19-01-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
கடைசியாக ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு பதிவரும், மருத்துவருமான புருனோவுடன் சென்றிருந்தேன்.
அப்போது கிழக்குப் பதிப்பகத்தில் பத்ரி ஸாருடன் அங்கிருந்த பதிவர்கள் பலரும் பேசினோம். ‘விடுதலைப்புலிகள்', ‘பிரபாகரன்', ‘அல்கொய்தா' என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்ற காவல்துறையினரின் வாய்மொழி உத்தரவு பற்றி பேச்சு சென்றது.
அந்த உத்தரவை நீக்கும்படி கேட்பதற்காக காவல்துறை உயரதிகாரிகளிடம் தான் படையெடுத்த கதைகளை பத்ரி சொன்னார். “நான் சந்தித்த அனைவருமே நடிக்கிற மாதிரி தெரிஞ்சது.. இதற்கு மேல் இவர்களுடன் பேசியோ, மோதியோ எனது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்..” என்றார்.
இதன் பின் அவர் சொன்ன பல விஷயங்கள் ஆப் தி ரெக்கார்டாக இருக்க வேண்டியவை என்பதால் சொல்ல விரும்பவில்லை.
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் பற்றி தெருவுக்குத் தெரு, மூலை முடுக்கெல்லாம் மைக் பிடித்து ஆதரவுக் கூட்டங்கள் போட்டு வருகிறார்கள். பேசி வருகிறார்கள். திருமாவளவன், “நான் என்றைக்கும் புலிகளை ஆதரிப்பேன்..” என்கிறார். வைகோ திருமாவுடன் இந்த விஷயத்தில் போட்டி போட்டு “நானும்தான்..” என்று களத்தில் இருக்கிறார்.
இந்த புத்தகங்கள் கண்காட்சியில் விற்பனைக்குக் கூடாது என்றால் எதைக் கண்டு இந்த ஆட்சியாளர்களுக்கு பயம் என்று விளங்கவில்லை. இங்கே கவனிக்க வேண்டியது அந்தப் புத்தகங்களை எழுதியது, பதிப்பித்தது, அச்சிட்டது தவறில்லையாம்.. விற்பதும் தவறில்லையாம். ஆனால் விற்பனையை கண்காட்சியில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கண்காட்சியில் இல்லை என்றால், பதிப்பகத்திற்கே நேரில் வந்து வாங்கிச் செல்வார்களே.. பல்வேறு புத்தகக் கடைகளிலும் அந்தப் புத்தகங்கள் விற்கப்பட்டுதான் வருகின்றன. ஏன் தடுக்கவில்லை? கண்காட்சியில் மட்டும் விற்கக்கூடாது என்றால் தமிழ்நாட்டு பொதுமக்கள் கண்காட்சியில் மட்டும்தான் புத்தகங்கள் வாங்குவார்கள் என்று நமது காவல்துறையின் ‘உளவுப் புலி'கள் கருதுகிறார்களோ என்னவோ..?
ஆனாலும் காங்கிரஸ்காரர்களைப் பற்றிய பயம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கொஞ்சுண்டு இருக்கத்தான் செய்கிறது என்பது இதிலிருந்தே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயம் காங்கிரஸ்காரர்களின் ‘அறிவு' பற்றி இன்றைய ஆட்சியாளர்களின் எண்ணமும் வெளிப்படையாகி கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.
ஏதோ இது போன்ற புத்தகக் கண்காட்சிக்கு மட்டும்தான் காங்கிரஸ்காரர்கள் வருவார்கள் போலவும்.. அவர்கள் மற்ற நேரங்களில் பத்திரிகைகள், நாளிதழ்களை வாசிப்பதே இல்லை என்பது போலவும் ஆட்சியாளர்கள் கதர் சட்டைக்காரர்களை நினைத்திருப்பது நகைப்புக்குரியதுதான்.
அதே சமயத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு பற்றி டி.ஆர்.கார்த்திகேயன் எழுதிய புத்தகம் கண்காட்சியில் விற்பனையாகிக் கொண்டுதான் இருந்தது. இதிலும் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் பற்றிய செய்திகள் நிறையவே இருக்கின்றன. இது மட்டுமில்லாமல் ஈழம் பற்றிய புதிய 3 புத்தகங்களும் விற்பனையாகின. என்ன? அவற்றில் தலைப்பு புலிகள் சம்பந்தப்பட்டவை அல்ல. ஈழப் பிரச்சினை என்றுதான் இருந்தன. அதனால் நமது அறிவுத்திலகங்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.
புலிகளை விமர்சித்து எழுதியிருந்தால், அது என்ன வகை புத்தகமாக இருந்தாலும் அது ஓகே என்றும், புலிகளை ஆதரித்து எழுதியிருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களோ என்னவோ..
இது என்ன வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை..
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்கிற சட்டமே இங்கே கேலிக்கூத்தாகிப் போய்க் கிடக்கிறது. இந்த லட்சணத்தில் இப்படியொரு மறைமுகச் சட்டமா..? இதையாவது உருப்படியாகச் செய்து தொலைக்க வேண்டியதுதானே.. எதற்கு இப்படி முட்டாள்தனமான விதிமுறைகள்..?
