வாக்காளர்களே சிந்திப்பீர்..! தி.மு.க.வின் ஊழல் சாம்ராஜ்யம்..!

12-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1. தங்களுடைய குடும்பத்தில் நடந்த சண்டைக்காக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனை ஆரம்பித்து நடத்துகிறேன் என்று சொல்லி 400 கோடி ரூபாயை செலவு செய்துவிட்டு குடும்பப் பிரச்சினை முடிந்ததும் அல்லேலுயா பாடி கேபிள் டிவி கார்ப்பரேஷனின் கதையை முடித்த கருணாநிதிக்கா உங்களது ஓட்டு..? இந்த 400 கோடி காசும், அவருடைய அப்பன் வீட்டுக் காசில்லை மக்களே.. என் பணம்.. உங்களது பணம்.. நம்முடைய பணம்..!

2.
மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது சென்னை மாநகரில் உள்ள குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் அனைத்தையும் புதுப்பிப்பது என்று சொல்லி 60 கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டிக் கொண்டு போனதை லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலமாக ஒன்றுமே இல்லாமல் ஆக்கிக் கொண்ட தற்போதைய துணை முதல்வர் ஸ்டாலினுக்காக உங்களது ஓட்டு..? சிந்திப்பீர் மக்களே..!

3. 2003-ல் இருந்து புதிய பென்ஷன் திட்டத்திற்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து உருவப்பட்ட 10 சதவிகிதப் பணம் இன்றைக்கு 6000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது.. இந்தப் பணம் தற்போது எங்கே போனது என்றுதான் தெரியவில்லை..! அரசு மூலமாகவே பல்வேறு துறைகளின் சுருட்டல்களுக்கு திசை திருப்பப்பட்டு பென்ஷன் தொகையே கிடைக்காமல் இறைவனடி போய்ச் சேர்ந்துவிட்டார்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள். இந்த நிர்வாகத் திறமையற்ற தி.மு.க. அரசுக்கா உங்களது ஓட்டு..?

4. தாங்கள் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக பன்றி காய்ச்சல் நோயை ஊக்குவித்த அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தியது இவர்கள்தான்..! எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் நடந்த கோல்மால்களை தணிக்கைத் துறை சுட்டிக் காட்டியும் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமல் வைத்திருக்கும் இந்த திறமையற்ற ஆட்சிக்கா உங்களது ஆதரவு..?

5. மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதாகச் சொல்லி முறையற்ற விதத்தில் டெண்டர்களை அறிவித்தும், அதனை ஏற்றும் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி தங்களது வாரிசுகளுக்கு லஞ்சத்தைக் கூட்டி இந்த ஐந்தாண்டுகளின் கணக்குப்படி 1000 கோடியை முழுங்கியிருக்கும் இந்தத் திருடர்களுக்கா உங்களது ஓட்டு.. சிந்திப்பீர் மக்களே..!

6. தன் தள்ளுவண்டியைத் தள்ளுபவரில் இருந்து வீட்டுச் சமையலறையில் கத்திரிக்காய் நறுக்குபவர் முதற்கொண்டு அனைவரையும் அழைத்து அவருக்கு சமூக சேவகர் பேட்ஜ் குத்தி வீட்டு வசதி வாரிய வீடுகளை வாரிக் கொடுத்த வள்ளல் இந்த முதல்வர்தானே..! வாங்கிய வீடுகளை மிகக் குறுகிய காலத்தில் விற்று பணமாக கிடைத்ததில் கமிஷனாக சில கோடிகளை அள்ளியதும் தலைவரின் குடும்பம்தானே..? இந்தக் குடும்பத்திற்கா உங்களது ஓட்டு..?

7. பெரம்பலூரில் எம்.ஆர்.எஃப் நிறுவனத்துக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் பல அப்பாவிகளை மிரட்டியும், பொய் வழக்குப் போட்டும், சித்ரவதை செய்தும், அடித்து உதைத்தும் பாடாய்ப்படுத்தி தான் கோடீஸ்வரரான இந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா குடியிருக்கும் இந்தக் கட்சியா நமக்கு வேண்டும்..?

