எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

21-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் அண்ணன் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது :

முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்​திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு,  முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.

தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ்  பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.

சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வை​யிடக் கிளம்பியது.


போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயல​​லிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்​கொள்ள​வே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

முதல்வரின் நெருங்கிய உறவினர்​களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்​படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்​​படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்​டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.

திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.



வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!

கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்​கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடி​மட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!

ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.

இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.

முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...

டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கி​யடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடிய​வில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற,  போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.


சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!

ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.

பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.

டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு,  அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.

உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்!

(தொடரும்)

நன்றி : ஜூனியர்விகடன்-24-04-2011

53 comments:

Unknown said...

எலக்‌ஷனுக்கு அப்புறம் இப்படி காப்பி பதிவு எழுதி என்ன பயன்?

செம்மலர் செல்வன் said...

அண்ணே,காரணம் தெரியவில்லை. இதைப் படிக்க எரிச்சலாக இருக்கிறது. சுஜாதாவை பற்றிய உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது.

Unknown said...

சனியன் ஒழிஞ்சது

Anonymous said...

இந்த எம்.ஜி.ஆர் செத்து போனதில் ஒரு சந்தோசம் இருந்தாலும், இன்னும் இந்த அரசியல் முட்டாளை (கவனிக்கும், "அரசியல் முட்டாள்", சினிமாவில் ஒரு வெற்றி அடைந்த கலைஞன்தான்) பாராட்டி சீராட்டி வரும் முட்டாள்களை என்ன செய்வது?

Unknown said...

கலக்கிட்டீங்க boss. உங்க கமெண்ட் சூப்பர்

ரிஷி said...

கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ரிஷி said...

சங்கரன்கோவில் அருகே பொறியாளர் இளைஞன் ஒருவன் இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து தற்கொலை செய்திருக்கிறான். நல்லவேளை! பதிவுலகம் இதற்காகப் பற்றி எரியவில்லை..! அச்சு ஊடகங்களிலும் ஐந்தாம்தர செய்தியாகவே வந்தது.

தியாகம்னா என்ன.. அரைவேக்காட்டுத்தனம் என்றால் என்ன என்று நம் இளைஞர்களுக்குப் புரியவைக்கவேண்டும்!

IKrishs said...

ரிஷி said...

சங்கரன்கோவில் அருகே பொறியாளர் இளைஞன் ஒருவன் இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து தற்கொலை செய்திருக்கிறான். நல்லவேளை! பதிவுலகம் இதற்காகப் பற்றி எரியவில்லை..! அச்சு ஊடகங்களிலும் ஐந்தாம்தர செய்தியாகவே வந்தது.

தியாகம்னா என்ன.. அரைவேக்காட்டுத்தனம் என்றால் என்ன என்று நம் இளைஞர்களுக்குப் புரியவைக்கவேண்டும்!///

Nach!

சசிகுமார் said...

என்ன சார் திரட்டிகளில் இணைக்க வில்லையா

Anonymous said...

"அடி​மட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு..."

அதுனாலதான் அவுனுங்களை அடிமட்டத்திலேயே வச்சிருந்தாரு இந்த எம்.ஜி.ஆர் என்னும் அரசியல் கேடி.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

மிஸ்டர் ,சாரு புழ்கிஞ்ச்சாத பொது இடங்களில் பகேய்கம பேச கற்றுகொள்ளுங்கள்.....

Arivazhagan said...

இனி உங்கள் காப்பி பேஸ்ட் இடுகைகளை படிக்கப்போவதில்லை.

Arivazhagan said...

//செம்மலர் செல்வன் said...
அண்ணே,காரணம் தெரியவில்லை. இதைப் படிக்க எரிச்சலாக இருக்கிறது. சுஜாதாவை பற்றிய உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது.//
Same blood.

Sunantha said...

