14-05-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
1996-ல் மே-13-ல் அன்றைய ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தபோது தமிழ்நாடே சந்தோஷப்பட்ட அதே நிகழ்வு, மீண்டும் நேற்றைய. மே 13-ல் நடந்தேறியுள்ளது..!
தி.மு.க. தோல்வியடையும் என்றுதான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால் இந்த அளவுக்கு படுதோல்வியைத் தழுவும் என்று எதிர்பார்க்கவே இல்லை..! தற்போதைய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் தோல்வியடைந்த பரிதாபத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பரிதாபமாக இழந்திருக்கிறது தி.மு.க.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
1996-ல் மே-13-ல் அன்றைய ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தபோது தமிழ்நாடே சந்தோஷப்பட்ட அதே நிகழ்வு, மீண்டும் நேற்றைய. மே 13-ல் நடந்தேறியுள்ளது..!
தி.மு.க. தோல்வியடையும் என்றுதான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால் இந்த அளவுக்கு படுதோல்வியைத் தழுவும் என்று எதிர்பார்க்கவே இல்லை..! தற்போதைய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் தோல்வியடைந்த பரிதாபத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பரிதாபமாக இழந்திருக்கிறது தி.மு.க.
மக்களின் இந்த பொங்கித் தீர்த்த உணர்விற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை மற்றக் கட்சிகளைவிடவும் தி.மு.க.வினருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவர்களால் வெளியில் சொல்ல முடியவில்லை..! கட்சியின் கொள்கைகளில் குறைபாடு என்றால் கட்சித் தலைமையிடம் முறையிட்டு மாறுதல் செய்யலாம்..! ஆனால் கட்சித் தலைமையிலேயே குறைபாடு என்றால் வருவதை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்..!
“ஈழப் பிரச்சினையில் தி.மு.க. செய்த துரோகம்.. ஸ்பெக்ட்ரம் ஊழலில் மகா கொள்ளையடித்தது.. இன்றோடு இந்த 5 மாத காலத்திலேயே 9 முறை விலையேற்றப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வு.. இந்த உயர்வினால் விலைவாசி உயர்ந்து.. தக்காளியையும், முருங்கைக்காயையும் கண்ணால் பார்த்தே திருப்திபட்டுக் கொள்ள வேண்டுமென்று ஏழை ஜனங்களை நிர்ப்பந்தப்படுத்தியது..! கடுமையான மின் வெட்டு.. இதனால் தொழிற்சாலைகள் முடக்கம்.. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறி போனது.. அனைத்து அரசுத் துறைகளிலும் வஞ்சகமில்லாமல் புகுந்து விளையாடிய உடன்பிறப்புக்களின் லஞ்ச லாவண்யம்..! கட்சிக்காரர்களின் அடிதடி, மிரட்டல்,. கட்டப் பஞ்சாயத்து.. அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் சொத்துக் குவிப்புகள்.. அத்தனை துறைகளிலும் தனது குடும்பத்தினரின் ஆதிக்கம்.. திரும்பிய பக்கமெல்லாம் தனது வாரிசுகளின் அராஜகச் செயல்கள்..” என்று அப்பாவி மக்களின் கூக்குரல்கள்..! ஆனால் இதெல்லாம் இந்த முதலமைச்சரின் காதுகளை எட்டவில்லை..!
அவரோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக.. தன்னைப் பற்றிய பாராட்டுக் கவிதைகளை ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.
தேர்தல்தானே.. வரட்டும்.. அரசுதானே.. நம்ம சொந்தக் காசில்லீல்ல.. அப்புறமென்ன..? கடனை வாங்குவோம்.. அதில் கொஞ்சத்தை மக்களிடம் அள்ளி வீசுவோம். எச்சி இலை பொறுக்கும் மக்களாகிய இவர்கள், நாம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு நமக்கு வாக்களிப்பார்கள்.. மீண்டும் நாமே ஜெயிப்போம். நமது குடும்பத்தினரை மட்டும் வாழ வைப்போம் என்ற எட்டு அம்சத் திட்டத்தோடு ஆட்சிக் கனவில் இருந்தவரைத்தான் இப்போது நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள் மக்கள்..!
நல்லதையே செய்தோம்.. சொல்லாததையும் செய்தோம் என்றெல்லாம் வீர வசனம் பேசியவர்கள்தான் செய்த திட்டங்கள் அனைத்திலும் கமிஷன் அடித்ததையும், அதன் மூலம் தனது குடும்பத்தினரை மட்டும் வாழ வைத்துள்ளதையும் காலம் இப்போது கண்கூடாக தமிழகத்து மக்களுக்குக் காட்டிவிட்டது..!
தொட்டால் கமிஷன்.. கொடுத்தாலும் கமிஷன் என்று அனைத்துத் திட்டங்களிலும் மேலிடத்தில் இருந்து கீழ் மட்டும் வரையிலும் பரவியிருக்கும் லஞ்சத்தால் அவதிப்பட்டிருக்கும் அப்பாவிகளைப் பற்றிக் கவலைப்படாமல், கோடீஸ்வரனாக இருந்தும் அரசு செலவிலேயே தனக்கான மருத்துவ சிகிச்சையைக்கூட செய்து கொண்ட இந்தப் பிச்சைக்காரத்தனத்தையும் பொதுமக்கள் பார்த்தபடியேதான் இருந்தார்கள்..!
தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு கடுமை காட்டியிருக்காவிட்டால் இந்த ஆட்சியாளர்கள் தங்களுக்காக சட்டத்தையே வளைத்திருப்பார்கள். தேர்தல் கமிஷனின் கறார் தன்மையால் பாதிக்கப்பட்டு உறுதியுடன் நேர்மையாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீதே அரசு ஊழியர்களை வைத்து பொய் வழக்குப் போட வைத்து மிரட்டிக் காண்பித்ததையெல்லாம் பொதுஜனங்கள் ரசிக்கவில்லை என்பதை அந்தக் கோட்டை இன்றைக்கு பீரங்கி குண்டு தாக்குதலில் சிதறியிருப்பதைப் பார்த்தாலே தெரிகிறது..!
“ஈழப் பிரச்சினையில் தி.மு.க. செய்த துரோகம்.. ஸ்பெக்ட்ரம் ஊழலில் மகா கொள்ளையடித்தது.. இன்றோடு இந்த 5 மாத காலத்திலேயே 9 முறை விலையேற்றப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வு.. இந்த உயர்வினால் விலைவாசி உயர்ந்து.. தக்காளியையும், முருங்கைக்காயையும் கண்ணால் பார்த்தே திருப்திபட்டுக் கொள்ள வேண்டுமென்று ஏழை ஜனங்களை நிர்ப்பந்தப்படுத்தியது..! கடுமையான மின் வெட்டு.. இதனால் தொழிற்சாலைகள் முடக்கம்.. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறி போனது.. அனைத்து அரசுத் துறைகளிலும் வஞ்சகமில்லாமல் புகுந்து விளையாடிய உடன்பிறப்புக்களின் லஞ்ச லாவண்யம்..! கட்சிக்காரர்களின் அடிதடி, மிரட்டல்,. கட்டப் பஞ்சாயத்து.. அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் சொத்துக் குவிப்புகள்.. அத்தனை துறைகளிலும் தனது குடும்பத்தினரின் ஆதிக்கம்.. திரும்பிய பக்கமெல்லாம் தனது வாரிசுகளின் அராஜகச் செயல்கள்..” என்று அப்பாவி மக்களின் கூக்குரல்கள்..! ஆனால் இதெல்லாம் இந்த முதலமைச்சரின் காதுகளை எட்டவில்லை..!
அவரோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக.. தன்னைப் பற்றிய பாராட்டுக் கவிதைகளை ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.
