கோத்தபாய பக்சே-சரத் பொன்சேகா மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிகை

24.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இந்தச் செய்தி நேற்றைய 'டெக்கான் கிரானிக்கல்' பத்திரிகையில் நான் படித்தது. இதுவரையில் நான் அறிந்திராத செய்தியாக இருந்ததினால், அதனை இங்கே கூடுமானவரையில் மிகச் சரியாக மொழி பெயர்த்து பதிவிட்டுள்ளேன்.

US LAWYER SEEKS ACTION AGAINST LANKA OFFICIALS

இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகர் பஷில் ராஜபக்சே மற்றும் இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு எதிராக 1000 பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியல் ஒன்று அடுத்த வாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இலங்கையில் வசிக்கும் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்ததாக இந்த இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உரிய ஆவணங்களின் மூலம் வைக்கப்பட்டுள்ளதாம்.

புரூஸ்பெயின் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச வழக்கறிஞர்தான் இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தயார் செய்திருக்கிறார். இவர் ரொனால்டு ரீகனின் ஆட்சிக் காலத்தில் அஸோஸியேட் டெபுடி ஜெனரல் அட்டர்னியாகப் பணியாற்றியவர். மனித உரிமை அமைப்புகளில் அதிக காலம் ஆர்வத்துடன் பணியாற்றியிருக்கிறார். வாஷிங்டன் டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் மனித உரிமைகள் பற்றி பல காலம் கட்டுரைகள் எழுதியவராம். அமெரிக்க அரசியல் சட்டம் மற்றும் சர்வதேச நீதிமன்ற விவகாரங்களில் திறன் பெற்றவர்.



















தற்போது TAG(Tamils Against Genocide) என்கிற அமைப்பின் வழக்கறிஞராக உள்ளார்.

கொடுங்கோலர் இலங்கை அதிபர் ராஜபக்சே, இவரது உடன்பிறப்பான கோத்தபாய ராஜபக்சே, இன்னொரு உடன்பிறப்பு பஷில் ராஜபக்சே, இராணுவத் தளபதி சரத் பொன்சாகே ஆகிய நால்வருக்கும் எதிரான படுகொலைக்கான எச்சரிக்கை தாக்கலை சமர்ப்பித்திருக்கும் புரூஸ், “இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் இதன் மீது அமெரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்..” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க அரசாங்கமே தனித்து இது போன்ற படுகொலை வழக்குகளை கையாள முடியும்” என்கிறார் இந்த சட்டத் தரணி. இதற்கு இவர் சொல்லும் முதல் காரணம், “கோத்தபாய ராஜபக்சே, பஷில் ராஜபக்சே, சரத் பொன்சேகா மூவருமே அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்” என்பதுதான். இந்த மூவரும் அமெரிக்காவில் நிரந்தர குடியிருமைக்கான கிரீன் கார்டை பெற்றுள்ளார்களாம்.








கோத்தபாய ராஜபக்சே கலிபோர்னியாவில் San Dimas என்கிற இடத்தில் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டுக்குச் சொந்தக்காரராம்.












இவரது தம்பியும், மகிந்தாவுக்கு அரசியல் ஆலோசகருமான பஷில் ராஜபக்சே கலிபோர்னியாவில் Fontana என்கிற இடத்தில் 5 மில்லியன் டாலர் மதிப்பள்ள வீடு வைத்துள்ளாராம்.











இவர்களுக்கு சளைக்காத சரத்பொன்சேகா தன் மகள் பெயரில் ஓக்லஹாமாவில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.










“கிரீன் கார்டு வைத்துள்ள அமெரிக்க குடிமக்கள் யாரேனும் ஏதாவது திட்டமிட்ட படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருப்பின் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க சட்டமான US Genocide Accountability Act(18 U.S.C.1091) வலியுறுத்துகிறது..” என்கிறார் புரூஸ்.

இந்தச் சட்டத்தின்படிதான் தான் இந்த குற்றப்பத்திரிகையை தயார் செய்திருப்பதாக கூறுகிறார் புரூஸ். இந்த ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையில் பக்சே சகோதரர்கள் மற்றும் சரத்பொன்சேகா நால்வரும் இலங்கையில் தமிழர்களைத் திட்டமிட்டு கொன்று குவித்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் விளக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.

“இந்த ஆதாரங்களை வைத்து அமெரிக்க குடிமகன்களான கோத்தபாயவும், சரத்பொன்சேகாவும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்..” என்கிறார் புரூஸ்.

“ஒபாமா ஆட்சி இந்த அறிக்கைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்..” என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் புரூஸ், “இதற்கான அழுத்தத்தை எமது அமைப்பும், தமிழ் மக்களும் அமெரிக்க அரசுக்குக் கொடுப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2005-ம் ஆண்டு பக்சே சகோதரர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இதுவரையிலும் 13000 சாதாரண சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதற்கான ஆதாரங்கள் இந்தக் குற்றப்பத்திரிகையில் சமர்ப்பிக்கட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இந்த கொடூர யுத்தத்தால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்” என்று கவலை தெரிவித்துள்ளார்.

“உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசின் இந்த கொடூரத்தனம் வெட்டவெளிச்சமாக இருந்த காரணத்தினால்தான் ஐ.நா.வுக்கான மனித உரிமை கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் இலங்கை தோற்றுப் போனது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.

பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..?

38 comments:

Anonymous said...

