108 ஆம்புலன்ஸ் திட்டத்தை உருவாக்கியதே எம்.ஜி.ஆர்.தான்..!

14-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'108 ஆம்புலன்ஸ் திட்டத்​தைக் கொண்டு​வந்ததே தி.மு.க. அரசுதான்!’ என்று மார் தட்டு​கிறார் கருணாநிதி. ஆனால், 'இது மத்திய அரசின் திட்டம். இந்த உண்மையைச் சொன்னால், தி.மு.க-வுக்கு ஏன் வலிக்கிறது?’ என்று வடிவேலு பாணியில், 'போன மாசம்’ வரையிலும் மட்டம் தட்டியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அன்புமணி ராமதாஸும், 'நான்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினேன்’ என்று சந்தடி சாக்கில் சிந்து பாடுகிறார்.

'உண்மையில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?’ இதற்கு பதில் சொல்கிறார் பத்திரிகையாளர் அன்பு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தான் பெற்ற ஆவணங்களை ஆதாரம் காட்டி இதைச் சொல்கிறார்...!

''இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் கொண்டு வந்ததே எம்.ஜி.ஆர்.தான்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தவர், ''ஆமாம். பழைய டப்பாவுக்குப் புது பெயின்ட் அடித்துவிட்டு, 'நான்தான்... நான்தான்...’ என்று ஆளாளுக்கு இங்கே தம்பட்ட அரசியல் நடத்துகிறார்கள்.

30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5-ம் தேதியே, இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார் அன்றைய முதல்வர். அதன் பின்னணி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் நடராசன், 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ தொடர்பாக வரைவுத் திட்டத்தை, அப்போதைய தமிழக அரசின் திட்டக் குழுவிடம் ஒப்படைத்தார். உடனே, திட்டக் குழுவும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் முராரி.

டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி, 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ என்று இதற்குப் பெயரும் சூட்டப்பட்டது.


இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்​பட்டன. கூடவே உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன.

1980-ல் உள்துறைச் செயலாளராக இருந்த எச்.எம்.சிங், திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார். திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்காக, காவல் துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் லலிதா காமேஸ்வரன், சென்னை மருத்து​வக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றையும் எம்.ஜி.ஆர். அமைத்தார்.

அதன்படி 140 ஆம்புலன்ஸ்கள், 39 அவசர மருத்துவ சேவை மையங்கள், போலீஸ் வயர்லெஸ் கருவிகள் எனத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன. குறிப்பிட்ட மருத்துவ​மனைகளில் அட்மிட் ஆகும் நோயாளி​களுக்கு, சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேரமும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், 30 தனியார் மருத்து​வமனைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதோடு, புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழி காணப்பட்டது.

இந்த ஆம்புலன்ஸ்களில் பணிபுரிவதற்காக, புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்றும் சென்னையிலேயே துவங்கப்பட்டது. அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு, 7-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

எவ்வளவு பெரிய நல்ல திட்டமானாலும் எதிர்க் கட்சி கொண்டுவந்த திட்டம் என்றால், குழி தோண்டிப் புதைப்பதுதானே ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் கழகங்கள் போட்டி போட்டு செய்யும். இங்கேயும் அதுதான் நடந்தது.

1978-ல் தொடங்கப்​பட்ட இந்தத் திட்டம் எம்.ஜி.ஆர். இயற்கை எய்த பின்பு, ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்தவரை தொடர்ந்தது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி, முதல் வேலையாக அந்தத் திட்டத்துக்கு மூடு விழா நடத்தினார்.

ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளிடம் ஒப்படைத்துவிட்டார். ஆக, எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் திட்டம் போட்டு ஒழித்துக் கட்டியது தி.மு.க.!


ஆனால், இப்போது அதே திட்டத்தை '108 ஆம்புலன்ஸ்’ என்று பெயர் மாற்றி வைத்துக்கொண்டு ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.


இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனில் ஆரம்பித்து அன்புமணி ராமதாஸ், கருணாநிதி வரையிலும் எல்லோருமே '108 ஆம்புலன்ஸ் திட்டத்தை’ வைத்து மக்களைக் குழப்பி 'ஓட்டு அரசியல்’ செய்கிறார்கள்.  அதனால்தான், இந்தத் திட்டத்தைப் பற்றிய உண்மையான தகவல்களை வெளியே கொண்டுவர நீண்ட காலம் முயற்சி செய்தேன். இனிமேலும், '108 ஆம்புலன்ஸ்’க்கு சொந்தம் கொண்டாடுவோரின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது!''  என்கிறார் அன்பு!

எம்.ஜி.ஆர். எழுந்து வந்தா கேட்கப் போகிறார் என்ற தைரியத்தில் இன்னும் என்னென்ன பொய்கள் எல்லாம் உலவுகின்றனவோ!

நன்றி : ஜூனியர் விகடன்-17-04-2011

27 comments:

Feroz said...

தோண்ட தோண்ட என்னென்ன பேய்கள் வரப்போகிறதோ??? நம்ம கருணாநிதிக்கு தான் famemaniya என்ற புகழ் விரும்பும் நோய் இருக்கு இல்லையா விடுங்க நண்பா.

Feroz said...

தற்புகழ்சி நோய்க்கு நானாக கொடுத்த பெயா். திமுக அன்பு நண்பா்கள் கோபப்பட வேண்டாம். நட்புடன்

raja said...

மிக மிக அவசரம்.. முகநூல் மற்றும் மின்னஞ்சல் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.. தயை கூர்ந்து மேற்கண்ட இணைப்பில் கொடுங்கோலன் இராஜபக்சேவுக்கு எதிராக அனைவரும் வாக்களிக்கவேண்டும்...அவன் தான் ஒரு நல்ல உலகத்தலைவர் போர்வையில் நுழைய வாக்கு கேட்டு டைம் இதழில் பங்கேற்கிறான்... வாக்களிப்பீர் அவனுக்கு எதிராக குழந்தைகளை கொன்ற கொடூரன் ஒழிந்து போக.

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100

khaleel said...

திட்டத்தை யார் வேண்டுமானாலும் கொண்டு வந்திருக்கலாம் . யார் அதை வெற்றி கரகமாக செயல்படுத்தியது? எனக்கும் தான் ஆயிரம் திட்டங்கள் இருகின்றன.

PRINCENRSAMA said...

ஆம்புலன்சைக் குறைசொல்லி பாட்டெல்லாம் பாடுவார்கள் அந்தக் காலத்துக் கம்யூனிஸ்டுகள்! அப்படித் தான் இருந்தது திட்டம். இன்று போல் முழு வீச்சில் செயல்படாமல் முடங்கியிருந்ததால் தான் அரசு மருத்துவமனை மூலமாகவாவது அதை நடைமுறைப்படுத்த முயன்றார்கள். மீண்டும் அதற்கென வெற்றிகரமான வாய்ப்பை இப்போதுதான் செய்து காட்டியிருக்கிறார்கள். என்ன பண்றது உ.த-வுக்கும், ஜூ.வி-க்கும் பிடித்திருக்கும் கலைஞர் எதிர்ப்பு மேனியா எதையாவது எழுதி கலைஞரைக் குறைத்துமதிப்பிடச் சொல்லுகிறது... அண்ணே! ஏதும் உடல்நிலை சரியில்லைன்னா நீங்க பாட்டுக்கு முருகனை 108 தடவை கூப்பிட்டுட்டு விட்டுடப்போறீங்க.... கோவணாண்டி முருகன் காப்பாத்த மாட்டான். மொதல்ல.. 108-க்கு கூப்பிடுங்க... கம்பவுண்டர் முருகனாவது வந்து காப்பாத்துவான்.

பொன் மாலை பொழுது said...

//இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன்//


சரி, பாராட்டுக்கள். இதனை அறிந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர்கள்தான் எதிர் கட்சிக்காரர்கள் எம் .ஜி. ஆரின் திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். அந்த அம்மா இரண்டு முறை ஆட்சி செய்தாரே அப்போது ஏன் இந்த திட்டத்தை நடைமுறை படுத்தவில்ல? என்ற கேள்வியை கேட்கிறீர்களா? இந்த கேவியை கேட்கும் நேர்மைதிரம் உண்டா உங்களிடம்? யார் எந்த பெயரில் கொண்டுவந்தால் என்ன? மக்கள் அதனால் பயன் பெறுவது மட்டுமே முக்கியம்.

