ஆ.ராசாவின் உதவியால் 37 வயதில் 4500 கோடி சம்பாதித்த சாமர்த்தியம்!

12-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தோண்டத் தோண்ட புதையலைப் போல ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிக் கொண்டவர்களின் ஆதி அந்தத்தைத் தோண்டினால் இன்னமும் பல ஊழல்களும், முறைகேடுகளும் வெளியே வந்து கொண்டிருக்கின்றன..!

அந்த வகையில் லேட்டஸ்ட்டாக கைதாகியுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் பல்வாவின் கைது பற்றியும், அவரது வளர்ச்சி,  பிஸினஸ், சொத்துகள் பற்றியதுமான கட்டுரை இது..!

ஆ.ராசா, சித்தார்த் பரூவா, ஆர்.கே.சந்தோலியா ஆகிய மூவரை அடுத்து... நான்காவதாகக் கைதாகப் போவது ஆ.ராசாவின் சகோதரராகத்தான் இருக்கும் என்று டெல்லி மீடியாக்கள் நினைத்திருந்தன. அப்படி இல்லாவிட்டாலும்கூட, சென்னையில்தான் அடுத்த கைது இருக்கும் என்று நினைத்திருந்தார்கள்.

ஆனால் துளியும் எதிர்பார்க்காமல் தன் நான்காவது பாய்ச்சலை மும்பையில் காட்டியது சி.பி.ஐ.! ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் பால்வா கைதானதில் கார்ப்பரேட் உலகத்துக்கு பலத்த அதிர்ச்சி! காரணம் இந்தியாவின் 66-வது பெரிய பணக்காரர் அவர்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை அடிமாட்டு விலைக்கு வாங்கி, அபார விலைக்கு விற்றதன் மூலம் இந்த பால்வா குவித்த கோடிகள் எவ்வளவு என்பதைத்தான் தன் கஸ்டடியில் வைத்து விசாரிக்கத் துவங்கியிருக்கிறது சி.பி.ஐ. இவருடைய டி.பி.ரியாலிடி கம்பெனியையும், இதிலிருந்து நிழல் போல உருவான குபீர் கம்பெனிகளையும் மொத்தமாக தன் 'ஸ்கேனரில்' விட்டு சலித்துக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ.!

 'பால்வாவுக்கு கோடிகள் கொட்டியது எப்படி?' என்பது தவிர, 'கலைஞர் டி.வி-க்கு ஏன் 206 கோடி கொடுத்திருக்கிறார்? உண்மையிலேயே அது கடன்தானா? அல்லது, கடன் போல கை மாற்றப்பட்ட 'நன்கொடை' பணமா?’ என்ற ரீதியில் சி.பி.ஐ. இப்போது பால்வாவை கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

அரேபியா மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகள் வழியாக மறுபடி இந்தியாவுக்குள் வந்து சேர்ந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை டி.பி. ரியாலிடியின் இந்த நிழல் கம்பெனிகள் யாருக்கெல்லாம் கைமாற்றிக் கொடுத்தன என்று விசாரிக்கும்போது... திடுக்கிடும் தமிழகத் தொடர்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்கிறார்கள்.

யார் இந்த ஷாகித் பால்வா?

'நொட்டை நொள்ளை காரணங்கள் சொல்லி இழுத்தடிக்காதீர்கள். எங்களோடு சேர்ந்து உடனே டெல்லி கிளம்புங்கள். விமானத்துக்கு லேட் ஆகிறது!'' என்று சி.பி.ஐ. கடுமை காட்ட... ''எக்ஸ்க்யூஸ் மீ... விமான நேரம் பற்றி நீங்கள் கவலைப்​படாதீர்கள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என் சொந்த விமானத்திலேயே டெல்லிக்குப் போய்விடலாம்!'' என்று சொல்லி, தன்னைக் கைது பண்ணிய டீமையே திகைக்க வைத்திருக்கிறார் பால்வா! அதான் அவருடைய 'பியூட்டி'யே! அப்படியிருக்க பால்வா பற்றி மேலும் விவரமாக நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் எப்படி?

37 வயதாகும் பால்வா சன்னி முஸ்லிம். பூர்வீகம் குஜராத் என்றாலும் நீண்ட காலமாக மும்பைவாசி. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுக் குடும்பத் தொழிலான ஹோட்டலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் பால்வாவுக்கு மும்பையைச் சேர்ந்த அண்டர்வேர்ல்ட் தாதாக்களின் தொடர்பு  கிடைத்தது. இதில் தாவூத் இப்ராஹிமும் ஒருவர். இந்தத் தொடர்புகளோடு அரசியல் தொடர்புகளும் ஏற்பட்டது. இதில் முக்கியமானவர் மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக். இந்த தொடர்புகள் மூலம் தனது குடும்பத்தின் ஹோட்டல் தொழிலை விட்டுவிட்டு, ரியல் எஸ்டேட் தொழிலில் குதித்தார் பால்வா.