ஆதரவாக பேசலாம்.. எழுதலாம்.. புத்தகமாக வெளியிடலாம்.. என்று அனைத்து வகை ஆதரவையும் அளித்துவிட்டு, கண்காட்சியில் மட்டும் வெளியிட வேண்டாம் என்றால், தடை விதிக்கச் சொன்னவர்களுக்கு உண்மையில் படிப்பறிவும், கல்வியறிவும் இருக்கிறதா என்றே சந்தேகம் எழுகிறது.
வாழ்க நமது அரசியல் அறிவுத் திலகங்கள்..!
|
Tweet |
59 comments:
கிழக்கு பதிப்பகத்தின் பிரபாகரன் புத்தகம் புலிகளுக்கு முழு சால்ரா அடித்து இருக்கிறது. நடுநிலை என்று ஆரம்பித்து பிரபாகரன் புகழ் பாடி கடைசியில் வன்முறைக்கு சப்பைகட்டு கட்டி பிரபாகரனுக்கு காவடி எடுத்து இருக்கிறது.
எந்த குற்றவாளிக்கும் தன் செய்கையில் நியாயம் கற்பிக்கவே செய்வான். புலிகளை ஆதரித்து புத்தகம் எழுதட்டும் ஆனால் அதை நடு நிலை என்று கேலி செய்ய வேண்டாம்
ம்! சரவணா! நீங்க கடைசியா என்ன சொல்ல வறீங்கப்பா!(முழுசா படிச்சுட்டேன்ல)
//வெறுத்து போனவன் said...
கிழக்கு பதிப்பகத்தின் பிரபாகரன் புத்தகம் புலிகளுக்கு முழு சால்ரா அடித்து இருக்கிறது. நடுநிலை என்று ஆரம்பித்து பிரபாகரன் புகழ் பாடி கடைசியில் வன்முறைக்கு சப்பைகட்டு கட்டி பிரபாகரனுக்கு காவடி எடுத்து இருக்கிறது. எந்த குற்றவாளிக்கும் தன் செய்கையில் நியாயம் கற்பிக்கவே செய்வான். புலிகளை ஆதரித்து புத்தகம் எழுதட்டும். ஆனால் அதை நடு நிலை என்று கேலி செய்ய வேண்டாம்.//
வெறுத்துப் போனவன் ஸார்..
நான் இங்கு சொல்ல வந்தது புத்தகத்தின் தன்மை பற்றியதல்ல..
புத்தகம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்..
அதனை எழுதி, அச்சிட்டு, விற்பனை செய்ய உரிமம் அளித்துவிட்டு ஓரிடத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்தது ஏன் என்பதுதான் எனது கேள்வி.
//அபி அப்பா said...
ம்! சரவணா! நீங்க கடைசியா என்ன சொல்ல வறீங்கப்பா!(முழுசா படிச்சுட்டேன்ல)//
அடப்பாவி அபிப்பா.. முழுசா படிச்சுமா புரியல.. இத்துனூண்டுதானே எழுதினேன்..
மேலே வெறுத்துப் போனவன் ஸாருக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்..
அதைப் படிச்ச பின்னாடியாவது புரிஞ்சதான்னு சொல்லுங்க..
wow
very very small post as per your standards
why?
Any health problem?
இது என்ன வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை..
இதுதான் அரசியல் ஜனநாயகம்..
//முரளிகண்ணன் said...
wow.. very very small post as per your standards. why? Any health problem?//
என்னாங்கப்பா இது..? பெரிசா எழுதினா "படிக்க முடியல.. தூக்கம் வருது"ங்குறீங்க.. சின்னதா எழுதினா பதிவைப் பத்தியே பேசாம.. "எதுனா உடம்பு சுகமில்லையாண்ணா"ங்குறீங்க..
இன்னா ரவுசு பண்றீங்களா கண்ணுகளா..?
//பரக்கத் அலி said...
இது என்ன வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை..//
இதுதான் அரசியல் ஜனநாயகம்..///
ஓ.. பரக்கத்..
ஜனநாயகத்தில் இப்படியும் ஒரு பிரிவு இருக்குல்ல..
கேவலமா இருக்கு..
பதிவுலக நண்பர்களே..
அவசரத்தில் தலைப்பு கொடுக்க மறந்துவிட்டேன்.. அப்படியே பதிவாகிவிட்டது.
பதிவின் தலைப்பை மறுபடியும் இட்டுள்ளேன். ஆனாலும் அது தமிழ்மணத்தில் வரவில்லை. என்ன காரணம்..?
தலைப்பு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்..?
உண்மை தமிழா! நான் ஒரு ஓட்டை வாய்! ஒரு பிரபல் பதிவர்கிட்ட சேட்டிகிட்டு இருந்தேன்! கொஞ்ஜ்சம் இருங்க வரேன்னு சொன்னார்! எதுனா "முக்கி"யமான வேலையா இருக்குன்னு பார்த்தேன்!
பின்ன வந்த போது தான் சொன்னார்"அப்பாடா உண்மை தமிழன் பதிவு போட்டாரு, போயி மைனஸ் குத்திட்டு வந்தேன்"ன்னு சொன்னாரு!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் அவரு பேரை சொல்ல மாட்டேன்! அவ்வ்வ்வ்வ்
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்கிற சட்டமே இங்கே கேலிக்கூத்தாகிப் போய்க் கிடக்கிறது//
அப்படியொரு சட்டம் உண்டா..? இல்லையென்றுதானே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னதாக கேள்விபட்டேன்.
