22-11-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வலைப்பதிவுகள் என்பது நம்மையும் தாண்டி பொது ஜனங்களின் விருப்பதற்கு உள்ளாகியிருக்கிறது என்பது உண்மைதான். இப்போதெல்லாம் இணையத்தளம் வசதியுள்ளவர்கள் ஒரு திரைப்படத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு நமது வலைத்தளங்களைத்தான் தேடி வருகிறார்கள்.
அந்த வரிசையில் நமது வலைத்தளங்களின் சினிமா சம்பந்தமான கட்டுரைகள், சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களாலும் வரவேற்கப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றன.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வலைப்பதிவுகள் என்பது நம்மையும் தாண்டி பொது ஜனங்களின் விருப்பதற்கு உள்ளாகியிருக்கிறது என்பது உண்மைதான். இப்போதெல்லாம் இணையத்தளம் வசதியுள்ளவர்கள் ஒரு திரைப்படத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு நமது வலைத்தளங்களைத்தான் தேடி வருகிறார்கள்.
அந்த வரிசையில் நமது வலைத்தளங்களின் சினிமா சம்பந்தமான கட்டுரைகள், சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களாலும் வரவேற்கப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றன.
இதோ... அது போன்றதொரு வரவேற்பையும், மரியாதையையும் 'மந்திரப் புன்னகை' திரைப்படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பன் நமக்குத் தருவதற்காக முன் வந்திருக்கிறார்.
வலைத்தளங்களில் எழுதும் நமது பதிவர்கள் மற்றும், அவர்தம் குடும்பத்தினருக்காக 'மந்திரப் புன்னகை' படத்தின் சிறப்புக் காட்சியை நாளை(23-11-2010) மாலை 6 மணிக்கு சென்னை, வடபழனியில் உள்ள ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிரிவியூ தியேட்டரில் திரையிட ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
இந்தத் திரையிடலில் கலந்து படத்தினை பார்க்க விரும்பும் வலைப்பதிவர்கள் இப்பதிவைப் படித்த உடனேயே பின்னூட்டத்திலோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..
பதிவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன்தான் வர வேண்டும் என்று இயக்குநர் கரு.பழனியப்பன் விரும்புகிறார். ஆகவே குடும்பத்தினர் எத்தனை பேரை வேண்டுமானாலும் பதிவர்கள் தாராளமாக அழைத்து வரலாம்..
வலைத்தளங்களில் எழுதும் நமது பதிவர்கள் மற்றும், அவர்தம் குடும்பத்தினருக்காக 'மந்திரப் புன்னகை' படத்தின் சிறப்புக் காட்சியை நாளை(23-11-2010) மாலை 6 மணிக்கு சென்னை, வடபழனியில் உள்ள ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிரிவியூ தியேட்டரில் திரையிட ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
இந்தத் திரையிடலில் கலந்து படத்தினை பார்க்க விரும்பும் வலைப்பதிவர்கள் இப்பதிவைப் படித்த உடனேயே பின்னூட்டத்திலோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..
பதிவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன்தான் வர வேண்டும் என்று இயக்குநர் கரு.பழனியப்பன் விரும்புகிறார். ஆகவே குடும்பத்தினர் எத்தனை பேரை வேண்டுமானாலும் பதிவர்கள் தாராளமாக அழைத்து வரலாம்..
எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைப் பொறுத்து சீட் அரேஞ்ச்மெண்ட் செய்ய வேண்டியிருப்பதால்தான் பின்னூட்டம் அல்லது போன் தகவல் மிக முக்கியமானதாக தேவைப்படுகிறது.
நாள் : நாளை அதாவது 23-11-2010 செவ்வாய்கிழமை
இடம் : ஏவி.எம். ஸ்டூடியோ, பிரிவியூ தியேட்டர் - வடபழனி
நேரம் : மாலை 6 மணி
சென்னைவாழ் பதிவர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் வந்தால் பதிவர் சந்திப்பு நடத்தியது போலாகவும் இருக்கும் என்பதால் பதிவர்கள் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறேன்..!
நன்றி..!
நாள் : நாளை அதாவது 23-11-2010 செவ்வாய்கிழமை
இடம் : ஏவி.எம். ஸ்டூடியோ, பிரிவியூ தியேட்டர் - வடபழனி
நேரம் : மாலை 6 மணி
சென்னைவாழ் பதிவர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் வந்தால் பதிவர் சந்திப்பு நடத்தியது போலாகவும் இருக்கும் என்பதால் பதிவர்கள் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறேன்..!