ஆரம்பத்தில் தேஷ்முக்குடான தொடர்புகளைக் கொண்டு இந்தத் தொழிலை விரிவுபடுத்தினார். மும்பையில் ரியல் எஸ்டேட் உச்சத்தைத் தொடும் முக்கியப் பகுதிகளில் ஆங்காங்கே குடிசைவாசிகள் குடியிருந்தனர். இவர்களை அரசியல் துணையோடு காலி செய்துவிட்டு அங்கு அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டினார் பால்வா. இப்படி இவர் அகற்றிய குடிசைப் பகுதிகள் ஏராளம். 61  மில்லியன் சதுர அடியில் அமையும் 'மும்பை இந்தியா டவர்’ என்ற 135 மாடி அடுக்கு மாடிக் கட்டடம் போன்ற பணிகளில் இவரது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில் யார் யார் முதலீடுகள் இருக்கிறது என்பதும் மர்மமான விஷயம்தான். இது குறித்தும் பால்வாவிடம் விசாரணை நடக்கிறது.

2006-ல் வினோத் கோயங்கா என்கிற ரியல் எஸ்டேட் பிரமுகர் இவரோடு கூட்டு சேர்ந்தார். கோயங்காவுக்கு வேறு விதமான அரசி​யல் தொடர்புகளும் உண்டு. இருவரும் இணைந்து டபுள் பவரோடு பல காரியங்களைப் பார்த்தார்கள்.

கோயங்காவோடு கூட்டணி சேர்ந்த நேரம், மும்பையில் லி மெரிடியன் ஹோட்டலைக் கட்டும் கான்ட்ராக்ட் கிடைக்க, 'டயனமிக்ஸ் பால்வா குழுமம்’ என்ற நிறுவனம் உதயமானது. இந்தக் கட்டுமானம், இவர்களுக்கு மும்பையில் ஒரு அடையாளத்தைக் கொடுக்க... 'பிஸினஸுக்கு முக்கியம், நிறுவனத்தின் இமேஜ்’ என்பதை உணர்ந்த பால்வா, ஒரு விளம்பர நிறுவனத்தை அணுகினார். அந்த விளம்பர நிறுவனம் சொன்ன ஆலோசனையின்படி பால்வாவும் கோயங்காவும் தங்கள் கம்பெனியின் பெயரை முதல் வேலையாக 'டி.பி. குரூப்’ என்று மாற்றினார்கள்.

மத்தியில் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதைத் தொடர்ந்தே இவருக்கு சுக்கிர தசை. இந்த நிறுவனத்துக்கு எப்படிப் பணம் வருகிறது, எங்கிருந்து வருகிறது என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டது.


வெவ்வேறு பெயர்களில் பல நிறுவனங்களைத் துவக்கினார் பால்வா. கட்டடம் கட்டும் தொழிலைத் தாண்டி பழங்கள், காய்கறி, சினிமா என்று பல தரப்பட்ட நிறுவனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அல்லது, அந்த துறைகள் மூலமாக பணம் வந்து சேர்ந்தது போல கணக்கு காட்டும் வேலையை நடத்தினார்.

'லோடா குழுமம்’ என்ற நிறுவனம் 127 மாடிகள் கொண்ட ஒரு கட்டடத்தை மும்பையில் கட்டப் போவதாக அறிவிக்க.... பால்வா, தன்னை இந்தத் தொழிலின் பிஸ்தா என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு, அதைவிட சுமார் இரண்டு மடங்கு உசரக் கட்டடம் கட்டுவதற்கு 'ஹயாத் ஹோட்டல்’ குரூப்புடன் ஒப்பந்தம் போட்டு, இந்தத் தொழில்காரர்கள் அத்தனை பேரையும் மூச்சடைக்க வைத்தார்!

கடந்த ஆண்டு மும்பையில் பல கட்டுமான நிறுவனங்கள், நிதி நெருக்​கடியில் ஆட்டம் காண... பால்வாவின் வருமானம் மட்டும் இரண்டு மடங்காக உயர்ந்தது! பரம்பரையாக கட்டுமானத் தொழிலில் இருந்தவர்​களெல்லாம் டிபி குரூப் கொழித்த விதம் கண்டு முழி பிதுங்கிப் ​போனார்கள்.

தனிப்பட்ட வகையில் 4,500 கோடி அளவுக்கு சொத்து வைத்திருக்கும் இவரை இந்தியாவின் 66-வது பணக்காரராக 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை சேர்த்தது. அதோடு, இவரது தொழில் கூட்டாளியான வினோத் கோயங்காவும் பால்வாவோடு சேர்ந்து இந்த பட்டியலில் இடம் பிடித்தார்.

