15-05-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நமது மதிப்பிற்குரிய ஆத்தா, டாக்டர் புரட்சித் தலைவி இந்த 2011-2016-ம் ஆண்டிற்கான அமைச்சரவையின் முதல்கட்டப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளார்கள்..!
இதில் 11 பேர் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். 23 பேர் தற்போதுதான் முதல்முறையாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்கிறார்கள்..! அமைச்சரவையில் ஜெயலலிதா உட்பட 3 பேர் மட்டுமே பெண்கள்..!
இதில் 11 பேர் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். 23 பேர் தற்போதுதான் முதல்முறையாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்கிறார்கள்..! அமைச்சரவையில் ஜெயலலிதா உட்பட 3 பேர் மட்டுமே பெண்கள்..!
இந்தப் பட்டியலில் உள்ளவர்களை நீங்கள் மனப்பாடம் செய்து வைப்பதற்குள் அவர்கள் மாற்றப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல..!
அத்தோடு இவர்களில் சிலர் புதுமுகங்கள் என்பதால் அவர்கள் எக்குத்தப்பாக எதிலாவது மாட்டிக் கொண்டால் அடுத்த நிமிடமே சீட்டு கிழிக்கப்படுவது உறுதி என்பதால் இந்தப் பட்டியலில் ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் உறுதியாக ஐந்தாண்டுகளுக்கு அமைச்சர்களாகத் தொடர்வார்கள் என்று நாம் கருதக் கூடாது..! அவர்கள் தலையெழுத்து நன்றாக இருந்தால், நிச்சயமாக நீடிப்பார்கள்..!
பட்டியல் இதோ :
ஜெயலலிதா(ஸ்ரீரங்கம்) - முதலமைச்சர்
2. செங்கோட்டையன் (கோபிசெட்டிப்பாளையம்) - விவசாயம்
3. நத்தம் விசுவநாதன் (நத்தம்) - மின்சாரம், மதுவிலக்கு
4. கே.பி.முனுசாமி (கிருஷ்ணகிரி) - உள்ளாட்சித் துறை
5. சி.சண்முகவேலு (மடத்துக்குளம்) - தொழில்துறை
6. பி.தங்கமணி (குமாரபாளையம்) - வருவாய்த் துறை
7. கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு) - பொதுப்பணித் துறை
8. வி.செந்தில்பாலாஜி (கரூர்) - போக்குவரத்து துறை
9. டாக்டர் வி.எஸ்.விஜய் (வேலூர்) - மக்கள் நல்வாழ்வுத் துறை
10. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (கலசப்பாக்கம்) - உணவுத் துறை
11. டி.கே.எம். சின்னய்யா (தாம்பரம்) - பிற்படுத்தப்பட்டோர் நலன்
12. வைத்தியலிங்கம் (ஒரத்தநாடு) - வீட்டு வசதித் துறை
13. சி.வி.சண்முகம் (விழுப்புரம்) - பள்ளிக் கல்வித் துறை
14. பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி) - உயர்கல்வித் துறை
15. செல்லூர் ராஜூ (மதுரை மேற்கு) - கூட்டுறவுத் துறை
16. எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி) - நெடுஞ்சாலைகள்
17. சி.கருப்பசாமி (சங்கரன்கோவில்) - கால்நடைத் துறை
18. எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்) - இந்து சமய அறநிலையத் துறை
19. எம்.சி.சம்பத் (கடலூர்) - ஊரகத் தொழில் துறை
20. ஜி.செந்தமிழன் (சைதாப்பேட்டை) - செய்தி மற்றும் விளம்பரத் துறை
21. திருமதி கோகுல இந்திரா (அண்ணா நகர்) - வணிக வரித் துறை
22. திருமதி செல்வி ராமஜெயம் (புவனகிரி) - சமூக நலம்
23. பி.வி.ரமணா (திருவள்ளூர்) - கைத்தறித் துறை
24. ஆர்.பி.உதயகுமார் (சாத்தூர்) - தகவல் தொழில் நுட்பம்
25. என்.மரியம் பிச்சை (திருச்சி-மேற்கு) - சுற்றுச்சூழல் துறை
26. என்.சுப்பிரமணியன் () - ஆதிதிராவிடர் நலன்
27. இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) - சட்டத் துறை
28. புத்தி சந்திரன் (ஊட்டி) - சுற்றுலா துறை
29. எஸ்.டி.செல்லப்பாண்டியன் (தூத்துக்குடி) - தொழிலாளர் நலன்
30. கே.டி.பச்சைமால் (கன்னியாகுமரி) - வனத்துறை
31. எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்) - சிறப்புத் திட்ட அமலாக்கம்
32. கே.ஏ.ஜெயபால் (நாகப்பட்டினம்) - மீன் வளத் துறை
33. என்.ஆர்.சிவபதி (முசிறி) - விளையாட்டுத் துறை
இதில் மாதந்தோறும் தோட்டத்துக்குக் கப்பம் கட்டும் துறைகளான வணிகவரித் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை போன்ற முக்கியத் துறைகளில் அமைச்சர் பொறுப்பேற்க இருப்பவர்களின் நிலைமைதான் ரொம்பவும் சிக்கல்..! பார்ப்போம்.. எவ்ளோதான், எப்படித்தான்.. கொடுத்து தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று..!!!
