நீரா ராடியாவின் ஒலி நாடாக்கள் கூறும் உண்மையென்ன..?

22-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி விசாரிக்கப் போக.. அது இந்தியாவின் ஜனநாயக அமைப்பை கேலிக்கூத்தாக நினைக்குமளவுக்குப் போகும் என்று மன்மோகன்சிங்கும் அவருடைய அல்லக்கைகளுமே நினைத்திருக்க மாட்டார்கள்.

நீரா ராடியா என்ற அந்த இந்தியாவின் தலைசிறந்த புரோக்கரின் கைகளுக்குள் சிக்கியிருக்கும் அரசியல்வியாதிகள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பட்டியலிட்டால் பக்கம் போதாது போலிருக்கிறது..


அம்மணியின் திருவாய் ஜம்முதாவி எக்ஸ்பிரஸை போல நிறுத்தாமல் பேசியிருக்கிறது..! இந்தியாவின் அடுத்த அரசை அமர வைக்கும் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காரணத்தால்தான், இந்த அம்மணியின் ரேடியோ ஒலிபரப்பு நான் ஸ்டாப்பாக இருந்திருக்கிறது.

முதலில் இந்த டேப்புகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது..? யார் டேப்புகளை பதிவு செய்தது..? எப்படி இந்த டேப்புகள் வெளியில் லீக் ஆனது என்பதையெல்லாம் விசாரித்தால் பின்னணியில் காங்கிரஸ் கட்சியே இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்திய பின்பே சிபிஐ இந்த வழக்கை தானே எடுத்து விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. அப்போது அமைச்சராகவே இருந்தாலும் இவரைத் தொடர வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்பட்டு ராசாவின் பேச்சை டேப் செய்யும் அனுமதி பிரதமர் அலுவலகத்தில் இருந்துதான் சிபிஐக்கு கிடைத்திருக்கிறது.


ஸோ.. தன்னுடைய கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் முக்கியப் புள்ளியாகத் திகழும் கேபினட் அமைச்சரான ராசாவின் பேச்சுக்கள் அனைத்தும் டேப் செய்யப்படுகின்ற சூழலில்தான் தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது.

ஐந்து கட்டங்களாக நடந்து முடிந்த 15-வது லோக்சபா தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு கடந்தாண்டு மே 13 அன்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 16 அன்று நடந்தது. காங்கிரஸ் கூட்டணி வெற்றியடைந்த செய்தியும் அன்றைக்கே கிடைத்தது.

இந்தக் களேபரத்துக்கிடையில் இலங்கையில் இனவாத சிங்களப் பேரரசின் கொடும் தாக்குதலினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி தமிழ் ஈழ மக்கள் செத்து மடிந்தார்கள். மே 18-ம் தேதியன்று பிரபாகரன் இறந்ததாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டுவிட்டது. அன்றோடு தமிழ் ஈழத்துக்கான நான்காம் கட்டப் போரும் முடிவுக்கு வந்தது.

மே 19-ம் தேதியன்று தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டணி ஆட்சி பற்றி விவாதிக்க டெல்லி செல்கிறார். தனது குடும்பத்தினரை எப்பாடுபட்டாவது அமைச்சரவையில் இடம் பெற வைத்தே தீருவது என்கிற ஒரு அம்சக் கோரிக்கையோடு சோனியாவையும், மன்மோகனையும் சந்தித்துப் பேசுகிறார்.

எத்தனை சீட்டுக்கள் என்பதில்கூட காங்கிரஸுக்கு பிரச்சினையில்லை. ஆனால் யார், யாருக்கு என்பதில்தான் அவர்களுக்கு தலைவலி.. அத்தனை சொந்தங்களையும் கொண்டு போய் நிறுத்தி “இவங்க எல்லாருமே என் குடும்பந்தான்.. ஒருத்தருக்கு கொடுத்து, இன்னொருத்தருக்குக் கொடுக்கலைன்னா கோச்சுக்குவாங்க. என் மனசு தாங்க முடியாது” என்றெல்லாம் சீன் போட்டு அழுதார் கலைஞர்.

மே 20-ம் தேதியன்று மன்மோகன்சிங் டில்லி அரண்மனைக்குச் சென்று தற்போதைய ராணியிடம் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டு விண்ணப்பத்தினை சமர்ப்பித்தார். அங்கேயே அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதினால் மன்மோகன் வீடு திரும்புவதற்குள், மே 22 அன்று அவர் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

மன்மோகன்சிங் விண்ணப்பம் கொடுத்த 20-ம் தேதியில் இருந்து அரியணை ஏறிய 22-ம் தேதிவரையிலுமான காலக்கட்டத்தில் இந்த நீரா ராடியா என்னும் புரோக்கரின், எண்ணற்ற சித்துவேலைகள் மர்ம தேசமான டெல்லி அரசியலில் புகுந்து விளையாடியிருக்கிறது.

நான் சென்ற பதிவுகளில் ஆங்கிலத்தில் போட்டிருந்த அனைத்து உரையாடல்களும் நேற்று தமிழாக்கம் செய்யப்பட்டு பல்வேறு இணையத்தளங்களில் போடப்பட்டிருந்தன. இந்த ஸ்பெக்டரம் ஊழல் பற்றி தொடர்ச்சியாக நான் பல பதிவுகளைப் போட்டிருப்பதால், இந்தத் தமிழாக்கத்தையும் வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்குண்டு.

அதோடு கூடவே மே 20-ம் தேதியில் துவங்கி, நேரத்தை முன் வைத்து நீரா ராடியாவின் பேச்சுக்களை வரிசைப்படுத்தியுள்ளேன். இப்போது படித்துப் பார்த்தீர்களேயானால் இந்த பெண் புரோக்கர் எப்பேர்ப்பட்ட திறமைசாலி என்பதையும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அரசியல் செய்வதை எவ்வளவு லாவகமாச் செய்யும் திறன் படைத்தவர் என்பதும் புரியும்..! இந்த அம்மணியையும் தாண்டிய ஆண் அரசியல் புரோக்கர் யாரையாவது இந்தியாவில் அடையாளம் காட்டினால் தெரிந்து கொள்வேன். என்னளவில் வேறு யாருமில்லை.

வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல்

20.6.2009 -  மதியம் 12 மணி 09 நிமிடம் 59 விநாடிகள்

நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.

வீர்: அது சரி.

நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.

வீர்: ஆம்.

நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.

வீர்: சரி.

நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப் பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை. அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள். அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. "எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது' என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது, இல்லையா?

நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?

வீர்: ஆம்?

நீரா: அப்படியா?

வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.

நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.

வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரா: இதோ பார் நீரா,  எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேச முடியாது என்கிறார்.

வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீரா: ஆம், ஆம்.

வீர்: கேமரா முன் போவதற்கு முன் ஒத்திகை பார்க்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்..

வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் "கவுன்டர் பாயிண்ட்' பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.

நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.

வீர்: சரி.

நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.

வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில  பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.

நீரா: சரி.

வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்து விடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் உள்ளது. எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக் கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக் கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக் கூடாது. மன்மோகன்சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும்விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.

நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.

வீர்: சரி.

நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.

வீர்: அவற்றை நான் குறிப்பிட்டு  விடுகிறேன்...

நீரா: சரி.

வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்...

கனிமொழியுடன் - மே 21, 2009, காலை 8:41

கனிமொழி : ஹலோ

ராடியா : பிரதமர் காரியம் இன்னும் உறுதிப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இன்றும் அது பற்றிய விவாதங்களில்தான்  இருக்கிறார்கள்.

கனிமொழி : தொலைத் தொடர்புத் துறை எங்களுக்கு என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இனி அதில் மாற்றங்கள்..?

ராடியா : என்ன?

கனிமொழி : எங்களுக்குத் தொலைத் தொடர்பு என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆனால் அது ‘அவருக்குப்’ போய்விடக் கூடாது. ஏனென்றால் அவர் ஊடகங்களில் அப்படியான செய்திகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்.  (‘அவருக்கு’ என்பது தயாநிதி மாறன் என்பது வெளிப்படை)

ராடியா : நீங்கள் விமானத்திலிருந்தபோது அவர் அதை எல்லா ஊடகங்களிலும் வரவழைத்துக் கொண்டிருந்தார்.

கனிமொழி : ஆமாம். எனக்கு அது தெரியும்.

ராடியா : ஆனால் கனி, பிரதமர் இப்போது ராஜாவுடனும் பாலுவுடனும் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை, அவர்கள் என் மதிப்பிற்குரிய சகாக்கள் என அறிக்கை வெளியிட்டிருக்காரே.

கனிமொழி : அவர் அறிக்கை விடுவார். ஆனால் இது பற்றி அப்பாவிடம் பேச வருபவர்கள் மாற்றிப் பேசக் கூடாது. ஒருவர் வெளியே பேசுவதற்கும் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதும் வேறுபடும். அரசியலில் உள்ள நம்மனைவருக்குமே அது தெரியும்.

ராடியா : கனி, காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு தகவல். அவர்கள் சொல்வது: ‘திமுகவின் பிரச்சினைகள் அகப் பிரச்சினைகள். குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினைகள். அவர்களுடைய தலைவர்களுக்கிடையிலான பிரச்சினைகள். திமுக 5 அமைச்சரவைகளுக்கான பட்டியலைக் கொடுத்துள்ளது. அதை நாங்கள் ஏற்க முடியாது’

கனிமொழி : ஆமாம்.

ராடியா : ‘அவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைச் சொல்லிவிட்டோம்’.

கனிமொழி : மூன்றும் நான்கும் (அமைச்சரவைகள்)

ராடியா : ‘பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது என்பதை உணர்கிறோம். ஆனால் நாங்கள் அவர்களிடம் போக முடியாது. எங்களைப் பொறுத்தவரை, அரைமணிக்கொருமுறை மாறன் குலாம் நபி ஆசாதை அழைத்து என்னென்னவோ கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். எங்களை அழைப்பதில் பலன் இருக்காது என்று அவரிடம் சொல்லி விட்டார்கள்’.

