மன்மத லீலையை வென்றார் உண்டோ..???

16-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

காலத்தால் அழிக்க முடியாத திரைப்படங்களும், அழியாத திரைப்படப் பாடல்களும் என்று ஒரு பட்டியலிட்டால் அதில் முதலிடத்தில் இருப்பது 1944-ம் ஆண்டு வெளிவந்த 'ஹரிதாஸ்' என்னும் திரைப்படத்தைத்தான் சொல்ல வேண்டும்.

1944-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வெளியான இத்திரைப்படம் சென்னையில் பிராட்வே தியேட்டரில் மட்டும் மூன்றாண்டுகள் தொடர்ந்து ஓடி ஒரு உலகச் சாதனையைப் படைத்தது.




எவரைக் கேட்டாலும் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லும்கையோடு 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' பாடலையும் சேர்த்துத்தான் சொல்கிறார்கள்.

'மன்மத லீலை' என்கிற வார்த்தையின் மீது மக்களுக்கு அதீதமான பாசம் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாமோ என்று இதன் வெற்றியைப் பார்த்து யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதன் பின்னான 50 ஆண்டு காலத்தில் இந்த 'மன்மத லீலை' என்கிற வார்த்தை தமிழகத்து சினிமா ரசிகர்களிடையே 'அந்த மாதிரி' என்ற அடைமொழிக்குள் ஒளிந்து கொண்டது ஏன் என்றுதான் புரியவில்லை.

காமனை அடக்க முடியாமல் சிவனே அல்லல்பட்ட கதை பக்தியாளர்கள் அறிந்ததுதான். காமத்தை வெற்றிகரமாக கடப்பவனே நிம்மதியான மனிதனாக இருக்க முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கலாம்.. காமத்தில் கரை கண்டவனாக இருக்கிறான் என்கிற வார்த்தை பொறாமைத் தீயில் வறுத்தெடுத்த வார்த்தைகளாக சிக்கியிருக்கலாம். ஆனாலும் இந்த காமத்துக்கும், மன்மதலீலைக்குமான தொடர்பு நூற்றாண்டும் தொடர்ந்து இணைந்து வருகிறது.

முதல் முறையாக இந்தப் பாடல் காட்சியை சுற்றுமும், நட்பும் படை சூழ ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில்தான் பார்த்தேன்.

அவ்வப்போது இடையிடையே கோடுகள் குறுக்கும், நெடுக்குமாக பறந்து  படத்தின்  பிரதி என்ன லட்சணத்தில் இருக்கிறது என்பதைப் பறை சாற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே பாடல் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

பாடல்கள் தெள்ளத் தெளிவாகக் காதில் விழுந்தபோது உடன் இருந்த அண்ணன்மார்களும், அப்பாமார்களும் தாளம் தட்டி அதனை வரவேற்று ரசித்தபடியிருந்தார்கள். ஜி.ராமநாதனின் இசையில் பாகவதரின் குரலில் இதுவரையிலும் இல்லாத புது மாதிரியாக பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..!




எனக்கும் டி.ஆர்.ராஜகுமாரியை அபிநயத்துடன் பார்த்தபோது மிகவும் பிடித்திருந்தது.. சிரித்த முகத்துடன் முகப் புருவம் முதற்கொண்டு, உடல் முழுவதையும் ஏதோ ஒருவித நடன முறையுடன் ஆடிக் கொண்டிருந்ததை என் கவனத்தை எந்தப் பக்கமும் திருப்ப விடாமல் பார்த்துக் கொண்டது.

பாகவதரின் மிக அருகே வந்து அமர்ந்து அவர் பாடும் வரிகளை தனது அபிநயத்தாலேயே அவர் விளக்குகின்ற காட்சியில் ரசித்திருந்த நான், “உன்னை நினைந்து நான் தேடி ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ….” என்ற வரிகளைத் தொடர்ந்து  ராஜகுமாரி செய்த அந்த 'பிளையிங் கிஸ்' ஆக்ஷனைப் பார்த்தவுடன் என்னுள் ஏதோ திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சியால் வாவ்.. என்று துள்ளிக் குதித்து கை தட்டினேன்..!