Bruce Fein has been talking about this for a while. None of the Tamil Magazines ever write about that. Except Vikatan and Kumudam, no one even have written about white van kidnapping! Even you have read about Bruce Fein from Deccan Chronicle! - Krishnamoorthy

ARIVUMANI, LISBON said...

//எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.//

yes.

Anonymous said...

Green Card (GC) is not a Citizeship ...Its residenceship...

At max, USA can cancels the GC and lock the assets...

ராவணன் said...

தம்பி சரவணா,

நல்ல செய்தியை அறிய உதவிய பதிவிற்கு கோடானு கோடி நன்றிகள்.

இப்படிக்கு,
ராவணன்.

வலையப்பன் said...

நானும் இந்த செய்தியை பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். புருஸ் ஃபெயின் சென்னையில்தான் இருக்கிறார்.

வலையப்பன் said...

நானும் இந்த செய்தியை பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். புருஸ் ஃபெயின் சென்னையில்தான் இருக்கிறார்.

Anonymous said...

//எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.//
உண்மைத்தமிழன்,முழு நிம்மதி கிடைக்க வேண்டுமாயின் பிரபாகரனின் இதை விட கொடிய முகத்தையும் காட்டுங்கள்.

ஸ்வாதி said...

எரிந்து கொண்டிருந்த இதயத்தில் ஒரு குடம் குளிர்நீர் வார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இப்போது எனது மனநிலை.

நல்ல செய்தி தட்டிய உங்கள் கரங்களுக்கு இன்னமும் கூடிய வல்லமை வர பிராத்திக்கிறேன்.

ஸ்வாதி said...

கிரீன் கார்ட் என்பது குடியுரிமை அல்ல; குடியிருக்க அனுமதி வழங்கியிருப்பதற்கான அடையாள அட்டை; கிரீன்கார் வைத்திருப்பவர் 5 வருடங்களின் பின் தான் அமெரிக்காவின் குடியுரிமை என்ற சிட்டிஸன் ஷிப் கோரி விண்ணப்பிக்க தகுதியுடையவராகிறார்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Bruce Fein has been talking about this for a while. None of the Tamil Magazines ever write about that. Except Vikatan and Kumudam, no one even have written about white van kidnapping! Even you have read about Bruce Fein from Deccan Chronicle! - Krishnamoorthy//

கிருஷ்ணமூர்த்தி ஸார்..

வெள்ளை வேன் படுகொலைகள் பற்றி விகடனும், குமுதமும் ஏற்கெனவே எழுதிவிட்டன.

புரூஸ் பற்றி அடுத்த புதன்கிழமை வெளியாகும் ஜூனியர்விகடன், குமுதம் ரிப்போர்ட்டரில் செய்திகள் வருகிறது..

உண்மைத்தமிழன் said...

///BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
//எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.//
yes.///

நன்றி அறிவுமணி..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Green Card (GC) is not a Citizeship. Its residenceship. At max, USA can cancels the GC and lock the assets...//

அப்படியா..? தெரிந்து கொண்டேன்..

சரி.. அப்படியாவது செய்தால் அவர்களுக்கு ஒரு பயம் இருக்குமே..?

எப்படி இருந்தாலும் மிலோசெவிக்கின் கதிதான் ராஜபக்சே சகோதரர்களுக்கு நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.. இதனை அமெரிக்கா நினைத்தால் உறுதியாகச் செய்யலாம்..

உண்மைத்தமிழன் said...

//ராவணன் said...
தம்பி சரவணா, நல்ல செய்தியை அறிய உதவிய பதிவிற்கு கோடானு கோடி நன்றிகள்.
இப்படிக்கு,
ராவணன்.//

அண்ணா ராவணா..

எனக்குத் தெரிந்த ராவணன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.

தாங்களோ சிங்கப்பூரில் இருப்பதாக அறிகிறேன்.. இத்தனை நாட்களாக ஏன் வெளிச்சத்துக்கு வராமல் பதுங்கியிருக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

உங்களுடைய மதுரை மாநகரின் சினிமா நினைவலைகள்.. சுப்பிரமணியபுரம் படத்தின் விமர்சனம் படித்தேன்.. மதுரை சினிமா தியேட்டர்களில் நான் குடியிருந்த காலக்கட்டத்தை நினைத்துப் பார்க்க வைத்தது உமது பதிவு..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

//பரக்கத் அலி said...
நானும் இந்த செய்தியை பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். புருஸ் ஃபெயின் சென்னையில்தான் இருக்கிறார்.//

ஓ.. அப்படியா..? புது செய்தியாக உள்ளதே.. படிக்கக் காத்திருக்கிறேன் பரக்கத்..

வருகைக்கு நன்றி..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.//
உண்மைத்தமிழன்,முழு நிம்மதி கிடைக்க வேண்டுமாயின் பிரபாகரனின் இதை விட கொடிய முகத்தையும் காட்டுங்கள்.///

இதிலென்ன காட்டுறதுக்கு இருக்கு..? அதான் ஏற்கெனவே எல்லாருமே சொல்லி முடிச்சாச்சே.. இனிமேல் புதிதாக அவரைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை..

இப்போது அனைவரின் கவனமும் அப்பாவி ஈழத்து மக்கள் மீதுதான்..

உண்மைத்தமிழன் said...

