07-11-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கருமாரி காம்ப்ளெக்ஸில் இத்தனை கூட்டத்தை இதுவரையில் நான் பார்த்ததில்லை. நான் பார்க்கச் சென்றது 'மைனா'வை. என்னிக்கு நான் போன காரியம் உடனே நடந்திருக்கு? 'ஹவுஸ்புல்'லுன்னுட்டாங்க. 'வல்லக்கோட்டை'க்காச்சும் போலாம்னு கேட்டா அதிசயமா அதுவும் 'ஹவுஸ்புல்'லுன்னுட்டாங்க. "என்னதாண்டா இருக்கு..?"ன்னு கேட்டா 'உத்தமபுத்திரனை' கை காட்டினார்கள்..!
'விதி விட்ட வலி'யென்று போய் அமர்ந்தேன். ஊர் முழுவதும் அரை கிறுக்குகள் இருந்தால் அந்த ஊர் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது திரைப்படம்..! லாஜிக்கே பார்க்கக் கூடாது என்றால் தாராளமாகப் போய்ப் பார்க்கலாம்..!
டிவி சீரியலுக்கு இந்தக் கதையைக் கொடுத்திருந்தால் ஒரு வருஷமாவது ஓட்டலாம். அத்தனை கிளைக் கதைகள் உண்டு இந்த ஒரு கதையில்..! ஆனால் எந்தக் காட்சியும் மனதில் ஒட்டவே இல்லை என்பதுதான் மிகப் பெரும் சோகம்..!
அக்மார்க் தெலுங்கு சினிமா. அங்கேதான் 'ஆல் ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷன்' அனைத்துக் காட்சிகளிலும் இருக்கும். இதிலும் அதுவேதான். அனைத்து மிடில் ஏஜ் அம்மாக்களும் இதில் வரிந்து கட்டிக் கொண்டு அழுகிறார்கள். இதில் யார் அதிகமாக அடங்கிப் போவது என்று அவர்களுக்குள் போட்டி வேறு..!

ஏதோ 'பெண்ணுரிமை', 'பெண்ணுரிமை' என்கிறார்கள். எல்லாம் பேச்சளவில்தான்..! இது மாதிரியான நிலப்பிரபுத்துவ படங்களில் படத்தின் கதையாக காதலை எதிர்ப்பதாக வைத்திருந்தாலும், உண்மையான அடிமைத்தனம் இந்த பிரபுக்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அடக்கி வைத்திருப்பதுதான். தெலுங்குலகில் இது போன்ற படங்கள்தான் அதிகமாக வருகின்றன. அத்தனையிலும் இதே கதைதான்.. ஆனாலும் நடிகைகளே அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சினிமாதானப்பா என்று சொல்லிவிட்டு எஸ்கேப்பாகுகிறார்கள்.
சினிமாதானே... அப்படியே விட்டுவிடலாமே..? பின்பு எதற்கு காதலுக்காக உயிரைக் கொடுக்கும்படி வசனம் எழுதி உருக வேண்டும்? "ஜாதிப் பிரச்சினை தீர காதல் திருமணங்கள் என்பதுதான் ஒரே வழி..!" என்று எதற்காகக் கதற வேண்டும்? இது போன்ற கோரி்ககைகளுக்காகத்தான் சினிமா என்றால் இந்த கதாநாயகர், கதாநாயகிகளின் தாய்மார்களின் கண்ணீர்க் கதையை எப்போது இந்த இயக்குநர்களும், கதாசிரியர்களும் துடைப்பார்கள்?
இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கூடாது என்றால் காதலையும், நாட்டையும், தாய் அன்பையும், தகப்பன் பாசத்தையும் சுட்டிக் காட்டி பக்கம், பக்கமான வசனத்தை ஏன் பேச வேண்டும்..?
இது போன்ற எனது வருத்தங்களுக்கெல்லாம் இந்தப் படத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
இடைவேளை வரையிலும் ஏதோ படம் செல்கிறது என்றாலும், 'சின்னக் கலைவாணர்' வந்த பின்புதான் படம் டாப் கியருக்குச் செல்கிறது. முற்பாதியில் அவ்ளோவ் வறட்சி. நடிகர் பாண்டு தோன்றும் காட்சியில்கூட எதையோ எதிர்பார்த்து ரசிகர்கள் கை தட்டினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!