எம்ஜியார் என்னவோ நல்லவருதான்..ஆனா அவரு செஞ்ச நல்லது/புண்ணியம் எல்லாம் ஜெயலலிதாவ கொண்டாந்து தமிழன் தலையில கட்டிட்டு போனதுல கரஞ்சு போச்சு ...போயும் போயும் இத கொண்டுவந்து வாரிசா வுட்டுட்டு போனாம்பாரு அந்த மனுசன்...

Kite said...

எம்.ஜி.ஆர் இறந்தபோது எனக்கு ஆறு வயது. ஒரு நாள் காலை படுக்கையிலிருந்து எழுந்து பார்த்தபோது குன்னக்குடி வைத்தியநாதன் தொலைக்காட்சியில் சோக கீதம் வாசித்து கொண்டிருந்தார். அப்போதெல்லாம் தலைவர்கள் இறந்தால் ஒரு வாரத்துக்கு துக்கம் என்ற பெயரில் தூர்தர்ஷனில் அனைத்துக் கலைஞர்களும் சோக கீதம் வாசித்து, சோகப் பாடல்கள் பாடுவார்கள். இறந்தவர் நடிகராகவும் இருந்ததால் அவருடைய கலைப்படைப்பு என்ற முறையில் மலைக்கள்ளன் திரைப்படம் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது. அது ஒன்றுதான் அனுகூலம்.

அவருடைய இறுதி ஊர்வலத்தைத் தொலைக்காட்சியில் பார்த்த நினைவுள்ளது. அப்பொழுது பலர் மாரடைப்பிலும், தற்கொலை செய்து கொண்டும் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒப்பனை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட ஒரே மனிதர் எம்.ஜி.ஆர் மட்டும்தான் என்று கருதுகிறேன். இருவர் படத்தில் மணிரத்னம் இதை அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.

மற்றபடி எனக்கு எம்.ஜி.ஆர் மேல் அரசியல், திரைத்துறை என்று இரண்டிலுமே பெரிய மரியாதை இருந்ததில்லை. தமிழ்நாட்டில் உயர்கல்வி மேம்பாட்டுக்குக் குறிப்பிடத்தக்க பணிகள் செய்துதான் அவரின் மிகப்பெரும் சாதனை. அந்த அடித்தளம் சிறப்பாக இருந்ததால் அவர் காலத்திற்குப் பின் தமிழ்நாட்டில் பல நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்தன.

மத்திய அரசோடு நல்ல உறவிருந்தும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அவர் பெரிய பணிகள் செய்ததாகத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரித்தது அப்போதைய இந்திய அரசின் கொள்கை அதற்குச் சாதகமாக இருந்ததால். எம்.ஜி.ஆரே ராஜீவ் கொலைக்குப் பின் உயிரோடு இருந்து முதல்வராக இருந்திருந்தால் தொடர்ந்து ஈழத் தமிழர்களை ஆதரித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

ரவுடிகளைக் கொண்டு அரசியல் செய்து அவர்களைச் சமுதாயத்தில் பெரிய ஆளாக்கி விடுவது இவர் காலத்தில் ஆரம்பித்தது என்ற கருத்து எனக்குண்டு.

வலிப்போக்கன் said...

இன்னும் எத்தனை வருசத்துக்குதான் இப்படி சீன்காட்டி குப்பை கொட்டுவிங்க

Trails of a Traveler said...

ஒருவர் இறந்த பின்னும் அவரை நினைக்காமல் இருக்க முடியவில்லை என்பது அவரது சாதனை தான்!

Ram

உண்மைத்தமிழன் said...

[[[jaisankar jaganathan said...

எலக்‌ஷனுக்கு அப்புறம் இப்படி காப்பி பதிவு எழுதி என்ன பயன்?]]]

அது அவர்கள் பத்திரிகை விற்பனைக்காக எழுதும் மறுபிரசுரம். நமக்கு ஒரு தகவல் களஞ்சியம்..! என்ன இருந்தாலும் அன்றைய செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்தானே..?

உண்மைத்தமிழன் said...

[[[செம்மலர் செல்வன் said...