8. பெரம்பலூரில் அமையவிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக பொதுமக்கள் நிலங்களை டிட்கோ மூலமாக குறைந்தவிலைக்கு விற்று அதனை அதிக விலைக்கு நிறுவனங்களுக்கு விற்று, கோடியில் லாபம் பார்த்த ராசாவின் பாசத்துக்குரிய இந்தத் திமு.க.வை தோற்கடிக்க வேண்டாமா தோழர்களே..?

9. மத்தியச் சுற்றுப் புறச் சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்காமலேயே எக்கோ பார்க் விழாவுக்கெல்லாம் ஏற்பாடு செய்த கடமையுணர்ச்சி தவறாத ஊழியர்களைக் கொண்ட இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா..? முதலில் அந்த நிலத்தை முறைப்படி இன்னமும் வாங்காமலேயே அந்த இடத்தில் கட்டிடம் கட்ட முனையும் இந்த முட்டாள்களின் ஆட்சியை முறியடிக்க வேண்டாமா..?

10.  தனது நிர்வாகத் திறமையின்மையால் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தை பல்வேறு வங்கிகளில் 1800 கோடி ரூபாய் அளவுக்கு கடனை வாங்க வைத்து, கடன்களை அடைக்க முடியாமல் பெருமைக்கு வக்கீல் நோட்டீஸ்களை வாங்கி வைத்துக் கொண்டு பொருட்களை கொள்முதல் செய்வதில் உடன்பிறப்புக்களுக்கு கொள்ளை லாபம் பார்க்க வழி வகை செய்திருக்கும் இன்றைய தி.மு.க. அரசு போய்த்தானே தீர வேண்டும்..!

11. தி.மு.க.வின் நம்பர் ஒன் புரோக்கரான ராசா, சென்னை அருகே மினி துறைமுகம் அமைக்க விரும்பி மகாபலிபுரம் சாலையில் கொள்ளையடித்த பணத்தில் பல கோடிகளை செலவழித்து நிலங்களை வாங்கியும், சில இடங்களில் நிலங்களை பிடுங்கியும், 10000 கோடி செலவில் தி்ட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறாரே..! இவ்வளவு பணம் இந்த ராசாவுக்கு எங்கேயிருந்து வந்தது என்று நாம் யோசித்துப் பாருங்கள்..!  எல்லாம் கொள்ளையடித்ததில் வந்ததுதானே..? ச்சும்மா விடலாமா இவர்களை..?

12. மருத்துவ சேவைக் கழகத்தின் சார்பில் தரம் குறைந்த மருந்துகளையும், தடை செய்யப்பட்ட மருந்துகளையும் விலைக்கு வாங்கி ஊழலில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களைக் காப்பாற்றி வைத்திருக்கும் இந்த நிர்வாகத் திறமையற்ற ஆட்சியை விரட்டத்தானே வேண்டும்..!

13. கலர் டிவி வாங்குவதற்காக ஆதி திராவிடர் நல நிதியில் இருந்து 74 கோடி ரூபாயைச் சுரண்டியெடுத்து பயன்படுத்தியிருக்கும் ஆதிதிராவிட மக்களின் நலனுக்காக பாடுபடும் உத்தமசீலர்கள்தான் இந்த தி.மு.க. ஆட்சியாளர்கள்.. இதே கலர் டிவி கொள்முதலில் வீடியோகான் நிறுவனத்திற்கு அளவுக்குக அதிகமான மு்ன்னுரிமை கொடுத்து மக்கள் பணத்தை கரியாக்கியிருக்கும் இந்த ஆட்சியை விரட்ட வேண்டாமா..? இவர்கள்தான் அடுத்து மிக்ஸியும், கிரைண்டரும் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்..? இவர்களே அடுத்து வந்தால் எவ்வளவு சுருட்டுவார்கள்..? யோசியுங்கள் மக்களே..!
 

