13-11-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ்ச் சினிமா சற்றுத் தொய்வடையும்போதெல்லாம் ஏதேனும் ஒரு புதிய படைப்பு வெளியாகி திரையுலகத்திற்கு கொஞ்சம் நம்பிக்கையூட்டும். அந்த வரிசையில் 'களவாணி'க்குப் பின்பு வந்திருப்பது இந்த 'மைனா'.
இந்த மண்ணில் இன்னமும் சுரண்டியெடுக்கப்பட வேண்டிய கதைகளும், கதைக்களங்களும் நிறையவே உள்ளன என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது இத்திரைப்படம்.
கதாபாத்திரங்கள் மட்டுமின்றி லொகேஷனே மற்றொரு கதாபாத்திரமாக உலா வந்திருப்பதும் இத்திரைப்படத்தில்தான்.
லட்சத்து கோடி ரூபாய் அளவு நஷ்டத்திற்கு நாட்டையே ஆளாக்கிவிட்டு ஒரு மந்திரியே, "ராஜினாமா செய்ய மாட்டேன். நான் தவறே செய்யவில்லை" என்று கூச்சநாச்சமில்லாமல் புழுகிக் கொண்டிருக்கும்போது அதுபோன்ற சிகப்பு நாடாவுக்குள் புதைந்திருக்கும் அரசுத் துறைகளின் விதிமுறைகளினால் அல்லல்பட்ட அரசுத்துறையின் விசுவாசமிக்க ஊழியர்களின் கதையை இன்னொரு பக்கம் இதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

'கூறு கெட்ட குப்பை' என்னும் சொலவடைக்கு மிகப் பொருத்தமானவன் சுருளி என்னும் இந்தப் படத்தின் ஹீரோ.. தன் பால்ய வயதில் இருந்தே பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும் வெறிகொண்டலையும் மைனா தனக்கில்லை என்று சொல்லும் மைனாவின் அம்மாவைத் போட்டுத் தாக்கிவிட.. அவள் கொடுத்த புகாரின்பேரில் பெரியகுளம் கிளைச்சிறையில் அடைக்கப்படுகிறது. நாளைக்கு அவளுக்குத் திருமணம் என்ற செய்தி சிறையில் அவனுக்குக் கிடைத்த பின்பு, மேலும் வெறி கொண்டவனாகி சிறையில் இருந்து தப்பிக்கிறான்.
எந்த விதிமீறலையும், எந்தச் சட்டமீறலையும் மனதில் கொள்ளாமல் தனது காதலை நிறைவேற்றுவது என்பதையே ஒரு நபர் லட்சியமாகக் கொண்டு தனது சொந்த ஊருக்குச் சென்றவன் தனது தேவதையின் திருமணத்தை தடுத்து நிறுத்துகிறான்.
அவன் தப்பிப் போக வாய்ப்பளித்த குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்படும் அபாயத்தில் இருக்கும் மாதச் சம்பளக்காரர்களான தலைமை வார்டனும், துணை வார்டனும் காவல்துறைக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்காமல் தாங்களே சுருளியைத் தேடிப் பிடித்து மீண்டும் அழைத்து வந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவனைத் தேடிப் போக.. சுருளியைப் பிடித்தார்களா.. இல்லையா.. என்பதுதான் படத்தின் கதை..
தமிழுக்கு நிச்சயம் இது புதுமையான கதைதான். என்ன எழவு கதையைத் தோண்டியெடுத்தாலும் அதில் காதல் இல்லாமல் இருக்க முடியாது என்பதால் இதில் காதல்தான் மெயின் சப்ஜெக்ட்.
காதல் ஒன்று மட்டுமே திரையரங்குக்கு ரசிகர்களை வரவழைக்கிறது என்று தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஒருங்கே நம்புகிறார்கள். வேறு வழியில்லை. முதல் மூன்று நாட்கள் கூடும் கூட்டம் இளையோர் பட்டாளம்தான். அவர்களுக்குப் பிடித்துவிட்டால் மேலும் கூட்டம். குடும்பத்துக்கேற்ற கதையெனில் சற்று லேட் பிக்கப்பாகும்.. இதுவும் ஆகவில்லையெனில் மூட்டையைக் கட்ட வேண்டியதுதான். அதனால்தான் தயாரிப்புகளும், இயக்கங்களும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரிஸ்க் எடுக்க மறுக்கின்றன.
'கண்ணோடு காண்பதெல்லாம்', 'கிங்', 'கொக்கி', 'லீ', 'லாடம்' ஆகிய படங்களுக்குப் பிறகு தனது ஆறாவது படைப்பான இந்த 'மைனா'வில்தான் புகழ் உச்சத்திற்குச் சென்றிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமோன். (கூடுதல் தகவல் ஒன்று : சேரன் இயக்கிய 'பாரதி கண்ணம்மா' படத்தை கன்னடத்தில் ரீமேக்கும் செய்திருக்கிறார் பிரபு) இவரது முந்தைய நான்கு படங்களின் அடித்தளமுமே ஹாலிவுட் படங்கள்தான் என்றாலும், இந்த ஐந்தாவது படம் மட்டும் நம் மண்ணில் இருந்தே எடுக்கப்பட்டு விண்ணை முட்டும் வெற்றியை பெற்றிருக்கிறது என்பதை 'டிவிடியில் சுடும் இயக்குநர்கள் சங்க'த்தின் தோழர்கள் புரிந்து கொண்டால் நலம்.

கிட்டத்தட்ட 65 நாட்கள் படப்பிடிப்பு நடித்தியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். மிகக் கடின உழைப்பு. நிச்சயமாக உழைத்த உழைப்பு வீணாகவில்லை. ஜிம்மிஜிப்பை இத்தனை அடி உயரத்திற்குக் கொண்டு சென்று அதனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே பிரமிப்பூட்டுகிறது. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு இது ஒன்றுக்காகவே நூறு சல்யூட் அடிக்கலாம்.