பால்வாவுக்கு கார்களின் மீது அதீத மோகம்! இவர் விரும்பிப் பயன்படுத்துவது, 1 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ். திருமண​மாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் பால்வாவுக்கு. ஆனால், புது மாப்பிள்ளை மாதிரி கட்டுக் குலையாமல்தான் இருப்பார் மனுஷர். அடுத்தவர்களைக் கவரும்படி உடம்பை கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அந்தளவுக்கு அக்கறை காட்டுவார். தினமும் உடற்பயிற்சி செய்யத் தவறுவதில்லை.

ஆ.ராசாவுடன் இந்த 'பில்டிங்' கூட்டணிக்கு அறிமுகம் ஏற்பட்டது தனி கதை! ''மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சராக ராசா இருந்தபோது இந்த பால்வா குரூப்புடன் அறிமுகம் ஏற்பட்டது. முக்கியமான இடங்களில், உயர்ந்த கட்டடங்கள் கட்டும்போது சுற்றுச் சூழல் துறையின் தயவு தேவை. இந்த அனுமதியைப் பெற்றுத் தருவதற்காக இந்தத் துறையில் ஏராளமான இடைத் தரகர்களும் இருப்பார்கள்.

ஆனால், ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா போன்ற படே முதலைகள் நேரடியாகவே அதிகாரத்தின் உச்ச மையத்தை சந்தித்துப் பரிமாற்றங்களை நடத்திக் கொள்ள ஆரம்பித்தன. அங்கே இங்கே கொடுத்து, பல இடங்களில் கை மாறி வரும்போது அடைகிற லாபம் குறைகிறது என்பதால்... இப்படி நேரடி சந்திப்புகள் ஊக்குவிக்கப்பட்டன. அப்படித்தான் நடந்தது அறிமுகம்!'' என்று கூறும் டெல்லி அதிகாரிகள் சிலர்,

''பணப் பரிமாற்றம் மட்டுமின்றி பார்ட்டி கலாசாரமும் இது மாதிரி விஷயங்களில் கொடி கட்டிப் பறக்கும். மும்பை, டெல்லி  குர்ஹான், நொய்டா பகுதியில் பல கேளிக்கை விடுதிகளை இந்த ரியல் எஸ்டேட் குரூப் தங்கள் தொடர்பில் வைத்திருந்தது. ஒரு அமைச்சருக்கும் ஒரு தொழில் அதிபருக்குமான தொடர்புகளைத் தாண்டி இறுக்கமான நட்பாக மாற்றியதும் இந்த மாதிரி பார்ட்டிகளாக இருக்கலாம். அதுவே, பிறகு ஆ.ராசா இடம் மாறி தொலைத்தொடர்புத் துறைக்கு அமைச்சராக வந்த பிறகு இறுக்கம் அடைந்திருக்கலாம்!'' என்றும் கூறுகிறார்கள் இந்த அதிகாரிகள்.

பொதுவாக, டெல்லி வட்டாரங்களில் தேன் ருசிக்க ஆசைப்படும் அரசியல்வாதிகள் தங்கள் துறையில் உள்ள டாப் லெவல் அதிகாரிகளையும் அதில் கூட்டாளிகள் ஆக்கிக் கொள்வதுதான் வழக்கம். அலுவலக வளாகத்துக்குள் படு பிசினஸ் லைக்காகப் பேசிக்கொள்ளும் இவர்கள், வெளியில் வந்ததும் தோளில் கைபோடாத குறையாக இழைந்து குழைவார்கள். அப்படிப்பட்ட குழைவான சந்தர்ப்பங்களை ரியல் எஸ்டேட் முதலைகள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கலாம்.

தொலைத் தொடர்புத் துறைக்குத் தொடர்பே இல்லாத பில்டிங் கம்பெனிகள் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற மர்மத்தின் முக்கிய முடிச்சு இங்கேதான் ஒளிந்திருக்கிறது. பதவியில் இருக்கும் அரசியல்வாதிக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டிய அதிகாரிகளும் ஆரம்பத்திலிருந்தே கூட்டாளிகளாக இருந்துவிட்டதால்... கிடுகிடுவென்று தப்பான பாதையில் முன்னேறிப் போய்விட்டார்கள்!'' என்று விளக்கம் கொடுக்கிறார்கள் இந்த நேர்மையான டெல்லி அதிகாரிகள்.