உறவினர்கள் வீடு. என் வயதோ 20. சுற்றிலும் பெண்களும் இருந்தார்கள். அத்தனை பேரும் என்னைப் பார்த்து சிரிக்க.. எனக்கு நிறைய வெட்கமும், தாங்க முடியாத சங்கடமும் இருந்தது. இறுதிவரையில் பார்த்த பின்பு எனக்குள் ஏற்பட்ட பிரமிப்பும், ஆச்சரியமும் கணக்கிலடங்காதது..!

இதற்குப் பின்பு இந்தப் பாடலை எத்தனை முறை நான் பார்த்தேன் என்று எனக்கே தெரியாது.. அத்தனை முறைகள் சலிக்காமல் இன்றுவரையிலும் பார்த்தபடியேதான் இருக்கிறேன்.

ஒரு கவர்ச்சியை, இனக் கவர்ச்சியை, பாலியல் வேட்கையை, சிருங்கார ரசத்தை, காமத்தின் முதல் படியை எவ்வளவு எளிதாக முழுவதும் முற்றும் மூடிய உடையணிந்த நிலையில் நடனத்தாலும், இசையாலும், பாடல் வரிகளாலுமே கிளறிவிட முடியும் என்பதை அந்தக் காலத்திலேயே நிரூபித்திருக்கிறார்களே..! இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்னியை எத்தனை பாராட்டினாலும் தகும்..

அந்தக் கால திரை விமர்சனங்களிலும், இத்திரைப்படத்திற்கு இதுநாள் வரையிலும் வந்திருக்கும் அத்தனை விமர்சனங்களிலும் இந்தப் பாடலுக்கு மட்டும் தனியாக சில பக்கங்களை ஒதுக்கித்தான் இருக்கிறார்கள்.

ஜி.ராமநாதன் இந்தப் பாடலை 'சாருகேசி' ராகத்தில் இசைத்திருக்கிறார். இந்தப் பாடல் புகழ் பெற்ற பின்புதான் 'சாருகேசி' ராகமும் புகழ் பெற்றது என்கிறார்கள். இதற்காக செம்மங்குடி சீனிவாச ஐயர், ஜி.ராமநாதனின் வீடு தேடி வந்து அவரை வாழ்த்திவிட்டுப் போனாராம். தொடர்ந்து சீனிவாச ஐயர் ஸ்வாதித் திருநாளுக்காக இயற்றிய "க்ருபையா பாலய" என்ற பாடலும் இதே ராகத்தில் அமைந்து இதன் பின்புதான் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளிலும் 'சாருகேசி' ராகம் புழங்க ஆரம்பித்தது என்கிறார்கள்.

என்னுடைய இன்னுமொரு ஆச்சரியம் என்னவெனில் அத்தனை கட்டுப்படியான அந்தக் காலக்கட்டத்தில் அப்படியொரு பிளையிங் கிஸ் காட்சிக்கு ராஜகுமாரி எப்படி ஒத்துக் கொண்டிருப்பார்..? பாகவதர் என்ன நினைத்திருப்பார்..? இயக்குநருக்கு இந்தக் கற்பனை எப்படி வந்திருக்கும்..? சென்சார் போர்டில் எப்படி விட்டார்கள்..?

ம்ஹூம்.. இது எல்லாவற்றையும் மறக்கடித்த நிலையில் 
இன்றுவரையிலும் கிறங்கடிக்கிறது இந்தப் பாடல் காட்சி..! மறுபடியும், மறுபடியும் ராஜகுமாரியின் பிம்பமே என் கண்ணில் வந்து விழுகிறது..!

முதலில் பாடலைப் படியுங்கள்..!

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம் ?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
மன்மத லீலையை வென்றார் உண்டோ ?

நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு...

(  ரம்பா….. சுவாமி  ..)

நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு ...
நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு...

என் மதி மயங்கினேன் … நான்
என் மதி மயங்கினேன்... மூன்று உலகிலும்..
என் மதி மயங்கினேன்... மூன்று உலகிலும்..

மன்மத லீலையை வென்றார் உண்டோ

என்னுடனே நீ பேசினால் வாய்
முத்து சிந்தி விடுமோ?
என்னுடனே நீ பேசினால் வாய்
முத்து சிந்தி விடுமோ?

உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ…?
உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ...?

உன்னை நயந்து நான் வேண்டி ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ….?
உன்னை நயந்து நான் வேண்டி ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ....?

ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ - மனங்கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

மன்மத லீலையை வென்றார் உண்டோ..???

அந்த பாடல் காட்சியைப் பாருங்கள்..!

44 comments:

kumar said...

