2009 பொதுத் தேர்தலில் தமிழகத்தில் விளையாடிய ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம்..!

09-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பணம் எப்படி நடமாடியது என்பதற்கு ஆதாரமாக, ஒரு வாக்கு​மூலத்தை எடுத்துப் போடுகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!

'நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், பண நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது, தேர்தல் ஆணையம்.

ஆனால், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முழுமையான பண பலத்தோடு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் பண விளையாட்டுக்கும், 2-ஜி ஊழலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு’ என்று அதிகார வட்டாரம் சொல்கிறது.

ஆ. ராசா - கனிமொழி சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தை இந்தப் பண விளையாட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெரம்பலூர் துரைமங்களம், கவின் அமிர்தராஜ், சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவரும் விருகம்பாக்​கத்தில் 'ஸ்ரீ’ என்கிற பெயரில் தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தும் வரதராஜ், டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் போன்றவர்கள், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படியில்தான்,  பண விவகாரம் பற்றி பல பரபரப்பான விவரங்கள் டெல்லி வட்டாரத்தில் அடிபட ஆரம்பித்து உள்ளன. இது குறித்த முன்னோட்டமான தகவலை,  7.11.2010 தேதியிட்ட ஜூ.வி-யிலேயே கழுகார் சொல்லி இருந்தார். இப்போது, அதெல்லாம் சி.பி.ஐ-யின்  குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்று உள்ளது.

''2009-ம் ஆண்டு ஒரு டவேரா வாகனத்தின் மூலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மிகப் பிரபலமான கட்டடத்தில் இருந்து, 23 பெட்டிகளில் பணம் கீழ்ப்பாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு கட்டடத்​துக்குக் கொண்டு செல்லப்பட்டது!'' என்கிறது சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த வாக்கு​மூலங்கள்.

2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை கலைஞர் டி.வி-க்கு 200 கோடியை, டி.பி. ரியாலிட்டி பல தவணை​களில் கொடுத்தது என்று சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சொல்லி இருக்கிறது. கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட 200 கோடி, வங்கி வழியாக சென்றதால், பெட்டிகள் நடமாட்டத்துக்கும் அதற்கும் நேரடி சம்பந்தம் இருக்க முடியாது. ஆனால், அப்போது நடந்த தேர்தலுக்கும், டவேரா வாகனத்தில் பறிமாறப்பட்ட பணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. ஆனால், அதிலும் 'ஸ்பெக்ட்ரம்' புகழ் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் சம்பந்தப்பட்டு இருப்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

டி.பி. ரியாலிட்டியைச் சேர்ந்த அஸ்ரஃப், சென்னைக்கு வந்தாராம். அவர் பயணம் செய்வதற்காக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவின் அமிர்தராஜ் ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார். அந்த காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், அதாவது 2009, மே 10 அன்று நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் தனது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. குறிப்பிட்டு உள்ளது. 

டவேரா வாகன டிரைவர் சொல்லும் தகவல் இதுதான்...

''அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மும்பையில் இருந்து வந்த அஸ்ரஃபையும், அவருடன் வந்த சிலரையும் அழைத்துக் கொண்டு நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய கட்டடத்துக்குச் சென்றேன். அங்கே இருந்த பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை(ஈ.வெ.ரா.சாலை) சந்திப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடத்துக்கு நான்கு தடவைகள் போய் வந்தேன்.

முதல் டிரிப்பில், 7 பெட்டிகள்; 2-வது டிரிப்பில் 4 பெட்டிகள்; 3-வது டிரிப்பில் 8 பெட்டிகள்; 4-வது டிரிப்பில் 4 பெட்டிகளை கொண்டு சென்றேன். அந்த 4-வது டிரிப்பில் 3 பெட்டிகளை மட்டுமே அந்தக் கட்டடத்துக்குள் கொண்டு சென்றேன். ஒரு பெட்டி மட்டும் காரிலேயே இருந்தது. அந்தப் பெட்டியை யாரோ ஒருவர் வாங்கிச் செல்வார் என்று சொன்னதால் இறக்கவில்லை.

