை அண்ணியார் தெரிவித்துவிடுவார்கள் என்று விஜயகாந்தே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். நாமும் காத்திருப்போம்.
சட்டப் பேரவைத் தேர்தலைப் போல் அல்லாமல் தேசிய அங்கீகாரம் பெறாதக் கட்சிகளுக்கு ஒரே சின்னம் என்ற தகுதியைத் தர முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறிவிட்டதால் ஆந்திராவில் சிரஞ்சீவிக்கு வருத்தமோ வருத்தம். அந்தச் செய்தி கேட்டு ஆடிப் போயிருக்கும் கேப்டன் இப்போது முரசு சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இப்போது அவருடைய ஏக்கத்தில் முரசும் சேர்ந்துள்ளது.
புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் என்னென்னமோ செய்து பார்த்தும் பேச்சுவார்த்தைக்கு தன்னை யாரும் அழைக்காததால், கோபம் கொண்டு தனது பலத்தை நிரூபிக்க சென்னையில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளார். 8-ம் தேதி நடைபெறும் அந்தப் பேரணிக்குப் பின்பு யாராவது அழைப்பார்களா என்பதைக் காத்திருந்து பார்த்துவிட்டு பின்பு கூட்டணியா அல்லது தனித்து நின்று காசை கரியாக்குவதா என்பதை முடிவு செய்வாராம்.. செய்யட்டும்.. ஒண்ணும் தப்பில்லையே..! அப்படியாச்சும் பணம் வெளில வந்தா சரி..!
ஒரு லட்சம் தொண்டர்களுடன் வந்து தாய்க்கழகத்தில் இணையக் காத்திருந்த போட்டி மதிமுக தலைவர்கள் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் ஒரு லட்சம் பேரை அமர வைக்க சென்னையில் வசதியான மண்டபம் கிடைக்காததால், கலைவாணர் அரங்கத்தின் கொள்ளளவுக்கு ஏற்றபடியான தொண்டர்களுடன் தி.மு.க.வில் இணைய நாள் குறித்துவிட்டார்கள். வருகின்ற 17-ம் தேதி மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவர், தளபதி முன்னிலையில் தாய்க்கழகத்துடன் இணைகிறார்களாம். எல்.கணேசனுக்கும், செஞ்சியாருக்கு் எம்.பி. சீட்டு உறுதியாம். அதனை உறுதிப்படுத்திக் கொண்ட பின்புதான் இணைப்பு வேலையை நடந்ததாம்.. கலைஞரின் நல்ல மனது யாருக்கு வரும்..? எனக்குக் கண்களில் கண்ணீரே வருகிறது..!
கலைஞரை நினைத்து கண்ணீர் என்றால் போயஸ் தோட்ட ஆத்தாவை நினைத்தால் அழுகை, அழுகையாக வருகிறது. திடீரென்று இப்போதுதான் சந்திர மண்டலத்தில் இருந்து வந்ததைப் போல ஈழத்தில் அல்லல்படும் மக்களுக்காகத் தான் போராடப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த திடீர் ஞானதோயம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. 10-ம் தேதி அவரும், அவருடைய கட்சிக்காரர்களும் ஈழத்து மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்களாம்.. இருக்கட்டும். ஆனால் காவிரி நதி நீருக்காக நடந்த காமெடி உண்ணாவிரதம் போல் ஆகாமல் இருந்தால் நல்லது.
கூடவே இன்றைய காமெடி லிஸ்ட்டில் சேர்க்கும்படியாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டி தான் அக்கட்சியை கூட்டணியைவிட்டு வெளியே வரும்படி அழைக்கவில்லை என்றிருக்கிறார். எம்மாம் பெரிய சல்ஜாப்பு.. பின்ன எதுக்காகத்தான் காரணமே இல்லாமல் வேறொரு கூட்டணியில் இருப்பவர்களை “வெளில வா.. வெளில வா”ன்னு கூப்பிடணும்.. என்ன பைத்தியமா..?! கடைசியா நாம பைத்தியம் ஆனதுதான் மிச்சம்..
3-வது அணி - தேவகவுடாவின் காமெடி
தங்கத் தாம்பாளத் தட்டில் ஆட்சி என்னும் பொன் வாத்தை தூக்கிக் கொடுத்துவிட்டு பிரதமர் பதவிக்கான கனவில் எந்நேரமும் மிதந்து கொண்டிருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடா இன்னமும் தன்னுடைய காமெடி திட்டங்களை கைவிடவில்லை.