தலைப்பு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்..?
வாலாட்டவேண்டும்.
[[ Anonymous said...
தலைப்பு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்..?
வாலாட்டவேண்டும்.
]]
சரவணா இது சத்தியமா நான் இல்லை!
சின்னதா ஒரு பதிவு...அப்புறம் அதை விட சின்னதா ஒரு பதிவு...தலைப்பில்லாம ஒரு பதிவு....அப்புறம் அதுக்கு தலைப்பு வச்சி ஒரு பதிவு....
எப்பிடி தல இப்பிடி வித விதமா கலக்கறீங்க? :0)))
நீங்க கேக்குற கேள்வி சரி தான்...அது என்ன புத்தகத்தை பிரிண்ட் பண்ணலாம்...விக்கலாம்...ஆனா கண்காட்சில மட்டும் விக்கக் கூடாது??
ஒரு வேளை கண்காட்சில நல்லா வித்தா பிரபாகரனுக்கு அபார ஆதரவுன்னு நியூஸ் வந்துரும்னு பயப்படுறாங்களோ என்னவோ??
எல்லாம் சிவமயம்...இங்க சிலருக்கு எல்லாம் பய மயம்!
நான் பாசிட்டிவ் வோட்டு போட்டுட்டேன்...ஆமா, அது என்ன உங்களுக்கு மட்டும் மானாவரியா நெகட்டிவ் வோட்டு விழுது? அதுவும் சில பேரு கள்ள ஓட்டெல்லாம் போடுவாங்க போலருக்கு? :0))
பொய்யை எப்படி உண்மைபோல எழுத வேண்டும் என நீங்கள் தனியாக ஒரு பதிவு எழுதலாம். அந்தளவுக்கு நெருடலே இல்லாமல் திணிக்கிறீர்கள்
// தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்கிற சட்டமே இங்கே கேலிக்கூத்தாகிப் போய்க் கிடக்கிறது.//
தடை செய்யப் பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசக் கூடாது என்று எந்த நாட்டுச் சட்டத்தில் உள்ளது. இலங்கையிலா? தடை செய்யப் பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்பதுதான் இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
எனவே நீங்கள் கூட பயமில்லாமல் விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலையும் ஆதரிக்கலாம்.
மற்றபடி உங்கள் பதிவின் கருத்தோடு உடன்படுகிறேன்.
//இது என்ன வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை..
இதுதான் அரசியல் ஜனநாயகம்..//
இன்னிக்கு எங்கங்க ஜனநாயகம் நடக்குது அடக்குமுறைக்கு ஜனநாயக அட்ட போட்ட நல்ல தூக்கி புடிச்சு கட்டறாங்க இதுதான் ஜனநாயகம் பாருங்கன்னு...!!!
ஈழப்போர், IPKF பற்றிய தமிழ் புத்தகங்களின் தலைப்புக்கள் தர முடியுமா?
வாசிக்க வேண்டும் போல் உள்ளது. அதன் பின் நானும் கொஞ்சம் பதிவு போடலாம் என்டு தான்.
:)
ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் இந்த ஆசாமி சர்வாதிகாரி ஈழத்து Pol Pot இவரின் புத்தகம் தடைசெய்யபட்டதை கண்டித்து ஒரு பதிவு தேவை தானா?
புத்தக விற்பனை விநியோக சுதந்திரம் மட்டுமே ஒரிஜினல் பாயிண்ட் >>>
காக்கி சட்டை போட்டதும் தலையில் ஈரலிப்பு வற்றி வால் பிடி ஜால்ரா கேஸ் ஆகின்றனர் >>> இந்த வியாதி மனித குலத்திற்கு போதுவானதொன்று >>>
May be Police thought the book is for Adults!. If the exhibitionists bribe the cops it will be allowed!
//அபி அப்பா said...
உண்மை தமிழா! நான் ஒரு ஓட்டை வாய்! ஒரு பிரபல் பதிவர்கிட்ட சேட்டிகிட்டு இருந்தேன்! கொஞ்ஜ்சம் இருங்க வரேன்னு சொன்னார்! எதுனா "முக்கி"யமான வேலையா இருக்குன்னு பார்த்தேன்! பின்ன வந்த போதுதான் சொன்னார்"அப்பாடா உண்மை தமிழன் பதிவு போட்டாரு, போயி மைனஸ் குத்திட்டு வந்தேன்"ன்னு சொன்னாரு!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் அவரு பேரை சொல்ல மாட்டேன்! அவ்வ்வ்வ்வ்//
சொல்ல வேணாம் அபிப்பா.. ஆனா லேசா கோடு போட்டு காட்டினாலே போதும்.. புரிஞ்சுப்பேன்.. புரிஞ்சது..
தம்பி நூறாண்டு வாழ்க..
//சயந்தன் said...