அண்ணே, காரணம் தெரியவில்லை. இதைப் படிக்க எரிச்சலாக இருக்கிறது. சுஜாதாவை பற்றிய உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது.]]]

நம் வீட்டில் நடந்த ஒருவரின் இறுதிச் சடங்குன்னு நினைச்சுக்குங்க செல்வன்.. எரிச்சல் வராது..!

உண்மைத்தமிழன் said...

[[[boss said...

சனியன் ஒழிஞ்சது.]]]

உங்களது அன்புக்கு மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...

இந்த எம்.ஜி.ஆர் செத்து போனதில் ஒரு சந்தோசம் இருந்தாலும், இன்னும் இந்த அரசியல் முட்டாளை (கவனிக்கும், "அரசியல் முட்டாள்", சினிமாவில் ஒரு வெற்றி அடைந்த கலைஞன்தான்) பாராட்டி சீராட்டி வரும் முட்டாள்களை என்ன செய்வது?]]]

என்ன செய்றது இந்த அரசியல் முட்டாள்கள்தான் உண்மையில் மனிதர்களாக இருக்கிறார்கள்.. அதுதான் கசப்பான உண்மை சாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[jaisankar jaganathan said...

கலக்கிட்டீங்க boss. உங்க கமெண்ட் சூப்பர்]]]

உங்களுடைய இந்த பின்னூட்டமும் சூப்பர் ஜெய்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.]]]

இதுக்கும் நன்றிதான்..! படித்தாகிவிட்டதல்லவா.. அது போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

சங்கரன்கோவில் அருகே பொறியாளர் இளைஞன் ஒருவன் இலங்கை இனப் படுகொலையை எதிர்த்து தற்கொலை செய்திருக்கிறான். நல்லவேளை! பதிவுலகம் இதற்காகப் பற்றி எரியவில்லை! அச்சு ஊடகங்களிலும் ஐந்தாம் தர செய்தியாகவே வந்தது.
தியாகம்னா என்ன, அரைவேக்காட்டுத்தனம் என்றால் என்ன என்று நம் இளைஞர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்!]]]

ரிஷி..

இதில் அவரவர்க்குரிய கோணத்தில்தான் நாம் பார்க்க வேண்டும்.. எல்லாவற்றிற்கும் அடிப்படையானது தியாகம்தான்.. பகத்சிங் செய்ததும் தியாகம்தான். முத்துக்குமாரும், இந்தத் தம்பியும் செய்ததும் தியாகம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[சசிகுமார் said...

என்ன சார் திரட்டிகளில் இணைக்கவில்லையா?]]]

யாராவது இணைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கைதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...

ரிஷி said...

சங்கரன்கோவில் அருகே பொறியாளர் இளைஞன் ஒருவன் இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து தற்கொலை செய்திருக்கிறான். நல்லவேளை! பதிவுலகம் இதற்காகப் பற்றி எரியவில்லை..! அச்சு ஊடகங்களிலும் ஐந்தாம்தர செய்தியாகவே வந்தது.

தியாகம்னா என்ன.. அரைவேக்காட்டுத்தனம் என்றால் என்ன என்று நம் இளைஞர்களுக்குப் புரியவைக்கவேண்டும்!///

Nach!]]]

இதற்கான பதிலைச் சொல்லியிருக்கிறேன் கிருஷ்..! இருந்தாலும் வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...

"அடி​மட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு..."

அதுனாலதான் அவுனுங்களை அடிமட்டத்திலேயே வச்சிருந்தாரு இந்த எம்.ஜி.ஆர் என்னும் அரசியல் கேடி.]]]

நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

மிஸ்டர், சாரு புழ்கிஞ்ச்சாத பொது இடங்களில் பகேய்கம பேச கற்று கொள்ளுங்கள்.]]]

அது தெரிஞ்சிருந்தா அவர் ஏன் இப்படி பேசுறார் மணி..?

உண்மைத்தமிழன் said...

[[[அறிவழகன் said...

இனி உங்கள் காப்பி பேஸ்ட் இடுகைகளை படிக்கப் போவதில்லை.]]]