தேர்தல்தானே.. வரட்டும்.. அரசுதானே.. நம்ம சொந்தக் காசில்லீல்ல.. அப்புறமென்ன..? கடனை வாங்குவோம்.. அதில் கொஞ்சத்தை மக்களிடம் அள்ளி வீசுவோம். எச்சி இலை பொறுக்கும் மக்களாகிய இவர்கள், நாம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு நமக்கு வாக்களிப்பார்கள்.. மீண்டும் நாமே ஜெயிப்போம். நமது குடும்பத்தினரை மட்டும் வாழ வைப்போம் என்ற எட்டு அம்சத் திட்டத்தோடு ஆட்சிக் கனவில் இருந்தவரைத்தான் இப்போது நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள் மக்கள்..!
நல்லதையே செய்தோம்.. சொல்லாததையும் செய்தோம் என்றெல்லாம் வீர வசனம் பேசியவர்கள்தான் செய்த திட்டங்கள் அனைத்திலும் கமிஷன் அடித்ததையும், அதன் மூலம் தனது குடும்பத்தினரை மட்டும் வாழ வைத்துள்ளதையும் காலம் இப்போது கண்கூடாக தமிழகத்து மக்களுக்குக் காட்டிவிட்டது..!
தொட்டால் கமிஷன்.. கொடுத்தாலும் கமிஷன் என்று அனைத்துத் திட்டங்களிலும் மேலிடத்தில் இருந்து கீழ் மட்டும் வரையிலும் பரவியிருக்கும் லஞ்சத்தால் அவதிப்பட்டிருக்கும் அப்பாவிகளைப் பற்றிக் கவலைப்படாமல், கோடீஸ்வரனாக இருந்தும் அரசு செலவிலேயே தனக்கான மருத்துவ சிகிச்சையைக்கூட செய்து கொண்ட இந்தப் பிச்சைக்காரத்தனத்தையும் பொதுமக்கள் பார்த்தபடியேதான் இருந்தார்கள்..!
தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு கடுமை காட்டியிருக்காவிட்டால் இந்த ஆட்சியாளர்கள் தங்களுக்காக சட்டத்தையே வளைத்திருப்பார்கள். தேர்தல் கமிஷனின் கறார் தன்மையால் பாதிக்கப்பட்டு உறுதியுடன் நேர்மையாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீதே அரசு ஊழியர்களை வைத்து பொய் வழக்குப் போட வைத்து மிரட்டிக் காண்பித்ததையெல்லாம் பொதுஜனங்கள் ரசிக்கவில்லை என்பதை அந்தக் கோட்டை இன்றைக்கு பீரங்கி குண்டு தாக்குதலில் சிதறியிருப்பதைப் பார்த்தாலே தெரிகிறது..!
ஓட்டுக்காகக் கொடுத்த பணம்கூட தங்களுடைய பணம்தான் என்பதையும் புரிந்து கொண்டு பல பொதுமக்கள் எதிர்ப்பு ஓட்டுக்களைக் குத்தியிருப்பதை கொளத்தூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது..!
அரசியல்வாதிகள் திருந்தாவிட்டால் மக்களின் கடைசி ஆயுதமான வாக்களிப்புதான் பேசும் என்பதை அழுத்தம்திருத்தமாக மீண்டும் ஒரு முறை செய்து காட்டியிருக்கும் தமிழகத்து மக்களை மனதாரப் பாராட்டுகிறேன்..!
இதே நேரத்தில் இத்தனை பெரிய கொள்ளைக் கூட்ட அரசியல்வாதிகளை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு சட்டத்தை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு இரண்டு மாத காலமாக இந்த மாநிலத்தில் ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க வைத்து இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை அவர்களுக்கு வழங்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எனது கோடானு கோடி நன்றிகள்..!
அரசியல்வாதிகள் திருந்தாவிட்டால் மக்களின் கடைசி ஆயுதமான வாக்களிப்புதான் பேசும் என்பதை அழுத்தம்திருத்தமாக மீண்டும் ஒரு முறை செய்து காட்டியிருக்கும் தமிழகத்து மக்களை மனதாரப் பாராட்டுகிறேன்..!
இதே நேரத்தில் இத்தனை பெரிய கொள்ளைக் கூட்ட அரசியல்வாதிகளை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு சட்டத்தை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு இரண்டு மாத காலமாக இந்த மாநிலத்தில் ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க வைத்து இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை அவர்களுக்கு வழங்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எனது கோடானு கோடி நன்றிகள்..!
|
Tweet |
99 comments:
கடைசி வரிகளுடன் ஒத்துப் போகிறேன் அண்ணாச்சி :))
என்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. பெரிய பதிவு போடுவீங்கன்னு நான் இரண்டு நாளா உங்க பக்கமே கண் வைச்சுட்டு இருக்கேன், இப்படி பண்ணிட்டீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்
http://reap-and-quip.blogspot.com/2011/05/blog-post.html
உங்களுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் வந்தனம்...
வடை எனக்குன்னு பார்த்தா இப்படியா எடுப்பீங்க கார்த்தி சார். அவ்வ்வ்வ்வ்வ். தூங்கப்போன என்னை உ.த.சார் பதிவு வந்திடுச்சு எழுந்திரு அனானு பசங்க எழுப்பிட்டாங்க. சரி வடைய எடுக்கலாம்னு வந்தா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். திருப்ப தூங்கப் போறேன். நாளைக்கு வரேன்.
கார்த்தி சார் டவுன் டவுன். சரி நோ டவுன் டவுன் பாதி வடை அனுப்பிடுங்க. பாய் பாய்.
அரசியல்வாதிகள் திருந்தாவிட்டால் மக்களின் கடைசி ஆயுதமான வாக்களிப்புதான் பேசும் என்பதை அழுத்தம்திருத்தமாக மீண்டும் ஒரு முறை செய்து காட்டியிருக்கும் தமிழகத்து மக்களை மனதாரப் பாராட்டுகிறேன்..!
Very correct.
அரசியல்வாதிகள் என்றதில் ஜெயலலிதா கிடையாது என நம்புகிறேன்.
உங்களின் விபரமான பதிவுக்காக ரொம்ப எதிர்பாத்து பலமுறை வந்து போனேன். ரொம்ப சின்ன பதிவா போட்டுடீங்களே சார். கொஞ்சம் விரிவா போடுங்க சார்...
உங்களின் விபரமான பதிவுக்காக ரொம்ப எதிர்பாத்து பலமுறை வந்து போனேன். ரொம்ப சின்ன பதிவா போட்டுடீங்களே சார். கொஞ்சம் விரிவா போடுங்க சார்..
வணக்கம்ணே
உங்க பதிவை தான் எதிர்பார்த்து கிட்டிருந்தேன். உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!
இந்த தேர்தலில் உங்கள் பணி மகத்தானது
//தி.மு.க. தோல்வியடையும் என்றுதான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால் இந்த அளவுக்கு படுதோல்வியைத் தழுவும் என்று எதிர்பார்க்கவே இல்லை..!//
அதே, அதே!
அண்ணனுக்குச் சந்தோசத்துல எழுத்தே வரலை போலிருக்கே!
//கட்சித் தலைமையிலேயே குறைபாடு என்றால் வருவதை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்//
பாவம் உ.பி க்கள்
//இத்தனை பெரிய கொள்ளைக் கூட்ட அரசியல்வாதிகளை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு சட்டத்தை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு இரண்டு மாத காலமாக இந்த மாநிலத்தில் ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க வைத்து இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை அவர்களுக்கு வழங்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எனது கோடானு கோடி நன்றிகள்..! //
மிக சரியாக சொன்னீங்கண்ணே
Hats off election commission!