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்கிற சட்டமே இங்கே கேலிக்கூத்தாகிப் போய்க் கிடக்கிறது//
அப்படியொரு சட்டம் உண்டா..? இல்லையென்றுதானே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னதாக கேள்விபட்டேன்.//
அது பாதிக்கப்பட்டோர் கோர்ட்டில் வைத்த வாதம் என்று நினைக்கிறேன். இதற்கு ஆட்சி நீடிக்க அவர்கள் தயவு வேண்டும் என்பதற்காக கேவலங்கெட்ட அரசியல்தனமாக கோர்ட்டில் ஒத்து ஊதினார்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்..
//Anonymous said...
தலைப்பு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்..?
வாலாட்டவேண்டும்.//
புரிந்தது..
//அபி அப்பா said...
[[ Anonymous said...
தலைப்பு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்..?
வாலாட்டவேண்டும்.]]
சரவணா இது சத்தியமா நான் இல்லை!//
அபிப்பா.. நானும் இதை சத்தியமா நம்பலை..
//அது சரி said...
சின்னதா ஒரு பதிவு...அப்புறம் அதை விட சின்னதா ஒரு பதிவு... தலைப்பில்லாம ஒரு பதிவு.... அப்புறம் அதுக்கு தலைப்பு வச்சி ஒரு பதிவு....
எப்பிடி தல இப்பிடி வித விதமா கலக்கறீங்க? :0)))//
நான் கலக்கல தல.. முருகன் படுத்துறான்..
எப்பவுமே ஒரு தடவைக்கு நாலு தடவை பார்த்து, பார்த்துதான் போஸ்ட் செய்வேன்.
நேத்து பாருங்க.. தலைப்பு வைக்க மறந்துட்டேன்.. அந்த மறதி எங்கிட்டிருந்து வந்துச்சுன்னு தெரியலை..
//அது சரி said...
நீங்க கேக்குற கேள்வி சரிதான்...
அது என்ன புத்தகத்தை பிரிண்ட் பண்ணலாம்... விக்கலாம்... ஆனா கண்காட்சில மட்டும் விக்கக் கூடாது??
ஒரு வேளை கண்காட்சில நல்லா வித்தா பிரபாகரனுக்கு அபார ஆதரவுன்னு நியூஸ் வந்துரும்னு பயப்படுறாங்களோ என்னவோ??
எல்லாம் சிவமயம்...இங்க சிலருக்கு எல்லாம் பய மயம்!//
ஒரு உத்தரவு போடுறதுக்கு முன்னாடி பலதையும் யோசிக்க வேண்டாமா..?
சம்பாதிக்கிறது எப்படிங்கிறதுக்கு மட்டும்தான் நம்ம அரசியல்வியாதிகள் மூளையைப் பயன்படுத்துறாங்க.. மீதிக்கெல்லாம் எது தோணுதோ.. அதுவெல்லாம் போலிருக்கு..
இதே மாதிரித்தான் சமீபத்தில் 1975-77 காலக் கட்டத்தில் நெருக்கடிநிலை அமுலில் இருந்த காலக்கட்டத்தில் துக்ளக் பத்திரிகைக்கு பல தமாஷ் தணிக்கைகள் போடப்பட்டன.
சோ என்ன செய்தார் என்றால் ஜனநாயகம் பற்றி நேரு அவர்கள் கூறி அவர் புத்தகங்களில் வந்ததை எல்லாம் சேர்த்து அப்படியே வாக்கியங்களை மாற்றாமல் போட்டார். அதை தணிக்கையாளர்கள் நீக்கினர்.
தமிழகத்தில் (இந்திரா) காங்கிரஸ் பலம் வாய்ந்ததாக இருக்கிறது என ஒரு தில்லி காங்கிரஸ்காரர் சொல்ல அதை சோ அவர்கள் அப்படியே பத்திரிகையில் போட அவர் கிண்டல் செய்கிறார் என நினைத்து அதையும் தணிக்கையாளர்கள் நிராகரித்தனர்.
இவ்வளவெல்லாம் செய்த அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டனர். அதாவது, அலகாபாத் தீர்ப்புக்கு பிறகு சோ அவர்கள் தனது கட்டுரைகளில் இந்திரா காந்தியின் பெயரை எழுதும்போதேல்லாம் ஒரு முறைகூட பிரதமர் இந்திரா காந்தி என எழுதவே இல்லை. இதை யாரும் கவனிக்கவேயில்லை, சோ அவர்களே ஜனவரி 1977-ல் சீரணி அரங்கத்தில் நடந்த மீட்டிங்கில் தானே இதை வெளியே சொல்லும்வரை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அது சரி said...
நான் பாசிட்டிவ் வோட்டு போட்டுட்டேன்... ஆமா, அது என்ன உங்களுக்கு மட்டும் மானாவரியா நெகட்டிவ் வோட்டு விழுது? அதுவும் சில பேரு கள்ள ஓட்டெல்லாம் போடுவாங்க போலருக்கு? :0))//
அதான் ஸார் என்னன்னு தெரியலை.. அதுலேயும் இப்ப, கொஞ்ச நாளாத்தான் எந்தப் பதிவு போட்டாலும் மைனஸ் குத்தை வஞ்சகமில்லாம குத்துறாங்க.. அம்புட்டு பாசம்..
///பின்னூட்டம் பெரியசாமி.. said...