கனிமொழி : அவருடைய கோரிக்கைகள் என்னவாம்?

ராடியா : எங்களுக்கு ஐந்து இடங்கள் தாருங்கள் என்று கேட்கிறார். அல்லது அமைச்சரவையில் சேர மாட்டோம் என்கிறார். இல்லையென்றால் ரயில்வே வேண்டுமாம். அல்லது நிலக்கரி மற்றும் கனிமவளம் வேண்டுமாம். எனவே அவர்கள் சொல்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இது திமுகவின் அகப் பிரச்சினை. காங்கிரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். யார் வேண்டும், வேண்டாம் என்பதைக் கருணா முடிவு செய்யட்டும். அதை அவரிடமே விட்டுவிட்டோம். அவரே முடிவு செய்யட்டும். ஆனால் மாறனைப் போல் பலர் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பர்கா தத் (என்.டி.டி.வி. செய்திக் குழும ஆசிரியர்) - நீரா ராடியா உரையாடல்

22.5.2009  காலை 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்

நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால் - அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித் தொடர்பு இருக்கிறது.

பர்கா: ஆம்.

நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.

பர்கா: ஆம்.

நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய  மிகப் பெரிய பிரச்னை.

பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றி விடுவாரா?

நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.

பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?

நீரா: இல்லை. அது பற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.

பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க. கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.

நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.

பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன் வந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது.  தி.மு.க. ஒப்புக் கொள்ளுமா?

நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக் கொண்டால் மாறனைக் கைவிட வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.

பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல்கூட மிகக் குறுகிய நேரமே நடந்தது - இரண்டு நிமிடங்கள் - கனிமொழிதான் மொழி பெயர்த்தார்.

பர்கா: சரி.  அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை(பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.

நீரா: அவர்(கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...

பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.

நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.

பர்கா: கனியும்கூட இருந்து கலந்து கொண்டால் என்ன?

நீரா: அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்து கொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.

ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல்

22.5.2009 - 9.49 

நீரா: ஹலோ?

ராசா: ராசா பேசுகிறேன்.

நீரா: ஹாய்! இப்போதுதான் பர்காதத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.

ராசா: ஆ?

நீரா: பர்கா தத்

ராசா: அவர் என்ன சொல்கிறார்?

நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு(மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர்.பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.

ராசா: ... ஆனால் தலைவருடன் இது பற்றி விவாதிக்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.

ராசா: காலையில் இது பற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... (ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.

நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?

ராசா: ஆ?

நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும்போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.

ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...

ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: தனியாகவா?

ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.

நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?

ராசா: ஆம்.

நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.

ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...

கனிமொழியுடன் ராடியா பேச்சு

22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்

கனிமொழி: ஹலோ

நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...

கனி: ம்ம்

நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...

கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?

நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...

கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.  அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?

நீரா: வந்தார்களா இல்லையா..? சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.

கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக் கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.

நீரா: ம்ம்..  ...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.

நீரா: ஓகே.

கனி: தயவு செய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லி விடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.

பர்கா தத்துடன் ராடியா பேச்சு

22.5.2009 காலை 10  மணி 47 நிமிடம் 33 விநாடிகள்

பர்கா: ஆ, நீரா?

நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.

நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத் துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத்துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் தரலாம் என்றார். தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?
 
அ.ராசாவுடன் ராடியா பேச்சு
 
22.5.2009  - மதியம் 2 மணி 29 நிமிடம்  - 41 விநாடிகள்

நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?

ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?

நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.

ராசா: ம்ம்...

நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...  நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.

ராசா: ம்ம்.

நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....

ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசி விட்டேன், ஏற்கெனவே பேசி விட்டேன்...

நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?

ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற
விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...

நீரா: இல்லை... அது மட்டுமல்ல, அது மட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

ராசா: ம்ம்.

நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.

ராசா: ஓஹோ! ஓஹோ!

நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...

ராசா: ம்ம்.

நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...

ராசா: ஓ...

நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
 
கனிமொழியுடன் ராடியா பேச்சு

22.5.2009  - மதியம் 2 மணி 46 நிமிடம்  - 15 விநாடிகள்

கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?

நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.

கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பி விடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை)
(0.01:32.4)

நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?

கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.

நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று  மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?

கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.

நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?

கனி: ஆம், ஆம்.

நீரா: இதுதான் அரசியல், மை டியர்.
கனிமொழியுடன் ராடியா பேச்சு
22.5.2009    - இரவு 8 மணி 04 நிமிடம்  - 19 விநாடிகள்

நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...

நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.

கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக் கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்...

நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன். 

 

கனிமொழியுடன் ராடியா பேச்சு

23.5.2009  காலை 9 மணி 59 நிமிடம்  - 2 விநாடிகள்

நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.

கனி: அது சரி.

நீரா: ஆம், இவர்(மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.

கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

நீரா: ஆம், சரிதான்.

கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.

நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப் போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்குகூட விருப்பமில்லை.
 
வீர் சங்வியுடன் ராடியா பேச்சு

23.5.2009    - இரவு 10 மணி 26 நிமிடம்  - 42 விநாடிகள்

நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்...

வீர்: மாறன்.

நீரா: ஆம்... (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)  ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே...

வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?

நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து...

வீர்: சரி.

நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.

வீர்: 600 கோடி சரியா?

நீரா: 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.

வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ண முடியாது?

நீரா: இல்லையா?
 
அ.ராசாவுடன் ராடியா பேச்சு..!

மே 24, 2009 காலை: 11:05

ராசா : என் பெயரை ‘கிளியர்’ பண்ணியாச்சா?

ராடியா : நேற்றிரவு உங்கள் பெயரை கிளியர் பண்ணியாச்சு.

ராசா : சரி, தயாநிதி விஷயம் என்னாச்சு? ஜவுளித் துறையா அல்லது ரசாயனம் / உரத்துறையா?

ராடியா : ஆனால் தயாவுக்குக் கிடைக்காது, அழகிரி, தயா இருவரில் ஒருவர்தான் நுழைய முடியும்.

ராசா : இல்லை,  இருவருமே நுழையலாம்.

ராடியா : இருவருமா? பாலு(டி.ஆர்)வால்தான் பிரச்சினை இருக்குமென்று நினைக்கிறேன். தலைவருக்கு மூன்று குடும்ப உறுப்பினர்களை நுழைப்பதில் கஷ்டம்தான்.

ராசா : (சிரிக்கிறார்) ஆமாம். ஆனால் எல்லோருக்கும் தெரியுமே . 

ராடியா : இல்லை, கனி(மொழி) என்னிடம் நேற்றிரவு சொன்னார், அவர் தந்தை அவரிடம் நேற்று கூறியதாக, மூன்று குடும்ப உறுப்பினர்களை உள்ளே நுழைப்பது கஷ்டம், இதிலுள்ள பிரச்சினையை அவரால் உணர முடிகிறது . . .

நீரா: மாறன் தன்னைப் பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?

ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.

நீரா: தெரியும் அல்லவா?

ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில்தான் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.

நீரா:ம்ம்..

ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.

ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...

நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.  கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ்கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?  நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?

ராசா: எனக்குத் தெரியாதே.

நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.

ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...

நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.

ராசா: ஆ, இருக்கலாம் ..

--------------------------
 
இந்த டேப்புகள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. நாங்கள் இப்படி எதையும் பேசவில்லை. சி.பி.ஐ. பொய்யாக இந்த டேப்புகளைத் தயாரித்துள்ளது என்று இந்த டேப்பில் சிக்கியுள்ள அரசியல்வியாதிகள் யாரும் இதுவரையில் முன் வந்து கூறவில்லை.
மாறாக உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டும், பயத்தையும் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்து மழுப்பியபடியே நடமாடி வருகிறார்கள். அ.ராசாவோ, கனிமொழியோ இதுவரையில் இது பற்றி எனக்குத் தெரிந்து எதையும் கூறவில்லை. இது போலியானது என்றால் அவர்கள் தாராளமாக இந்நேரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். போயிருக்கலாம்.

ஆனால் சகல செல்வாக்கும் உடைய அவர்கள் மெளனமாக இருப்பதைப் பார்க்கின்றபோது, நிச்சயம் இந்த பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்கள் அனைத்தும் உண்மையானவைகள்தான் என்று 200 சதவிகிதம் நம்ப வேண்டியிருக்கிறது. நானும் நம்புகிறேன். 

இடையில் நீரா ராடியா லண்டனில் இருந்தபடியே இந்த டேப்புகளை இனியும் வெளியிடக் கூடாது என்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது தள்ளுபடியானதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

ஸோ.. இனிமேல் இந்த டேப்புகளை சம்பந்தப்பட்ட நபர்கள்தான் பேசியிருக்கிறார்கள் என்கிற நம்பகத்தோடு மேலும் சில விஷயங்களைப் பற்றி இங்கே பேசுவோம்..!

முதலில் வீர்சிங்வியிடம் என்ன சொல்கிறார் நீராராடியா? மன்மோகன்சிங்கின் முந்தைய ஆட்சிக் காலத்தில் அனில் அம்பானிக்குக் கிடைத்த சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். இதனை முகேஷ் அம்பானி டிவி நிகழ்ச்சியில் தான் பேசப் போகும் விஷயத்தில் மறைமுகமாகச் சொல்ல வேண்டும். அது தொடர்பான கேள்விகளைத்தான் வீர் சிங்வி கேட்க வேண்டும்.. இது முகேஷ் அம்பானிக்காக, நீரா ராடியா செய்யும் லாபி..!