அன்னை ஜெயலலிதாவுக்கும், அவர்தம் அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகள்..!
|
Tweet |
22 comments:
//அன்னை ஜெயலலிதா//
இப்படி அழைப்பதே நன்றாக இருக்கிறது.புதிய முதலமைச்சர்,அமைச்சர்கள்,சட்ட மன்ற உறுப்பினர்கள் நன்றாக செயல்பட வாழ்த்துகள்.
ஜெயகுமார், வளர்மதி மிஸ்ஸிங்....!
[[[சார்வாகன் said...
//அன்னை ஜெயலலிதா//
இப்படி அழைப்பதே நன்றாக இருக்கிறது. புதிய முதலமைச்சர், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் நன்றாக செயல்பட வாழ்த்துகள்.]]]
இத்தாலி சோனியாவைத் தவிர வேறு யாரையும் நாங்கள் அன்னை என்று அழைப்பதில்லை என்கிற கொள்கை முடிவில் இருக்கிறோம்..!
[[[மு.சரவணக்குமார் said...
ஜெயகுமார், வளர்மதி மிஸ்ஸிங்....!]]]
பொள்ளாச்சி ஜெயராமனும் மிஸ்ஸிங்குதான்..!
Kovai is getting only one ministry..... i dont know why amma and ayya always neglecting kovai..
kovai la manadu vechala ayyakku ethacum aguthu..
[[[அகில் பூங்குன்றன் said...
Kovai is getting only one ministry. i dont know why amma and ayya always neglecting kovai.. kovai la manadu vechala ayyakku ethacum aguthu..]]]
கவலையை விடுங்க.. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல அமைச்சரவையில் இருந்து யாரையாவது கழட்டிருவாங்க. அப்போ கோவைக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்..!
திமுக-காங்ரஸ் வீழ்ந்தது மகிழ்ச்சி என்றாலும், அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றது சற்று ஆபத்துதான்.
கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக தயவுடன் தான் ஆட்சி என்றால் ஜெவின் தடாலடி முடிவுகளின் மீது ஒரு கட்டுப்பாடு இருக்கும். இப்போது அவுத்து விட்ட கழுதை நிலைமைதான்
22. திருமதி செல்வி ராமஜெயம்
எப்படி திருமதி செல்வி இரண்டும் ஓரே நேரத்தில் சாத்தியம்..?
இதில் மாதந்தோறும் தோட்டத்துக்குக் கப்பம் கட்டும் துறைகளான வணிகவரித் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை போன்ற முக்கியத் துறைகளில் அமைச்சர் பொறுப்பேற்க இருப்பவர்களின் நிலைமைதான் ரொம்பவும் சிக்கல்..! பார்ப்போம்.. எவ்ளோதான், எப்படித்தான்.. கொடுத்து தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று..!!!//
அ.தி.மு.க ஆட்சியில் பொதுவாகப் பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவைப் பெரிதாகச் செயல்பட்டதாக வரலாறு இல்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
முதலமைச்சருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்.