பொய்யை எப்படி உண்மைபோல எழுத வேண்டும் என நீங்கள் தனியாக ஒரு பதிவு எழுதலாம். அந்தளவுக்கு நெருடலே இல்லாமல் திணிக்கிறீர்கள்
// தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்கிற சட்டமே இங்கே கேலிக்கூத்தாகிப் போய்க் கிடக்கிறது.//
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசக் கூடாது என்று எந்த நாட்டுச் சட்டத்தில் உள்ளது. இலங்கையிலா? தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்பதுதான் இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. எனவே நீங்கள் கூட பயமில்லாமல் விடுதலைப்புலிகளையும் தமிழீழ விடுதலையும் ஆதரிக்கலாம்.
மற்றபடி உங்கள் பதிவின் கருத்தோடு உடன்படுகிறேன்//
சீமான் எதற்கு கைது செய்யப்பட்டாராம்..? எந்தச் சட்டத்தின் கீழ்..?
உச்சநீதிமன்றத்தில் நமது அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் புதிய வாதமாக எடுத்துரைத்ததின் அடிப்படையில்தான் அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதுவும் அது பொடா வழக்கிற்கு(வைகோ வழக்கில்) மட்டும்தான் என்று நினைக்கிறேன்..
///நளன் said...
//இது என்ன வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை.. இதுதான் அரசியல் ஜனநாயகம்..//
இன்னிக்கு எங்கங்க ஜனநாயகம் நடக்குது அடக்குமுறைக்கு ஜனநாயக அட்ட போட்ட நல்ல தூக்கி புடிச்சு கட்டறாங்க இதுதான் ஜனநாயகம் பாருங்கன்னு...!!!///
சரியாகச் சொன்னீர்கள் நளன்..
இவ்வளவையும் செய்துவிட்டு ஜனநாயகத்தைப் பேணிக் காக்கிறோம் நாங்கள் என்று வாய் கிழிய வேறு பேசுகிறார்கள்..
//Anonymous said...
ஈழப்போர், IPKF பற்றிய தமிழ் புத்தகங்களின் தலைப்புக்கள் தர முடியுமா? வாசிக்க வேண்டும் போல் உள்ளது. அதன் பின் நானும் கொஞ்சம் பதிவு போடலாம் என்டுதான்.:)//
தமிழில் அது பற்றி எங்களுக்கு வாசிக்கக் கிடைத்தது முதலில் சோபா சக்தியின் ம், கொரில்லாதான்.. அடுத்தது புஷ்பராஜாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம். அடுத்தது டி.ஆர்.கார்த்திகேயனின் ராஜீவ் கொலை பற்றிய புத்தகம்.
இப்போது இந்தக் கண்காட்சியில் கலாநிதி குணசிங்க என்பவர் எழுதிய ஒரு புத்தகமும், ஓவியர் புகழேந்தி எழுதிய புத்தகமும் தோழமை பதிப்பகத்தில் கிடைத்தது.
//Anonymous said...
ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் இந்த ஆசாமி சர்வாதிகாரி ஈழத்து Pol Pot இவரின் புத்தகம் தடைசெய்யபட்டதை கண்டித்து ஒரு பதிவு தேவைதானா?//
அனானியாரே..
புத்தகம் எழுதுவதற்கு அனுமதியளித்துவிட்டு விற்பனையை மட்டும் ஓரிடத்தில் கூடாது என்பதைக் கண்டித்துத்தான் இந்தப் பதிவு.
அவர் போல்பாட்டா அல்லது பிரபாகரனா என்பது பற்றியல்ல..
உங்களது கருத்தில் எனக்கும் சிறிய உடன்பாடும் உண்டு.. வேறுபாடும் உண்டு.. இது அடுத்த விஷயம்..
முதலில் பேச்சுரிமை, எழுத்துரிமை வேண்டும். இதன் பின்புதான் புத்தகத்தின் தன்மையைப் பற்றி பேச வேண்டும்.
//benzaloy said...
புத்தக விற்பனை விநியோக சுதந்திரம் மட்டுமே ஒரிஜினல் பாயிண்ட் >>>
காக்கி சட்டை போட்டதும் தலையில் ஈரலிப்பு வற்றி வால் பிடி ஜால்ரா கேஸ் ஆகின்றனர் >>> இந்த வியாதி மனித குலத்திற்கு போதுவானதொன்று >>>//
பென்ஸ் ஸார்..
மிக்க நன்றி..
எங்கே என்னைத் தவறாகப் புரிந்து கொள்வீர்களோ என்று பயந்து போயிருந்தேன்.. நல்லது..
//Anonymous said...
May be Police thought the book is for Adults!. If the exhibitionists bribe the cops it will be allowed!//
உள்ளே பலவகைப்பட்ட காமசாஸ்திர புத்தகங்களும் கிடைத்தன. அதுவெல்லாம் யாருக்காகவோ..?
இது ஒரு மறைமுக அத்துமீறல் நண்பரே.,
ஒரு புத்தகம் வெளியிட அனுமதி அளித்துவிட்டு அதை கண்காட்சியில் வைக்ககூடாது என்றால் , நடப்பது மக்களாட்சியா ..மன்னராட்சியா ..?
அதனால்தான் இந்தவருட புத்தக கண்காட்சியை நான் புறக்கணித்துவிட்டேன் .....
இந்த மைனஸ் எப்பிடி எங்கே குத்துறது
தயை செய்து சொல்லிதாகொன்னா !
//Anonymous said...