'பூம்பாறை', 'அட்டக்கத்தி' என்று இதுவரையில் கேமிராக்கள் நுழையாத இடங்களிலெல்லாம் நுழைந்து திரிந்திருக்கிறது கேமரா. வண்டிப் பாதையில் ஜீப்பில் செல்லும் காட்சிகளெல்லாம் இதுவரையில் மலையாளப் படங்களில்தான் பார்த்திருப்பார்கள் தமிழகத்து மக்கள். இன்றைக்கு அவர்களது சொந்த மாநிலத்திலேயே இப்படியொரு சூழலிலும் சனங்கள் வாழ்கின்றன என்பதையும் காண வைத்த இயக்குநருக்கு மீண்டும் ஒரு நன்றி.
நடிகர்கள் தேர்வில் மிக மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். பருத்தி வீரன் டைப்பான ஹீரோவுக்கு விதார்த்தின் தாடியும், பேசும் ஸ்டைலும் பெரிதும் ஒத்துப் போயிருக்கின்றன. தன்னையும், மைனாவையும் சேர்த்து வைத்து கிண்டலடிக்கும் சிறுவனிடம், “எலேய் போயிரு.. இதுதான் பேசும்..” என்று செருப்பைத் தூக்கிக் காண்பித்து பேசும் காட்சியில் வெகு யதார்த்தம்..
இது ஒன்றில்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் போகப் போக படத்தின் எந்தக் காட்சியிலுமே அந்த சுருளி கேரக்டரைவிட்டு அவர் வெளியில் வரவேயில்லை.. மைனாவைத் தூக்கிக் கொண்டு ஓடுகின்ற காட்சியிலும், மருத்துவரிடம் சிகிச்சை செய்யும்படி சொல்லும் காட்சியிலும் கேமிராவுக்கு ஈடுகொடுத்து அவர் பேசுகின்ற மலையாளம் கலந்த தமிழ் நகைச்சுவையோடு, சோகத்தையும் சேர்த்துக் கொடுத்து.
மைனா தனக்கில்லை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் துவங்குகின்ற படத்தின் பேயோட்டம் இறுதிவரையில் தொடர்ந்ததுதான் திரைக்கதையின் வெற்றி. ஹோட்டலில் சாப்பிடுகின்ற காட்சியில் எந்தக் கூச்சமும் இல்லாமல் சாப்பிடுவதும், பேசுவதுமாக இருக்கின்ற அந்தக் காட்சியை என் நிஜ வாழ்க்கையில் பல முறை திண்டுக்கல்லில் சந்தித்திருக்கிறேன். ஏன் சில பேர் இதற்கெல்லாம் கூச்சப்படுவதில்லை என்று அப்போது பல கேள்விகள் எனக்குள் எழுந்திருக்கின்றன. இதன்படி பார்த்தால் எத்தனையோ சுருளிகளை என் வாழ்க்கையில் நான் சந்தித்திருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது.

'சிந்துசமவெளி'க்கு முன்பாகவே இத்திரைப்படம் வெளியே வந்திருந்தால் கதாநாயகி அமலாவுக்கு இதைவிடவும பெரிய பெயர் நிச்சயம் கிடைத்திருக்கும். இப்படியொரு முகப்பருவோடு கிடைக்கக்கூடிய முகவெட்டை தேர்வு செய்திருப்பது இயக்குநரின் ரசனையைத்தான் காட்டுகிறது. முதல் படம் என்பதே தெரியவில்லை என்பது கூடுதல் தகுதி. 'சிந்துசமவெளி'யின் விமர்சனத்திலும் நான் குறிப்பிட்டது இதைத்தான். திரையுலக ராஜபாட்டை கம்பளம் விரித்து வைத்து காத்திருக்கிறது இந்த அம்மணிக்கு.
தம்பி ராமையாவை பல காமெடி காட்சிகளில் வடிவேலுவோடு பார்த்து, பார்த்து சலித்துப் போய் இருக்க.. இங்கே பார்க்க பிரெஷ்ஷாக இருக்கிறார். படத்தின் டெம்போ குறையாமல் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருப்பது இவர்தான். மூணாறில் ஆட்டோ ஸ்டாண்டில் "லோக்கல் போலீஸை கூப்பிடு..." என்று அடம் பிடிக்கும் சுருளியையும், "அடிச்சுக் கொன்னே புடுவேன்" என்று எகிறிக் குதிக்கும் தலைமை வார்டன் சேதுவையும் ஒரு சேர சமாளிக்கும் அந்தக் காட்சி ஒன்றே போதும் இவருக்கு.
தலைமை வார்டன் கேரக்டரில் நடித்திருக்கும் சேது இறுக்கமான, அதே சமயம் யதார்த்தமான ஒரு மனிதராக ஜொலித்திருக்கிறார். சப்ஜெயில் என்றால் எப்படியிருக்கும் என்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கும் இயக்குநருக்கு ஒரு சபாஷ் போட வேண்டும்.

சேது ஜெயிலுக்கு வரும் காட்சியில் வாசலில் சின்னப் பையன்கள் கிரிக்கெட் விளையாடும்போது பந்து ஜெயிலுக்குள் போய் விழுந்து விடுகிறது. அந்தப் பந்து செல்லுக்குள் இருக்கும் சுருளியின் கையில் சிக்க அதைத் தொடர்ந்துதான் ஜெயில் காட்சி துவங்குகிறது. “அடித்த பந்து ரப்பர்.. ஆனால் சுருளி கையில் எடுக்கும் பந்து காரக் பந்து. பிராப்பர்ட்டீஸ் மிஸ் பண்ணிட்டாங்கப்பா..” என்று மிகப் பெரும் கண்டுபிடிப்பை கண்டறிந்து சொன்னார் என் பக்கத்தில் அமர்ந்திருந்த வருங்காலத் தமிழ்த் திரைப்பட விடிவெள்ளியான பதிவுலக இயக்குநர் ஒருவர்.