இடைவேளைக்குப் பின்பு, இத்தனை சிக்கலான முடிச்சுக்களைப் போடுகிறார்களே எப்படி இதனை அவிழ்க்கப் போகிறார்கள்.. என்ற ஆவலுடன் கடைசிவரையில் அமர முடிந்தது.. சிக்கலின்றி முடித்திருக்கிறார்கள். நான்கூட காது கிழியற அளவுக்கு சண்டைக் காட்சி வந்து மறுபடியும் காய்ச்சல் தொத்திக்கப் போகுதோ என்று பயந்து போயிருந்தேன். இயக்குநருக்கு நன்றி..!
தெலுங்கு இயக்குநர்கள் தங்களது படங்களில் அதிகம் காரமிளகாயை திணிப்பதோடு கதையில் நெளிவு, சுழிவுகளையும் சேர்த்தே வைப்பார்கள். அதுதான் 'ஆந்திர மணவாடு'களுக்கு பிடிக்கும். அதுவேதான் இது என்றாலும் 'தமிழ் சுந்தரர்'களுக்கு இது கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

ஆக்ச்சுவல்லி இந்தப் படம் ஜெயம் ரவி நடித்திருக்க வேண்டியது. ஏன் தனுஷ் தனக்காக வாங்கிக் கொண்டார் என்று தெரியவில்லை..?
படத்தில் தனுஷின் நடிப்புகூட பேசப்பட முடியாததாக உள்ளது. படத்தை அவசரம், அவசரமாக வெளியிட்டார்களா என்றும் தெரியவில்லை.. எடிட்டிங்கில் கட் செய்ய வேண்டிய காட்சிகளெல்லாம் படத்தில் இருந்து தொலைத்திருக்கிறது.
தமிழ் தெரியாத நடிகைகளை நடிக்க வைப்பதில் மிகப் பெரும் சிரமம் அவர்களுக்கு குளோஸப் காட்சிகள் அதிகம் வைத்துவிட முடியாது. தமிழைக் கடித்து மென்று துப்புபவர்களாக இருந்தால் அவ்வளளவுதான்.. சுத்தம்.. ஜெனலியா தமிழ் பேசும் அழகை பார்த்தால் அவ்வளவு கொடுமையாக உள்ளது. டப்பிங்கில் சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஏதோ வந்தவரைக்கும் எடுத்திருக்கிறார்கள்.

டப்பிங் ஒருங்கிணைப்பாளர் நிச்சயம் படாதபாடுபட்டிருப்பார். கோபத்தில் சொல்ல வேண்டிய வார்த்தைகளைகூட உதடு பிரிக்காமல் அவர் உச்சரிக்கின்ற அழகில் என்ன பேசுகிறார் என்பதே அந்த ஷாட் முடிந்த பின்புதான் நமக்கு உரைக்கிறது..! நடிகைகளையும் கொஞ்சம் பேச வைங்கப்பா...!
மறக்க முடியாத மூன்று காட்சிகள் இந்தப் படத்தில் உண்டு. ஒன்று.. ஸ்வாமிஜி அனுப்பி வைத்தது நாய் என்று நினைத்து பாண்டு பேசுவது.. இரண்டு.. வில்லன் நடிகரான ராஜேந்திரனை முதன்முதலாகக் காட்டும்போது ஒலிக்கும் பின்னணி இசை.. மூன்றாவது விவேக், பாக்யராஜை பேமிலியோடு சந்திக்கும்போது பின்னணியில் ஒலிக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடலின் இசை. முதல் காட்சி நல்ல சுவையான து. இரண்டாவது கொடுமையிலும் கொடுமை. கடைசி அருமையான கிரியேட்டிவ் மைண்ட்..
சின்ன கவுண்டராக வரும் அந்த சின்னப் பையன் பேசுகின்ற பேச்சும், அலட்டுகின்ற அலட்டும் எரிச்சல்பட வைக்கின்றன. வயதுக்கு மீறிய இந்தப் பேச்சுக்களை நகைச்சுவையில்கூட சேர்க்க முடியாது..

அம்பிகா, ரேகா, அஸ்வினி, நித்யா, உமா பத்மநாபன், என்று பெரிய லிஸ்ட் இளம் அம்மாக்கள் வரிசை கட்டி கலர் காண்பிக்க.. நல்லாத்தான் இருக்கு. அது யாருப்பா அந்தச் சின்னக் கவுண்டரோட அம்மா.. ? உண்மையா இந்தப் படத்துல இவருடைய சவுண்டுதான் அதிகம். செம சவுண்டு. ஆளும் அழகுதான். யாருன்னு தெரியலையே..? தெரிஞ்சா சொல்லுங்கப்பா..!
பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், சுரேஷ்பாபு, ஆசீஸ் வித்யார்த்தி, அந்த குண்டு தெலுங்கு வில்லன் என்று ஆண்கள் சைடும் ஈக்குவலாகத்தான் உள்ளது..!
படத்தின் தயாரிப்பாளர் பெரிய கை என்பதாலும், நடிப்பது தனுஷ் என்பதாலும், ஒரு நாள் கால்ஷீட்டுக்கே பெட்டி நிறைய பணம் கிடைத்ததாலும் ஷ்ரேயா படத்தின் துவக்கத்திலேயே வந்து போகிறார்..!

ஆனால் தனுஷின் கூட்டணி ஆட்கள்தான் சரியில்லை.. தன்னைப் போலவே ஒரு நடிகையாக கிரகிக்க முடியாத நிலையில் இருப்பவர் ஆர்த்தி என்பதால் மறைமுகமாக ஆர்த்திக்கு தனுஷ் நிறைய ஆதரவுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்..! ஆனாலும் அதற்காக குண்டுமணி என்று இவரே பெயர் வைத்துக் கூப்பிடுவது பொருத்தமாக இல்லை..
கருணாஸை அந்தக் கேரக்டரில் காண்பிப்பது ஏன் என்று தெரியவில்லை. இது போன்ற பணக்கார வீடுகளில் வேலை செய்யும் அரவாணிகள் என்றால், தேனி மாவட்ட ஊரான கம்பத்தில்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். சரி.. பரவாயில்லை என்று விட்டுவிட்டாலும் கருணாஸை ஜொள்ளுவிட வைத்து ஏமாற்றம் காட்டுவது ரசிக்கும்படி இல்லை..
இந்தப் படத்தின் துவக்கத்திலேயே விவேக் இல்லாவிட்டால் படம் போணியாகாது என்பது தனுஷிற்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் விவேக்கை விரட்டி, விரட்டிப் பிடித்திருக்கிறார் தனுஷ்.
இந்தப் படத்தின் துவக்கத்திலேயே விவேக் இல்லாவிட்டால் படம் போணியாகாது என்பது தனுஷிற்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் விவேக்கை விரட்டி, விரட்டிப் பிடித்திருக்கிறார் தனுஷ்.
"முதலில் இந்தப் படத்தில் நடிக்கவே எனக்கு விருப்பமில்லை. தனுஷ்தான் என்னை விடாப்பிடியாக தொங்கி படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்" என்று ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் விவேக் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. இது போன்று காமெடி நடிகர்களை விரட்டிப் பிடித்து தங்களது படங்களில் புக் செய்யும் தருணங்கள் இப்போது அதிகமாகிக் கொண்டே போகிறது என்று நினைக்கிறேன்.
'சந்திரமுகி' படத்தின்போதே ரஜினி "முதல்ல வடிவேலுகிட்ட கால்ஷீட் வாங்கிருங்க" என்று வாசுவிடம் சொன்னாராம்.. விஜய் வடிவேலு, விவேக் இல்லாமல் களத்தில் குதிப்பதில்லை. இதையே மற்ற நட்சத்திரங்களும் இப்போது பயன்படுத்தி வருகிறார்கள். ஒருவரைத் தவிர அது கமல்ஹாசன்..! அவருக்கு எதுக்கு காமெடி.. அவரே அதையும் பண்ணிருவாரே..?
தனுஷின் அத்தனை ஊசிக் குத்தல்களையும் தாங்கிக் கொண்டு நடித்திருக்கும் எமோஷனல் ஏகாம்பரம் விவேக்கிற்கு ஒரு நன்றி.. “ரெண்டு நெஞ்சு எலும்பு, கொஞ்சூண்டு சதை..” என்று தன்னைக் கிண்டலடிக்கும் உரிமையைக் கொடுத்திருக்கும் தனுஷிற்கும் நன்றி..!
பல இடங்களில் வசனங்களுக்குக் கத்திரி போட்டிருக்கிறார்கள். இல்லையென்றால் 'ஏ' சர்டிபிகேட்தான் கிடைத்திருக்கும். இதற்காக வசனங்களை தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த வசனங்கள் என்னவாக இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்தது போலத்தான் இருந்தது..