****************
நண்பர்கள் நேரம் கிடைத்தால் இதையும் படித்துப் பாருங்கள்.
ஏமாற்றிப் பெற்ற வெற்றி!
நன்றி.
//அன்னை ஜெயலலிதாவுக்கும்//
அப்ப செல்வி கிடையாதா அண்ணே
அண்ணே!எந்த துறை(ரை)க்கு கல்லா கட்டும்?
இன்றைக்கு இவங்கள்ள யாராவது நெடுஞ்சாண் கிடை போட்டோ ஏதாவது தேறுச்சுங்களாண்ணே!
[[[பலூன்காரன் said...
திமுக-காங்ரஸ் வீழ்ந்தது மகிழ்ச்சி என்றாலும், அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றது சற்று ஆபத்துதான். கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக தயவுடன்தான் ஆட்சி என்றால் ஜெவின் தடாலடி முடிவுகளின் மீது ஒரு கட்டுப்பாடு இருக்கும். இப்போது அவுத்துவிட்ட கழுதை நிலைமைதான்.]]]
பார்ப்போம்.. என்ன நடக்கிறதென்று..?
[[[Think Why Not said...
22. திருமதி செல்வி ராமஜெயம்
எப்படி திருமதி செல்வி இரண்டும் ஓரே நேரத்தில் சாத்தியம்..?]]]
அந்தம்மாவோட பேரு செல்வி. அவங்க வீட்டுக்காரரோட பேரு ராமஜெயம். இப்ப சரிங்களா..?
[[[Jagannath said...
இதில் மாதந்தோறும் தோட்டத்துக்குக் கப்பம் கட்டும் துறைகளான வணிகவரித் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை போன்ற முக்கியத் துறைகளில் அமைச்சர் பொறுப்பேற்க இருப்பவர்களின் நிலைமைதான் ரொம்பவும் சிக்கல்..! பார்ப்போம்.. எவ்ளோதான், எப்படித்தான்.. கொடுத்து தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று..!!!//
அ.தி.மு.க ஆட்சியில் பொதுவாகப் பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவைப் பெரிதாகச் செயல்பட்டதாக வரலாறு இல்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.]]]
ஆனால் கப்பம் கட்டுவாங்கள்ல.. அதைச் சொன்னேன்..!
[[[அமைதி அப்பா said...
முதலமைச்சருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்.
****************
நண்பர்கள் நேரம் கிடைத்தால் இதையும் படித்துப் பாருங்கள்.
ஏமாற்றிப் பெற்ற வெற்றி!
நன்றி.]]]
வருகைக்கு நன்றி நண்பரே..!
[[[சசிகுமார் said...
//அன்னை ஜெயலலிதாவுக்கும்//
அப்ப செல்வி கிடையாதா அண்ணே.]]]
அது அவங்க அடையாளத்துக்கு.. இது எனக்கு..!
[[[ராஜ நடராஜன் said...
அண்ணே!எந்த துறை(ரை)க்கு கல்லா கட்டும்?]]]
எப்போதும் பொதுப்பணித்துறைதான் ஸார்..!
[[[ராஜ நடராஜன் said...
இன்றைக்கு இவங்கள்ள யாராவது நெடுஞ்சாண்கிடை போட்டோ ஏதாவது தேறுச்சுங்களாண்ணே!]]]
நோ.. செய்யக் கூடாதுன்னு முன்னாடியே சொல்லிட்டாங்களாம்..!
/26. முக்கூர் என்.சுப்பிரமணியன் (செய்யார்) - ஆதிதிராவிடர் நலன் /
தப்பு. இந்த சுப்ரமணீயன் வேற. நீங்களே இப்படிப் பண்ணலாமா. முருகா, முருகா!
[[[ச.முத்துவேல் said...
/26. முக்கூர் என்.சுப்பிரமணியன் (செய்யார்) - ஆதிதிராவிடர் நலன் /
தப்பு. இந்த சுப்ரமணீயன் வேற. நீங்களே இப்படிப் பண்ணலாமா. முருகா, முருகா!]]]
முத்துவேல்.. தகவலுக்கு மிக்க நன்றி..!
இவர் எந்தத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்..?
Post a Comment