நன்றி..!
|
Tweet |
87 comments:
I the first
ஆஹா, சென்னையில இல்லையேன்னு வருத்தமா இருக்கு!... வாய்ப்பிருக்கிறவங்க பார்த்து அனுபவிங்க!..
பிரபாகர்...
அழைப்பிற்கு நன்றி..!
தமிழ் வலைப்பூ பதிவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது..!
இயக்குனர் திரு. கரு.பழனியப்பன் அவர்களுக்கும் நன்றி!
இது ஓர் ஆரோக்கியமான தொடக்கமாக அமைய நண்டுவின் மனமார்ந்த வாழ்த்துகள்..!
சற்றே தாமதமாக பதிவேற்றம் செய்துவிடீர்கள் என்பது என் தாழ்மையான கருத்து..!
என் உயர் அதிகாரி அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிட்டார்...!
அனுமதி பெற முடியவில்லை..!
நாளை அனுமதி கேட்டால் "வள்ள்" என்று விழுவார்..!
வர இயலவில்லை..!
நட்புடன்...
"நியுடு" நண்டு.
செவ்வாய் கிழமை :((((
படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். அதனால் கேட்கிறேன். கேர்ள் ஃப்ரெண்டுடன் வந்தால் அனுமதி கிடையாதா?
அண்ணே,
திட்டமிட முடியாத அளவிற்கு நேரம் குறைவாக இருக்கிறது..!!!
அழைத்த இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களுக்கும்,பதிவிட்ட உங்களுக்கும் நன்றி..!!!
அண்ணே,
என்னுடைய பெயரை சேர்த்துகொள்ளுங்கள்..
வந்து விடுகிறேன்.
மிக்க மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துள்ளீர்கள் அருமை அண்ணே,
பணியின் காரணமாக கடல்தாண்டி இருப்பதால் எனது வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்
தமிழ் வலைப்பூ பதிவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது..!
இயக்குனர் திரு. கரு.பழனியப்பன் அவர்களுக்கும் நன்றி!
இது ஓர் ஆரோக்கியமான தொடக்கமாக அமைய நண்டுவின் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிவிட்ட உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி..!!!
//Blogger கார்க்கி said...
படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். அதனால் கேட்கிறேன். கேர்ள் ஃப்ரெண்டுடன் வந்தால் அனுமதி கிடையாதா///
கார்க்கி அண்ணே செம கலாட்டா...
”தங்களுடைய குடும்பத்தினருடன்தான் வர வேண்டும்” தாரளமா அழைத்துச்செல்லுங்கள் அவங்களும் குடும்பத்துல ஒருத்தவங்கதானே!
வாழ்க வளமுடன்
நன்றி
நல்ல முயற்சி.. நானும் வருகிறேன்...
naanum varukiren
என்னுடைய பெயரை சேர்த்துகொள்ளுங்கள்..
வந்து விடுகிறேன்.
ஆஹா,செம சான்ஸ் அண்ணே அனுபவிங்க.(அண்ணே ஒரு நாளுக்கு எத்தனை பதிவு போடுவீங்க>?)
chennaiyil thaniyaaga irukkiren naan varalaama ilai kandippaga kudumpatthudan mattume varavendumaa?
மிக மிக சந்தோசப்படும் அங்கீகாரம். தோழர்.கரு.பழனியப்பன் எளிமையானவர்.நிஜமானவர்.
சரவணன்,
கிரி மற்றும் உங்களை போன்ற தரமான பதிவர்களின் பதிவை படித்தே படம் பார்க்கும் முடிவை பலர் எடுகின்றனர், காரணம் நீங்கள் பணம் மற்றும் வியாபார நோக்கம் கொண்ட பத்திரிக்கை அல்ல என்பதால் மட்டுமே.
இந்நிலையில் இலவச டிக்கெட் வசதி அன்பளிப்பு என்று பதிவுலக மக்கள் தங்கள் பதிவின் தரத்தில் இருந்து தடுமாறி விட கூடாது என்று வேண்டுகிறேன்.
நல்ல சினிமா ரசிகன் என்பதை தவிர இங்கு எனக்கு வேறு உள்நோக்கம் எதுவுமில்லை.
நன்றி!.
எனக்கு இரண்டு இருக்கைகள் பதிவு செய்ய முடியுமா?