'நெஞ்சம் மறப்பதில்லை' டியூன் மனதில் விழுந்த பிறகு எப்போதும் செத்த பொணம் போல் நிற்கும் விவேக்கின் நடிப்பு அக்மார்க் நகைச்சுவை. நகைச்சுவையை வசனத்தில் மட்டுமல்ல ஆக்ஷனிலும் காட்டலாம் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் விவேக்.

குத்துப் பாடல்கள் இல்லாமல் தனுஷ் படம் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. கடைசி குடும்பப் பாடல் காட்சி இனி வரும் காலங்களில் 'இசையருவி'யில் ஓடோ ஓடோன்று ஓடும் என்று நினைக்கிறேன்..!
ச்சும்மா.. ஒரு ஜாலியா... குடும்பத்தோட சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சீங்கன்னா போயிட்டு வாங்க..!
டிஸ்கி : ஸாரி மக்கள்ஸ்.. "இவ்ளோ சொல்லிட்டு கதையைச் சொல்லலையே"ன்னு திட்டாதீங்க.. அதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டனே..! ஊர் முழுக்க அரை லூஸ்களா இருக்காங்கன்னு.. அப்போ கதை எப்படியிருக்கும்ன்னு நீங்களே ஊகிச்சுக்குங்க..!

|
Tweet |
41 comments:
அண்ணே ஆயிரந்தான் சொல்லு .........,நீ...., நீட்ட நீட்டமா பதிவு போட்டாலும் ஒரு கிக் இருக்குது அண்ணே ......,
ஏண் அண்ணாச்சி தீபாவளி அன்னிக்குமா இந்த மாதிரி மொக்க படத்துக்கு போகனும்.. இதுக்கு பேசாம வீட்டுல சாப்டுட்டு தூங்கிருக்கலாமே :)
ஏங்க இப்படியெல்லாம் ஒளிப்படம் போட்டு பயமுறுத்துரீங்க... (மேலே இருந்து 3வது)இரவு தூக்கம் போச்சுங்க...
//அம்பிகா, ரேகா, அஸ்வினி, நித்யா, உமா பத்மநாபன், என்று பெரிய லிஸ்ட் இளம் அம்மாக்கள் வரிசை கட்டி கலர் காண்பிக்க//
அப்ப நல்லா ஜொல்லு விட்டுட்டீங்க...
//உத்தமபுத்திரன்//
சிவாஜி நடித்த திரைப்படத்தை கெடுத்துட்டாங்க போல...
//அதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டனே..! ஊர் முழுக்க அரை லூஸ்களா இருக்காங்கன்னு.. அப்போ கதை எப்படியிருக்கும்ன்னு நீங்களே ஊகிச்சுக்குங்க..!//
நீங்களும் கூடிய சீக்கிரம் லிஸ்ட்ல வந்துருவீங்க இப்படியெல்லாம் பார்த்தா... :)
// ஊர் முழுவதும் அரை கிறுக்குகள் இருந்தால் அந்த ஊர் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது திரைப்படம் //
கடுமையா பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் போல...
// முதல் படம் //
இது என்ன பழைய நடிகர் - நடிகையர் சந்திப்பில் எடுத்த போட்டோவா...
// 'சின்னக் கலைவாணர்' வந்த பின்புதான் படம் டாப் கியருக்குச் செல்கிறது //
விவேக்கும் இல்லையெனில் படத்தின் கதி...?
ஆந்திர மணவாடு - தமிழ் சுந்தரர் சொல் பயன்பாடு அருமை...
நேரம் இருந்தால் என் வலைப்பூவிற்கு வந்து மைனா மற்றும் வ விமர்சனங்களை படிக்கவும்...
philosophyprabhakaran.blogspot.com
அண்ணே,விமர்சனம் டாப்.
என்னைக்கவர்ந்த வரிகள்
?>>>
நெஞ்சம் மறப்பதில்லை' டியூன் மனதில் விழுந்த பிறகு எப்போதும் செத்த பொணம் போல் நிற்கும் விவேக்கின் நடிப்பு அக்மார்க் நகைச்சுவை. நகைச்சுவையை வசனத்தில் மட்டுமல்ல ஆக்ஷனிலும் காட்டலாம் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் விவேக்..>>>
படம் குப்பையா இருந்தாலும் உங்க விமர்சனம் அலப்பறையா இருக்குண்ணே
இந்த மாதிரி படத்துக்கு உங்க விமர்சனத்தை முழுசா வாசிக்கலாம்; வாசிச்சிட்டேன்.