''பால்வாவுக்கு சொந்தமான ஸ்வான் டெலிகாம் நிறுவனம், இந்தியாவில் 13 சர்க்கிள்களில் தனது சேவையை நடத்த அரசுக்கு செலுத்திய தொகை 1,537 கோடிதான். '2001-ம் ஆண்டு நிலவரத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்ட விலை. வெளிப்படையான நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல், ஏதோ ஓட்டப் பந்தயம் ரேஞ்சுக்கு முதலில் வந்து ஒப்பந்தப் புள்ளியை கொடுத்தவர்களுக்கே முன்னுரிமை என்பது மாதிரி ஏற்றுக்கொள்ள முடியாத அழுகுனி விதிமுறைகளை வைத்து ஸ்வான் நிறுவனத்துக்கு இந்த உரிமங்களைக் கொடுத்தார் ஆ.ராசா.

சேவையைத் துவங்கும் முன்னரே, 45 சதவிகித உரிமத்தை அரபுநாட்டின் எட்டிஸாலட் என்ற நிறுவனத்துக்கு 4,200 கோடிக்கு விற்பனை செய்தது. நோகாமல் நோம்பு கும்பிடுவது மாதிரி, இதில் பால்வா 2,663 கோடி லாபம் பார்த்தார்!'' என்பது சி.பி.ஐ-யின் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று.

இதைப் போலவே 22 சர்க்கிள்களில் தொலைத்தொடர்பு சேவையைத் துவங்க உரிமம் வாங்கிய இன்னொரு நிறுவனமான யூனிடெக் இதே ரீதியில் 4,442 கோடி லாபம் பார்த்தது.

பால்வாவுடன் தொடர்புடைய சினியுக் ஃபிலிம்ஸில் சோதனை நடத்தியபோதே பல விஷயங்களை சி.பி.ஐ. தோண்டி எடுத்துவிட்டது. ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஹோட்டல், சினிமா, காய்கறி என்று பல துறைகளில் பால்வாவுக்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அதாவது, அங்கிருந்தெல்லாம் பணம் நியாயமான வழிகளில் வருகிற மாதிரி 'பிளாக் அண்டு ஒயிட்' கணக்கு எழுதி வைத்திருக்கிறார்கள்.

''கலைஞர் டி.வி-க்கு ஒரே நிறுவனத்தில் இருந்து பணம் கொடுத்தால் சந்தேகம் வரலாம் என்றோ... என்னவோ தன்னுடைய பல கம்பெனிகளையும் பயன்படுத்தியிருக்கிறார் பால்வா!'' என்று சொல்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

''இதன் முதற்கட்டமாக, டி.பி.எஸ். ரியாலிட்டி, டி.பி. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் போன்ற 19 நிறுவனங்களிடம் இருந்து, அவருடைய டைனமிக்ஸ் ரியாலிட்டிக்கு சிறுகச் சிறுக பல கோடிகள் மாற்றப்​பட்டிருக்கிறது. பிறகு அந்தப் பணம் குசேகான் என்ற கம்பெனிக்கு 209 கோடியை மொத்தமாகக் கைமாற்றி இருக்கிறது. அதிலிருந்து, சினியுக் நிறுவனத்துக்கு ஏறக்குறைய இதே தொகை கைமாறி... அதன் பிறகே, கலைஞர் டி.வி-க்கு 206 கோடி போய் சேர்ந்திருக்கிறது!'' என்பதுதான் சி.பி.ஐ. கையில் உள்ள ஆவணங்களில் ஒளிந்திருக்கும் ரகசியமாம்.

இவரின் ஸ்வான் டெலிகாம் கம்பெனி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் அனலில் சிவக்க ஆரம்பித்தபோதுகூட பால்வா அசரவில்லை. காரணம், மகாராஷ்டிர அரசியலில் வெகு காலமாக செல்வாக்கு பெற்றிருக்கும் ஒரு மெகா தலையின் ஆதரவு இவருக்கு இருந்ததுதான் என்கிறார்கள்.

ஸ்வான் டெலிகாம், எட்டிஸாலட், டிபி குரூப் என்று சங்கிலி பிடித்த மாதிரி நிகழ்ந்த வளர்ச்சி பற்றி இவரது தொழில் போட்டியாளர்களும் இவரைப் பற்றி சி.பி.ஐ-க்குப் போட்டுக் கொடுத்தபடி இருக்கிறார்கள் இப்போது..!

தற்போது ஆ.ராசாவை மேலும் நான்கு நாள் கஸ்டடி எடுத்திருக்கும் சி.பி.ஐ., ஷாகித் பால்வாவையும் அதே நான்கு நாட்கள் தன் வசம் எடுத்திருக்கிறது. கோடிகளைக் கொட்டிய கொண்டாட்டமான இந்த நட்பின் பின்னணியை சி.பி.ஐ. தோண்டித் துருவும்போதுதான்... 2-ஜி பணம் இன்னும் எங்கெல்லாம் பாய்ந்திருக்கிறது என்பது தெளிவாகும்!'' என்றும் சொல்கிறார்கள் இந்த அதிகாரிகள்.