இந்த தேர்தல்ல இணையத்துல உங்க செயல்பாடு கூட நல்லா இருந்தது.. நிச்சயமா இந்த வெற்றிய கொண்டாடலாம்..
வாழ்த்துகள்.. பாஸ்..
இனிமே நீங்க ஜெயலலிதாவ எதிர்க்கப்போகும் பொன்னான தருணத்தை எதிர்பாத்துக்கிட்டு இருக்கோம்..
இனிமே தான் இருக்கு அரசியல்ல அடிதடி அமர்க்களம் எல்லாம்..
அண்ணே, இந்த கட்டுரையை பத்திரப்படுத்தி வையுங்கள், அடுத்த ஐந்து வருடம் கழித்து மீண்டும் ஒருமுறை பதிவேற்றம் செய்ய வேண்டி வரும்.
பதிவுலகைப் பொறுத்த வரை நீங்களும்,சவுக்கும் செய்த பணி மகத்தானது.ஆனால் சவுக்கு தளத்தின் பின்னூட்டங்கள் அரைவேக்காட்டுத் தனமாக இருந்த காரணத்தால் A gentle blogging என்ற முறையில் நீங்களே சிறப்பு.
அதுவும் கைப்புள்ள மாதிரி எத்தனை அடியின்னாலும் தாங்குறீங்கண்ணே:)
தொடர் பின்னூட்டக்காரனாக எனது வாழ்த்துக்கள்.
ராமருக்கு உதவிய அணில் போல இந்த வெற்றியில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது! வாழ்த்துக்கள்!
Hats off to your brave comments and article unmaitamilan nengathan nanga ellam mask mattiya tamilarkal....
உண்மையான மக்கள் நலவிரும்பிக் கட்சி என்று ஏதாவது இருந்தால் இப்போதிருந்து சரியாகச் செயற்பட்டால் 2016 இல் தி.மு.க, அ.தி.மு.க தவிர்த்து யாராவது வரலாம். கருணாநிதி ‘இதுக்கு ஜெயலலிதாவே 100 மடங்கு மேல்’ என்று எப்படி நிரூபித்தாரோ, அதே வேலையை ஜெயாவும் செய்வார். இரண்டு மக்கள் விரோதிகளையும் துரத்திஅடிக்க மக்கள் எடுத்திருக்கிற முதல் அடி இதுவாக இருக்குமோ? ஜெயாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்
இந்த மாற்றத்தில் உங்களுக்கும் சிறிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது
மக்களின் இந்த பொங்கித் தீர்த்த உணர்விற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை மற்றக் கட்சிகளைவிடவும் தி.மு.க.வினருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவர்களால் வெளியில் சொல்ல முடியவில்லை..! கட்சியின் கொள்கைகளில் குறைபாடு என்றால் கட்சித் தலைமையிடம் முறையிட்டு மாறுதல் செய்யலாம்..! ஆனால் கட்சித் தலைமையிலேயே குறைபாடு என்றால் வருவதை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்..!//
அவ்..........
ஆட்சி மாற்றம் வரவேற்கத்தக்க விடயம் தான் சகோ.
அம்மா தான் வாங்கிய ஓட்டுக்கேற்றாற் போல
ஜனநாயகத்தை எவ்வாறு பாதுகாக்கிறார், மக்கள் பணிகளை எப்படிச் செய்கிறார் முதலிய விடயங்களைச்
சிறிது காலம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு கடுமை காட்டியிருக்காவிட்டால் இந்த ஆட்சியாளர்கள் தங்களுக்காக சட்டத்தையே வளைத்திருப்பார்கள்
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
2016 ஆண்டு தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற இன்று முதல் அயராது உழைப்பேன் ---
பதவி ஏற்றவுடன் ஜெயா சூளுரை!
தல ...வாழ்த்துக்கள். மக்களை மடையன் நினைசிகிட்டு இருந்தா ... சும்மா பொங்கி எழுந்துடாங்க. அல்லகயிங்க எல்லாம் ஆடிபோய் கிடக்குதுங்க.
"அனாமிகா துவாரகன் said...
என்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. பெரிய பதிவு போடுவீங்கன்னு நான் இரண்டு நாளா உங்க பக்கமே கண் வைச்சுட்டு இருக்கேன், இப்படி பண்ணிட்டீங்க. "
me toooooooo.
௨
சிரந்தாழ்த்தி நன்றி:
கடவுளுக்கு மற்றும்
தமிழக வாக்காள பெருமக்களுக்கு!
பெருமையுடன் நன்றி:
இந்திய/தமிழக தேர்தல் ஆணையம்..ஊழியர்கள்
காவல்துறை
மாவட்ட ஆட்சித்தலைவர்கள்
நெகிழ்ச்சியுடன் நன்றி:
வலைதள நேர்மையாளர்கள்/தைரியசாலிகள்:
சவுக்கு
உண்மைத்தமிழன்
இட்லிவடை
காவிரிமைந்தன்
டோண்டு ராகவன்
எதிர்பார்ப்புடன் நன்றி:
விஜயகாந்த்
பிரார்த்தனையுடன் நன்றி:
ஜெயா
எங்களை இதுவரை மகிழ்வித்து இனியும் மகிழ்விக்கப்போகும் விதூஷகர்களுக்கு நன்றி:
வடிவேலு
வாலி
வைரமுத்து
அப்துல்ரகுமான்
சன் டிவி
நன்றியைக்கூட எதிர்பார்க்காமல்
பணிசெய்* நடுநிலையாளருக்கு நன்றி:
தினமணி
தினமலர்
சோ ராமசாமி
ஞானி சங்கரன்
[*=வினைத்தொகை:செய்த,செய்யும்,செய்யப்போகும்]
நன்றிகள் கோடி
நீவிர் வாழ்க!
நின் சுற்றம்!!
நின குலம் வாழ்க!!!
உணர்ச்சிவசப்படாமல் நிதர்சனத்தை நிதானமாக விளக்கியுள்ளீர்கள்.
மக்கள் அளித்த வாக்குகள் ஜெயலலிதாவிற்கு ஆதரவு என்பதுடன் கருணாநிதி மீண்டும் வரக்கூடாது என்ற எதிர்மறை வாக்குகள் என்பதும் உண்மை.
தேவை இல்லாமல் இந்துமத எதிர்ப்பைக் காட்டியதும், இராமபிரானைத் தகாதசொற்களால் வைததும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தோரை அனாவசியமாக வாய் ஒயாமல்இகழ்ந்து பேசுவதைப் பெருமையாகக் கருதுவதும், இனவேற்றுமை, மொழிவெறுப்பு போன்ற அருவருப்பான சிறுமைகளும்கூட கருணாநிதிக்கு எதிராக வாக்கு அளிக்க உதவி இருக்கலாம்.
அ. நாமதேயன்
Theeppettai ezhuyirukkiraar ingeer;
"இனிமே நீங்க ஜெயலலிதாவ எதிர்க்கப்போகும் பொன்னான தருணத்தை எதிர்பாத்துக்கிட்டு இருக்கோம்..
ஜெயலலிதா ஐந்து ஆண்டுகள் போடாத ஆட்டங்கள் போடுவார். அதுவும் தனிப்பெரும் மெஜாரிட்டி என்றால் கேட்கvaa வேண்டும்?. உ.தமிழன் பதிவுகள் போடுவார் அந்த் ஆட்டங்களைப்பற்ற்i.
கருனானிதியின் ஆட்டங்களைப்பற்றிய பதிவுகளுக்கு எந்த ஆட்டோவும் வரவில்லை.
ஜெ விட மாட்டார். அப்போதுதான் தெரியும் உ.த. பொரு வீரனா கோழையா என்று.
நினவிருக்கட்டும் தராசு சியாமின் கதி.