ஆனால் இதில் கேலிக்குள்ளாகும் விஷயம் வீர் சிங்வி நடத்திய அந்த விவாதத்தை முகேஷ் அம்பானி உள்ளிட்ட அறிவுஜீவிகளெல்லாம் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சியைப் பற்றி கவலையுடன் விவாதிக்கிறார்கள் என்று அப்பாவி ரசிகர்கள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைத்தான்..!

மே 21 காலையில் கனிமொழியுடன் பேசும் ராடியா தி.மு.க. கொடுத்திருக்கும் பட்டியலை காங்கிரஸ் ஏற்க மறுத்தது பற்றித் தெளிவாகச் சொல்கிறார். மூன்று கேபினட், நான்கு இணை அமைச்சர்கள் ஓகே. ஆனால் கேபினட் அமைச்சர்கள் யார், யார் என்ற குழப்பத்தை நீங்களே முடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் காங்கிரஸ் சொல்லியிருக்கிறது..!

இதில் எங்கே தமிழ்நாட்டின் நலன் இருக்கிறது.. திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் குடும்பப் பிரச்சினைதானே தெரிகிறது..?

மே 22-ல் பர்கா தத்துடன் பேசும் ராடியா, தி.மு.க. கேட்கும் இலாகாக்களை பட்டியலிடுகிறார். இதில் சாலை போக்குவரத்து, மின்சாரம், நிலக்கரி, சுகாதாரம், ரயில்வே என்று லம்ப்பான மேட்டர்களையே கேட்டிருப்பது தெரிகிறது.. அதிலும் தயாநிதி மாறன் தனக்காக நிலக்கரி, சுரங்கத் துறையைக் கேட்டிருக்கிறார்..


இது மட்டும் கிடைத்திருந்தால், கனிமொழியும், அவரது தாயாரும் இப்போதும் செய்து வரும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தொழிலில் கை வைத்திருக்கலாம். ஒருவேளை கனிமொழிக்கு இப்படி தங்களது தொழிலில் தலையிட்ட நினைத்ததால்தான் மாறன்மேல் கோபம் வந்ததோ..?

பர்காதத் தான் ஒரு பத்திரிகையாளர் என்பதையும் மறந்து இந்தக் கேடு கெட்ட ஆட்சியாளர்களின் பதவியேற்புக்கு உதவிகளைச் செய்துள்ளார். அதுவும் எப்படி..?

மாறன், கனிமொழி, அ.ராசா, டி.ஆர்.பாலு சகிதமாக வந்ததால் கலைஞரிடம் தனியாக நாலு வார்த்தைகூட பேச முடியவில்லை என்பது பிரதமரின் அங்கலாய்ப்பாம்.. டி.ஆர்.பாலு வேண்டாம் என்பது பிரதமரின் அவா. ஆனால் இதனை அவரால் அப்போது வெளிப்படுத்த முடியவில்லை என்பது பர்கா தத்தின் மில்லியன் டாலர் தகவல்..!

எப்படி பேசுவார்..? டி.ஆர்.பாலு வேண்டாம் என்றோ,. ராசா வேண்டாம் என்றோ அவர்களை வைத்துக் கொண்டே பேச முடியுமா..? அதுதான் தயக்கம். இந்தத் தயக்கத்திற்காக கனிமொழியின் வேண்டுகோளை ஏற்று ராடியா பர்கா தத்திடம் பேச, பர்கா தத் மீண்டும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசி நேரம் வாங்கித் தருகிறேன். அல்லது குலாம் நபி ஆசாத்தைத் தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்கிறார்.

ம்.. இந்தம்மா 24 மணி நேரமும் டிவிலதாம்பா தெரிஞ்சாங்க.. இவங்களுக்கு எப்படி இந்த புரோக்கர் தொழிலுக்கெல்லாம் நேரம் கிடைச்சதோ தெரியலையே..?

அடுத்த போன் ராசாவுக்குப் பறக்கிறது.. “டி.ஆர்.பாலுதான் பிரச்சினை. அதனால்தான் மினிஸ்ட்ரி பெர்த் இன்னமும் பைனல் ஆகாமல் இழுத்தடிக்கிறது..” என்கிறார் ராடியா. பதைபதைக்கிறார் ராசா. “உடனே இதை தலைவரிடம் சொல்ல வேண்டும். நாங்க சொல்ல முடியாது. நீங்களே இதை எப்படியாவது தலைவர் காதுக்கு போன்லயாவது சொல்லிருங்களேன்.. இல்லாட்டி ரகசியக் கடுதாசியையாவது கொண்டுபோய் கொடுங்களேன்” என்கிறார் ராசா. அப்படியேகூட, “அ.ராசாகூட எங்களுக்குப் பிரச்சினையில்லை. டி.ஆர்.பாலுகூடத்தான் பிரச்சினைன்னு சொல்லச் சொல்லுங்க..” என்று கூச்சநாச்சமில்லாமல் பதறுகிறார்.

உஷ்.. அப்பா.. இந்த மொள்ளமாரி, முடிச்சவிக்கியெல்லாம் ஏதோ கூவம் ஆத்துக் கரையோரமெல்லாம் இல்லப்பா. நிசமா அ.ராசா மாதிரியான ஆளுங்கதாம்பா அவங்க..! பாவம் டி.ஆர்.பாலு..! தனக்கு லைன் கிளியர் ஆக வேண்டும் என்பதற்காக ராசா எவ்ளோ துடிக்கிறார் பாருங்க..!

அடுத்த போன் கனிமொழிக்கு.. இடையில் அகமது பட்டேலிடம் ராடியா போனில் பேசியிருக்கிறார். அப்போது அவருக்கு அகமது படேலிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல் சாலை போக்குவரத்து கட்டுமானத் துறை பாலுவுக்கோ, மாறனுக்கோ கிடையாது என்பது..

இதைத்தான் கனியிடம் சொல்கிறார் ராடியா. கனி மறுக்கிறார். “யார் சொன்னது இது? என்னிடமோ அப்பாவிடமோ யாரும் இதைச் சொல்லவில்லை..” என்று மறுக்கிறார். ஆனால் “யாரோ சென்றிருக்கிறார்கள். சொல்லியிருக்கிறார்கள்..” என்கிறார் ராடியா. ஸோ.. தாத்தாவை யார் கண்காணிப்பில் வைத்திருப்பது என்பதிலேயே அங்கே போட்டி நடந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது. இந்த டேப்பிலேயே நமக்குத் தெரிய வந்துள்ள இன்னொரு விஷயம்.. தாத்தாவும் காது கேளாதோர் சங்கத்தில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்துவிட்டார் என்ற சோகச் செய்திதான் அது. வெல்கம் தாத்தா..!

அப்போது டெல்லியில் தங்கியிருந்த ராஜாத்தி அம்மாவை ராடியா நேரில் சென்று சந்திக்கிறார். அங்கேயும் ஏதோ சதித் திட்டம் தீட்டி அதனைச் செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள் என்பதை இவர்களின் அடுத்தடுத்த பேச்சுக்களில் தெரிகிறது.

இந்த இடத்தில் ஒரு தகவல். ராஜாத்தியம்மாளுக்கு நீரா ராடியாவை அறிமுகப்படுத்தி வைத்தது பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனான கெளதமின் மனைவிதான் என்கிறார்கள். இவர்தான் இப்போதைக்கு ராஜாத்தியம்மாளின் பண விவகாரத்தை டீல் செய்து, கூடவே சுற்றுக்கும் விட்டு வருகிறார் என்பது தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களுக்கு முன்பே தெரிந்த விஷயம்தான்..!


கனியிடம் பேசி முடித்துவிட்டு உடனேயே பர்காவுக்கு போன் அடித்து சாலை போக்குவரத்துத் துறை மாறனுக்கோ, பாலுவுக்கோ இல்லை என்று பிரதமர் மறுத்துவிட்டதைச் சொல்கிறார் ராடியா. கூடவே காங்கிரஸ் தரப்பில் இருந்து தி.மு.க.வுடன் யார் பேசுகிறார்கள் என்பதே தெரியவில்லை என்று கனியிடம் பேசியதையே சொல்கிறார் ராடியா..

அன்றைய மதிய நேரத்தில் ராடியாவிடம் இருந்து அ.ராசாவுக்கு போன் பறக்கிறது. அழகிரியைப் பற்றி அவருடைய செல்ல மருமகன் தயாநிதி மாறன் டில்லியில் என்னென்ன வத்தி வைப்புகளை பற்ற வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி ராடியா சொல்கிறார். அஞ்சாங்கிளாஸு தாண்டாதவரு.. இங்கிலீஷ் தெரியாது.. அவர் ஒரு கிரிமினல் அப்படீ, இப்படீன்னு தயாநிதி மாறன் செஞ்சோற்றுக் கடனை அடைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இங்கே ராசாவும் அழகிரியிடம் மாறன் பற்றி தான் ஏற்கெனவே பேசிவிட்டதாகச் சொல்கிறார். ஆக, ராடியாவிடமிருந்து நியூஸை வாங்கி அழகிரியிடம் போட்டுக் கொடுத்துவிட்டு தனக்கான ஆதரவை அழகிரியிடமும் பெற்றுக் கொண்டிருக்கிறார் ராசா என்றே நம்ப முடிகிறது.

அடுத்த பத்து நிமிடத்தில் கனிமொழிக்கு போன்.. கனி கேட்கின்ற முதல் கேள்வியே ங்கொய்யால வகையானது.. “பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தயாநிதி மாறன் போகிறாரா இல்லையா?” என்று கேட்கிறார் கனி. கலைஞர் டெல்லியில் இருந்தபோதெல்லாம் கனிமொழி, ராசா, தயாநிதி, பாலு நால்வரும்தான் கூடவே போய் வந்து கொண்டிருந்தார்கள். ஒரே கட்சிதானே.. ஒரே பேமிலிதானே..? பேசிக்கவே மாட்டாங்களா.. குடும்பப் பிரச்சினைல சண்டைன்னா அதை குடும்பத்துக்குள்ள வைச்சுக்க வேணாமாய்யா..! இப்படியா பப்ளிக்காக்குறது..?