ஒவ்வொரு பெட்டியையும் இறக்கி, கட்டடத்துக்குள் கொண்டு போனபோது, அந்தப் பெட்டிகளுடன் அஸ்ரஃப் மற்றும் மூன்று பேர்கள் கூடவே பாதுகாப்புக்காகப் போனார்கள்.  ஒரு பெட்டி வாகனத்தில் அப்படியே இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்தில் நான்காவது பெட்டியுடன் டவேரா வாகனத்தைக் காணவில்லை!'' என்று அந்த டிரைவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சி.பி.ஐ. வட்டாரம் கூறுகிறது. 

பணம் கடத்தியவர்கள் விசாரித்தபோது டிரைவர், 'நான் பாத்ரூம் போனேன். திரும்பி வந்தபோது, காரைக் காணவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். உடனே, அண்ணா சாலை அலுவலகத்துக்கும், க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும் அந்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்.

அஸ்ரஃப், உடனே இந்த சம்பவத்தை, மும்பையில் இருந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் அகர்வாலுக்கு (இவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்.) சொல்லி இருக்கிறார். காணாமல் போன பெட்டியில் மட்டுமே நாலு கோடி ரூபாய் இருந்ததாக அவர்கள் பேசிக் கொண்டார்களாம். இதன்படி பார்த்தால், மொத்தமாக 23 பெட்டிகளில் சுமார் 92 கோடி ரூபாய்வரை இருந்து இருக்கலாம் என்கிறது சி.பி.ஐ.

பணத்துடன் வாகனம் காணாமல் போனதில், வாகன ஓட்டுநர் மீதே க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸுக்கும், டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் சந்தேகம். அதனால்,  டிரைவரைப் பிடித்துக் கொண்டனர். 'பணமும் காரும் எங்கே?’ என்று கேட்டு தொடர்ந்து சில நாட்கள் தங்கள் கஸ்டடியில் வைத்து டிரைவரை செமத்தியாகக் கவனித்து இருக்கிறார்​கள். அவர் சம்பந்தப்பட்ட இடங்​களிலும் பணத்தைத் தேடி இருக்கிறார்கள். ஆனால், பலன் கிடைக்க​வில்லை. அதன் பிறகே, அந்த டிரைவரை போலீஸிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.

போலீஸ்காரர்கள் கடுமையாக மிரட்டியும், டிரைவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. அதனால், மீண்டும் டிரைவரை க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தாரே, தங்கள் கஸ்டடிக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் முடிந்த 2009 மே  13 அன்று டிரைவரை அழைத்துச் சென்ற கவின் அமிர்தராஜ், அந்த டிரைவரை வைத்தே, கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கார் திருடு போனது குறித்து புகார் கொடுக்கவைத்தார். ஆனால், அதில் பணம் இருந்ததாகச் சொல்லவில்லை. அதன் பிறகு, மும்பையில் இருந்து வந்திருந்த ராஜீவ் அகர்வாலிடம், டிரைவரை அழைத்துப் போய் இருக்கிறார். டிரைவர் மீது பரிதாபப்படுவதுபோல் நடித்த அகர்வால், அவரை அனுப்பி விட்டாராம். 

அதன் பிறகு டிரைவரை சுதந்திரமாகவிட்டார்கள் என்றாலும், க்ரீன் ஹவுஸ் ஆட்கள் பின் தொடர்ந்து உள்ளார்கள். 'நிச்சயமாக இந்த வாடகை கார் டிரைவர்தான் பணப் பெட்டியைக் கடத்துவதற்காக, கார் திருடு போனதாக நாடகம் ஆடுகிறார்’ என்றே இவர்கள் நம்பி இருக்கிறார்கள்.

அதனால், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம், சொல்லி அதை விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். 'எங்களுடைய பணத்தை, இந்த டிரைவர் திருடி மறைத்துவிட்டார். அதனால், அவரைத் தீவிரமாகக் கண்காணித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று அந்த ஏஜென்சிக்கு மனு கொடுத்தார்கள்.