உடனே பார்க்கவும்:
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=gIt4oI1dgJE
:-))))))
arumaiyaa vilakki irukkeega anne, ithu ammaakkum oru paadam. She must be well aware of this.
உமது முடிவுரை வெகு பொருத்தம்
News. . .Soniya invite jaya for a tea party. . . Now ADMK new alliance with Congress, both are trying to save Eelam Tamils. . . . (Moral ;people cheated by 'Ottu porukkikal'., . . This is called Democracy.. . :(
மரண அடி என்று சொல்வது அரசியலைப்பற்றிய அறியாமை. அரசியல் ஒரு தொடர்கதை. ஒவ்வொரு அரசியல்வாதியும் 80 வயதைத்தாண்டியும் அரசியலில் இருப்பான். வாஜ்பேயி, மொரார்ஜி, கருனானிதி, என்று உடல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் போதும்.எல்லாருக்கும் அரசியலில் ஏற்றமும் இறக்கமும் வரும் போகும். இறக்கம் வந்தால் அவர்கள் மரண அடிவாங் கி ஒரேயடியாக மண்டையைப்போட்டார்கள் என்பது சிறுபிள்ளைத்தனமான் வாதம்.
கருநானிதி வயது காரணமாக ஓய்ந்துவிடுவார். ஆனால் மற்றவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வயுது இன்னும் இருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு மரண அடி என்றால் சரி. அஃது கூட சரியில்லை ஏனென்றால் 'மரணம்' என்றால்நிரந்தரம்.
உ.தமிழன் வேறு ஏதாவது தமிழ்ச் சொல்லைத் தேடி தன் கருத்துப்பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.
ஓவர் ஆட்டம் வேண்டாம் . ஜெ புத்தி அனைவரும் தெரிந்ததே.. அவர் ஆடம் இனி ஆரம்பம் ஆகும் .. சசி ஜெ அராஜகம் தொடங்கும்... பர்கூரில் சூ அடிக்கப்பட்டவர் தானே மிண்டும் அந்த நிலை வரும் 2016
நல்ல பதிவு உ.த.
என்னதான் மக்கள் வாக்கு மூலம் தங்கள் கோபத்தை தீர்த்துக் கொண்டாலும், இப்பொது இடப்பட்ட வாங்கு என்பது இன்னும் 5 வருடங்களுக்கு மாறாதது. இந்த 5 வருஷங்களுக்கு ஆளுங்கட்சி என்ன வேண்டுமானாலும் ஆடலாம். அவர்களுக்கு தண்டனை இன்னும் 5 வருடங்கள் கழித்து.
வாக்களித்து சட்டசபைக்கு அனுப்பப்பட்டவரை திருப்பி அழைத்துக் கொள்ளும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும்.
என் பதிவு: http://jeeno.blogspot.com/2011/05/2011.html
விலைவாசி உயர்வென்பது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினை இதற்கும் தி மு.க விற்கும் என்ன சம்irபந்தம்? பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிப்பது நடுவண் அரசு தான் அதுவும் உலக சந்தை விலையை சார்ந்து தான் என்பதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?
ஈழத் தமிழர்களுக்கு கருணா துரோகம் இழைத்தார் சரி ஜெயா என்ன .....கினார்? இப்பொழுது பேராயம் ஜெயாவிற்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது இதற்கு என்ன பதில்? இப்படி முட்டாள் தனமாக எதிர்கட்சியே இல்லாத அளவுக்கு வாக்களித்து விட்டு அப்பறம் ஐயோ ஜெயா குத்துகிறார் குடைகிறார் என்று கூவத்தான் போகிறீர்கள். எந்த இயக்கத்தையும் அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை விட மோசமாக 91 இல் தோற்றும் மீண்டெழுந்து வந்திருக்கிறது 96 இல் தோற்றும் ஜெயா மீண்டார். மக்களுக்கு அவ்வளவு நினைவாற்றல் உள்ளது(!?!?!?!) என்பது தான் உண்மை
அவரோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து
இது என்ன கொடுமை வேலையே செய்யாதவரைப் போய் வேலை செய்ததாக சொல்கிறீர்களே! நன்றி!
pls visit.....
http://ragariz.blogspot.com/2011/05/five-reason-of-dmk-fall.html
தி.மு.க-வை வீழ்த்திய ஐம்பெரும் சக்திகளும், நமக்கு உணர்த்தும் பாடமும்....
ராஜேஷ் மாதிரி தரங்கெட்ட திமுக நாய்களை கொஞ்ச நாள் இங்கு அனுமதிக்காதீர்கள் உண்மைதமிழன்! பொறை கிடைக்காத கோவத்தில் இப்படிதான் கடித்து கடிவாங்கும்.
Valthukkal anne...
ட்வீட்டரில் ..படித்ததில் பிடித்தது....
@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!
ஓவராய் ஆடினால் அடி நிச்சயம். அது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாய் நீங்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தீர்கள் என்பதை உங்கள் பதிவுகள் பிரதிபலித்தன. இனி இறுக்கம் தளர்ந்து மகிழ்வாய் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!
(நான் திமுக வுக்கு வாக்களித்தேன் என்பதையும், மயிரிழையில் திமுக மீண்டும் ஆட்சியமைக்குமென எதிர்பார்த்தேன் என்பதையும் இங்கே மீண்டும் சொல்லிக் கொள்வதில் எனக்கு தயக்கமில்லை.)
சரவணன் நான் ராஜநடராஜனின் பங்காளி. வாழ்த்துகள்.
ஐந்தாண்டுகள் கழித்து ஜெ 'மரண அடி' வாங்குவாரா இல்லையா என்பதை அவரின் ஆட்டம்தான் கணிக்கும். நம்மால் முடியாது.
இதற்கு நாம் ஒரு வழியில் முடிவு செய்யலாம். நம் ஜனநாயக அமைப்பில் ஒரு சிறு மாற்றத்தச்செய்யலாம்.
ஆளும் கட்சி தேர்தலில் நிற்கக்கூடாது. மற்ற கட்சிகள் மட்டும்தான் நிற்க வேண்டும். ஆளும் கட்சி அதற்கடுத்த தேர்தலில் நிற்கலாம். மரண அடியிலிருந்து தப்பி ஐந்தாண்டுகள் ஓய்வெடுக்கலாம்.
Every one should earn turn by turn.
*** அவரோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக..***
நீரோ என்பது இவரின் ஒரு பக்கம்.கலியுக திருதராஷ்டிரர் என்பது இன்னொரு பக்கம்.
இலவசங்களை கொடுத்து ஆட்சியை தக்க வைத்து கொல்லலாம்(எழுத்துப்பிழை இல்லை)
என்று மனப்பால் குடித்தவருக்கு மக்கள் மிக தெளிவாக கொடுத்ததென்னவோ கள்ளிப்பால்தான்.
இவனுங்க கொள்ளையடிச்ச பணத்தை ஒண்ணுமே பண்ண முடியாதா? கொஞ்சமாச்சும் மீட்டால் பரவாயில்லையே! பதவியில் இருக்கும் பொது திருடிய பணத்தை அவர்களே வைத்துக் கொல்லலாம் என்பது திருடர்களுக்குள்ளே ஏற்பட்ட ஒப்பந்தமோ?
amma romba nallvanga sir, oru varusam paarunga yellamay puriyum yainda indha ammavuku vote poataom yendru.makkal feel pana poaranga.
[[[எல் கே said...
கடைசி வரிகளுடன் ஒத்துப் போகிறேன் அண்ணாச்சி :))]]]
நன்றி எல்.கே. ஸார்..!
[[[அனாமிகா துவாரகன் said...
