15.01.2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
‘மாயவலை’ வித்தகர் பா.ராகவன், தனது ‘யுத்தம் சரணம் கச்சாமி’ தொடரைப் படித்துவிட்டு ராஜபக்சே சகோதரர்கள் தன்னை ஏன் இன்னமும் தொடர்பு கொள்ளவில்லை என்ற வருத்தத்திலேயே வண்டியோட்டி வந்தபோது, பிரபாகரன் என்ற பெயருடைய யாரோ ஒருவர் அவர் மீது தற்கொலைத் தாக்குதல் தொடுத்ததால் படுகாயமடைந்து மட்டக்களப்பின் புகழ் பெற்ற மாவுக்கட்டைப் போட்டுக் கொண்டு வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ளார் என்பதையும் கேள்விப்பட்டபோது மனம் பொறுக்காமல் அவரிடம் தொடர்பு கொண்டு துக்கம் விசாரிக்க நினைத்தேன்.
முடியவில்லை.
பல இடங்களிலும் அவருடைய தொலைபேசி எண் தெரியவில்லை என்றார்கள். சில இடங்களில் “ஏன் இப்ப உன் உடம்பு நல்லாயிருக்கிறது பிடிக்கலையா..? உனக்கெதுக்கு இந்த வெட்டி வேலை..?” என்று அன்பாக விசாரித்தார்கள். 'கிழக்கு' திசை நோக்கியிருந்த கூட்டத்தினரோ சொல்லி வைத்தாற்போல் “அவர்ட்ட கேளு.. இவர்ட்ட கேளு..” என்று கை காட்டியவர்கள், கடைசியாக, “யுத்தம் சரணம்' முடியற வரைக்கும் அவர் தலைமறைவா இருக்கப் போறாராம். அதுனால போன் நம்பரை யாருக்கும் தரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு ஸார்..” என்றார்கள்.
இதைத்தான் பா.ரா.வின் இந்தப் பதிவில் உள்ளதைச் சொல்லி “நலம் பெற வாழ்த்துகிறேன்” என்று என் துக்கத்தை முடித்திருந்தேன்.
அடுத்த நாள் நான் எழுதிய இந்தப் பதிவில் முதல் முறையாக எனது வீட்டுக்குள் வந்து பின்னூட்டம் போட்ட பா.ரா., “சின்னதாக ஒரு பதிவு போட்டால் நானே தொலைபேசியில் அழைப்பேன்..” என்று சொல்லியிருந்தார்.
சரி.. சின்னப் பதிவொண்ணை போடுவோம்.. பேசுவாரான்னு பார்ப்போம் என்று நினைத்து யார் சொன்னா என்னால ‘சின்னப்’ பதிவு போட முடியாதுன்னு..? ஒரு பதிவைப் போட்டேன்.
காலைல போட்ட பதிவுக்கு மனுஷன் ராத்திரி 7.45 மணிக்கு போன் செஞ்சாருங்கப்பா.. நான் அந்த நேரத்துல குளிர் காய்ச்சல் ஆரம்பித்த வேகத்தில் புத்தகக் கண்காட்சியிலிருந்து வீடு வந்து கொண்டிருந்ததால் வாகனங்கள் சப்தத்தால் கேட்காமல் போய்விட்டது.
வீடு வந்து சேர்ந்த பின்புதான் நம்பரை பார்த்து யாரோ என்று நினைத்து பதில் போன் செய்தால், “உண்மைத்தமிழா” என்று 'தீப்பொறி ஆறுமுகம்' ஸ்டைலில் உறுமியது பா.ரா.தான். மனிதர் இப்போதும் 'முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக' வீட்டு போனில் இருந்து அழைத்திருந்தார்.
முதலில் இருவரும் ஒருவரையொருவர் துக்கம் விசாரித்துக் கொண்டோம். நான் கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருப்பதாகச் சொன்னேன்.. “முருகன் ரொம்ப சோதிக்கிறான்ல்ல” என்றார். “ஆமா ஸார்.. அதேதான் ஸார்..” என்றேன்.
நான் நேற்றைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்ததை சொன்னேன். அவருடைய எக்ஸலண்ட் வொர்க் ‘மாயவலை’ கிழக்குப் பதிப்பகத்தில் மிரட்டிக் கொண்டிருப்பதையும் சொன்னேன். எல்லாவற்றுக்கும் “ம்..”, “ம்..” என்றார். “நீங்க எனக்கு ஒரு காம்ப்ளிமெண்ட்ரி காப்பி கொடுத்தவுடனே, அதைவிட ஒரு பக்கம் கூடுதலா வைச்சு விமர்சனம் எழுதிருவேன்..” என்ற போது மட்டும் அந்த “ம்..” என்ற ஒரு வார்த்தையும் இல்லாமல் போனது.