May be Police thought the book is for Adults!. If the exhibitionists bribe the cops it will be allowed!//
Exhibitionist என்று கூறாதீர்கள். நீங்கள் கூறநினைத்ததற்கு சரியான ஆங்கிலச் சொல் exhibitor.
Exhibitionist என்றால் எதிர்ப்பாலரிடம் தனது பாலுறுப்புகளை தூக்கி காட்டுபவர் என்று பொருள். அது ஒரு மனப்பிறழ்ச்சி.
பார்க்க: http://en.wikipedia.org/wiki/Exhibitionism
அன்புடன்,
டோண்டு ராகவன்
கேலிக்கூத்தின் உச்சம் இது...
என்னவோ போங்க...
நித்யன்
கலாநிதி குணசிங்க
முருகா!
அப்படியே எங்கே கிடைக்கும்னு கூட சொன்னீங்கன்னா வசதியா இருக்கும். ஆன்லைன் கூட ஓகே.
கலாநிதி குணசிங்க.... ?
முன்பொரு பதிவிலும் இவ்வாறே குறிப்பிட்டிருந்தீர்கள்.
படிப்பவர்களுக்கு அவர் சிங்களவர் என்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறர்.
அவர் பெயர் கலாநிதி முருகர் குணசிங்கம்!
கிமு 300 முதல் கிபி 2000 வரை இலங்கையில் தமிழர் என்ற புத்தகம். (இதனையும் தவறாகவே குறிப்பிட்டிருந்தீர்கள்)
//ஆதரவாக பேசலாம்.. எழுதலாம்.. புத்தகமாக வெளியிடலாம்.. என்று அனைத்து வகை ஆதரவையும் அளித்துவிட்டு, கண்காட்சியில் மட்டும் வெளியிட வேண்டாம் என்றால், தடை விதிக்கச் சொன்னவர்களுக்கு உண்மையில் படிப்பறிவும், கல்வியறிவும் இருக்கிறதா என்றே சந்தேகம் எழுகிறது.
//
நீங்க சொல்வது காவல்த்துறையினர் ஏன் கண்காட்சியில் மட்டும் தடை செய்தார்கள். நிரந்தரமாக தடை செய்யாமல் என்று கேள்வி எழுப்பிள்ளீர்கள்.
ஒரு வகையில் காவல்த்துறையினரும் புலிகளின் ஆதரவாளர்களாக இருக்க கூடும் அல்லது அவர்களுக்கு மறை முகமாக உதவக்கூடியவர்க்ளுக்கு ஆதரவாகவும், பகிரங்கமாக காங்கிரஸார் குற்றச்சாட்டினை வைத்தால் என்ன செய்வதென்றும் இருக்கலாம்.
காவல் துறையினராவது கண்காட்சியில் மட்டும் தடை போட்டார்கள் நீங்கள் கேட்பது புலிகளுக்கு எதிராக இருக்கிறது ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் தங்களுடைய கருத்துள்ளது.
என்ன சா....மி......... இதுக்கு போய் அழுவுரே....
அரசு எப்படி சட்டம் போடும் தெரியுமா?
1. சிகரெட் வாங்கலாம் ஆனா பிடிக்க கூடாது.
2. பிச்சை கூட கிடைக்காமெ பட்டினி கிடந்து சாகலாம், ஆனா தற்கொலை கூடாது.
3. 15 க்கு 15-ன்னு சின்ன வீடா இருந்தாலும், 100 க்கு 100 -ன்னு பெரிய வீடா இருந்தாலும் பாதாள சாக்கடை திட்டததுக்கு ஒரே அமௌன்ட் தான் கட்டணும்.
இப்படி பலது இருக்கு.......
நான் இங்கு சொல்ல வந்தது புத்தகத்தின் தன்மை பற்றியதல்ல..
புத்தகம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்..
அதனை எழுதி, அச்சிட்டு, விற்பனை செய்ய உரிமம் அளித்துவிட்டு ஓரிடத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்தது ஏன் என்பதுதான் எனது கேள்வி.“
உங்கள் கோபம் நியாமானதுதான் தலைவா...
//dondu(#11168674346665545885) said...
இதே மாதிரித்தான் சமீபத்தில் 1975-77 காலக் கட்டத்தில் நெருக்கடிநிலை அமுலில் இருந்த காலக்கட்டத்தில் துக்ளக் பத்திரிகைக்கு பல தமாஷ் தணிக்கைகள் போடப்பட்டன.
சோ என்ன செய்தார் என்றால் ஜனநாயகம் பற்றி நேரு அவர்கள் கூறி அவர் புத்தகங்களில் வந்ததை எல்லாம் சேர்த்து அப்படியே வாக்கியங்களை மாற்றாமல் போட்டார். அதை தணிக்கையாளர்கள் நீக்கினர்.
தமிழகத்தில் (இந்திரா) காங்கிரஸ் பலம் வாய்ந்ததாக இருக்கிறது என ஒரு தில்லி காங்கிரஸ்காரர் சொல்ல அதை சோ அவர்கள் அப்படியே பத்திரிகையில் போட அவர் கிண்டல் செய்கிறார் என நினைத்து அதையும் தணிக்கையாளர்கள் நிராகரித்தனர்.