வெறுமனே பத்திரிக்கை குப்பைகள் சொல்வதெல்லாம் வேத வாக்காக எடுத்துக்கொண்டு அவைகளை காபி பேஸ்ட் செய்து பதிவெழுதலாம்தப்பில்லை. ஆனால் நாம் சொல்ல வரும் கருத்துக்கு நாம் நேர்மை உள்ளவராக இருக்க வேண்டும்.

மொக்கராசா said...

ஒரே முடிவாதான் இருக்கங்க போல ... நீங்கள் தி.மு.க வால் நேரடியாக எதேனும் பாதிக்கபட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்...

இப்படி பிரிச்சி வாங்குறேங்களே........

Prabu Krishna said...

இப்போதே காங்கிரஸ் கொண்டு வந்ததை தான் கொண்டு வந்ததாக இவர் பீலா விடுகிறார். ஒரு உண்மைதகவலை சொன்னமைக்கு பாராட்டுக்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Feroz said...

தோண்ட தோண்ட என்னென்ன பேய்கள் வரப் போகிறதோ??? நம்ம கருணாநிதிக்கு famemaniya என்ற புகழ் விரும்பும் நோய் இருக்கு. விடுங்க நண்பா.]]]

அந்த நோயை நாம்தான் குணப்படுத்த வேண்டும்.. அதற்கு ஒரே வழி இது போன்ற தேர்தல் நடைமுறைகள்தான். வேறென்ன செய்வது..?

உண்மைத்தமிழன் said...

[[[Feroz said...

தற்புகழ்சி நோய்க்கு நானாக கொடுத்த பெயா். திமுக அன்பு நண்பா்கள் கோபப்பட வேண்டாம். நட்புடன்.]]]

எதுக்குக் கோபப்பட போறாங்க.. உண்மையைத்தானே சொல்லியிருக்கீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

மிக மிக அவசரம். முகநூல் மற்றும் மின்னஞ்சல் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.. தயை கூர்ந்து மேற்கண்ட இணைப்பில் கொடுங்கோலன் இராஜபக்சேவுக்கு எதிராக அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவன், தான் ஒரு நல்ல உலகத் தலைவர் போர்வையில் நுழைய வாக்கு கேட்டு டைம் இதழில் பங்கேற்கிறான். வாக்களிப்பீர் அவனுக்கு எதிராக குழந்தைகளை கொன்ற கொடூரன் ஒழிந்து போக.

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100]]]

எதிர்த்து வாக்களித்துவிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[khaleel said...

திட்டத்தை யார் வேண்டுமானாலும் கொண்டு வந்திருக்கலாம். யார் அதை வெற்றிகரகமாக செயல்படுத்தியது? எனக்கும்தான் ஆயிரம் திட்டங்கள் இருகின்றன.]]]

திட்டத்தைத்தான் தான்தான் துவக்கினேன் என்று மேடைக்கு மேடை சொல்வது பொய் அல்லவா..? அதைத்தான் இதில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[PRINCENRSAMA said...
ஆம்புலன்சை குறை சொல்லி பாட்டெல்லாம் பாடுவார்கள் அந்தக் காலத்துக் கம்யூனிஸ்டுகள்! அப்படித்தான் இருந்தது திட்டம். இன்று போல் முழு வீச்சில் செயல்படாமல் முடங்கியிருந்ததால்தான் அரசு மருத்துவமனை மூலமாகவாவது அதை நடைமுறைப்படுத்த முயன்றார்கள். மீண்டும் அதற்கென வெற்றிகரமான வாய்ப்பை இப்போதுதான் செய்து காட்டியிருக்கிறார்கள். என்ன பண்றது உ.த-வுக்கும், ஜூ.வி-க்கும் பிடித்திருக்கும் கலைஞர் எதிர்ப்பு மேனியா எதையாவது எழுதி கலைஞரைக் குறைத்து மதிப்பிடச் சொல்லுகிறது. அண்ணே! ஏதும் உடல்நிலை சரியில்லைன்னா நீங்க பாட்டுக்கு முருகனை 108 தடவை கூப்பிட்டுட்டு விட்டுடப் போறீங்க. கோவணாண்டி முருகன் காப்பாத்த மாட்டான். மொதல்ல 108-க்கு கூப்பிடுங்க. கம்பவுண்டர் முருகனாவது வந்து காப்பாத்துவான்.]]]