“வேலை எப்படி இருக்கு..?” என்றார். “அடுத்த 'சத்யம்' யாருன்னு நினைச்சீங்க..?” என்றதும் சிரித்துக் கொண்டார்.
கடைசியாகத்தான் மேட்டருக்கு வந்தார்.
“நீங்க இன்னிக்கு போட்டிருக்குற பதிவுகூட நீளம்தான்..” என்றார். எனக்கு பக்கென்றது..
“ஏன் ஸார்.. அஞ்சு வார்த்தைதான் ஸார்.. பிளாக்கோட அமைப்புனால ரெண்டு வரியா போயிருச்சு..” என்றேன்..
“அதெல்லாம் சரி.. ஆனா பதிவோட நீளத்தை பாருங்க.. ஒரு போட்டோ போட்டிருக்கீங்களே.. அது 6 column. இது நீளமில்ல..” என்றார்.
நான் பேச்சுமூச்சில்லாமல்போய் இந்தத் திடீர் கண்டுபிடிப்பால் சிரித்துத் தொலைத்துவிட்டேன்.
“அதுனால இது நீளமான பதிவுதான்.. ‘சின்னப் பதிவு’ன்னு ஒத்துக்க மாட்டேன்.. வேண்ணா, நாளைக்கு இதைவிட சின்னப் பதிவா போட்டுக் காட்டுக்குங்க.. பார்ப்போம்..” என்றார்.
நம்ம பெயரைக் காப்பாத்தணுமேன்றதுக்காக மீண்டும் ஒரு ‘சின்ன’ பதிவு! பா.ராகவனுக்காக!!! அப்படீன்னு ஒண்ணை போட்டுட்டு ஜெயிச்சுட்டதா நினைக்கிறேன்..
மனுஷன் இதையும் படிச்சிட்டு “பதிவின் தலைப்பு நீளமா இருக்கு”ன்னு சொல்லுவாரோன்னு பயமா இருக்கு..
முருகன்தான் காப்பாத்தணும்..!
|
Tweet |
29 comments:
இல்ல ப்லொக் Layout நீலம்ன்னு( BLUE) சொல்லுவார்
சூப்பர் பதிவு!
மீ த பஷ்ட்:-))
//அக்னி பார்வை said...
இல்ல ப்லொக் Layout நீலம்ன்னு( BLUE) சொல்லுவார்.//
ஆஹா.. இப்படிகூட ஒண்ணு இருக்கா.. பதிலை இப்பவே ரெடி பண்ணுக்கிறேன்..
அடப்பாவி தமிழர்களே..
ரிலீஸ் பண்ணி 5 நிமிஷந்தான் ஆச்சு.. அதுக்குள்ள 2 மைனஸ் குத்தா..?
ஏன்யா இப்படி பொறாமைப்படுறீங்க..?
ஆகா! அப்ப நீங்க 2வதா போட்ட உங்க சின்ன பதிவிலே இருக்கும் என் 2வது பின்னூட்டத்தை நீக்கிட்டா கூட தப்பில்லையே!
நான் கூட நீங்க கிழக்கே போகும் ரயில்ல ஏறிட்டீங்களோன்னு பார்த்தேன்:-))
//அபி அப்பா said...
சூப்பர் பதிவு! மீ த பஷ்ட்:-))//
Thanks.. But Sorry.. Too The Late.. You Are a Second..
//அபி அப்பா said...
ஆகா! அப்ப நீங்க 2-வதா போட்ட உங்க சின்ன பதிவிலே இருக்கும் என் 2வது பின்னூட்டத்தை நீக்கிட்டா கூட தப்பில்லையே! நான் கூட நீங்க கிழக்கே போகும் ரயில்ல ஏறிட்டீங்களோன்னு பார்த்தேன்:-))//
தேவையில்லை. அபிஅப்பாவின் பச்சைக் கொடியா அதனை நினைச்சுக்குறேன்..
உங்க வாக்கு பலிக்கட்டும்..
என் யோசனை: தலைப்பு: "சி.ப.: பா.ரா.(க்கு)"; உள்ளே: "ஹலோ?"
No need to publish this:-)
என் அபிமான எழுத்தாளர் பா.ரா விரைவில் நலம் பெற அந்த முருகனை பிரார்த்திக்கிறேன்.
\\ உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//அபி அப்பா said...
ஆகா! அப்ப நீங்க 2-வதா போட்ட உங்க சின்ன பதிவிலே இருக்கும் என் 2வது பின்னூட்டத்தை நீக்கிட்டா கூட தப்பில்லையே! நான் கூட நீங்க கிழக்கே போகும் ரயில்ல ஏறிட்டீங்களோன்னு பார்த்தேன்:-))//
தேவையில்லை. அபிஅப்பாவின் பச்சைக் கொடியா அதனை நினைச்சுக்குறேன்..