புதிய முயற்சி! நல்ல வாய்ப்பு! நிச்சயமா வருகிறோம்.. 2 சீட் ஒதுக்கவும்.
Pirabala padhivarkalukku mattumthaan alaippa.
நான், எனது மனைவி மற்றும் மகள் என மூவர் வருகிறோம். டெலிஃபோன் அழைப்புக்கு நன்றி.
டோண்டு ராகவன்
Naanum varukiren. enakku 2 seat. Pls...
பழனியப்பன் என் கல்லூரி மாணவர். மதுரையிலும் இது போன்ற சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய சொல்லுங்கள்... நல்ல உழைப்பாளி...
I am not a blogger. I am just a reader. Shall I come?
சந்தோஷமான விஷயம். வாழ்த்துக்களும் நன்றிகளும்.
[[[Gopi Ramamoorthy said...
I the first]]]
வர்றீங்களா? இல்லையா..? அதை மொதல்ல சொல்லுங்கப்பா..!
[[[பிரபாகர் said...
ஆஹா, சென்னையில இல்லையேன்னு வருத்தமா இருக்கு!... வாய்ப்பிருக்கிறவங்க பார்த்து அனுபவிங்க!..
பிரபாகர்...]]]
மிக்க நன்றி..!
[[[nandu said...
அழைப்பிற்கு நன்றி..!
தமிழ் வலைப்பூ பதிவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது..! இயக்குனர் திரு. கரு.பழனியப்பன் அவர்களுக்கும் நன்றி! இது ஓர் ஆரோக்கியமான தொடக்கமாக அமைய நண்டுவின் மனமார்ந்த வாழ்த்துகள்..!
சற்றே தாமதமாக பதிவேற்றம் செய்துவிடீர்கள் என்பது என் தாழ்மையான கருத்து..!
என் உயர் அதிகாரி அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிட்டார்...!
அனுமதி பெற முடியவில்லை..!
நாளை அனுமதி கேட்டால் "வள்ள்" என்று விழுவார்..!
வர இயலவில்லை..!
நட்புடன்...
"நியுடு" நண்டு.]]]
சரி.. எப்படியாவது சரிக்கட்டி வரப் பாருங்கள் நண்டு..!
[[[LK said...
செவ்வாய் கிழமை :((((]]]
ஏன் அதனால் என்னண்ணே..?
[[[கார்க்கி said...
படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். அதனால் கேட்கிறேன். கேர்ள் ஃப்ரெண்டுடன் வந்தால் அனுமதி கிடையாதா?]]]
தாராளமாக வரலாம்..! உனக்கில்லாத உரிமையா ராசா..?
[[[♥♪•வெற்றி - VETRI•♪♥ said...
அண்ணே, திட்டமிட முடியாத அளவிற்கு நேரம் குறைவாக இருக்கிறது..!!! அழைத்த இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களுக்கும், பதிவிட்ட உங்களுக்கும் நன்றி..!!!]]]
மன்னிக்கவும். குறுகிய காலக்கட்டம்தான். எங்களாலும் தவிர்க்க முடியவில்லை..!
[[[காவேரி கணேஷ் said...
அண்ணே, என்னுடைய பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள். வந்து விடுகிறேன்.]]]
வாங்க காவேரி..!
[[[மாணவன் said...
மிக்க மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துள்ளீர்கள் அருமை அண்ணே.. பணியின் காரணமாக கடல் தாண்டி இருப்பதால் எனது வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் வலைப்பூ பதிவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது..! இயக்குனர் திரு. கரு.பழனியப்பன் அவர்களுக்கும் நன்றி! இது ஓர் ஆரோக்கியமான தொடக்கமாக அமைய நண்டுவின் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிவிட்ட உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி..!!!]]]
வாழ்த்துக்கு நன்றிகள்..!
[[[மாணவன் said...
கார்க்கி அண்ணே செம கலாட்டா...
”தங்களுடைய குடும்பத்தினருடன்தான் வர வேண்டும்” தாரளமா அழைத்துச் செல்லுங்கள் அவங்களும் குடும்பத்துல ஒருத்தவங்கதானே!
வாழ்க வளமுடன்
நன்றி]]]
-))))))))))))))))
[[[கே.ஆர்.பி.செந்தில் said...
நல்ல முயற்சி.. நானும் வருகிறேன்...]]]
வாங்க செந்தில்.. காத்திருக்கிறேன்..!
[[[அலைகள் பாலா said...
naanum varukiren]]]
வாங்க அலைகள் பாலா..!