மேட்டர் படம் ஒன்னும் மெட்ராஸ்ல ரிலீசாகலையா ?

nellai அண்ணாச்சி said...

பறக்கும் முத்தமும் அழகு கொஞ்சும் முகமும் ஆஹா ஆஹா

ஸ்ரீநாராயணன் said...

மேட்டர் படம் ஒன்னும் மெட்ராஸ்ல ரிலீசாகலையா ?

indha comment padichittu sirippa adakka mudila...

Unga nelama epdi agidichi parunga....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏனுங்க தாத்தா இந்த படம் நீங்க காலேஜ் படிக்கும்போது வெளியானதா?

எஸ்.கே said...

இந்த பாட்டை ஏற்கனவே டிவியில பார்த்திருக்கேன். பாட்டு பாடும் விதம், பாவனை எல்லாம் இந்த காலத்திற்கு வித்தியாசமா இருந்தாலும் ரசிக்க முடியுது!

செங்கோவி said...

என்ன ஆச்சுண்ணே..திடீர்னு “Old Actress Hot”னு search-ல இறங்கிட்டேங்க..ஆனாலும் ரொம்ப நல்லா இருக்கு..
- செங்கொவி

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1976-ல் வந்த மன்மதலீலை என்னும் கமலஹாசன் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

முதல் காட்சியிலேயே கமல் குதிரையில் பின்னோக்கிச் செல்ல பாகவதரின் அப்பாட்டு பின்புலத்தில் ஒலிக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

எங்கப்பா இந்தப் பாட்டை அருமையா ஹார்மோனியத்துலே வாசிப்பார்.

இதுக்காகவே போனமுறை ஒரு விசிடி வாங்கிப்போனேன்.

நம்ம ஸ்நேகாவைப் (படத்தில்) பார்க்கும்போதெல்லாம் டி ஆர் ராஜகுமாரி நினைவு வந்துருது. முகச்சாயல் ஒன்னா இருக்குல்லே!!!!

இருபதில் இதெல்லாம் சகஜமப்பா:-)))))

உண்மைத்தமிழன் said...

[[[basheer said...
மேட்டர் படம் ஒன்னும் மெட்ராஸ்ல ரிலீசாகலையா?]]]

ஏன் இந்தக் கேள்வி.. அதுவும் என்னிடம் போய்...?

உண்மைத்தமிழன் said...

[[[nellai அண்ணாச்சி said...
பறக்கும் முத்தமும் அழகு கொஞ்சும் முகமும் ஆஹா ஆஹா]]]

ஓஹோ.. ஓஹோ.. அண்ணாச்சி..!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பாடல் வரிகளில் சில திருத்தங்கள்:

1. அது பாரா முகமுமில்லை, பத்ரி முகமுமில்லை, பராமுகம் (உதாசீனப்படுத்துதல்)

2. ...வாய் முத்துதிர்ந்து விடுமோ...(சிதறியுமில்லை, பதறியுமில்லை, வாய் முத்து உதிர்ந்து விடுமோ ..)

ஏதேது சாருகேசி, சியாமா சாஸ்திரின்னெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களே, சீசன் தோஷமா?!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீநாராயணன் said...

மேட்டர் படம் ஒன்னும் மெட்ராஸ்ல ரிலீசாகலையா ?

indha comment padichittu sirippa adakka mudila... Unga nelama epdi agidichi parunga....?]]]

ம்.. எல்லாம் என் நேரம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஏனுங்க தாத்தா இந்த படம் நீங்க காலேஜ் படிக்கும்போது வெளியானதா?]]]

ரொம்ப நல்லவன் ஸார்..!

எங்க அப்பா அப்பத்தான் பொறந்திருந்தாராம்..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
இந்த பாட்டை ஏற்கனவே டிவியில பார்த்திருக்கேன். பாட்டு பாடும் விதம், பாவனை எல்லாம் இந்த காலத்திற்கு வித்தியாசமா இருந்தாலும் ரசிக்க முடியுது!]]]

காலம் மாறினாலும் ரசிக்கும்படியாக எடுப்பவரே இயக்குநர்..! அதுதான் கலைப்படைப்பு..! எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜீவித்திருக்கிறது பாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[SHEN said...
என்ன ஆச்சுண்ணே.. திடீர்னு “Old Actress Hot”னு search-ல இறங்கிட்டேங்க.. ஆனாலும் ரொம்ப நல்லா இருக்கு..
- செங்கொவி]]]

இதுக்காகத்தான்.. ஒரு படைப்பு நமக்குச் சாதாரணமாத்தான் மொதல்ல தெரியும்.. கொஞ்சம் கூர்ந்து அவதானித்தால் அதன் சிறப்பு நமக்குப் புரியும்..