14. கலர் டிவிகளை மக்களுடைய பணத்திலேயே வாங்கி, அதனை இலவசமாக வழங்குவதாக ஏதோ தன்னை கர்ணன் ரேஞ்சுக்கு உயர்த்திப் பேசும் இந்தக் கயவன் கருணாநிதி, இந்த கலர் டிவியை மிக அதிகமாக வீடுகளுக்கு வழங்குவதன் மூலம் அந்த மக்கள் மாதந்தோறும் பெறும் கேபிள் டிவி இணைப்பின் மூலம் வருடத்திற்கு 3000 கோடி ரூபாயை தனது குடும்பத்திற்காக மட்டுமே பெறுகிறார் என்பதை ஏன் மக்களே சிறிதுகூட உணர மறுக்கிறீர்கள்.. இப்போதும் நீங்கள் தெளிவடையவில்லையெனில் உங்களுக்கான இடம் சுடுகாடு மட்டும்தான்..!

15. தனக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் அமர்த்த வேண்டி அவர்களுடைய சர்வீஸ் புக்கிலேயே திருத்தம் செய்து கில்லாடித்தனம் செய்திருக்கும் இந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாக லட்சணத்திற்கு ஒரு குட்டு வைத்து இவர்களை விரட்டியடியுங்கள் தோழர்களே..!

16. கண் சிகிச்சை முகாம் என்ற பெயரில் திருச்சி புனித ஜோஸப் கண் மருத்துவனையால் 66 ஏழை கிராமத்து மக்கள் கண் பார்வையை இழந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் பிச்சைக் காசாக ஒரு லட்சத்தைத் தூக்கி வீசியது தி.மு.க. அரசு. இதே ஜோஸப் கண் மருத்துவமனைக்குத்தான் இத்திட்டத்திற்கான மொத்தச் செலவில் பாதியைத் தூக்கிக் கொடுத்திருக்கிறது தி.மு.க. அரசு. ஏன் தமிழ்நாட்டில் வேறு எங்குமே கண் மருத்துவமனைகளே கிடையாதா..? எவ்வளவு கமிஷன் கை மாறியிருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்..!




17.   ஒரு காலத்தில் தனது மகன் மு.க.முத்து ஹீரோவாக நடித்த சினிமாவை விலைக்கு வாங்கித் தன்னைக் காப்பாற்றிய விநியோகஸ்தர்கள் என்ற நன்றிக் கடனுக்காக, மக்கள் பணமான 1500 கோடி ரூபாயை இன்ஸூரன்ஸ் பணியில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத ஸ்டார் ஹெல்த் இன்ஸூரன்ஸுக்கு அள்ளிக் கொடுத்து, அதில் கமிஷனை மட்டும் வக்கனையாக சுருட்டிக் கொண்டிருக்கும் இந்த தாத்தாவை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டாமா..?
 

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தவிர மேற்கண்ட ஊழல்களும் இந்த ஆட்சியில்தான் தி்ட்டமிட்டு நடந்தேறியுள்ளது..!

இது அத்தனைக்கும் இவர்கள் நமக்கு பதில் சொல்ல வேண்டியது கட்டாயம்.

அந்த நிலைமைக்கு இவர்களைத் தள்ள வேண்டியதும் நமது கடமை..!

மறக்க வேண்டாம் தமிழக மக்களே..!

நாளைய வாக்குப் பதிவில் ஆளும் கட்சி கூட்டணியை எதிர்த்து வாக்களியுங்கள்..!

இந்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டால் அடுத்த முறை 3.50 லட்சம் கோடி ஊழலை நமது வாரிசுகள் சந்திக்க நேரிடும்..!

சிந்திப்பீர்..! செயல்படுவீர்..!

