11-11-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சமீபகாலமாக இட்லி, வடை பதிவுகளை ஏன் எழுதவில்லை என்று தொலைபேசியிலும், இமெயிலிலும், பின்னூட்டங்களிலும் தொடர்ந்து விசாரித்தவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி..!.
இட்லி-வடை பதிவுகளில் போட வேண்டியதையெல்லாம் நான் அவ்வப்போது தனித்தனிப் பதிவுகளாகப் போட்டுவிட்டதால்தான் இட்லி-வடை என்ற தலைப்பில் எதையும் எழுத முடியவில்லை.. மன்னிக்கவும்..!
ஏற்கெனவே நான் எழுதியிருந்த இட்லி-வடை பதிவுகளைப் படித்துப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்... அவைகள் அத்தனையையும் தனிப் பதிவுகளாக போட்டிருக்க வேண்டிய விஷயங்கள்தான் என்று..!
அவ்வப்போது எழும் கடுமையான வேலைப் பணிகளுக்கிடையேயும், என் அப்பன் முருகன் கொடுக்கும் சோதனைகளையும் தாண்டி இட்லிவடைக்காக விஷயங்களைத் தேட வேண்டுமெனில் நிரம்ப நேரம் பிடிக்கிறது. சேர்த்து வைத்து போட மனமும் மறுக்கிறது. சட்டென்று பதிவாய்ப் போட்டு பின்னூட்டங்களைப் பார்க்கவே விரும்புகிறது மனம்.
இந்த ஊசலாட்ட மனதின் விளைவாக இன்றைய இட்லி-வடை குறைவான பத்தியச் சாப்பாடு போலத்தான் இருக்கும்..!
நினைத்துப் பார்க்காத எதிர் ஓட்டுகள்..!
இந்த வலையுலகத்தில் நுழைந்து கிட்டத்தட்ட நான்காண்டை நெருங்கி வந்திருக்கும் சூழலில் முதல் முறையாக நேற்றுத்தான் எனது இந்த உணர்ச்சி வேகத்தில் என்கவுண்ட்டருக்கு சபாஷ் போடும் பரிதாப மக்கள் பதிவுக்கு மிக அதிகமான எதிர்ப்பு ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. கூடவே அர்ச்சனைகளும்தான்..!
மக்கள் மசாலா படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளைப்போல உடனுக்குடன் தீர்வை எதிர்நோக்குவதை இதிலிருந்து அறிய முடிகிறது. நீதிமன்றங்களில் தீர்வுக்கான காலக்கட்டம் தாமதமாகிறது என்பதை அனைத்துப் பதிவர்களும் சுட்டிக் காட்டினாலும் அந்த தாமதத்திற்கு யார் காரணம் என்பதையும், அதனை எப்படி நிவர்த்தி செய்வது என்பதைப் பற்றியும் எதுவும் சொல்லாமல் “உடனே தூக்கில் போடு” என்கிறார்கள்.
மக்களின் கருத்துப்படி இந்தப் படுகொலை நல்ல விஷயம் என்றே வைத்துக் கொண்டாலும், இதையே உதாரணமாகக் காட்டி பல அநியாயமான படுகொலைகளையும் இந்த என்கவுண்ட்டர் மூலமாகவே போலீஸார் இனியும் நடத்துவார்கள். இதற்கு முன்னும் நடத்தியிருக்கிறார்கள். உதாரணம் வீரப்பன் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள்..!
இனி பலியாகப் போகும் பல அப்பாவிகளுக்காக இந்த மோகனகிருஷ்ணனை எத்தனை ஆண்டுகளானாலும் பரவாயில்லை என்று சிறையில் வைத்து விசாரித்திருக்கக் கூடாதா..? ஒரு உயிர் முக்கியமா? அல்லது பல உயிர்கள் முக்கியமா?
யோசியுங்கள் மக்களே..!
“சேர்ந்து செஞ்ச தப்பெல்லாம் வெளில வரும்..” - விஜயகாந்துக்கு நடிகர் சந்திரசேகர் எச்சரிக்கை..!
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் பேசிய பேச்சு இது..!
“இந்த நாட்டுல ஒருத்தன், நான் ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’ன்னு சொல்றான். ஒரு நாள் விஜயகாந்த் கலைஞரிடம் வந்து, ‘எனக்கு சரியா தமிழ் உச்சரிப்பு வர மாட்டேங்குது. என்ன செய்யலாம்னு ஒரு யோசனை சொல்லுங்க’ன்னு கேட்டான். அதற்கு கலைஞர் ஒரு வாக்கியத்தை எழுதிக் கொடுத்து, ‘இதைத் தினமும் படித்துப் பயிற்சி செய். தமிழ் உச்சரிப்பு தானாக வந்துவிடும்..’ என்றார். ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்பதுதான் அந்த வாசகம். அப்படி தமிழ் சொல்லிக் கொடுத்த என் தலைவனையே திட்ட இவனுக்கு என்ன தகுதியிருக்கு..?
கலைஞரைத் திட்டினால் பெயர் கிடைக்கும் என்று நினைக்கிறான் இந்த விஜயகாந்த். எழவெடுத்தவனுக்கு என்னத்தைச் சொல்ல..? ஏய் விஜயகாந்த்.. ஒன்று மட்டும் சொல்கிறேன். என் தலைவரைத் திட்டுவதை நிறுத்திக் கொள். இல்லையென்றால்.. நீயும் நடிகன்.. நானும் நடிகன்.. நாம் இருவரும் சேர்ந்து செய்த தவறையெல்லாம், எனக்கு அவமானம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து அனைத்தையும் வெளியில் கொண்டு வரத் தயங்க மாட்டேன்..” என்று பேசியிருக்கிறார்.
என்னய்யா இது அக்கிரமம்..? ஒரே கட்சில இருக்கும்போது கூடமாட விழுந்து எந்திரிக்கிறது.. அப்புறம் வேற கட்சின்னு பிரிஞ்சுட்டா உடனே கூத்தடிச்சதையெல்லாம் வெளில சொல்லிருவேன்னு மிரட்டுறது.. என்ன பிரெண்ட்ஷிப்போ..?
அப்போ இத்தனை நாளா செஞ்ச 'சேட்டை'களையெல்லாம் மறைச்சு வைச்சுக்கிட்டுத்தான் இவரும் யோக்கியம் பேசுறாரா..? இப்படியும் யோசிக்கலாமில்லையா..? உண்மையாக விஜயகாந்தைவிட சந்திரசேகர் மாதிரியான நண்பர்களிடம்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சரான கிடோ வெஸ்ட்டர்வில்லி சமீபத்தில் திருமணம் செய்திருக்கிறார். பெண்ணை அல்ல.. ஒரு ஆணை..

