08-04-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானமே, 'நாக்க முக்க' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஆடிக் கொண்டிருக்க.. வந்திருக்கும் இந்திய ரசிகர்கள் அனைவரும் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் ஆவலுடன் காத்திருக்கும் இதே நேரத்தில், இந்தியத் தலைநகர் டில்லியின் ஜந்தர்மந்திர் என்னுமிடத்தில் 72 வயதான ஒரு இந்தியரான முதியவர் அன்னா ஹசாரே.. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கோரி இன்றோடு 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்..!
சென்னை சேப்பாக்கத்தில் தற்போது திரண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 40000. ஆனால் டெல்லியில் ஹசாரேயைச் சுற்றிலும் வெறும் 1000 பேர் மட்டுமே இருக்கிறார்களாம். ஒரே நாடுதானாம்.. ஆனால் ஒருவரின் பிரச்சினை மற்றவருக்கு பிரச்சினையாக இல்லையாம்..! மற்றவரின் பிரச்சினை இன்னொருவருக்குத் தொல்லையாக இல்லையாம்..!
வருங்கால இளைஞர் சமுதாயம்தான் இந்த நாட்டை வழி நடத்தப் போகிறது என்று கஞ்சா விற்று அரசியல்வியாதியானவர் முதற்கொண்டு அப்துல்கலாம்வரையிலும் சொல்லிவிட்டார்கள். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் 40000 இளைஞர்களுக்கு இன்றைக்குக் கிடைக்கின்ற கிரிக்கெட் விருந்துதான் முக்கியமாக இருக்கிறது..!
இதே நேரத்தில் சன் தொலைக்காட்சியினர் தாங்கள் தயாரித்திருக்கும் மாப்பிள்ளை படத்தின் முதல் காட்சியில் திரைக்கு முன்னே இந்திய இளைஞர் சமுதாயம் குத்தாட்டம் போடுவதையும் காலையில் இருந்தே காட்டி வந்து தங்களது தேச பக்தியை பறை சாற்றி வருகின்றனர்..!
பொழுதுபோக்கு என்கின்ற வார்த்தையே இப்போது தொலைந்துபோய் அதுதான் வாழ்க்கை என்கிற அளவுக்கு ஊடகங்கள் நமது இளைஞர்களை மாயவலைக்குள் கொண்டுபோய் சிக்கவைத்துவிட்டார்கள்.
இது மறைமுகமாக நமது பிரச்சினைகளிலிருந்து நம்மை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் மறைத்துவைத்துவிட்டு, தெருவில் இருந்த பிரச்சினை நம் வீட்டிற்குள் வந்தவுடன் நம்மை அதேபோல் தூக்கிக் கொண்டு வந்து வீட்டுக்குள் விட்டுவிட்டு வெளிக் கதவைச் சாத்திச் செல்லும் தந்திரத்தை இந்திய அரசியல் வர்க்கமும், அதிகார வர்க்கமும், பணக்காரத் திமிர்த்தனமும் போட்டி போட்டுச் செய்து வருகிறார்கள்.
காலையில் கொல்கத்தாவில் இருந்து கிளம்பும்போது தான் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிப்பதாக பேட்டியளித்திருக்கும் ஷாரூக்கான், சாயந்தர வேளையில் இதே மைதானத்தில் ஷ்ரேயாவுடன் நாக்க முக்க.. நாக்க முக்க.. என்று குத்தாட்டம் போடுகிறார். ஆதரவுகளை வாயால் வழங்குவோம்..! அதே நேரத்தில் தாங்கள் சம்பாதிப்பதற்கு மட்டுமே உடல் உழைப்பை நீட்டுவோம் என்ற சுயநலத்திற்கு ஷாரூக்கான் மட்டும் விதிவிலக்கா என்ன..?
அன்ன ஹசாரே அப்படியென்னதான் சொல்கிறார்..? அரசியல்வியாதிகள்.. அதிலும் பிரதமர், ஜனாதிபதி என்று எவரையும் விட்டுவிடாமல் அனைவருமே ஊழல் வழக்குகளின் முன் நின்றால் விசாரிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது போன்ற உச்சபட்ச அதிகாரத்துடன் கூடிய லோக்பால் சட்ட மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்கிறார். இது நியாயம்தானே..?
ஆனால் அரசியல்வியாதிகளுக்கு இது எப்படி பிடிக்கும்..? அவர்களுடைய அடிமடியிலேயே கை வைத்து, அவர்களது பொழைப்பைக் கெடுக்கின்ற அளவுக்கு ஒரு சட்டத்தை அவர்களே கொண்டு வர வேண்டும் என்று கூறினால் இதனை ஏற்பதற்கு இவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.
இந்த நாட்டில் இதுவரையிலும் எத்தனையோ லஞ்ச ஊழல் வழக்குகள் அரசியல்வியாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மக்கள் முன் ஆதாரங்கள் குவித்து வைக்கப்பட்டாலும், அரசியல்வியாதிகள் தப்பித்து அதிகாரிகளை மட்டும் பகடைக்காயாக்கிவிடுகிறார்கள்..!
எத்தனை எத்தனை ஊழல்கள்..? முந்த்ரா ஊழல் தொடங்கி தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல்வரையிலும் அத்தனையிலும் அரசியல்வியாதிகளின் கை வண்ணம்தான்..!
1975-ம் ஆண்டு: லாட்டரி ஊழல்
1990-99-ம் ஆண்டு:போபர்ஸ் ஊழல்
1992-ம் ஆண்டு: ஹர்ஷத் மேத்தா ஊழல்
1993-ம் ஆண்டு: ஹவாலா ஊழல்
1996-ம் ஆண்டு: பீகார் கால்நடை தீவன ஊழல். முன்னாள் அமைச்சர் சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல் .
1999 முதல் 2001வரை பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல்
2001-ம் ஆண்டு: ராணுவத்துறையில் நடந்த ஆயுத பேர ஊழல்.
2003-ம் ஆண்டு: போலி முத்திரைத்தாள் ஊழல் (அப்துல் கரீம் தெல்கி)
2005-ம் ஆண்டு: உணவுக்காக எண்ணெய் தொடர்பான முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் சம்பந்தப்பட்ட ஊழல்.
2009ம் ஆண்டு: பல்வேறு இடங்களில் சொத்துக்களை குவித்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல்
2010-ம் ஆண்டு: "2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், கடைசியாக, காமன்வெல்த் விளையாட்டு ஊழல்.
இப்படி கணக்கு, வழக்கில்லாமல் ஊழல்களை செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட இந்தியத் திருநாட்டின் அரசியல்வியாதிகளை உண்மையாகவே தண்டித்து அரசியலில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த நினைத்துத்தான் இந்த லோக்பால் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.
உச்சநீதிமன்றம் சர்வவல்லமை படைத்ததாக இருந்தாலும், அது இன்னமும் தனது முழு அதிகாரத்தையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. கூடவே அந்த அமைப்பின் உறுப்பினர்கள்கூட அரசியல்வியாதிகளின் அல்லக்கைகளாக மாறிவிட்ட கொடூரமும் நிகழ்ந்துதான் வந்திருக்கிறது..!
அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பாகத்தான் லோக்பால் அமைப்பைக் குறிப்பிடுகிறார்கள்.
பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்கிற அளவுக்கு அவற்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும்.
இப்படிப்பட்ட லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் சட்டம்.
ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இந்தியத் தண்டனை சட்டம்-1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம்-1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின்படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடமிருந்தோ அனுமதி பெற வேண்டும்.
இதன்படி பார்த்தால் கருணாநிதி மீது ஊழல் வழக்கை இப்போது தெரிவித்தால் அதற்குக் கவர்னர் அனுமதியளித்தால் மட்டுமே நாம் அவர் மீது தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர முடியும். இல்லையெனில் முடியாது. இது இந்த அரசியல் ஓநாய்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்களே போட்டுக் கொண்ட ஒரு விதிவிலக்கு..!
அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.
இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத் துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களைப் பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையைப் போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையைப் போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.
ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன.
இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இந்த அமைப்பு சமீபத்தில் கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.
கடந்த 1968-ம் ஆண்டு முதல், லோக்சபாவில் எட்டு முறை இந்த லோக்பால் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டும், தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது.
லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த மசோதாவுக்காகக் குரல் கொடுத்து வரும் அன்ன ஹாசரே ஒத்துக் கொள்ளாததற்குக் காரணம், தற்போது அரசு பரிந்துரைக்கும் லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, வெறுமனே பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும்.
இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றுதான் அன்னா ஹசாரே கோரியிருக்கிறார்.
அன்னா ஹசாரே தனது பரிந்துரையில் சொல்லியிருப்பது இது :
* அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
* பொதுமக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரிடமும் சரி பார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியமோ கமிஷனுக்கு இருக்கக் கூடாது.
* புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ள வேண்டும்.
* லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ. அமைப்பும் இணைக்கப்பட்டுவிட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவைகளை கமிஷன் மேற்கொள்ள முடியும்.
* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேர் மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.
* தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.
* லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்கக் கூடாது.
* ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.
* ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.
இப்படி ஆட்டமாய் ஆடுகின்ற அரசியல்வியாதிகளின் தலையைக் கொய்யும் அளவுக்கு நிபந்தனைகளை விதித்தால் அவர்களென்ன செய்வார்கள்..? இதற்காகவாக அவர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்..? ச்சும்மா விட்டு விடுவார்களா என்ன..?
அரசுத் தரப்போ தனது பரிந்துரையாக கமிஷனின் மசோதாவில் சேர்த்துள்ள வெளக்குமாத்துக் குச்சிகளைப் பாருங்கள்...
* இந்த லோக்பால் அமைப்பு நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.
* லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ இந்தக் கமிஷனுக்கு அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும் எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.
(இங்கேயும் எம்.பி.க்களாம். அப்போதுதானே யார் மீது புகார் வந்திருக்கிறது என்று உடனேயே தெரிந்து கொண்டு தப்பிக்க வழி செய்யலாம்.)
* புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.
* காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.
* லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.
(இதை மட்டும் வக்கனையா எழுதிட்டானுகய்யா இந்த நாதாரிகள்)
* இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.
* இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.
(முடிஞ்சது மேட்டர்.. இதுக்கு இப்ப இருக்குற மாதிரியே எதையுமே அமைக்காமல் கொள்ளையடிச்சிட்டுப் போயிரலாமே)
* நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.
* புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.
(போபர்ஸ் கேஸ் மாதிரி ஆட்சி மாறி வேற ஆட்சி வந்தாலும் வாய்தா போட்டு இழுத்தடிச்சு மறுபடியும் ஆட்சிக்கு வந்து கடைசீல சங்கு ஊதிரலாம்ல..)
* லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
இப்படி இந்த அரசியல்வியாதிகள் கொண்டு வரப் போகும் கேவலமான மசோதாவை எதிர்த்துத்தான் இந்த முதியவர் காந்தியாரின் ஆயுதமான உண்ணாவிரதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.
இதிலென்ன பிளாக்மெயில் இருக்கிறது..? உண்மையாக பிளாக்மெயில் செய்திருப்பது இந்தக் கேடு கெட்ட, கேவலங்கெட்ட அரசியல்வியாதிகள்தான்..! எங்களை கேள்வி கேட்கவே எவனுக்கும் உரிமையில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..! நாடு மக்களுக்காகவா அல்லது இந்த ஓநாய்களுக்காகவா..?
முறைப்படி அனைவருக்கும் முன்கூட்டியே தெரிவித்துவிட்டுத்தான் இந்தப் பெரியவர் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார். முதல் நாள் அன்ன ஹாசரேவை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசியிருக்கும் மன்னமோகனசிங்கால் அவருக்கு உரிய பதிலையும், விளக்கத்தையும் அளிக்க முடியவில்லை. பாவம் அந்தாளு என்ன செய்வார்..? இத்தாலி அம்மாவின் பெர்மிஷன் இல்லாமல் தனது தலைப்பாகையைக்கூட அவரால் கழட்ட முடியாது..! அந்த லட்சணத்தில்தான் அவர் இருக்கிறார்.
ஒரு நாட்டின் பிரதமரே இந்த லட்சணத்தில் இருக்கும்போது இவரை நம்பி சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் என்னவாகும்..? அந்தக் கிழவருக்கு மன உறுதியும், நல்ல எண்ணமும் இருக்கிறது. இவரைவிட பத்து வயது அதிகமான நமது மாநிலத்தின் பெரிசும் ஏதோ ஒரு நாள் நல்ல ஹாயான சமாதியொன்றில் போய் அரைமணி நேரம் படுத்துறங்கிவிட்டு வெற்றிகரமான உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு வரத் தெரியாத நபர்தான் இந்தத் தாத்தா..
இதோ 4-வது நாளாக உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அரசுகள் இப்போதும் சல்ஜாப்பு சொல்லி வருகின்றன. தேர்தல் பிரச்சார நேரத்தில் இப்படியொரு லொள்ளு தேவையா என்று மன்னமோகனசிங்குக்கு ஏக டோஸ் விழுந்திருக்கலாம்..!
விவசாயத் துறை அமைச்சராக இருப்பதாக தன்னைக் கொள்ளும் சரத்பவார் இவருடைய கடும் எதிர்ப்பினால் லோக்பாலின் அமைப்புக் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் தப்பித்துவிட்டார். தனது ஜென்ம விரோதியுடன் தேசிய அளவில் மோதி தனது பெயரை ரிப்பேராக்கிக் கொள்ள விரும்பாமல் ஒதுங்கிவிட்டார் சரத்பவார்.
இப்போது ஹசாரேவைச் சுற்றிலும் உள்ள அவரது இயக்கத் தொண்டர்களும், ஆர்வமுள்ள, உண்மையான இந்தியர்களாக அவருக்குத் தோள் கொடுத்து உற்சாகமளித்து வருகிறார்கள்..!
நாமும், நம்மால் முடிந்த அளவுக்கு பெரியவர் அன்ன ஹசாரேவுக்கும் அவரது இயக்கத்திற்கும், அவரது போராட்டத்திற்கும் நமது ஆதரவை வழங்க வேண்டும் தோழர்களே..!
தமிழகத்தில் சென்னை மற்றும் ஈரோட்டில் இது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன என்பது பாராட்டுக்குரியது..!