33 comments:

Bala said...

http://ramaniecuvellore.blogspot.com/2011/04/blog-post_12.html

ஐந்தாண்டு திமுக ஆட்சி பற்றி ஏராளமாக முன்னரே எழுதியுள்ளோம்.
ஊழலில் சிகரம் தொட்டது மட்டுமல்ல, அது பற்றிய விமர்சனங்களை
ஜாதியைச்சொல்லி திசை திருப்ப பார்த்த ஆட்சி. ஒரு அமைச்சர்
சிறைக்கு சென்ற பிறகும், மனைவியையும் துணைவியின் மகளையும்
மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த பிறகும் முழுப் பூசணி அல்ல பூசணித் தோட்டத்தையே ஒரு கவளம் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.


தொலைக்காட்சி கொடுததால் குடும்பத்திற்கு வருமானம்,
காப்பீட்டுத் திட்டம் என்றால் குடும்பத்திற்கு வருமானம்,
அரிசி வழங்கினால் கடத்தல் மூலம் வருமானம்,
குடும்பத்தில் அனைவருக்கும் பதவி,
அதனால் அமைச்சர் பெருமக்களின் வாரிசுகளுக்கும் வாய்ப்பு,
முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரச்சினை என்றால்
முதலாளிகளுக்கு ஆதரவாக,
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் மோதல் என்றால்
ஆதிக்க சக்திகளின் பக்கமாகவே
ஆரவார முழக்கங்கள் அரைகுறையாக நின்று போனாலும் அதைப்
பற்றி சிறிதும் கவலை கொள்ளாத
அரசாக மட்டுமே திமுக அரசு இருந்தது. விமர்சனத்தை சகித்துக் கொள்ள இயலாத அரசு, சுய நலமா, மக்கள் நலமா என்றால் சுய நலம் மட்டுமே
மேலோங்கிய ஒரு அரசு.

இவர்கள் மீண்டும் வந்தால் இவர்களின் தவறுகளை மக்கள் அங்கீகரித்ததாகக் கருதி இன்னும் அராஜகமாக ஆட்சி செய்வார்கள்.

Unknown said...

நண்பரே இந்த கட்டுரையை நீங்கள் சிந்தித்து வாக்களிக்கும் மக்களிடம் எழுதியிருக்கலாம்.. நமது மக்கள் எந்த கடமையுணர்ச்சியும் இல்லாதவர்கள். வாக்களிப்பது என்பது மிக முக்கியமான விஷயம் என்பதை நமது அரசியல் பன்னாடைகள் கேவலப்படுத்தி விட்டார்கள். எவ்வாறாக இருப்பினும் உங்கள் தொடர் முயற்சிக்கும் சேவைக்கும் எனது வணக்கங்கள்.

ஸ்ரீகாந்த் said...

உங்களுடைய இந்த கடின முயற்சி வெற்றி பெற மஹா மஹரிஷி அவர்கள் நல்லாசி அருள்வார்.

Thirumalai Kandasami said...

ஒரு வருத்தமான செய்தி..பணம் விளையாடுகிறது..நேற்று இரவு மட்டும் பல கோடிகள் கொடுக்கப்பட்டிருக்கு..DMK வெல்லலாம்
:(

khaleel said...

அட ச்சே என்னவோ அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளர் போல பேசுகிறிர்கள்

San said...

Dear TT
All these years i voted for DMK.This is the first time i am going to change.I dont know whom to vote but definetly not DMK this time.

ராஜ நடராஜன் said...

கருணாநிதி கூட மல்லுக்கட்ட சரியான ஆள் நீங்கதானுங்ண்ணா:)

ஜெயலலிதா செக்ரட்டரிதான்!

ராஜ நடராஜன் said...

உங்களைப் பொறுத்தவரையில் ஜனநாயகத்துக்கும் ஊழலுக்குமான போட்டியே.

தி.மு.க திமிங்கலமென்றால் அ.தி.மு.க சுறா.சுறாவை தூண்டில் போட்டு அமுக்கி விடலாம்.