உங்க வாக்கு பலிக்கட்டும்..
\\
அது என்னவோ தெரியலைங்க! நா சொன்னா பலிக்குது! கிட்டதட்ட "அபியப்பாநந்தா"ன்னு கூட வச்சுக்கலாம்!
நடக்கும் "பாரா"ங்க!
ஓகே! ஓகே!
மேட்டர் புரிஞ்சது!
வாழ்த்துக்கள்!
//கெக்கே பிக்குணி said...
என் யோசனை: தலைப்பு: "சி.ப.: பா.ரா.க்கு)"; உள்ளே: "ஹலோ?"//
நேத்து காலைலேயே சொல்லிருக்கக் கூடாதா..? கூட இன்னொரு பதிவா போட்டிருப்பனே..
நன்றி கெக்கேபிக்குணி..
//வண்ணத்துபூச்சியார் said...
என் அபிமான எழுத்தாளர் பா.ரா விரைவில் நலம் பெற அந்த முருகனை பிரார்த்திக்கிறேன்.//
முருகன், ராகவனை கைவிட மாட்டான் பூச்சியாரே..
உங்களுக்கும் பா.ரா.தான் அபிமான எழுத்தாளரா..? எப்ப இருந்து..? என்கிட்ட சொல்லவேயில்ல..?
///அபி அப்பா said...
\\உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
/அபி அப்பா said...
ஆகா! அப்ப நீங்க 2-வதா போட்ட உங்க சின்ன பதிவிலே இருக்கும் என் 2வது பின்னூட்டத்தை நீக்கிட்டா கூட தப்பில்லையே! நான் கூட நீங்க கிழக்கே போகும் ரயில்ல ஏறிட்டீங்களோன்னு பார்த்தேன்:-))/
தேவையில்லை. அபிஅப்பாவின் பச்சைக் கொடியா அதனை நினைச்சுக்குறேன்.. உங்க வாக்கு பலிக்கட்டும்..//
அது என்னவோ தெரியலைங்க! நா சொன்னா பலிக்குது! கிட்டதட்ட "அபியப்பாநந்தா"ன்னு கூட வச்சுக்கலாம்!//
இது பலிச்சா அபியப்பா நந்தாவின் முதன்மைச் சீடராக நான் விண்ணப்பம் செய்கிறேன் அபிப்பா.. கவலை வேண்டாம். உங்களுக்கு ஒரு சீடன் ரெடி..
நடக்கும் "பாரா"ங்க!
//Namakkal Shibi said...
ஓகே! ஓகே! மேட்டர் புரிஞ்சது!
வாழ்த்துக்கள்!//
என்ன புரிஞ்சது..?
என்ன இது? நான் எங்க சீடனா போனாலும், பின்னாடியே நீயும் வந்து பொழைப்புல கை வைக்குற.. வேணாம்.. விட்ரு.. சொல்லிட்டேன்..
கண்ணுகளா..
தமிழ்மணம் கருவிப்பட்டைல 1/9 அப்படீன்னு விழுந்திருக்கு..
1 எனக்கு நானே போட்டது. மிச்சம் 9 ஓட்டு எதிர் ஓட்டா..? அதுவும் இத்துனூண்டு சின்னப் பதிவுக்கு..
இது ரொம்ப ஓவரா இல்ல..
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அடப்பாவி தமிழர்களே..
ரிலீஸ் பண்ணி 5 நிமிஷந்தான் ஆச்சு.. அதுக்குள்ள 2 மைனஸ் குத்தா..?
ஏன்யா இப்படி பொறாமைப்படுறீங்க..?//
//கண்ணுகளா..
தமிழ்மணம் கருவிப்பட்டைல 1/9 அப்படீன்னு விழுந்திருக்கு..
1 எனக்கு நானே போட்டது. மிச்சம் 9 ஓட்டு எதிர் ஓட்டா..? அதுவும் இத்துனூண்டு சின்னப் பதிவுக்கு..
இது ரொம்ப ஓவரா இல்ல..//
ஹா ஹா ஹா ஹா ஹா
வணக்கம் அண்ணா.........வ்
உள்ளேன்.
நான் உங்களை புத்தக கண்காட்சியில் பார்த்த பிறகுதான் இவ்வளவும் நடந்தா? மாயவலை புத்தகம் உங்களுக்கு இலவசமாக கிடைத்தால் எனக்கு அனுப்பி வைக்க மறந்துவிடாதீர்கள்
இப்பொ 1/15 ன்னு இருக்கே!