வருத்தப்படுகிறேன். அச்சு ஊடகங்களில் படித்துவிடும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு என்று நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[அறிவழகன் said...

//செம்மலர் செல்வன் said...

அண்ணே,காரணம் தெரியவில்லை. இதைப் படிக்க எரிச்சலாக இருக்கிறது. சுஜாதாவை பற்றிய உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது.//

Same blood.]]]

நோ.. எனக்கு இருவரும் ஒன்றுதான்..! இரண்டு மரணங்களும் ஒன்றுதான்..! இரண்டு அஞ்சலிகளும் ஒன்றுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sunantha said...

எம்ஜியார் என்னவோ நல்லவருதான். ஆனா அவரு செஞ்ச நல்லது / புண்ணியம் எல்லாம் ஜெயலலிதாவ கொண்டாந்து தமிழன் தலையில கட்டிட்டு போனதுல கரஞ்சு போச்சு. போயும் போயும் இத கொண்டுவந்து வாரிசா வுட்டுட்டு போனாம்பாரு அந்த மனுசன்.]]]

இதுதான்.. இது ஒன்றுதான் அவரது உண்மையான ரசிகர்களின் ஆதங்கம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

ரவுடிகளைக் கொண்டு அரசியல் செய்து அவர்களைச் சமுதாயத்தில் பெரிய ஆளாக்கி விடுவது இவர் காலத்தில் ஆரம்பித்தது என்ற கருத்து எனக்குண்டு.]]]

எதனை வைத்துச் சொல்கிறீர்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[வலிபோக்கன் said...

இன்னும் எத்தனை வருசத்துக்குதான் இப்படி சீன் காட்டி குப்பை கொட்டுவிங்க.?]]]

நோ சீன்.. ஒன்லி பார் இன்பர்மேஷன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

ஒருவர் இறந்த பின்னும் அவரை நினைக்காமல் இருக்க முடியவில்லை என்பது அவரது சாதனைதான்!

Ram]]]

ம்.. இது ஏன் மத்தவங்களுக்குப் புரிய மாட்டேங்குது..!

Mahan.Thamesh said...

நன்றி சார் , பகிர்ந்தமைக்கு

ஸ்ரீராம். said...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.

ஸ்ரீராம். said...

//"Sunantha said...

எம்ஜியார் என்னவோ நல்லவருதான். ஆனா அவரு செஞ்ச நல்லது / புண்ணியம் எல்லாம் ஜெயலலிதாவ கொண்டாந்து தமிழன் தலையில கட்டிட்டு போனதுல கரஞ்சு போச்சு. போயும் போயும் இத கொண்டுவந்து வாரிசா வுட்டுட்டு போனாம்பாரு அந்த மனுசன்."//

இவர் என்று இல்லை...நிறைய அரசியல்வாதிகள் தன் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்று பயந்தோ வேறு சில காரணங்களுக்காகவோ தனக்குப் பின் சரியான ஒரு ஆள் வர வேண்டும் என்று நினைப்பதில்லை. தான் இருக்கும்வரை சர்வாதிகாரம்தான்!

Jayadev Das said...

இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உழைத்த தன்னலமில்லாத தலைவர்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சி செய்திருக்கிறார்கள். மாநில அளவில் மக்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டிருக்கிறார்கள், வளர்ச்சித் திட்டங்கள் பலவற்றைச் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் அண்ணாதுரையை எடுத்துக் கொண்டால் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதிரியும் தெரியவில்லை, மாநிலத்திற்கு பெயர் சொல்லுமாறு திட்டங்கள் எதுவும் செயல் படுத்தியதாகவும் தெரியவில்லை. அவர் மூக்குப் பொடியைச் சொருகிக் கொண்டு கேன்சரில் போய்ச் சேர்ந்துவிட்டார் [நிம்மதியாக]. அதற்க்கப்புறம் அந்தாள் கொண்டாந்து விட்டா கருணாநிதி, எம்ஜியார். இவங்களில் முதலாமவரைப் பற்றி நான் சொல்ல ஒண்ணுமில்லை. எம்ஜியார் தான் தமிழகத்தில் இலவசத்தை அறிமுகப் படுத்திய முதல் ஆள் எனலாம். பள்ளிகளில் எல்லா மாணவர்களுக்கும் மதிய உணவு, பல்பொடி, செருப்பு, ஆதரவற்ற முதியவர்களுக்குப் பணம் என்று தொட்டதற்கெல்லாம் இலவசத்தை அள்ளிவிட ஆரம்பித்தார், சாராயக் கடையையும் திறந்துவிட்டார். அவர் ஆட்சி, இன்றைய ஆட்சியை ஒப்பிடயும் போது இவ்வளவு கேல்வமாக இல்லை என்றுதான் சொல்ல முடியுமே தவிர, நல்ல ஆட்சி என்று சொல்லுமளவுக்கு இல்லை. அப்போது, மலையாளிகள் சென்னையில் நன்றாக வேரூன்றி கொழுக்க ஆரம்பித்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம், மற்றபடி மக்களுக்கு ஒன்னும் புடுங்க வில்லை. நன்றாக எல்லோரையும் ஏமாற்றினார் அவ்வளவுதான். அவர் கூட்டிவந்து விட்ட பெருச்சாளி ஜெயலலிதா. இப்போது மொத்த தமிழகத்தியும் கூறு போட்டு பிரித்து தின்று கொண்டிருக்கிறார்கள் கருணாநிதியின் குட்டிகள். இவர்கள் எல்லோரிடமும் ஒரு ஒற்றுமை, இவர்கள் ஆட்சிக்கு வந்தது நேர்மையற்ற வழியில், [காமராஜர் போன்ற நல்லவர்கள் மீது சேற்றை வாரி இறைத்தது, பொய்யை சொல்லி ஓட்டு வாங்கியது, மக்களை முட்டால்கலாக்கியயது] , இவர்கள் எல்லோருடைய ஆட்சியிலும் யாராவது நன்றாக கொள்ளையடித்தனர். இத்தனை நடந்தும், இவர்களை ஏதோ சுதந்திரப் போராட்ட தியாகிகள் போல சித்தரிப்பதை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. யார் கண்டது, நாளைக்கு டுபாக்கூர் தமிழன் என்ற பெயரில் ஒருத்தர் வந்து, கருணாநிதி தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தலைவர், காந்தியின் மதுவில்லைக்கை அமல் படுத்தியவர், பெண்டாட்டி பிள்ளைகளுக்கு சல்லி பைசா கூட கொடுக்காமல் போகும் போது போட்டுள துணி மட்டுமே சொத்து என போனவர், தமிழன் உரிமையை இலங்கையில் நாட்டியவர்.... என்றெல்லாம் கூட பதிவு போடுவார்கள்... ஐயோ...ஐயோ....

Kite said...

ரவுடிகளைக் கொண்டு அரசியல் செய்து அவர்களைச் சமுதாயத்தில் பெரிய ஆளாக்கி விடுவது இவர் காலத்தில் ஆரம்பித்தது என்ற கருத்து எனக்குண்டு.]]]

எதனை வைத்துச் சொல்கிறீர்கள்..?//

இன்று மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் நடத்தும் சில கல்வித் தந்தைகள் அ.தி.மு.க வில் சேரும் முன் என்னவாக இருந்தனர்? இவர்களெல்லாம் நன்றாகச் சம்பாதிக்க வேண்டுமென்றுதானே கல்வித் துறையில் அரசை விட தனியாரின் பங்கை அதிகப்படுத்தினார் இவர்.

பொன் மாலை பொழுது said...

