சாமி கல்லா..? மனம் கல்லா..?

21-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



பக்கெட் கவிதை
 

நான்கு ராஜகோபுரங்கள்..!
நுழைந்தவுடனேயே
அனுமாரின் சேவை..!
நடுநாயகமாக
விநாயகனின் எதிர்சேவை..!
சுவரைச் சுற்றிலும்
அவதார விநாயகர்கள்..!
பக்கத்தில்
வரதராஜப் பெருமாள்..!
இன்னும் அருகில்
காசி விஸ்வநாதர்..!
இவரையும் தாண்டினால்
காசி விசாலாட்சி..!
சற்றுத் தள்ளி தனி ஆலயத்தில்
மனைவி, துணைவியுடன் முருகன்..!
தொட்டுக் கொள்ள
படவுருவில் ஐயப்பன்..!
நாசகார நவக்கிரகங்கள்
ஆளுக்கொரு பக்கமாக
முகம் காட்டி நிற்கிறார்கள்..!
இத்தனை பேரும் இருந்தாலும்
சன்னதியில் கை கூப்பியவுடன்
வாசலில் கழட்டிப் போட்ட
செருப்பு இருக்குமா என்றே
யோசிக்கிறது மனம்..!
சாமி கல்லா..?
மனம் கல்லா..?

30 comments:

vasu balaji said...

எப்படியும் கோயில் உள்ளதானே நிக்கிறீங்க. பூ கட்டி போட்டு பார்க்க வேண்டியதுதான்:))

எல் கே said...

நல்ல கேள்வி.. முருகா பதில் சொல்லுப்பா இவருக்கு

உமர் | Umar said...

LK said..
//நல்ல கேள்வி.. முருகா பதில் சொல்லுப்பா இவருக்கு//

இதுவும் முருகன் குடுத்த சோதனை அப்படின்னுதான் இவரு சொல்லுவாரு.

உண்மைத்தமிழன் said...

[[[வானம்பாடிகள் said...
எப்படியும் கோயில் உள்ளதானே நிக்கிறீங்க. பூ கட்டி போட்டு பார்க்க வேண்டியதுதான்:))]]]

அப்புறம் பூ விழுமா? விழாதான்னு ஒரு சந்தேகம் ஓடுமே.. அப்போ என்ன ஸார் செய்யறது..?

உண்மைத்தமிழன் said...

[[[LK said...
நல்ல கேள்வி.. முருகா பதில் சொல்லுப்பா இவருக்கு..]]]

அவன் எங்க சொல்லப் போறான்..?

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...

LK said..
//நல்ல கேள்வி.. முருகா பதில் சொல்லுப்பா இவருக்கு//

இதுவும் முருகன் குடுத்த சோதனை அப்படின்னுதான் இவரு சொல்லுவாரு.]]]

பரவாயில்லையே கும்மி.. என்னைப் பத்தி நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க.. நன்றி..!

வினையூக்கி said...

அண்ணே உள்ளத்தில் மட்டும் கட-உள் இருந்தால் எதுவுமே கல் இல்லை அண்ணே... கவிஞரும் ஆயிட்டீங்க.. மகிழ்ச்சியாக இருக்கின்றது. அண்ணே ஒரு சிறுகதை ஒன்று எழுதுங்களேன்

க ரா said...

ஸ்ஸ்ஸ்ஸப்பபபபபா.....

-/பெயரிலி. said...

கடவுளே
கண்ணைத்
திற
இந்தக்
கவி
தையைக்
கா
ப்
பா
ற்
று

பழமைபேசி said...

எப்படிண்ணே இதெல்லாம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nadathungka

Unknown said...

சாமியே கல்... கல் எப்படி சாமியாக போனது என்பது முட்டாள்களின் மூளைக்கே விளங்கும்...

PB Raj said...

நாத்திக இதைவிட யாரும் நாசுக்காக சொல்ல முடியாது..

அருமை

subra said...

இத இத இததான் நான் எதிர்பார்கிறேன் .வாழ்த்துக்கள்
நண்பரே ,இன்னும் சிரிப்பை நிறுத்த முடியல.....

Thomas Ruban said...

என்னாச்சு அண்ணே!!! முருகர் அதிகமாக சோதனை தருகிறார...

உண்மைத்தமிழன் said...

[[[வினையூக்கி said...
அண்ணே உள்ளத்தில் மட்டும் கட-உள் இருந்தால் எதுவுமே கல் இல்லை அண்ணே... கவிஞரும் ஆயிட்டீங்க.. மகிழ்ச்சியாக இருக்கின்றது. அண்ணே ஒரு சிறுகதை ஒன்று எழுதுங்களேன்.]]]

அது ஒண்ணுதான் பாக்கி.. எழுதிருவோம்..

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...
ஸ்ஸ்ஸ்ஸப்பபபபபா.....]]]

என்னாச்சு இராமசாமி..? படிச்சு முடியலையா..? படிக்கவே முடியலையா..?

உண்மைத்தமிழன் said...

[[[-/பெயரிலி. said...

கடவுளே
கண்ணைத்
திற
இந்தக்
கவி
தையைக்
கா
ப்
பா
ற்
று]]]

அண்ணை.. இது கவிதை.. அச்சச்சோ.. எதுல இருந்தெல்லாம் கவிதை உருவாகுது பாருங்க.. நீங்க கவிஞர்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...
எப்படிண்ணே இதெல்லாம்?]]]

என்ன செய்யறது.. பொங்கி வருது பழமை.. வரும்போதே சட்டில பிடிச்சு வைக்கணும்ல்ல.. அதுனாலதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
nadathungka]]]

ஓகே.. ஓகே.. ஓகே..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
சாமியே கல்... கல் எப்படி சாமியாக போனது என்பது முட்டாள்களின் மூளைக்கே விளங்கும்.]]]

முட்டாள்களுக்கு மட்டுமே சாமி கல்லாகவே இருப்பதாகத் தெரியும் செந்தில்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...
நாத்திக இதைவிட யாரும் நாசுக்காக சொல்ல முடியாது..
அருமை]]]

நாத்திகமா..? ஐயோ.. நானா..? கடவுளே.. முருகா.. உனக்கே இது அடுக்குமா..?

உண்மைத்தமிழன் said...

[[[subra said...
இத இத இததான் நான் எதிர்பார்கிறேன். வாழ்த்துக்கள். நண்பரே, இன்னும் சிரிப்பை நிறுத்த முடியல.....]]]

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...
என்னாச்சு அண்ணே!!! முருகர் அதிகமாக சோதனை தருகிறார...]]]

ரொம்ப..!

எஸ்.கே said...

அருமையான கவிதை!

Unknown said...

உண்மைக்கவிஞன்...புது ப்ளாக் போடுங்கண்ணே.... கவிதை....அருமை....

மரா said...

//உண்மைக்கவிஞன்...புது ப்ளாக் போடுங்கண்ணே.... கவிதை....அருமை....//
repeat :)

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
அருமையான கவிதை!]]]

நன்றி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[நந்தா ஆண்டாள்மகன் said...
உண்மைக்கவிஞன். புது ப்ளாக் போடுங்கண்ணே. கவிதை. அருமை....]]]

நன்றி நந்தா..!

உண்மைத்தமிழன் said...

[[[மரா said...

//உண்மைக்கவிஞன்...புது ப்ளாக் போடுங்கண்ணே.... கவிதை....அருமை....//

repeat :)]]]

இருக்கிற ஒரு பிளாக்கை பார்த்துக்கவே நேரமில்லை. இதுல இன்னொண்ணா.. வேண்டாம்ண்ணே.. இதுவே போதும்..!