சாதுவான முயலைக்கூட சீண்டிக் கொண்டேயிருந்தால்கூட லேசாக கடிக்கக்கூட செய்யும். ஆனால் நம்மை குழி தோண்டி புதைக்கும் அளவுக்கான பிரச்சினைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் வேலையிலும், நமது தார்மீகமான எதிர்ப்பையும், ஒற்றுமையையும் இந்தக் களத்தில் நாம் காட்டவில்லையெனில் இதன் பாதிப்பு நமது வாரிசுகளுக்குத்தான்..!
கொண்டாட வேண்டியதை கொண்டாட்ட நேரத்தில் கொண்டாடுவோம் இந்தியர்களே..! கிரிக்கெட் எப்போதும் இங்கேதான் இருக்கும். எங்கேயும் ஓடிப் போகாது..!
இப்போது இந்தியன் என்பதை நாம் உணர்வில் காட்ட வேண்டிய நேரம். மாறாக அந்த உணர்வை உணவில் மட்டுமே காட்டி நாம் சோற்றால் அடித்த பிண்டங்களாகக் காட்டுவதில் அர்த்தமில்லை தோழர்களே..!
இந்தியனாக இரு.. இந்தியனாகவே வாழு.. இந்தியனாகவே சாகு என்பதெல்லாம் சரி.. அதற்கு முன்பாக ஒரு நாளாவது நாம் நல்ல மனிதனாக வாழ்ந்து காட்டுவோமே..!?

பதிவிற்கு உதவியவை : பல்வேறு செய்தித் தாள்கள், இணையத்தளங்கள்
|
Tweet |
64 comments:
அன்னா ஹசாரே நமக்கு கிடைத்த பெரிய ஆயுதம். அதை முழுமையாக பயன் படுத்தி ஊழலை களைவோம்!
அருமையான கட்டுரை. அழகாக விஷயத்தை எளிமையாகச் சொல்லி உள்ளீர்கள்.நன்றி.
அண்ணே உங்களுக்கு என் சல்யூட்...
ஊழலை ஒழிக்கணும்நு எல்லாரும் சொல்றோம். ஆனா காங்கிரஸ் ஐ எதிர்க்க மாட்டோம். ஏன்னா காங்கிரஸ் ஐ எதிர்த்தால் நீங்க COmmunal நு சொல்லீருவாங்கனு பயம். மீடியா காங்கிரஸ் கிட்ட காசு வாங்கீட்டு காங்கிரஸ் ஐ தான் தூக்கி விடும். காங்கிரஸ் இருக்கும் வரை ஊழல் இருக்கும். யாரும் ஒன்னும் பண்ண முடியாது.
என்னைக்கேட்டால் தி மு க தான் மீண்டும் தமிழ் நாட்டில் வரணும். அப்புறம் கனிமொழி எல்லா துறையிலும் நுழைந்து சன் குழுமத்தை விட பணக்காரி ஆகி விடுவார். சன் குழுமம் எல்லா கம்பனி கலையும் வாங்கி மிக பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். ஸ்டாலின் / அழகிரி கட்ட பஞ்சாயத்து பண்ணி சட்டம் ஒழுங்கை ஒழிப்பார்கள். கரை வேட்டி களும் மற்ற அமைச்சர்களும் ஊரை அடிச்சு ஒலையில் போடட்டும். நம்ம நூறு நாள் வேலை வாய்பில் காசு வாங்கி டாஸ்மாக் அடிச்சுட்டு ஒரு ரூபா அரிசி வாங்கி இலவச டிவி இல் ஊழலையும் கருணா பேரங்கள் எடுக்கிற படங்களையும் பாத்துட்டு சந்தோசமா காலத்தை ஓட்டலாம்
//இந்தியனாக இரு.. இந்தியனாகவே வாழு.. இந்தியனாகவே சாகு என்பதெல்லாம் சரி.. அதற்கு முன்பாக ஒரு நாளாவது நாம் நல்ல மனிதனாக வாழ்ந்து காட்டுவோமே..!?//அனைவரும் சிந்திக்க வேண்டிய பின்பற்றபட வேண்டிய வைர வாிகள். நான் தாங்களுடன் வாிக்கு வாி உடன்படுகிறேன். நட்புடன்
சகோ.உண்மைத்தமிழன்...
நீங்கள் உண்மைமனிதன்..!
மிக நன்றாக தகவல்களை திரட்டி அளித்துள்ளீர்கள். இனி நாம் நம்மை எமாற்றுவோருக்கு எதிராக போராடும் நேரம் வந்து விட்டது. பெரியவர் அண்ணா ஹசாரே அதை ஆரம்பித்து வைத்து இருக்கிறார். அதை தொடர்வது இனி நம் கையில் உள்ளது..!
தரமான பதிவுக்கு மிக்க நன்றி.
உண்மைதமிழன், இன்று செய்தி பார்த்து ரொப மகிழ்ச்சி. ஏன் தெரியுமா?ஸென்சார் போர்டின் தலைமையாக லீல சாம்சன் பொறுப்பு வகிக்க பொகிறார். நீஙள் ஒரு முறைஉங்களுடய ஸென்ஸார் போர்ட் அனுபவம் எழுதியது ஞாபகம் வந்தது.
அண்ணா ஹசாரே வாழ்க........
நல்ல பதிவு அண்ணாச்சி..
உண்மை தமிழன் சார்,
நான் எனக்கு தெரிஞ்சு அத்தனை பேருக்கும் அனுபிட்டேன். கருமம் புடிச்ச பசங்க விஜயகாந்த் வடிவேலு மேட்டர் வீடியோ முடிஞ்சா அனுப்பு நு சொல்லுறாங்க
ரஜினி கமல் எல்லாருக்கும் மிடில் கிளாஸ் பிரெச்சனை பத்தி பேசின எங்க கலைஞர் கோபம் வரும் நு பயபடுரங்க போல. நிச்சயம் ஒவ்வொரு இந்தியன் நும் இதுக்கு அதரவு தெரிவுகனும்
மக்கள் கிட்ட இதை கொண்டு போகாத தமிழ் நாடு ஊடகம் ரொம்ப பெரிய பாவம் பண்ணுது . மக்கள் கிட்ட இதை கொண்டு போகாம ஏமாத்துறது என்ன பொறுத்த வரைக்கும் பெரிய crime இதுக்கு இந்த பணம் ஆசை பிடிச்ச பெருச்சாளிகள் வருத்த படுவாங்க ஒரு நாள்
- அருண்
சூப்பர்ப்! வரிக்கு வரி வழிமொழிகிறேன். இதைத்தான் எதிர்பார்த்தேன். தலைப்பும் அருமை.
[[[bandhu said...
அன்னா ஹசாரே நமக்கு கிடைத்த பெரிய ஆயுதம். அதை முழுமையாக பயன்படுத்தி ஊழலை களைவோம்!]]]
எதிரியை வீழ்த்த கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும். அப்படியொரு ஆயுதம்தான் அன்னா ஹசாரே..!
[[[செங்கோவி said...
அருமையான கட்டுரை. அழகாக விஷயத்தை எளிமையாகச் சொல்லி உள்ளீர்கள். நன்றி.]]]
நன்றி செங்கோவி..
[[[கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே உங்களுக்கு என் சல்யூட்...]]]