என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு. பெரிய பதிவு போடுவீங்கன்னு நான் இரண்டு நாளா உங்க பக்கமே கண் வைச்சுட்டு இருக்கேன், இப்படி பண்ணிட்டீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்
http://reap-and-quip.blogspot.com/2011/05/blog-post.html]]]
போதும்மா.. அதான் வருஷக்கணக்கா பக்கம், பக்கமா எழுதிட்டனே.. போதாதா..?
[[[கே.ஆர்.பி.செந்தில் said...
உங்களுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் வந்தனம்...]]]
உங்களுக்கு எனது வந்தனம் செந்தில்..!
[[[அனாமிகா துவாரகன் said...
வடை எனக்குன்னு பார்த்தா இப்படியா எடுப்பீங்க கார்த்தி சார். அவ்வ்வ்வ்வ்வ். தூங்கப் போன என்னை உ.த. சார் பதிவு வந்திடுச்சு எழுந்திரு அனானு பசங்க எழுப்பிட்டாங்க. சரி வடைய எடுக்கலாம்னு வந்தா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். திருப்ப தூங்கப் போறேன். நாளைக்கு வரேன்.]]]
ஹா.. ஹா.. வடையா முக்கியம்..? வந்தோமா? படிச்சோமா? நாலு விஷயம் தெரிஞ்சுக்கிட்டோமான்னு இருக்கணும். இன்னும் என்ன சின்னப்புள்ளத்தனமா வடை, கிடைன்னுட்டு..!
தி.மு.க pattri konjam paysunga solluga sir. awanga sanja nalla visiyathayum makkaluku solluga sir, indru dmk yena nadanthuchu naalaiku admk ku varum sir,pls
[[[அனாமிகா துவாரகன் said...
கார்த்தி சார் டவுன் டவுன். சரி நோ டவுன் டவுன் பாதி வடை அனுப்பிடுங்க. பாய் பாய்.]]]
ம்ஹூம்.. எப்படிம்மா இப்படியெல்லாம் இருக்கீங்க..? என்னால முடியலையே..?
[[[simmakkal said...
அரசியல்வாதிகள் திருந்தாவிட்டால் மக்களின் கடைசி ஆயுதமான வாக்களிப்புதான் பேசும் என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒரு முறை செய்து காட்டியிருக்கும் தமிழகத்து மக்களை மனதாரப் பாராட்டுகிறேன்..!
Very correct.
அரசியல்வாதிகள் என்றதில் ஜெயலலிதா கிடையாது என நம்புகிறேன்.]]]
ஜெயலலிதா அரசியல்வியாதி இல்லையென்றால் வேறு யார்..?
[[[மைக் முனுசாமி said...
உங்களின் விபரமான பதிவுக்காக ரொம்ப எதிர்பாத்து பலமுறை வந்து போனேன். ரொம்ப சின்ன பதிவா போட்டுடீங்களே சார். கொஞ்சம் விரிவா போடுங்க சார்...]]]
போதும் ஸார்.. இதுக்கு மேல என்னத்த எழுதறது..? அதைத்தான் தேர்தலுக்கு முன்பாகவே தி.மு.க. ஆட்சி ஏன் போக வேண்டும் என்ற கட்டுரையில் தெளிவாக எழுதியிருந்தனே..?
வருகைக்கு நன்றிகள் ஸார்..!
[[[Karikal@ன் - கரிகாலன் said...
வணக்கம்ணே... உங்க பதிவைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்! இந்தத் தேர்தலில் உங்கள் பணி மகத்தானது.]]]
ஒண்ணுமில்ல ஸார்.. எல்லார் மாதிரியும் எனது கருத்தைத்தான் வெளிப்படையா எழுதிட்டிருந்தேன். அவ்ளோதான்..!
[[[Karikal@ன் - கரிகாலன் said...
//தி.மு.க. தோல்வியடையும் என்றுதான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால் இந்த அளவுக்கு படுதோல்வியைத் தழுவும் என்று எதிர்பார்க்கவே இல்லை..!//
அதே, அதே!]]]
மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சிதான் அமையும் என்று எதிர்பார்த்தேன். இப்படி ஸ்வீப் செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை..!
[[[செங்கோவி said...
அண்ணனுக்குச் சந்தோசத்துல எழுத்தே வரலை போலிருக்கே!]]]
ஹி.. ஹி.. ஹி.. போகுது. விடுங்க..!
[[[Karikal@ன் - கரிகாலன் said...
//கட்சித் தலைமையிலேயே குறைபாடு என்றால் வருவதை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்//
பாவம் உ.பி.க்கள்.]]]
உண்மையில் அவர்கள் பாவம்தான்.. இத்தனை ஆண்டு காலமும் தங்களது சுவாசமாகத் திகழும் தலைவருக்கெதிராக பேசவோ, எழுதவோ அவர்களால் முடியவில்லை.
[[[Karikal@ன் - கரிகாலன் said...
//இத்தனை பெரிய கொள்ளைக் கூட்ட அரசியல்வாதிகளை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு சட்டத்தை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு இரண்டு மாத காலமாக இந்த மாநிலத்தில் ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க வைத்து இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை அவர்களுக்கு வழங்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எனது கோடானு கோடி நன்றிகள்..! //
மிகச் சரியாக சொன்னீங்கண்ணே..
Hats off election commission!]]]
தேர்தல் ஆணையம் இந்த அளவுக்குக் கடுமையையும், கண்டிப்பையும் காட்டியிருக்காவிட்டால் நிலைமையே வேறாகக் கூட மாறியிருக்கும்..!
[[[தீப்பெட்டி said...
இந்தத் தேர்தல்ல இணையத்துல உங்க செயல்பாடுகூட நல்லா இருந்தது. நிச்சயமா இந்த வெற்றிய கொண்டாடலாம். வாழ்த்துகள்.. பாஸ். இனிமே நீங்க ஜெயலலிதாவ எதிர்க்கப் போகும் பொன்னான தருணத்தை எதிர்பாத்துக்கிட்டு இருக்கோம். இனிமேதான் இருக்கு அரசியல்ல அடிதடி அமர்க்களம் எல்லாம்..]]]
எனக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவேன். பிடிக்கவில்லையெனில் எதிர்க்கத்தான் செய்வேன். அது யாராக இருந்தாலும் சரி..!
[[[கார்மேகராஜா said...
அண்ணே, இந்த கட்டுரையை பத்திரப்படுத்தி வையுங்கள், அடுத்த ஐந்து வருடம் கழித்து மீண்டும் ஒரு முறை பதிவேற்றம் செய்ய வேண்டி வரும்.]]]
ஹா.. ஹா.. ஆத்தாவை மாத்தி தாத்தான்னு போடணும்ன்றீங்க.. கரீக்ட்டா..?
[[[ராஜ நடராஜன் said...
பதிவுலகைப் பொறுத்த வரை நீங்களும், சவுக்கும் செய்த பணி மகத்தானது. ஆனால் சவுக்கு தளத்தின் பின்னூட்டங்கள் அரைவேக்காட்டுத்தனமாக இருந்த காரணத்தால் A gentle blogging என்ற முறையில் நீங்களே சிறப்பு. அதுவும் கைப்புள்ள மாதிரி எத்தனை அடியின்னாலும் தாங்குறீங்கண்ணே:) தொடர் பின்னூட்டக்காரனாக எனது வாழ்த்துக்கள்.]]]
அப்படியில்லை ராஜநடராஜன் ஸார்.. உண்மையாக சவுக்கின் செயல் மிகப் பெரிய பாராட்டுக்குரியது. எனக்காவது பத்திரிகையாளர் என்ற பின்புலம் இருந்தது. ஆனால் அவருக்கு. அத்தோடு நான் எழுதியதெல்லாம் அரசியல்வியாதிகளைப் பற்றி.. ஆனால் அவரோ நேரடியான ஆதாரங்களுடன், காக்கிச் சட்டையுடனேயே மோதினார்.. இதுக்கெல்லாம் தனி தைரியம் வேணும்..!