வெவ்வேற மெஷின்ல உக்காந்து உங்களுக்கு நீங்களே - குத்து குத்திக்கிறீங்களா?
ஹிஹி!
//என்ன இது? நான் எங்க சீடனா போனாலும், பின்னாடியே நீயும் வந்து பொழைப்புல கை வைக்குற.. வேணாம்.. விட்ரு.. சொல்லிட்டேன்..//
டோண்டு வரி! அந்தப் பக்கமெல்லாம் வரமாட்டேன்!
///கிரி said...
//உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
அடப்பாவி தமிழர்களே.. ரிலீஸ் பண்ணி 5 நிமிஷந்தான் ஆச்சு.. அதுக்குள்ள 2 மைனஸ் குத்தா..?
ஏன்யா இப்படி பொறாமைப்படுறீங்க..?//
//கண்ணுகளா.. தமிழ்மணம் கருவிப்பட்டைல 1/9 அப்படீன்னு விழுந்திருக்கு.. 1 எனக்கு நானே போட்டது. மிச்சம் 9 ஓட்டு எதிர் ஓட்டா..? அதுவும் இத்துனூண்டு சின்னப் பதிவுக்கு.. இது ரொம்ப ஓவரா இல்ல..//
ஹா ஹா ஹா ஹா ஹா///
கிரி ஸார்.. இதென்ன பி.எஸ்.வீரப்பா ஸ்டைல்ல ஒரு சிரிப்பு..?
வருத்தமா? சந்தோஷமா..?
//நையாண்டி நைனா said...
வணக்கம் அண்ணா.........வ் உள்ளேன்.//
வணக்கம் தம்பி..
"வ்.." அப்படீன்றதை பார்த்தா மைனஸ் குத்துல ஒண்ணு உன்னது மாதிரி தெரியுதே..?
//பரக்கத் அலி said...
நான் உங்களை புத்தக கண்காட்சியில் பார்த்த பிறகுதான் இவ்வளவும் நடந்தா? மாயவலை புத்தகம் உங்களுக்கு இலவசமாக கிடைத்தால் எனக்கு அனுப்பி வைக்க மறந்துவிடாதீர்கள்.//
பரக்கத் மன்னிக்கணும்.. அன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லை. அதுதான் உங்களிடம் நின்று பேச முடியவில்லை.
மாயவலை புத்தகம் எனக்கு இலவசமா கிடைக்கும்னு நினைக்குற ஒரே ஆள் நீங்கதான் சாமி.. எம்புட்டு நல்லவரா இருக்கீக..?
ம்.. பார்ப்போம்..
//Namakkal Shibi said...
இப்பொ 1/15 ன்னு இருக்கே! வெவ்வேற மெஷின்ல உக்காந்து உங்களுக்கு நீங்களே - குத்து குத்திக்கிறீங்களா? ஹிஹி!//
என்ன நக்கலா..? நானே வெந்து, நொந்து போயிருக்கேன்..
எனக்கு நானே சூனியம் வைச்சுக்குவேனா.. எல்லாம் உள்நாட்டு, வெளிநாட்டு சதி..
///Namakkal Shibi said...
//என்ன இது? நான் எங்க சீடனா போனாலும், பின்னாடியே நீயும் வந்து பொழைப்புல கை வைக்குற.. வேணாம்.. விட்ரு.. சொல்லிட்டேன்..//
டோண்டு வரி! அந்தப் பக்கமெல்லாம் வரமாட்டேன்!///
எனக்கு 'காண்டு' ஆகுது முருகா..
டாலர் தேசத்திலிருந்து..
நிறைய செய்திகள் அருமையான நடை ..
கண்காட்சிக்கு 3 முறை படையெடுத்தும் மாயவலை கிடைக்கவில்லை.
10-15 நாட்களில் பத்ரி தருவதாக சொல்லியுள்ளார்.
//வண்ணத்துபூச்சியார் said...
டாலர் தேசத்திலிருந்து.. நிறைய செய்திகள் அருமையான நடை.//
இதை இப்போதுதான் படிக்கிறீர்களா ஸார்..
//கண்காட்சிக்கு 3 முறை படையெடுத்தும் மாயவலை கிடைக்கவில்லை.//
என்னிடம் பணத்தைக் கொடுத்திருந்தால் பிளாக்கிலாவது வாங்கித் தந்திருப்பனே..
//10-15 நாட்களில் பத்ரி தருவதாக சொல்லியுள்ளார்.//
எந்த பத்து, பதினைஞ்சு நாள்னு சொன்னாரா..?
See who owns reefcentral.org or any other website:
http://whois.domaintasks.com/reefcentral.org
Post a Comment