22-04-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
2-ஜி அலைவரிசை ஊழலில், ஆ.ராசாவிடம் 1999-ம் ஆண்டு முதல் 2008வரை கூடுதல் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, மேலும் ஆறு நபர்களின் வாக்குமூலங்கள் அடுத்த முக்கியத்துவத்தைப் பெற்று உள்ளதாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கருதுகிறது!

ஆர்.பி.அகர்வால் (வயர்லெஸ் ஆலோசகர்), அசோக்வதா (தலைமை நிர்வாக அதிகாரி, அம்பித் ஹோல்டிங் நிறுவனம்), அசிஸ் காரயாக்கர் (பொது மேலாளர், ரிலையன்ஸ்), ஏ.கே. ஸ்ரீவஸ்தவா, ராம்ஜிசிங் குஸ்வா (இணை வயர்லெஸ் ஆலோசகர்), தேடாட்டா பண்டிட் (முன்னாள் கம்பெனி செயலாளர், ரிலையன்ஸ்) ஆகிய ஆறு பேர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 164 பிரிவின்படி வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். ஆசீர்வாதத்தையும் சேர்த்து இந்த ஏழு பேரையும் 'ஸ்டார் சாட்சிகள்’ என்று சி.பி.ஐ. வர்ணிக்கிறது. இவர்களுக்கு இப்போது பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர மேலும் சில சாட்சிகள் இருப்பதாக, சி.பி.ஐ-யின் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது. இந்த சாட்சிகள், 2-ஜி அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள்.
எஸ் டெல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியாமிக்தாஸ், லூப் மொபைல் இந்தியா லிமிடெட் துணைப் பொது மேலாளர் சௌமியா நாராயணன், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகுல் வாட்ஸ், ஸ்பைஸ் குளோபல் துணைத் தலைவர் அகிலேஷ் குமார் சக்ஸேனா, டாடா டெலி சர்வீஸ் லிமிடெட் துணைத் தலைவர் ஆனந்த் தலால் மற்றும் ராகேஷ் மகோத்ரா ஆகியோர் தங்களது நிறுவனத்துக்கும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குமான தொடர்புகளைச் சொல்லி இருக்கிறார்கள்.
யுனிடெக் லிமிடெட் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மொகிட் குப்தா மற்றும் முன்னாள் ஆலோசகர் அருண் குமார் டால்மியா, சிஸ்டாமா ஸ்யாம் டெலி சர்வீஸ் லிமிடெட் துணைத் தலைமை அதிகாரி டி.நரசிம்மன், ரிலையன்ஸ் (எடிஎஜி) குரூப் தலைவர் சேதுராமன், ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் துணைத் தலைவர் ஆனந்த் சுப்ரமணியன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பொது மேலாளர் (வணிகம்) ராஜேந்தர் சிங்கி, ரிலையன்ஸ் (எடிஎஜி) பொது மேலாளர் அசிஸ் காரையாக்கர், மூத்த துணைத் தலைவர் அசிஸ்தாம்பவாலா, கூடுதல் துணைத் தலைவர் பாரத் அம்பர்க்கர் ஆகியோர் அந்தக் காலகட்டத்தில் நடந்த பரிவர்த்தனைகள், ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளனர்.

இவை அனைத்துமே திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவுக்கு எதிராக அமையும் என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது.
2-ஜி அலைவரிசையில் முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஆ.ராசாவுக்கு எதிராக, செயல்பாடுகளை வாக்குமூலமாகக் கொடுக்க சி.பி.ஐ-யிடம் எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளார்கள்.
ஸ்டார் சாட்சிகளின் வாக்குமூலங்கள்...
ஏ.கே.ஸ்ரீவஸ்தவா : ''ஆ.ராசாவின் பெர்சனல் உதவியாளர் சந்தோலியா 24.9.2007 அன்று என்னை அழைத்தார். 'யுனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பம் இப்போதுதான் என் கைக்கு வந்துள்ளது. உடனே அந்த விண்ணப்பத்தை யு.ஏ.எஸ். லைசென்ஸ் கொடுக்கும் பட்டியலில் சேர்க்கவும், இனி எந்த நிறுவனத்தின் விண்ணப்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ என்றும் சொன்னார்.
'அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற புதிய கொள்கையைச் செயல்படுத்துங்கள்’ என்றும் சொன்னார். 'சந்தோலியா சொல்வது போல் செயல்படவும்’ என்று ஆ.ராசாவும் அறிவுறுத்தினார். தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, 'ஸ்வான் நிறுவனத்தின் விண்ணப்பங்களில் சில மாற்றங்கள் செய்யுங்கள்’ என்று சொன்னார். அவ்வப்போது, அமைச்சர் ஆ.ராசா என் செல்போனில் வந்து சில உத்தரவுகளைப் போட்டார். ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய இரு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் விதிமுறையை மீறி ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டது உண்மைதான்!''
ஆர்.பி.அகர்வால் : ''அமைச்சர் ராசாவும், சந்தோலியாவும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படச் சொல்லி என்னை மிரட்டினார்கள். ஸ்வான் டெலிகாம் நிறுவன விண்ணப்பம் மிகவும் தாமதமாக வந்தது. ஆனால், அந்த விண்ணப்பத்தை முன்னதாகவே வந்ததுபோல், முன்னுரிமைப் பட்டியலில் முதலில் கொண்டுவர, கோப்புகளில் மாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தினார்கள். அதன்படி கோப்புகளில் மாற்றம் செய்யப்பட்டது!''
ராம்ஜி சிங்குஸ்வா : ''சந்தோலியா, பெஹுரா இருவரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ராசா என்னிடம் கூறினார். ஸ்வான் டெலிகாமை முன்னுரிமைப் பட்டியலில் முதலில் கொண்டுவர அவர்கள் கட்டாயப்படுத்தியபோது, சில அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளை மாற்றினார்கள். அதனால்தான், நான் சந்தோலியா, பெஹுரா சொன்னதை அப்படியே செய்தேன்!''
அசிஸ் காராயக்கர் : ''ரிலையன்ஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் முன் நிறுத்தப்பட்டது. பிப்ரவரி 25, 2007 ரிலையன்ஸ் போர்டு மீட்டிங்கில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதுபோல் போலியான மினிட்ஸ் தயாரிக்கப்பட்டது. இதன் பின்னணியில் கிராப்பி கன்சல்டன்சி இருந்தது. இந்த கன்சல்டன்சி, டிபி ரியாலிட்டியின் இணை நிறுவனமாகும்!''
தேடாட்டா பண்டிட் : ''ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்காக போலியான ஆவணங்கள், ரிலையன்ஸில் அக்டோபர் 2007-ல் தயாரிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூன்று போர்டு கூட்டம் நடத்தப்பட்டதாகவும், ஸ்வான் டெலிகாம் தொடர்பாக அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் போலியான மினிட்ஸ் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஸ்வான் டெலிகாமுக்கு அலைவரிசை ஒதுக்கீடு கிடைத்தது. போலியான போர்டு மீட்டிங் மினிட்ஸில் என்ன இருக்க வேண்டும் என்பதை சந்தோலியா, பெஹுரா, அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் டிக்டேட் செய்தனர்!''
அசோக்வதா : ''ஸ்வான் டெலிகாம், டைகர் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுக்கு, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு கிடைப்பதற்கான நிதி உதவி செய்தும் அந்த நிறுவனங்களில் முதலீடு இருப்பதுபோல் ஆவணங்கள் தயாரித்தும் கொடுத்தேன்!''
கடந்த இதழில் நாம் குறிப்பிட்ட ஆசீர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலத்துடன் இந்த ஆறு வாக்குமூலங்களும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சாட்சிகளை அடிப்படையாகக்கொண்டும் 'ஆ.ராசா... குற்றவாளிதான்’ என்று நீதிமன்றத்தில் உறுதியாகச் சொல்லக் காத்திருக்கிறது சி.பி.ஐ.!
''லைசென்ஸ் பெறவே நீரா ராடியாவும் ராசாவும் பேசினர்...''