//ஆளும் அழகுதான். யாருன்னு தெரியலையே..? தெரிஞ்சா சொல்லுங்கப்பா..!//
உங்களுக்குமா தெரியலை, 'ஆனந்த்'!!
என்னது வல்லக்கோட்டை புல்லா? அய்யய்யய்யோ.. இந்தக் கொடுமையெல்லாம் உங்க ஊர்லதாண்ணே நடக்கும்..
[[[பார்வையாளன் said...
me the first]]]
விடுங்கண்ணே.. இதுக்கெல்லாம் போய் சொல்லிக்கிட்டு..! நானென்ன பரிசா கொடுக்கப் போறேன்..?
[[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
அண்ணே ஆயிரந்தான் சொல்லு. நீ நீட்ட நீட்டமா பதிவு போட்டாலும் ஒரு கிக் இருக்குது அண்ணே]]]
மாமேதை.. நீங்களே சொல்லிட்டீங்க.. அப்பீல் ஏது..? சந்தோஷம்ண்ணே..!
[[[இராமசாமி கண்ணண் said...
ஏண் அண்ணாச்சி தீபாவளி அன்னிக்குமா இந்த மாதிரி மொக்க படத்துக்கு போகனும். இதுக்கு பேசாம வீட்டுல சாப்டுட்டு தூங்கிருக்கலாமே :)]]]
தீபாவளிக்கு மறுநாள்ண்ணே.. ஏதாவது ஒரு சினிமாவுக்குப் போகணுமேன்னு நினைச்சுப் போனதுதான்..!
[[[Sugumarje said...
ஏங்க இப்படியெல்லாம் ஒளிப்படம் போட்டு பயமுறுத்துரீங்க... (மேலே இருந்து 3-வது) இரவு தூக்கம் போச்சுங்க...
//அம்பிகா, ரேகா, அஸ்வினி, நித்யா, உமா பத்மநாபன், என்று பெரிய லிஸ்ட் இளம் அம்மாக்கள் வரிசை கட்டி கலர் காண்பிக்க//
அப்ப நல்லா ஜொல்லு விட்டுட்டீங்க...
//உத்தமபுத்திரன்//
சிவாஜி நடித்த திரைப்படத்தை கெடுத்துட்டாங்க போல...
//அதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டனே..! ஊர் முழுக்க அரை லூஸ்களா இருக்காங்கன்னு.. அப்போ கதை எப்படியிருக்கும்ன்னு நீங்களே ஊகிச்சுக்குங்க..!//
நீங்களும் கூடிய சீக்கிரம் லிஸ்ட்ல வந்துருவீங்க இப்படியெல்லாம் பார்த்தா... :)]]]
உங்க ஆசீர்வாதம்ண்ணே..!
குப்பை படத்துக்கு சூப்பர் விமர்சனம் அண்ணே பகிர்வுக்கு நன்றி.
[[[philosophy prabhakaran said...
//ஊர் முழுவதும் அரை கிறுக்குகள் இருந்தால் அந்த ஊர் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது திரைப்படம்//
கடுமையா பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் போல...]]]
பின்ன.. அத்தனை கேரக்டரும் இது மாதிரியே பேசினா என்னன்னு சொல்றது..?
[[[இது என்ன பழைய நடிகர் - நடிகையர் சந்திப்பில் எடுத்த போட்டோவா...?]]]
குரூப் போட்டோண்ணே..!
[[[//'சின்னக் கலைவாணர்' வந்த பின்புதான் படம் டாப் கியருக்குச் செல்கிறது //
விவேக்கும் இல்லையெனில் படத்தின் கதி...?]]]
அதோ கதிதான்..!
[[[ஆந்திர மணவாடு - தமிழ் சுந்தரர் சொல் பயன்பாடு அருமை...]]]
நன்றிங்கண்ணே..!
[[[நேரம் இருந்தால் என் வலைப்பூவிற்கு வந்து மைனா மற்றும் வ விமர்சனங்களை படிக்கவும்.
philosophyprabhakaran.blogspot.com]]]
படிச்சிட்டனே.. உங்களைத் தெரியாம இருக்க முடியுங்களா..?
[[[சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே, விமர்சனம் டாப். படம் குப்பையா இருந்தாலும் உங்க விமர்சனம் அலப்பறையா இருக்குண்ணே..]]]