உண்மைத்தமிழன் said...

[[[dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1976-ல் வந்த மன்மதலீலை என்னும் கமலஹாசன் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

முதல் காட்சியிலேயே கமல் குதிரையில் பின்னோக்கிச் செல்ல பாகவதரின் அப்பாட்டு பின்புலத்தில் ஒலிக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்]]]

பார்த்திருக்கிறேன்.. தகவலை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...
எங்கப்பா இந்தப் பாட்டை அருமையா ஹார்மோனியத்துலே வாசிப்பார்.
இதுக்காகவே போனமுறை ஒரு விசிடி வாங்கிப்போனேன்.
நம்ம ஸ்நேகாவைப் (படத்தில்) பார்க்கும்போதெல்லாம் டி ஆர் ராஜகுமாரி நினைவு வந்துருது. முகச்சாயல் ஒன்னா இருக்குல்லே!!!!
இருபதில் இதெல்லாம் சகஜமப்பா:-)))))]]]

ஹி.. ஹி.. டீச்சரம்மா சொன்னா சரிதான்..!

ஸ்நேகா, டி.ஆர்.ராஜகுமாரி.. வாவ்.. எங்களுக்கே தோணாத ஒரு விஷயம்..!

நன்றி டீச்சர்..!

உண்மைத்தமிழன் said...

[[[லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பாடல் வரிகளில் சில திருத்தங்கள்:

1. அது பாராமுகமுமில்லை, பத்ரி முகமுமில்லை, பராமுகம் (உதாசீனப்படுத்துதல்)

2. ... வாய் முத்துதிர்ந்து விடுமோ... (சிதறியுமில்லை, பதறியுமில்லை, வாய் முத்து உதிர்ந்து விடுமோ ..)

ஏதேது சாருகேசி, சியாமா சாஸ்திரின்னெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களே, சீசன் தோஷமா?!]]

ராம்ஜி..

பராமுகம் என்பதற்கு அர்த்தமில்லையே.. பாராமுகம் என்றால்தானே புறக்கணிப்பு என்று அர்த்தம் வரும்..?

கன்பியூஷன்ஸ்..

ஆனாலும் தங்களது வருகைக்கு எனது நன்றி..!

Unknown said...

kaalaththaal azhiyaththu mattumalla, ekkaalaththilum rasikkakoodiya padm,paadal.!!!

puduvaisiva said...

அது போல் அதிக இசைத்தட்டு விற்ற பெருமையும் இப்பாடலுக்கு உண்டு.

இலங்கை வானொலியில் வந்த பல கடிதங்களில் இப்பாடல் வேண்டியே இருக்கும்.

அது போல் நங்கநல்லூர் தேர் திருவிழாவின் போது இரவு இந்த படம் கோயில் வளகத்தில் திரையில் காண்பிக்கப்படும்.

pichaikaaran said...

என்னணே.. டென்ஷன் எல்லாம் குறைஞ்சு நார்மல் லைஃபுக்கு வந்துட்டீங்க போல..
ரொம்ப சந்தோஷம்ணே

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பழக்கதோஷத்தில் பாராமுகமென்று சொல்கிறோம். ஆனால் பராமுகமே சரி.

பராமுகமென்றால் அசட்டைப்படுத்துதல், கவனக்குறைவாக இருத்தல், ‘கண்டுகொள்ளாமல்’ இருத்தல்.

இன்னமும் நம்பிக்கை வரலியா?! இந்தாங்க அகராதி லிங்க்: http://goo.gl/gWvZO

எண்ணங்கள் 13189034291840215795 said...

நெலம இப்படி ஆகிப்போச்சா?

:)

உண்மைத்தமிழன் said...

[[[thamizhan said...
kaalaththaal azhiyaththu mattumalla, ekkaalaththilum rasikkakoodiya padm, paadal.!!!]]]

அப்படி எடுத்திருக்கிறார்கள் பாருங்கள். இதுதான் இயக்குநரின் திறமை..!

தனி காட்டு ராஜா said...