உனக்கும்தான்.. உன்னால் முடிந்த அளவுக்கும் காங்கிரஸை தோலுரித்துக் கொண்டிருக்கிறாயே..? வாழ்த்துகள் தம்பி..!
[[[Unmai said...
ஊழலை ஒழிக்கணும்நு எல்லாரும் சொல்றோம். ஆனா காங்கிரஸ்ஐ எதிர்க்க மாட்டோம். ஏன்னா காங்கிரஸ் ஐ எதிர்த்தால் நீங்க COmmunalனு சொல்லீருவாங்கனு பயம். மீடியா காங்கிரஸ்கிட்ட காசு வாங்கீட்டு காங்கிரஸ்ஐதான் தூக்கி விடும். காங்கிரஸ் இருக்கும்வரை ஊழல் இருக்கும். யாரும் ஒன்னும் பண்ண முடியாது.]]]
காங்கிரஸை ஒழித்துக் கட்டத்தான் இணையத்தில் பிரச்சாரமே நடந்து வருகிறதே.. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்வோம் நண்பரே..!
[[[Unmai said...
என்னைக் கேட்டால் திமுகதான் மீண்டும் தமிழ்நாட்டில் வரணும். அப்புறம் கனிமொழி எல்லா துறையிலும் நுழைந்து சன் குழுமத்தைவிட பணக்காரி ஆகி விடுவார். சன் குழுமம் எல்லா கம்பனிகலையும் வாங்கி மிக பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். ஸ்டாலின் / அழகிரி கட்ட பஞ்சாயத்து பண்ணி சட்டம் ஒழுங்கை ஒழிப்பார்கள். கரை வேட்டிகளும் மற்ற அமைச்சர்களும் ஊரை அடிச்சு ஒலையில் போடட்டும். நம்ம நூறு நாள் வேலை வாய்பில் காசு வாங்கி டாஸ்மாக் அடிச்சுட்டு ஒரு ரூபா அரிசி வாங்கி இலவச டிவியில் ஊழலையும் கருணா பேரன்கள் எடுக்கிற படங்களையும் பாத்துட்டு சந்தோசமா காலத்தை ஓட்டலாம்.]]]
ம்.. இப்படியொரு பொழைப்புக்கு.. என்னமோ செய்யலாம்னு சொல்வாங்க..!
[[[Feroz said...
//இந்தியனாக இரு. இந்தியனாகவே வாழு. இந்தியனாகவே சாகு என்பதெல்லாம் சரி.. அதற்கு முன்பாக ஒரு நாளாவது நாம் நல்ல மனிதனாக வாழ்ந்து காட்டுவோமே.!?//
அனைவரும் சிந்திக்க வேண்டிய பின்பற்றபட வேண்டிய வைர வாிகள். நான் தாங்களுடன் வாிக்கு வாி உடன்படுகிறேன். நட்புடன்]]]
நன்றி நண்பரே..!
[[[முஹம்மத் ஆஷிக் said...
சகோ.உண்மைத் தமிழன்...
நீங்கள் உண்மை மனிதன்..!
மிக நன்றாக தகவல்களை திரட்டி அளித்துள்ளீர்கள். இனி நாம் நம்மை எமாற்றுவோருக்கு எதிராக போராடும் நேரம் வந்து விட்டது. பெரியவர் அண்ணா ஹசாரே அதை ஆரம்பித்து வைத்து இருக்கிறார். அதை தொடர்வது இனி நம் கையில் உள்ளது! தரமான பதிவுக்கு மிக்க நன்றி.]]]
விழிப்புணர்வு மக்களில் ஒரு சிலருக்கு மட்டுமே வந்திருக்கிறது. அது சமூகத்தின் அடிமட்டம் வரையிலும் பாய வேண்டும் என்பதுதான் எனது ஆசை..!
[[[thiru said...
உண்மைதமிழன், இன்று செய்தி பார்த்து ரொப மகிழ்ச்சி. ஏன் தெரியுமா? ஸென்சார் போர்டின் தலைமையாக லீல சாம்சன் பொறுப்பு வகிக்க பொகிறார். நீஙள் ஒரு முறை உங்களுடய ஸென்ஸார் போர்ட் அனுபவம் எழுதியது ஞாபகம் வந்தது.
அண்ணா ஹசாரே வாழ்க.]]]
லீலா சாம்சன் பற்றி அடியேனுக்கு தெரியவில்லை. யாரென்று சொல்ல முடியுமா..?
[[[சந்தோஷ் = Santhosh said...
நல்ல பதிவு அண்ணாச்சி.]]]
நன்றி தம்பி..!
[[[Arun said...
உண்மை தமிழன் சார்,
நான் எனக்கு தெரிஞ்சு அத்தனை பேருக்கும் அனுபிட்டேன். கருமம் புடிச்ச பசங்க விஜயகாந்த் வடிவேலு மேட்டர் வீடியோ முடிஞ்சா அனுப்புன்னு சொல்லுறாங்க]]]
மிக்க நன்றி தம்பி..! தமிழர்களை சினிமா மீடியத்தில் இருந்து மீட்பது அவ்வளவு சுலபமில்லை..!
[[[ரஜினி கமல் எல்லாருக்கும் மிடில் கிளாஸ் பிரெச்சனை பத்தி பேசின எங்க கலைஞர் கோபம் வரும்னு பயபடுரங்க போல. நிச்சயம் ஒவ்வொரு இந்தியனும் இதுக்கு அதரவு தெரிவுகனும். மக்கள் கிட்ட இதை கொண்டு போகாத தமிழ்நாடு ஊடகம் ரொம்ப பெரிய பாவம் பண்ணுது . மக்கள் கிட்ட இதை கொண்டு போகாம ஏமாத்துறது என்ன பொறுத்தவரைக்கும் பெரிய crime. இதுக்கு இந்த பணம் ஆசை பிடிச்ச பெருச்சாளிகள் வருத்தபடுவாங்க ஒரு நாள்
- அருண்]]]
நிச்சயமா வருத்தப்பட மாட்டாங்க அருண்.. மக்கள் மட்டுமே வருத்தப்பட இருக்கிறார்கள்..!
இங்கே அரசியல்வியாதிகளுக்கென்று தனியே ஒரு குணம் உண்டு..! அவர்கள் வாழப் பிறந்தவர்கள்.. மக்கள் அழுகத்தான் பிறந்தவர்கள்..!
[[[ரிஷி said...
சூப்பர்ப்! வரிக்கு வரி வழி மொழிகிறேன். இதைத்தான் எதிர்பார்த்தேன். தலைப்பும் அருமை.]]]
நன்றி ரிஷி..!
அண்ணே , உண்மைதான்னே ., என்னத்த பண்ணுறதுன்னு தெரியிலே ., எதாச்சும் பண்ணுறதுக்கு முன்னாடி இனிமே வருசையில் நின்னு பஸ்சுல ஏறனும் ., சொல்லுங்கண்ணே, சின்ன சின்ன ஒழுகத்தை கடைபிடிப்போம்னே, சொல்லுங்கன்ன நாம சின்ன சின்ன விஷயத்தை கவனிப்போம், ஹசாரே பெருசா பாத்துக்குட்டும்.
ஆழமான பதிவு.... படிச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு... நெருப்பில் நிக்குற மாதிரி இருக்கு...