//ஸ்வாதி said...
எரிந்து கொண்டிருந்த இதயத்தில் ஒரு குடம் குளிர்நீர் வார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இப்போது எனது மனநிலை. நல்ல செய்தி தட்டிய உங்கள் கரங்களுக்கு இன்னமும் கூடிய வல்லமை வர பிராத்திக்கிறேன்.//

நன்றி ஸ்வாதி..

இந்த முயற்சியின் பலனாக பக்சே சகோதரர்களின் ஆட்டம் முடிவுக்கு வருமேயானால் நமக்கு நல்ல காலம் பிறக்கிறது என்று உறுதியாக நம்பலாம்..

உண்மைத்தமிழன் said...

//ஸ்வாதி said...
கிரீன் கார்ட் என்பது குடியுரிமை அல்ல; குடியிருக்க அனுமதி வழங்கியிருப்பதற்கான அடையாள அட்டை; கிரீன்கார் வைத்திருப்பவர் 5 வருடங்களின் பின்தான் அமெரிக்காவின் குடியுரிமை என்ற சிட்டிஸன் ஷிப் கோரி விண்ணப்பிக்க தகுதியுடையவராகிறார்.//

ஒருவேளை இவர்கள் அதையும் வாங்கியிருக்கலாமே..

அந்தக் கோணத்தில் பார்த்தாலும் இந்த முயற்சி நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்..

benza said...

முன்பும் ஓர் முறை சிக்காகோ வில்
வளக்கு போடுறோம் பேர்வழின்னுட்டு
கதையே இல்லாம மாறினாங்கையா.

றாஜபக்ச குடும்பம் முழுவதுமே இதே
கதை தானா?

ஜனாதிபதி மகிந்த சுனாமி பணத்தை
சுருட்டிய போது அம்பலமாக்கிய பத்திரிகை ஆசிரியர் இப்போது சுடப்பட்டார்.

அப்போ குடும்பமே கைலாசம் எங்கிறீங்க, நம்ப ஆசையாத்தான்
இருக்கு.

benza said...

உன்மை தமிழன் எனக்கு வழங்கிய அறிவுரையான
'' உற்று கவனித்தால் புரியும்''
என்பது உண்மை >>>

சற்று பின்னே சென்று சென்ற வருட கடைசி மாதங்களை பார்த்தபோது >>>

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினதும் நடிப்புலக பிரபலங்களின் அன்பொழுகும்
பாசத்தையும் கண்டேன் >>>

முதலமைச்சர் கருணநிதி வன்னிபகுதியில் போர்ச்சூழலில் மாட்டுபட்டிருக்கும்
பாமர மக்களுக்காக மத்திய அரசை எதிர்த்து காங்கிரசை புறக்கணித்து தனது
முப்பது மாத அரசை கலைக்கவும் துணிந்துவிட்டார் >>>

என்னா பரந்த மனம் > என்னா துணிவு > இதுவல்லோ மனித நேயம் >>>

ரஜனி காந்தும் > கமல காசனும் தமது பிறந்த தின கொண்டாடங்களை
இப்பொது ''வேண்டாம் நம் சகோதரர் வன்னியில் கொல்லபடுகின்றனர்''
என்று தமது அனுதாபத்தை காட்டியுள்ளனர் >>>

நமது அடுத்த ஹீரோ விஜய் > கொஞ்ச நஞ்ச மில்லாது எட்டு மணி நேரம்
உண்ணாவிரதம் இருந்திருகிறார் >>>

முருகா இவரை நீதான் அப்பா காபாதினாய் > உனக்கு நான் என்றென்றும் அடிமை !

இந்த Sam Daniel என்ற நிருபர் சற்று புதுமையை மெழுக ''கருணா'' என்றதும்
ஓடிச்சென்று கிளிக்கினால் அது நம்ம முதலமைச்சர் கருணநிதி >>>

ஏமாற்றம் தான் > அது சரி இந்த கருணநிதி ''டாக்டர்'' என விலாசமிடபடாத கடிதங்களை பிரிக்க மாடாராமே ??? >

உண்மையா ???

கடைசியில் கேட்ட கேள்வி தான் அண்ணே அவமானமாக இருக்கு >
பிரபாகரனை பிடிப்பார்களா ? பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைபார்களா ???

அதுதான் அவர் வெளியில போய்டாராமே !!!

benza said...

இந்த தகவல் கொழும்பு பத்திரிகைகளுக்கு தெரிந்தாலும் பிரசுரிக்க மாட்டார்களே !

அது தான் சண்டே லீடர் ஆசிரியரை
கொன்னுட்டாங்களே !

லசந்த விக்றமதுங்க வினது மரண
சாசன ரேப் கேட்டீர்களா ?

சுடுவார்கள் என முன்னரே குறிப்பறிந்து பதித்த துணிவை
ஆங்கில பத்திரிகை உலகம்
போற்றியது.

அவர் சிங்கள இனத்தவர் என்பதால்
தமிழ் பத்திரிகை உலகம் கண்ணை
மூடிக்கொண்டிருக்கலாம் !