வருமான வரித் துறை இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால், நீரா ராடியா பற்றி டெல்லி போலீஸ் அதிகாரி வினீத் அகர்வாலுக்கு நவம்பர் 20, 2009-ல் எழுதிய கடிதத்தில், 'நீரா ராடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் தொலைபேசி இணைப்புகள் எங்களுக்கு வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நீரா ராடியா வைஷ்ணவி கார்ப்பரேட் கன்சல்டன்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனங்கள் தொலைத் தொடர்பு, மின்சாரம், விமானப் போக்குவரத்து மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளன.
இந்த நிறுவனங்கள் வெறும் ஊடக மேலாண்மை செய்வது மட்டுமல்ல, அவர்கள் உரையாடல் அடிப்படையில், தங்களின் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பக் கொள்கை முடிவுகளில் மாற்றம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்துவது போன்றவற்றை செய்து வருகின்றன.
அவர்களின் உரையாடலைப் பார்க்கையில், நீரா ராடியாவுக்கு தொலைத் தொடர்பு உரிமம் பெற்றுக் கொடுப்பதில் பங்கு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் உரையாடலில், புதிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு நீரா ராடியா ஆலோசனை வழங்குகிறார். இந்த லைசென்ஸ் பெறுவதால் அவர்களுக்கு உடனடி ஆதாயம் எதுவும் வந்துவிடாது என்று அரசாங்கத்தை நம்பும்படி செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பெறும் பணத்தை காலம் தாழ்த்தி பெறும்படியும் அவர் அறிவுரை கூறுகிறார்.
நீரா ராடியாவுக்கும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் இடையே நேரடி தொலைபேசி உரையாடல்கள் நிகழ்ந்து உள்ளன. சில உரையாடல்கள், சில தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் லைசென்ஸ் பெற உதவும் வகையில் உள்ளன. நீரா ராடியா சந்தோலியாவுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இவை தேவைப்பட்டால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்...’ என்று கூறப்பட்டு உள்ளது!
(தொடரும்)
நன்றி : ஜூனியர்விகடன்-24-04-2011
|
Tweet |
17 comments:
ஒருத்தரையும் காணோமே.துண்டு போட்டுக்கவா?
அண்ணே!எல்லோரும் தூங்குறாங்களா?அல்லது உங்களைப் பார்த்து பயந்து ஓடுறாங்களா:)
எப்படியிருந்தாலும் நம்ம ஆதரவு உங்களுக்கு எப்பவுமே உண்டு.
என்னைப் பொறுத்த வரை நீங்கதான் ஜீ.வி.
முழுசா படிச்சிட்டேன்!மெயின் பிக்சருக்கு வர மாட்டீங்கிறீங்களே!
[[[ராஜ நடராஜன் said...
ஒருத்தரையும் காணோமே. துண்டு போட்டுக்கவா?]]]
பெட்ஷீட்டே போட்டுக்கலாம். அவ்ளோ இடம் இருக்கு..!
[[[ராஜ நடராஜன் said...
அண்ணே! எல்லோரும் தூங்குறாங்களா? அல்லது உங்களைப் பார்த்து பயந்து ஓடுறாங்களா:)
எப்படியிருந்தாலும் நம்ம ஆதரவு உங்களுக்கு எப்பவுமே உண்டு. என்னைப் பொறுத்தவரை நீங்கதான் ஜீ.வி.]]]
இல்லை.. மக்களுக்கு வெறுப்பு வந்திருச்சு..! கொள்ளையடித்துவிட்டார்கள் என்பதை வெறுப்போடு ஜீரணித்துக் கொண்டவர்கள்.. அது எப்படி இருந்தால் நமக்கென்ன என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்..! அதுதான் காரணம்..!
[[[ராஜ நடராஜன் said...
முழுசா படிச்சிட்டேன்! மெயின் பிக்சருக்கு வர மாட்டீங்கிறீங்களே!]]]
அவங்க இன்னும் போடலியே..!