எல்லாம் மாறும்... மாறணும்...... முதியவர் இல்லை அவர் பெரும் வலிமை கொண்டவர்
உங்கள் பதிவை என்னுடைய facebook தளத்தில் குறிப்பிட்டுள்ளேன்...
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
மிகவும் அருமையான பதிவு !
நாடாளும் உரிமையுள்ளவர்களை தேர்ந்தெடுக்க மக்களின் ஓட்டுகள் தேவை
அதே நாடாளும் மக்களவை உறுப்பினர்கள் ஊழல் செய்தால் அவர்களை தண்டிக்கும் உரிமையும் அதே மக்களுக்கு தான் உள்ளது என்பதையும் நாம் போராடி (வேற வழி ) தான் பெற வேண்டும்....அன்ன அசாரவை போல் இதற்கும் நேர்மையானவர் யாரவது வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
வழிமுறை :அதே ஓட்டுக்கள் மூலமே அவர்களை திரும்ப பெற வழி வகை செய்ய உச்ச நீதிமன்றமோ அல்லது தேர்தல் ஆணையமோ சட்டம் கொண்டு வர வேண்டும்
http://kanthakadavul.blogspot.com/
Leela samson,is head of kalakshetra, very independent uncorrupt lady. Google her, you will fimd a lot. Infact beforw she getz too busy try to meet her in kaLakshetra?
http://www.hindu.com/2011/04/02/images/2011040267742601.jpg
மிகவும் அருமையான கட்டுரை. ஹசாரேயின் போராட்டம் வெற்றியில் முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.
\\ஆனால் டெல்லியில் ஹசாரேயைச் சுற்றிலும் வெறும் 1000 பேர் மட்டுமே இருக்கிறார்களாம்.\\ அவருக்கு தமிழ் கூமுட்டைகளைத் தவிர மற்ற மாநிலங்களில், குறிப்பாக வாடா மாநிலங்களில் பலத்த ஆதரவு இருக்கிறது. மேலும் மனதிற்குள் குமுறல் இருந்தாலும் வெளியில் காட்ட முடியவில்லையே பூனைக்கு யார் முதலில் மணி காட்டுவது என்றிருக்கும் நடுநிலையான மக்கள் இது போல ஒருத்தர் வர மாட்டாரா என்று எதிர்பார்த்து காத்திருக்கும் சமயத்தில் இவர் கிடைத்துள்ளார், நிச்சயம் மாறுதல் வரும் என நம்பலாம்.
\\இந்த நாட்டில் இதுவரையிலும் எத்தனையோ லஞ்ச ஊழல் வழக்குகள் அரசியல்வியாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மக்கள் முன் ஆதாரங்கள் குவித்து வைக்கப்பட்டாலும், அரசியல்வியாதிகள் தப்பித்து அதிகாரிகளை மட்டும் பகடைக்காயாக்கிவிடுகிறார்கள்..!\\ எல்லா சட்டத்திலும் ஓட்டையைக் கண்டுபிடித்தும், சாட்சிகளை மிரட்டி திசை மாற்றியும் தப்பித்துக் கொள்ளும் அரசியல் வியாதிகள் இந்த சட்டத்தை மட்டும் தங்களை கட்டுப் படுத்த விட்டுவிடுவார்களா?
\\இல்லையெனில் முடியாது. இது இந்த அரசியல் ஓநாய்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்களே போட்டுக் கொண்ட ஒரு விதிவிலக்கு..!\\ ம்ம்ம்... நீங்களோ நானோ போட்ட கையெழுத்தை இல்லையென்று மறுக்க முடியாது, முதலமைச்சர் மறுக்கலாம், கோர்ட்டும், உங்க மனசாட்சியை தொட்டு நடந்துக்குங்கன்னு விட்டுவிடும். ஹா..ஹா..ஹா..
\\லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.\\ சரியான புகாரையும் தவறுன்னு மொள்ளமாறித் தனத்தின் மூலம் நிரூபித்து புகர் கொடுத்தவனை உள்ளே தள்ளி விடலாம், அதைப் பாத்து மத்தவனும் பயந்துகிட்டு வேற எந்த புகாரும் கொடுக்க முன்வரமாட்டான், என்ன குள்ளநரி புத்தி இவனுங்களுக்கு!!!
\\இவரைவிட பத்து வயது அதிகமான நமது மாநிலத்தின் பெரிசும்...\\ அண்ணே இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள், பக்கத்திலேயே இரண்டு கொடிய பாவம் செய்த சன்டாலர்களையும் சிலுவையில் அறைந்தார்கள், ஆனாலும் இரண்டும் ஒன்றா? இல்லை ஒப்பிடத்தான் முடியுமா?? ஹா...ஹா...ஹா...
அருமையான கட்டுரை. . . .
நன்றி. . .
வரிக்கு வரி வழிமொழிகிறேன்
அருமையான கட்டுரை. . . .
மானத் தமிழர்களே கேளுங்கள் . மூன்று ஆண்டு காலம் உலக தமிழர்கள் அல்லும் பகலும். பனியிலும், வெயிலிலும் , மழையிலும், சிண்டு, சிறார் , வாலிபர் , முதியவர், மகளிர் என அணி திரண்டு , உயிர் கொடுத்து போராடி கிடைக்காத ஒரு வெற்றி, மூன்றே நாட்களில் இதுவரை பேர் தெரியாத ஒரு கிழவன் குரல் கொடுத்து , நாடே திரும்பி பார்த்து , உயிர் பலி , கைது நாடகம் , பெரிய மக்கள் தொகை போராட்டாம் என எதுவுமே இல்லாமல் தங்கள் கோரிக்கையை ஹிந்தியர்கள் வெகு சுலபமாக வென்றெடுத்தார்கள். இப்போது சொல்லுங்கள், தமிழர்கள் வெற்றி பெற நமக்கு ஒரு ஹிந்தி தாத்தா வேண்டுமா இல்லையா ? அல்லது தமிழர்களும் தங்கள் தாய் மொழியை மாற்றி மாற்றிக்கொள்ளலாமா?
[[[ஷர்புதீன் said...
அண்ணே, உண்மைதான்னே என்னத்த பண்ணுறதுன்னு தெரியிலே. எதாச்சும் பண்ணுறதுக்கு முன்னாடி இனிமே வருசையில் நின்னு பஸ்சுல ஏறனும். சொல்லுங்கண்ணே, சின்ன சின்ன ஒழுகத்தை கடைபிடிப்போம்னே, சொல்லுங்கன்ன நாம சின்ன சின்ன விஷயத்தை கவனிப்போம், ஹசாரே பெருசா பாத்துக்குட்டும்.]]]
உங்களுடைய யோசனை தேவையானதுதான் ஷர்புதீன்.. நம்ம மக்களுக்கு அதற்கான பக்குவம் வர்றதுக்கு ரொம்ப லேட்டாகும் போலிருக்கே..!
[[[அருண் பிரசங்கி said...
ஆழமான பதிவு. படிச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு. நெருப்பில் நிக்குற மாதிரி இருக்கு. எல்லாம் மாறும். மாறணும். முதியவர் இல்லை அவர் பெரும் வலிமை கொண்டவர்.]]]
மனத்திடம் கொண்டவர்..! இல்லையெனில் பெரும் பணக்காரர்களே அரசுடன் மோதுவதற்கு யோசிக்கும்போது இப்படியொருதுணிச்சலுடன் இறங்கியிருப்பாரா..?