கர்நாடகாவில் வருகின்ற 12-ம் தேதி தும்கூர் என்னுமிடத்தில் 3-வது அணியின் பொதுக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். தற்போது மூன்றாவது அணியில் தெலுங்கு தேசம், அ.தி.மு.க., தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி, மதச்சார்பற்ற ஜனதா தளம், மதிமுக போன்ற கட்சிகள் சேர்ந்துள்ளனவாம்.. மாயாவதியை இழுக்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாகச் சொல்கிறார். மாயாவதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவரையும் ஒரு சேர இணைத்துவிடுவேன் என்று உறுதியுடன் நம்பிக்கையோடு இருக்கிறார். இரண்டு ஜான்ஸிராணி லட்சுமிபாய்களும் ஒன்று சேர்வார்கள் என்ற மூட நம்பிக்கை எனக்கில்லை. ஆனாலும் தேவேகவுடாவின் இந்த நம்பிக்கையை நாம் குலைக்க வேண்டாம்.. நல்லாயிருக்கட்டும்..!
(தேர்தல் ஸ்பெஷல் தொடரும்)
|
Tweet |
35 comments:
மிக்க நன்றி! எள்ளல் தொனியில் வாசிக்க ருசிகரமாக இருக்கின்றது.
suuuuuuuuuper........
nandri , kalakkal arumai keep going...
I heard that Thirunavukkarasar is planning to contest in Sivagangai. It seems, the seizable number of muslims in Ramanathapuram Dt is creating some doubts in his mind. His in-laws family are landlords in Ramanathapuram Dt and they happened to be in the good books of the people for a while. It seems, Aranthangi also come in Ramnad MP constituency. As far I know Thirunavukkarasar in dilemma in choosing between Sivagangai and Ramnad. -Krishnamoorthy
//கம்யூனிஸ ராஜதந்திரத்தை மேற்கு வங்க கம்யூனிஸ்ட்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? மார்க்ஸா, ஏங்கெல்ஸா? லெனினா..? ஸ்டாலினா..? யோசிக்க வேண்டிய கேள்விதான்..//
தோழர்கள் தோள்களில் உள்ள சுமை யாருக்கு தெரியும்
//தமிழ் பிரியன் said...
மிக்க நன்றி! எள்ளல் தொனியில் வாசிக்க ருசிகரமாக இருக்கின்றது.//
நன்றி தமிழ்பிரியன்..
//செந்தழல் ரவி said...
suuuuuuuuuper........//
நன்றிறிறிறிறிறிறிறிறிறிறி............
//Venky said...
nandri , kalakkal arumai keep going...//
இதென்ன அக்கிரமமா இருக்கு..?
வந்தததுக்கு நான்தான் நன்றி சொல்லணும்..
வர்றவங்கள்லாம் நன்றி சொல்றீங்க..!
//Anonymous said...
I heard that Thirunavukkarasar is planning to contest in Sivagangai. It seems, the seizable number of muslims in Ramanathapuram Dt is creating some doubts in his mind. His in-laws family are landlords in Ramanathapuram Dt and they happened to be in the good books of the people for a while. It seems, Aranthangi also come in Ramnad MP constituency. As far I know Thirunavukkarasar in dilemma in choosing between Sivagangai and Ramnad. -Krishnamoorthy//
உண்மைதான் ஸார்..
அவருடைய புதுக்கோட்டை தொகுதியை கொத்து புரோட்டா போட்டு பிரித்துவிட்டதால் வேறு வழியில்லாமல் அறந்தாங்கி தொகுதி உள்ளடக்கியிருக்கும் ராமநாதபுரம் தொகுதிக்கு வந்துள்ளார் திருநாவுக்கரசர்..
///சொல்லரசன் said...
//கம்யூனிஸ ராஜதந்திரத்தை மேற்கு வங்க கம்யூனிஸ்ட்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? மார்க்ஸா, ஏங்கெல்ஸா? லெனினா..? ஸ்டாலினா..? யோசிக்க வேண்டிய கேள்விதான்..//
தோழர்கள் தோள்களில் உள்ள சுமை யாருக்கு தெரியும்///
தோழர்கள் சென்ற தேர்தலில் பெற்ற அதே வெற்றியைத்தான் இப்போதும் பெறப் போகிறார்கள். அதில் எனக்கு சந்தேகமில்லை..
என்ன..? ஆதரவு ஓட்டு சற்றுக் குறையலாம்.. அவ்வளவுதான்..
அரசியலில் எனக்கு ஆர்வம் குறைவு என்றாலும் உங்கள் அனலிசிஸைப் பார்த்து மிரண்டு போய் விட்டேன் சரவணன்.அடேங்கப்பா..
dhoooooooool.
dhoooooooool.