காணாமல்போன டவேரா வாகனம் 25 நாட்களுக்குப் பிறகு, சென்னை மூலக்கடைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 'வாகனம் கிடைத்துவிட்டதால், நாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று  அந்த டிரைவரை வற்புறுத்தி இருக்கிறார்கள்.
 
டிடெக்டிவ் ஏஜென்ஸியும் சில உண்மைகளைக் கண்டுபிடித்தது. மாத ஊதியம் வாங்கும் இந்த டிரைவரின் வாழ்க்கைத் தரத்தில் எதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கண்காணித்து, சில தகவல்களைக் கொடுத்தது.  

அந்த டிரைவரின் சகோதரரும் ஒரு கார் டிரைவர். ஆனால், அவர் திடீரென நான்கு கார்கள் வாங்கி இருப்பதோடு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியது தெரிய வந்தது. அண்ணன் அடித்துக் கொடுத்த பணத்தை வைத்துத்தான் தம்பி வளர்ந்துள்ளார் என்று  டிடெக்டிவ் ஏஜென்சி கண்டு​பிடித்தது.

ஆனால், காணாமல் போன பணப் பெட்டி எங்கே என்பது​ பற்றியான உருப்படியான தகவல்​கள் இதுவரை கிடைக்க​வில்லை. இது குறித்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நிறுவனர் வரதராஜ் என்பவரிடமும் சி.பி.ஐ. வாக்கு​மூலம் வாங்கி இருப்ப​தாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலோடு, டிபி ரியாலிட்டி, அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய அலுவலகம், 2009 தேர்தல், க்ரீன் ஹவுஸ் நிறுவனம் மற்றும் கலைஞர் டி.வி. போன்றவையும் பின்னிப் பிணைகின்றன.

இதில் இன்னொரு தகவலாக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் எம்.டி-யாக இருந்து தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்சாவின் மனைவியும், 'அந்த டிரைவர் பணத்துடன் மாயமானது’ குறித்து சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறாராம்!

கவின் அமிர்தராஜ் மற்றும் சிலரும் கொடுத்த தகவல்களை சி.பி.ஐ., வாக்குமூலமாக குற்றப் பத்திரிகையில் சேர்த்து உள்ளது. ஆனால், இந்த வாக்குமூலங்கள் ஆ.ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி மாதிரி நீதிபதியிடம் (சிஆர்.பி.சி. 164) கொடுத்தது அல்ல. இவர்கள் சி.பி.ஐ-யிடம் (சிஆர்.பி.சி. 161) வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்கள்.

டெல்லி, மும்பை வழியாக சென்னையில் எந்த மாதிரி எல்லாம் பணம் பாய்ந்துள்ளது... அதில் தேர்தல் களத்தில் பணம் பாய்ந்த திசைகள் என்னென்ன என்பதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இந்த சாட்சியங்களைக் கொண்டு வரப் போகிறது!

நன்றி : ஜூனியர்விகடன் - 11-05-2011

8 comments:

Indian Share Market said...

அதெல்லாம் சரி, கொள்ள அடிச்ச பணம் திரும்பி வருமா வராதா...? வரும் ஆனா வராது

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

அதெல்லாம் சரி, கொள்ள அடிச்ச பணம் திரும்பி வருமா வராதா...? வரும் ஆனா வராது.]]]

எனக்கும் இதே டவுட்டுதான்..! எப்படி, யாரிடமிருந்து பணத்தை மீட்கப் போகிறார்கள்..?

ஸ்ரீனிவாச ஐயங்கார் said...

http://ayyerthegreat.blogspot.com

சித்தூர் முருகேசனின் சின்னத்தனம்

தனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே. ஆனால் என்ன பண்றது சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ? அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன். என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும் .வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். இனி பகவான் விட்ட வழி.

பிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்தினானோன்னோ?

இன்னைக்கு நாட்டுல உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே. அதனாலத்தான் சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு

உலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை கொடுத்த சித்தூர் முருகேசன் கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.

தெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா. ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும் இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.

சைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது.