ஜெர்மனியின் ஹோமோ அமைச்சர்..!
ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சரான கிடோ வெஸ்ட்டர்வில்லி சமீபத்தில் திருமணம் செய்திருக்கிறார். பெண்ணை அல்ல.. ஒரு ஆணை..
48 வயதான கிடோ, தான் ஒரு ஹோமோ என்பதை 2003-ம் ஆண்டு தற்போதைய ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மார்கெல்லின் 50-வது பிறந்த நாள் விழாவின்போது மீடியாக்களிடம் வெளிப்படையாக அறிவித்திருந்தார். அதே ஆண்டில் இருந்து தனக்குப் பழக்கமான மைச்சேல் மிரான்ஸ் என்னும் தனது ஹோமோ நண்பரை, இப்போது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.
இந்த நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி சுபயோக, சுபதினத்தில் தனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ நடந்தேறியதாம். பான் நகரின் மேயர்தான் இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.
ஆனாலும் இதில் இன்னும் ஒரு சுவையான விஷயம்.. ஜெர்மனியில் ஹோமோக்கள் திருமணத்திற்கு இன்னமும் முறைப்படியான அங்கீகாரம் தரப்படவில்லையாம். ஆதலால் இது தற்போதைக்கு பதிவு செய்யப்பட்ட பார்ட்னர்கள் என்றே அழைக்கப்படுமாம்..
கிராஸ் சேர்க்கை திருமணத்தில் இருக்கும் சில உரிமைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட பார்ட்னர்கள் என்ற இந்த விதிமுறையின் கீழ் ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு தரப்படுகிறதாம்.
ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள் போன்ற வி.வி.ஐ.பி.யின் மனைவியாக இருந்தால் வெளிநாட்டிற்குப் போகும்போது ஜோடியாக கைகோர்த்தபடி விமானத்தில் இருந்து இறங்கலாம். இங்கே இவர்கள் எப்படி? அதுவும் மணமகன் வெளியுறவுத் துறை மந்திரியாச்சே. வருடத்தில் பாதி நாட்கள் சுற்றிக் கொண்டுதானே இருக்க வேண்டும்.. சந்தேகம் வருகிறதல்லவா?

ஏன் எங்களுக்கு மட்டும் என்ன குறைஞ்சா போச்சு? நாங்களும் முறையான ஜோடிகள்தான் என்பதைப் போல் கிடோ அரசு முறைப் பயணமாக சமீபத்தில் ஜப்பான், சீனாவுக்குச் சென்றபோது தனது பார்ட்னர் மைச்சேலையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
அத்தோடு சீன அதிபர், பிரதமருக்கு தனது பார்ட்னரையும் அறிமுகப்படுத்தி வைத்து அசத்தியிருக்கிறார். இவரல்லவோ ஹஸ்பெண்ட்..? சரி. இதில் யார் ஹஸ்பெண்ட், யார் வொய்ப் என்பது தெரியாததால் கிடோவுக்கு முதல் மரியாதை அளிப்போம்.(புகைப்படத்தில் கண்ணாடி அணிந்திருப்பவர்தான் கிடோ)
வாழ்க மணமக்கள்..!
'டிக் டிக் டிக்' படத்தில் தனது மின்னலடிக்கும் கண்களால் கைது செய்த ஸ்வப்னாவை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். அம்மணியைத் தேடியதற்கு காரணம் சமீபத்தில் சூர்யா டிவியில் நான் பார்த்த ஒரு மலையாளப் படம்.

மும்பையில் அசத்துகிறார் ஸ்வப்னா கண்ணா..!
'டிக் டிக் டிக்' படத்தில் தனது மின்னலடிக்கும் கண்களால் கைது செய்த ஸ்வப்னாவை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். அம்மணியைத் தேடியதற்கு காரணம் சமீபத்தில் சூர்யா டிவியில் நான் பார்த்த ஒரு மலையாளப் படம்.
படத்தில் ஸ்வப்னா வருகின்ற காட்சிகளிலெல்லாம் வஞ்சகமில்லாமல் சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தார். அடப்பாவிகளா..! இதெல்லாம் முன்கூட்டியே நம்ம தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்குத் தெரி்ஞ்சிருந்தா ஸ்வப்னாவுக்கு இன்னும் நிறைய சான்ஸ் கிடைச்சிருக்குமேன்னு தோணுச்சு. அப்புறம்தான் ஆளு எங்க இருக்காங்கன்னு பார்க்கலாம்னு தோணி, தேடிப் பார்த்தேன்.
கிடைக்காத சூழலில் முத்து நிவாஸ் ஹரிஹரசுப்ரமணியன் என்னும் பேஸ்புக் நண்பர் ஒருத்தர் தேடிப் பார்த்து கண்டுபிடிச்சு சொல்லிட்டார். அவருக்கு எனது கோடானுகோடி நன்றி..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஒரு ரவுண்டு அடித்து முடித்த ஸ்வப்னா பின்னாட்களில் ஹிந்தி படங்களில்தான் அதிகம் நடித்தார். தற்போது ராமன் கண்ணா என்னும் ஹிந்தி நடிகருக்கு வாழ்க்கைப்பட்டு மும்பையில் ஈவண்ட் மேனேஜ்மெண்ட், எடிட்டிங், டப்பிங் தியேட்டர்கள் நடத்தும் Sangini Entertainment என்னும் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறாராம் ஸ்வப்னா. கூடவே தனது கலைத்தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நடனப் பள்ளியொன்றையும் அமைத்து நடனம் சொல்லித் தருகிறாராம்.
இந்தப் பள்ளியின் மூலம் பல்வேறு நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறாராம் ஸ்வப்னா.. இந்தக் காணொளி ஆக்லாந்தில் ஸ்வப்னா நடத்திய ஒரு நடன நிகழ்ச்சி பற்றியது.
நீடுழி வாழட்டும்..!
ஒரு விஷயத்திற்காக சிங்களத் திரைப்படங்களை கூகிளாண்டவரில் வலைவீசி தேடிக் கொண்டிருந்தபோது இத்திரைப்படம் கண்ணில்பட்டது.
படத்தின் காட்சிகள் எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே என்று யோசித்தால் மண்டையில் பளிச்சென்று பல்பு ஒளிர்ந்தது. அட இது பயர் படமாச்சே என்று..
டோரண்ட்டில் டவுன்லோடிட்டு முழு படத்தையும் பார்த்தேன். ஒரு சீன்கூட மாற்றமில்லாமல் அப்படியே அச்சுப் பிசகாமல் காப்பியடித்து எடுத்து ஜமாய்த்திருக்கிறார்கள். ம்.. இந்த அளவுக்கு இலங்கையில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா என்று யோசித்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது.