யார் அந்த மந்திரி?

சில மாதங்களுக்கு முன்பு மும்பை டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்குள் வருமானவரித் துறை அதிகாரிகள் நுழைந்து, கேள்விகளால் துளைத்து எடுத்தார்களாம். அப்போது மத்திய அமைச்சர் ஒருவர் போன்செய்து, 'மேற்கொண்டு விசாரிக்க வேண்டாம். அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறி விடுங்கள்’ என்று உத்தரவு போட்டாராம். ''விசாரணையை முடுக்கிவிட வேண்டிய ஒருவரே, முடக்கியது ஏன்?'' என்று இப்போது பிரச்னை கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. அவர் யார் என்றும் இப்போது மீடியாக்கள் விசாரிக்கத் தொடங்கியுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டில் கலைஞர் டி.வி.!

''கலைஞர் டி.வி-யின் உருவாக்கத்தில் ஸ்பெக்ட்ரம் பணம் விளையாடி இருக்கிறதா?'' என்பது குறித்த கேள்வி உச்ச நீதிமன்றத்திலும், சி.பி.ஐ. நீதிமன்றத்திலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி 10-ம் தேதி, இந்த வழக்குத் தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ''அரசியல் தலைவருக்கு சொந்தமான டி.வி-க்கு (கலைஞர் டி.வி. என்று பெயரைச் சொல்லாமல்!) பால்வா பணம் கொடுத்திருக்கிறார்!'' என்று கூறப்பட்டது. உடனே நீதிபதிகள், ''இதில் மேலும் விவரங்களை ஒரிரு நாளில் விசாரித்துப் பெறமுடியவில்லை என்றால், ஆ.ராசாவை எத்தனை நாள் வேண்டுமானலும் கஸ்டடியில் எடுத்து, உண்மைகளைப் பெறுங்கள்!'' என்று கூறியிருக்கிறார்கள்.

அதே நாளில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆ.ராசா தொடர்பான கஸ்டடி குறித்து விசாரணை நடந்தது. ''கூடுதலாக நான்கு நாட்கள் ஆ.ராசாவை விசாரிக்க வேண்டும். ஒரு டி.வி-க்கு பணம் தரப்பட்டது பற்றி இனிமேல்தான் விசாரிக்க வேண்டும்!'' என்று சி.பி.ஐ. தரப்பு கோரிக்கை வைத்தது. 'கருணாநிதி தனது பதிலை வெளிப்படையாக சொல்லியாக வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார்’ என்கிறார்கள் டெல்லியில்!  இது குறித்து கலைஞர் டி.வி-யின் இயக்குநர்களில் ஒருவரான சரத்குமார் ரெட்டியிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரிக்கும் என்கிறார்கள்.

நன்றி : ஜூனியர் விகடன் - 16-02-2011

35 comments:

ம.தி.சுதா said...

ஹ..ஹ..ஹ.. குப்பையை கிளர்றாங்க.. கிளற கிளற என்ன வரும்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Anisha Yunus said...

Subhanallaah....for their luxuries and filthy affairs in t name of party, how many how many lives and their earnings have they corroded... Incredible indian politics!!

செங்கோவி said...

அய்யய்யோ..இந்தக் கஸ்மாலங்க பேரை ஞாபகம் வக்கிறதே கஷ்டமா இருக்கே..புதுசு புதுசா வர்றாங்களே..

அ.சந்தர் சிங். said...

இந்த தி.மு.க.வினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.
திருடர்கள் முன்னேற்றக் கழகம்தான் தி.மு.க. என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த சொட்டை இருக்கிறானே,கல்யாண வீட்டில் அவன்தான் மாப்பிள்ளை.இழவு
வீட்டில் அவன்தான் பிணம்,என்ற எண்ணம் அவனுக்கு.இருடி ,,இருக்குடி மவனே உனக்கு.!
மாலை ,மரியாதை எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.அப்புறம் உனக்கு ஒரேயடியாய் உனக்கு
ங்குதான்

ராஜ நடராஜன் said...

//அய்யய்யோ..இந்தக் கஸ்மாலங்க பேரை ஞாபகம் வக்கிறதே கஷ்டமா இருக்கே..புதுசு புதுசா வர்றாங்களே..//

இதுக்குத்தான் இந்திப்படம் பார்க்கனுமிங்கிறது.சக்தி கபூர்ன்னு ஒரு வில்லன்,காமெடி மற்றும் பாலிவுட்டுக்கு புதுசா வரும் நடிகைகளை பிராக்கெட் போடுறவரு நம்ம ஊரு பதினாறு வயசு ஸ்ரீதேவியை ஒரு படத்துல பல்மா.....பல்மா ன்னு கூப்பிடுவாரு.

இப்ப பேரு மறக்காதே:)

ஸ்ரீராம். said...