எம்.ஜி.ஆரை. தூக்கி நிறுத்தியது அவர் அறிவித்த இலவசங்களும், மற்றும் இந்த மீடியாக்கலுமே அன்றி அவர் ஒன்றும் தமிழக முன்னேற்றம் என எதையும் செய்யவில்லை. நிறைய ரவுடிகள் அவரின் ரசிகர்கள் அவர்களையெல்லாம் மிக நன்றாக வளர்த்து விட்டார் பல வழிகளில்.அவர் திடமாக இருந்த ஒரே விஷயம் ஈழத்தமிழர் விஷயமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. அவரின் காலங்களில் நிறைய தமிழ் நாட்டுக்கு வரவேண்டிய தொழில் சாலைகள் ஆந்திரா , கர்நாடகா போன்ற இடங்களுக்கு சென்றன. காமராசர் ஆட்சிக்கு பின்னர் அமைந்த திராவிட ஆட்சிகள் எதுவும் தமிழக உயர்வுக்காக எதுவும் செய்ய இயல வில்லை. எம்.ஜி.ஆரின். ஆட்சி ஒன்றும் சிறப்பாகவே இல்லை. ஏழைமக்கள் அவர் கொண்டாடியது அவர்மீதுள்ள அதீத Hero worship மேலும் அவரின் இலவச திட்டங்களே அன்றி வேறு ஒரு சிறந்த காரணம் எதுவும் இல்லை. இறந்துபோன ஒருவரை பற்றி நல்லமாதிரி மட்டுமே பேசவேண்டும் ,எழுத வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் / வழக்கம் இவரின் விஷயத்தில் மிக அதிகமாக பயன்பட்டது உண்மை. அதைத்தான் உங்களிபோன்ற நபர்களும் இன்னமும்
செய்து கொண்டுள்ளீர்கள் உண்மைத்தமிழன்.
These are all nothing but medias hype . He was just another average politician.

உண்மைத்தமிழன் said...

[[[Mahan.Thamesh said...

நன்றி சார், பகிர்ந்தமைக்கு..]]]

வருகைக்கு நன்றி தமேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.]]]

நிச்சயமாக.. இது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

//"Sunantha said...

எம்ஜியார் என்னவோ நல்லவருதான். ஆனா அவரு செஞ்ச நல்லது / புண்ணியம் எல்லாம் ஜெயலலிதாவ கொண்டாந்து தமிழன் தலையில கட்டிட்டு போனதுல கரஞ்சு போச்சு. போயும் போயும் இத கொண்டுவந்து வாரிசா வுட்டுட்டு போனாம்பாரு அந்த மனுசன்."//

இவர் என்று இல்லை. நிறைய அரசியல்வாதிகள் தன் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்று பயந்தோ வேறு சில காரணங்களுக்காகவோ தனக்குப் பின் சரியான ஒரு ஆள் வர வேண்டும் என்று நினைப்பதில்லை. தான் இருக்கும்வரை சர்வாதிகாரம்தான்!]]]

இது கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்குமே பொருந்தும்.. மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராக இன்னொருத்தரை வளர விட்டு அவர் மூலம் இருக்கிறவருக்கு செல்வாக்கை குறைப்பது கழகத் தலைவர்களின் வாடிக்கை..!

உண்மைத்தமிழன் said...

ஜெயதேவ்..

மாணவர்களுக்கு சத்துணவு, பல்பொடி, செருப்பு வழங்கியதெல்லாம் தேவையானதுதான்.. இப்போதைய ஆட்சியில் சைக்கிள் கொடுத்தார்கள். இதுவும் தேவையானதுதான்.. ஆனால் டிவி, இனி தரப் போகும் மிக்ஸி, கிரைண்டர் தேவைதானா.. யோசியுங்கள்..!

கழங்களின் தவறு காமராஜர் ஆட்சியைக் கவிழ்த்தது என்று ஒருபுறம் சொன்னாலும், காமராஜரை கவிழ்த்தது அக்கட்சியினரின் அசைக்க முடியாத திமிர்த்தனம்.. காமராஜருக்காக அத்தனையும் பொறுத்துக் கொண்ட மக்கள் பொங்கிய பொங்கலில்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது..!

இது கழகங்களின் தவறு அல்ல.. காமராஜரின் தவறும் அல்ல.. காங்கிரஸின் தவறு..!