அவங்களுக்காக.. அவங்க தலைமுறைக்காக ஒரு மனுஷன் நடக்க முடியாத காலத்துலேயும் தவழ்ந்தாவது போய் பிச்சை கேட்டு அழுதுகிட்டிருக்காரு.. அவரைப் பார்த்தா பாவமா தெரியலையா இவங்களுக்கு..?

வெறுப்பாகப் பேசுகிறார் கனிமொழி. “அவர் போறாரா இல்லையான்னு தெரியலை. ஆனா போயிட்டு வந்து அப்பாகிட்ட  அகமது படேல் கூப்பி்டடாரு போனேன்னு சொல்வாரு..” என்கிறார் கனி. ஆக மொத்தம், தயாநிதியின் வளர்ச்சி சிஐடி காலனி வீட்டுக்கு என்றைக்குமே உறுத்தலாகத்தான் உள்ளது..

22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மன்மோகன்சிங் தனது 19 சகாக்களுடன் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுவிட்டார். அன்றைய இரவு மீண்டும் கனிமொழியிடம் பேசுகிறார் ராடியா. கனிமொழி இப்போது இன்னொரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். அது ராசா மீண்டும் மந்திரியாக வேண்டும் என்பதில். “இனிமேல் அப்பாவுடன் யார் பேச வருவதானாலும் அவர்கள் இவரைப்(அ.ராசா) பற்றி எதிராகப் பேசக் கூடாது.” என்று ராடியாவிடம் உறுதியாகக் கூறுகிறார் கனிமொழி.

ஆக.. தயாநிதி மாறனுக்கு எதிராக அழகிரியை டெல்லியில் வளர்க்க முடியாது.. ஆனால் ஆ.ராசாவை வளர்க்கலாம் என்று ராஜாத்தியம்மாளும், கனிமொழியும் நன்கு தி்ட்டமிட்டுத்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்..! இதற்கிடையில் மே 22-ம் தேதியே  கலைஞர் சென்னை திரும்பி விட்டார்.  

23-ம் தேதி காலையில் பத்து மணிக்கு மீண்டும் கனிமொழிக்கு போன்.. இம்முறை ராடியா தெளிவாகச் சொல்கிறார் அழகிரி பற்றியும், ராசா பற்றியும் காங்கிரஸ் மேலிடத்தில் தான் தெளிவாக எடுத்துரைத்துவிட்டதாக..!

அழகிரியின் இந்தி, ஆங்கிலம் தெரியாத நிலையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக அவருக்குக் கீழ் இரண்டு மொழிகளும் தெரிந்த நபரை துணை அமைச்சராகப் போட்டுச் சமாளிக்கச் சொல்லுங்கள் என்று தனது பெரிய அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் கனிமொழி. கூடவே “அந்த ஆளு” என்று தயாநிதி மாறனை விளித்து அவருக்குத் தொலைத் தொடர்புத் துறை கிடைக்கக் கூடாது என்பதையும் மீண்டும் அறிவுறுத்துகிறார். மாறனுக்குப் பதவி கிடைப்பது தி.மு.க.விலேயே யாருக்கும் பிடிக்கவில்லை என்றும் ஒரு பிட்டைப் போடுகிறார் கனி.!

இந்த டேப்பில் பல தொடர்ச்சியானவைகள் இல்லை. நன்கு திட்டமிட்டு தேவையானவற்றை மட்டும்தான் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதே நாள் இரவில் வீர்சிங்வியைத் தொடர்பு கொள்கிறார் ராடியா. தயாநிதி மாறனை எடுத்துக் கொள்ளும்படி பிரதமருக்கே நிர்ப்பந்தம் வந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ராடியா. இப்படி நிர்ப்பந்தம் கொடுப்பது ஸ்டாலினும், அவரது அக்காள் செல்வியும் என்கிறார் ராடியா. இதென்னாங்கடா புது குழப்பம்னு யோசிச்சா.. நமக்குத்தான் தலையே சுத்துது..!

ஸ்டாலினுக்கு அழகிரியின் வளர்ச்சி நிச்சயம் ஆபத்தானதுதான். ஆகவே அவர் பதவியில் இல்லாமல் இருந்தால்தான் தனக்கு நல்லது என்று நினைக்கிறார். செல்விக்கோ தனது மகன் போன்ற தயாநிதி மாறனை விட்டுக்கொடு்க்க முடியாத நிலைமை. அந்த மகன் மட்டும் இல்லாவிடில் தான் இன்னமும் ராயப்பேட்டையில் துணிக்கடையில் பில்தான் போட்டுக் கொண்டிருந்திருக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால்தான் பாசப்பிணைப்பில் செல்வியும், ராஜதந்திரவகையில் ஸ்டாலினும் தயாநிதி மாறனுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.. ம்.. இந்த மாறன்களுக்கு மச்சம் எங்கிட்டுத்தான் இருக்குன்னு தெரியலை சாமிகளா..!

ஆனால் ராடியா சொல்லியிருப்பதுபோல் 600 கோடி ரூபாயை தயாளு அம்மாளுக்கு மாறன்கள் கொடுத்திருந்தால், அது முன்னதாகவே சன் டிவியில் பங்கு பிரிக்கும்போது நடந்தததன் தொடர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்போது தயாளு அம்மாவுக்கு மிகக் குறைவான தொகையைத்தான் பங்காக கொடுத்தார்கள் என்று ஏக கோபத்தில் இருந்தார்கள் கோபாலபுரத்து குடும்பத்தினர்.. ஓகே.. எப்படியோ வந்து சேர்ந்திருந்தால் சரிதான்..!

இதற்கிடையில் 23-ம் தேதி இரவு சென்னை கோபாலபுரத்தில் குடும்பத்தினர்களுக்குள் நடந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் பாலுவை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு அழகிரி தனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கலைஞரிடம் நேருக்கு நேராகக் கேட்டு உறுதிமொழி வாங்கிவிட்டுச் சென்றார்.

வாசலில் நின்று கொண்டிருந்த பாலுவிடம் “ஸாரி பாலு..” என்று ஒரு வார்த்தையில் பாலுவின் பதவி கனவில் ஒரு டன் மண்ணையள்ளிப் போட்டுவிட்டு சிட்டாகப் பறந்தார் அழகிரி.. இதுவெல்லாம் தெரிந்துதான் ராசா மறுநாள் காலை ராடியாவிடம் பேசும்போது உறுதியாகச் சொல்கிறார் கேபினட் பெர்த்தில் அழகிரி உறுதியென்று....!

அந்தச் சமயத்தில் அமைச்சரவை விரிவாக்கம் ஏன் இவ்ளோ லேட்டு என்று பத்திரிகைகள் மாய்ந்து, மாய்ந்து கட்டுரைகள் எழுதித் தள்ளியபோது தி.மு.க.வால்தான் தாமதம் என்ற செய்தி காங்கிரஸால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. அப்படியாவது தி.மு.க. சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வரட்டுமே என்றுதான்..!

இந்த இடைவெளியில் பாலுவுடனும், அ.ராசாவுடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல் பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கைகூட வெளியிட்டார். நம்மால் தாமதம் என்று அவர்கள் சொல்லக் கூடாதே என்பதால்தான்..!

அ.ராசாவின் பெர்த் 23-ம் தேதி இரவில் உறுதியாகிவிட்டதாக ராடியாவும் சொல்கிறார். அழகிரியைப் பற்றி மாறன்களின் பற்ற வைப்புகள் அவருக்கே தெரியும் என்பதை ராசா மீண்டும் இங்கே தெளிவாக்குகிறார்.

ராடியா என்னும் அரசியலில் இல்லாத வெறும் புரோக்கர் பெண், இத்தனை அல்லல்பட்டு ஒருவரை மத்திய அமைச்சரவையிலேயே சேர்க்க முடிகிறது என்றால் இவரது செல்வாக்கு என்ன என்பதையும், எதற்காக என்பதையும் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

“நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.  கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறையப் பெற வேண்டியிருக்கிறது.” என்று ராடியா ராசாவிடம் சொல்வதைப் பார்க்கும்போது இதுவெல்லாம் நன்கு திட்டமிட்டுத்தான் நடந்தேறி உள்ளது என்று சந்தேகத்திடமில்லாமல் நான் நம்புகிறேன்..!

கூடவே அமைச்சருக்கு அனைத்து வகையிலும் உறுதியாக இருப்பதைப் போல ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டலிடம் ராசா சார்பில் சமாதானம் பேசியிருப்பதையும் சொல்கிறார் ராடியா. இதற்கு ராசா சொல்கின்ற பதிலைப் பாருங்கள்.. “இன்னும் அஞ்சு வருஷம்கூட என்கூடத்தான் அவர் வேலை பார்த்தாகணும். இதையும் அவர்கிட்ட சொல்லிருங்க” என்கிறார் ராசா.. அசத்தல் சினிமா டயலாக்..! செத்தான்டா வில்லன்..!

எப்படியோ இந்தத் திருடர்கள் இத்தனை உள்ளடி வேலைகளையும் செய்த பின்பு மே 28-ம் தேதியன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..!

இதன் பின்பும் நிச்சயம் சி.பி.ஐ. போன் பேச்சுக்களை பதிவு செய்திருக்கும்.. அதனால்தான் இன்றைக்குக்கூட ஆடிட்டர் ஜெனரலின் குற்றச்சாட்டுக்களை ஒரு ஆதாரமாக தான் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், தங்களிடம் இப்போது இருக்கும் ஆதாரங்களே போதுமானது என்றும் சிபிஐ கூறியிருக்கிறது.

ஆனால் இந்த டேப்புகளை கோர்ட்டில் தாக்கல் செய்யும் சாக்கில் யார் இதனை வெளியில் விட்டது என்பதை விசாரிக்கவே வேறு ஒரு சி.பி.ஐ. வர வேண்டும் போல் தோன்றுகிறது.

