அதிர்ச்சி.. ஆனால் உண்மை..!

14-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மு்ன்னாள் முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகனான கெளதமன், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுள்ளார் என்ற செய்தி இன்றைக்குத்தான் எனக்குக் கிடைத்தது..!


இன்னமும் தி.மு.க. மீது பற்றோடு இருந்துவரும் அண்ணாவின் குடும்பத்தில் இருந்து ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதும், அதுவும் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்பதும் ஆச்சரியமாக இல்லை..!?

இது பற்றி கெளதமன் கூறியிருப்பது இது :

“நான் தற்போது புத்தகப் பதிப்பாளராக உள்ளேன். எனது தந்தை எழுதிய புத்தகங்களை மட்டுமே மறுபதிப்பிட்டு வெளியிடுகிறேன். எனது தந்தை முதல்வராக இருந்தபோது என்னையோ, எனது மற்ற சகோதரர்களையோ அரசியலில் ஈடுபட அனுமதிக்கவில்லை. மூத்த அண்ணன் பரிமளத்திற்கு கடந்த 1980-ம் ஆண்டு லோக்சபா சீட் தருவதாக தி.மு.க. சார்பில் கூறினார்கள். ஆனால் தரவில்லை.


தேர்தலுக்கு முன்பாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்திக்கப் பல முறை முயற்சி செய்தேன். முடியவில்லை. இந்தத் தேர்தலில் போட்டியிட இரு பெரும் கட்சிகளிடமும் நான் சீட்டு கேட்டு அணுகவில்லை. நானே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். நான் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரமும் செய்ய மாட்டேன். என்னைப் பற்றி இப்பகுதி பொதுமக்களுக்கு நன்கு தெரியும்..” என்கிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்தபோது பிரமாண பத்திரத்தில் தனக்குச் சொந்தமாக ஒரு வீடும், 75 ஆயிரம் ரூபாயும் கையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் கெளதமன். இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அறிவழகன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் கோகுல இந்திரா போட்டியிடுகிறார்.

அண்ணாவின் மரணத்துக்குப் பின்பு அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையாருக்கு எம்.எல்.சி. பதவி கொடுத்து கவுரவித்தது தி.மு.க. அந்த ஒரு முறை அவர் அந்தப் பதவியை வகித்ததோடு சரி.. அன்றோடு அந்தக் குடும்பத்துக்கும் அரசியலுக்குமான தொடர்பு அறுந்து போனது..!

இதற்கு பின் அண்ணாவின் மூத்த வளர்ப்பு மகனான பரிமளத்தை அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் நிற்கும்படி எம்.ஜி.ஆர். வற்புறுத்தியபோது, அவர் தனது தந்தையை மனதில் வைத்து மறுத்துவிட்டார் பரிமளம். ஆனால் காலம் கடந்து நிகழ்கால அரசியல் புரிந்து பிற்காலத்தில் தி.முக.வில் பரிமளம் சீட் கேட்டபோது அரசுப் பணியைக் கைவிட வேண்டி வரும் என்ற விதிமுறைகளினால் பயந்து பின் வாங்கிவிட்டாராம்.. சென்னை அரசு பொது மருத்துவமையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றார் பரிமளம். இவருக்கு தலைவரிடம் சொல்லி ராஜ்யசபா எம்.பி. சீட் வாங்கித் தருகிறேன் என்று சொல்லியே ஆற்காடு வீராசாமி காலத்தை ஓட்டிவிட்டார் என்கிறார்கள் உடன்பிறப்புக்கள்..! பாவம் பரிமளமும் குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.

இப்போது 'சீலிங்பேன்' சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டிருக்கும் கெளதமனை பார்த்தாவது, அண்ணா நடத்திய அரசியல் எப்பேர்ப்பட்ட தியாகங்களை உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்..!

நன்றி : புதிய தமிழகம் வார இதழ்

22 comments:

ராம்ஜி_யாஹூ said...

அரிய வித்தியாசமான தகவல்களை திரட்டி அளிக்கிறீர்கள், நன்றி.
அண்ணா மாதிரி இனி வேறொரு மனிதர் வர முடியாது.

கோகுல இந்திரா அண்ணா நகரில் இருந்து கோட்டைக்கு வந்து விடுவாரா

கல்வெட்டு said...