[[[உங்கள் பதிவை என்னுடைய facebook தளத்தில் குறிப்பிட்டுள்ளேன்.]]
மிக்க நன்றி நண்பரே..!
[[[ஸ்ரீகாந்த் புதுச்சேரி said...
மிகவும் அருமையான பதிவு !
நாடாளும் உரிமையுள்ளவர்களை தேர்ந்தெடுக்க மக்களின் ஓட்டுகள் தேவை. அதே நாடாளும் மக்களவை உறுப்பினர்கள் ஊழல் செய்தால் அவர்களை தண்டிக்கும் உரிமையும் அதே மக்களுக்குதான் உள்ளது என்பதையும் நாம் போராடி(வேற வழி)தான் பெற வேண்டும். அன்ன அசாரவை போல் இதற்கும் நேர்மையானவர் யாரவது வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வழிமுறை : அதே ஓட்டுக்கள் மூலமே அவர்களை திரும்ப பெற வழி வகை செய்ய உச்ச நீதிமன்றமோ அல்லது தேர்தல் ஆணையமோ சட்டம் கொண்டு வர வேண்டும்
http://kanthakadavul.blogspot.com/]]]
இதனை மத்திய அரசுதான்.. அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் செய்ய வேண்டும்.. செய்ய முடியும்.. தனித்து சுப்ரீம் கோர்ட்டோ, தேர்தல் கமிஷனோ ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்துவிட முடியாது.. அதுதான் இந்த பாழாய்ப் போன இந்தியாவில் சிக்கல்..!
[[[thiru said...
Leela samson, is head of kalakshetra, very independent uncorrupt lady. Google her, you will fimd a lot. Infact beforw she getz too busy try to meet her in kaLakshetra?
http://www.hindu.com/2011/04/02/images/2011040267742601.jpg]]]
தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!
[[[manjoorraja said...
மிகவும் அருமையான கட்டுரை. ஹசாரேயின் போராட்டம் வெற்றியில் முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.]]]
நானும் மகிழ்கிறேன்..! இந்த தனி மனிதருடைய உண்ணாவிரதத்தினால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது என்பதனால் இவருக்கே இந்தப் பெருமை போய்ச் சேரும்..!
[[[Jayadev Das said...
\\ஆனால் டெல்லியில் ஹசாரேயைச் சுற்றிலும் வெறும் 1000 பேர் மட்டுமே இருக்கிறார்களாம்.\\
அவருக்கு தமிழ் கூமுட்டைகளைத் தவிர மற்ற மாநிலங்களில், குறிப்பாக வாடா மாநிலங்களில் பலத்த ஆதரவு இருக்கிறது. மேலும் மனதிற்குள் குமுறல் இருந்தாலும் வெளியில் காட்ட முடியவில்லையே பூனைக்கு யார் முதலில் மணி காட்டுவது என்றிருக்கும் நடுநிலையான மக்கள் இது போல ஒருத்தர் வர மாட்டாரா என்று எதிர்பார்த்து காத்திருக்கும் சமயத்தில் இவர் கிடைத்துள்ளார், நிச்சயம் மாறுதல் வரும் என நம்பலாம்.]]]
ஏன் நம்மாளுக மட்டும் இப்படி ஒதுங்கியே போறானுகன்னு தெரியலையே..?
[[[Jayadev Das said...
எல்லா சட்டத்திலும் ஓட்டையைக் கண்டு பிடித்தும், சாட்சிகளை மிரட்டி திசை மாற்றியும் தப்பித்துக் கொள்ளும் அரசியல் வியாதிகள் இந்த சட்டத்தை மட்டும் தங்களை கட்டுப்படுத்த விட்டுவிடுவார்களா?]]]
நிச்சயம் விடமாட்டார்கள். அதனால்தான் இந்த இழுபறி.. இப்போதைக்கு அவரைச் சமாதானம் செய்திருக்கிறார்கள். ஆனால் இறுதியில் என்ன நடக்குமோ..?
[[[Jayadev Das said...
ம்ம்ம்... நீங்களோ நானோ போட்ட கையெழுத்தை இல்லையென்று மறுக்க முடியாது, முதலமைச்சர் மறுக்கலாம், கோர்ட்டும், உங்க மனசாட்சியை தொட்டு நடந்துக்குங்கன்னு விட்டுவிடும். ஹா..ஹா..ஹா..]]]
இந்தியாவில் நீதிமன்றங்கள்கூட பணக்காரர்களுக்கும், அதிகாரமிக்கவர்களுக்கும் மட்டுமே செயல்படுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது டான்சி ஊழல் வழக்கின் இறுதித் தீர்ப்பு..!
[[[Jayadev Das said...
\\லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.\\
சரியான புகாரையும் தவறுன்னு மொள்ளமாறித்தனத்தின் மூலம் நிரூபித்து புகர் கொடுத்தவனை உள்ளே தள்ளி விடலாம், அதைப் பாத்து மத்தவனும் பயந்துகிட்டு வேற எந்த புகாரும் கொடுக்க முன் வர மாட்டான், என்ன குள்ள நரி புத்தி இவனுங்களுக்கு!!!]]]
இவனுகளுக்குப் பெயர்தான் மக்கள் தொண்டர்களாம்..! த்தூ.. கேவலம்..!
[[[Jayadev Das said...
\\இவரைவிட பத்து வயது அதிகமான நமது மாநிலத்தின் பெரிசும்...\\
அண்ணே இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள், பக்கத்திலேயே இரண்டு கொடிய பாவம் செய்த சன்டாலர்களையும் சிலுவையில் அறைந்தார்கள், ஆனாலும் இரண்டும் ஒன்றா? இல்லை ஒப்பிடத்தான் முடியுமா?? ஹா...ஹா...ஹா...]]]
ம்.. ஒப்பிடலாம்.. ஆனாலும் என்னைவிட தைரியமானவராக இருக்கிறீர்கள் நண்பரே..!
[[[udhavi iyakkam said...
அருமையான கட்டுரை. . . .
நன்றி. . .]]]
நன்றி நண்பரே..!
[[[butterfly Surya said...
வரிக்கு வரி வழிமொழிகிறேன்.]]]
நன்றிங்கண்ணா..!
[[[reportermani said...
அருமையான கட்டுரை....]]]
மிக்க நன்றி நண்பரே..!
[[[suyam said...
மானத் தமிழர்களே கேளுங்கள். மூன்று ஆண்டு காலம் உலக தமிழர்கள் அல்லும் பகலும். பனியிலும், வெயிலிலும் , மழையிலும், சிண்டு, சிறார், வாலிபர், முதியவர், மகளிர் என அணி திரண்டு, உயிர் கொடுத்து போராடி கிடைக்காத ஒரு வெற்றி, மூன்றே நாட்களில் இதுவரை பேர் தெரியாத ஒரு கிழவன் குரல் கொடுத்து, நாடே திரும்பி பார்த்து , உயிர் பலி, கைது நாடகம், பெரிய மக்கள் தொகை போராட்டாம் என எதுவுமே இல்லாமல் தங்கள் கோரிக்கையை ஹிந்தியர்கள் வெகு சுலபமாக வென்றெடுத்தார்கள். இப்போது சொல்லுங்கள், தமிழர்கள் வெற்றி பெற நமக்கு ஒரு ஹிந்தி தாத்தா வேண்டுமா இல்லையா ? அல்லது தமிழர்களும் தங்கள் தாய் மொழியை மாற்றி மாற்றிக் கொள்ளலாமா?]]]
