கனிமொழி கைது உறுதிதானா..?

05-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை வரும் மே-31 அன்று கோர்ட்டில் தாக்கல் செய்ய இருக்கிறது சி.பி.ஐ. இந்த ஊழல் வழக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு, சட்டப்படி கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், ஆயுள் முழுக்கவும்கூட சிறையில் கழிக்க வேண்டி இருக்குமாம். அதனால், இந்தக் கோணத்திலும் தனியாக வழக்குப் போட ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரிக்கிறது.

யார் இந்த அமிர்தராஜ்?

ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த, மறைந்த சாதிக் பாட்சாவிடம் பி.ஏ-வாக இருந்தவர் அமிர்தராஜ். சாதிக் சம்பந்தப்​பட்ட அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் முழுமையாக விசாரணை செய்ததாக அறிந்து, டெல்லி அதிகாரிகளிடம் பேசினோம்.

''ஷாகித் பால்வாவின் டி.பி. ரியாலிட்டி நிறுவனமும், சாதிக்கின் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் கிட்டத்தட்ட ஒரே நிர்வாகத்தின் கீழ்தான் இயங்கி வந்ததாக அமிர்தராஜ் சி.பி.ஐ-யிடம் சொல்லி இருக்கிறார்.

உலகத் தரத்தில் ஊழியர்கள் வேண்டும் என்பதற்காகவே, நேர்முகத் தேர்வு நடத்தி ஆட்களைத் தேர்வு செய்து கொடுத்து க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு பால்வாவின் மும்பை நிறுவன அதிகாரிகள் உதவி செய்தார்களாம். சாதிக்கின் நிறுவனத்துக்கு பால்வாவின் நிறுவனங்களில் இருந்து பல கோடிகளில் பணப் பரிவர்த்தனையும் நடந்திருக்கிறது.

மும்பைத் தொழிலதிபர்கள் ஷாகித் பால்வாவும், வினோத் கோயங்காவும், தொழில் முறை நண்பர்கள். இருவரும் இப்போது திகார் சிறையில் இருக்கிறார்கள். வினோத்தின் தந்தை கிருஷ்ணன் முராரி, அவரது இளைய சகோதரர் பிரமோத் கோயங்கா ஆகியோரி பின்னணி​களையும் சி.பி.ஐ. தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறது. இவர்களுடன் சாதிக் பாட்சா நெருக்கமான தொடர்பு வைத்திருந்த ஆதாரங்கள் சி.பி.ஐ. வசம் வந்துவிட்டன...'' என்கிறார்கள்.

தாவூத் ஆல்பத்தில் பிரமோத் கோயங்கா

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பலத்த பாதுகாப்புடன் இருந்து​கொண்டு, இந்தியாவில் பயங்கரவாதத்தை ரிமோட்டில் இயக்கி வருகிறார் தாவூத் இப்ராஹிம். அப்படிப்பட்ட தாவூத்தின் இளைய சகோதரன் ஹுமாயுனின் திருமண நிகழ்ச்சியில் முக்கிய விருந்தாளியாக பிரமோத் கலந்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையை மிரட்டிவிட்டு, போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்று பதுங்கிய அபுசலீமை, அந்த நாட்டு போலீஸ் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைத்தது. அபுசலீம் தன் வாக்குமூலத்தில், ஹூமாயூன் திருமணத்தில் பிரமோத் கலந்து கொண்டதைச் சொல்லி இருக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த பில்டர் ராஜேஷ் என்பவரை, கடந்த 2003-ம் ஆண்டு நிழல் உலக தாதாக்கள் சுட்டுக் கொன்றனர். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், தனது மரணத்தின் பின்னணியில் கிருஷ்ண முராரி இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தாரிக் பாய் என்று அழைக்கப்படும் கராச்சியைப் பூர்வீகமாகக்​கொண்ட தொழிலதிபர் ஒருவர், இந்திய போலீஸாரிடம் பிடிபட்டபோது, 'கிருஷ்ணன் முராரி, வினோத் கோயங்கா, பிரமோத் கோயங்கா ஆகிய மூவருக்கும் தாவூத்தின் 'டி' கம்பெனிக்கும் தொடர்பு உண்டு.  இவர்களின் ரியல் எஸ்டேட் தொழிலில் தாவூத்தின் பணம் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது’ என்றும் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது. அதனால், சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் பிரமோத்தையும் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வர இருக்கிறார்களாம்.

தயார் நிலையில் 6-ம் எண் சிறை?