நம்பாதவர்களையும் நம்ப வைப்பதுதான் முருகனின் வேலை. அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறான் என் அப்பன்..!

அறிவுரைக்கு மிக்க நன்றி தம்பி..

உண்மைத்தமிழன் said...

[[[கக்கு - மாணிக்கம் said...

//இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன்//

சரி, பாராட்டுக்கள். இதனை அறிந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர்கள்தான் எதிர் கட்சிக்காரர்கள் எம்.ஜி.ஆரின் திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். அந்த அம்மா இரண்டு முறை ஆட்சி செய்தாரே அப்போது ஏன் இந்த திட்டத்தை நடைமுறை படுத்தவில்ல? என்ற கேள்வியை கேட்கிறீர்களா? இந்த கேவியை கேட்கும் நேர்மைதிரம் உண்டா உங்களிடம்? யார் எந்த பெயரில் கொண்டு வந்தால் என்ன? மக்கள் அதனால் பயன் பெறுவது மட்டுமே முக்கியம்.

வெறுமனே பத்திரிக்கை குப்பைகள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அவைகளை காபி பேஸ்ட் செய்து பதிவெழுதலாம் தப்பில்லை. ஆனால் நாம் சொல்ல வரும் கருத்துக்கு நாம் நேர்மை உள்ளவராக இருக்க வேண்டும்.]]]

மக்கள் பயன் பெறுகிறார்கள் என்பது இரண்டாம்பட்சம்.. இந்தக் கட்டுரை அதற்கு முக்கியத்துவம் தரவில்லை..!

இந்தத் திட்டத்தை யார் முதலில் செயல்படுத்தியது என்கிற பிரச்சினையைத்தான் பார்க்கிறது..!

புரிந்து கொள்ளுங்கள். தங்கள் வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[மொக்கராசா said...

ஒரே முடிவாதான் இருக்கங்க போல. நீங்கள் தி.மு.க.வால் நேரடியாக எதேனும் பாதிக்கபட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இப்படி பிரிச்சி வாங்குறேங்களே.]]]

ஆமாம்.. முகமூடி அணிந்த கொள்ளைக்காரர்களான தி.மு.க.வால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பலே பிரபு said...

இப்போதே காங்கிரஸ் கொண்டு வந்ததை தான் கொண்டு வந்ததாக இவர் பீலா விடுகிறார். ஒரு உண்மைத் தகவலை சொன்னமைக்கு பாராட்டுக்கள்.]]]

எம்.ஜி.ஆர். கொண்டு வந்ததை முடக்கி வைத்தார்..!

இப்போது காங்கிரஸ் அரசு நிதியுதவி செய்து நடத்துவதையும் தானே நடத்துவதாக ரீல் விடுகிறார்..!

ரீல் விடுவதுதான் இவருக்கு கை வந்த கலையாச்சே..!

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

அப்படிப் பார்த்தால் சத்துணவு (மதிய உணவு) திட்டம் கொண்டு வந்தது காமராஜ். எம் ஜி ஆருக்கு ஏன் கிரிடிட் கொடுக்கப்படுகிறது? ஒரிஜினல் ஐடியா காமராஜருடையதுதானே?

சரி, ஆத்தா முதன் முதலில் ஆட்சிக்கு வந்த போதே எம் ஜி ஆர் ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவு படுத்தி கிழி கிழினு கிழிச்சு இருக்கலாமே?

ஏன் செய்யவில்லை???

நீங்க பேசுற நியாயம் எல்லாம் அநியாயமாத்தான் இருக்கு "உண்மைத்தமிழரே"!

Muthu said...

Ayya,

Voting has been completed. Take Rest.

பொன் மாலை பொழுது said...