லொட, லொட ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் போல் செல்போனில் பேசியே தனது பிறந்த வீட்டை ஆட்சி செய்யும் மனைவியை இத்தனை நாள் பொறுத்து அவர் குடும்பம் நடத்தியதே பெரிய விஷயம் என்று என்னுடன் படம் பார்த்த இன்னொரு வலையுலகப் பெரிசும் சொன்னது. அவரவர் அனுபவம் அவரவர்க்கு..
தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்குப் போக முடியாத கோபம்.. மனைவியைச் சமாளிக்க முடியவில்லையே என்ற கோபம்.. இப்படி மேடும், பள்ளத்திலுமா அலைய விட்டுட்டானே என்ற கோபம்.. எல்லாமா சேர்ந்து ஹோட்டலில் சாப்பிடும்போது, "கஞ்சா கேஸில் உள்ள தள்ளி முட்டியை உடைக்கிறேண்டா" என்று கொந்தளிக்கும் காட்சியில் எனக்கு எந்த சட்டவிரோதமும் முதலில் தோணவில்லை. நானாக இருந்தாலும் இப்படித்தான் கோபப்படுவேன்.
"அக்யூஸ்ட்டு தப்பிச்சிட்டான்மா. நீ ஊருக்குப் போ. நான் பின்னால வரேன்" என்று சொல்லச் சொல்ல.. "எப்போ வர்றீங்க..?" என்பதை மட்டும் திருப்பித் திருப்பிக் கேட்கும் அந்த மனைவி கேரக்டரில் நடித்தவர் செம ஷார்ப்பு மாமூ. எங்கிட்டிருந்துதான் பிடிச்சாங்கன்னு தெரியலை..
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் மைனாவின் அம்மா கேரக்டரில் நடித்தவர். தன்னை கை நீட்டி அடித்த சுருளியை பொரிந்து தள்ளும் காட்சியிலும், மைனாவை மீட்க வரும் காட்சியிலும், அரிவாளால் வெட்ட வரும் காட்சியிலும் தத்ரூபம்.. ஏதோ மண்ணின் மாந்தர்கள் பருத்தி வீரனில் மட்டும்தான் வெளிப்பட்டார்கள் என்றில்லை. இனி இப்படத்திலும் என்று சொல்லிக் கொள்ளலாம்.

முகத்தையே காட்டாமல் ஒரு மனைவி கேரக்டரையும், எப்போதும் சீட்டு விளையாட்டிலேயே குறியாய் இருக்கும் அப்பன் கேரக்டரும், சுருளியைத் தொடவே பயப்படும் அந்த வாத்தியான் கேரக்டருமாக ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்திருக்கிறார் இயக்குநர்.
பஸ்ஸில் இருந்து காப்பாற்றும்படி தம்பி இராமையா சொல்லும்போது சுருளி சொல்கின்ற பதிலையும், தொடர்ந்து மைனாவின் கோரிக்கையால் அவர்களைக் காப்பாற்றுகின்ற செயலும்தான் படத்தின் உயிர்நாடி. அதேபோல் அந்தக் கண்ணாடி விரிசலடைந்தபடியிருக்கும் காட்சி(இதை ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தில் பார்த்திருக்கிறேன். எது என்று தெரியவில்லை) மற்றும சேதுவைக் காப்பாற்றும் காட்சியில் கேமிராவும், இயக்கமும் பம்பரமாய் சுழன்றிருக்கிறார்கள்.
உண்மையில் படம் இங்கேயே முடிவு பெற்றுவிட்டது என்று சொல்லலாம். ஆனால் அதன் பின்பும் கொண்டு வந்து கடைசியில் இருவரையுமே காவு கொடுத்தது நீளம்தான் என்றாலும் படத்தின் முடிவு சோகத்தில்தான் முடிய வேண்டும் என்ற கட்டாயமோ என்னவோ இயக்குநருக்கு.. கண் கலங்க வைத்துவிட்டார் இறுதியில்..
இமானின் இசையில் 'மைனா', 'மைனா' பாடலும், அந்த பேருந்தில் பாடுகின்ற பாடலும் திரும்பவும் ஒரு முறை கேட்க வேண்டும்போல இருந்தது. பாடல் காட்சிகளில்தான் எத்தனை, எத்தனை ஷாட்டுகள்..? தப்பியோடுகின்ற காட்சியில் போட்டிருந்த இசையமைப்பை கேட்டுவிட்டு இறுதியில் இமான்தான் இசையமைப்பாளர் என்பதை நம்ப முடியவில்லை. அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறார் இமான்.. கங்கிராட்ஸ்..
இனி எடுப்பதற்கு கதையே இல்லை.. ரசிப்பதற்கு ரசிகர்களே இல்லை என்றெல்லாம் இன்றைய இயக்குநர்கள் கதைவிடாமல், உண்மையிலேயே மக்களுக்குள்ளேயே இருக்கின்ற இது போன்ற கதைகளை, பார்க்கின்ற விதத்தில் எடுத்துக் கொடுத்தால் அந்த இயக்குநர்களை நிச்சயம் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் கைவிடாது.
மைனா தவற விடவே கூடாத தமிழ்த் திரைப்படம்..!
இத்திரைப்படத்தின் கதாநாயகியான அமலாவின் மேல், தீவிர வெறி கொண்ட ரசிகராக மாறிவிட்ட தமிழகத்தின் வருங்கால விடிவெள்ளி பதிவுலக இயக்குநர் அண்ணன் தண்டோரா மணிஜிக்காக இந்த வீடியோ காட்சி..

|
Tweet |
53 comments:
படத்தைவிட நீளமா எழுதியிருக்கீங்க....