[[[விஸ்வா said...
என்னுடைய பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள். வந்து விடுகிறேன்.]]]
சேர்த்தாச்சு விஸ்வா..!
[[[சி.பி.செந்தில்குமார் said...
ஆஹா, செம சான்ஸ் அண்ணே அனுபவிங்க.(அண்ணே ஒரு நாளுக்கு எத்தனை பதிவு போடுவீங்க>?)]]]
இன்னிக்கு ரெண்டுதாம்பா போட்டேன். அதுவும் உங்களுக்குப் பிடிக்கலையா..?
ayyo tomorrow busy
[[[DHANS said...
chennaiyil thaniyaaga irukkiren naan varalaama ilai kandippaga kudumpatthudan mattume varavendumaa?]]]
தன்ஸ் கண்டிப்பாக தனியாகவும் வரலாம்..!
[[[காமராஜ் said...
மிக மிக சந்தோசப்படும் அங்கீகாரம். தோழர் கரு.பழனியப்பன் எளிமையானவர். நிஜமானவர்.]]]
நன்றிகள் காமராஜ் ஸார்.. நீங்கள் சொன்னது வாஸ்தவம்தான்..!
[[[சிங்கக்குட்டி said...
சரவணன், கிரி மற்றும் உங்களை போன்ற தரமான பதிவர்களின் பதிவை படித்தே படம் பார்க்கும் முடிவை பலர் எடுகின்றனர், காரணம் நீங்கள் பணம் மற்றும் வியாபார நோக்கம் கொண்ட பத்திரிக்கை அல்ல என்பதால் மட்டுமே.
இந்நிலையில் இலவச டிக்கெட் வசதி அன்பளிப்பு என்று பதிவுலக மக்கள் தங்கள் பதிவின் தரத்தில் இருந்து தடுமாறிவிடக் கூடாது என்று வேண்டுகிறேன்.
நல்ல சினிமா ரசிகன் என்பதை தவிர இங்கு எனக்கு வேறு உள்நோக்கம் எதுவுமில்லை.
நன்றி!.]]]
இல்லை. இது பற்றி ஆரம்பத்திலேயே நான் தெளிவாகப் பேசிவிட்டேன். இது அவர்களுக்காக இல்லை.. நியாயமான விமர்சனங்களை பகிர்ந்தாலே போதும் என்று இயக்குநரே கூறியிருக்கிறார்..!
வலைப்பதிவர்களை விலைக்கு வாங்க முடியாது சிங்கக்குட்டி..!
[[[Joe said...
எனக்கு இரண்டு இருக்கைகள் பதிவு செய்ய முடியுமா?]]]
செஞ்சாச்சு ஜோ..!
[[[யோவ் said...
புதிய முயற்சி! நல்ல வாய்ப்பு! நிச்சயமா வருகிறோம். 2 சீட் ஒதுக்கவும்.]]]
ஒதுக்கியாச்சு..!
[[[முசமில் இத்ரூஸ் said...
Pirabala padhivarkalukku mattumthaan alaippa.]]]
நீங்களும் வரலாம் முசமில்..!
[[[dondu(#11168674346665545885) said...
நான், எனது மனைவி மற்றும் மகள் என மூவர் வருகிறோம். டெலிஃபோன் அழைப்புக்கு நன்றி.
டோண்டு ராகவன்]]]
நன்றி.. வாங்க ஸார்..!
[[[நையாண்டி நைனா said...
Naanum varukiren. enakku 2 seat. Pls...]]]
உனக்கில்லாததா நைனா..? ஒதுக்கியாச்சு..!
[[[மதுரை சரவணன் said...
பழனியப்பன் என் கல்லூரி மாணவர். மதுரையிலும் இது போன்ற சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய சொல்லுங்கள்... நல்ல உழைப்பாளி.]]]
நிச்சயம் சொல்கிறேன் ஸார்..!
[[[RaveePandian said...
I am not a blogger. I am just a reader. Shall I come?]]]
தாராளமாக வரலாம் ரவீ.. எனது செல்நம்பர் 9840998725. அங்கு வந்தவுடன் அழையுங்கள். எனது நிஜமான பெயர் சரவணன்..!
[[[வேழமுகன் said...
சந்தோஷமான விஷயம். வாழ்த்துக்களும் நன்றிகளும்.]]]
நன்றி வேழமுகன் ஸார்..!