//ஷண்முகப்ரியன் said...
அரசியலில் எனக்கு ஆர்வம் குறைவு என்றாலும் உங்கள் அனலிசிஸைப் பார்த்து மிரண்டு போய் விட்டேன் சரவணன். அடேங்கப்பா..//
என்ன ஸார் நீங்களும்..!
எல்லாம் தினசரித் தாள்களிலும், வாரப் பத்திரிகைகளிலும் வந்த செய்திகள்தான்..
அப்படியே தொகுத்து அளித்துள்ளேன்.. அவ்வளவுதான்..!
//SurveySan said...
dhoooooooool.//
சர்வேஸன் ஸார்.
மிக்க நன்றிங்கோ..
தலைவரே...
கலக்கலான காமெடியான அளப்பறையான அற்புதமான கட்டுரை.
தேர்தல் முடியறவரைக்கும் உங்ககிட்ட மட்டும் வந்து படிச்சிக்கிடலாம்னு முடிவே பண்ணிட்டேன். கழுகார் கிளியாரெல்லாம் தேவையில்லை போங்கோ...
பேரன்பு நித்யன்
உண்மைத்தமிழன் சார்.. பதிவுக்கு வரவும்.. ஒரு விஷயம் உள்ளது.!
அனைத்துலக தமிழ் பதிவர்கள் சார்பாக அன்பான் வேண்டுகோள்...
கலக்கல்.. சும்மா பிரிச்சு பின்னி எடுக்கறீங்க... பக்கம் பக்கமா போட்டு தள்ளுங்க தலை..
அப்படியே தயவு செய்து தேர்தல் வரை தொடரட்டும்.
தினமும் ஒரு பதிவு கண்டிப்பா இருக்கணும். ஒவ்வொரு மாநிலம் மற்றும் வேட்பாளராக தகவல் தர வேண்டும். கட்சிகளின் நிலவரம் உறுப்பினர் விபரம் இருந்தாலும் தப்பில்லை.. கருத்துகணிப்பு முடிவுகள் etc., etc., வரைபட குறிப்புகள் கொண்டு விளக்கவும் வேண்டுகிறோம்.
பி.கு: திடீரென உலக சினிமா பதிவை போட்டு என் வயித்தில புளிய கரைக்காதிங்க..
நானெல்லாம் அரசியல்லே உள்ள விஷயங்களை, நுட்பமான விஷயங்களை அறிய இப்ப தான் 'ஆ'னா,'ஆ'வன்னாவே போடுறேன். அதுக்கு உங்க பதிவு நல்லா ஆதரவு கொடுக்குது.
வேண்டுகோள்:
முந்தைய பதிவின் லிங்க் கொடுத்து பதிவிடவும். Continuity இருக்கும்.
//கூடவே கூட்டணிக் கட்சிகளிடம் சீட் பற்றி பேசுவதற்காக தங்கபாலு, இளங்கோவன், ப.சிதம்பரம், சுதர்சனம், வாசன் //
காங்கிரஸ் என்ன புல்லரிக்க வைக்குது!!
சீட் பத்தி இவங்க கிட்ட பேசவே ஒரு மேலிட பார்வையாளார் வெச்சுருகாங்க!! இவங்க எல்லோரும் சேந்து போனா எப்படி ஒரு காரியம் ஒருப்படும்??
சுவையாக இருந்து.. தொடருங்கள்.. ஆனால் தங்கள் ஆதரவு இதில் ஏதோ ஒரு கட்சிக்குத்தான், அந்த கட்சி எது தலைவரே??!
நிகழ்கால அரசியல் கூத்துக்களை நக்கல் நையாண்டியோடு அழகாக சொல்லியுள்ளீகள் அண்ணே
:)
அண்ணே தாவூ தீருது!
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியா பதிவப்போடுங்க!
//நித்யகுமாரன் said...
தலைவரே...
கலக்கலான காமெடியான அளப்பறையான அற்புதமான கட்டுரை.
தேர்தல் முடியறவரைக்கும் உங்ககிட்ட மட்டும் வந்து படிச்சிக்கிடலாம்னு முடிவே பண்ணிட்டேன். கழுகார் கிளியாரெல்லாம் தேவையில்லை போங்கோ...
பேரன்பு நித்யன்//
நன்றி தம்பி.. படிச்சா போதும்னு நினைக்கிறே..! ஏதாவது கட்சி ஆரம்பியேன்.. எனக்கு பொழப்பு ஓடும்ல..!
//தாமிரா said...