ரொம்ப ரசிச்சிருக்கீங்க... ஹ்ம்ம் பார்த்துட்டா போச்சு :)
இந்த படத்துக்கு விமர்சனம் எழுத் மெனகெட்ருப்பதை பாராட்ட தான் தோன்றுகிறது.
ஒவ்வொரு பதிவுக்கும் அதிக கவனம் எடுத்துக்கொள்வது தெரிகிறது.
நன்றிகள்.
I will see tomorrow annaa
dvd vanthathukku appuram than pakkanumnga..
பக்கம் பக்கமா எழுதனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு எழுதுவீங்களோ... தமிழ்மணத்தில் முதல் ரேன்க் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்...
நேத்துதா அந்த படம் பாத்தேன்,என்னவோ பண்ணிடுச்சு...நல்ல படம் பாத்த திருப்தி மட்டும் மிச்சம்.அந்த கண்ணாடி உடையும் காட்சி,வாண்டட் படத்துல இருக்கும்.இன்னொரு ஹாலிவுட்லையும் பாத்ததா நியாபகம்...
விமர்சனம் சூப்பர்...தம்பி ராமைய்யா,எப்போதுமே ரசிக்கத்தக்கவர்..குறிப்பாக ஜில்லுன்னு ஒரு காதல் படத்துல வடிவேலுக்கு ட்ரைன் டிக்கெட் போடசொல்லும் போது,அவர் மனைவி,இந்த பாட்டிய தூக்கிட்டு போக உதவும் அவருக்கும் சேத்து டிக்கெட் போட சொல்லுவார்.அப்போ வடிவேல் ராமையாகிட்ட கேப்பார்..என்னடா அப்டீன்னு..அதுக்கு அவரோட ரிப்லை"ஆமா பெரிய பாட்டி,அதல்லா ஈசியா தூக்கிருவீங்கன்னே"அப்டீன்னு,டைமிங்,ரைமிக் ஓட சொல்வார்..இப்போ நெனச்சாலும் சிரிப்பு வருது..
சேது..போலிஸ் ஆபிஸர்..நல்ல நடிப்பு..அவரது மனைவி கேரக்டர்...யாருக்குமே அமையக்கூடாதுன்னு வேண்டவைக்கிராங்க...
ஹீரோ,ஹீரோயின் பத்தி சொல்லவே தெவையில்ல..வெயிட்டு காட்டிருக்காங்க..
எல்லாத்துக்கும் மேல ப்ரபு சாலமன்க்கு ஒரு மெகா சல்யூட்...
அவர் ரிலீஸுக்கு முன்னாடி,நீயா நானா'ல பேசும்போதே,ஒரு வித கான்ஃபிடண்ட் ஓட பேசுனார்..அப்பவே,நெனச்சே...இந்த பயலுக்குள்ள என்னவோ இருக்கு...படத்த பாத்துப்புடனும்னு...
வாழ்த்துக்கள்...
neththu raaththiri paarththn romba arumaiyaana kathai and kathaikkalam romba rasichchip paarththen. climax neenga sonnathu polthaan romba neeeelam. 5vaathu padaththil pugal uchchikku poyirukkiraar prabu. matraya padangal konjam coppy type thaan aannaa ithu romba puthu kathai neenga solli iruppathu maaththiri namma oorulaye innum sollap padaatha vizhviyal niraiya irukku.
[[[பிரபு. எம் said...
படத்தைவிட நீளமா எழுதியிருக்கீங்க. ரொம்ப ரசிச்சிருக்கீங்க... ஹ்ம்ம் பார்த்துட்டா போச்சு :)]]]
அவசியம் பாருங்க பிரபு..!
[[[Indian Share Market said...
இந்த படத்துக்கு விமர்சனம் எழுத் மெனகெட்ருப்பதை பாராட்டதான் தோன்றுகிறது.]]]
அனைத்து விமர்சனங்களுமே இப்படித்தான் ஸார்..! எதையும் எளிதாகச் சொல்லிவிடலாம். எழுதிவிட முடியாது..!
[[[பாரத்... பாரதி... said...
ஒவ்வொரு பதிவுக்கும் அதிக கவனம் எடுத்துக் கொள்வது தெரிகிறது.
நன்றிகள்.]]]
தங்களது தொடர்ச்சியான கவனத்திற்கும், வருகைக்கும், உற்சாகமான பின்னூட்டங்களுக்கும் நன்றிகள் ஸார்..!
[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
I will see tomorrow annaa.]]]
வாழ்க வளமுடன்..!
[[[அகில் பூங்குன்றன் said...
dvd vanthathukku appuramthan pakkanumnga..]]]
ஏன்.. எந்த நாட்டில் இருக்கிறீர்கள் அகில்..?
[[[philosophy prabhakaran said...
பக்கம் பக்கமா எழுதனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு எழுதுவீங்களோ.]]]
அப்படியில்ல பிரபா.. ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு மாதிரி..! விமர்சனத்தின் நீளம் படத்திற்கு படம் மாறுபடும்..
[[[தமிழ்மணத்தில் முதல் ரேன்க் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.]]]
மிக்க நன்றி.. எல்லாம் உங்களது ஆசீர்வாதத்தினால்தான்..!
[[[H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...
நேத்துதா அந்த படம் பாத்தேன்.. என்னவோ பண்ணிடுச்சு. நல்ல படம் பாத்த திருப்தி மட்டும் மிச்சம். அந்த கண்ணாடி உடையும் காட்சி, வாண்டட் படத்துல இருக்கும். இன்னொரு ஹாலிவுட்லையும் பாத்ததா நியாபகம்.