[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ayyo tomorrow busy]]]
ஆமா.. பெரிய நீரா ராடியாவோட பி.ஏ.? பிஸியாம்.. தூக்கிப் போட்டுட்டு வந்திரு.. சொல்லிட்டேன்.. வரலைன்னா அடுத்து உன்னை எங்க பார்த்தாலும் தூக்கிப் போட்டு ஒரே மிதிதான்..!(என்னால் முடிந்தால்..)
//என் உயர் அதிகாரி அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிட்டார்...!
அனுமதி பெற முடியவில்லை..!
நாளை அனுமதி கேட்டால் "வள்ள்" என்று விழுவார்..!
வர இயலவில்லை..!//
நண்டு!வர இயலவில்லை
ன்னு ஒற்றை வரியில்தான் சொல்லியிருக்கீங்களே!
அப்புறமென்ன நாளை அனுமதி கேட்டால் “வள்ள்” என்று விழுவார்..ன்னு ஒரு இழுத்தல்:)
//அந்த வரிசையில் நமது வலைத்தளங்களின் சினிமா சம்பந்தமான கட்டுரைகள், சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களாலும் வரவேற்கப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றன.
இதோ... அது போன்றதொரு வரவேற்பையும், மரியாதையையும் 'மந்திரப் புன்னகை' திரைப்படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பன் நமக்குத் தருவதற்காக முன் வந்திருக்கிறார்.//
புதிய முயற்சிக்கு வித்திட்ட இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நாளைக்கு வர முடியாத நிலைமை அண்ணா :( :(
பதிவர்கள் மேல் நம்பிக்கை வைக்கும் கரு.பழனியப்பன் அவர்களுக்கும், இதை சிறப்பாக நடத்தவிருக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்!!!!
நானும் வருகிறேன்... ஆனால் தனியாகத்தான் வர முடியும்...
பஸ் ரூட் பற்றி விளக்கங்களெல்லாம் தருவீர்களா... நான் திருவொற்றியூரிலிருந்து வர வேண்டும்...
உங்களது உண்மையான தமிழ் பெயர் சரவணன் என்று தெரிந்துக்கொன்டத்தில் மிக்க மகிழ்ச்சி...
எத்தனை மணிக்கு திரையரங்கிற்கு வர வேண்டும்...
நல்லதொரு தொடக்கம்.....
அண்ணே : அப்படியே நம்மூருக்கும் ஒரு பெட்டி அனுப்பிவைக்க சொல்லுங்களேன்......
நல்லதொரு தொடக்கம்.....
அண்ணே : அப்படியே நம்மூருக்கும் ஒரு பெட்டி அனுப்பிவைக்க சொல்லுங்களேன்......
நல்லதொரு ஆரம்பம்...
அனைவருக்கும் மற்றும் திரு. கரு. பழனியப்பன் அவர்களுக்கும் நன்றி.
"டெலிஃபோன் அழைப்புக்கு நன்றி"
அவருக்கு மட்டும் டெலிஃபோன் அழைப்பு..எங்களுக்கு இல்லையா?
வருத்தப்படுகிறேன்.. வேதனைப்படுகிறேன்
அண்ணே ஒரு நாளுக்கு எத்தனை பதிவு போடுவீங்க>?)]]]"
ஒரு நாளுக்கு எத்தனை மூச்சு விடுவீங்கனு கேட்பது போல இருக்கு.
அண்ணன் இருபத்து நாலு மணி நேரமும் எழுதிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருப்பார்...
அது போக எஞ்சிய நேரத்தில்தான் மற்ற பணிகளை கவனிப்பார் ..
நாமெல்லாம் ஆணி பிடிங்கி முடித்து விட்டு, எஞ்சிய நேரத்தில் எழுதுகிறோம், படிக்கிறோம்
உள்ளேன் ஐயா
வணக்கம் தோழர், நான் என் அறை நண்பர்களோடு வருகிறேன்...அவர்கள் ஐந்து பேர்....எத்தனை பேரை அழைத்து வரலாம்...
தோழர், என் நண்பர் ஒருவரோடு வருகிறேன்
உள்ளேன் ஐயா
சொக்கா.... எனக்கு இந்த வாய்ப்பில்ல...... யாரெல்லாம் பிரபல பதிவரோ அவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பாம் நான் சும்மா டுபாகூரு.......