இது தி.மு.க.வுக்கும் தெரியாமலில்லை. அவர்களே இது போன்ற சித்து வேலைகளில் சிறந்தவர்கள். இந்தியாவிலேயே டெலிபோனில் ஒட்டுக் கேட்பது எப்படி என்பதை செய்து காட்டியவர்கள் தி.மு.க.வினர்தான். அவர்களுக்கே ஆப்பு வைப்பது போல ஒரு பக்கம் டேப்புகள் லீக். இன்னொரு பக்கம் கூட்டணி உறுதி.. பதவி விலக நிர்ப்பநதம்.. கோர்ட்டில் மனு தாக்கல்.. ஊழலே நடக்கவில்லை என்று அமைச்சரவையின் சார்பில் மனு தாக்கல். ஆனால் அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ ஊழல் நடந்திருக்கிறது என்று மனு தாக்கல் என்று நாடே கலவர பூமியாக இருக்கிறது..

ம்.. ஒண்ணும் புரியலை.. இதுக்கெல்லாம் தலைமைப் பொறுப்பில் மன்மோகன்சிங் என்னும் பிரதமர் இருக்கிறார்.. இவர் எதுக்காக இந்தப் பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லை. தனக்குக் கீழுள்ள ஒரு துறை ஊழல் நடக்கவில்லை என்கிறது. இன்னொரு துறையோ நடந்துள்ளது என்கிறது.. இந்தச் சூழலில் குற்றவாளிகள் நிச்சயம் தப்ப முடியாது என்று வீர ஆவேசம் காட்டுகிறார். இப்படிச் சொல்லிவிட்டு அடுத்த நாள் தி.மு.க.வுடனான தங்களது கூட்டணி பலமானதாகவும், உறுதியாகவும் இருக்கிறது என்கிறார்..!

ஆக மொத்தம்.. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.. நீ அழுவுற மாதிரி அழுவு என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கிறது காங்கிரஸ்.. தி.மு.க.வும் வேறு வழியில்லாமல் இதனை அப்படியே பாலோ செய்து கிளிசரின் போடாமலேயே பூணூல், பார்ப்பு, பார்ப்பான், தலித், சூத்திரன், மனு தர்மம் என்று புளுத்துப் போன புழுக்கைகளை கை நிறைய அள்ளி தன் மேலேயே வாரி இறைத்துக் கொள்கிறது..!

இந்த நாடகம் எப்போ முடிஞ்சு, அடுத்த நாடகம் எப்போ தொடங்கும் என்று கேள்வியுடன் நாமும் அடுத்த ஊழலுக்காகக் காத்திருக்கிறோம்..! காத்திருப்போம்..!

ஜெய்ஹிந்த்..!

58 comments:

பழமைபேசி said...

ஏண்ணே, உரையாடல்னு சொல்லி நாலு புத்தகம் அளவுக்கு தினமும் போட்டா, யாரு அதை வாசிக்கப் போறாய்ங்க? இரத்தினச் சுருக்கமா இதான் செய்தின்னு சொன்னா அதுக்கு வீரியம் இருக்கும்... இப்படி தினமும் நாலு ஒலிநாடா வெளியிட்டா.... அதுக்கு என்னா மருவாதி??

செங்கோவி said...

அண்ணே, நம்ம வலைப்பூ வர வர ஒரு புலனாய்வுப் பத்திரிகை மாதிரி ஆகுதுன்னே...சி.ஐ.டி.உணா.தாணா-க்கு வாழ்த்துகள்...

--செங்கோவி

கபீஷ் said...

இப்டியே எழுதுங்க உ.த. அண்ணே.

ILA (a) இளா said...

நாம் ரெண்டு பேரும்தான் தமிழ்நாட்டுல இதைப் பத்தி பேசிகிட்டு இருக்கோம்னு நினைக்கிறேன். ஆச்சர்யமா இல்லை? வடக்குல இப்பதான் லேசா பத்துது. அதையும் அணைச்சுருவாங்க. ராசா சேஃப், திமுக-காங் கூட்டணி சேஃப், முக்கியமா பணமும் சேஃப்.

ராஜ நடராஜன் said...

இந்த முறை, தமிழாக்கம் உங்கள் கருத்தாக்கமெல்லாம் படிச்சிட்டு வர்றதுக்குள்ள ஆளுக பந்திக்கு முந்திகிட்டாக:)

ராஜ நடராஜன் said...

//ஏண்ணே, உரையாடல்னு சொல்லி நாலு புத்தகம் அளவுக்கு தினமும் போட்டா, யாரு அதை வாசிக்கப் போறாய்ங்க? இரத்தினச் சுருக்கமா இதான் செய்தின்னு சொன்னா அதுக்கு வீரியம் இருக்கும்... இப்படி தினமும் நாலு ஒலிநாடா வெளியிட்டா.... அதுக்கு என்னா மருவாதி??//

ரெண்டு வரியில் ஒப்புக்கு சப்பாணியா அல்லக்கை வேலை பார்க்கறதுக்குதான் நக்கீரன் போன்றவர்கள் இருக்கிறார்களே?அப்புறம் பிளாக்கறது எதுக்கு?

அண்ணே!நீங்க இதே ரூட்ல போங்க.நான் ஆதரவு தருகிறேன்.

ராஜ நடராஜன் said...

//நாம் ரெண்டு பேரும்தான் தமிழ்நாட்டுல இதைப் பத்தி பேசிகிட்டு இருக்கோம்னு நினைக்கிறேன். ஆச்சர்யமா இல்லை? வடக்குல இப்பதான் லேசா பத்துது. அதையும் அணைச்சுருவாங்க. ராசா சேஃப், திமுக-காங் கூட்டணி சேஃப், முக்கியமா பணமும் சேஃப்.//

பேசினா மட்டும் பத்தாது!கை தட்டறதுக்கும் அஞ்சு ஆறு ஆளு வேணும்.அந்த வேலைய நாங்க செய்யறோம் தெரியுமில்ல:)

உமர் | Umar said...

மீண்டும் கண் கண்ணாடி அணிய வேண்டிய நிலை வந்துரும் போல, இன்னும் ஒரு பதிவு படிச்சா! :-)

Unknown said...

ஓட்டு போட்ட மக்களையெல்லாம் காமெடி பீசா நினைச்சுட்டாங்க.. கோசம் போட்டு போஸ்டர் ஓட்டும் ஒரு தி.மு.க தொண்டனிடம் பேசிகொண்டிருந்தேன்.. அவர் சொன்னது "இவங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது" ...

நவன் said...

//நாம் ரெண்டு பேரும்தான் தமிழ்நாட்டுல இதைப்//

உ.த, இளா,
இதேதான் என் கேள்வியும். எந்திரன், லிவிங் டுகெதர் எல்லாம் ஒரு நாளைக்கு 2000 போஸ்ட் போட்ட தமிழ் வீரர்கள் எங்கே? எங்கே?

Ganpat said...

சரி விடுங்க சரவணன் !
நம்பத்தான் இங்க மண்டைய குடஞ்சிகிட்டு இருக்கோம்.இதுக்கெல்லாம் மூலகர்த்தா எந்த கவலையும் இல்லாமல் ஒரு அகழ்வாராய்ச்சி செஞ்சு ஜெமினி கணேஷ் எங்க ஜாதிக்காரர் ன்னு பேசிகிட்டிருக்கார் இதுக்கே இந்த ஆண்டுக்கான நோபல் விருது இவருக்கு கொடுக்கப்படணும்..

ராசா ஜாலி
மு.க ஜாலி
அவர் குடும்பம் ஜாலி
மன்மோகன் ஜாலி
சோனியா ஜாலி
பொதுஜனம் ஜாலி

நம்ப எதுக்கு முகாரி வாசிக்கணும்?

பழமைபேசி said...

ஆமா, இப்படியே எழுதுங்ணே....

இராஜிவ் காந்திக்கு தினமும் 9 கேள்விகள்னு இராம்ஜெத்மலானி கேக்க ஆரம்பிச்சாரு....

முதல் ரெண்டு நாள் ஓடிப் போய் படிச்சோம்.... அடுத்த ரெண்டு நாள் நடந்து போய் படிச்சோம்....

அப்புறமா, சலிச்சுப் போயி படிக்கிற மக்களும் வுட்டுட்டாய்ங்க... அவரும் ஒரு மாசத்துக்கு அப்புறமா கோமாளி ஆயிட்டாரு.... இதே, ரெண்டு ஒரு நாளோட நிறுத்தி இருந்தா... அவருக்கான வரவேற்பின் தாக்கம் அப்படி இருந்திருக்கும்.....

மத்தபடி, இந்த அறிவிலி எதோ சொல்றான்... கண்டுகிடாதீங்க....

வசந்தத்தின் தூதுவன் said...

வட இந்திய ஊடகங்களின் வாயை அடக்கவே காங்கிரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட உரையாடல்கள் இவையோ எனத் தோன்றுகிறது. இந்த உரையாடல் வெளிவந்தவுடன் என்.டி.டி.வி. அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை மூடி விட்டது. மற்ற ஊடகங்களுக்கு தங்கள் ஒலி நாடா வெளிவராததில் மகிழ்ச்சியாய் இருந்தாலும், வெளிவந்து விடக் கூடாதே என நினைத்து மூடிக் கொண்டு விட்டன.

ஒலிநாடா நீளங்கள் குறைவாகவும் துண்டு துண்டாகவும் இருப்பதால், பதிவு செய்தவனே சகிக்க முடியாதவை, அல்லது பதிவு செய்தவர்களுக்கு (காங்கிரசு) எதிரானவையும் அவற்றில் இருந்திருக்கும் என யூகிக்க முடிகிறது.

வெளிவராத ஒலி நாடாக்கள் எத்தனை உள்ளனவோ. அவற்றில் என்னென்ன கண்றாவிகள் உள்ளனவோ.