விமர்சனம் சூப்பர். தம்பி ராமைய்யா, எப்போதுமே ரசிக்கத்தக்கவர். குறிப்பாக ஜில்லுன்னு ஒரு காதல் படத்துல வடிவேலுக்கு ட்ரைன் டிக்கெட் போட சொல்லும் போது,அவர் மனைவி, இந்த பாட்டிய தூக்கிட்டு போக உதவும் அவருக்கும் சேத்து டிக்கெட் போட சொல்லுவார். அப்போ வடிவேல் ராமையாகிட்ட கேப்பார். என்னடா அப்டீன்னு. அதுக்கு அவரோட ரிப்லை "ஆமா பெரிய பாட்டி, அதல்லா ஈசியா தூக்கிருவீங்கன்னே" அப்டீன்னு, டைமிங், ரைமிக் ஓட சொல்வார். இப்போ நெனச்சாலும் சிரிப்பு வருது..
சேது. போலிஸ் ஆபிஸர். நல்ல நடிப்பு. அவரது மனைவி கேரக்டர். யாருக்குமே அமையக் கூடாதுன்னு வேண்ட வைக்கிராங்க.
ஹீரோ, ஹீரோயின் பத்தி சொல்லவே தெவையில்ல. வெயிட்டு காட்டிருக்காங்க. எல்லாத்துக்கும் மேல ப்ரபு சாலமன்க்கு ஒரு மெகா சல்யூட்.
அவர் ரிலீஸுக்கு முன்னாடி, நீயா நானா'ல பேசும்போதே, ஒருவித கான்ஃபிடண்ட் ஓட பேசுனார். அப்பவே, நெனச்சே இந்த பயலுக்குள்ள என்னவோ இருக்கு. படத்த பாத்துப்புடனும்னு.
வாழ்த்துக்கள்...]]]
தங்களுடைய முதல் வருகைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!
பின்னூட்டத்திலேயே விமர்சனம் செய்தமைக்கும் நன்றிகள்.. உங்களுடைய இந்த பின்னூட்டம் படிப்போரை நிச்சயம் படத்தை பார்க்க வைக்கும்..!
விமர்சனம் டாப்பு பாஸ்..
பரவால்ல தேறிட்டீங்க ;)
நல்ல விமர்சனம்.. படம் பார்த்துட்டாப்போச்சு..
http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post_12.html
ஒரு தவறான பதிவுக்கு பிராயச்சித்தம் செய்யுற மாதிரி அடுத்தடுத்து நல்ல பதிவுகளா போட்டு அசத்துறீங்க...
சினிமா , எழுத்து என இரண்டிலும் உங்களுக்கு இருக்கும் ஆழந்த ஞானத்தை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி...
[[[தீப்பெட்டி said...
விமர்சனம் டாப்பு பாஸ்.. பரவால்ல தேறிட்டீங்க ;)]]]
அப்பாடா.. இப்பத்தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு..!
[[[Riyas said...
நல்ல விமர்சனம்.. படம் பார்த்துட்டாப் போச்சு..]]]
அவசியம் பாருங்க ரியாஸ்..!
[[[பார்வையாளன் said...
ஒரு தவறான பதிவுக்கு பிராயச்சித்தம் செய்யுற மாதிரி அடுத்தடுத்து நல்ல பதிவுகளா போட்டு அசத்துறீங்க.]]]
எனது எந்தப் பதிவுமே என்னளவில் தவறானது இல்லை பார்வையாளன்..!
[[[சினிமா, எழுத்து என இரண்டிலும் உங்களுக்கு இருக்கும் ஆழந்த ஞானத்தை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.]]]
நன்றி.. நன்றி.. நன்றி..!
[[[பித்தன் said...
neththu raaththiri paarththn romba arumaiyaana kathai and kathaikkalam romba rasichchip paarththen. climax neenga sonnathu polthaan romba neeeelam. 5vaathu padaththil pugal uchchikku poyirukkiraar prabu. matraya padangal konjam coppy type thaan aannaa ithu romba puthu kathai neenga solli iruppathu maaththiri namma oorulaye innum sollap padaatha vizhviyal niraiya irukku.]]]
வருகைக்கு நன்றி பித்தன்ஜி.. இன்னுமா தமிழ் டைப்பிங் பிரச்சினை தீரவில்லை..?
வழக்கம்போல் உங்களுக்கே உரிய முத்திரையை [விமர்சனத்தில்]அருமையாக பதித்துள்ளீர்கள் எழுத்துநடை அற்புதம் சார்...
மைனா கண்டிப்பாக பார்த்தேத் தீர வேண்டிய படம்
பிரபு சாலமன் சாருக்கும் மற்றும் அனைத்து [மைனா] கலைஞர்களுக்கும் ஒரு சல்யூட்
இனிமேல் இளசுகளின் வசனம்
”லவ் பன்னுங்க சார் லைப் நல்லாருக்கும்”
படத்தின் முடிவுதான்
”இது காதல் மறுக்கப்பட்ட தேசம்” என்பதை உறுதி செய்கிறது.
நன்றி
நட்புடன்
மாணவன்
வழக்கம்போல் விமர்சனம் அருமை...
பிரபு சாலமலமனிமன் ஆறவது படம் என நினைக்கிறேன்..!!அவரது முதல் படம் அர்ஜீன் நடித்த "கண்ணோடு காண்பதெல்லாம்".அந்த படத்தில் டைட்டிலில் "பிரபு" என போட்டிருப்பார்."கிங்"ல்" A.X.சாலமன் என டைட்டிலில் வரும்.அப்புறம் பிரபுசாலமன் ஆனார் என்பதாக நினைவு...!
'களவாணி'க்குப் பின்பு வந்திருப்பது இந்த 'மைனா' ....உண்மைதான் அண்ணா.
[[[மாணவன் said...
வழக்கம்போல் உங்களுக்கே உரிய முத்திரையை [விமர்சனத்தில்] அருமையாக பதித்துள்ளீர்கள் எழுத்து நடை அற்புதம் சார். மைனா கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம்.
பிரபு சாலமன் சாருக்கும் மற்றும் அனைத்து [மைனா] கலைஞர்களுக்கும் ஒரு சல்யூட்.