//இந்தத் திட்டத்தை யார் முதலில் செயல்படுத்தியது என்கிற பிரச்சினையைத்தான் பார்க்கிறது..!//


சரி, இந்த திட்டத்தை முதலில் செயல் படுத்தியவர் எம்.ஜி.ஆர். அதன் பின்னர் தி மு.க. வினர் வந்தார்கள், இவர்கள் எதிர் கட்சிக்காரர்கள், கிடப்பில் போட்டார்கள். சரி, பின்னர் இரண்டு முறை ஆட்சி செய்த அந்த "தர்ம தாய் " ஏன் இதே திட்டத்தை நிறைவேற்றவில்லை? புரிந்து கொண்டுதான் மீண்டும் கேட்கிறேன். கருணாநிதிக்கும் இந்த மகா மம்மிக்கும் என்னைய்யா பெரிய வேறுபாட்டை கண்டுவிட்டீர்கள்? சும்மா ஏதாவது எழுதி மம்மியை தூக்கி வைத்துகொண்டு ஆடாதீர்கள். நேர்மையடன் எதையும் எழுத்தும் துணிவு வேண்டும் அன்பரே. என்னவோ எம்.ஜி.ஆர். தான் சகல திட்டங்களுக்கும் முன்னோடி என்று கண்மூடித்தனமாக காவடி எடுக்க வேண்டாம். அவருக்கு முன்னரே பல தலைவர்கள் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளனர். எம்.ஜி. ஆர். மட்டுமே சகலமும் செய்தார் என்ற மாயை யை உண்டாக்காதீர்கள். அவைகள் இங்கு நிற்காது.
நன்றி. உண்மைத்தமிழன் .

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

அப்படிப் பார்த்தால் சத்துணவு (மதிய உணவு) திட்டம் கொண்டு வந்தது காமராஜ். எம்.ஜி.ஆருக்கு ஏன் கிரிடிட் கொடுக்கப்படுகிறது? ஒரிஜினல் ஐடியா காமராஜருடையதுதானே?]]]

யார் இல்லை என்று சொன்னது..? மதிய உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாகச் செயல்படுத்தியது காமராஜர்தான்.. இதில் சந்தேகமில்லை. இதனை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தியது எம்.ஜி.ஆர். இதனை யாரும் மறுக்க முடியாது.. மறக்கவும் முடியாது..!

[[[சரி, ஆத்தா முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோதே எம் ஜி ஆர் ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்தி கிழி கிழினு கிழிச்சு இருக்கலாமே? ஏன் செய்யவில்லை???]]]

ஆத்தாவுக்கு தனது உ.பி.சகோதரியின் சொந்தங்கள் சம்பாதிக்க வழி, வகை செய்யவே நேரம் சரியா இருக்கு. இதெல்லாம் எங்க அந்தம்மா பார்க்கப் போகுது..?

[[[நீங்க பேசுற நியாயம் எல்லாம் அநியாயமாத்தான் இருக்கு "உண்மைத்தமிழரே"!]]]

ஹா.. ஹா.. அப்படியே நினைத்துக் கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Muthu Thamizhini said...

Ayya, Voting has been completed. Take Rest.]]]

இல்லண்ணே.. இனிமேல்தான் நிறைய இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[கக்கு - மாணிக்கம் said...

//இந்தத் திட்டத்தை யார் முதலில் செயல்படுத்தியது என்கிற பிரச்சினையைத்தான் பார்க்கிறது..!//

சரி, இந்த திட்டத்தை முதலில் செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அதன் பின்னர் தி மு.க.வினர் வந்தார்கள், இவர்கள் எதிர்கட்சிக்காரர்கள், கிடப்பில் போட்டார்கள். சரி, பின்னர் இரண்டு முறை ஆட்சி செய்த அந்த "தர்ம தாய் " ஏன் இதே திட்டத்தை நிறைவேற்றவில்லை? புரிந்து கொண்டுதான் மீண்டும் கேட்கிறேன். கருணாநிதிக்கும் இந்த மகா மம்மிக்கும் என்னைய்யா பெரிய வேறுபாட்டை கண்டுவிட்டீர்கள்? சும்மா ஏதாவது எழுதி மம்மியை தூக்கி வைத்துகொண்டு ஆடாதீர்கள். நேர்மையடன் எதையும் எழுத்தும் துணிவு வேண்டும் அன்பரே. என்னவோ எம்.ஜி.ஆர்.தான் சகல திட்டங்களுக்கும் முன்னோடி என்று கண்மூடித்தனமாக காவடி எடுக்க வேண்டாம். அவருக்கு முன்னரே பல தலைவர்கள் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளனர். எம்.ஜி.ஆர். மட்டுமே சகலமும் செய்தார் என்ற மாயையை உண்டாக்காதீர்கள். அவைகள் இங்கு நிற்காது.
நன்றி. உண்மைத்தமிழன்.]]]