இதிலிருந்து காங்கிரசு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க எத்தணிப்பது புரிகிறது. ஊழல் குற்றச் சாட்டிலிருந்து தப்பிக் கொள்ளவும், கூட்டாளிகளுக்கு (ஊடகம் மற்றும் கூட்டணிக் கட்சி) கடிவாளம் போடவும் முயற்சி மேற்கொள்கிறது.

suneel krishnan said...

barks's involvement was a real shocker to me!!!

bandhu said...

உண்மை தமிழன். நீங்கள் உங்கள் வாழ்வில் பெருமை படும்படி செய்த செயல்கள் இந்த பதிவுகள். கட்சிக்கு அடிமையாக உள்ளவர்களும், வெறும் பொழுது போக்கில் மட்டுமே அக்கறை உள்ளவர்களும் தவிர அனைத்து பதிவர்களும் இந்த பதவி வெறி பிடித்தவர்களின் முகத்திரையை கிழிக்க இந்த பதிவுகளை அனைவருக்கும் சேர்க்க வேண்டும். உங்களை வாழ்த்துகிறேன். மிக்க நன்றி

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...
ஏண்ணே, உரையாடல்னு சொல்லி நாலு புத்தகம் அளவுக்கு தினமும் போட்டா... யாரு அதை வாசிக்கப் போறாய்ங்க? இரத்தினச் சுருக்கமா இதான் செய்தின்னு சொன்னா அதுக்கு வீரியம் இருக்கும். இப்படி தினமும் நாலு ஒலிநாடா வெளியிட்டா. அதுக்கு என்னா மருவாதி??]]]

பழமைபேசி.. நீங்களே இது மாதிரி பேசலாமா? இது நாடு சம்பந்தமான பிரச்சினை.. முழுத் தகவலும் தெரிய வேண்டாமா..? சினிமா விமர்சனம் என்றால் சுருக்கலாம். இதைப் போய் எப்படிச் சுருக்குவது..?

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
அண்ணே, நம்ம வலைப்பூ வர வர ஒரு புலனாய்வுப் பத்திரிகை மாதிரி ஆகுதுன்னே. சி.ஐ.டி. உணா.தாணா-க்கு வாழ்த்துகள்...
--செங்கோவி]]]

தங்களுடைய முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் செங்கோவி..!

உண்மைத்தமிழன் said...

[[[கபீஷ் said...
இப்டியே எழுதுங்க உ.த. அண்ணே.]]]

நன்றி கபீஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[ILA(@)இளா said...
நாம் ரெண்டு பேரும்தான் தமிழ்நாட்டுல இதைப் பத்தி பேசிகிட்டு இருக்கோம்னு நினைக்கிறேன். ஆச்சர்யமா இல்லை? வடக்குல இப்பதான் லேசா பத்துது. அதையும் அணைச்சுருவாங்க. ராசா சேஃப், திமுக-காங் கூட்டணி சேஃப், முக்கியமா பணமும் சேஃப்.]]]

ஆமாம் இளா.. மீடியாக்காரங்க பேரையெல்லாம் இழுத்துவிட்டு பிரஸ் வாயை அடைச்சுட்டாங்க. இப்போ பணத்தைக் கொடுத்து பாரதீய ஜனதா கட்சிக்காரங்களையும் வளைச்சுக்கிட்டிருக்காங்க..! பாராளுமன்ற முற்றுகையை உடைச்சுட்டாங்கன்னா மேட்டர் ஓவர்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
இந்த முறை, தமிழாக்கம் உங்கள் கருத்தாக்கமெல்லாம் படிச்சிட்டு வர்றதுக்குள்ள ஆளுக பந்திக்கு முந்திகிட்டாக:)]]]

சந்தோஷப்படுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[ராஜ நடராஜன் said...

//ஏண்ணே, உரையாடல்னு சொல்லி நாலு புத்தகம் அளவுக்கு தினமும் போட்டா, யாரு அதை வாசிக்கப் போறாய்ங்க? இரத்தினச் சுருக்கமா இதான் செய்தின்னு சொன்னா அதுக்கு வீரியம் இருக்கும்... இப்படி தினமும் நாலு ஒலிநாடா வெளியிட்டா.... அதுக்கு என்னா மருவாதி??//

ரெண்டு வரியில் ஒப்புக்கு சப்பாணியா அல்லக்கை வேலை பார்க்கறதுக்குதான் நக்கீரன் போன்றவர்கள் இருக்கிறார்களே? அப்புறம் பிளாக்கறது எதுக்கு?
அண்ணே! நீங்க இதே ரூட்ல
போங்க.நான் ஆதரவு தருகிறேன்.]]]

நன்றி நடராஜன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//நாம் ரெண்டு பேரும்தான் தமிழ்நாட்டுல இதைப் பத்தி பேசிகிட்டு இருக்கோம்னு நினைக்கிறேன். ஆச்சர்யமா இல்லை? வடக்குல இப்பதான் லேசா பத்துது. அதையும் அணைச்சுருவாங்க. ராசா சேஃப், திமுக-காங் கூட்டணி சேஃப், முக்கியமா பணமும் சேஃப்.//

பேசினா மட்டும் பத்தாது! கை தட்டறதுக்கும் அஞ்சு ஆறு ஆளு வேணும். அந்த வேலைய நாங்க செய்யறோம் தெரியுமில்ல:)]]]

ஓகே.. உங்களுடைய கை தட்டலுக்கு மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...
மீண்டும் கண் கண்ணாடி அணிய வேண்டிய நிலை வந்துரும் போல, இன்னும் ஒரு பதிவு படிச்சா! :-)]]]

கண்ணாடியா..? நான் பேஸ்மேக்கர் வைக்க வேண்டிய நிலைமைல இருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
ஓட்டு போட்ட மக்களையெல்லாம் காமெடி பீசா நினைச்சுட்டாங்க.. கோசம் போட்டு போஸ்டர் ஓட்டும் ஒரு தி.மு.க தொண்டனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.. அவர் சொன்னது "இவங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது"]]]

தொண்டர்களை ஏமாற்றுகின்ற பாவம் அவர்களைச் சும்மா விடாது..!

உண்மைத்தமிழன் said...

[[[navan said...

//நாம் ரெண்டு பேரும்தான் தமிழ்நாட்டுல இதைப்//

உ.த, இளா, இதேதான் என் கேள்வியும். எந்திரன், லிவிங் டுகெதர் எல்லாம் ஒரு நாளைக்கு 2000 போஸ்ட் போட்ட தமிழ் வீரர்கள் எங்கே? எங்கே?]]]

அவங்கவங்களுக்கு எது பிடிக்குதோ அதைத்தானே செய்வாங்க.. செஞ்சுட்டுப் போறாங்க விடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

சரி விடுங்க சரவணன்! நம்பத்தான் இங்க மண்டைய குடஞ்சிகிட்டு இருக்கோம். இதுக்கெல்லாம் மூலகர்த்தா எந்த கவலையும் இல்லாமல் ஒரு அகழ்வாராய்ச்சி செஞ்சு ஜெமினிகணேஷ் எங்க ஜாதிக்காரர்ன்னு பேசிகிட்டிருக்கார் இதுக்கே இந்த ஆண்டுக்கான நோபல் விருது இவருக்கு கொடுக்கப்படணும்..

ராசா ஜாலி
மு.க ஜாலி
அவர் குடும்பம் ஜாலி
மன்மோகன் ஜாலி
சோனியா ஜாலி
பொதுஜனம் ஜாலி

நம்ப எதுக்கு முகாரி வாசிக்கணும்?]]]

மனிதர்கள் பலவிதம்தானே. அதுக்காக நமது கடமையை நாம செய்யாம இருக்கக் கூடாது.. செஞ்சிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

ஆமா, இப்படியே எழுதுங்ணே....
இராஜிவ் காந்திக்கு தினமும் 9 கேள்விகள்னு இராம்ஜெத்மலானி கேக்க ஆரம்பிச்சாரு. முதல் ரெண்டு நாள் ஓடிப் போய் படிச்சோம். அடுத்த ரெண்டு நாள் நடந்து போய் படிச்சோம். அப்புறமா, சலிச்சுப் போயி படிக்கிற மக்களும் வுட்டுட்டாய்ங்க. அவரும் ஒரு மாசத்துக்கு அப்புறமா கோமாளி ஆயிட்டாரு. இதே, ரெண்டு ஒரு நாளோட நிறுத்தி இருந்தா. அவருக்கான வரவேற்பின் தாக்கம் அப்படி இருந்திருக்கும்.
மத்தபடி, இந்த அறிவிலி எதோ சொல்றான்... கண்டுகிடாதீங்க....]]]

ஓகே.. இதுக்கு தனிப் பதிவு போட்டுத்தான் பதில் சொல்லணும் பழமை..!

உண்மைத்தமிழன் said...

[[[பொதிகைச் செல்வன் said...

இதிலிருந்து காங்கிரசு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க எத்தணிப்பது புரிகிறது. ஊழல் குற்றச் சாட்டிலிருந்து தப்பிக் கொள்ளவும், கூட்டாளிகளுக்கு (ஊடகம் மற்றும் கூட்டணிக் கட்சி) கடிவாளம் போடவும் முயற்சி மேற்கொள்கிறது.]]]

நீங்கள் சொல்வது உண்மைதான். காங்கிரஸின் கைங்கர்யம்தான் இது..! பழைய கலைஞராக இருந்திருந்தால் இந்நேரம் தன்மானம் தலைதூக்கி கூட்டணியில் இருந்து வெளியேறியிருப்பார்..

ஆனால் இப்போது அப்படியில்லையே.. அதனால்தான்.. அடிக்கிறவரையிலும் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[dr suneel krishnan said...
barks's involvement was a real shocker to me!!!]]]

அத்தனை பேருக்கும்தான் டாக்டர்..!