இனிமேல் இளசுகளின் வசனம்
”லவ் பன்னுங்க சார் லைப் நல்லாருக்கும்”
படத்தின் முடிவுதான் ”இது காதல் மறுக்கப்பட்ட தேசம்” என்பதை உறுதி செய்கிறது.
நன்றி
நட்புடன்
மாணவன்]]]
நன்றி மாணவன்..! காதலிப்பது தவறில்லை என்றாலும், அதில் கூடுதல் தகுதிகளை எதிர்பார்ப்பது நமது சமூகத்தின் வழக்கமாக உள்ளது. அதுதான் நம்மிடையே உள்ள பிரச்சினை..!
[[[♥♪•வெற்றி - VETRI•♪♥ said...
வழக்கம்போல் விமர்சனம் அருமை...
பிரபு சாலமலமனிமன் ஆறவது படம் என நினைக்கிறேன்..!!
அவரது முதல் படம் அர்ஜீன் நடித்த "கண்ணோடு காண்பதெல்லாம்".அந்த படத்தில் டைட்டிலில் "பிரபு" என போட்டிருப்பார். "கிங்"ல்" A.X.சாலமன் என டைட்டிலில் வரும். அப்புறம் பிரபுசாலமன் ஆனார் என்பதாக நினைவு...!]]]
தகவலுக்கு மிக்க நன்றிகள் வெற்றி.. பதிவிலும் திருத்திவிட்டேன்..!
ரொம்ப நன்றி அண்ணெ..டிக்கெட் வாங்கி படத்துக்கு அழைத்து போனதற்கும் , அமலாவை டெடிகேட் பண்ணதுக்கும்
படம் பார்த்தேன்.படம் எனை மிகவும் பாதித்தது.படத்தின் முடிவு அதிர்ச்சியாக இருப்பினும் அந்த முடிவுதான் படத்தை பேசவைக்கிறது,அசைபோட வைக்கிறது.அருமை.அந்த கண்ணாடி உடையும் காட்சி முதலில் வ்ந்தது ஜுராசிக் பார்க் என்கின்ற படத்தில்.
[[[SHAHUL said...
'களவாணி'க்குப் பின்பு வந்திருப்பது இந்த 'மைனா'. உண்மைதான் அண்ணா.]]]
இது போன்றே அனைத்துப் படங்களும் நல்ல கதையம்சத்துடன் வரக் கூடாதா..?
[[[மணிஜீ...... said...
ரொம்ப நன்றி அண்ணெ.. டிக்கெட் வாங்கி படத்துக்கு அழைத்து போனதற்கும், அமலாவை டெடிகேட் பண்ணதுக்கும்..]]]
படம் பார்த்த பின்னாடி ஏஸி ஹோட்டல்ல சிக்கன் 65 + சிக்கன் ரைஸ் வாங்கி உபகாரம் செஞ்சதுக்கு உங்களுக்கும் எனது நன்றிண்ணே..!
[[[புலிகுட்டி said...
படம் பார்த்தேன். படம் என்னை மிகவும் பாதித்தது. படத்தின் முடிவு அதிர்ச்சியாக இருப்பினும் அந்த முடிவுதான் படத்தை பேச வைக்கிறது, அசை போட வைக்கிறது. அருமை. அந்த கண்ணாடி உடையும் காட்சி முதலில் வ்ந்தது ஜுராசிக் பார்க் என்கின்ற படத்தில்.]]]
நன்றி நண்பரே..!
முடிவு உருக்கமானதாக இருந்தால்தான் தமிழகத்து மக்களிடம் மார்க் வாங்க முடியும் என்று நம்மூர் இயக்குநர்கள் நினைக்கிறார்கள்..!
Hallow anna
As usual good writing and i think you may fall in the love with the heroin
thalaivaree.. படத்தில் ஒரு கேமரா தவிர யூனிட்டே இல்லையாம். என் படத்தில் வேலை செய்த யூனிட் தான் அதற்கும் அதனால் நோ. ஜிம்மி ஜிப்..
[[[Sundar said...
Hallow anna... As usual good writing and i think you may fall in the love with the heroin.]]]
ஹி.. ஹி.. ஹி..! பழக்க தோஷம். ஆம்பளைத்தனமாச்சே..!
[[[shortfilmindia.com said...
thalaivaree.. படத்தில் ஒரு கேமரா தவிர யூனிட்டே இல்லையாம். என் படத்தில் வேலை செய்த யூனிட்தான் அதற்கும் அதனால் நோ. ஜிம்மி ஜிப்.]]]
நானும் விசாரித்தேன் கேபிளு.. கேமிரா யூனிட் ஒண்ணுதான். ஆனால் சில இடங்களில் ஜிம்மி ஜிப்பை பயன்படுத்தியிருக்கிறார்கள். மூணாறு நகரில் நடக்கும் காட்சிகளிலும், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பேருந்து விபத்து ஏற்படும் இடங்களிலும்..!
அண்ணே ,முதல்ல கை குடுங்க. இப்போ பதிவுலகில் நீங்க தான் டாக் ஆஃப் டவுன் டாக் ஆஃப் சிட்டி எல்லாம் முதலிடம் நிலைக்க வாழ்த்துக்கள். விமர்சனம் வழக்கம் போல் அருமை.
>>>'கண்ணோடு காண்பதெல்லாம்', 'கிங்', 'கொக்கி', 'லீ', 'லாடம்' ஆகிய படங்களுக்குப் பிறகு தனது ஆறாவது படைப்பான இந்த 'மைனா'வில்தான் புகழ் உச்சத்திற்குச் சென்றிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமோன். (கூடுதல் தகவல் ஒன்று : சேரன் இயக்கிய 'பாரதி கண்ணம்மா' படத்தை கன்னடத்தில் ரீமேக்கும் செய்திருக்கிறார் பிரபு)>....>>..