இவ்வளவெல்லாம் செய்த அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டனர். அதாவது, அலகாபாத் தீர்ப்புக்கு பிறகு சோ அவர்கள் தனது கட்டுரைகளில் இந்திரா காந்தியின் பெயரை எழுதும்போதேல்லாம் ஒரு முறைகூட பிரதமர் இந்திரா காந்தி என எழுதவே இல்லை. இதை யாரும் கவனிக்கவேயில்லை, சோ அவர்களே ஜனவரி 1977-ல் சீரணி அரங்கத்தில் நடந்த மீட்டிங்கில் தானே இதை வெளியே சொல்லும்வரை.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி டோண்டு ஸார்..
எமர்ஜென்ஸி பீரியடில் அதிகாரிகள் ஆடிய ஆட்டங்கள் பற்றிய பல உண்மைகள் பதிவாகியுள்ளன. இதில் அவர்களது அதிகார மீறல், சர்வாதிகாரத்தைவிட அவர்களுடைய அறிவுகெட்டத்தனம்தான் அம்பலமாகி அசிங்கமானது.
அதில் இதுவும் ஒன்று..
முரசொலியில் எப்படியெல்லாம் அதிகாரிகளை ஏமாற்றி கார்ட்டூனும், செய்திகளும் வெளியிட்டேன் என்று கலைஞர் சொன்னவைகள் பலவும் ருசிகரமானவைதான்..
//கே. ஆர். பி. செந்தில்... said...
இது ஒரு மறைமுக அத்துமீறல் நண்பரே., ஒரு புத்தகம் வெளியிட அனுமதி அளித்துவிட்டு அதை கண்காட்சியில் வைக்ககூடாது என்றால், நடப்பது மக்களாட்சியா மன்னராட்சியா? அதனால்தான் இந்த வருட புத்தக கண்காட்சியை நான் புறக்கணித்துவிட்டேன்.//
மக்களாட்சி என்கிற போர்வையில் மன்னராட்சி என்பது மறுக்க முடியாத உண்மை செந்தில்..
//benzaloy said...
இந்த மைனஸ் எப்பிடி எங்கே குத்துறது?
தயை செய்து சொல்லிதாகொன்னா!//
பென்ஸ் ஸார் நீங்களுமா..?
தலைப்பில் பார்த்தீர்களானால் தமிழ்மணம் கருவிப்பட்டை இருக்கும். அதில் கட்டை விரலை உயர்த்தியபடி ஒரு சிம்பலும், கட்டை விரலை தாழ்த்தியபடி ஒரு சிம்பலும் இருக்கும். கண்டீர்கள்தானே..
கட்டை விரலை உயர்த்திய சிம்பலை கிளிக் செய்தால் அது பதிவிற்கு ஆதரவு அளித்ததுபோல்..
கட்டை விரலை தாழ்த்திய சிம்பலை கிளிக் செய்தால் அது பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததுபோல்..
அவ்வளவுதான்..
//Anonymous said...
கலாநிதி குணசிங்க
முருகா!//
ஏன் உங்களுக்குத் தெரிந்தவரோ..?
//Anonymous said...
அப்படியே எங்கே கிடைக்கும்னு கூட சொன்னீங்கன்னா வசதியா இருக்கும். ஆன்லைன் கூட ஓகே.//
தோழமை பதிப்பகத்தில் கிடைக்கும். ஆன்லைனில் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை..
இணையத்தில் முயற்சித்துப் பாருங்கள்..
//சயந்தன் said...
கலாநிதி குணசிங்க.... ? முன்பொரு பதிவிலும் இவ்வாறே குறிப்பிட்டிருந்தீர்கள்.
படிப்பவர்களுக்கு அவர் சிங்களவர் என்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறர்.
அவர் பெயர் கலாநிதி முருகர் குணசிங்கம்! கிமு 300 முதல் கிபி 2000 வரை இலங்கையில் தமிழர் என்ற புத்தகம். (இதனையும் தவறாகவே குறிப்பிட்டிருந்தீர்கள்)//
இல்லையே சயந்தன்..
புத்தகத்தின் பெயரை சரியாகத்தான் குறிப்பிட்டிருந்தேன். எழுத்தாளரின் பெயர்தான் முழுமையாகத் தெரியாமல் போய்விட்டது..
தகவல் உபயத்திற்கு மிக்க நன்றி..
///பிரதிபலிப்பான் said...
//ஆதரவாக பேசலாம்.. எழுதலாம்.. புத்தகமாக வெளியிடலாம்.. என்று அனைத்து வகை ஆதரவையும் அளித்துவிட்டு, கண்காட்சியில் மட்டும் வெளியிட வேண்டாம் என்றால், தடை விதிக்கச் சொன்னவர்களுக்கு உண்மையில் படிப்பறிவும், கல்வியறிவும் இருக்கிறதா என்றே சந்தேகம் எழுகிறது.//
நீங்க சொல்வது காவல் துறையினர் ஏன் கண்காட்சியில் மட்டும் தடை செய்தார்கள். நிரந்தரமாக தடை செய்யாமல் என்று கேள்வி எழுப்பிள்ளீர்கள். ஒரு வகையில் காவல் துறையினரும் புலிகளின் ஆதரவாளர்களாக இருக்க கூடும் அல்லது அவர்களுக்கு மறைமுகமாக உதவக் கூடியவர்க்ளுக்கு ஆதரவாகவும், பகிரங்கமாக காங்கிரஸார் குற்றச்சாட்டினை வைத்தால் என்ன செய்வதென்றும் இருக்கலாம். காவல் துறையினராவது கண்காட்சியில் மட்டும் தடை போட்டார்கள். நீங்கள் கேட்பது புலிகளுக்கு எதிராக இருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் தங்களுடைய கருத்துள்ளது.//
சந்தோஷம் பிரதிபலிப்பான்..