மல்லு படங்களைக் காப்பியடிக்கும் சிங்களத் திரையுலகம்
ஒரு விஷயத்திற்காக சிங்களத் திரைப்படங்களை கூகிளாண்டவரில் வலைவீசி தேடிக் கொண்டிருந்தபோது இத்திரைப்படம் கண்ணில்பட்டது.
படத்தின் காட்சிகள் எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே என்று யோசித்தால் மண்டையில் பளிச்சென்று பல்பு ஒளிர்ந்தது. அட இது பயர் படமாச்சே என்று..
டோரண்ட்டில் டவுன்லோடிட்டு முழு படத்தையும் பார்த்தேன். ஒரு சீன்கூட மாற்றமில்லாமல் அப்படியே அச்சுப் பிசகாமல் காப்பியடித்து எடுத்து ஜமாய்த்திருக்கிறார்கள். ம்.. இந்த அளவுக்கு இலங்கையில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா என்று யோசித்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது.
இந்த விஷயத்தில் மட்டும் அதீத சுதந்திரத்தில் சிங்கள சினிமாக்கள் இருப்பதை அடுத்தடுத்து பார்த்த சில திரைப்படங்களின் காட்சிகள் சொல்லிக் காட்டின. இதாவது பரவாயில்லை.. நான் ஆதி காலத்தில் பார்த்திருந்த ‘தம்புராட்டி’, ‘ரதி நிர்வேதம்’, ‘வைன் அண்ட் வுமன்’, ‘மழு’ போன்ற பிட்டு படங்களைக்கூட அட்டர்காப்பி செய்திருக்கிறார்கள்.
பாவம் நமது மலையாள சினிமா எழுத்தாளர்கள். சில நூறு ரூபாய்களுக்காகவும், ஆயிரம் ரூபாய்களுக்காகவும் எழுதிக் கொடுத்த அவர்களுடைய கதை, படம் இப்படி நாடு விட்டு நாடு போய் படமாகியதுகூட தெரியாமல் மேலே போய்ச் சேர்ந்திருக்கிறார்களே என்று நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது..!
சிங்களப் படவுலகம் சிறக்கட்டும்..!
சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு நடிகை(பெயர் வேண்டாமே..!) சிரஞ்சீவியைப் பற்றிக் குறிப்பிட்டு “சிரு பக்கா ஜென்டில்மேன். அவரை மாதிரியொரு குட் பிரெண்ட் அண்ட் ஆக்டரை நான் பார்த்ததில்லை..” என்று குறிப்பெழுதி வைத்திருந்தார்.
அதற்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் மட்டும் கடுமையாக எதிர்த்து எழுதியிருந்தார்கள். அதில் ஒருவர் எழுதியிருந்த விஷயம் என்னை அதிகம் கவர்ந்தது.
ஒரு படத்தைக் குறிப்பிட்டிருந்த அந்த வாசகர், “இந்தப் படத்தைப் போய் பாருங்க.. இந்தப் படத்தை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் எந்த அளவுக்கு போராட்டம் நடத்துனாங்கன்றதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அப்புறமா உங்க சிரு ஜென்டில்மேனா, இல்லையான்னு சொல்லுங்க..” என்று காரத்தைக் கொட்டியிருந்தார்.

சிரஞ்சீவி ஜென்டில்மேனா..!?

ஆர்வமிகுதியில் அந்தப் படத்தைப் பற்றி கூகிளாண்டவரிடம் துழாவி, துழாவி கண்டு பிடித்துப் பார்த்தேன். படித்தேன். அந்தப் படத்தின் பெயர் அல்லுடு மஜாகா..!
இ.வி.வி.சத்யநாராயணராவ் இயக்கம் செய்த இத்திரைப்படம் டபுள் மீனிங் டயலாக்குகளாலும், ஆபாசமான காட்சியமைப்புகளாலும் அதிகம் பரபரப்பாகப் பேசப்பட்டதாம். பெண்கள் அமைப்புகளெல்லாம் தெருவில் இறங்கி போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால் படம் என்னவோ சூப்பர் டூப்பர் ஹிட்..! 75 தியேட்டர்களில் 50 நாளையும், 27 தியேட்டர்களில் 100 நாட்களையும் கடந்து ஓடியதாம்..

படத்தை அப்படியே மேலோட்டமாக ஓட்டிப் பார்த்தபோது இடையில் வந்த இந்த பாடல் காட்சியைப் பார்த்து கொஞ்சம் பேஸ்த்தடித்துப் போனது உண்மைதான்.
கதைப்படி ரம்பாவும், ரம்யா கிருஷ்ணனும் கதையல்ல நிஜம் லட்சுமியின் பெண்கள் இருவருமே சிரஞ்சீவியை விரும்புகிறார்களாம். ஒரு கனவுப் பாடலில் மாமியாரான லட்சுமியும் சிரஞ்சீவியுடன் களத்தில் குதிக்க.. இந்த நால்வருக்குமான கனவுப் பாடலாகிவிட்டது இது..!
லட்சுமியம்மாவா இது..? ஏன் தெலுங்கில் மட்டும் இப்படி நடிக்கிறார். தமிழ் ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்களோ..?
ஒபாமா வைரஸ் என்று பெயர்தான் வைக்கவில்லை. ஆனால் அத்தனை டெல்லி தொலைக்காட்சிகளும் ஒபாமாவுக்கு ஓவராக ஜால்ரா போட்டுத் தாளித்துவிட்டன. இன்னும் ஒபாமா எந்த நேரத்தில் கக்கூஸ் போனார்..? எப்போது குளித்தார் என்பதை மட்டும்தான் சொல்லவில்லை. மீதி அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டார்கள்.
ஒபாமாவும் பரவாயில்லை. நல்லதொரு பேச்சாளராகத்தான் இருக்கிறார். மூச்சு வாங்கியபடியே எழுதி வைத்து படித்து உயிரையெடுக்கும் நமது ஜனாதிபதிகளிடம் இவர் நிச்சயம் வித்தியாசம்தான்.

மூன்று நாட்கள் படுத்தியெடுத்த ஒபாமா..!

மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரியில் ஒரு மாணவி பாகிஸ்தான் பற்றிக் கேட்ட கேள்விக்கு “நான் முன்பே எதிர்பார்த்தேன்..” என்றபடியே அவர் பதில் சொன்னவிதம் எனக்குப் பிடித்திருந்தது. என்றாலும் இன்னும் நெருக்கிப் பிடித்து நிறைய அவரிடம் கேட்டிருக்கலாம். அப்படியெல்லாம் சங்கடப்படுத்தக் கூடாது என்று முன்கூட்டியே கேள்விகளையெல்லாம் முடிவு செய்துதான் அமர வைத்திருக்கிறார்கள் என்பது சொல்லாமலேயே புரிந்தது.