சரியாகச்சொன்னீர்கள்
மக்களே..!
இன்றைக்கு பிரபு சாலமோன் பற்றி கூடுதலாக ஒரு தகவலும் கிடைத்தது.
சேரன் இயக்கிய 'பாரதி கண்ணம்மா' படத்தினை கன்னடத்தில் ரீமேக்கும் செய்திருக்கிறாராம் பிரபு.
அப்படிப் பார்த்தால் 'மைனா', பிரபுவின் ஏழாவது படம் என்றாகிறது.
அண்ணே,இந்தப்படம் விமர்சனம் போட ஏன் லேட்?பெரிய பட்ஜெட் படமும் இல்லை டிக்கெட் ஈஸியா கிடைச்சிருக்குமே?
[[[சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே, முதல்ல கை குடுங்க. இப்போ பதிவுலகில் நீங்கதான் டாக் ஆஃப் டவுன் டாக் ஆஃப் சிட்டி எல்லாம் முதலிடம் நிலைக்க வாழ்த்துக்கள். விமர்சனம் வழக்கம் போல் அருமை.
>>>'கண்ணோடு காண்பதெல்லாம்', 'கிங்', 'கொக்கி', 'லீ', 'லாடம்' ஆகிய படங்களுக்குப் பிறகு தனது ஆறாவது படைப்பான இந்த 'மைனா'வில்தான் புகழ் உச்சத்திற்குச் சென்றிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமோன். (கூடுதல் தகவல் ஒன்று : சேரன் இயக்கிய 'பாரதி கண்ணம்மா' படத்தை கன்னடத்தில் ரீமேக்கும் செய்திருக்கிறார் பிரபு)>....>>
சரியாகச் சொன்னீர்கள்]]]
எனக்கு இன்றைக்குத்தான் தெரிந்தது சி.பி.சி.!
வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..!
//தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்குப் போக முடியாத கோபம்.. மனைவியைச் சமாளிக்க முடியவில்லையே என்ற கோபம்.. இப்படி மேடும், பள்ளத்திலுமா அலைய விட்டுட்டானே என்ற கோபம்.. எல்லாமா சேர்ந்து ஹோட்டலில் சாப்பிடும்போது, "கஞ்சா கேஸில் உள்ள தள்ளி முட்டியை உடைக்கிறேண்டா" என்று கொந்தளிக்கும் காட்சியில் எனக்கு எந்த சட்டவிரோதமும் முதலில் தோணவில்லை. நானாக இருந்தாலும் இப்படித்தான் கோபப்படுவேன்.//
நேற்றைக்கு போட வேண்டிய பின்னூட்டம் படம் பார்த்துட்டு இப்ப.
படத்தில் நிறைய யதார்த்த முகங்களுக்காக இயக்குநருக்கு பாராட்டு சொல்லிகிட்டு இப்ப உங்களை கவனிக்கலாம்:)
அதென்ன நானாயிருந்தாலும் அப்படித்தான் கோபப்படுவேன்னு ஒரு மலைப்பாதை சறுக்கல்?சரி இந்த கோபமாவது மழைப்பாதையில வழுக்கிடுச்சின்னு வச்சுக்குவோம்.அதுக்குப் பிறகு பெரிய போலிசுக்கு வந்த கோபத்துல என்கவுண்டர்ல போடுறேன் பார்ன்னு கோபம் எகிறுதே! உணர்ச்சி வேகத்துல உங்களுக்கு நிறைய மைனஸ் ஓட்டு வாங்கித்தந்த பதிவுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.
பிரபு சாலமன் மிக அற்புதமான இயக்குனர் என்பதை நிருபித்துவிட்டார். அற்புதமான டீம் ஒர்க். ஒளிப்பதிவு மிக எதார்த்தம். தயவு செய்து மற்ற தமிழ் இயக்குனர்கள் இதை பார்க்கவேண்டும். பார்த்தப்பின்பாவது பார்முலா டைரக்சனை விடட்டும். தமிழ் திரையுலகம் தப்பிப்பிழைக்கட்டும் இனியாவது. அற்புதமான விமர்சனம். நல்லப்படங்களை நாம்தான் கொண்டாடவேண்டும் . வாழ்த்துக்கள், உங்களுக்கும் சேர்த்துதான்.
இரண்டே விஷயங்கள்தான்... தம்பி ராமையாவுடன் மைனா அவர் வீட்டுக்குப்போயிருக்கலாம். சேது ஏன் அவளை அனுப்பவில்லை என்பது தெரியவில்லை. இரண்டாவது, சேதுவின் வீட்டுக்குப்போகும்போது சேதுவின் மனைவியை அக்கா என்றழைப்பதற்குப் பதிலாக, அண்ணி என்றழைத்திருந்தாலும், இந்தச் சம்பவங்கள் நடந்திருக்காது. கடைசியில் சேது எல்லோரையும் காவு வாங்குவது கொஞ்சம் ஓவர்.
[[[ராஜ நடராஜன் said...
அதென்ன நானாயிருந்தாலும் அப்படித்தான் கோபப்படுவேன்னு ஒரு மலைப்பாதை சறுக்கல்? சரி இந்த கோபமாவது மழைப் பாதையில வழுக்கிடுச்சின்னு வச்சுக்குவோம். அதுக்குப் பிறகு பெரிய போலிசுக்கு வந்த கோபத்துல என்கவுண்டர்ல போடுறேன் பார்ன்னு கோபம் எகிறுதே! உணர்ச்சி வேகத்துல உங்களுக்கு நிறைய மைனஸ் ஓட்டு வாங்கித் தந்த பதிவுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.]]]
எனக்கும் அது நியாபகத்துக்கு வராமல் இல்லை ராஜநடராஜன் ஸார்..!