எனவே உங்கள் ஜனநாயகப் போராட்டம் வென்றால் தமிழகத்துக்கு மாற்று அரசியலுக்கான வழி அமையும்.

இணையத்தைப் பொறுத்த வரையில் உங்களைப் போன்றவர்களின் பங்கு மகத்தானது.வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//Bala said...

இவர்கள் மீண்டும் வந்தால் இவர்களின் தவறுகளை மக்கள் அங்கீகரித்ததாகக் கருதி இன்னும் அராஜகமாக ஆட்சி செய்வார்கள்.//

அராஜகம் செய்கிறார்களோ அடக்கி வாசிக்கிறார்களோ தவறுகளுக்கான அங்கீகாரம் என்பது தமிழக அரசியல் வரலாற்றில் பதியப்படும்.

beer mohamed said...

http://athiradenews.blogspot.com/2011/04/blog-post_13.html

தமிழக தேர்தல் கடைசி நேர சர்வே முடிவு விவரம்

Unknown said...

ellaam sarithaan.sasikalaa onnume seyyaama kodi kodiya alluratha vida,etho seythuvittu aalurathu paravayilla.enkal vottu DMK virke.

குரங்குபெடல் said...

Well Attack
Thanks

Unknown said...

நாம் தி.மு.க வினரின் ஊழல்களை பட்டியலிட்டால் சில $%^&**(&*& நீ அ.தி.மு.க காரனா என்கிறது...

மொதல்ல மேலே சொன்ன விசயங்கள் நடக்கலைன்னு மறுத்து ஆதாரம் கொடுங்க பாப்போம்.. அதை விடுத்து மைனஸ் ஓட்டு குத்துவது கூட சீப்ப எடுத்து ஒளிச்சு வைக்கிறது போலத்தான்..

அக்கப்போரு said...

இதை எல்லாம் விட முக்கியம் நம்மை இளக்காரமாய் நினைக்கும் காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். இல்லையேல் இன்னும் சற்று நாட்களில் சர்தார்ஜி ஜோக்ஸ் போல மதராசி ஜோக்ஸ் அனுப்பி தமிழனைக் காமடி பீசாக்குவான் வடநாட்டானும், இங்குள்ள காங்கிரஸ்காரனும்.

அக்கப்போரு said...

இதை எல்லாம் விட முக்கியம் நம்மை இளக்காரமாய் நினைக்கும் காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். இல்லையேல் இன்னும் சற்று நாட்களில் சர்தார்ஜி ஜோக்ஸ் போல மதராசி ஜோக்ஸ் அனுப்பி தமிழனைக் காமடி பீசாக்குவான் வடநாட்டானும், இங்குள்ள காங்கிரஸ்காரனும்.

உண்மைத்தமிழன் said...

[[[Bala said...

இவர்கள் மீண்டும் வந்தால் இவர்களின் தவறுகளை மக்கள் அங்கீகரித்ததாகக் கருதி இன்னும் அராஜகமாக ஆட்சி செய்வார்கள்.]]]

உண்மைதான்.. இவர்களை கொஞ்ச நாளைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலக்கி வைப்பதுதான் தமிழகத்துக்கு நல்லது..!

உண்மைத்தமிழன் said...

[[[kama said...

நண்பரே இந்த கட்டுரையை நீங்கள் சிந்தித்து வாக்களிக்கும் மக்களிடம் எழுதியிருக்கலாம். நமது மக்கள் எந்த கடமையுணர்ச்சியும் இல்லாதவர்கள். வாக்களிப்பது என்பது மிக முக்கியமான விஷயம் என்பதை நமது அரசியல் பன்னாடைகள் கேவலப்படுத்தி விட்டார்கள். எவ்வாறாக இருப்பினும் உங்கள் தொடர் முயற்சிக்கும் சேவைக்கும் எனது வணக்கங்கள்.]]]