பிரதிபலிப்பு என்பதே விஷயத்தை அவதானித்து அதனை வெளிப்படுத்துவதுதான்.. இது உங்களுடைய கருத்தாக இருக்கட்டும்.
தடை செய்வது என்றால் முழுமையாகத் தடை செய்.. இல்லையென்றால் தடையை விலக்கு..
தடை செய்தால் அதனை உரிய வகையில் பதிப்பாளர்கள் எதிர்கொள்வார்கள். ஆனால் வாய்மொழி உத்தரவாகச் சொல்லி பின்னாளில் தப்பிக்கும் நோக்கத்தில் மிரட்டும் வகையில் செயல்பட்டது ஜனநாயகம் இல்லையே.. இதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.
உங்களுடைய அர்த்தம் வேறாக இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..
//நையாண்டி நைனா said...
என்ன சா....மி......... இதுக்கு போய் அழுவுரே....
அரசு எப்படி சட்டம் போடும் தெரியுமா?
1. சிகரெட் வாங்கலாம் ஆனா பிடிக்க கூடாது.
2. பிச்சை கூட கிடைக்காமெ பட்டினி கிடந்து சாகலாம், ஆனா தற்கொலை கூடாது.
3. 15 க்கு 15-ன்னு சின்ன வீடா இருந்தாலும், 100 க்கு 100 -ன்னு பெரிய வீடா இருந்தாலும் பாதாள சாக்கடை திட்டததுக்கு ஒரே அமௌன்ட்தான் கட்டணும்.
இப்படி பலது இருக்கு.......//
கரெக்ட் நைனா..
கபால்ன்னு பாயிண்ட்டை பிடிச்சு அடிச்சுக்குன்னே போயிட்ட..
நன்னி.. நன்னி.. நன்னி..
//jackiesekar said...
நான் இங்கு சொல்ல வந்தது புத்தகத்தின் தன்மை பற்றியதல்ல..
புத்தகம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்..
அதனை எழுதி, அச்சிட்டு, விற்பனை செய்ய உரிமம் அளித்துவிட்டு ஓரிடத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்தது ஏன் என்பதுதான் எனது கேள்வி.“
உங்கள் கோபம் நியாமானதுதான் தலைவா...///
தோழமைக்கு நன்றி ஜாக்கி..
பிரபாகரனைத் தன் உயிரினும் மேலாகப் போற்றும் பல தமிழர்கள் இருக்கிறார்கள், ஈழத்திலும் சரி, இந்தியாவிலும் சரி. அவர்களெல்லாம் பிரபாகரன் ஏன் கோழை போல் தப்பித்து ஓடவேண்டும், வீரனாக கழுத்தில் தொங்கும் சயனைடு குப்பியை கடித்து வீரமரணம் அடையவேண்டியது தானே என்று கேள்வி கேட்கமாட்டார்களா ?
உங்களது புத்தக கண்காட்சி அனுபவம் 1 எனும் பதிவிலிருந்து
----------------
கலாநிதி குணசிங்க என்பவர் எழுதிய “கி.மு.200 முதல் கி.பி.200வரை இலங்கை வரலாறு” என்கிற புத்தகத்தை பார்த்தேன். இப்போதெல்லாம் புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுகிறார்கள் என்று நினைத்து புத்தகங்களுக்கு அட்டை போட்டு பிரிக்க முடியாதபடிக்கு சில பதிப்பகங்கள் செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகமும் அப்படியேதான் இருந்தது.
-----------------------------
ஒருவேளை எழுத்துப் பிழையாக இருக்கலாம்.
//சயந்தன் said...
உங்களது புத்தக கண்காட்சி அனுபவம் 1 எனும் பதிவிலிருந்து
----------------
கலாநிதி குணசிங்க என்பவர் எழுதிய “கி.மு.200 முதல் கி.பி.200வரை இலங்கை வரலாறு” என்கிற புத்தகத்தை பார்த்தேன். இப்போதெல்லாம் புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுகிறார்கள் என்று நினைத்து புத்தகங்களுக்கு அட்டை போட்டு பிரிக்க முடியாதபடிக்கு சில பதிப்பகங்கள் செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகமும் அப்படியேதான் இருந்தது.
-----------------------------
ஒரு வேளை எழுத்துப் பிழையாக இருக்கலாம்.//
சயந்தன் மன்னிக்கவும்.. மன்னிக்கணும்..
சத்தியமாக எழுத்துப் பிழைதான்.. சரி செய்துவிடுகிறேன்..
என் மீது எனக்கிருந்த அதீத நம்பிக்கைதான் காரணம்..
சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்..
See who owns tfrrs.org or any other website:
http://whois.domaintasks.com/tfrrs.org
Post a Comment