குப்பைன்னுல்லாம் சொல்ல முடியாது. ஏதோ ஒரு தடவை பார்க்கலாம்..!
[[[தருமி said...
இந்த மாதிரி படத்துக்கு உங்க விமர்சனத்தை முழுசா வாசிக்கலாம்; வாசிச்சிட்டேன்.
//ஆளும் அழகுதான். யாருன்னு தெரியலையே..? தெரிஞ்சா சொல்லுங்கப்பா..!//
உங்களுக்குமா தெரியலை, 'ஆனந்த்'!!]]]
ஆமாங்கய்யா.. புதுமுகமா இருக்கு. ஆனால் நடிப்பைப் பார்த்தா பழம் பெரும் நடிகை மாதிரி தெரியுது..! இன்னிக்கு விசாரிச்சர்றேன்..!
[[[கார்த்திகைப் பாண்டியன் said...
என்னது வல்லக்கோட்டை புல்லா? அய்யய்யய்யோ.. இந்தக் கொடுமையெல்லாம் உங்க ஊர்லதாண்ணே நடக்கும்..]]]]
அதான் எனக்கும் குழப்பமா இருந்தது..! எப்படிண்ணே தெரியலண்ணே..!
[[[Thomas Ruban said...
குப்பை படத்துக்கு சூப்பர் விமர்சனம் அண்ணே பகிர்வுக்கு நன்றி.]]]
ஒரு தடவை பார்க்கலாம்ண்ணே.. குப்பையெல்லாம் கிடையாது..!
// "இவ்ளோ சொல்லிட்டு கதையைச் சொல்லலையே"ன்னு திட்டாதீங்க.. அதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டனே..! ஊர் முழுக்க அரை லூஸ்களா இருக்காங்கன்னு//
கதை இல்லாமலே படம் எடுத்து hit ஆக்க தமிழ் சினிமாகாரங்க பழகியிட்டாங்க!மசால படங்களை hit ஆக்க ரசிகர்களும் பழகிட்டாங்க. என்னத்தைச் சொல்ல!!~
பட விமர்சனத்திற்கு இவ்வளவு உழைத்திருக்குக்கிறீர்கள். பாராட்டுக்கள்!ஆனா படம் ஓடாதுன்னு நினைக்கிறேன்!
தீபாவளி மறுநாள் சொத்த கடலைய மென்றதுமாதிரி என்னண்னே மொக்கப் படத்துக்கு போயி கவுந்திருக்கீக. அந்த லூசு மேட்டரு அருமை கூடியவிரையில் நம்மளையும் அதில் சேத்துருவாங்க போல நாள் டிவிடி கிடைச்சா பார்காலம்னு இருக்கேன் என்ன சொல்லுறீக
அண்ணே மொசாத் பத்தின பதிவுக்கு இங்க பின்னூட்டம் விடுறேன் ...,மன்னிக்கவும் ...,
இவனுங்க (மொசாத் ) கில்லாடி தான் ...,இவனுக்கு மேல ஒரு கில்லாடிக்கு கில்லாடி ஒருத்தன் இருக்கான் ...,அவன் பேரு KGB ரஷ்ய உளவு துறை ...,மொசாத் இப்படி CCTV ல மாட்டிகின்னு முழி பிதுங்குது ..,ஆனா KGB இப்படி எல்லாம் மாட்டிகாது ...,அவனுங்க ரேஞ்சு வேற வேற வேற ..,
[[[செழியன் said...
//"இவ்ளோ சொல்லிட்டு கதையைச் சொல்லலையே"ன்னு திட்டாதீங்க.. அதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டனே..! ஊர் முழுக்க அரை லூஸ்களா இருக்காங்கன்னு//
கதை இல்லாமலே படம் எடுத்து hit ஆக்க தமிழ் சினிமாகாரங்க பழகியிட்டாங்க! மசால படங்களை hit ஆக்க ரசிகர்களும் பழகிட்டாங்க. என்னத்தைச் சொல்ல!!~]]]
நம்ம இதுக்கு மேல ஒண்ணும் செய்ய முடியாது செழியன்.. பேசாம சிரிச்சுக்கிட்டே எந்திரிச்சு வந்திர வேண்டியதுதான்..!
[[[எஸ்.கே said...
பட விமர்சனத்திற்கு இவ்வளவு உழைத்திருக்குக்கிறீர்கள். பாராட்டுக்கள்! ஆனா படம் ஓடாதுன்னு நினைக்கிறேன்!]]]