சாரி சரவணன் அண்ணே வாழ்க்கைத் தேவைக்கென கடல் கடந்து இருப்பதால் வர இயலவில்லை என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு நல்லா தொடக்கம் நமக்கான சிறந்த அங்கிகாரம் கூடியவிரைவில் எல்லா தரப்பினரும் அங்கீகரிக்க அவா.....
ஐயோ...நல்ல சமயத்தில் சென்னையை விட்டுட்டேனே:(
கோடம்பாக்கத்தில் அதிகமாக சொல்லப்படும்,கேட்கப்படும் வார்த்தை 'வித்தியாசமாக செய்திருக்கிறேன்'.உண்மையிலேயே இதுதான் வித்தியாசமான முயற்சி.வாழ்த்துக்கள்.வர முயற்சி செய்கிறேன்.
செம.. சென்னைல இல்லாம போயிட்டனே..
நானும் வர்றேனுங்கண்ணா
மகிழ்ச்சி! நான் தற்போது அமெரிக்க்காவில் இருப்பதால் ஒரு நல்ல சந்திப்பை இழந்துள்ளேன்!
-அரிமா இளங்கண்ணன்
பெங்களூர்ப் பதிவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லாததைக் கண்டித்து, பேசும் விரதம் மற்றும் கண்டபடி பிரியாணி சாப்பிடும் விரதம் ஆகியவற்றை உடனடியாக அறிவிக்கிறேன்...
கருந்தேளாருக்கு ஒரு துண்டை அணிவித்து அவருடன் கைக்கோர்க்கிறேன். ஒ... அது வலதுகையா... சாப்பிட முடியலையா... சரி முட்டியிணைக்கிறேன்.
அழைப்புக்கு மிக்க நன்றி தலைவா....
எங்களுக்கும் சேர்த்து படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க...
மன்மதன் அம்பு
விருத்தகிரி
ஆடியோ விமர்சனம், ஆடியோ விழா விமர்சனம் எழுதுவீங்களா??
HI, I'M JAYAVEL FROM ELTECH.
I HAVE FACEBOOK AND TWITTER ACCOUNT CAN I HAVE THE MOBILE NO PLEASE , TO CONFIRM MY PARTICIPATION.my mobile no 9840398398 please send as sms.
nandri
jayavel.
//ஏன் அதனால் என்னண்ணே..?
//
tuesday evening USkaarangakooda pesitu veetuku kilambarappa 9 aidum
சென்னையில இல்லையேன்னு வருத்தமா இருக்கு!.
அண்ணே பயணப் படி, பஞ்சப் படி எல்லாம் கிடைக்குமா ?
சாரி சார் , லேட்டா தான் உங்க பதிவ பாத்தேன் , ஒரு படம் மிஸ்ஸு....................
enjoyeddddddddddddd
அழைப்புக்கு நன்றிணே....
நான் தான் கடைசியா வந்தேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் முன்னாடியே வந்து இருந்திருக்கலாம்..
ஒரு நாள் இடைவெளியில் மிகக் குறுகிய காலமே இருந்தாலும் பதிவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டமைக்கு எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!
படம் பார்த்ததை விட தங்களையும் மற்ற நண்பர்களையும் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி...
அண்ணே... நேத்து பாத்த படத்துக்கு விமர்சனம் போட்டாச்சு... மறக்காம வந்து படிச்சிடுங்க... ப்ளீஸ்...
http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/blog-post_24.html
Just for info : Today (24th Nov, evening 6:30 pm) there's meeting on "Why Raja is targeted by a section of Media" - Kindly refer Advertisement in today's Dhina Thanthi.
Just for info : Today (24th Nov, evening 6:30 pm) there's meeting on "Why Raja is targeted by a section of Media" - Kindly refer Advertisement in today's Dhina Thanthi.
பதிவுக்கு நான் அப்புறமா வாரேன்.
ஊர் சுத்தற பழக்கத்தில் இட்லி வடைன்னு ஒரு கடைல புகுந்துவிட்டேன்.டேப் செய்திகளை போட்டதால உங்கள் தளம் ஹேக் செய்யப்பட்டு விட்டதென திருன்னு ஒரு அனாமத்து பின்னூட்டம் போட்டிருக்கார்.அதைக் கண்டிக்க கூட வக்கீல்லாமல் இட்லி வடை சாம்பார்:(
dear unmai
missed the bus. today only viewed ur blogspot. If I got the information one day advance definetely could have participated along with all intellectual people like u. any how thanks for the info
G.krishna
See who owns futura-sciences.com or any other website:
http://whois.domaintasks.com/futura-sciences.com
Post a Comment