வருத்தம்தான் தோன்றுகிறது..! இந்த உணர்வு இப்போதைய நமது இளைஞர்கள் மத்தியில் நிறையவே தென்படுகிறது..! விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்..!
Eye opener என்கிறார்களே அது இப்படி கட்டுரையாகவும் இருக்குமா!!!
அசத்தலான பதிவுலக புள்ளிவவர தமிழன் ஆயிட்டீங்க, வாழ்த்துக்கள்.
Cinema & cricket, the two social evils that blindfold the younger generation!
Suhithar Baus, KK Dist.
நம்மில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கே எது ஊழல் என்று தெரிவது இல்லை .தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா? இதில் தண்டிக்கப்பட வேண்டியர் யார் ? அந்த
ஆற்று நீரை வழ்வதரமாக கொண்ட மக்களை ஊர் ஊரக அலையவச்சா அரசா ? இல்லை செயல்படுத்தியா அதிகாரியா ? யார்க்கு எதிராக போராடனும்
என்பதை கூட ஆறியாமல் அன்ன ஹசரோ போன்றவர்கள் உண்ணாநிலை இருபது உண்மையாக போராடுபவர்களின் போராட்டத்தை பலவினபடுத்துவது மடைமாற்றும் செயல் என்பதாலே அவர் போராட்டத்துக்கு இப்படி ஒரு ஆதரவு,இப்படி கேனதமான போராட்டங்களை தான் அன்று
காந்தி செய்தார் இன்று அவர் தொண்டரும் செய்கிறார்
[[[Rathi said...
Eye opener என்கிறார்களே அது இப்படி கட்டுரையாகவும் இருக்குமா!!!
அசத்தலான பதிவுலக புள்ளி விவர தமிழன் ஆயிட்டீங்க, வாழ்த்துக்கள்.]]]
நன்றி ரதி..! இது பற்றிய விழிப்புணர்வு நமக்கும், நமது குடும்பத்திற்கும் நிச்சயமாக வேண்டும்..!
[[Suhithar said...
Cinema & cricket, the two social evils that blindfold the younger generation!
Suhithar Baus, KK Dist.]]]
இந்த மாயையில் இருந்து இவர்கள் விடுபட்டால் மட்டுமே நாட்டு நலன் முன்னேறும்..!
[[[shiva kumar said...
நம்மில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கே எது ஊழல் என்று தெரிவது இல்லை. தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா? இதில் தண்டிக்கப்பட வேண்டியர் யார்? அந்த ஆற்று நீரை வழ்வதரமாக கொண்ட மக்களை ஊர் ஊரக அலைய வச்சா அரசா ? இல்லை செயல்படுத்தியா அதிகாரியா? யார்க்கு எதிராக போராடனும் என்பதை கூட ஆறியாமல் அன்ன ஹசரோ போன்றவர்கள் உண்ணாநிலை இருபது உண்மையாக போராடுபவர்களின் போராட்டத்தை பலவினபடுத்துவது மடைமாற்றும் செயல் என்பதாலே அவர் போராட்டத்துக்கு இப்படி ஒரு ஆதரவு, இப்படி கேனதமான போராட்டங்களைதான் அன்று
காந்தி செய்தார். இன்று அவர் தொண்டரும் செய்கிறார்.]]]
சிவக்குமார்.. உங்களுடைய இந்தப் பின்னூட்டம்தான் கேணத்தனமாக இருக்கிறது..!
அரசு என்பது அரசியல்வியாதிகளை உள்ளடக்கியது.. அதிகாரிகள் என்பவர்களை ஆட்டுவிப்பது அரசியல்வியாதிகள்தான்.. நாம் முதலில் தாக்க வேண்டியது அரசியல்வியாதிகளைத்தான்.. அதிகாரிகளையல்ல..! அவர்கள் ஏவி விடப்பட்ட அம்புகள் மட்டுமே..!
அன்ன ஹசாரே செய்தது முற்றிலும் சரியானதுதான். அவருடைய இந்த 5 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகுதான் அந்தக் குழுவிலேயே பொது மக்கள் பிரதிநிதிகளுக்கு இடம் கிடைத்துள்ளது. அதனை முதலில் நினைத்துப் பாருங்கள்..!
அரசு என்பது அரசியல்வியாதிகளை உள்ளடக்கியது.. அதிகாரிகள் என்பவர்களை ஆட்டுவிப்பது அரசியல்வியாதிகள்தான்.. நாம் முதலில் தாக்க வேண்டியது அரசியல்வியாதிகளைத்தான்.//
அதை தான் நானும் கேக்கிறேன் எது ஊழல் (அரசியவாதி /அதிகாரி யாராக வேண்டும் என்றாலும் இருக்கட்டும்) அதற்க்கான விளக்கம் அன்ன ஹசாரே சொன்னர என்று தெரியவில்லை நீங்களாவது சொல்லுங்க ? மக்களுக்கு சொந்தமான வளங்களை தனியாருக்கு குறைந்த விலைக்கு சட்டப்படி விற்ப்பது தவறு இல்லை அதை சட்டப்படி செய்யதது தான் தவறு என்பது கடைந்து எடுத்த அயோக்கிய தனம் ,என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை ஆயிரம் மதிப்பு உள்ள இரும்பு தாதுவை வெறும் பத்து இருபதுக்கு அரசின் சட்டப்படிவெட்டி எடுப்பது கண்டிக்கப்பட வேண்டியது இல்லை .அதை சட்டப்படி செய்யதது மட்டுமே தவறு அதற்க்கு எதிராக தான் இந்த காந்திய தொண்டர்கள் மெழுகுவத்தி போராட்டம் நடத்துகின்றனார்
[[[shiva kumar said...
அரசு என்பது அரசியல்வியாதிகளை உள்ளடக்கியது. அதிகாரிகள் என்பவர்களை ஆட்டுவிப்பது அரசியல்வியாதிகள்தான்.. நாம் முதலில் தாக்க வேண்டியது அரசியல்வியாதிகளைத்தான்.//
அதைதான் நானும் கேக்கிறேன். எது ஊழல் (அரசியவாதி /அதிகாரி யாராக வேண்டும் என்றாலும் இருக்கட்டும்) அதற்க்கான விளக்கம் அன்ன ஹசாரே சொன்னர என்று தெரியவில்லை நீங்களாவது சொல்லுங்க? மக்களுக்கு சொந்தமான வளங்களை தனியாருக்கு குறைந்த விலைக்கு சட்டப்படி விற்ப்பது தவறு இல்லை. அதை சட்டப்படி செய்யததுதான் தவறு என்பது கடைந்து எடுத்த அயோக்கியதனம், என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை ஆயிரம் மதிப்பு உள்ள இரும்பு தாதுவை வெறும் பத்து இருபதுக்கு அரசின் சட்டப்படி வெட்டி எடுப்பது கண்டிக்கப்பட வேண்டியது இல்லை. அதை சட்டப்படி செய்யதது மட்டுமே தவறு அதற்கு எதிராகதான் இந்த காந்திய தொண்டர்கள் மெழுகுவர்த்தி போராட்டம் நடத்துகின்றனார்.]]]