ஊதுற சங்கை நாம ஊதுவோம் ஸார்.. கேட்டுத் தெளிஞ்சா அவங்களுக்கு நல்லது. இல்லைன்னா நாசமாப் போகட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

உங்களுடைய இந்த கடின முயற்சி வெற்றி பெற மஹா மஹரிஷி அவர்கள் நல்லாசி அருள்வார்.]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[thulirgal said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html]]]

நன்றி நண்பரே.. படித்துவிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thirumalai Kandasami said...

ஒரு வருத்தமான செய்தி. பணம் விளையாடுகிறது. நேற்று இரவு மட்டும் பல கோடிகள் கொடுக்கப்பட்டிருக்கு. DMK வெல்லலாம் :(]]]

கேள்விப்பட்டேன். இதுதான் விதி என்றால் சந்தோஷமாக அதனை ஏற்றுக் கொள்வோம்.. வேறென்ன செய்வது..?

உண்மைத்தமிழன் said...

[[[khaleel said...

அட ச்சே என்னவோ அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல பேசுகிறிர்கள்..]]]

அப்படியா..? சந்தோஷம்..!

உண்மைத்தமிழன் said...

[[[San said...

Dear TT

All these years i voted for DMK. This is the first time i am going to change. I dont know whom to vote but definetly not DMK this time.]]]

உங்களது தொகுதி மக்களால் எளிதில் அணுகக் கூடியவர் யாரோ, அவருக்கு ஓட்டளியுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

கருணாநிதிகூட மல்லுக்கட்ட சரியான ஆள் நீங்கதானுங்ண்ணா:)
ஜெயலலிதா செக்ரட்டரிதான்!]]]

ஓகே.. ஓகே.. ஓகே.. இப்படிச் சொல்லிட்டு அங்க ஓட்டை மாத்திக் குத்திராதீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

உங்களைப் பொறுத்தவரையில் ஜனநாயகத்துக்கும் ஊழலுக்குமான போட்டியே.

தி.மு.க திமிங்கலமென்றால் அ.தி.மு.க சுறா. சுறாவை தூண்டில் போட்டு அமுக்கி விடலாம்.

எனவே உங்கள் ஜனநாயகப் போராட்டம் வென்றால் தமிழகத்துக்கு மாற்று அரசியலுக்கான வழி அமையும்.

இணையத்தைப் பொறுத்தவரையில் உங்களைப் போன்றவர்களின் பங்கு மகத்தானது. வாழ்த்துக்கள்.]]]

நன்றிகள் ஸார்.. இந்த எண்ணத்தை வாக்குப் பதிவன்று உங்களது பொன்னான வாக்குகளை தி.மு.க. கூட்டணிக்கு எதிராகச் செலுத்தி தெரிவியுங்களேன்..! சந்தோஷப்படுவேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//Bala said...

இவர்கள் மீண்டும் வந்தால் இவர்களின் தவறுகளை மக்கள் அங்கீகரித்ததாகக் கருதி இன்னும் அராஜகமாக ஆட்சி செய்வார்கள்.//

அராஜகம் செய்கிறார்களோ அடக்கி வாசிக்கிறார்களோ தவறுகளுக்கான அங்கீகாரம் என்பது தமிழக அரசியல் வரலாற்றில் பதியப்படும்.]]]

நிச்சயமான உண்மை..!

உண்மைத்தமிழன் said...

[[[beer mohamed said...

http://athiradenews.blogspot.com/2011/04/blog-post_13.html

தமிழக தேர்தல் கடைசி நேர சர்வே முடிவு விவரம்]]]

கடைசி 2 நாட்களில் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள் ஸார்..! அதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[thamizhan said...

ellaam sarithaan. sasikalaa onnume seyyaama kodi kodiya alluratha vida, etho seythuvittu aalurathu paravayilla. enkal vottu DMK virke.]]]

சரி.. உங்களது விருப்பம். நான் ஒன்றும் செய்வதற்கில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[udhavi iyakkam said...