சரி நம்ம மன்னமோகனசிங்காவது உருப்படியாக பேச்சுவார்த்தை நடத்தினாரா என்றால் அதுவும் இல்லை. பல ஆண்டுகளுக்காக அமெரிக்காவுக்காக ஒற்றர் வேலை பார்த்து 2004-ம் ஆண்டே நமது நாட்டை விட்டு ஓடிப் போன ரவீந்திரசிங் என்ற ரா அதிகாரியை ஒப்படைப்பது பற்றி பேசவே இல்லையாம்..
ராஜமரியாதையோடு காங்கிரஸ் அரசே அனுப்பி வைத்த போபால் யூனியன் கார்பைடு ஆலை அதிபர் ஆண்டர்சனை பற்றியும் பேசவில்லையாம்..! அப்புறம் என்ன மயிறுதாண்டா பேசுனீங்கன்னா.. வேலை வாய்ப்பு, நம்ம காசைக் கொட்டி விமானங்களை வாங்கும் விற்பனை இது பற்றித்தான் பேசினார்களாம்.
என்ன கொடுமை இது..? அப்ப நட்பு நாடுகளை இது மாதிரி ஒற்றர் வேலை பார்க்கிறதெல்லாம் தப்பி்ல்லைன்னு பகிரங்கமா ரெண்டு நாட்டு ஜனாதிபதிகளும் ஓப்பனா சொல்லிரலாமே.. எதுக்காக இப்படி பிடிக்கற மாதிரி, தேடுற மாதிரி, துரத்துற மாதிரியெல்லாம் டிராமா போடுறாங்க..? ம்ஹும்.. முடியல.. இவனுகளையெல்லாம் நினைச்சா கோபம் கோபமா வருது..!
தண்ணியடித்தால் என்ன தப்பு என்றவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ இது..!
மும்பையில் ஆல்பம் ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சரக்கடித்து போதையான தயாரிப்பாளர், மேடையில் ஆடிக் கொண்டிருந்த ஆல்பத்தில் நடித்திருந்த ஒரு நடிகையைப் படுத்திய பாட்டை பாருங்கள்..!
ஏதோ தயாரிப்பாளர் என்பதால் விட்டுத் தொலைத்தார்கள். வேறு ஆளாக இருந்தால் என்னவாயிருக்கும்..?
ஊர் நாட்டாமைகள், கிராம நாட்டாமைகள், பஞ்சாயத்து நாட்டாமைகள், நீதிமன்ற நாட்டாமைகள், அரசியல் நாட்டாமைகள், வலையுலக நாட்டாமைகள் என்ற வரிசையில் தொலைக்காட்சி நாட்டாமைகளும் பெருகிக் கொண்டே போகிறார்கள்.
அந்த வரிசையில் நடிகை சுமலதாவும் இணைந்திருக்கிறார். 50 வயதைக் கடந்தும் இப்போதும் ‘முரட்டுக்காளை’யில் பார்த்த அதே சுமலதாவைப் போலவே தென்படுகிறார். என்ன காயகல்பம் சாப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இப்போதும் அமிதாப்பச்சன், மோகன்லாலுடன் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் தனது காதல் கணவர் அம்பரீஷுடனேயே ஜோடி சேர்ந்து கல்லா கட்டி வருகிறார்.

தண்ணி படுத்திய பாடு..!

சுமலதாவின் கதையல்ல நிஜம்..!

தற்போது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ‘கதையல்ல நிஜம்’ பாணியில் ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்று கச்சிதமாகத் தீர்ப்புகளை வாரி வழங்கி வருவதாகச் சொல்கிறார்கள். இவரைப் பார்த்தால் நாட்டாமை மாதிரி தெரியவில்லை என்றாலும், டிவி கிளாமருக்கு இவரைவிட்டால் வேறு ஆளில்லையோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது..!
தெலுங்கு தெரியாததால் பல இடங்களில் புரியவில்லை என்றாலும் சுமலதாவே கண் கலங்கி அழுவதைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு அழுவாச்சி காவியம்தான் ஓடுகிறது என்பது புரிந்து எனக்கும் கண்ணு கலங்கிருச்சு. நீங்களும் பார்த்து, கேட்டு அழுவுங்கள்..!
“...........மூன்றாவது வலைப்பதிவிலேயே சரக்கு காலியாகி, டைரி லெவலுக்கு வந்து, பின் பத்திரிகைகளில் வந்ததை எடுத்துக் காப்பி-பேஸ்ட் செய்பவர்களும் உண்டு........”
“.............முதல் நாள், முதல் காட்சியே ஏதாவது ஒரு மொக்கைப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் படத்தைப் பார்க்காதீங்க’ என்று அதிரடியாகச் சொல்லுவார்கள். படத்தின் டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட்வரை கதையை அப்படியே ‘விமர்சனமென்ற’ பெயரில் எழுதுவார்கள்.........”
“............பெரும்பாலும் அன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்திகளை வாசித்து டென்ஷனாகி, ‘ஏய் மனிதனே’ டைப்பில் 'பக்கெட்டுக் கவிதைகள்' எழுதுவார்கள் அல்லது வாசித்த செய்தியை அப்படியே டைப் அடித்து வலையில் ஏற்றுவார்கள்..........”
நன்றி : ‘புதிய தலைமுறை’யில் பதிவுலகத் தம்பி, யுவகிருஷ்ணா

படித்ததில் பிடித்தது

பார்த்ததில் பிடித்தது
|
Tweet |
60 comments:
யுவகிருஷ்ணா அவர்களின் கட்டுரையை நானும் படித்தேன் . வலைஉலகைப் பற்றி மிக அருமையாக விவரித்திருந்தார், வாழ்த்துக்கள் இந்த பதிவின் பின்னூட்டத்தின் வாயிலாக..
//ஒபாமாவும் பரவாயில்லை. நல்லதொரு பேச்சாளராகத்தான் இருக்கிறார். மூச்சு வாங்கியபடியே எழுதி வைத்து படித்து உயிரையெடுக்கும் நமது ஜனாதிபதிகளிடம் இவர் நிச்சயம் வித்தியாசம்தான்.//
அனைத்தும் சுவைக்கூட்டி கொடுக்கப்படுள்ளன. சாம்பார், தேங்காய் சட்டினி, கார சட்டினி, புதினா, பொடி என கலந்து ஒரு விருந்தாக படைக்கப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்க இட்ட்லி வடை ....நண்பர்கள் ரூபத்தில் உள்ள போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்(சந்திரசேகர்...)