சிவா..
உண்மைக்கு எப்போதும் ஒரு முகம்தான் உண்டு..!
சட்டம் இயற்றுவது அரசியல்வியாதிகள்தான். நீதிக்கும், நேர்மைக்கும் புறம்பாக ஒரு செயலைச் செய்யச் சொல்லி எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.. ஆனால் இருக்கின்ற சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திதான் இதனை அவர்கள் செய்கிறார்கள். இதற்கான களையெடுப்பின் முதல் ஸ்டெப்புதான் இந்த லோக்பால் அமைப்பு.. ஹஸாரே வலியுறுத்துவதைப் போல அமைந்து வரிசையாக நான்கைந்து அரசியல்வியாதிகள் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டால் அது நமக்கு நல்லதுதானே..?
//பொழுதுபோக்கு என்கின்ற வார்த்தையே இப்போது தொலைந்துபோய் அதுதான் வாழ்க்கை என்கிற அளவுக்கு ஊடகங்கள் நமது இளைஞர்களை மாயவலைக்குள் கொண்டுபோய் சிக்கவைத்துவிட்டார்கள்.//
கொஞ்சம் மனசாட்சிய கேட்டு சொல்லுங்க, ஊடகங்கள் மட்டும் தான் இந்த வேலையை செய்கின்றனவா ஏன் சினிமா விமர்சனம் என்ற பெயரில் நீங்களும் அதைதானே செய்கின்றீர்கள். தங்களுடைய விமர்சன வரிகளைத்தான் கிழே பேஸ்ட் செய்துள்ளேன் கொஞ்சம் நடுநிலையோடு படித்து பாருங்கள்
//எப்படி பார்த்தாலும் தமிழ்ச் சினிமா கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் இது. சந்தேகமில்லை. குழந்தைகள் இல்லாமல் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.. பாருங்கள்..யுத்தம் செய் - சினிமா விமர்சனம்//
//ராதாமோகனின் இந்தப் பயணமும் நம்மை முழுமையாக ஆட்கொள்கிறது..! சென்று வாருங்கள். அவசியம் சென்று பாருங்கள்..பயணம் - சினிமா விமர்சனம்//
//நீண்ட வருடங்கள் கழித்து நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார் விஜய்.. அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.. மிஸ் பண்ணிராதீங்க..காவலன் - அழகான காதல் கதை - சினிமா விமர்சனம்.!//
//ஆடுகளம் தனுஷின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். தமிழ்ச் சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமும் கூட..ஆடுகளம் - சினிமா விமர்சனம்//
[[[uaetamilan said...
//பொழுதுபோக்கு என்கின்ற வார்த்தையே இப்போது தொலைந்துபோய் அதுதான் வாழ்க்கை என்கிற அளவுக்கு ஊடகங்கள் நமது இளைஞர்களை மாயவலைக்குள் கொண்டுபோய் சிக்க வைத்து விட்டார்கள்.//
கொஞ்சம் மனசாட்சிய கேட்டு சொல்லுங்க, ஊடகங்கள் மட்டும்தான் இந்த வேலையை செய்கின்றனவா? ஏன் சினிமா விமர்சனம் என்ற பெயரில் நீங்களும் அதைதானே செய்கின்றீர்கள். தங்களுடைய விமர்சன வரிகளைத்தான் கிழே பேஸ்ட் செய்துள்ளேன். கொஞ்சம் நடுநிலையோடு படித்து பாருங்கள்.]]]
சினிமா என்ன, கிரிக்கெட்டை போல் நாள் முழுக்கவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..?
அதுவும் கிரிக்கெட்டை நான் விமர்சித்தது அதனை வைத்து ஒரு குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே பெரும் பணக்காரர்களாக உருவெடுத்து வருகிறார்கள் என்பதினாலும்தான்..! சினிமாவில்கூட நாட்டுப் பிரச்சினைகள் மக்கள் முன் வைக்கப்படுகின்றதே..! அங்கேயும் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது அல்லவா? கிரிக்கெட்டில் என்ன இருக்கிறது..?
[[[AALUNGA said...
உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.. நீங்கள் அப்போது என்ன செய்தீர்கள் (இந்த பதிவை எழுதுவதைத் தவிர)?
அந்த சமயத்தில், கண்டிக்கிறேன் பேர்வழி என்று மறைமுகமாக கிரிக்கெட்டைப் பார்த்து கொண்டுதானே இருந்தீர்கள்?
இந்திய மக்களை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிக்கும் நீங்கள் அன்னா ஹாசரே நடத்திய போரட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? தமிழகத்தில் இருந்து ஒருவர்கூட போகவில்லை என்று அங்கலாய்க்கிறீர்களே. அந்த முதல் ஆள் ஏன் நீங்களாக இருந்திருக்க கூடாது? முதலில், ஒரு செயலைப் பின்பற்றிய பின், மற்றசர்களுக்கு அறிவுரை கூறுங்கள்.]]]
ஸோ.. அரசு அமைப்புகளே நீங்கள் மாறுங்கள் என்று சொன்னால் நான் அரசியல் களத்தில் குதித்த பின்புதான் சொல்ல வேண்டும் என்கிறீர்கள்..!
என்னால்.. இந்த விஷயத்தில் இந்த நேரத்தில் முடிந்தது 500 நபர்களுக்கு இது பற்றிய செய்தியினை கொண்டு போனதுதான்..!
ஒவ்வொருவரும் அவரவர் அளவில் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஸார்..!
[[[AALUNGA said...
//ஒவ்வொருவரும் அவரவர் அளவில் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஸார்..!//
இதைத்தான் நானும் சொல்கிறேன்...
நீங்கள் பதிவு எழுதி 500 பேருக்கு சொல்கிறீர்கள் என்றால், நாங்கள் ட்வீட் செய்தோ, முகநூலில் பகிர்ந்தோ 5000 பேருக்கு சொல்கிறோம்.]]]
முகநூலில் நாங்களும்தான் இருக்கோம் ஸார்..!
[[[இன்றைய இளைஞர்கள் சினிமா, கிரிக்கெட் போன்ற பொழுது போக்குகளையும், வாழ்க்கை, சமூகம் சார்ந்த விடயங்களிலும் நல்ல் தெளிவுடன்தான் இருக்கிறோம்.]]]
அப்போ நானெல்லாம் இளைஞன் இல்லியா..?
[[[வாக்கு சதவிகிதத்தின் ஏற்றமே இன்றைய இளைஞர் விழிப்புணர்வுக்கு சான்று.]]]
ஆமாம்.. யார் இல்லைன்னு சொன்னது..?
[[[உங்கள் எண்ணம் ஹாசரேவைப் புகழ்வதோ ஊழலைப் பற்றி பேசுவதோ அல்ல. எப்படியாவது ஒரு பதிவு இடுவதே. அதற்கு அகப்பட்ட கிடா இந்தியாவும், இளைஞர்களும்!!
போங்க. வேறு எதாவது நொண்டி சாக்கு தேடுங்கள்..]]]
இப்படி உங்களைப் போன்ற நான்கு பேர் இடைத்தரகர்களாக நிற்பதுதான் எங்களுக்கு பெரும் சுமை..!
Post a Comment