Well Attack
Thanks]]]

மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

நாம் தி.மு.க வினரின் ஊழல்களை பட்டியலிட்டால் சில $%^&**(&*& நீ அ.தி.மு.க காரனா என்கிறது...

மொதல்ல மேலே சொன்ன விசயங்கள் நடக்கலைன்னு மறுத்து ஆதாரம் கொடுங்க பாப்போம்.. அதை விடுத்து மைனஸ் ஓட்டு குத்துவதுகூட சீப்ப எடுத்து ஒளிச்சு வைக்கிறது போலத்தான்..]]]

ஹா.. ஹா.. செந்தில் இதையெல்லாம் உடன்பிறப்புகள் யோசிக்கவா போறாங்க.. யோசிக்கிறவங்களா இருந்தா இவங்க ஏன் உடன்பிறப்புக்களா இருக்காங்க.. விடுங்க.. விடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை ராஜா said...

இதை எல்லாம்விட முக்கியம் நம்மை இளக்காரமாய் நினைக்கும் காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். இல்லையேல் இன்னும் சற்று நாட்களில் சர்தார்ஜி ஜோக்ஸ் போல மதராசி ஜோக்ஸ் அனுப்பி தமிழனைக் காமடி பீசாக்குவான் வடநாட்டானும், இங்குள்ள காங்கிரஸ்காரனும்.]]]

இப்பவே அதைத்தான செஞ்சுக்கிட்டிருக்கானுக..! பண வெறி பிடித்த இரண்டு தமிழர்களிடையே நாம்தான் மாட்டிக் கொண்டு முழிக்கிறோம்..!

Prakash said...

எல்லா பார்பணர்களுக்கும் மாறன் பிரதர்ஸ்ன் திறமையான் போட்டியை சமாளிக்க முடியவில்லை என்பதினாலேயே இந்தக் கொலை வெறி, அதற்கு வழக்கம் போல் பலியாகும் நம்ப மக்கா.

ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், யார் எதிர்த்தாலும் மாறன் பிரதர்ஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறுவதை தடுக்க முடியாது.

அம்பானி குசராத்தில் வளர்ந்தால் குசராத்திகள் பெருமை கொள்வார்கள் ஆனால் தமிழனோ?

தினமலரோ, தினமனியோ வளரவேண்டும் என்பதற்காக தினகரனை தடுக்க முடியாது.

பார்பணர்களின் பிடியிலிருந்து முதலில் ஊடகங்களை மீட்க வேண்டும் எப்பதே என் போன்றவர்களின் ஆவல். அதை மீட்பது ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவன் எனும்போது மிகப்பெருமை.

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

எல்லா பார்பணர்களுக்கும் மாறன் பிரதர்ஸ்ன் திறமையான் போட்டியை சமாளிக்க முடியவில்லை என்பதினாலேயே இந்தக் கொலை வெறி, அதற்கு வழக்கம் போல் பலியாகும் நம்ப மக்கா.

ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், யார் எதிர்த்தாலும் மாறன் பிரதர்ஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறுவதை தடுக்க முடியாது.

அம்பானி குசராத்தில் வளர்ந்தால் குசராத்திகள் பெருமை கொள்வார்கள் ஆனால் தமிழனோ?

தினமலரோ, தினமனியோ வளரவேண்டும் என்பதற்காக தினகரனை தடுக்க முடியாது.

பார்பணர்களின் பிடியிலிருந்து முதலில் ஊடகங்களை மீட்க வேண்டும் எப்பதே என் போன்றவர்களின் ஆவல். அதை மீட்பது ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவன் எனும்போது மிகப் பெருமை.]]]

பிரகாஷ்..

உங்கள் நம்பிக்கை வாழ்க..

இந்த ஒரு நம்பிக்கையுடன் கூடவே இறுதிவரையில் வாழ்ந்துவிடுங்கள். உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது..!

Unknown said...

ஊழல் பெர்ச்சாழிகளே ! தமிழ் நாடு உன் குடும்ப சொத்தா ?