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
முன்பும் ஓர் முறை சிக்காகோவில்
வளக்கு போடுறோம் பேர்வழின்னுட்டு
கதையே இல்லாம மாறினாங்கையா.
றாஜபக்ச குடும்பம் முழுவதுமே இதே
கதைதானா? ஜனாதிபதி மகிந்த சுனாமி பணத்தை சுருட்டியபோது அம்பலமாக்கிய பத்திரிகை ஆசிரியர் இப்போது சுடப்பட்டார். அப்போ குடும்பமே கைலாசம் எங்கிறீங்க, நம்ப ஆசையாத்தான் இருக்கு.//

நம்பிக்கையோட இருங்க பென்ஸ் ஸார்.. அவர்களுக்கு அழிவு காலம் நெருங்கிருச்சுன்னு நினைக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
உன்மை தமிழன் எனக்கு வழங்கிய அறிவுரையான ''உற்று கவனித்தால் புரியும்'' என்பது உண்மை >>>//

நான் சொன்னது வலையுலக அரசியலைப் பற்றி ஸார்.. தாங்கள் ஏதும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்..

//சற்று பின்னே சென்று சென்ற வருட கடைசி மாதங்களை பார்த்தபோது >>>
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினதும் நடிப்புலக பிரபலங்களின் அன்பொழுகும்
பாசத்தையும் கண்டேன் >>>
முதலமைச்சர் கருணநிதி வன்னி பகுதியில் போர்ச் சூழலில் மாட்டுபட்டிருக்கும் பாமர மக்களுக்காக மத்திய அரசை எதிர்த்து காங்கிரசை புறக்கணித்து தனது முப்பது மாத அரசை கலைக்கவும் துணிந்துவிட்டார்.
என்னா பரந்த மனம் > என்னா துணிவு > இதுவல்லோ மனித நேயம் >>>//

உங்களை யார் இதையெல்லாம் உண்மைன்னு நம்பச் சொன்னது.. நாங்களே நம்ப மாட்டோம்.. நம்பலை.. உங்களுக்கெல்லாம் கொழுப்பு..!

//ரஜனி காந்தும் > கமல காசனும் தமது பிறந்த தின கொண்டாடங்களை
இப்பொது ''வேண்டாம் நம் சகோதரர் வன்னியில் கொல்லபடுகின்றனர்''
என்று தமது அனுதாபத்தை காட்டியுள்ளனர்.//

அவர்களால் முடிந்தது இதுதானே ஸார்..

//நமது அடுத்த ஹீரோ விஜய் > கொஞ்ச நஞ்சமில்லாது எட்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்திருகிறார். முருகா இவரை நீதான் அப்பா காபாதினாய். உனக்கு நான் என்றென்றும் அடிமை!//

2011-ல் அவர்தான் முதல்வர் என்று நினைக்கிறேன்.

//இந்த Sam Daniel என்ற நிருபர் சற்று புதுமையை மெழுக ''கருணா'' என்றதும் ஓடிச் சென்று கிளிக்கினால் அது நம்ம முதலமைச்சர் கருணநிதி >>>
ஏமாற்றம்தான் > அது சரி இந்த கருணநிதி ''டாக்டர்'' என விலாசமிடபடாத கடிதங்களை பிரிக்க மாடாராமே? உண்மையா ???//

பொய்.. அவருக்கு வரும் கடிதங்களைப் பிரிக்கவே 3 பேர் வேலைக்கு இருக்கிறார்கள்.

//கடைசியில் கேட்ட கேள்விதான் அண்ணே அவமானமாக இருக்கு >
பிரபாகரனை பிடிப்பார்களா? பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைபார்களா?
அதுதான் அவர் வெளியில போய்டாராமே!//

வெளில போனாத்தானே.. போயிருக்க மாட்டார்.. உள்ளயிருந்து சிக்கிட்டாருன்னா என்ன பண்ணுவீங்கன்றதுதான் கேள்வி..

நானும் கேக்குறேன்.. ஒப்படைப்பீங்களா? மாட்டீங்களா..? சீக்கிரமா சொல்லுங்க.. எனக்கு நிறைய வேலையிருக்கு..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
இந்த தகவல் கொழும்பு பத்திரிகைகளுக்கு தெரிந்தாலும் பிரசுரிக்க மாட்டார்களே !
அதுதான் சண்டே லீடர் ஆசிரியரை
கொன்னுட்டாங்களே! லசந்த விக்றமதுங்கவினது மரண சாசன ரேப் கேட்டீர்களா ?
சுடுவார்கள் என முன்னரே குறிப்பறிந்து பதித்த துணிவை
ஆங்கில பத்திரிகை உலகம் போற்றியது.
அவர் சிங்கள இனத்தவர் என்பதால்
தமிழ் பத்திரிகை உலகம் கண்ணை
மூடிக் கொண்டிருக்கலாம்!//

இல்லை ஸார்.. இங்கே தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டமெல்லாம் நடந்தது.

அவருடைய இறுதி எழுத்துக்களை நடிகர் சத்தியராஜ் உணர்ச்சி பொங்க மேடையில் படித்து காண்பித்தார்..

தமிழக ஊடகங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்துதான் உள்ளார்கள்.

benza said...