 


மே 6-ம் தேதி கனிமொழியும், கலைஞர் டி.வி-யின் நிர்வாகி சரத்குமாரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜ​ராகிறார்கள். அன்றைய தினமே, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படலாம் என்று டெல்லியில் திடுக்கிடும் வகையில் பேச்சு வலம் வருகிறது.

திஹார் சிறையில் பெண்களுக்கென்று தனியாக 6-ம் எண் சிறை இருக்கிறது. இங்கே 1,200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இருக்கிறார்கள். 'கனிமொழி கைது செய்யப்பட்டால் இங்கேதான் அடைக்கப்படுவார்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். இந்த சிறையில் தமிழக போலீஸின் ஆயுதப் படையைச் சேர்ந்த 30 பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கே இரண்டு ஃபைல்கள்?

“ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய ஃபைல்கள் காணவில்லை. அதற்குக் காரணமானவர்களை முதலில் பிடித்து திகார் சிறையில் தள்ளினால்தான், மற்றவர்கள் திருந்துவார்கள்போல் தெரிகிறது...'' என்று டென்ஷன் ஆகிறார் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர்.

'ஊழல் செய்த உயர் அதிகாரிகள் சிலரைக் காப்பாற்றும் நோக்கில் அந்த இரண்டு ஃபைல்கள் எங்காவது ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறதா... அல்லது, ஒரேயடியாக எரித்துவிட்டார்களா?’ என்று சி.பி.ஐ. தேடுகிறது.

அதில் ஒரு ஃபைல், ஆ.ராசா மந்திரியாக இருந்தபோது, தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் தினசரி அலுவலகப் பணிகளைப் பதிவு செய்த விவரங்களை உள்ளடக்கியது. மற்றொரு ஃபைல், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி அரசுக்கு விண்ணப்பித்தது தொடர்பானது. இந்த இரண்டு ஃபைல்களுடன் தொடர்புடைய வேறு சில விவரங்கள் சி.பி.ஐ-க்குக் கிடைத்துவிட்டது. என்றாலும், ஒரிஜினல் ஃபைல்களைத் தேடும் பணி மும்முரமாக நடக்கிறது.

இந்த ஃபைல்களை வைத்திருந்த அதிகாரிகளிடம் சி.பி.ஐ. வாக்குமூலம் பதிவு செய்துவிட்டது. ஒருவேளை, காணாமல்போன ஃபைல்கள் கிடைக்கவில்லை என்றால், இந்த வாக்குமூலத்தை ஆதாரமாகப் பயன்படுத்தவும் சி.பி.ஐ.யிடம் திட்டம் இருக்கிறது!

நன்றி : ஜூனியர்விகடன், மே-8, 2011

தன் அரசியல் வாழ்வின் மிகக் கடினமான காலகட்டத்தை தி.மு.க., கடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க., என்றால், கருணாநிதி. கருணாநிதி என்றால் கனிமொழி. அந்த வகையில், கனிமொழி என்றாலே கழகம்தான். கட்சிக்கு வந்த களங்கம் என்று மட்டுமில்லாமல், தன் அருமை மகள் கனிமொழி என்பதால், தனிப்பட்ட முறையில் முதல்வருக்கும் இது நெருக்கடிதான்.

உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் இது பற்றி விலாவாரியாகவே விளக்கினார் கருணாநிதி. "சில நாட்களாகவே சி.ஐ.டி., காலனி இல்லத்துக்குப் போகவில்லை. தாயும், மகளும், மற்றுமுள்ளவர்களும் படும் வேதனையைக் காணச் சகிக்கவில்லை' என்பதாக அவர் கவலைப்பட்டிருந்தார்.

கனிமொழி கைதாவாரா? கருணை காட்டப்படுமா? சட்டம் கைகொடுக்குமா? மத்திய அரசு கைவிடுமா? என, ஏராளமான கேள்விக்குறிகள் அறிவாலயத்தைச் சுற்றி எழுந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் முடிவைப் போலவே, ஆளாளுக்கு, தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். எனக்கு கிடைத்த தகவலின்படி, கனிமொழியின் கைது, எந்த வகையிலும் தவிர்க்கப்பட முடியாது என்பதுதான் உண்மை. இது குறித்து, சட்டவல்லுனர்களிடமும், சி.பி.ஐ., அதிகாரிகளிடமும் விசாரித்த வகையில் கிடைத்த தகவல்கள் :

"2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்தவரை, இதுவரை யார் யாரெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனரோ, அவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  கனிமொழி ஒருவரைத் தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவருமே வெளியில் இல்லை.