உண்மைத்தமிழன் said...

ஜெகன்னாத் ஸார்..!

அப்போதைய ஆட்சி சூழலில் மக்களுக்கு அப்போதைக்கு எது தேவையோ அதனை வழங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்..!

காலமும், காட்சிகளும் மாறி மக்கள் பணம் சம்பாதிப்பது என்கிற ஒற்றை ஆசைக்குள் விழுந்தபோது அவர் ஆட்சியில் இல்லை. இருந்திருந்தால் நிச்சயமாக இன்றைக்கு இருந்ததை போலத்தான் கல்வித்துறையின் வளர்ச்சி மேம்பட்டிருக்கும். ஆனால் நிச்சயமாக இதனால் அவரோ, அவரது குடும்பத்தினரோ எதுவும் சம்பாதித்திருக்க மாட்டார்கள்..!

உண்மைத்தமிழன் said...

கக்கு மாணிக்கம்..

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி..!

Arivazhagan said...

//உண்மைத்தமிழன் said...
[[[அறிவழகன் said...

//செம்மலர் செல்வன் said...

அண்ணே,காரணம் தெரியவில்லை. இதைப் படிக்க எரிச்சலாக இருக்கிறது. சுஜாதாவை பற்றிய உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது.//

Same blood.]]]

நோ.. எனக்கு இருவரும் ஒன்றுதான்..! இரண்டு மரணங்களும் ஒன்றுதான்..! இரண்டு அஞ்சலிகளும் ஒன்றுதான்..!

//
நான் சொல்ல வந்தது வேறு. உங்கள் தளத்தில் உங்கள் எழுத்தை படிப்பதில் உள்ள உணர்வு மற்ற காபி பேஸ்ட் இடுகைகளில் இல்லை. மற்றபடி MGR அவர்களை பற்றி எழுதியதை குறையாக சொல்லவில்லை.

ரிஷி said...

//நான் சொல்ல வந்தது வேறு. உங்கள் தளத்தில் உங்கள் எழுத்தை படிப்பதில் உள்ள உணர்வு மற்ற காபி பேஸ்ட் இடுகைகளில் இல்லை. மற்றபடி MGR அவர்களை பற்றி எழுதியதை குறையாக சொல்லவில்லை. //

அதையே நானும் வழிமொழிகிறேன். இருந்தாலும் சரவணனும் சொல்லிவிட்டார். அவரது இந்த வலைப்பூவை ஒரு ரெக்கார்ட் தளமாகவும் பயன்படுத்துகிறார் என்பதை. அதனால் நாம் எதுவும் சொல்ல இயலாது.

உண்மைத்தமிழன் said...

[[[அறிவழகன் said...

நான் சொல்ல வந்தது வேறு. உங்கள் தளத்தில் உங்கள் எழுத்தை படிப்பதில் உள்ள உணர்வு மற்ற காபி பேஸ்ட் இடுகைகளில் இல்லை. மற்றபடி MGR அவர்களை பற்றி எழுதியதை குறையாக சொல்லவில்லை.]]]

நன்றி அறிவழகன்..

நான்தான் தவறுதலாக நினைத்துவிட்டேன். மன்னிக்கவும்..!

ஒருவேளை அப்போது எம்.ஜி.ஆரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால் வாத்தியார் சுஜாதாவுக்கு எழுதியிருந்ததை போலவே நிச்சயம் இந்த வாத்தியாருக்கும் எழுதியிருப்பேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

அதையே நானும் வழிமொழிகிறேன். இருந்தாலும் சரவணனும் சொல்லிவிட்டார். அவரது இந்த வலைப்பூவை ஒரு ரெக்கார்ட் தளமாகவும் பயன்படுத்துகிறார் என்பதை. அதனால் நாம் எதுவும் சொல்ல இயலாது.]]]

புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் ரிஷி..!

abeer ahmed said...

See who owns ning.com or any other website:
http://whois.domaintasks.com/ning.com

abeer ahmed said...

See who owns multiply.com or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com