//மறுபடியும், மறுபடியும் ராஜகுமாரியின் பிம்பமே என் கண்ணில் வந்து விழுகிறது..!//

அட .....பாட்டிதானே....சீக்கிரம் மறக்க பாருங்க பாஸ் ....:-))

Prabu M said...

நல்ல பதிவு :)

உண்மைத்தமிழன் said...

[[[♠புதுவை சிவா♠ said...

அது போல் அதிக இசைத்தட்டு விற்ற பெருமையும் இப்பாடலுக்கு உண்டு.

இலங்கை வானொலியில் வந்த பல கடிதங்களில் இப்பாடல் வேண்டியே இருக்கும்.

அது போல் நங்கநல்லூர் தேர் திருவிழாவின்போது இரவு இந்த படம் கோயில் வளகத்தில் திரையில் காண்பிக்கப்படும்.]]]

பழம் பெருமை கொண்ட படங்களில் இப்படம் மட்டுமே இப்போதும் டூரிங் தியேட்டர்களில் ஓடும் பெருமை பெற்றது..!

Simulation said...

இதனையும் பார்த்திருப்பீர்கள்

- சிமுலேஷன்

http://simulationpadaippugal.blogspot.com/2010/11/06.html

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
என்னணே. டென்ஷன் எல்லாம் குறைஞ்சு நார்மல் லைஃபுக்கு வந்துட்டீங்க போல. ரொம்ப சந்தோஷம்ணே..]]

அப்படீல்லாம் சந்தோஷப்படாதீங்க பார்வையாளன்.. ஆடிட்டர் ஜெனரல் அறி்க்கையைப் படித்த பிறகு இன்னும் டென்ஷன் கூடிப் போய் இருக்கேன்..!

பிரசன்னா கண்ணன் said...

எனக்கு தெரிந்த வரையில், ஹரிதாஸ் மூன்று தீபாவளிகள் கண்ட படம்.. அதாவது இரண்டு வருடங்கள் ஓடிய படம் தானே அன்றி மூன்று வருடங்கள் ஓடிய படம் அன்று..

pichaikaaran said...

"ஆடிட்டர் ஜெனரல் அறி்க்கையைப் படித்த பிறகு இன்னும் டென்ஷன் கூடிப் போய் இருக்கேன்"

இவைய்ங்க உங்களை நிம்மதியாவே இருக்க விட மாட்டாய்ங்க போல இருக்கே !!

உண்மைத்தமிழன் said...

[[[லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பழக்க தோஷத்தில் பாராமுகமென்று சொல்கிறோம். ஆனால் பராமுகமே சரி.

பராமுகமென்றால் அசட்டைப்படுத்துதல், கவனக் குறைவாக இருத்தல், ‘கண்டு கொள்ளாமல்’ இருத்தல்.

இன்னமும் நம்பிக்கை வரலியா?! இந்தாங்க அகராதி லிங்க்: http://goo.gl/gWvZO]]]

சரிங்கண்ணே..! எனக்கு அவ்ளோவெல்லாம் தமிழ் அறிவு இல்லீங்கோ.. நிசமாத்தானுங்கோ.. அகராதியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். இதுதான் உண்மைன்னா ஏன் இத்தனை நாளா அத்தனை பேரும் பாராமுகம்ன்னே எழுதித் தொலைஞ்சாங்க..!?

கன்பியூஷன்ஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[பயணமும் எண்ணங்களும் said...

நெலம இப்படி ஆகிப்போச்சா?

:)]]]

ஏன் இப்படி கேட்கிறீர்கள் தோழர்..!

உண்மைத்தமிழன் said...

[[[தனி காட்டு ராஜா said...

//மறுபடியும், மறுபடியும் ராஜகுமாரியின் பிம்பமே என் கண்ணில் வந்து விழுகிறது..!//

அட.... பாட்டிதானே.... சீக்கிரம் மறக்க பாருங்க பாஸ்....:-))]]]

முடியலையே..? மறக்கக் கூடிய முகமா அது..?

உண்மைத்தமிழன் said...

[[[பிரபு . எம் said...
நல்ல பதிவு :)]]]

நன்றி பிரபு..!

உண்மைத்தமிழன் said...

[[[Simulation said...

இதனையும் பார்த்திருப்பீர்கள்

- சிமுலேஷன்
http://simulationpadaippugal.blogspot.com/2010/11/06.html]]]

பார்த்தேண்ணே.. தாங்கள் எழுதியதுதானா? முழுதையும் படித்தேன். நன்றி..! நன்றி..!