சூப்பர் ஹிட்டா இல்லை. ஏதோ சுமாரா ஓடிரும்..!
[[[பித்தன் said...
தீபாவளி மறுநாள் சொத்த கடலைய மென்றது மாதிரி என்னண்னே மொக்கப் படத்துக்கு போயி கவுந்திருக்கீக. அந்த லூசு மேட்டரு அருமை கூடிய விரையில் நம்மளையும் அதில் சேத்துருவாங்க போல நாள் டிவிடி கிடைச்சா பார்காலம்னு இருக்கேன் என்ன சொல்லுறீக.]]]
நல்ல முடிவு பித்தன்ஜி.. வாழ்க வளமுடன்..!
[[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
அண்ணே மொசாத் பத்தின பதிவுக்கு இங்க பின்னூட்டம் விடுறேன். மன்னிக்கவும். இவனுங்க(மொசாத்) கில்லாடிதான். இவனுக்கு மேல ஒரு கில்லாடிக்கு கில்லாடி ஒருத்தன் இருக்கான். அவன் பேரு KGB ரஷ்ய உளவு துறை. மொசாத் இப்படி CCTV ல மாட்டிகின்னு முழி பிதுங்குது. ஆனா KGB இப்படி எல்லாம் மாட்டிகாது. அவனுங்க ரேஞ்சு வேற வேற வேற.]]]
இதை ஏம்ப்பா இங்க வந்து சொல்ற.. அங்கேயே சொல்லியிருக்கலாம்ல..!
கே.ஜி.பி. வெளிநாடுகளில் தனது கொலை வேலைகளை அதிகமாக நடத்தவில்லை. அதேபோல் தேடிப் போய் கொலை செய்து தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டதில்லை..!
இதுவரையில் நான் படித்ததில் இருந்து சொல்கிறேன்..!
//// கே.ஜி.பி. வெளிநாடுகளில் தனது கொலை வேலைகளை அதிகமாக நடத்தவில்லை. அதேபோல் தேடிப் போய் கொலை செய்து தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டதில்லை..!
இதுவரையில் நான் படித்ததில் இருந்து சொல்கிறேன்..!////
ஹா ஹா ஹா ...,அண்ணே அந்த பதிவுல போய் பாருங்க ..வஜ்ரா என்னக்கு பதில் சொல்றதா சொல்லிக்கிட்டு அறிவு பூர்வமா கமெண்ட் போட்டிருக்காரு ....,ஹா ஹா ஹா ..
நான் இன்னா சொன்னேன்னு புரியாம அறிவ அதிகமா ப்ரோயோகிசிட்டு ..கீ போர்டு ல ஊத்தி கமெண்ட் போடிருகாறு ...
///// அதேபோல் தேடிப் போய் கொலை செய்து தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டதில்லை..!////
இத தான் நான் சொன்னேன் ...,CCTV ல மாட்டி முழி பிதுங்க மாட்டாங்க ...,அதை சொல்லிட்டேனா நானு அதுக்குள்ள நீ யாருகிட்டயோ காசு வாங்கிட்டே..ரொம்ப நல்லவன்னு certificate வேற ...,
விமர்சனம் நல்லா இருக்கு படம் நல்லா இல்லை...
[[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
// கே.ஜி.பி. வெளிநாடுகளில் தனது கொலை வேலைகளை அதிகமாக நடத்தவில்லை. அதேபோல் தேடிப் போய் கொலை செய்து தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டதில்லை..! இதுவரையில் நான் படித்ததில் இருந்து சொல்கிறேன்..!//
ஹா ஹா ஹா. அண்ணே அந்த பதிவுல போய் பாருங்க. வஜ்ரா என்னக்கு பதில் சொல்றதா சொல்லிக்கிட்டு அறிவுபூர்வமா கமெண்ட் போட்டிருக்காரு. ஹா ஹா ஹா]]]
-)))))))))))))))
[[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
//அதேபோல் தேடிப் போய் கொலை செய்து தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டதில்லை..!//
இததான் நான் சொன்னேன். CCTV-ல மாட்டி முழி பிதுங்க மாட்டாங்க. அதை சொல்லிட்டேனா நானு அதுக்குள்ள நீ யாருகிட்டயோ காசு வாங்கிட்டே. ரொம்ப நல்லவன்னு certificate வேற.]]]