//சந்திரசேகர்//
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!!
வலது பக்கம் ரெண்டாவதா இருக்கறது நடிகர் திலகம் போல இருக்கு.. எப்படி பேர தவறவிட்டாங்க??
சிரஞ்சீவிக்கு போட்டியாக.. ஜூனியர் NTR...
http://www.youtube.com/watch?v=V22jaFjw2wo
இதுல மாமியர் ரம்யா கிருஷ்ணன்...
அண்ணே சூப்பர். குறைவா இருந்தாலும் நிறைவா இருக்கு சாப்படு.. :)
நீண்ட நாள்களுக்கு பின் வந்தாலும், இட்லி-தோசை.. மிக நன்றாகவே உள்ளது.
ஆச்சரியம், அதிர்ச்சி, புன்னகை, எல்லாமே தோன்றியது! பாரட்டுக்கள்!
படித்ததில் பிடித்தது என்று நீங்கள் குறிப்பிடும் விஷயம் எனக்குப் படித்ததில் பிடிக்காதது. அதை எல்லாம் போட்டு என்னை டென்ஷன் ஆக்காதீர்கள்.
டைட்டில் முதல் எண்டு கார்ட் வரை விமர்சனம் போடுகிறார்கள் என்று சுலபமாகக் கிண்டலடித்து விடலாம். பார்த்த எல்லாக் காட்சிகளையும் நினைவில் வைத்துக் கொண்டு அதை எழுத்தில் கொண்டு வருவது பெரிய விஷயம். அதை விடப் பெரிய விஷயம் அதைத் தட்டச்சு செய்வது.
உங்க ஸ்டைல் அதுதான்.
தலைவரே, நீங்க சுஜாதாவுக்கு எழுதின அஞ்சலிக் கட்டுரை ஒன்னு போதும்.காலா காலத்துக்கும் உங்க பேரை சொல்லும் அது.
அண்ணே : பத்திய சாப்பாடு நல்லாத்தான் இருக்கு.......
அந்த போட்டோல சிவாஜியும் இருக்குற மாதிரி தெரியுது..........
அதிசியமான கலைஞர் படம். திருப்தி சரவணன்.
அண்ணே இந்த விடியோவ எல்லாம் தேடி புடிச்சி போட்டிங்க பாருங்க.. அந்த உழைப்புக்கு தெம்பூட்டும் விதமா... அதுக்கே ஒரு ஓட்டு போடறேன்...
சந்திரசேகர் .... கருனாநிதியவிட இந்த அல்லகைகள் தொல்ல தாங்க முடியல. தி மு க காரனுங்களுக்கு அறிவு கிடையதுங்குறது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதுங்களையெல்லாம் திருத்தவே முடியாது.
SUPER ANNA..KALAKKAL...
“உடனே தூக்கில் போடு” என்கிறார்கள்.
அப்படியெல்லாம் யாரும் சொல்லல... ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு மிருகம் இறந்தவுடன் சற்று ஆறுதல் அடைந்தார்கள். அப்பன் முருகன் நீதி வழங்கியதாக நினைத்து கொண்டார்கள்.அவ்வளவுதான்.
ஒரு விபத்தில் அவன் இறந்து இருந்தாலும் இதே ஆறுதல் கிடைத்து இருக்கும்.
போலீசார் தண்டனை வழங்கியதாக போலீஸ் சொல்லவில்லை. மக்களும் சொல்லவில்லை.
சரி, விசாரணை , விசாரணை என்கிறீர்களே.. இந்த போலீஸ் மீது விசாரனை நடத்துங்களேன்.
முடியது என உங்கலுக்கு தெரியும். உங்கள் அப்பன் முருகன்தான் இதற்கும் நீதி வழங்கியாக வேண்டும்..அப்படி நீதி வழங்கும்போது , இப்போது சிறுமி சார்பாக ஆறுதல் அடையும் மக்களைபோல, மோகன்ராஜ் சார்பாக நீங்கள் ஆறுதல் அடைய வேண்டியதுதான்..
காரணம் சமீபத்தில் சூர்யா டிவியில் நான் பார்த்த ஒரு மலையாளப் படம்.
நான் ஆதி காலத்தில் பார்த்திருந்த ‘தம்புராட்டி’, ‘ரதி நிர்வேதம்’, ‘வைன் அண்ட் வுமன்’, ‘மழு’ போன்ற பிட்டு படங்களைக்கூட அட்டர்காப்பி
பிட்டு பட்த்தை பற்றி பேசி ரொம்ப நாளா ஆச்சேனு நினைத்தேன்.. திரும்ப நல்ல ஃபார்முக்கு வந்து இருக்கீங்க.. சூப்பர்..கீப் இட் அப்
படித்ததில் பிடித்தது
அது நல்ல கட்டுரைதான்.. ஆனால் சில முக்கிய பதிவர்களை மறந்து விட்டார்.. அதை அவரிடமே சொல்லி விட்டேன். அது வேறு விஷ்யம்..
உங்கள் தம்பிகளாகிய புதிய பதிவர்களை கிண்டல் செய்யும் இந்த வரிகளை மட்டும் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என சொலவது எங்களுக்கு பிடிக்கவில்லை.
பழைய தம்பிக்காக ப்திய தம்பிமார்களை விட்டு கொடுத்து விட்டீர்கள்..
பரவாயில்லை..
அளவு சாப்பாடுதான் என்றாலும் அம்சமான சாப்பாடு வழங்கியதற்காக பாசிடிவ் ஓட்டு போட்டு விட்டேன் ...
நடிகை லட்சுமி தமிழில் பல படங்களில் எம்ஜிஆர் உடன் கவர்ச்சியாக நடித்து உள்ளார். மாடுகர வேலன்...
மும்பை பட தயாரிப்பாளார் போதை ஆட்டம் கட்சி, ஒரு செயற்கை விளம்பர உத்தி எனவே தெரிகிறது. இயல்பாக நடந்து இருந்தால் உடனேயே பாதுகாவலர்கள்/பார்வையாளர்கள் அவரை தடுத்து இருப்பர்.
இந்த பதிவு வண்ணத்திரை, முத்தாரம் போன்ற பத்திரிக்கை படித்த உணர்வே.
அந்த சிங்களப்படத்தோட டைட்டில் சொல்லமா விட்டுட்டிங்களே...? டைட்டில் சொல்லுங்க...
//நன்றி : ‘புதிய தலைமுறை’யில் பதிவுலகத் தம்பி, யுவகிருஷ்ணா//
உள்குத்து
?
!
:)
[[[பாரத்... பாரதி... said...