பாய்ச்சல் வேகம் எல்லாம் சரிதான்....முடிவா என்ன செயவாங்கன்னுதான் பார்க்கணும். எத்தனையோ ஊழல்கள் படமெடுத்து ஆடி, விசாரணை ஆகி கடைசியில் அவற்றின் நிலை நமக்குத் தெரியும். ம்..ஹூம்...

iniyavan said...

உதா சார்,

ஒரு பத்திரிக்கையிலிருந்து ஒரு கட்டுரையை அப்படியே எடுத்து உங்கள் பிளாக்கில் போடும்போது, கட்டுரையின் ஆரம்பத்திலேயே 'இந்த கட்டுரை ஜீவியிலிருந்து எடுக்கப்பட்டது' என்று எழுதுங்கள். அதுதான் முறை.

இந்த கட்டுரை ஏதோ நீங்களே எழுதியது போல உள்ளது. கடைசியில்தான் நன்றி ஜீவி என்று போட்டுள்ளீர்கள்.

R.Gopi said...

இந்த ஆட்டையை போடும் “திருக்குவளை தீயசக்தி” மற்றும் அதன் ஜெகஜ்ஜால கூட்டணியை உடைத்து எறியுங்கள்...

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...

ஹ..ஹ..ஹ.. குப்பையை கிளர்றாங்க.. கிளற கிளற என்ன வரும்..?

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமிதான்.]]]

குப்பைகள்தான் வரும்..! அதுதான் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன..!

உண்மைத்தமிழன் said...

[[[அன்னு said...
Subhanallaah....for their luxuries and filthy affairs in t name of party, how many how many lives and their earnings have they corroded... Incredible indian politics!!]]]

இவர்களை நம்பி கட்சிக்காக உயிரைக் கொடுத்து உழைக்கும் தொண்டர்கள்தான் பாவமானவர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
அய்யய்யோ. இந்தக் கஸ்மாலங்க பேரை ஞாபகம் வக்கிறதே கஷ்டமா இருக்கே. புதுசு புதுசா வர்றாங்களே..]]]

வேற வழியில்லை.. இந்தியாவில் பிறந்து தொலைத்ததற்காக இதையெல்லாம் அனுபவிக்கத்தான் வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[cs said...
இந்த தி.மு.க.வினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். திருடர்கள் முன்னேற்றக் கழகம்தான் தி.மு.க. என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.]]]

ஓகே.. ஓகே.. ஓகே..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//அய்யய்யோ..இந்தக் கஸ்மாலங்க பேரை ஞாபகம் வக்கிறதே கஷ்டமா இருக்கே..புதுசு புதுசா வர்றாங்களே..//

இதுக்குத்தான் இந்திப் படம் பார்க்கனுமிங்கிறது. சக்தி கபூர்ன்னு ஒரு வில்லன், காமெடி மற்றும் பாலிவுட்டுக்கு புதுசா வரும் நடிகைகளை பிராக்கெட் போடுறவரு நம்ம ஊரு பதினாறு வயசு ஸ்ரீதேவியை ஒரு படத்துல பல்மா பல்மான்னு கூப்பிடுவாரு.

இப்ப பேரு மறக்காதே:)]]]

ஹா.. ஹா.. ஹா.. ராஜநடராஜன் ஸார்.. கலக்கிட்டீங்க..! எப்படி ஸார் இப்படியெல்லாம்..?

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
பாய்ச்சல் வேகம் எல்லாம் சரிதான். முடிவா என்ன செயவாங்கன்னுதான் பார்க்கணும். எத்தனையோ ஊழல்கள் படமெடுத்து ஆடி, விசாரணை ஆகி கடைசியில் அவற்றின் நிலை நமக்குத் தெரியும். ம். ஹூம்...]]]

இதே கூட்டணி தொடர்ந்தால் போபர்ஸ் நிலைதான் இதுக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[என். உலகநாதன் said...
உதா சார், ஒரு பத்திரிக்கையிலிருந்து ஒரு கட்டுரையை அப்படியே எடுத்து உங்கள் பிளாக்கில் போடும்போது, கட்டுரையின் ஆரம்பத்திலேயே 'இந்த கட்டுரை ஜீவியிலிருந்து எடுக்கப்பட்டது' என்று எழுதுங்கள். அதுதான் முறை. இந்த கட்டுரை ஏதோ நீங்களே எழுதியது போல உள்ளது. கடைசியில்தான் நன்றி ஜீ.வி. என்று போட்டுள்ளீர்கள்.]]]