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...
உண்மை தமிழன். நீங்கள் உங்கள் வாழ்வில் பெருமைபடும்படி செய்த செயல்கள் இந்த பதிவுகள். கட்சிக்கு அடிமையாக உள்ளவர்களும், வெறும் பொழுது போக்கில் மட்டுமே அக்கறை உள்ளவர்களும் தவிர அனைத்து பதிவர்களும் இந்த பதவி வெறி பிடித்தவர்களின் முகத்திரையை கிழிக்க இந்த பதிவுகளை அனைவருக்கும் சேர்க்க வேண்டும். உங்களை வாழ்த்துகிறேன். மிக்க நன்றி]]]

வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

raja said...

இது உங்களுடைய முக்கியமா பதிவுகளில் ஒன்று.... எனினும் மிக ஜாக்கிரதையாக இருங்கள்.. ஒரு சிறிய கார் பிரச்சினைக்காக.. ஹோட்டலையும் பெண்களையும் அடித்து நொறுக்கியவர்கள். இந்த படுபாதகர்கள்...
இம்மாதிரியான மோசமான ஊழலுக்கு முக்கியா காரணம் மக்கள் தான் காரணம்... குறிப்பாக சில காரணங்கள் ... பணம் வாங்கிக்கொண்டு ஒட்டுப்போடுவது..சுயநலப்பிராணிகளாக வாழ்வது(இலங்கை தமிழர்கள் கொல்லபட்டபொழுது தமிழர்கள் அனைவரும் காமெடி சானல் பார்த்துக்கொண்டிருந்தோம்)... சினிமாக்காரன் அடுத்து என்ன செய்கிறான்,பேசுகிறான் என்பதில் தான் தமிழர்களின் கவனம்.
எந்த மரியாதையும், மதிப்புகளும் கொடுக்காத கல்வியறிவு கொண்ட மடசாம்பிராணிகளாக இந்த அமைப்பு நம்மை வடித்து எடுத்திருக்கிறது. நல்லக்கண்ணு.. இன்னும் மேசை விசிறியில் தான் வாழ்கிறார்.. இன்றைக்கு சோட்டா கவுன்சிலர் கூட ஏ.சி வைத்திருக்கிறான். ஆனால் நீங்கள் கூட ரஜினியின் பின்புறம் சென்று அவரது இமயமலை புகைப்படங்களை வெளியீட்டிர்கள்...நாம் அனைவரும் பொறுப்பற்று நடந்து இப்பொழுது அவர்களை பார்த்து கண்டிக்கிறோம்.. சன் டிவி தான் தமிழ்நாட்டை பிடித்த மகி கொடிய எய்ட்ஸ் நோய்..அதன் உரிமையாளர்களுக்கு ஏதும் நடக்காதவரை.. தமிழ் சமுகம் இப்படித்தான் புழுத்து அழுகிச்சாகும்.வேறு வழியில்லை.. மிக மோசமான நிலையை நோக்கி தமிழ் சமுகம் வீழ்ந்துக்கொண்டே இருக்கிறது..

ரவி said...

i think you are in love with nira radia

பழமைபேசி said...

//பழமைபேசி.. நீங்களே இது மாதிரி பேசலாமா? இது நாடு சம்பந்தமான பிரச்சினை.. முழுத் தகவலும் தெரிய வேண்டாமா..? சினிமா விமர்சனம் என்றால் சுருக்கலாம். இதைப் போய் எப்படிச் சுருக்குவது..?//

அண்ணே, ஊழல் குறித்தான விரிவான தகவல்கள் மிக அவசியமே! அதை வெளியிடுபவர்கள் அல்லது ஆய்வு செய்பவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்களே!!

அப்படி ஏதும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக, தனிமனிதர்கள் குறித்தான அநாகரிக உரையாடல்களை, அதுவும் வெட்டு துண்டாடப்பட்டவற்றை வெளியிட்டு திசை திருப்பி மலினப்பட்டுக் கொண்டிருக்கிறது காரியம். அதற்கு வழமை போலவே நாமும் பலியாகிக் கொண்டு இருக்கிறோம்.

முடிவாக, நீண்ட, நெடிய, உப்புச் சப்பு இல்லாத உரையாடல்ப் பகுதிகளைத்தான் சாடினேனே தவிர ஊழல் குறித்து எழுதுவதை அல்ல!!!

செங்கோவி said...

/தங்களுடைய முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் செங்கோவி..!/
முதல் வருகையா?..அண்ணே ௩ வருசமா உங்களைப் படிச்சுக்கிட்டிருக்கேன்...பேருவேனா மாறலாம்..ஆனா ஆளு ஒன்னுதான்னே..

Ramesh said...

மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.. ஆனால் இதையெல்லாம் செய்ய வேண்டிய நம் அச்சு ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன.. இணையத்தில் படிக்கும் நமக்குத் தெரிவதை விட இணையத்தில் படிக்கும் வசதி இல்லாத மக்களுக்கு இந்த உண்மை புரியவைக்கப்பட வேண்டும் அல்லவா.. அதை ஏன் இந்த ஊடகக்காரர்கள் செய்ய மறுக்கிறார்கள்.. கூச்சமேயில்லாமல் ஒரு சமுதாயத்தை ஏமாற்றுகிறோமே என்ற எண்ணமே இருக்காதா அவங்களுக்கு...

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

இது உங்களுடைய முக்கியமா பதிவுகளில் ஒன்று.... எனினும் மிக ஜாக்கிரதையாக இருங்கள்.. ஒரு சிறிய கார் பிரச்சினைக்காக.. ஹோட்டலையும் பெண்களையும் அடித்து நொறுக்கியவர்கள். இந்த படுபாதகர்கள்...]]]

அதெல்லாம் பார்த்துக்கலாம் ராஜா.. நீங்கள்லாம் இருக்கும்போது என்ன கவலை..?

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
i think you are in love with nira radia..]]]

அடப்பாவி சண்டாளா.. உனக்கென்னடா பாவம் செஞ்சேன்.. எனக்கு ஏன் இந்தத் தண்டனை..?

இப்படி வாய் மூடாம பேசிக்கிட்டே இருக்கிறவங்களை வைச்சுக்கிட்டு குடும்பமாடா நடத்த முடியும்..?

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...
முடிவாக, நீண்ட, நெடிய, உப்புச் சப்பு இல்லாத உரையாடல் பகுதிகளைத்தான் சாடினேனே தவிர ஊழல் குறித்து எழுதுவதை அல்ல!!!]]]

தம்பி பழமை..

இதில் ரத்தன் டாட்டாவுடன் ராடியா பேசுகின்ற பேச்சு மட்டுமே தனிப்பட்ட விஷயங்கள்.. மற்றவைகள் அனைத்துமே நாட்டு நலன் சம்பந்தப்பட்டவைதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

/தங்களுடைய முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் செங்கோவி..!/

முதல் வருகையா?..அண்ணே ௩ வருசமா உங்களைப் படிச்சுக்கிட்டிருக்கேன். பேருவேனா மாறலாம். ஆனா ஆளு ஒன்னுதான்னே.]]]

ஓ... அவனா நீயி..! முதுகுல டின் கட்டணும்.. நேர்ல வா..

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் ரமேஷ் said...
மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.. ஆனால் இதையெல்லாம் செய்ய வேண்டிய நம் அச்சு ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன.. இணையத்தில் படிக்கும் நமக்குத் தெரிவதைவிட இணையத்தில் படிக்கும் வசதி இல்லாத மக்களுக்கு இந்த உண்மை புரிய வைக்கப்பட வேண்டும் அல்லவா. அதை ஏன் இந்த ஊடகக்காரர்கள் செய்ய மறுக்கிறார்கள். கூச்சமேயில்லாமல் ஒரு சமுதாயத்தை ஏமாற்றுகிறோமே என்ற எண்ணமே இருக்காதா அவங்களுக்கு.]]]

அவர்களுக்கு பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகிவிட்டது.. மக்களுக்காக பத்திரிகைகள் இல்லை. அவர்தம் குடும்பத்தினர் சம்பாதிப்பதற்காக மட்டுமே பத்திரிகைகள் என்றான பின்பு தேச நலன், பொது நலனையெல்லாம் அவர்களிடத்தில் பேச முடியுமா..?

பொன் மாலை பொழுது said...

தொலைக்காட்சிகளில் வேறு வேறு சேனல்களில் இவைகளை பார்த்து பார்த்து குழம்பிப்போய் கடுப்பாகியிருந்தேன்
இருந்தேன். தங்களது விளக்கமான பதிவானது மிக எளிமையாக நடந்தவைகளை கொஞ்சம் நமக்கு காட்டியுள்ளன. மிக்க சிரமம் எடுத்துக்கொண்டுதான் இந்த பதிவினை வெளியிட்டீர்கள் என்பது தெளிவானது. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.ஆனால் என்ன நடந்து என்ன? ஈடு படும் நபர்களை தவிர வேறு எதுவும் மாறப்போவதில்ல என்ற உண்மை புரியம் போது ஒருவித கையால் ஆகாத தனம் நம்மிடம் இருப்பதை வெட்கமின்றி ஏற்றுகொள வேண்டியுள்ளது.அவசியமான பகிர்வுக்கு நன்றி.

உண்மைத்தமிழன் said...

[[[கக்கு - மாணிக்கம் said...

தொலைக்காட்சிகளில் வேறு வேறு சேனல்களில் இவைகளை பார்த்து பார்த்து குழம்பிப் போய் கடுப்பாகியிருந்தேன் இருந்தேன். தங்களது விளக்கமான பதிவானது மிக எளிமையாக நடந்தவைகளை கொஞ்சம் நமக்கு காட்டியுள்ளன. மிக்க சிரமம் எடுத்துக் கொண்டுதான் இந்த பதிவினை வெளியிட்டீர்கள் என்பது தெளிவானது. நல்ல முயற்சி. பாராட்டுக்கள். ஆனால் என்ன நடந்து என்ன? ஈடுபடும் நபர்களை தவிர வேறு எதுவும் மாறப் போவதில்ல என்ற உண்மை புரியம்போது ஒருவித கையால் ஆகாததனம் நம்மிடம் இருப்பதை வெட்கமின்றி ஏற்றுகொள வேண்டியுள்ளது. அவசியமான பகிர்வுக்கு நன்றி.]]]