யுவகிருஷ்ணா அவர்களின் கட்டுரையை நானும் படித்தேன் . வலை உலகைப் பற்றி மிக அருமையாக விவரித்திருந்தார். வாழ்த்துக்கள் இந்த பதிவின் பின்னூட்டத்தின் வாயிலாக.]]]
-))))))))))))))
[[[பாரத்... பாரதி... said...
//ஒபாமாவும் பரவாயில்லை. நல்லதொரு பேச்சாளராகத்தான் இருக்கிறார். மூச்சு வாங்கியபடியே எழுதி வைத்து படித்து உயிரையெடுக்கும் நமது ஜனாதிபதிகளிடம் இவர் நிச்சயம் வித்தியாசம்தான்.//]]]
உண்மையைத்தானே சொல்லியிருக்கிறேன்..!
[[[மதுரை சரவணன் said...
அனைத்தும் சுவைக்கூட்டி கொடுக்கப்படுள்ளன. சாம்பார், தேங்காய் சட்டினி, கார சட்டினி, புதினா, பொடி என கலந்து ஒரு விருந்தாக படைக்கப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்க இட்ட்லி வடை. நண்பர்கள் ரூபத்தில் உள்ள போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்(சந்திரசேகர்)]]]
நன்றி சரவணன்.. சந்திரேசகர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள்..!
[[[ஜெய்லானி said...
//சந்திரசேகர்//
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!]]]
அரசியலுக்கு இது சகஜம்தான்.. ஆனால் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் ஸார்.. அதுனால நாமதான் சூதானமா இருந்துக்கோணும்..!
[[[இசை said...
வலது பக்கம் ரெண்டாவதா இருக்கறது நடிகர் திலகம் போல இருக்கு. எப்படி பேர தவற விட்டாங்க??]]]
அதான் மேலேயே சொல்லிட்டாங்களே ஸார்.. இது நடிகர் திலகத்தின் திருமண நாளன்று எடுத்ததுன்னு..!
[[[வெட்டிப்பயல் said...
சிரஞ்சீவிக்கு போட்டியாக.. ஜூனியர் NTR...
http://www.youtube.com/watch?v=V22jaFjw2wo
இதுல மாமியர் ரம்யா கிருஷ்ணன்.]]]
யெஸ் வெட்டி ஸார்.. இதைப் பற்றி நான் முன்னாடியே வேறொரு இட்லிவடைல சொல்லியிருக்கேன். இந்த பாடல் ஷூட்டிங் சமயத்துல ரம்யா கிருஷ்ணன் 3 மாச கர்ப்பம்..!
[[[அகில் பூங்குன்றன் said...
அண்ணே சூப்பர். குறைவா இருந்தாலும் நிறைவா இருக்கு சாப்படு.. :)]]]
மிக்க நன்றி அகில்..!
[[[எஸ்.கே said...
நீண்ட நாள்களுக்கு பின் வந்தாலும், இட்லி-தோசை.. மிக நன்றாகவே உள்ளது. ஆச்சரியம், அதிர்ச்சி, புன்னகை, எல்லாமே தோன்றியது! பாரட்டுக்கள்!]]]
ஸாருக்கு எனது நன்றிகள்..!
[[[Gopi Ramamoorthy said...
படித்ததில் பிடித்தது என்று நீங்கள் குறிப்பிடும் விஷயம் எனக்குப் படித்ததில் பிடிக்காதது. அதை எல்லாம் போட்டு என்னை டென்ஷன் ஆக்காதீர்கள்.
டைட்டில் முதல் எண்டு கார்ட்வரை விமர்சனம் போடுகிறார்கள் என்று சுலபமாகக் கிண்டலடித்து விடலாம். பார்த்த எல்லாக் காட்சிகளையும் நினைவில் வைத்துக் கொண்டு அதை எழுத்தில் கொண்டு வருவது பெரிய விஷயம். அதை விடப் பெரிய விஷயம் அதைத் தட்டச்சு செய்வது. உங்க ஸ்டைல் அதுதான்.
தலைவரே, நீங்க சுஜாதாவுக்கு எழுதின அஞ்சலிக் கட்டுரை ஒண்ணு போதும்.காலா காலத்துக்கும் உங்க பேரை சொல்லும் அது.]]]
ஆஹா.. வாத்தியார் போகும்போது எனக்கும் ஒரு பெருமையைக் கொடுத்திட்டுப் போயிருக்காரு..! அந்தக் கட்டுரையை இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பாத்தான் இருக்கு கோபி..!
[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
அண்ணே : பத்திய சாப்பாடு நல்லாத்தான் இருக்கு. அந்த போட்டோல சிவாஜியும் இருக்குற மாதிரி தெரியுது.]]]
மாதிரி இல்லீங்கண்ணா.. இருக்காரு.. அவர் கல்யாணத்துக்கு அவரே இல்லைன்னா எப்படிங்கண்ணா..?
[[[ஜோதிஜி said...
அதிசியமான கலைஞர் படம். திருப்தி சரவணன்.]]]
நன்றிகள் ஜோதிஜி ஸார்..!
[[[அஹோரி said...
சந்திரசேகர் கருனாநிதியவிட இந்த அல்லகைகள் தொல்ல தாங்க முடியல. தி.மு.க.காரனுங்களுக்கு அறிவு கிடையதுங்குறது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதுங்களையெல்லாம் திருத்தவே முடியாது.]]]
இதுதான் இந்த சந்தர்ப்பவாத நட்பாளர்களின் கொள்கை..! இவர்களிடமிருந்து நாம் தள்ளியே நிற்க வேண்டும்..!
[[[ஜாக்கி சேகர் said...
அண்ணே இந்த விடியோவ எல்லாம் தேடி புடிச்சி போட்டிங்க பாருங்க. அந்த உழைப்புக்கு தெம்பூட்டும் விதமா. அதுக்கே ஒரு ஓட்டு போடறேன்.]]]
ஆஹா.. ஜாக்கிசேகரிடமிருந்து ஒரு பாராட்டும், ஓட்டும் கிடைக்க என்ன புண்ணியம் செஞ்சிருக்கணும்..? நன்றிங்கோ தம்பி..!
[[[அவிய்ங்க ராசா said...
SUPER ANNA.. KALAKKAL...]]]
நன்றிங்க ராசா..!
[[[பார்வையாளன் said...
“உடனே தூக்கில் போடு” என்கிறார்கள்.
அப்படியெல்லாம் யாரும் சொல்லல. ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு மிருகம் இறந்தவுடன் சற்று ஆறுதல் அடைந்தார்கள். அப்பன் முருகன் நீதி வழங்கியதாக நினைத்து கொண்டார்கள். அவ்வளவுதான். ஒரு விபத்தில் அவன் இறந்து இருந்தாலும் இதே ஆறுதல் கிடைத்து இருக்கும்.]]]