அப்பத்தான் கடைசிவரையிலும் படிப்பாங்க ஸார்.. இல்லாட்டி படிக்காம போயிருவாங்க..! எப்படியாவது படிக்க வைக்கணும்னு இருக்கேன்.. அதுனால இப்படித்தான்.. கோச்சுக்காதீங்க.. யாரும் திட்ட மாட்டாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
இந்த ஆட்டையை போடும் “திருக்குவளை தீயசக்தி” மற்றும் அதன் ஜெகஜ்ஜால கூட்டணியை உடைத்து எறியுங்கள்.]]]

ம்.. ம்.. ம்.. இது மட்டும் நடந்திட்டால் அதிசயம்தான்..!

Jerry Eshananda said...

பலே..அல்வா.

Indian Share Market said...

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் பண பட்டுவாடா செய்த தி.மு.க., காங்கிரஸ், போன்ற அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் அனைவரையும், இராசாவிற்கு ஆதரவு தேடிக் கொடுத்திட செயல்படும் புள்ளிகள் அனைவரையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்! திருட்டுப் பொருட்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்வது போல் இந்த திருட்டுப் பணத்தையும் பெற்றவர்களிடம் இருந்து பறிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! இதனை திட்டமிட்டு செயல்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளவர்களிடம் மக்கள் ஆட்சியைக் கொடுக்க வேண்டும்! திருட்டுப் பணத்தை கையில் வைத்திருப்பதும் குற்றம் என்பதை அனைவரும் உணர வேண்டும்!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெரி ஈசானந்தன். said...

பலே. அல்வா.]]]

மிகப் பெரிய அல்வா ஜெரி..! வருஷக்கணக்காக கொடுத்துக்கிட்டே இருக்காரே தாத்தா.. நாம இவருக்கு இந்தத் தடவை கண்டிப்பா திருப்பிக் கொடுக்கோணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் பண பட்டுவாடா செய்த தி.மு.க., காங்கிரஸ், போன்ற அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் அனைவரையும், இராசாவிற்கு ஆதரவு தேடிக் கொடுத்திட செயல்படும் புள்ளிகள் அனைவரையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்! திருட்டுப் பொருட்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்வது போல் இந்த திருட்டுப் பணத்தையும் பெற்றவர்களிடம் இருந்து பறிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! இதனை திட்டமிட்டு செயல்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளவர்களிடம் மக்கள் ஆட்சியைக் கொடுக்க வேண்டும்! திருட்டுப் பணத்தை கையில் வைத்திருப்பதும் குற்றம் என்பதை அனைவரும் உணர வேண்டும்!]]]

இப்படியெல்லாம் நானும் கனவு கண்டுக்கிட்டுத்தான் இருக்கேன். ஒண்ணும் நடக்கத்தான் மாட்டேங்குது..!

beer mohamed said...

இதை படிக்கவே தலை சுத்துது, அய்ய்ய்ய்ய்ய்யோ உண்மை வெளி வரும் நாள் விரைவில்
www.athiradenews.blogspot.com

உண்மைத்தமிழன் said...

[[[beer mohamed said...

இதை படிக்கவே தலை சுத்துது, அய்ய்ய்ய்ய்ய்யோ உண்மை வெளி வரும் நாள் விரைவில்
www.athiradenews.blogspot.com]]]

இனிமேல் இது தெரிஞ்சு என்னாகப் போகுது..? அதான் இதைவிட சூப்பர் பாஸ்ட்டுல தாத்தா தாவிட்டாரே..?

சும்மா.. டைம் பாஸ் said...

யார் அந்த மந்திரி? who-else, it should be "thirutu" Sharad Pawar news indicates balwa has a great support from this dog. check in the Wikipedia about this dog's profile how many corruption charges and accusation against him. including fast unto death protest by social activist Anna Hazare charging him for shielding corrupt officers. still this is one of the king maker in our country.

உண்மைத்தமிழன் said...

[[[சும்மா.. டைம் பாஸ் said...
யார் அந்த மந்திரி? who-else, it should be "thirutu" Sharad Pawar news indicates balwa has a great support from this dog. check in the Wikipedia about this dog's profile how many corruption charges and accusation against him. including fast unto death protest by social activist Anna Hazare charging him for shielding corrupt officers. still this is one of the king maker in our country.]]]

நமது இந்தியத் திருநாட்டின் கேடு கெட்ட அரசியலில் இதுவும் ஒன்று..!

N said...

In another 70 days , the present govt is going to change.

Then we will see how you and Savukku are going to chamcha to JJ gumbal....

Have fun!!

vels-erode said...

அதெல்லாம் சரிப்பா...................பணம் எப்போ அரசு கஜானாவுக்கு வரும்? அதச் சொல்லுங்க?

Sankar Gurusamy said...

The government should investigate the people becoming Rich very fast like this. In straight forward ways, it is impossible to become Rich like this. Very sad part is the persons who has to do the investigations are partners with these Criminals. Only GOD Can save this country.

http://anubhudhi.blogspot.com/

ரிஷி said...