.


கழம் என்ன குடும்பச்சொத்தா , பரம்பரை ப‌ரம்பரையாக பிள்ளைகுட்டிகளுக்கு எழுதிவைக்க? என்று வாரிசு அரசியலை எதிர்த்துக்கொண்டே அண்ணாவின் வாரிசுக்கு கொடுக்கவில்லை அப்பத்தாவின் வாரிசுக்கு கொடுக்கவில்லை என்று வருத்தப்படுவது என்ன நியாயம் முருகா?

யாரும் தேர்தலில் நிற்கலாம். நிற்பவர் அவரது சிறப்புக்ளைச் சொல்லி ஓட்டுக்கேட்கவேண்டுமே தவிர பரம்பரை ஆவிகளின் ஆதரவோடு வந்தால் ஆவியா ஆட்சி செய்யப்போகிறது? முன்னவர்களை மதிக்கலாம். ஆனால் அவர்களின் எச்சத்தில் வெட்டியாக பொழைப்பை ஓட்ட முயற்சிக்கக்கூடாது.
.

Nagarajan said...

thalaivare election mudinhu ayyavum ammavume rest eduka poyachu neenga en tired agitu!!!inum 30 days ku mela iruku apuram pathukalam evan vanthu ena kilika poranu!!!

ஸ்ரீகாந்த் said...

உண்மை என்னவெனில் கட்சியின் உண்மையான தொண்டருக்கு அந்த கட்சியில் சிறப்பான இடம் இதுவரை எந்த கட்சியிலும் யாரும் பெற்றதில்லை என்பதே உண்மை. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள் . உதாரணம் , ராகுல் காந்தி. ஒரு அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் என்பதனாலேயே அவருக்கு இன்று கிடைக்கும் மரியாதை அதே கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு கிடைத்ததா ? இதெல்லாம் காலத்தின் கோலம்.....எல்லாம் தலை எழுத்து....நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கேட்ட ( அட பொது ஜனங்களை தான் ) மனிதர்களை நினைத்து விட்டால்.

Unknown said...

அண்ணே புரியாத ஆளா இருக்கீங்க.. இவருக்கு வாய்ப்பு கொடுத்தா இன்னொரு எம்.ஜி.ஆர். ஆனாலும் ஆவாருன்னு ஒடம்பொறப்புங்களுக்கு தெரியாதா என்ன???

நண்பன் said...

aduththa barambarai arasiyala?

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

அரிய வித்தியாசமான தகவல்களை திரட்டி அளிக்கிறீர்கள், நன்றி. அண்ணா மாதிரி இனி வேறொரு மனிதர் வர முடியாது.]]]

முடியாதுதான்.. ஒரு அண்ணா. ஒரு எம்.ஜி.ஆர். என்று சரித்திரம் முடிந்துவிட்டது..!

[[[கோகுல இந்திரா அண்ணா நகரில் இருந்து கோட்டைக்கு வந்து விடுவாரா?]]]

நிச்சயமாக வந்துவிடுவார். இதில் சந்தேகமே இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[கல்வெட்டு said...

கழகம் என்ன குடும்பச் சொத்தா, பரம்பரை ப‌ரம்பரையாக பிள்ளை குட்டிகளுக்கு எழுதி வைக்க? என்று வாரிசு அரசியலை எதிர்த்துக் கொண்டே அண்ணாவின் வாரிசுக்கு கொடுக்கவில்லை அப்பத்தாவின் வாரிசுக்கு கொடுக்கவில்லை என்று வருத்தப்படுவது என்ன நியாயம் முருகா?]]]

தப்புதான்.. ஆனால் இன்றைக்கு இருக்கும் டிரெண்ட்டில் ஐ.பெரியசாமியின் மகனான செந்தில்குமார் கழகத்திற்கு என்ன தியாகம் செய்தார் என்ற கேள்வி எழுகிறதல்லவா..? அப்போது கெளதமன் அவரைவிட முன்னிலையில் இருக்கிறார்தானே..!?

[[[யாரும் தேர்தலில் நிற்கலாம். நிற்பவர் அவரது சிறப்புக்ளைச் சொல்லி ஓட்டுக் கேட்க வேண்டுமே தவிர பரம்பரை ஆவிகளின் ஆதரவோடு வந்தால் ஆவியா ஆட்சி செய்யப் போகிறது? முன்னவர்களை மதிக்கலாம். ஆனால் அவர்களின் எச்சத்தில் வெட்டியாக பொழைப்பை ஓட்ட முயற்சிக்கக் கூடாது.]]]