பிளாக்கர் Blogger ஒன்றாக சேர்ந்து இயங்கியதால் அமெரிக்கா வில் ஒரு லேடி ஸ்கூல் டீச்சர் தனது வயது வந்த மாணவர்களுக்கு போர்னோ செக்ஸ் படங்கள் காட்டியதான வழக்கில் திருப்பம் வந்து வழக்கை தாக்கல் செய்த கல்வி அதிகாரிகள் மீது கண்டனம் தெரிவித்தார் விசாரித்த ஜட்ஜ்

இப்படி பல பிளாக்கர் வெற்றிகள் உள்ளன

>>> நீங்கள் நினைத்தால் >>>
இதற்கு தலைமை தாங்கி இலங்கை போரும்ஸ் FORUMS தேடி புகுந்து விளையாடினால் >>>

INTERNATIONAL TRANSPARENCY and TRUTH DIG போன்ற அமைப்புகளுக்கு அறிவித்து பிரயாசை எடுத்தால் நிச்சயம் வெற்றி

இரு வருடங்கள் முன் கனடாவில் இருந்து ஆயுதம் புலிக்கு கடத்த முற்பட்ட இருவர் மீது வழக்கு சென்ற வாரம் விசாரணை தொடங்கியது அமெரிக்க கோட்டில்

ஆமை வேகமானாலும் அலுவல்
நடக்குதே

இந்த லாயர் மாரை நான் நம்பவே மாட்டேன்

முன்பு சிக்காகோ ல வழக்கு போட்டு அதற்கென காசு சேர்த்து முழுங்கினது
ஞாபகம் இருக்கு இன்னம்

அதற்கு முன்னம் யுஎன்ஓ போறோம்
என்றார்கள்

அதற்கு முந்தி FAHIM என்னும் மீன் பிடி கப்பல் தமிழ் அரசு கட்சி காலத்தில் வாங்கினார்கள்

இவற்றை எழுதியவரை சுட்டார்கள்

சும்மா லேசு பட்ட ஆட்களா நம்ம
பொடியன்மார் ? !

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
பிளாக்கர் Blogger ஒன்றாக சேர்ந்து இயங்கியதால் அமெரிக்கா வில் ஒரு லேடி ஸ்கூல் டீச்சர் தனது வயது வந்த மாணவர்களுக்கு போர்னோ செக்ஸ் படங்கள் காட்டியதான வழக்கில் திருப்பம் வந்து வழக்கை தாக்கல் செய்த கல்வி அதிகாரிகள் மீது கண்டனம் தெரிவித்தார் விசாரித்த ஜட்ஜ். இப்படி பல பிளாக்கர் வெற்றிகள் உள்ளன. நீங்கள் நினைத்தால் இதற்கு தலைமை தாங்கி இலங்கை போரும்ஸ் FORUMS தேடி புகுந்து விளையாடினால் INTERNATIONAL TRANSPARENCY and TRUTH DIG போன்ற அமைப்புகளுக்கு அறிவித்து பிரயாசை எடுத்தால் நிச்சயம் வெற்றி.//

நிச்சயம் செய்யலாம் பென்ஸ் ஸார்.. இதற்கு முதலில் தேவை நேரம்தான்.. ஆனாலும் தினமும் ஒரு மணி நேரம் இணையத்தில் இருக்க முடியுமாதலால் இனி பார்ப்போம்.. அந்த போரம்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்..

//இரு வருடங்கள் முன் கனடாவில் இருந்து ஆயுதம் புலிக்கு கடத்த முற்பட்ட இருவர் மீது வழக்கு சென்ற வாரம் விசாரணை தொடங்கியது அமெரிக்க கோட்டில். ஆமை வேகமானாலும் அலுவல்
நடக்குதே. இந்த லாயர் மாரை நான் நம்பவே மாட்டேன். முன்பு சிக்காகோல வழக்கு போட்டு அதற்கென காசு சேர்த்து முழுங்கினது
ஞாபகம் இருக்கு இன்னம்.//

புது புது செய்திகளை கொட்டுகிறீர்களே பென்ஸ் ஸார்.. எப்படி ஸார்..? அனைத்தையும் அவதானித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.. வாழ்க..

//அதற்கு முன்னம் யுஎன்ஓ போறோம்
என்றார்கள். அதற்கு முந்தி FAHIM என்னும் மீன் பிடி கப்பல் தமிழ் அரசு கட்சி காலத்தில் வாங்கினார்கள். இவற்றை எழுதியவரை சுட்டார்கள்
சும்மா லேசு பட்ட ஆட்களா நம்ம
பொடியன்மார்?!//

ஓ.. இப்படி ஒரு கதை இருக்கா..? துப்பாக்கியை கையில் வைத்திருந்தாலே போதும்.. இப்படித்தான்.. யாரையாவது சுடத்தான் தோணும்..

benza said...

முன்பு கேட்டு கொண்டதன் பிரகாரம் இதை தருகின்றேன் >>>
சந்தர்பம் தந்தற்கு நன்றி >>>
++++++++++++++++++++++++
மாத்தையா கண்டதும் கேட்டதும்
+++++++++++++++++++++++++++++
>>> யாழ் யுனிவெர்சிட்டி இங்கிலீஷ் ப்ரோபிசர் கனகரட்னா அவர்களது கம்பெனில மாத்தையா வை சந்தித்துள்ளேன் >>> கனகரத்ன சிறு வயது தொடக்கம் எனது வகுப்பு சக மாணவன் >>> நண்பர்கள் அல்ல >>> அவர் முதல் வாங்கு நான் பின்சுவரில் சாய்பவன் >>> அவர் முதலாம் ரேங்க் நான் வழமையாக கடைசி பத்துக்குள் வருபவன் >>>