திரு. உண்மை தமிழன் அவர்களுக்கு,
நீங்கள் எங்களுடைய கட்டுரைகளை எங்கள் அனுமதி இல்லாமல் பதிவேற்றம் செய்வதாக எங்களுக்கு பல மின்னஞ்சல் வந்தவண்ணம் உள்ளன. நங்கள் உங்களுடைய வலைமனை http://truetamilans.blogspot.com/ முகவரிக்கு சென்று பார்த்தோம். இப்படி எங்கள் கட்டுரைகளை நகல் செய்து உங்கள் வலைதளைதில் பதிவேற்றுவது சட்டப்படி குற்றம். நீங்கள் நகலெடுத்த எங்கள் பதிவுகளை உங்கள் வலைமனையிலிருந்து நீக்கிவிடுமாறு எங்களின் முதல் எச்சரிக்கை செய்கிறோம்.
நன்றி.
விகடன் குழு.
மவுண்ட் ரோடு.
சென்னை-02
இது யார் விகடன் பெயரில் புரபைல் மறைச்சுகிட்டு?
உண்மைத்தமிழன் என்ன முக்காடு போட்டுகிட்டா பதிவு எழுதுகிறார்?
விகடன் சொல்லும் கருத்துக்களை இன்னும் விரிவாக்கம் செய்யும் வேலையை அண்ணன் இலவசமா செய்யறதுக்கு அவருக்கு ராயல்டி கொடுக்கணும்!தெரியுமில்ல:)
[[[Vikatan said...
திரு. உண்மை தமிழன் அவர்களுக்கு,
நீங்கள் எங்களுடைய கட்டுரைகளை எங்கள் அனுமதி இல்லாமல் பதிவேற்றம் செய்வதாக எங்களுக்கு பல மின்னஞ்சல் வந்தவண்ணம் உள்ளன. நங்கள் உங்களுடைய வலைமனை http://truetamilans.blogspot.com/ முகவரிக்கு சென்று பார்த்தோம். இப்படி எங்கள் கட்டுரைகளை நகல் செய்து உங்கள் வலைதளைதில் பதிவேற்றுவது சட்டப்படி குற்றம். நீங்கள் நகலெடுத்த எங்கள் பதிவுகளை உங்கள் வலைமனையிலிருந்து நீக்கிவிடுமாறு எங்களின் முதல் எச்சரிக்கை செய்கிறோம்.
நன்றி.
விகடன் குழு.
மவுண்ட் ரோடு.
சென்னை-02]]]
திரு விகடன் குழு என்ற பெயரில் எழுதியிருக்கும் அனானிக்கு..!
எழுதறதுதான் எழுதற.. எழுத்துப் பிழை இல்லாமல் எழுதி விகடனார் பெயரைக் காப்பாத்தலாம்ல.. ஏன்யா தப்புத் தப்பா எழுதி அவங்க மானத்தை வாங்குற..?
[[[ராஜ நடராஜன் said...
இது யார் விகடன் பெயரில் புரபைல் மறைச்சுகிட்டு?
உண்மைத்தமிழன் என்ன முக்காடு போட்டுகிட்டா பதிவு எழுதுகிறார்?
விகடன் சொல்லும் கருத்துக்களை இன்னும் விரிவாக்கம் செய்யும் வேலையை அண்ணன் இலவசமா செய்யறதுக்கு அவருக்கு ராயல்டி கொடுக்கணும்! தெரியுமில்ல:)]]]
நண்பேன்டா..!
என்ன தல சௌக்கியமா ?
கலக்குங்க ....
[[[அஹோரி said...
என்ன தல சௌக்கியமா? கலக்குங்க.]]]
வாங்க தல.. செளக்கியமா..? எங்க ரொம்ப நாளா வரவே இல்லை..?
அண்ணாத்தே இதான் தலைவர் சொன்ன ஆரிய போரா?
[[♠புதுவை சிவா♠ said...
அண்ணாத்தே இதான் தலைவர் சொன்ன ஆரிய போரா?]]]
இதுல இருந்து தப்பிக்கிறதுக்காக தானைத் தலைவர் விடுற புளிச்சுப் போன கதைதான் ஆரியப் போர்..!
See who owns 100-2nd-mortgage.co.cc or any other website:
http://whois.domaintasks.com/100-2nd-mortgage.co.cc
See who owns multiply.com or any other website.
See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com
Post a Comment