மிக்க நன்றி மாணிக்கம் ஸார்..!

நம்மால் முடிந்ததை நிச்சயம் சொல்லலாம்..! அக்கம்பக்கத்தினரிடத்தில் இது பற்றிய விஷயத்தையாவது கொண்டு போகலாம்..! இது தேர்தல் நேரத்தில் அவர்களது மனதை மாற்றும் வாய்ப்புண்டு..!

இப்படி இதைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் செய்தால் ஆளும் கட்சிக்கு ஓட்டுக்கள் குறையும் வாய்ப்புண்டு.. எதுவும் நடக்குமே..?

Victor Suresh said...

நண்பரே, உங்களது பதிவில் எனக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உண்டு. இங்கே எழுத வேண்டுமென்று நினைத்தேன். நீளமாக இருந்ததால் ஒரு பதிவாகவே மாற்றி விட்டேன். அதை நீங்கள் http://thabaal.blogspot.com/2010/11/blog-post.html என்னுமிடத்தில் காணலாம். நன்றி.

உண்மைத்தமிழன் said...

[[[ஏவிஎஸ் said...
நண்பரே, உங்களது பதிவில் எனக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உண்டு. இங்கே எழுத வேண்டுமென்று நினைத்தேன். நீளமாக இருந்ததால் ஒரு பதிவாகவே மாற்றி விட்டேன். அதை நீங்கள் http://thabaal.blogspot.com/2010/11/blog-post.html என்னுமிடத்தில் காணலாம். நன்றி.]]]

தகவலுக்கு நன்றி நண்பரே.. வந்து படிக்கிறேன்..!

Unknown said...

unmai thamilanuku,
megavum nanri.thiraiku pinnaal nadakum visayangal vetta velichamaga therigirathu.

உண்மைத்தமிழன் said...

[[[Uma said...
unmai thamilanuku, megavum nanri.thiraiku pinnaal nadakum visayangal vetta velichamaga therigirathu.]]]

வருகைக்கு நன்றி..! வெட்ட வெளிச்சமாகியும் என்ன புண்ணியம்..? அசையாமல் இருக்கிறார்களே பாவிகள்..!?

ஜெய்லானி said...

//இந்த நாடகம் எப்போ முடிஞ்சு, அடுத்த நாடகம் எப்போ தொடங்கும் என்று கேள்வியுடன் நாமும் அடுத்த ஊழலுக்காகக் காத்திருக்கிறோம்..! காத்திருப்போம்..!

ஜெய்ஹிந்த்..! //

சூப்பர் கலக்கிட்டீங்க..இதான் உண்மை..!! :-)

சீனு said...

//நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப் பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை. அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள். அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. "எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது' என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது, இல்லையா?

நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?
//

தல. இந்த இடத்தில் சொல்வது வீர் என்று நினைக்கிறேன். இதற்கு பிறகு மாறுகிறது. அதாவது, இதற்கு பிறகு நீரா சொல்வதை வீர் என்றும், வீர் சொல்வதை நீரா என்றும் மாறி வருகிறது. கவனிக்க...

சீனு said...

//இவ்வளவுக்குப் பிறகும் இவர் பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அரசியல்வியாதிகளுக்கு உரித்தான குணம்தான்..!//

மன்மோகன் சிங்கும் இப்படி மாறிப்போனது தான் சோகம். ஒரு நிர்வாகி அரசியல்வாதியாகிப்போனது கழுதை கட்டெறும்பான கதை.

//இந்த டேப்பில் பல தொடர்ச்சியானவைகள் இல்லை. நன்கு திட்டமிட்டு தேவையானவற்றை மட்டும்தான் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.//

அது எப்படிங்க காங்கிரஸ்காரங்க யார் கூடவும் நீரா பேசவில்லையா? இல்லை, காங்கிரஸ்காரங்க பற்றின பேச்சே எழவில்லையா? இல்லை. இப்படி நீராவின் பேச்சு டேப் செய்யப்படுகிறது என்று காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா? எனக்கென்னவோ நீராவின் பேச்சு டேப் செய்யப்படுகிறது என்று காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும். இது திமுகவை சிக்கவைக்கப்பட்ட வலையாக இருக்கலாமென்று நினைக்கிறேன். இது உண்மையானால் தமிழினத் தலைவர்(!) இது வடக்கு தெற்கு யுத்தம் தொடங்கிவிட்டதாக அறிவிப்பார் :)

//ஆனால் இந்த டேப்புகளை கோர்ட்டில் தாக்கல் செய்யும் சாக்கில் யார் இதனை வெளியில் விட்டது என்பதை விசாரிக்கவே வேறு ஒரு சி.பி.ஐ. வர வேண்டும் போல் தோன்றுகிறது.//

நிச்சயமாக காங்கிரஸாகத்தான் இருக்க வேண்டும். காரணம், தமிழ்நாட்டில் திமுகவை கட்டுக்குள் வைக்கவும், அடுத்த தேர்தலில் திமுகவை அடிபனிய வைக்கவும் பயன்படும் தானே? அதே சமயம், காங்கிரஸ் 'நாங்கள் சுத்தமானவர்கள் பாருங்கள்' என்று சொல்லி அவர்கள் இமேஜை உயர்த்திக் கொள்ளவும் பயன்படும்.

கிட்டத்தட்ட கருணாநிதி திருதராஷ்டிரன் ரேஞ்சில் இருக்கிறார். புத்திர பாசம், தன்னை மற்றவர் ஆட்டுவிக்கப்படுவது என்று :))

//வட இந்திய ஊடகங்களின் வாயை அடக்கவே காங்கிரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட உரையாடல்கள் இவையோ எனத் தோன்றுகிறது. இந்த உரையாடல் வெளிவந்தவுடன் என்.டி.டி.வி. அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை மூடி விட்டது//

இதையெல்லாம் யார் பொதுமக்களுக்கு புரிய வைப்பது என்று தான் தெரியவில்லை?

//இது உங்களுடைய முக்கியமா பதிவுகளில் ஒன்று.... எனினும் மிக ஜாக்கிரதையாக இருங்கள்.. ஒரு சிறிய கார் பிரச்சினைக்காக.. ஹோட்டலையும் பெண்களையும் அடித்து நொறுக்கியவர்கள். இந்த படுபாதகர்கள்...//

ஆமாம் உத.

ரவி,

//i think you are in love with nira radia//

ஒருவேளை உண்மைத் தமிழனும் Berth-க்கு முயற்சி பன்றாரோ? I mean Cabinet Berth... ;)

ஆனா ஒன்னு மட்டும் தெரியுதுங்க. "தீதும் நன்றும் பிறர் தர வாரா"...

நமக்கான ஆப்புகள் ஆங்காங்கே பிக்ஸ் செய்யப்படுகிறது. நாம் தான் அந்த ஆப்பின் மேல் தெரியாமல் உட்காருகிறோம்...

சீனு said...

ஆனாலும் ஒரு பயம்க. இந்த 1,76,000 கோடி பணம் கொடுத்து கடைசியில் நாம் வாங்கியது வெறும் 5000 சொச்சம் உரையாடல் கேஸட்டுகள் தானா?

இதை நெனச்சாத்தாங்க பயம்மா இருக்கு :(

உண்மைத்தமிழன் said...

[[[ஜெய்லானி said...

//இந்த நாடகம் எப்போ முடிஞ்சு, அடுத்த நாடகம் எப்போ தொடங்கும் என்று கேள்வியுடன் நாமும் அடுத்த ஊழலுக்காகக் காத்திருக்கிறோம்..! காத்திருப்போம்..!

ஜெய்ஹிந்த்..! //

சூப்பர் கலக்கிட்டீங்க..இதான் உண்மை..!! :-)]]]

ஜெய்லானி.. வேறென்ன சொல்வது..? இந்தக் கொடுமைக்கு முடிவுதான் எப்போ..?

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...
தல. இந்த இடத்தில் சொல்வது வீர் என்று நினைக்கிறேன். இதற்கு பிறகு மாறுகிறது. அதாவது, இதற்கு பிறகு நீரா சொல்வதை வீர் என்றும், வீர் சொல்வதை நீரா என்றும் மாறி வருகிறது. கவனிக்க...]]]

ஆம்.. உண்மைதான்.. தவறுதான்.. மன்னிக்கணும்.. மாத்திர்றேன்..! நன்றி சீனு ஸார்..!

உண்மைத்தமிழன் said...

சீனு.. உங்களது தொடர்ச்சியான பின்னூட்டங்களுக்கு நன்றிகள்..!

வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று தாத்தா முதலில் எதற்காகச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது ஊழலில் தெற்கு வாழ்கிறது.. வடக்கு தேய்கிறது.. இதுதான் உண்மை..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...
ஆனாலும் ஒரு பயம்க. இந்த 1,76,000 கோடி பணம் கொடுத்து கடைசியில் நாம் வாங்கியது வெறும் 5000 சொச்சம் உரையாடல் கேஸட்டுகள்தானா?
இதை நெனச்சாத்தாங்க பயம்மா இருக்கு :(]]]

நிறையத்தான் இருக்கு.. அத்தனையும் யாரால கேக்க முடியும்னு தெரியலையே..?

Tamilan said...

இவர்களை என்ன செய்தால் சரியாக இருக்கும்

உண்மைத்தமிழன் said...

[[[Tamilan said...
இவர்களை என்ன செய்தால் சரியாக இருக்கும்.]]]

அடித்த கொள்ளைக்காக சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்துவிட்டு, சிறையில் அடைக்க வேண்டியதுதான்..!

வேறென்ன செய்வது..?

abeer ahmed said...

See who owns foonews.info or any other website:
http://whois.domaintasks.com/foonews.info

abeer ahmed said...

See who owns twesto.com or any other website.