வளர்ந்ததும் பரஸ்பரம் இடது சார்பு மற்றும் எழுத்துலக பிரவேசம்
புரிந்துணர்வு எம்மை ஒன்றாக்கியது >>>
மாத்தையா எவ்வாறு புகுந்தார் என தெரியாது >>> நான் சிகரெட் பிடிப்பவன் >>> என்னிடம் வாங்கி ஒளித்து குடிப்பார் >>> துடிப்பான மனிதத்தன்மை கொண்ட இளைஜர் >>> எவருக்கும் கஷ்டம் என்றால்
பரிதவிக்கும் ஈர மனம் >>> பலரது தண்டனைகளை குறைத்தவர் >>> பலரால் நேசிகபட்டவர் >>>

முன்பு Victor என்னும் தளபதி பலரால் விரும்பபடுகின்றார் என்றதும் மன்னார் பகுதியல் ராணுவத்துடன் மோதலில் கழுத்தில் பின்பக்கத்தில் இருந்து சுடப்பட்டு இறந்தார் >>>

தளபதி கிட்டு ஆயுதங்களுடன் கள்ள கப்பலில் வரும்போது இந்திய கடற்படை நிற்கும் படி பணிக்க கப்பலை தகர்த்து மாண்டது தெரியும் தானே ?

மாத்தியா தான் தகவல் கொடுத்தது என்று அவரை சித்திரவதை செய்து
கொன்றார்கள்

இன்னுமோர் கதை >>> தலைவர் கூபிப்பிட்ட கூடத்துக்கு செல்லும் போது பிஸ்ரல் PISTOL கொண்டு சென்றாராம் >>> சோதித்த சமயத்தில் பிடிபட்டாராம் >>> தலைவர் இருக்குமிடத்தில் எவரும் ஆயுதம் வைத்திருக்க படாதாம் >>> ஆகவே மரண தண்டனை வழங்கினார்களாம்

இந்த ரெண்டாம் கதை பல ஓட்டைகள் கொண்டுள்ளது >>>
கூடத்துக்கு செல்லும் போது ஆயுதம் கொண்டு செல்ல
மாட்டார் >>> தெரிந்த விஷயம்

தலைவரை கொல்லுவதற்கு இம்மாதிரி மலிவான மார்க்கத்தை
ஒரு அனுபவசாலி தேர்ந்திருக்க மாட்டான்

வெளி உலகத்திற்கு மாத்தையா தலைவருக்கு அடுத்த படியில்
இருந்தவர்

ஒரு உண்மை புலி இயக்கத்தில் உள்ளது >>>

பிரபல்யம் அடைந்தால் தலை தெறிக்கும்

பெரிய சைஸ் ஆனை போன்றவர் டோம்னிக் >>>

பகிடிகாரர் >>> பலரோடும் அன்பாக பழகும் பண்பானவர்

உயர் குடும்ப பிள்ளை >>> ஒரு காலத்தில் புலியும் ராணுவமும்
மாறி மாறி வெற்றி தோல்வி கண்ட காலம்

தனது சக உயர் தர போராளிக்கு டோம்னிக் ஜோக்காக சொன்னார்

''என்னடா வெற்றி எண்டால் தலைவர் போட்ட பிளான் > தோல்வி எண்டால் யாரோ போட்ட பிளான் > உடனே விசாரணை''

தம்பி உனக்கு காலம் வந்துவிட்டது கவனம் என்றார்கள் அவரில் அன்புள்ளோர்

சொற்ப நாட்களில் தலைவரிடம் இருந்த அழைப்பாணை வந்தது

கிடைத்த பெரும் தொகை பணத்தை சுருடிக் கொண்டு பலாலி இராணுவமுகாம் மூலம் மாயமானார்

மிகுதி நீங்களே யூகித்து கொள்ளுங்கள்

benza said...

ராவணன் தனிமனிதனாம் . . .

சரவணா யாரு

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
முன்பு கேட்டு கொண்டதன் பிரகாரம் இதை தருகின்றேன் >>>
சந்தர்பம் தந்தற்கு நன்றி >>>
++++++++++++++++++++++++
மாத்தையா கண்டதும் கேட்டதும்
+++++++++++++++++++++++++++++
>>> யாழ் யுனிவெர்சிட்டி இங்கிலீஷ் ப்ரோபிசர் கனகரட்னா அவர்களது கம்பெனில மாத்தையாவை சந்தித்துள்ளேன் >>> கனகரத்ன சிறு வயது தொடக்கம் எனது வகுப்பு சக மாணவன் >>> நண்பர்கள் அல்ல >>> அவர் முதல் வாங்கு நான் பின்சுவரில் சாய்பவன் >>> அவர் முதலாம் ரேங்க் நான் வழமையாக கடைசி பத்துக்குள் வருபவன் >>> வளர்ந்ததும் பரஸ்பரம் இடது சார்பு மற்றும் எழுத்துலக பிரவேசம் புரிந்துணர்வு எம்மை ஒன்றாக்கியது >>>
மாத்தையா எவ்வாறு புகுந்தார் என தெரியாது >>> நான் சிகரெட் பிடிப்பவன் >>> என்னிடம் வாங்கி ஒளித்து குடிப்பார் >>> துடிப்பான மனிதத் தன்மை கொண்ட இளைஜர் >>> எவருக்கும் கஷ்டம் என்றால்
பரிதவிக்கும் ஈர மனம் >>> பலரது தண்டனைகளை குறைத்தவர் >>> பலரால் நேசிகபட்டவர் >>>
முன்பு Victor என்னும் தளபதி பலரால் விரும்பபடுகின்றார் என்றதும் மன்னார் பகுதியல் ராணுவத்துடன் மோதலில் கழுத்தில் பின்பக்கத்தில் இருந்து சுடப்பட்டு இறந்தார் >>>
தளபதி கிட்டு ஆயுதங்களுடன் கள்ள கப்பலில் வரும்போது இந்திய கடற்படை நிற்கும்படி பணிக்க கப்பலை தகர்த்து மாண்டது தெரியும்தானே ?
மாத்தியாதான் தகவல் கொடுத்தது என்று அவரை சித்திரவதை செய்து
கொன்றார்கள்.//