இது கழகத்தினருக்கும் பொருந்துமே..! கழகத்தினர் தி.மு.க.வின் உதயசூரியன் இல்லாமல், கட்சியின் பின்புலமில்லாமல் நிற்க முடியுமா? பேச முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[நலங்கிள்ளி said...

thalaivare election mudinhu ayyavum ammavume rest eduka poyachu neenga en tired agitu!!!inum 30 days ku mela iruku apuram pathukalam evan vanthu ena kilika poranu!!!]]]

எவன் வந்தாலும் கிழிக்கப் போறதென்னவோ நம்ம கோவணத்தைத்தான்..! அதுக்காக நம்ம ஜனநாயகக் கடமையை நிறுத்த முடியுங்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

உண்மை என்னவெனில் கட்சியின் உண்மையான தொண்டருக்கு அந்த கட்சியில் சிறப்பான இடம் இதுவரை எந்த கட்சியிலும் யாரும் பெற்றதில்லை என்பதே உண்மை. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள் . உதாரணம், ராகுல் காந்தி. ஒரு அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் என்பதனாலேயே அவருக்கு இன்று கிடைக்கும் மரியாதை அதே கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு கிடைத்ததா? இதெல்லாம் காலத்தின் கோலம். எல்லாம் தலை எழுத்து. நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கேட்ட (அட பொது ஜனங்களைதான்) மனிதர்களை நினைத்து விட்டால்.]]]

ஒரு பக்கம் ராகுல்காந்தி மாதிரியான உருவாக்கப்பட்ட சின்னத் தலைவர்களும் இருக்கிறார்கள். தொலைக்கப்பட்ட குடும்பத்தினரும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணாவின் குடும்பத்தினரும் அடக்கம்..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே புரியாத ஆளா இருக்கீங்க. இவருக்கு வாய்ப்பு கொடுத்தா இன்னொரு எம்.ஜி.ஆர். ஆனாலும் ஆவாருன்னு ஒடம்பொறப்புங்களுக்கு தெரியாதா என்ன???]]]

எம்.ஜி.ஆர். என்ற ஒப்பீடு மிக அதிகம். கட்சிக்குள் தனது குடும்பம் தவிர மற்றவர்களின் தியாகம் வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்பது தற்போதைய தலைவரின் சிந்தாந்தம்..!

உண்மைத்தமிழன் said...

[[[நண்பன் said...

aduththa barambarai arasiyala?]]]

அந்தக் கட்சிக்கு அண்ணா செய்திருக்கும் உழைப்பிற்கு என்ன செய்யப் போகிறார்கள் தற்போதைய தி.மு.க. தலைவர்கள்..!

Anonymous said...

நல்லவர்கள் மறக்கப்படுவதில்லை
http://biz-manju.blogspot.com/

Archana said...

ippadi than vaarisugalum agivida kudathu endru dhaan kudumbathukaga maangu maangu nu ulaikurar namma kalaingar. idha poye thappa pesureengalae :)

ராஜ நடராஜன் said...

அண்ணே!இவ்வளவு தாமதமா இதைச் சொல்வது:(

கழக கண்மனிகள் யாராவது கருத்து தெரிவித்தார்களா?

vasan said...

கால‌ம் எல்லோருக்கும், ச‌ரியான ப‌ல‌னைத் தான் த‌ருகிற‌து. மிக‌ விரைவில் சிலருக்கு, சில‌ருக்கோ மிக‌த் தாம‌த‌மாய். ஆனால், கிடைத்த‌ ப‌ல‌ன் வ‌ர‌மா? சாப‌மா? என்ப‌தில் தான் இருக்கிற‌து வாழ்க்கையின் புதிர்.

உண்மைத்தமிழன் said...

[[[கணினி said...