நான் சொல்லாத ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னதாக நினைத்து ஆட வேண்டாம் மாணிக்கம் ஸார்..!

எம்.ஜி.ஆர்.தான் அனைத்தையும் கொண்டு வந்தார் என்று நான் எங்குமே சொல்லவில்லை..

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டது என்கிற ஒரே ஒரு கருத்து மட்டுமே இங்கே சொல்லப்பட்டிருக்கிறது..! அவ்வளவுதான்..!

Thirumurugan MPK said...

For all u guys i want to tell u onething, 108 ambulance service is a project from satyam computers, Ramalinga raju wanted to create a 911 like system in india, and he created this in southren india, with his own finance and investment, and even now its been maintened but satyam only. Neither Central or State Government can take credit to this, i have worked in this project launch.

vels-erode said...

தமிழ் நாட்டைகெடுத்ததே எம்ஜி.ஆர்தான்....................

vels-erode said...

அப்ப ஏண்டா ஜூ.வி. நாயே உங்கம்ம இநத திட்டத்தை இததனை நாளாய் கொண்டு வரலை?

Unknown said...

திரு வேலுமணி அவர்களே....... உங்கள் கருத்தில் 3 ஆமைகள் மட்டுமே இருக்கிறது....... "பொறாமை-இயலாமை-அறியாமை". அமரர் எம்.ஜி.ஆர். ஆட்சி தமிழகத்தின் பொற்காலம். ஆகையால்தான், மக்கள் திலகம் மறைந்து கால் நூற்றாண்டு ஆகியும் மக்கள் இன்னும் அவரை மறக்க வில்லை. காமராசர் தான் வாழ்ந்த காலத்திலேயே செல்லா காசாகி விட்டார். பதவி ஆசையால் நேருவுக்கு சலாம் போட்டு தேவிகுளம் பீர்மேடு தாலுக்காகளை மலையாளிகளுக்கு தூக்கி கொடுத்ததை மறக்க முடியுமா? இந்திராவுக்கு சலாம் போட்டு கருணாநிதி சிங்களவனக்கு கச்ச தீவை தூக்கி கொடுத்தது போன்றுதானே காமராசரும் செய்தார்! மதிய உணவு திட்டம் பற்றி எதுவும் தெரியாமல் இங்கு பலர் பிதற்றி இருக்கிறார்கள்! அந்த உணவு அமெரிக்க கடலில் கொட்ட வேண்டிய மட்டமான அரிசி மேலும் அந்த மதிய உணவு ஒரு குட்டை காமராசர் அதை விரிவு படுத்த வில்லை. புரட்சி தலைவரின் சத்துணவு என்பது இந்து மகா சமுத்திரம். தினசரி 65 லட்சம் பள்ளி மாணவ மாணவியர் பயன் அடைந்தார்கள்! சத்துணவு திட்டம் மூலமாக எம்.ஜி.ஆர் இன்று இந்தியாவிற்கே வழிகாட்டி என்று சோனியா கருணாநிதியை வைத்து கொண்டே பாரத பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் புரட்சி தலைவருக்கு புகழாரம் சூடினார்! எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்திருந்தால் ஆம்புலன்ஸ் 108 திட்டத்தை இதை விட சிறப்பாக மேம்படுத்தி இருப்பார் அது மட்டுமல்ல 2009 இல் 1 1/2 லட்சம் தமிழ் மக்களையும் காப்பற்றி இருப்பார். தமிழனக்கு ஒரு தனி நாடு பிறந்து இருக்கும்......... இதை கூட பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களை அன்றிலிருந்தே எதிர்த்து வந்த மருத்துவர் ராமதாஸ் இன்று 2013 சொல்கிறார் என்றால் மக்கள் திலகத்தின் மகிமையை பார்த்து கொள்ளுங்கள்!