ஐ சல்யூட் டூ சவுக்கு..!
[[[bandhu said...
ராமருக்கு உதவிய அணில் போல இந்த வெற்றியில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது! வாழ்த்துக்கள்!]]]
என்னங்க பெரிய பங்கு.. என்னைவிடவும் நிறைய பேர் எழுதியிருந்தாங்க ஸார்..! அவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்..!
[[[Arunachalam said...
Hats off to your brave comments and article unmaitamilan nengathan nanga ellam mask mattiya tamilarkal.]]]
ஹா.. ஹா.. இது வேறய்யா.. இது ச்சும்மாங்க.. நாம எல்லோருமே உண்மைத் தமிழர்கள்தான்..!
[[[கிருத்திகன் said...
உண்மையான மக்கள் நல விரும்பிக் கட்சி என்று ஏதாவது இருந்தால் இப்போதிருந்து சரியாகச் செயற்பட்டால் 2016-ல் தி.மு.க, அ.தி.மு.க., தவிர்த்து யாராவது வரலாம். கருணாநிதி ‘இதுக்கு ஜெயலலிதாவே 100 மடங்கு மேல்’ என்று எப்படி நிரூபித்தாரோ, அதே வேலையை ஜெயாவும் செய்வார். இரண்டு மக்கள் விரோதிகளையும் துரத்தி அடிக்க மக்கள் எடுத்திருக்கிற முதல் அடி இதுவாக இருக்குமோ? ஜெயாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.]]]
பார்ப்போம். ஜெயா இதனை நல்லவிதமான பயன்படுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது. இல்லையெனில் அவருக்கும் ஆப்புதான்..!
[[[பார்வையாளன் said...
இந்த மாற்றத்தில் உங்களுக்கும் சிறிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது.]]]
பார்வை ஒண்ணுமே இல்லை. செடி அசைந்து மரம் வீழுமா..?
[[[நிரூபன் said...
அவ்..........
ஆட்சி மாற்றம் வரவேற்கத்தக்க விடயம்தான் சகோ.
அம்மா தான் வாங்கிய ஓட்டுக்கேற்றாற் போல
ஜனநாயகத்தை எவ்வாறு பாதுகாக்கிறார், மக்கள் பணிகளை எப்படிச் செய்கிறார் முதலிய விடயங்களைச் சிறிது காலம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.]]]
நானும் இதைத்தான் சொல்கிறேன்.. நினைக்கிறேன்.. பார்ப்போம்..!
[[[Rathnavel said...
தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு கடுமை காட்டியிருக்காவிட்டால் இந்த ஆட்சியாளர்கள் தங்களுக்காக சட்டத்தையே வளைத்திருப்பார்கள்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.]]]
உண்மை.. உண்மை.. மறுக்க முடியாத உண்மை..!
[[[Ganpat said...
2016 ஆண்டு தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற இன்று முதல் அயராது உழைப்பேன். பதவி ஏற்றவுடன் ஜெயா சூளுரை!]]]
ஹா.. ஹா.. அப்புறம் அ.தி.மு.க. என்ற கட்சி என்னாவது..?
[[[அஹோரி said...
தல... வாழ்த்துக்கள். மக்களை மடையன் நினைசிகிட்டு இருந்தா... சும்மா பொங்கி எழுந்துடாங்க. அல்லகயிங்க எல்லாம் ஆடிப் போய் கிடக்குதுங்க.]]]
மூச்சு விடறதுக்கு கொஞ்சம் நாளாகும்..!
[[[Jegan said...
"அனாமிகா துவாரகன் said...
என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு. பெரிய பதிவு போடுவீங்கன்னு நான் இரண்டு நாளா உங்க பக்கமே கண் வைச்சுட்டு இருக்கேன்... இப்படி பண்ணிட்டீங்க. "
me toooooooo.]]]
போதும் ஜெகன்.. நிறையவே எழுதியாச்சு. புதுசு என்ன இருக்கு எழுதறதுக்கு..?
[[[Ganpat said...
௨
சிரந்தாழ்த்தி நன்றி:
கடவுளுக்கு மற்றும்
தமிழக வாக்காள பெருமக்களுக்கு!
பெருமையுடன் நன்றி:
இந்திய/தமிழக தேர்தல் ஆணையம். ஊழியர்கள்
காவல்துறை
மாவட்ட ஆட்சித்தலைவர்கள்
நெகிழ்ச்சியுடன் நன்றி:
வலைதள நேர்மையாளர்கள்/தைரியசாலிகள்:
சவுக்கு
உண்மைத்தமிழன்
இட்லிவடை
காவிரிமைந்தன்
டோண்டு ராகவன்
எதிர்பார்ப்புடன் நன்றி:
விஜயகாந்த்
பிரார்த்தனையுடன் நன்றி:
ஜெயா
எங்களை இதுவரை மகிழ்வித்து இனியும் மகிழ்விக்கப் போகும் விதூஷகர்களுக்கு நன்றி:
வடிவேலு
வாலி
வைரமுத்து
அப்துல்ரகுமான்
சன் டிவி
நன்றியைக்கூட எதிர்பார்க்காமல்
பணிசெய்* நடுநிலையாளருக்கு நன்றி:
தினமணி
தினமலர்
சோ ராமசாமி
ஞானி சங்கரன்
[*=வினைத்தொகை:செய்த,செய்யும்,செய்யப்போகும்]
நன்றிகள் கோடி
நீவிர் வாழ்க!
நின் சுற்றம்!!
நின குலம் வாழ்க!!!]]]
ஆஹா.. பேஷ்.. பேஷ்.. நன்னாயிருக்கு கண்பத் ஸார்..! நன்றி.. நன்றி.. நன்றி..!!!
[[[வழிப்போக்கன் said...
உணர்ச்சிவசப்படாமல் நிதர்சனத்தை நிதானமாக விளக்கியுள்ளீர்கள்.
மக்கள் அளித்த வாக்குகள் ஜெயலலிதாவிற்கு ஆதரவு என்பதுடன் கருணாநிதி மீண்டும் வரக் கூடாது என்ற எதிர்மறை வாக்குகள் என்பதும் உண்மை. தேவை இல்லாமல் இந்துமத எதிர்ப்பைக் காட்டியதும், இராமபிரானைத் தகாத சொற்களால் வைததும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தோரை அனாவசியமாக வாய் ஒயாமல் இகழ்ந்து பேசுவதைப் பெருமையாகக் கருதுவதும், இன வேற்றுமை, மொழி வெறுப்பு போன்ற அருவருப்பான சிறுமைகளும்கூட கருணாநிதிக்கு எதிராக வாக்கு அளிக்க உதவி இருக்கலாம்.
அ. நாமதேயன்]]]
இருக்கலாம் அல்ல. இருந்திருக்கிறது.. மதம், இனம், மொழி, ஜாதி என்பதையெல்லாம் கடந்து தங்களுக்கும், நாட்டுக்கும் என்ன செய்திருக்கிறீர்கள் என்றுதான் மக்கள் பார்க்கிறார்கள்.. பார்த்திருக்கிறார்கள்.. அதன் விளைவுதான் இந்த தூக்கியெறிதல்!
simmakkal said...
ஜெயலலிதா ஐந்து ஆண்டுகள் போடாத ஆட்டங்கள் போடுவார். அதுவும் தனிப் பெரும் மெஜாரிட்டி என்றால் கேட்கவா வேண்டும்?. உ.தமிழன் பதிவுகள் போடுவார் அந்த ஆட்டங்களைப் பற்றி.
கருனானிதியின் ஆட்டங்களைப் பற்றிய பதிவுகளுக்கு எந்த ஆட்டோவும் வரவில்லை.