நல்லவர்கள் மறக்கப்படுவதில்லை
http://biz-manju.blogspot.com/]]]

நிச்சயமாக..! அண்ணாவை நான் நினைவு கூர்வதற்குக் காரணம் அவர் தன் கட்சியினரையும், தம்பிமார்களையும் நடத்தியவிதம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Archana said...

ippadithan vaarisugalum agivida kudathu endrudhaan kudumbathukaga maangu maangunu ulaikurar namma kalaingar. idha poye thappa pesureengalae :)]]]

தன் குடும்பத்தைப் பற்றியே யோசிக்கிறாரே தாத்தா..! தனக்கு வாழ்வு கொடுத்த அண்ணாவின் குடும்பத்தினரை இப்படி அம்போன்னு விட்டுட்டாரேன்னு கொஞ்சூண்டு யோசிக்க வேண்டியிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

அண்ணே!இவ்வளவு தாமதமா இதைச் சொல்வது:( கழக கண்மனிகள் யாராவது கருத்து தெரிவித்தார்களா?]]]

எப்படிச் சொல்லுவாங்க அவங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[vasan said...

கால‌ம் எல்லோருக்கும், ச‌ரியான ப‌ல‌னைத்தான் த‌ருகிற‌து. மிக‌ விரைவில் சிலருக்கு, சில‌ருக்கோ மிக‌த் தாம‌த‌மாய். ஆனால், கிடைத்த‌ ப‌ல‌ன் வ‌ர‌மா? சாப‌மா? என்ப‌தில்தான் இருக்கிற‌து வாழ்க்கையின் புதிர்.]]]

அதுதான் சில சமயத்தில் எரிச்சலாவும் உள்ளது. இவ்வளவு தாமதமாகவா நீதி கொடுப்பது..? காலம், கருணாநிதிக்கு என்ன கொடுக்கப் போகிறது என்பதைப் பார்க்கவும் ஆவலாக உள்ளேன். பார்ப்போம்..!

புரட்சிக்காரன் said...

ஹிட்ச்காக ரொம்ப செய்திகளை பத்திரிக்கையில் இருந்தும் செய்தி தாள்களில் இருந்தும் காப்பி செய்து உங்கள் வலைப்பூவில் போட்டு உங்கள் தனித்தன்மையையும் கிரிஎட்டிவிட்டியையும் இழந்து விட்டீங்க....இனிமேல் உங்கள் நம்பகத்தன்மை போய்விட்டது.நிஜமாகவே ஒரு விசயத்தை இனி நீங்கள் கற்பனை செய்துபோட்டாலும் இதை எங்கு காப்பி அடித்தாரோ இவர் என்று நினைக்க தோன்றும் என்னைக்காவது ஒன்னு போட்டா சரி....எப்போதுமே காபி அடிச்சீங்கன்ன உங்களுக்கு எதுக்கு பிளாக்.செய்திகளை நாங்க பேப்பர்லே படிச்சுக்க மாட்டோமா? யோசிங்க...

உண்மைத்தமிழன் said...

[[[புரட்சிக்காரன் said...

ஹிட்ச்காக ரொம்ப செய்திகளை பத்திரிக்கையில் இருந்தும் செய்தி தாள்களில் இருந்தும் காப்பி செய்து உங்கள் வலைப்பூவில் போட்டு உங்கள் தனித்தன்மையையும் கிரிஎட்டிவிட்டியையும் இழந்து விட்டீங்க. இனிமேல் உங்கள் நம்பகத்தன்மை போய்விட்டது. நிஜமாகவே ஒரு விசயத்தை இனி நீங்கள் கற்பனை செய்துபோட்டாலும் இதை எங்கு காப்பி அடித்தாரோ இவர் என்று நினைக்க தோன்றும் என்னைக்காவது ஒன்னு போட்டா சரி. எப்போதுமே காபி அடிச்சீங்கன்ன உங்களுக்கு எதுக்கு பிளாக். செய்திகளை நாங்க பேப்பர்லே படிச்சுக்க மாட்டோமா? யோசிங்க.]]]


நண்பரே.. இந்தச் செய்தி புதிய தமிழகம் என்ற புதிய வாரப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இப்படியொரு பத்திரிகை வெளி வருவது தமிழ்நாட்டிலேயே எத்தனை பேருக்கு தெரியும். சொல்லுங்கள்..!

அத்தோடு இந்த விஷயத்தை உலகத் தமிழர்களிடத்திலெல்லாம் கொண்டு போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால்தான் தட்டச்சு செய்து இடுகிறேன்..!

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்..!