உண்மைத்தமிழன் சார்.. பதிவுக்கு வரவும்.. ஒரு விஷயம் உள்ளது.!//
வருகிறேன் தாமிரா..
//வண்ணத்துபூச்சியார் said...
அனைத்துலக தமிழ் பதிவர்கள் சார்பாக அன்பான் வேண்டுகோள்... கலக்கல்.. சும்மா பிரிச்சு பின்னி எடுக்கறீங்க... பக்கம் பக்கமா போட்டு தள்ளுங்க தலை.. அப்படியே தயவு செய்து தேர்தல்வரை தொடரட்டும். தினமும் ஒரு பதிவு கண்டிப்பா இருக்கணும். ஒவ்வொரு மாநிலம் மற்றும் வேட்பாளராக தகவல் தர வேண்டும். கட்சிகளின் நிலவரம் உறுப்பினர் விபரம் இருந்தாலும் தப்பில்லை.. கருத்துகணிப்பு முடிவுகள் etc., etc., வரைபட குறிப்புகள் கொண்டு விளக்கவும் வேண்டுகிறோம்.
பி.கு: திடீரென உலக சினிமா பதிவை போட்டு என் வயித்தில புளிய கரைக்காதிங்க..//
பூச்சியாரே..
தங்களது ஆர்வத்திற்கும், அறிவுரைக்கும் நன்றிகள்..
உலக சினிமா பதிவெல்லாம் நீங்க போடுறது.. நான் எழுதறது எல்லாமே சாதா சினிமாதான்..!
//நையாண்டி நைனா said...
நானெல்லாம் அரசியல்லே உள்ள விஷயங்களை, நுட்பமான விஷயங்களை அறிய இப்பதான் 'ஆ'னா,'ஆ'வன்னாவே போடுறேன். அதுக்கு உங்க பதிவு நல்லா ஆதரவு கொடுக்குது.//
நையாண்டி ஸார்..
அரசியலுக்குப் புதுசா.. பார்த்தா அப்படி தெரியலியே..!
//வண்ணத்துபூச்சியார் said...
வேண்டுகோள்: முந்தைய பதிவின் லிங்க் கொடுத்து பதிவிடவும். Continuity இருக்கும்.//
அடுத்தப் பதிவுல இருந்து போட்டுடறேன் ஸார்..!
மறந்து, மறந்து போகுது..!
///Bhuvanesh said...
//கூடவே கூட்டணிக் கட்சிகளிடம் சீட் பற்றி பேசுவதற்காக தங்கபாலு, இளங்கோவன், ப.சிதம்பரம், சுதர்சனம், வாசன் //
காங்கிரஸ் என்ன புல்லரிக்க வைக்குது!!
சீட் பத்தி இவங்ககிட்ட பேசவே ஒரு மேலிட பார்வையாளார் வெச்சுருகாங்க!! இவங்க எல்லோரும் சேந்து போனா எப்படி ஒரு காரியம் ஒருப்படும்??///
தனித்தனியா விட்டா புடிக்கிறது கஷ்டம். அதுனாலதான் மொத்தமா உக்கார வைச்சுட்டு அப்புறமா கச்சேரியை வைச்சுக்கப் போறாங்களாம்..!
பாருங்க கூத்தை.. என்னென்ன நடக்கப் போகுதுன்னு..!
//தமிழர் நேசன் said...
சுவையாக இருந்து.. தொடருங்கள்.. ஆனால் தங்கள் ஆதரவு இதில் ஏதோ ஒரு கட்சிக்குத்தான், அந்த கட்சி எது தலைவரே??!//
கம்யூனிஸ்டுகள் நிற்கின்ற தொகுதிகளில் அவர்களுக்கே ஓட்டு..
மிச்சத் தொகுதிகளில் குறைந்தபட்ச கொள்ளைக்காரர் யார் என்பதைப் பார்த்து அவருக்கே எனது ஓட்டு..!
//Boston Bala said...
:)//
நன்னி..!
//வால்பையன் said...
அண்ணே தாவூ தீருது! ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியா பதிவப் போடுங்க!//
வாலு..
தனித்தனிப் பதிவாப் போட்டா இதையே பத்துப் பதிவா பிரிக்கணும்.. அப்புறம் அத்தனைக்கும் பின்னூட்டம் போட்டே செத்திருவேன் நானு..!
//வால்பையன் said...
அண்ணே தாவூ தீருது! ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியா பதிவப் போடுங்க!//
இவரு உலக தேர்தலுக்கே ஒரே ஒரு பதிவுதான் போடுவாராம்ல!
Post a Comment