இதைத்தான் பெரும்பாலோர் சொல்லி வருகிறார்கள். கிட்டுவுக்கும், மாத்தையாவுக்கும் என்ன பகை இருக்க முடியும்..? இருவருமே ஒரே நோக்கத்திற்காகத்தானே உழைத்துக் கொண்டிருந்தார்கள்..?

மாத்தையா கிட்டு மீது பொறாமை கொண்டு அவரை இந்திய ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தார் என்கிறார்கள். ஏனோ நான் நம்பவில்லை. அந்தச் சமயத்தில் தற்செயலாக இந்திய கடல்படையின் கண்ணில் அந்தக் கப்பல் சிக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

//இன்னுமோர் கதை >>>
தலைவர் கூபிப்பிட்ட கூடத்துக்கு செல்லும்போது பிஸ்ரல் PISTOL கொண்டு சென்றாராம் >>> சோதித்த சமயத்தில் பிடிபட்டாராம் >>> தலைவர் இருக்குமிடத்தில் எவரும் ஆயுதம் வைத்திருக்கபடாதாம் >>> ஆகவே மரண தண்டனை வழங்கினார்களாம்.
இந்த ரெண்டாம் கதை பல ஓட்டைகள் கொண்டுள்ளது >>> கூடத்துக்கு செல்லும் போது ஆயுதம் கொண்டு செல்லமாட்டார் >>> தெரிந்த விஷயம்.
தலைவரை கொல்லுவதற்கு இம்மாதிரி மலிவான மார்க்கத்தை ஒரு அனுபவசாலி தேர்ந்திருக்க மாட்டான்.
வெளி உலகத்திற்கு மாத்தையா தலைவருக்கு அடுத்த படியில்
இருந்தவர்.//

நானும் ஏற்றுக் கொள்கிறேன்.. இது முட்டாள்தனமா ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்தான்..

//ஒரு உண்மை புலி இயக்கத்தில் உள்ளது >>>
பிரபல்யம் அடைந்தால் தலை தெறிக்கும். பெரிய சைஸ் ஆனை போன்றவர் டோம்னிக் >>>
பகிடிகாரர் >>> பலரோடும் அன்பாக பழகும் பண்பானவர். உயர் குடும்ப பிள்ளை >>> ஒரு காலத்தில் புலியும் ராணுவமும் மாறி மாறி வெற்றி தோல்வி கண்ட காலம் தனது சக உயர் தர போராளிக்கு டோம்னிக் ஜோக்காக சொன்னார். ''என்னடா வெற்றி எண்டால் தலைவர் போட்ட பிளான் > தோல்வி எண்டால் யாரோ போட்ட பிளான் > உடனே விசாரணை''
தம்பி உனக்கு காலம் வந்துவிட்டது கவனம் என்றார்கள் அவரில் அன்புள்ளோர். சொற்ப நாட்களில் தலைவரிடம் இருந்த அழைப்பாணை வந்தது. கிடைத்த பெரும் தொகை பணத்தை சுருடிக் கொண்டு பலாலி இராணுவ முகாம் மூலம் மாயமானார்.
மிகுதி நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.//

யூகிக்க என்ன இருக்கிறது..? இந்நேரம் ஏதாவது ஒரு வெளிநாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.. சரிங்களா ஸார்..

என்னையும் மதித்து தகவல்களைக் கொட்டியதற்கு மனமார்ந்த நன்றி ஸார்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
ராவணன் தனி மனிதனாம் . . .
சரவணா யாரு?//

அதான்.. யாரு சாமி அந்த ராவணன்..?

Anonymous said...

http://eelanaasam.com/sitebuilder/images/WE_WANT_WAR-563x452.jpg


யார் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்கவேண்டும் என்பதற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்.

போர் வேண்டும், சமாதானம் வேண்டாம் என்று பள்ளிமாணவர்களை கூட்டி ஊர்வலம போனவர்கள் யார் என்று பாருங்கள்

benza said...

மாத்தையா விஷயத்தில் டொமினிக் பற்றிய உங்களது கருத்து

[[[ யூகிக்க என்ன இருக்கிறது..? இந்நேரம் ஏதாவது ஒரு வெளிநாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.. சரிங்களா ஸார் ]]]

சாதாரண அகதியாக தப்பி ஓடியவர்
வாழ முடியாது சார்

அமெரிக்க மாபியா போன்ற நீண்ட கரம் கொண்டது புலிகள் இயக்கம்

சல்மான் றுஷ்டி போல ஸ்பெஷல் பாதுகாப்பு தேவைப் படும்

FRANCE நாட்டில் பொறுப்பாளராக இருந்தாரே LAWRENCE THILAGAR

இவர் கொடி கட்டிப் பறந்த காலம் சடுதியாக முடிவடைந்தது
திரும்ப அழைக்கப்பட்டு ஸஸ்பென்ஸ்ல் இருந்தாராம் --- இப்போ?