அதற்கு வந்த பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள்.. எதிர்ப்பாளர்கள் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியும்..!
[[[பார்வையாளன் said...
காரணம் சமீபத்தில் சூர்யா டிவியில் நான் பார்த்த ஒரு மலையாளப் படம்.
நான் ஆதி காலத்தில் பார்த்திருந்த ‘தம்புராட்டி’, ‘ரதி நிர்வேதம்’, ‘வைன் அண்ட் வுமன்’, ‘மழு’ போன்ற பிட்டு படங்களைக்கூட அட்டர்காப்பி
பிட்டு பட்த்தை பற்றி பேசி ரொம்ப நாளா ஆச்சேனு நினைத்தேன்.. திரும்ப நல்ல ஃபார்முக்கு வந்து இருக்கீங்க.. சூப்பர்..கீப் இட் அப்]]]
சூர்யா டிவில பார்த்தது பிட்டு படம் இல்லை. ரொம்ப நல்ல படம்..!
[[[படித்ததில் பிடித்தது
அது நல்ல கட்டுரைதான்.. ஆனால் சில முக்கிய பதிவர்களை மறந்து விட்டார்.. அதை அவரிடமே சொல்லி விட்டேன். அது வேறு விஷ்யம். உங்கள் தம்பிகளாகிய புதிய பதிவர்களை கிண்டல் செய்யும் இந்த வரிகளை மட்டும் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என சொலவது எங்களுக்கு பிடிக்கவில்லை.]]]
இது உங்களுக்கானதில்லை. எனக்கு மட்டுமே சொந்தமானது..!
[[[பழைய தம்பிக்காக ப்திய தம்பிமார்களை விட்டு கொடுத்து விட்டீர்கள். பரவாயில்லை.
அளவு சாப்பாடுதான் என்றாலும் அம்சமான சாப்பாடு வழங்கியதற்காக பாசிடிவ் ஓட்டு போட்டு விட்டேன்.]]]
மி்க்க நன்றி தம்பி..!
[[[ராம்ஜி_யாஹூ said...
நடிகை லட்சுமி தமிழில் பல படங்களில் எம்ஜிஆர் உடன் கவர்ச்சியாக நடித்து உள்ளார். மாட்டுக்கார வேலன்...]]]
அது ஒரு காலம் ஸார்..! ஆனால் இப்பவுமா? அம்மா கேரக்டரில்தான் கலக்கிக் கொண்டிருக்கிறாரே..!
[[[மும்பை பட தயாரிப்பாளார் போதை ஆட்டம் கட்சி, ஒரு செயற்கை விளம்பர உத்தி எனவே தெரிகிறது. இயல்பாக நடந்து இருந்தால் உடனேயே பாதுகாவலர்கள் / பார்வையாளர்கள் அவரை தடுத்து இருப்பர்.]]]
அவர்தான் தயாரிப்பாளர் என்பதால் தடுத்து நிறுத்துவதற்கு அந்தப் பெண்ணே பெரிதும் தயங்குகிறாள். பார்த்தீர்களாண்ணே..?
[[[இந்த பதிவு வண்ணத்திரை, முத்தாரம் போன்ற பத்திரிக்கை படித்த உணர்வே.]]]
இது சரியா? தவறா? என்று எனக்குத் தெரியவில்லை.. மன்னிக்கவும்..!
[[[kama said...
அந்த சிங்களப் படத்தோட டைட்டில் சொல்லமா விட்டுட்டிங்களே.? டைட்டில் சொல்லுங்க.]]]
நோ.. நான் பெற்ற பாவம், என்னோடவே போகட்டும்..!
[[[VISA said...
//நன்றி : ‘புதிய தலைமுறை’யில் பதிவுலகத் தம்பி, யுவகிருஷ்ணா//
உள்குத்து
?
!
:)]]]
நோ.. டைரக்ட் குத்து..!
தம்பி லக்கியின் கட்டுரையை திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் வாங்கி அங்கயே நின்னு ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நல்லா இருந்துச்சு. அரசியல் பதிவர்கள் பற்றி குறிப்பிடும் போது வினவு, ரோசாவசந்த் குழலி எல்லாரையும் குறிப்பிட்டு இருக்கும் போது உங்க பேரையும் சொல்லியிருக்கலாம். என்னவோ போங்க வர வர லக்கி தம்பிக்கு ஞாபகம் கம்மியாகிடுச்சு:-))
(அப்பாடா கோர்த்து விட்டாச்சு)
அதனால நீங்க கோவப்படாதீங்க, ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. லக்கிய போட்டு தள்ளிடுவோம்:-)))
தலைவரே, நீங்க சுஜாதாவுக்கு எழுதின அஞ்சலிக் கட்டுரை ஒண்ணு போதும்.காலா காலத்துக்கும் உங்க பேரை சொல்லும் அது."
உண்மைதான்.. இப்போது மீண்டும் படித்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது..
இதுவரை படிக்காதவர்கள் , அண்ணன் உண்மைதமிழனின் அந்த சிறப்பு மிக்க சுஜாதா கட்டுரையை இங்கே படிக்கலாம்
எவ்ளோ தகவல்கள்..எவ்ளோ உழைப்பு.எனக்கு பிரமிப்பா இருக்கு சார்..
[[[அபி அப்பா said...
தம்பி லக்கியின் கட்டுரையை திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் வாங்கி அங்கயே நின்னு ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நல்லா இருந்துச்சு. அரசியல் பதிவர்கள் பற்றி குறிப்பிடும் போது வினவு, ரோசாவசந்த் குழலி எல்லாரையும் குறிப்பிட்டு இருக்கும் போது உங்க பேரையும் சொல்லியிருக்கலாம். என்னவோ போங்க வர வர லக்கி தம்பிக்கு ஞாபகம் கம்மியாகிடுச்சு:-))
அப்பாடா கோர்த்து விட்டாச்சு)]]]
கோர்த்து விட்டமைக்கு மிக்க நன்றி!
[[[அபி அப்பா said...
அதனால நீங்க கோவப்படாதீங்க, ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. லக்கிய போட்டு தள்ளிடுவோம்:-)))]]]
ம்
[[[பார்வையாளன் said...
தலைவரே, நீங்க சுஜாதாவுக்கு எழுதின அஞ்சலிக் கட்டுரை ஒண்ணு போதும்.காலா காலத்துக்கும் உங்க பேரை சொல்லும் அது."
உண்மைதான்.. இப்போது மீண்டும் படித்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது..
இதுவரை படிக்காதவர்கள், அண்ணன் உண்மைதமிழனின் அந்த சிறப்பு மிக்க சுஜாதா கட்டுரையை இங்கே படிக்கலாம்.]]]
