சென்சஸ் - 2011 - சில புள்ளி விபரங்கள்..!

07-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய சில புள்ளிவிவரங்கள் இது.. 

வழக்கம்போல இணையத் தகவல்களை சேமிப்பு வைப்பதற்காக மட்டுமே..!

 இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது.

உலக மக்கள் தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதமாகும்.

இது இந்தியாவின் 15-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும், இந்தக் கணக்கெடுப்பு இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. வீடுகள் வாரியாக கணக்கெடுப்பு கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம்வரை நடத்தப்பட்டது.

பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தாண்டு பிப்., 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கு செலவான தொகை 2,200 கோடி ரூபாய். கணக்கெடுக்கும் பணியில் மொத்தம் 27 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக மொத்தம் 8,000 டன் பேப்பர் செலவிடப்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின் சில முக்கியத் தகவல்கள் இங்கே :

* கடந்த பத்தாண்டுகளில்(2001 - 2011) மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது. அது, 2011-ம் ஆண்டு, 17.64 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும்போது தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது.

* இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடி. இது உலக மக்கள் தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய நாடுகளின் மக்கள் தொகை முழுவதையும் கூட்டினால், அதைவிட அதிகமாக நமது நாட்டின் மக்கள் தொகை உள்ளது.

* ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.

* ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் விகிதம் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக் குறைவான விகிதமாகும்.

* மக்கள் தொகையில், 7 வயதுக்கு மேற்பட்டவர்களில் படித்தவர்கள் எண்ணிக்கை 74 சதவீதம். படிக்காதவர்கள் 26 சதவீதம்.

* 2001-ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதமாக இருந்தது, 2011-ம் ஆண்டில் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மட்டும் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


* 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர். இது, 2011-ம் ஆண்டு 65.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு எழுத, படிக்க தெரிந்த ஆண்களின் எண்ணிக்கை 75.26 சதவீதமாக இருந்தது. இது, 2011-ம் ஆண்டு, 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

* மாநிலங்களில் அதிகம் எழுத, படிக்க தெரிந்தவர்கள் கேரளாவில் உள்ளனர். இங்கு 93.91 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். குறைவான எண்ணிக்கை உள்ள மாநிலம் பீகார். இங்கு 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.

* மிகக் குறைவான மக்கள் தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.

* உ.பி., மகாராஷ்டிரா மாநிலங்களின் மக்கள் தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

* அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.

* மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சல பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.

* உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்கள்: மகாராஷ்டிரா- 11 கோடியே 23 லட்சம், பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம்.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் மாவட்ட வாரியாக மக்கள் தொகை விவரங்கள் வருமாறு :-

1.திருவள்ளூர்-27,54,756 - 37,25,697

2.சென்னை-43,43,645 - 44,81,087

3.காஞ்சீபுரம்-28,77,468 - 39,90,897

4.வேலூர்-34,77,317 - 39,28,106

5.தர்மபுரி-12,95,182 - 15,02,900

6.கிருஷ்ணகிரி-15,61,118 - 18,83,731

7.திருவண்ணாமலை-21,86,125 - 24,68,965

8.விழுப்புரம்-29,60,373 - 34,63,284

9.சேலம்-30,16,346 - 34,80,008

10.நாமக்கல்-14,93,462 - 17,21,179

11.ஈரோடு-20,16,582 - 22,59,608

12.நீலகிரி-7,62,141 - 7,35,071

13.கோவை-29,16,620 - 34,72,578

14.திருப்பூர்-19,20,154 - 24,71,222

15.திண்டுக்கல்-19,23,014 - 21,61,367

16.கரூர்-9,35,686 - 10,76,588

17.திருச்சி-24,18,366 - 27,13,858

18.பெரம்பலூர்-4,93,646 - 5,64,511

19.அரியலூர்-6,95,524 - 7,52,481

20.கடலூர்-22,85,395 - 26,00,880

21.நாகப்பட்டினம்-14,88,839 - 16,14,069

22.திருவாரூர்-11,69,474 - 12,68,094

23.தஞ்சாவூர்-22,16,138 - 24,02,781

24.புதுக்கோட்டை-14,59,601 - 16,18,725

25.சிவகங்கை-11,55,356 - 13,41,250

26.மதுரை-25,78,201 - 30,41,038

27.தேனி-10,93,950 - 12,43,684

28.விருதுநகர்-17,51,301 - 19,43,309

29.ராமநாதபுரம்-11,87,604 - 13,37,560

30.தூத்துக்குடி-15,92,769 - 17,38,376

31.திருநெல்வேலி-27,03,492 - 30,72,880

32.கன்னியாகுமரி-16,76,034 - 18,63,174.

7 comments:

ம.தி.சுதா said...

////அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.////

அடடா இது என்ன தேன் கூடா இப்படி இருக்கே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

உண்மைத்தமிழன் said...

[[[♔ம.தி.சுதா♔ said...

////அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.////

அடடா இது என்ன தேன் கூடா இப்படி இருக்கே...]]]

மும்பையைவிடவா..? ஆச்சரியமாக இருக்கிறது சுதா..!

உண்மைத்தமிழன் said...

என்னப்பா இது..? உண்மைத்தமிழனுக்கு வந்த சோதனை..?
ஒரேயொரு பின்னூட்டம்தானா..? ம்ஹூம்.. அப்போ நாம கடையை மாத்திர வேண்டியதுதான்.. இது இனி்மேல் தாங்காது..!

ரிஷி said...

இது ஊழல் புள்ளிவிவரங்களை விட சுவாரசியம் கம்மியாகத்தான் இருக்கிறது சரவணன். அதான் கடையில் சரக்கு போணியாகவில்லை!!!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

இது ஊழல் புள்ளி விவரங்களைவிட சுவாரசியம் கம்மியாகத்தான் இருக்கிறது சரவணன். அதான் கடையில் சரக்கு போணியாகவில்லை!!!]]]

ம்ஹும்.. அதுதான் காரணமென்று நானும் நினைக்கிறேன்.. ஓகே.. லூஸ்ல விடுவோம்..!

AK said...

IPL Cricket Online...... http://ipl-worldcup-cricketonline.blogspot.com/

உண்மைத்தமிழன் said...

மில்லினியர் ஸார்..

மிக்க நன்றிகள்..!