லூஸ்ல விடுங்கண்ணே.. ஏதோ கோவத்துல சொல்லியிருப்பாரு..!
[[[சௌந்தர் said...
விமர்சனம் நல்லா இருக்கு படம் நல்லா இல்லை.]]]
நன்றி செளந்தர்..!
நேத்து நைட்டுதான் இந்தப் படம் பார்த்தேன்.. இன்னைக்கு விமர்சனம் எழுதலாம்னு நினைச்சேன்.. ஆனா படத்தைப் பத்தி நான் என்ன நினைச்சனோ அதை அப்படியே எழுதியிருக்கீங்க.. சோ... விமர்சனம் எழுத இருப்பதை கேன்சல் செய்து உங்களை வழிமொழிகிறேன்... விவேக் இல்லைன்னா இந்தப்படம் பார்ப்பதே வீண்.. விவேக் இருந்ததாலேயே... படம் தப்பித்து விட்டது...
[[[பிரியமுடன் ரமேஷ் said...
நேத்து நைட்டுதான் இந்தப் படம் பார்த்தேன். இன்னைக்கு விமர்சனம் எழுதலாம்னு நினைச்சேன். ஆனா படத்தைப் பத்தி நான் என்ன நினைச்சனோ அதை அப்படியே எழுதியிருக்கீங்க. சோ விமர்சனம் எழுத இருப்பதை கேன்சல் செய்து உங்களை வழிமொழிகிறேன். விவேக் இல்லைன்னா இந்தப் படம் பார்ப்பதே வீண். விவேக் இருந்ததாலேயே படம் தப்பித்து விட்டது.]]]
நன்றி ரமேஷ்..! விவேக்கால்தான் படம் தப்பித்தது என்று இன்னும் சில ஆண்டுகள் கழித்து தனுஷே ஒத்துக் கொள்வார்..!
சின்ன கவுண்டராக வரும் அந்த சின்னப் பையன் பிரமாதமாக நடித்து இருக்கின்றான். அதைப்போய் மிகைநடிப்பு என்கிறீரே. நகைச்சுவை நாட்டாமை பாத்திரம் தனே அது. முகபாவனை, தோரனை அனைத்தும் மிக்க அருமை.
மொக்கை படத்துக்கு ஒரு விமர்சனமா..? வேலைய பாருங்க...
[[[உசிலை விஜயன் said...
சின்ன கவுண்டராக வரும் அந்த சின்னப் பையன் பிரமாதமாக நடித்து இருக்கின்றான். அதைப் போய் மிகை நடிப்பு என்கிறீரே. நகைச்சுவை நாட்டாமை பாத்திரம்தனே அது. முகபாவனை, தோரனை அனைத்தும் மிக்க அருமை.]]]
ஓ.. நீங்க அந்தக் கோணத்துல பார்க்குறீங்களோ..? அந்தக் கதாபாத்திரமே வயதுக்கு மீறியது என்கிறேன். அவ்வளவுதான். நடிப்பு பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.
அண்ணே தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
கவுண்டர்களை பற்றி தேவர் என்னன்னே அப்படி சொல்லி இருக்கார்?. கோயம்புத்தூர்ல படம் ஓடாம ஒரு நாள் இருந்துச்சாமே?
[[[குறும்பன் said...
அண்ணே தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். கவுண்டர்களை பற்றி தேவர் என்னன்னே அப்படி சொல்லி இருக்கார்?. கோயம்புத்தூர்ல படம் ஓடாம ஒரு நாள் இருந்துச்சாமே?]]]
காட்சியமைபு முழுவதுமே கவுண்டர்கள் முட்டாள்கள் என்பதைப் போலவே அமைத்திருக்கிறார்கள். இடையில் விவேக் வேறு இந்த முட்டாக் கவுண்டங்ககிட்ட நான் மாட்டிக்கிட்டது போதாதுன்னு.. நீ வேறய்யா என்று தனுஷிடம் கேட்பார்..
நான் படம் பார்க்கும்போதே நினைத்தேன். எப்படி சென்சார் போர்டில் விட்டார்கள் என்று..!?
[[[butterfly Surya said...
மொக்கை படத்துக்கு ஒரு விமர்சனமா? வேலைய பாருங்க.]]]
என்ன இருந்தாலும் பதிவுலகக் கடமையொண்ணு இருக்குல்லண்ணே.. அதுனாலதான்..!
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
Post a Comment