இப்படிப் பல கேஸ்கள்

ஏன் நம்ம அன்ரன் பாலசிங்கம் அய்யா லண்டன் நகரில் ஓர் பிரத்தியே பார்ட்டி.யில் வாய் தடுமாறி

''பிரபா தலைவர் யாழ்பாணத்தாருக்கு
ஓரு நல்ல பாடம் படிப்பிக்க வேணும் என்று சொன்னார், அதை நினைக்க எனக்கு பயமாக இருக்கு''
என்றாராம்

அடுத்த சில நாட்கள் தொடக்கம் பல
மாதங்கள் ஸைலன்ஸாக இருந்தாரே

இவர் அஸ்மா காரணமாக மதுபானம்
அருந்த உத்தரவு பெற்றிருந்தார்

ஸ்ரனிஸ்லோஸ் என்னும் பெயரில் எனது சக மாணவன்

ஸ்ரனி என்பதில் வீரகேசரி பதிப்பகத்தில் ஆங்கில நாவல்களை தழுவி பல நாவல்கள் எழுதினார்

இவ் விபரங்கள் தேவையற்றதாயின்
தயைய் செய்து இதனைப் பிரசுரிக்க
வேண்டாம்

நானும் இதுவரை சந்தர்ப்ம் தந்ததற்க்கு நன்றி கூறிய படி நிறுத்தி விடுகின்றேன்

benza said...

[[[ வெள்ளை வேன் படுகொலைகள் பற்றி விகடனும், குமுதமும் ஏற்கெனவே எழுதிவிட்டன.]]]

இந்த வெள்ளை வேன் பாவித்து ஆள்
கடத்தல் பின்னர் கொன்றொழித்தல்
போன்ற விஷயங்கள் மகிந்த றாஜபக்ஷ
காலத்தில் தொடங்கவில்லையே

ஜனாதிபதி ப்றேமதாஸ காலத்திலேயே உருவாகி
றிச்சட் டி சொய்ஸா எனும் சிறந்த
நாடக ஊடக விற்பன்னரையும்

நொய்லின் ஹொன்ரர் எனும் பாடகி
ரீவீ அறிப்பாளர் பேரழகி ஆகியோரை
கொடுமையாக கொன்றனரே

மேலும் பலர் கொலையுண்டனர்

இக் கொலைகளில் லங்கா பொலிஸ் சம்பந்தம் என பலரால் சந்தேகிக்கப்பட்டது

இதற்கிடையில் ஜனாதிபதி ப்றேமதாச தனது நம்பிக்கைக்குரியோர் என ஐந்து
லிங்கங்களை தன்னைச் சூழ வைத்திருந்தார்

பஞ்சலிங்கம் சுந்தரலிஙகம் பரமலிங்கம் மற்றும் இரு லிங்கங்கள்

அவரது காரணம்
''எனக்கு வேண்டியது
விவேகமான துரிதமான நம்பிக்கையான வேலை செய்யக் கூடியோரே''

benza said...

தயவு செய்து ஓர் உதவி

கீழே காணப்படும் வசனம் நான் கொமென்ற் இடும் ஏரியாவுக்குக் கீழ்
காணப்படுகின்றது
[[[ Follow-up comments will be sent to benza18@hotmail.com. Unsubscribe ]]]

ஆனால் ஓரு போதும் இந்த விலாசத்தில் Follow-up comments தரப்படவேயில்லை

ஆகவே இந்த விலாசத்தை எவ்வாறு
மாத்திக் கொள்வது

இவ் இடுகை இங்கு பொருந்தாதெனிலும் வேறு வழி தோன்றவில்லையே

மன்னித்து அறிவுரை தந்து உதவுங்கள் பிளீஸ்

benza said...

இன்றைய கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் படி இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்

ஏற்கனவே தொலைபேசி மூலம் தமிழ் நாட்டு முதல் அமைச்சருடன் ஆலோசித்துள்ளார்

வன்னியில் யுத்த பிரதேசத்தில் மாட்டுபட்டிருக்கும் பொது
ஜனங்களை காப்பாற்றுவதே தமது முதற் கண் கடமை என்றும்

புலிகள் இயக்கத்திற்கு எதுவிதமான கருணை காட்ட போவதில்லை
எனவும் கூறியுள்ளார்

ஐக்கிய நாட்டு செயலரும் வன்னி பிரதேச மக்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பது பிரதான விடையம் என அறிவித்திருக்கிறார்

வீரகேசரி ரிப்போர்ட் மேலதிக விபரத்துடன் இங்கு
காணலாம்>

benza said...

It is this type of abrasive behaviour and insulting statements that incited the Sinhala community and helped and supported for govt to tread the path of war.
Killing of innocent passengers in buses culminated in our Wanni people paying the price.
LTTE leader will face courts if he survives.
But his make up is that he will bite the bitter capsule, than surrender to govt forces.
Being a familied man he would prefer living in an unknown land.

Anonymous said...

For your information guys:
Gotabhaya, who is a US citizen and Sarath Fonseka, Sri Lankan chief of armed forces, a US green card holder.

Muthu said...

Does SL law permit US citizens take up the supreme posts in the govt ? Perhaps by the way of dual citizenship or something like that ?

Thanks
Muthu

abeer ahmed said...

See who owns atomicgamer.com or any other website:
http://whois.domaintasks.com/atomicgamer.com