இவர்களில், முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள ராஜா ஒருவர்தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்பே கைது செய்யப்பட்டவர்கள். மற்றனைவரும் குற்றப்பத்திரிகைக்குப் பிறகு கைதானவர்களே. அந்த வகையில், கனிமொழி கைதாவதற்கும் அதிகளவு வாய்ப்புகள் உள்ளன.

"குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே, விசாரணை அதிகாரியின் வேலையில் பாதி முடிந்துவிடுகிறது. அதன் பிறகும் கைதின் அவசியம் என்ன?' என்ற வினா எழுப்பப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு, இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. ஒன்று, விசாரணை. இன்னொன்று சாட்சிகள். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதன் மூலம், விசாரணை வேண்டுமானால் பெருமளவு முடிந்திருக்கலாமே தவிர, சாட்சிகள் கலைக்கப்படும் அபாயம் தொடரவே செய்யும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கைது நடவடிக்கை மற்றும் சிறைவாசம் கொண்ட வழக்குகள், ஏராளமான முன்னுதாரணங்களாக உள்ளன.

சாதாரண வழக்குகளில் மட்டும்தான், குற்றப்பத்திரிகை தாக்கலும், கைதி விடுவிப்பும் தொடர்புபடுத்தப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட கடும் குற்றங்களில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.  ஒருவர் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், அவர் ஜாமீன் பெறுவதற்கு இயல்பாகவே தகுதியாகிறார் என்பது சாதாரண நடைமுறைதானே தவிர, எல்லா வழக்குகளுக்கும் பொருந்துவதல்ல.

ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்தவரை, குற்றம்சாட்டப்பட்ட எல்லாருமே, சமூகத்தில் பெரும் செல்வாக்கு உடையவர்கள். இவர்கள், சாட்சியைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர் என்றால், நீதிமன்றம் இதை மிகச் சுலபமாக ஏற்றுக்கொள்ளும். இவர்கள் வெளியில் நடமாடுவதன் மூலம், சாட்சிகள் கலைக்கப்படலாம்; மிரட்டப்படலாம்; வழக்கில் தலையீடு அதிகரிக்கலாம் என்பன போன்றவை, சி.பி.ஐ.,யின் வாதமாக இருக்கும்.

சரணடையச் சொல்லியோ, கைதாகும்படியோ நீதிமன்றம் உத்தரவிடும்போது, ஜாமீன் கேட்டு கனிமொழி தரப்பு மனுத் தாக்கல் செய்யலாம். இதிலும், ராஜா ஒருவரைத் தவிர, மற்ற அனைவருமே ஜாமீன் கேட்டு, மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சிறையில் இருப்பவர்கள்தான். ராஜா மட்டுமே, இதுவரை ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, கனிமொழியின் ஜாமீன் மனுவும் ஏற்றுக் கொள்ளப்படும் வாய்ப்பு குறைவு.

"இவர் வெளியில் நடமாடுவதால் வழக்குக்கு குந்தகம் இல்லை' என சி.பி.ஐ., உத்தரவாதம் தந்தால், ஜாமீன் தருவது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்கலாம். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரின் ஜாமீனுக்கும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, கனிமொழிக்கு மட்டும் சி.பி.ஐ.,யால் கருணை காட்ட முடியாது.

மிகப் பெரிய உடல்நலக் குறைவோ, சிறைவாசம் அனுபவிக்க முடியாத, தள்ளாத வயதோ கூட கனிமொழிக்கு இல்லை. எனவே, உடல்நிலையைக் காரணம் காட்டியும் அவர் ஜாமீன் கோர முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டும், சுப்பிரமணியசாமியும், இந்தியாவில் உள்ள அத்தனை ஊடகங்களும் நேரடியாகக் கண்காணிக்கின்றன. விசாரணை நீதிமன்றத்திலோ, விசாரணை அதிகாரிகளிடத்திலோ ஏதேனும் சின்னச் சலனம் தென்பட்டால்கூட, மிகப் பெரிய கூச்சல் கிளம்பிவிடும்; சுப்ரீம் கோர்ட் விளாசிவிடும். அந்த வகையிலும், கனிமொழி விட்டுவைக்கப்படுவது சிரமமே.

இப்படி எல்லா அம்சங்களும் விரல் நீட்டுவது, திஹார் சிறைச்சாலையே நோக்கியே!

இருந்தாலும், "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்' என்ற பொது விதி இருப்பதால்தான், திட்டவட்டமான இந்த விஷயம்கூட,  இப்போதுவரையிலும் சஸ்பென்சாகவே நீடிக்கிறது!

[[இந்த விஷயத்தில் நான் என்ன நினைத்தேனோ, அதனையே இன்றைய ‘தினமலரும்’ இப்படி எழுதியிருக்கிறது. இதனை நான் எழுதியதாகவே நினைத்துக் கொள்ளுங்கள்]]

22 comments:

ரிஷி said...