ஜெ. விடமாட்டார். அப்போதுதான் தெரியும் உ.த. பொரு வீரனா கோழையா என்று.
நினவிருக்கட்டும் தராசு சியாமின் கதி.]]]
ஹா.. ஹா.. வரட்டும் பார்க்கலாம் நண்பரே..! ஏதாவது பிரச்சினையெனில் உங்களை அழைக்கிறேன்..!
[[[Ganpat said...
உடனே பார்க்கவும்:
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=gIt4oI1dgJE
:-))))))]]]
பார்த்தேன். செம காமெடி..!
[[[பித்தன் said...
arumaiyaa vilakki irukkeega anne, ithu ammaakkum oru paadam. She must be well aware of this.]]]
பித்தன்ஜி.. அம்மா என்றில்லை.. அடுத்து வரும் ஆட்சியாளர்களுக்கும் இதுதான் பாடமாக இருக்கப் போகிறது..!
[[[ஸ்ரீகாந்த் said...
உமது முடிவுரை வெகு பொருத்தம்.]]]
நன்றிகள் ஸார்..!
[[[Namy said...
News... Soniya invite jaya for a tea party... Now ADMK new alliance with Congress, both are trying to save Eelam Tamils.... (Moral ;people cheated by 'Ottu porukkikal'., . . This is called Democracy.. . :(]]]
சந்தர்ப்பம் கிடைத்தால் ஜெயலலிதா காங்கிரஸுடன் சேர்வதையும் செய்வார். ஏனெனில் அவர் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க அவருக்கு மத்திய அரசின் ஆசிகள் வேண்டும்..!
ஆனால் அப்போதும் ஈழப் பிரச்சினை குறித்து இரண்டு கட்சிகளுமே இப்போது போலவே நமக்குத் தண்ணிக் காட்டுவார்கள்..!
தனி ஈழம் அமைய விருப்பமுள்ள கட்சி மத்தியில் தனித்து ஆட்சியமைத்தால் மட்டுமே ஈழப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்..!
[[[simmakkal said...
மரண அடி என்று சொல்வது அரசியலைப் பற்றிய அறியாமை. அரசியல் ஒரு தொடர்கதை. ஒவ்வொரு அரசியல்வாதியும் 80 வயதைத் தாண்டியும் அரசியலில் இருப்பான். வாஜ்பேயி, மொரார்ஜி, கருனானிதி, என்று உடல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் போதும். எல்லாருக்கும் அரசியலில் ஏற்றமும் இறக்கமும் வரும் போகும். இறக்கம் வந்தால் அவர்கள் மரண அடி வாங்கி ஒரேயடியாக மண்டையைப் போட்டார்கள் என்பது சிறுபிள்ளைத்தனமான் வாதம்.
கருநானிதி வயது காரணமாக ஓய்ந்துவிடுவார். ஆனால் மற்றவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வயுது இன்னும் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு மரண அடி என்றால் சரி. அஃது கூட சரியில்லை ஏனென்றால் 'மரணம்' என்றால் நிரந்தரம்.
உ.தமிழன் வேறு ஏதாவது தமிழ்ச் சொல்லைத் தேடி தன் கருத்துப் பிழையைத் திருத்திக் கொள்ளலாம்.]]]
சரி.. சரி்.. எதிர்காலத்தில் தி.மு.க.வின் நிலையை அப்போது பார்த்து முடிவு செய்து கொள்வோம்.. இப்போது சர்ச்சை வேண்டாம்..!
[[[ராஜேஷ், திருச்சி said...
ஓவர் ஆட்டம் வேண்டாம். ஜெ. புத்தி அனைவரும் தெரிந்ததே. அவர் ஆட்டம் இனி ஆரம்பம் ஆகும். சசி.. ஜெ அராஜகம் தொடங்கும். பர்கூரில் சூ அடிக்கப்பட்டவர்தானே மிண்டும் அந்த நிலை வரும் 2016.]]]
இப்பவும் தலைகால் புரியாமல் ஆடினால் அதற்கான பலனை அவர் நிச்சயம் அனுபவிப்பார் ராஜேஷ்..!
[[[சீனு said...
நல்ல பதிவு உ.த. என்னதான் மக்கள் வாக்கு மூலம் தங்கள் கோபத்தை தீர்த்துக் கொண்டாலும், இப்பொது இடப்பட்ட வாங்கு என்பது இன்னும் 5 வருடங்களுக்கு மாறாதது. இந்த 5 வருஷங்களுக்கு ஆளுங்கட்சி என்ன வேண்டுமானாலும் ஆடலாம். அவர்களுக்கு தண்டனை இன்னும் 5 வருடங்கள் கழித்து. வாக்களித்து சட்டசபைக்கு அனுப்பப்பட்டவரை திருப்பி அழைத்துக் கொள்ளும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும்.
என் பதிவு: http://jeeno.blogspot.com/2011/05/2011.html]]]
சீனி.. உங்களுடைய கருத்தை நானும் வரவேற்கிறேன். அமெரிக்காவில் இது மாதிரியான சிஸ்டம் இருக்கிறதாம்.. ஊரில் இருக்கும் 50 சதவிகிதத்தினருக்கும் மேல் அதிருப்தியை கையெழுத்திட்டு வெளியிட்டால் ஊர் மேயர் பதவி விலக வேண்டுமாம்..! அது போல் இங்கேயும் வைத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நமது அரசியல்வியாதிகள் நமக்காகவா ஆட்சியில் இருக்கிறார்கள்.. அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் மட்டுமல்லவா அரசியலில் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி இதனைச் செய்வார்கள்..?
[[[செந்திலான் said...
விலைவாசி உயர்வென்பது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினை இதற்கும் தி மு.க.விற்கும் என்ன சம்பந்தம்? பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது நடுவண் அரசுதான். அதுவும் உலக சந்தை விலையை சார்ந்துதான் என்பதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?]]]
அந்த நடுவண் அரசுக்கு ஆதரவு அளித்திருப்பது யார்..? பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தாலே பெருமளவு பிரச்சினைகள் குறையுமே..? ஏன் செய்ய மறுக்கிறார்கள் இவர்கள்..!
[[[ஈழத் தமிழர்களுக்கு கருணா துரோகம் இழைத்தார் சரி ஜெயா என்ன .....கினார்? இப்பொழுது பேராயம் ஜெயாவிற்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது இதற்கு என்ன பதில்? இப்படி முட்டாள்தனமாக எதிர்கட்சியே இல்லாத அளவுக்கு வாக்களித்து விட்டு அப்பறம் ஐயோ ஜெயா குத்துகிறார் குடைகிறார் என்று கூவத்தான் போகிறீர்கள். எந்த இயக்கத்தையும் அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதைவிட மோசமாக 91-ல் தோற்றும் மீண்டெழுந்து வந்திருக்கிறது 96-ல் தோற்றும் ஜெயா மீண்டார். மக்களுக்கு அவ்வளவு நினைவாற்றல் உள்ளது(!?!?!?!) என்பதுதான் உண்மை.]]]
மக்கள் வேறு ஒருவருக்கு வாக்களித்தால் இவர்கள் ஏன் திரும்பித் திரும்பி வருகிறார்கள். இதற்கு மக்களைக் குற்றம் சொல்லுங்கள்..!
இப்போதும் தவறுகளைச் செய்தால் ஜெயலலிதா நிச்சயம் தண்டிக்கப்படுவார். அது மட்டும் உண்மை..!
[[[snkm said...
அவரோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து]]
இது என்ன கொடுமை வேலையே செய்யாதவரைப் போய் வேலை செய்ததாக சொல்கிறீர்களே! நன்றி!]]]
பாராட்டு விழாக்களுக்குச் செல்வதைத்தான் ஒரு வேலையாக வைத்திருந்தார் தாத்தா..!