நான் கூகிளாண்டவரிடம் கேட்டுப் பெற்ற தமிழ் போரத்தில் இந்தச் செய்தி கிடைத்தது. மூலம் உங்களுடையது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரசன்னா said...
எனக்கு தெரிந்த வரையில், ஹரிதாஸ் மூன்று தீபாவளிகள் கண்ட படம்.. அதாவது இரண்டு வருடங்கள் ஓடிய படம்தானே அன்றி மூன்று வருடங்கள் ஓடிய படம் அன்று..]]]

விசாரிக்கிறேன் ஸார்.. தகவலுக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"ஆடிட்டர் ஜெனரல் அறி்க்கையைப் படித்த பிறகு இன்னும் டென்ஷன் கூடிப் போய் இருக்கேன்"

இவைய்ங்க உங்களை நிம்மதியாவே இருக்க விடமாட்டாய்ங்க போல இருக்கே !!]]]

உண்மைதான் பார்வையாளன். என்னை மாதிரி எத்தனை பேர் மன அழுத்தத்தில் சிக்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை..!

gkrishna said...

மிக அருமையான பதிவு. உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது. ஒரு முறை உங்களுடன் போனில் பேசும் போது உடல் நலம் சரியில்லை என்று சொன்னிர்கள்.
இதே போல் திரு ராகவன் அவர்கள் கூறியது போல் 1976 மன்மத லீலை pattri ஒரு பதிவு எழுதுங்கள் சார் உங்கள் flow of thoughts and flow of writing இஸ் excellant

அதே போல் சில பழைய சினிமா ஸ்டார்ஸ் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையம் ஒரு பதிவு எழுதுவீர்களா படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்

என்றும் அன்புடன்

கிருஷ்ணா

உண்மைத்தமிழன் said...

[[[gkrishna said...
மிக அருமையான பதிவு. உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது. ஒரு முறை உங்களுடன் போனில் பேசும் போது உடல் நலம் சரியில்லை என்று சொன்னிர்கள்.]]]

உங்களை மாதிரியான முகம் பார்க்காமலும் பிரியத்துடன் இருக்கும் அன்பர்கள் இருக்கின்றவரையில் எனக்கென்ன குறை.. நலத்துடனேயே இருக்கிறேன்.. நன்றி கிருஷ்ணா..!

[[இதே போல் திரு ராகவன் அவர்கள் கூறியது போல் 1976 மன்மத லீலை pattri ஒரு பதிவு எழுதுங்கள் சார் உங்கள் flow of thoughts and flow of writing இஸ் excellant.]]]

நன்றி.. நிச்சயம் எழுதுகிறேன்..!

[[[அதே போல் சில பழைய சினிமா ஸ்டார்ஸ் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையம் ஒரு பதிவு எழுதுவீர்களா படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
என்றும் அன்புடன்
கிருஷ்ணா]]]

இட்லிவடையில் எழுதிக் கொண்டுதானே இருக்கிறேன்.. இனியும் எழுதுகிறேன் கிருஷ்ணா..!

Unknown said...

மிகவும் அருமையான பாடல்...

Unknown said...

டி.ஆர்.ராஜகுமாரிக்கு ஏற்ற ஜோடி எம்.கே.டி தான்

வீ காசிநாதன் said...


நடிகை டிஆர் ராஜாகுமாரிக்கு நடிக்க வரும்வரை நாடனம் தெரியாது,'இப்பாடலில் ஒரு தேர்ந்த பரதநாட்டிய நங்கையாய் உருமாறி இருப்பார். அதே போல் சந்திரலேகா என்ற படத்த்தில் இவர் ஆடிய நடனும் புகழ் பெற்றது. அதற்க்கு இணையாக ஆட யாரும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.

வாழ்த்துக்கள்

வீ காசிநாதன் said...


நடிகை டிஆர் ராஜாகுமாரிக்கு நடிக்க வரும்வரை நாடனம் தெரியாது,'இப்பாடலில் ஒரு தேர்ந்த பரதநாட்டிய நங்கையாய் உருமாறி இருப்பார். அதே போல் சந்திரலேகா என்ற படத்த்தில் இவர் ஆடிய நடனும் புகழ் பெற்றது. அதற்க்கு இணையாக ஆட யாரும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.

வாழ்த்துக்கள்