குட் மார்னிங்..!
படித்துவிட்டேன். தகவல்களுக்கு நன்றி!

Indian Share Market said...

அடடா என்ன ஒரு ரசனை, உங்களுக்கு யாருக்காவது இவ்வளவு அழகா ரசிக்க தெரியுமா? இல்ல இவ்வளவு அழகா ஒரு பொன் சிரிப்பு சிரிக்க தெரியுமா?
சினிமா நடிகர்கள் இதை பார்த்து கற்றுக்கொள்ளவும?

a said...

இன்னும் ஒரு நாள்...

ரிஷி said...

அண்ணே..
நீங்க ஜூ.வி.யை காப்பி பேஸ்ட் பண்ணிருக்கீங்க. இங்கே Indian Share Market அவர்கள் வினவு தளத்தில் இருந்து பின்னூட்டத்தையே காப்பி பேஸ்ட் பண்ணிருக்காரே! :-))))

பிரசன்னா கண்ணன் said...

அப்போ ரெண்டு பேரையும் ஒரே செல்லுல போடுவாங்களாண்ணே?? :-)

Indian Share Market said...

டியர் ரிஷி, அண்ணா மட்டும் காப்பி பேஸ்ட் பண்ணலாம். நான் மட்டும் பண்ண கூடாதா?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

குட்மார்னிங்..!

படித்துவிட்டேன். தகவல்களுக்கு நன்றி!]]]

வருகைக்கு மிக்க நன்றி ரிஷி..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

அடடா என்ன ஒரு ரசனை, உங்களுக்கு யாருக்காவது இவ்வளவு அழகா ரசிக்க தெரியுமா? இல்ல இவ்வளவு அழகா ஒரு பொன் சிரிப்பு சிரிக்க தெரியுமா? சினிமா நடிகர்கள் இதை பார்த்து கற்றுக் கொள்ளவும?]]]

ம்.. அவசியம் கத்துக்க வேண்டிய விஷயந்தான் இது..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

இன்னும் ஒரு நாள்...]]]

நாளைக்குத் தெரிஞ்சிரப் போகுது..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

அண்ணே.. நீங்க ஜூ.வி.யை காப்பி பேஸ்ட் பண்ணிருக்கீங்க. இங்கே Indian Share Market அவர்கள் வினவு தளத்தில் இருந்து பின்னூட்டத்தையே காப்பி பேஸ்ட் பண்ணிருக்காரே! :-))))]]]

பேஷ்.. பேஷ்.. பொருத்தமாத்தான் இருக்கு.. விடுங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரசன்னா கண்ணன் said...

அப்போ ரெண்டு பேரையும் ஒரே செல்லுல போடுவாங்களாண்ணே?? :-)]]]

இப்படி வேற ஆசையிருக்காங்க உங்களுக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

டியர் ரிஷி, அண்ணா மட்டும் காப்பி பேஸ்ட் பண்ணலாம். நான் மட்டும் பண்ண கூடாதா?]]]

பண்ணலாம்.. பண்ணலாம்.. தப்பில்லை..!

Unknown said...

அடிக்கடி உங்கள் எண்ணங்களை எழுதுகிறீர்கள்.கனிமொழியை கோர்டே ஜாமீனில் விட வழிவகை உண்டு.பொழைக்கற வழியை பாருங்க.அப்படியே சைடுல எழுதுங்க.

தனிமரம் said...

விடிந்தாள் புரியும் கழியா!புரியானியா என்று!

Unknown said...

"அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்"

மே 13 க்கு பிறகு...

Gujaal said...

தொடர்பில்லாத சேதி..

http://ibnlive.in.com/news/mystery-boy-excels-in-anna-university-exam/151195-3.html

'Mystery boy' excels in Anna University exam

Coimbatore: Over the last three years, every time the Anna University (Chennai) exam results were declared, students of a batch of BE Computer Science Engineering at the Kamban Engineering College in Tiruvannamalai were perplexed.
They found a certain Arun Kumar Reddy's name on the rolls, who always passed with flying colours. But no student had ever seen a person called Reddy in the class or even in the exam hall. Finally, a girl decided to blow the whistle and shot off a petition to the Anna University about the mysterious Reddy who scored higher marks than some of the brighter students in the class.
The Anna University Controller of Examination conducted an inquiry at the college, administered by the family of State Food Minister E V Velu, on Thursday last and found startling information. He discovered that three answer scripts of Reddy from different semester exams contained different handwritings. On checking the exam attendance register, authorities found that Reddy has been marked present after using a whitener to erase the original record.