ஆனால் பாருங்கோ முந்தா நேத்து கூகுல்ல போய் செக்ஸாலஜினு தேடறேன் இந்த அபிஷ்டுவோட வலைப்பூ தான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே தெரியறது. மாத்ருபூதத்தோட விஷயம் கூட இதுக்கப்பாலதான் தெரியறது.

நமக்கென்ன நமக்கென்னானு இருந்தா சாக்கடை தேங்கி நம்ம வீட்டுக்குள்ளாறயும் பூந்துரும். அப்பால கிருஷ்ணான்னாலும் இல்லை கோவிந்தான்னாலும் இல்லே. படிக்கிறவா "தத் வெறும் உளறல்"னுட்டு போயிர்ரதால இந்த கெரகம் பிடிச்சது என்னென்னத்தையோ குப்பையை கொண்டு வந்து நம்ம தலைக்குள்ள கொட்டி வைக்கறது.

நானாச்சும் ஏதோ வயித்துப்பாட்டை பார்த்துண்டிருக்கிற ஹார்ட் வேர் காரன். இந்த வலையுலகத்துல எத்தனையோ அனுபவஸ்தருக, மேதாவி எல்லாம் இருக்கா. அவாள் எல்லாம் வாயை மூடிண்டு இருந்தா இந்த அல்பம் சொல்றதுதான் சத்தியமுன்னு ஆயிராதோ?

பசு வதையை ஆதரிக்கிறது, கீதை உட்டாலக்கடிங்கறதுல்லாம் பைத்தாரத்தனமோல்லியோ. ஒரு தாயார் ஒரு குழந்தைய பெத்து போட்டுட்டு பரமபதிச்சுட்டா ஒரு பசுவை வச்சு அந்த குழந்தைய வளர்த்துரலாம். அந்த பசுவையே கொல்றதை ஒரு ஜென்மா நியாயப்படுத்தறதுன்னா என்ன சொல்ல?

ஆதிசங்கராச்சாரியார்லருந்து பாலகங்காதர திலகர் வரை எத்தனையோ ஞானிகள் கீதைக்கு பாஷ்யம் எழுதினாளே அவாளுக்கெல்லாம் வராத சந்தேகம் இந்த அறிவுகொழுந்துக்கு வந்திருக்கு. கிருஷ்ணன் நிஜமாம். கீதை நிஜமாம் .ஆனா அதுல பிராமணாள் கலப்படம் பண்ணூட்டாளாம். அட இழவே ஒன்னை மாதிரி ரெண்டுங்கெட்டானை விட கடவுளே இல்லைன்னு சொன்ன ராமசாமி நாயக்கரே மேல்.

இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி?

இதை இப்படியே விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா.

இந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.

சத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது. எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ?

ஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ? தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர நினைக்கிறாளாம். அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம். மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை.

இந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ? இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும்? பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம்

உண்மைத்தமிழன் said...

சீனி்வாச ஐயங்கார்..!

இதை எதுக்கு என்கிட்ட சொல்லி என்னைப் பீதியாக்குறேள்..!

ஆளை விடுங்கோ..!

Anonymous said...

அவனுங்க பணத்த கொள்ளை அடிக்கிறானுங்க, நீ மத்தவங்க எழுதின செய்திகளை கொள்ளை அடிக்கற. ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்ல. இதெல்லாம் ஒரு பொழப்பு.

சிங்கக்குட்டி said...

இந்தியாவின் வரலாற்று அடையாளங்களில் இதும் ஒன்று :-).

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...

அவனுங்க பணத்த கொள்ளை அடிக்கிறானுங்க, நீ மத்தவங்க எழுதின செய்திகளை கொள்ளை அடிக்கற. ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்ல. இதெல்லாம் ஒரு பொழப்பு.]]]

இல்லையே.. சொல்லிட்டுத்தான செய்றேன்..?

உண்மைத்தமிழன் said...

[[[சிங்கக்குட்டி said...

இந்தியாவின் வரலாற்று அடையாளங்களில் இதும் ஒன்று :-)]]]

அப்படீன்னு ஆகிப் போச்சு. இது போய் இன்னொரு ஊழல் என்ற அலட்சியமும் மக்களிடம் பரவிவி்டடது..!