பரிந்துரைக்கு மிக்க நன்றி..!
நல்ல பதிவு.. இவ்லோ....மேட்டர் இருக்கே..
அருமையான, சுவையுள்ள, நிறைவான சாப்பாடு தந்தமைக்கு நன்றிகள்!
பரவாயில்லையே ஸ்வப்னாவை ஞாபகம் வைத்து தொடர்ந்திருக்கின்றீரே.
அப்படியே இங்கே நியூஜெர்சியில் பட்டரையை போட்டுருக்கும் நம்ம மாதவியை பத்தி ஒரு பதிவு போடுங்களேன். அந்த காலத்து மாதவியின் "நல்ல" படங்கள் நான் தருகின்றேன்.
நல்லாருக்குண்ணே! தெலுங்கு படங்கள் எப்பவும் அப்படித்தான், இந்த மாமியார் மேட்டர் முன்னாடியே கேள்விப்பட்டிருக்கேன். சொன்னால் மனவாடுகள் உடனே தமிழ் படங்களைக் குறை சொல்லுவார்கள். அதெப்படி சொல்லி வைத்தார் போல நடிகளை அனைவரும், தெலுங்கு படத்திற்குப் போய்விட்டால் இப்பிடி என்ன கருமம் செய்யச் சொன்னாலும் பொத்திக்கொண்டு செய்கிறார்கள்.தமிழில் வந்து அவன் கூப்பிட்டான், இவன் அறைந்துவிட்டான் என்று அலப்பறை கொடுக்கவேண்டியது!
இட்லி வடையில்..நடந்தது என்ன...நல்லாத்தான் இருக்கு,டிவிட்டரில் அடிக்கடி உங்கள் பெயரை உ.த. என்று குறிப்பிடும் லக்கி உங்கள் பெயரை எப்படி மறப்பார்?ம்ம்ம் என்னென்னமோ நடக்குது. இட்லி வடை சூப்பர்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.
sujavirku tribute supero super.fantastic memory in describing the incident by scene by scene and words...very good futures is awaiting.
[[[அமுதா கிருஷ்ணா said...
எவ்ளோ தகவல்கள். எவ்ளோ உழைப்பு. எனக்கு பிரமிப்பா இருக்கு சார்..]]]
நன்றி.. நன்றி.. நன்றி..!
[[[பிரியமுடன் ரமேஷ் said...
நல்ல பதிவு.. இவ்லோ.... மேட்டர் இருக்கே.]]]
எல்லாம் உங்களுக்காகத்தான் ரமேஷ்..!
[[[Karikal@ன் - கரிகாலன் said...
அருமையான, சுவையுள்ள, நிறைவான சாப்பாடு தந்தமைக்கு நன்றிகள்!]]]
நன்றி கரிகாலன் ஸார்..!
[[[உசிலை விஜயன் said...
பரவாயில்லையே ஸ்வப்னாவை ஞாபகம் வைத்து தொடர்ந்திருக்கின்றீரே.
அப்படியே இங்கே நியூஜெர்சியில் பட்டரையை போட்டுருக்கும் நம்ம மாதவியை பத்தி ஒரு பதிவு போடுங்களேன். அந்த காலத்து மாதவியின் "நல்ல" படங்கள் நான் தருகின்றேன்.]]]
சென்ற மாதம் நான் இட்ட இட்லி-வடையில் மாதவியைப் பற்றி எழுதியிருக்கிறேன் விஜயன்..!
அதுக்காக "அந்த" படங்களை அனுப்பாம விட்ராதீங்க.. அனுப்பி வைங்க..
[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லாருக்குண்ணே! தெலுங்கு படங்கள் எப்பவும் அப்படித்தான், இந்த மாமியார் மேட்டர் முன்னாடியே கேள்விப்பட்டிருக்கேன். சொன்னால் மனவாடுகள் உடனே தமிழ் படங்களைக் குறை சொல்லுவார்கள். அதெப்படி சொல்லி வைத்தார் போல நடிகளை அனைவரும், தெலுங்கு படத்திற்குப் போய்விட்டால் இப்பிடி என்ன கருமம் செய்யச் சொன்னாலும் பொத்திக் கொண்டு செய்கிறார்கள். தமிழில் வந்து அவன் கூப்பிட்டான், இவன் அறைந்து விட்டான் என்று அலப்பறை கொடுக்க வேண்டியது!]]]
நாம கொடுத்து வைச்சது அவ்ளோதான் ராமசாமி ஸார்..!
அந்த முதல் பெயரை கொஞ்சம் மாத்தித் தொலைங்களேன்.. கூப்பிடறதுக்கு ரொம்பச் சங்கடமா இருக்கு..!
[[[thamizhan said...
இட்லி வடையில்.. நடந்தது என்ன... நல்லாத்தான் இருக்கு, டிவிட்டரில் அடிக்கடி உங்கள் பெயரை உ.த. என்று குறிப்பிடும் லக்கி உங்கள் பெயரை எப்படி மறப்பார்? ம்ம்ம் என்னென்னமோ நடக்குது. இட்லி வடை சூப்பர். தொடருங்கள். வாழ்த்துக்கள்.]]]
நன்றி தமிழன் ஸார்..!
[[[thamizhan said...
sujavirku tribute supero super. fantastic memory in describing the incident by scene by scene and words. very good futures is awaiting.]]]
நன்றி தமிழன் ஸார்..! நமது வாத்தியாரை நாம் சாகின்றவரையிலும் நம்மால் மறக்க முடியாது..!
அந்த எம்பெருமாள் முருகனை விட கூகிள்ஆண்டவனை ரொம்ப தான் நம்பி இருக்கீங்க போல..
(இது வஞ்சபுகழ்ச்சி கிடையாதுங்கஅண்ணா)
இருப்பினும் சுமலதாவை டிவியில் பார்த்ததும் அவரை பற்றி துலாவி துப்பு துலக்கி நினச்சத நடத்தி நிறைவேத்துறீங்க. Congrats...
[[[musictoday said...
அந்த எம்பெருமாள் முருகனைவிட கூகிள்ஆண்டவனை ரொம்பதான் நம்பி இருக்கீங்க போல..
(இது வஞ்சபுகழ்ச்சி கிடையாதுங்கண்ணா)
இருப்பினும் சுமலதாவை டிவியில் பார்த்ததும் அவரை பற்றி துலாவி துப்பு துலக்கி நினச்சத நடத்தி நிறைவேத்துறீங்க. Congrats.]]]
நன்றி.. நன்றி.. கூகிளாண்டவனும் முருகனும் வேறு, வேறல்ல நண்பரே..!
Post a Comment