The inquiry brought to light that Reddy's answer sheets contained serial numbers different from the unique serial number provided to the college. Each exam centre (college) is supplied answer sheet bundles with the unique serial number printed on it and while signing the exam attendance register the candidate has to mention this number.
"We suspect that the college allowed impersonators to appear for Arun Kumar Reddy. It appears that unused answer sheets (supplied during the previous semester exam) could have been used. An inquiry panel led by a senior professor has summoned the college faculty to appear before it on May 5 and explain the discrepancies," a source in the university said.
Authorities indicated that if the charges were proved, Reddy (if he is traced) would be handed over to the police and the results of all past university examinations in which he had passed would be cancelled. He would also be debarred for two years.
The university authorities have also indicated that the Kamban Engineering College in Tiruvannamalai could face serious action including disaffiliation from the university and barred from admitting students for a period ranging from two to five years.

உண்மைத்தமிழன் said...

[[[thamizhan said...

அடிக்கடி உங்கள் எண்ணங்களை எழுதுகிறீர்கள். கனிமொழியை கோர்டே ஜாமீனில் விட வழிவகை உண்டு. பொழைக்கற வழியை பாருங்க. அப்படியே சைடுல எழுதுங்க.]]]

தமிழன் நீங்க எழுதின பின்னூட்டத்தை திரும்பவும் ஒரு தடவை படிச்சுப் பாருங்க. எழுதினது நியாயம்தானா..?

உண்மைத்தமிழன் said...

[[[Nesan said...

விடிந்தாள் புரியும் கழியா!புரியானியா என்று!]]]

இன்னும் 1 நாள் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[யோவ் said...

"அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்"

மே 13 க்கு பிறகு...]]]

நாளைக்குத் தெரிஞ்சிரப் போகுது..!

Unknown said...

உ.த.அவர்களே:கம்பனி சட்டதிட்டங்களின்படி கனிமொழி எந்த தவறும் செய்யவில்லை.டேப் எல்லாம் கோர்ட்டில் எடுபடாது.இதில் பெரிய தலையெல்லாம் இருக்கு.இதெல்லாம் கணக்கில் எடுத்துகொள்ளாம எகிறி குதிப்பது என்ன நியாயம்?முதல் அமைச்சரே அரசுக்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு எடுத்த வழக்கில் நீதிபதி என்ன சொன்னார் என்பதை படியுங்க.இங்கு நடப்பது எல்லாமே ஊழல்தான்.மொத்த ஊழலையும் சரி பண்ண வழி ஏதாவது இருந்தா சொல்லுங்க.புரட்சி பண்ணுவோம்.

உண்மைத்தமிழன் said...

[[[Gujaal said...

தொடர்பில்லாத சேதி..

http://ibnlive.in.com/news/mystery-boy-excels-in-anna-university-exam/151195-3.html

'Mystery boy' excels in Anna University exam]]]

குஜ்ஜால் ஸார்.. அஞ்சு வருஷத்துல தன்னோட சொத்து மதிப்பை பல மடங்கு உயர்த்தின கில்லாடி அமைச்சரோட காலேஜ் இது.. இதெல்லாம் அவருக்கு சர்வசாதாரணமான விஷயம்..!

உண்மைத்தமிழன் said...

thamizhan said...

உ.த.அவர்களே :

கம்பனி சட்டத் திட்டங்களின்படி கனிமொழி எந்த தவறும் செய்யவில்லை. டேப் எல்லாம் கோர்ட்டில் எடுபடாது. இதில் பெரிய தலையெல்லாம் இருக்கு. இதெல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளாம எகிறி குதிப்பது என்ன நியாயம்?]]]

என்கிட்ட கேட்டு என்ன புண்ணியம். நீங்க முட்டுக் கொடுக்கிற ஆட்சியின் கீழ இருக்குற சிபிஐதான் குற்றம் சாட்டியிருக்காங்க. அவங்ககிட்ட போய்க் கேட்கச் சொல்லுங்க..!

[[[முதல் அமைச்சரே அரசுக்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு எடுத்த வழக்கில் நீதிபதி என்ன சொன்னார் என்பதை படியுங்க. இங்கு நடப்பது எல்லாமே ஊழல்தான். மொத்த ஊழலையும் சரி பண்ண வழி ஏதாவது இருந்தா சொல்லுங்க. புரட்சி பண்ணுவோம்.]]]

ஒரே வழிதான்.. அத்தனை பேரையும் அழித்தொழிப்பதுதான்.. வேறொண்ணும் செய்ய முடியாது..!