[[[ரஹீம் கஸாலி said...
pls visit.....
http://ragariz.blogspot.com/2011/05/five-reason-of-dmk-fall.html
தி.மு.க-வை வீழ்த்திய ஐம்பெரும் சக்திகளும், நமக்கு உணர்த்தும் பாடமும்.]]]
உண்மைதான் ரஹீம்..! இதனைப் புரிந்து கொண்டு இந்த 5 ஆண்டுகளில் தங்களைத் திருத்திக் கொண்டு திரும்பவும் மக்களைச் சந்தித்தால் நல்லது. இல்லையெனில் அக்கட்சியின் வளர்ச்சிக்குத்தான் பெரும் ஆபத்து..!
[[[ராஜரத்தினம் said...
ராஜேஷ் மாதிரி தரங்கெட்ட திமுக நாய்களை கொஞ்ச நாள் இங்கு அனுமதிக்காதீர்கள் உண்மைதமிழன்! பொறை கிடைக்காத கோவத்தில் இப்படிதான் கடித்து கடிவாங்கும்.]]]
ராஜரத்தினம் இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாமே..?
ஆதரவாளர் என்று ஒருவர் இருந்தால், எதிர்ப்பாளரும் இருக்கத்தான் செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்..
இனிமேல் யாரையும் இதுபோல் பேசாதீர்கள்..
ராஜேஸ்.. இதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மன்னிக்கவும்..!
[[[அகில் பூங்குன்றன் said...
Valthukkal anne...]]]
ஓகே.. இதை அம்மாவுக்கு நான் பாஸ் செஞ்சர்றேன்..!
[[[Karuthu Kandasamy said...
ட்வீட்டரில் ..படித்ததில் பிடித்தது....
@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!]]]
நானும் படித்தேன். பார்ப்போம்..!
[[[மு.சரவணக்குமார் said...
ஓவராய் ஆடினால் அடி நிச்சயம். அது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாய் நீங்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தீர்கள் என்பதை உங்கள் பதிவுகள் பிரதிபலித்தன. இனி இறுக்கம் தளர்ந்து மகிழ்வாய் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!
(நான் திமுகவுக்கு வாக்களித்தேன் என்பதையும், மயிரிழையில் திமுக மீண்டும் ஆட்சியமைக்குமென எதிர்பார்த்தேன் என்பதையும் இங்கே மீண்டும் சொல்லிக் கொள்வதில் எனக்கு தயக்கமில்லை.)]]]
ஆனாலும் உங்களது நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது சரவணக்குமார்..
வருகைக்கு நன்றிகள்..!
[[[ஜோதிஜி said...
சரவணன் நான் ராஜநடராஜனின் பங்காளி. வாழ்த்துகள்.]]]
பங்காளிகள் வாழ்க..!
[[[simmakkal said...
ஐந்தாண்டுகள் கழித்து ஜெ 'மரண அடி' வாங்குவாரா இல்லையா என்பதை அவரின் ஆட்டம்தான் கணிக்கும். நம்மால் முடியாது.
இதற்கு நாம் ஒரு வழியில் முடிவு செய்யலாம். நம் ஜனநாயக அமைப்பில் ஒரு சிறு மாற்றத்தச் செய்யலாம். ஆளும் கட்சி தேர்தலில் நிற்கக் கூடாது. மற்ற கட்சிகள் மட்டும்தான் நிற்க வேண்டும். ஆளும் கட்சி அதற்கடுத்த தேர்தலில் நிற்கலாம். மரண அடியிலிருந்து தப்பி ஐந்தாண்டுகள் ஓய்வெடுக்கலாம்.
Every one should earn turn by turn.]]]
இது நடக்கவே நடக்காத காரியம். நமது அரசியல்வியாதிகள் இதற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். பகல் கனவுதான் நண்பரே..!
[[[basheer said...
நீரோ என்பது இவரின் ஒரு பக்கம். கலியுக திருதராஷ்டிரர் என்பது இன்னொரு பக்கம்.
இலவசங்களை கொடுத்து ஆட்சியை தக்க வைத்து கொல்லலாம் (எழுத்துப் பிழை இல்லை) என்று மனப்பால் குடித்தவருக்கு மக்கள் மிக தெளிவாக கொடுத்ததென்னவோ கள்ளிப்பால்தான்.]]]
இதையும் குடித்து இவர் உயிரோடு இருக்க வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்..!
[[[Jayadev Das said...
இவனுங்க கொள்ளையடிச்ச பணத்தை ஒண்ணுமே பண்ண முடியாதா? கொஞ்சமாச்சும் மீட்டால் பரவாயில்லையே! பதவியில் இருக்கும் பொது திருடிய பணத்தை அவர்களே வைத்துக் கொல்லலாம் என்பது திருடர்களுக்குள்ளே ஏற்பட்ட ஒப்பந்தமோ?]]]
இந்த விஷயம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது. அவர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம்..!
[[[navani said...
amma romba nallvanga sir, oru varusam paarunga yellamay puriyum yainda indha ammavuku vote poataom yendru. makkal feel pana poaranga.]]]
அதையும் பார்க்கத்தான போறோம்..! நல்லாயிருந்தா வாழ்வாங்க.. இல்லைன்னா அதோ கதிதான்..!
[[[navani said...
தி.மு.க pattri konjam paysunga solluga sir. awanga sanja nalla visiyathayum makkaluku solluga sir, indru dmk yena nadanthuchu naalaiku admkku varum sir, pls]]]
நிச்சயமாகச் சொல்கிறேன்.. வருகைக்கு நன்றி..!
ஹா.. ஹா.. வரட்டும் பார்க்கலாம் நண்பரே..! ஏதாவது பிரச்சினையெனில் உங்களை அழைக்கிறேன்..!
Saravanan
இழுத்துச்சென்ற பிறகு யாரைக்கூப்பிட முடியும் ? வாய்பேச முடியாமல் அடித்துநொறுக்கி விடுவார்களே!
ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.
தமிழ்ப் பதிவுலகம் இன்று வரை அரசியல்வாதிகளால் கவனிக்கப்படவில்லை. தனிநபர்கள் மட்டுமே சைபர் க்ரைமுக்குப் போகிறார்கள். அரசியல்வாதிகள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களைத்தான் கவ்னிக்கிறார்கள். எனவேதான் பத்திரிக்கையாளர்களை விரட்டோ விரட்டென்று விரட்டினார் ஜெ. இந்து ராம் உட்பட.
உ.த, சவுக்கு, வினவு போன்றோர் கருனானிதியின் ஆட்சியைப்பற்றி எழுதலாம். ஜெயைப்பற்றி எழுத முடியாது. ஜெயின் கவன்ம் பட்டால் அதோ கதி. வினவு எழுத்தாளர்கள் ஜெயிலுக்க்ப்போக எப்போதும் தயார். ஏனெனில் அவர்கள் வெறும் வலைபதிவோடு நிற்கவில்லை. தெருப் போராட்டமும் செய்து வருகிறார்கள்.
ஜெ நாளைக்கொரு செய்திதருவார். பதிவுகளுக்குப் பஞசமே இல்லை உ .த கருனானிதியப் பிடித்த பிடி ஜெயைப்பிடிக்க முடியுமா ? .
இனிவரும் காலத்தில் இப்பதிவில் நிலையென்ன அம்மாவின் ஆட்சியில்? என்று பார்க்கலாம். நல்ல வேடிக்கை காத்திருக்கிறது. ஜெயுக்கு ஆதரவாக எழுதினால் தப்பிக்கலாம்.
சிம்மக்கல் நண்பரே..!
அதையும் பார்த்துக் கொள்ளலாம்..! எது வந்தாலும் சட்டப்படி எதிர்கொள்ள நான் தயார்..!
Post a Comment