அதுதான் மனித இயல்பு.. முதலில் கொந்தளிப்பது.. கோபப்படுவது. பின்பு ஆற, அமர யோசித்தால்தான் உண்மை புலப்படும். அதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.
[[[உதயகுமார் said...
பிரபு சாலமன் மிக அற்புதமான இயக்குனர் என்பதை நிருபித்துவிட்டார். அற்புதமான டீம் ஒர்க். ஒளிப்பதிவு மிக எதார்த்தம். தயவு செய்து மற்ற தமிழ் இயக்குனர்கள் இதை பார்க்க வேண்டும். பார்த்த பின்பாவது பார்முலா டைரக்சனை விடட்டும். தமிழ் திரையுலகம் தப்பிப் பிழைக்கட்டும் இனியாவது. அற்புதமான விமர்சனம். நல்லப் படங்களை நாம்தான் கொண்டாட வேண்டும் . வாழ்த்துக்கள், உங்களுக்கும் சேர்த்துதான்.]]]
மிக்க நன்றி உதயகுமார்.. மற்ற இயக்குநர்களுக்கு நிச்சயம் இது ஒரு பாடமான படம்தான். சந்தேகமில்லை..!
அதேபோல் அந்தக் கண்ணாடி விரிசலடைந்தபடியிருக்கும் காட்சி(இதை ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தில் பார்த்திருக்கிறேன். எது என்று தெரியவில்லை)
Jurassic Park 2nd Part.
[[[படகோட்டி said...
இரண்டே விஷயங்கள்தான்... தம்பி ராமையாவுடன் மைனா அவர் வீட்டுக்குப்போயிருக்கலாம். சேது ஏன் அவளை அனுப்பவில்லை என்பது தெரியவில்லை.
இரண்டாவது, சேதுவின் வீட்டுக்குப் போகும்போது சேதுவின் மனைவியை அக்கா என்றழைப்பதற்குப் பதிலாக, அண்ணி என்றழைத்திருந்தாலும், இந்தச் சம்பவங்கள் நடந்திருக்காது.
கடைசியில் சேது எல்லோரையும் காவு வாங்குவது கொஞ்சம் ஓவர்.]]]
அதுதான் சார் கதை..! வேற வழியில்லை.. ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்.. ஒவ்வொருத்தர் பார்வையும் வேற, வேறதானே..?
[[[sivadesign said...
அதேபோல் அந்தக் கண்ணாடி விரிசலடைந்தபடியிருக்கும் காட்சி(இதை ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தில் பார்த்திருக்கிறேன். எது என்று தெரியவில்லை)
Jurassic Park 2nd Part.]]]
தகவலுக்கு நன்றி..! ஒண்ணு, ரெண்டு படம் பார்த்தா ஞாபகமிருக்கும்..!
[[[சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே, இந்தப் படம் விமர்சனம் போட ஏன் லேட்? பெரிய பட்ஜெட் படமும் இல்லை டிக்கெட் ஈஸியா கிடைச்சிருக்குமே?]]]
முதல் நாள் சென்றேன். டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் சற்றுத் தாமதமாகச் சென்றேன்..!
Naanum padam parthen.....
Yenaku ezhulum kelvi ondruthan?
yen ellarum paruthiveran ponra padangalaye thirumba thirumba yadartha cinema endra peyril edukkranga?Veru kadai kazham nammidam illaya?
Malaya thirai padam madri eppodum mudivu sogamaga irukka vendum endra kattyama?(Catchy ending polum)
Asalatu hero/oru suri yedayum kavalai padha hero endru kathuvatu parthu pazhakina KILISHE vishaymagave padhu...
Yidu ellavatrkum mel yen chinna vayadu mudal kadal/..... poll ella padangalilum kanpipadthu jiranika mudiyada kadai... Inum tamil cinema ethanai paruthiveeranaya maatri maatri edkum? Apuram ini yavadu directors siru vadaydu kadal sollvadai niruthunga pa!!! bore adikidu :)
கண்ணாடி விரிசலடைந்தபடியிருக்கும் காட்சி, ஜுராசிக் பார்க் படதில் வரும் அண்ணே.. #தகவல்
[[[sundal said...
Naanum padam parthen.....
Yenaku ezhulum kelvi ondruthan?
yen ellarum paruthiveran ponra padangalaye thirumba thirumba yadartha cinema endra peyril edukkranga? Veru kadai kazham nammidam illaya?
Malaya thirai padam madri eppodum mudivu sogamaga irukka vendum endra kattyama?(Catchy ending polum)
Asalatu hero/oru suri yedayum kavalai padha hero endru kathuvatu parthu pazhakina KILISHE vishaymagave padhu...
Yidu ellavatrkum mel yen chinna vayadu mudal kadal/..... poll ella padangalilum kanpipadthu jiranika mudiyada kadai... Inum tamil cinema ethanai paruthiveeranaya maatri maatri edkum? Apuram ini yavadu directors siru vadaydu kadal sollvadai niruthunga pa!!! bore adikidu :)]]]
இதுவொரு சீஸன் ஸார்..! இந்த சீஸன் சீக்கிரமே முடிஞ்சிரும். ஏதாவது ஒரு படம் வந்து மாத்திவிடும். ஆனால் காதல் இல்லாமல் சினிமா எடுப்பது ரொம்பக் கஷ்டம். ஏன்னா முதல் மூணு நாள்ல படம் பார்க்க வர்றதே சின்னப் பசங்கதான். அவங்களைத் திருப்திப்படுத்தினால்தான் அடுத்தக் கட்ட கூட்டம் வரும். அதுக்காகத்தான்..! வேற வழியில்லை..!
[[[sri said...
கண்ணாடி விரிசலடைந்தபடியிருக்கும் காட்சி, ஜுராசிக் பார்க் படதில் வரும் அண்ணே.. # தகவல்]]]
தகவலுக்கு மிக்க நன்றிகள்ண்ணே..!
Post a Comment