//'நொட்டை நொள்ளை காரணங்கள் சொல்லி இழுத்தடிக்காதீர்கள். எங்களோடு சேர்ந்து உடனே டெல்லி கிளம்புங்கள். விமானத்துக்கு லேட் ஆகிறது!'' என்று சி.பி.ஐ. கடுமை காட்ட... ''எக்ஸ்க்யூஸ் மீ... விமான நேரம் பற்றி நீங்கள் கவலைப்​படாதீர்கள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என் சொந்த விமானத்திலேயே டெல்லிக்குப் போய்விடலாம்!'' என்று சொல்லி, தன்னைக் கைது பண்ணிய டீமையே திகைக்க வைத்திருக்கிறார் பால்வா! //

இதுவே ஒரு போலிஸ்காரரிடம் சாதாரண பொதுஜனம் மாட்டிக்கொண்டு இது போல பதிலளித்தால் என்ன நடக்கும் தெரியுமா? செவுட்டுல ரப்ப்புனு ஒரு அறை விழும்! "ஏண்டா ராஸ்கல்! நடர்றா..ஸ்டேஷனுக்கு. முட்டிக்கு முட்டிப் பேத்துடுவேன் பன்னாடை!" இப்படித்தான் வசவு வந்து விழுந்திருக்கும்.

பால்வாக்கள், ராசாக்கள், கருணாநிதிகள், சோனியாக்கள்.. இப்படி யாருக்கும் இது போன்ற வசவுகள் விழாது. கொள்ளையடித்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!!!!

உண்மைத்தமிழன் said...

[[[N said...

In another 70 days, the present govt is going to change. Then we will see how you and Savukku are going to chamcha to JJ gumbal....

Have fun!!]]]

நிச்சயமாக அவரும் மாற மாட்டார். நானும் மாற மாட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[velumani1 said...
அதெல்லாம் சரிப்பா. பணம் எப்போ அரசு கஜானாவுக்கு வரும்? அதச் சொல்லுங்க..?]]]

பணமா..? அதையெல்லாம் கண்டு பிடிச்சாத்தான்னே கொண்டு வந்து சேர்க்குறது..? அது அதோ கதிதான்..

உண்மைத்தமிழன் said...

[[[Sankar Gurusamy said...

The government should investigate the people becoming Rich very fast like this. In straight forward ways, it is impossible to become Rich like this. Very sad part is the persons who has to do the investigations are partners with these Criminals. Only GOD Can save this country.

http://anubhudhi.blogspot.com/]]]

-)))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//'நொட்டை நொள்ளை காரணங்கள் சொல்லி இழுத்தடிக்காதீர்கள். எங்களோடு சேர்ந்து உடனே டெல்லி கிளம்புங்கள். விமானத்துக்கு லேட் ஆகிறது!'' என்று சி.பி.ஐ. கடுமை காட்ட... ''எக்ஸ்க்யூஸ் மீ... விமான நேரம் பற்றி நீங்கள் கவலைப்​படாதீர்கள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என் சொந்த விமானத்திலேயே டெல்லிக்குப் போய்விடலாம்!'' என்று சொல்லி, தன்னைக் கைது பண்ணிய டீமையே திகைக்க வைத்திருக்கிறார் பால்வா! //

இதுவே ஒரு போலிஸ்காரரிடம் சாதாரண பொதுஜனம் மாட்டிக் கொண்டு இது போல பதிலளித்தால் என்ன நடக்கும் தெரியுமா? செவுட்டுல ரப்ப்புனு ஒரு அறை விழும்! "ஏண்டா ராஸ்கல்! நடர்றா ஸ்டேஷனுக்கு. முட்டிக்கு முட்டிப் பேத்துடுவேன் பன்னாடை!" இப்படித்தான் வசவு வந்து விழுந்திருக்கும்.

பால்வாக்கள், ராசாக்கள், கருணாநிதிகள், சோனியாக்கள்.. இப்படி யாருக்கும் இது போன்ற வசவுகள் விழாது. கொள்ளையடித்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!!!!]]]

ஹி.. ஹி.. உண்மையை இப்படி பட்டவர்த்தனமா உடைக்குறீங்களே ரிஷி.. நீங்க இதுக்கு முன்னாடி பத்திரிகையாளராக இருந்தவரா..? சந்தேகமா இருக்கு..!

Breeze said...

/*'லோடா குழுமம்’ என்ற நிறுவனம் 127 மாடிகள் கொண்ட ஒரு கட்டடத்தை மும்பையில் கட்டப் போவதாக அறிவிக்க.... பால்வா, தன்னை இந்தத் தொழிலின் பிஸ்தா என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு, அதைவிட சுமார் இரண்டு மடங்கு உசரக் கட்டடம் கட்டுவதற்கு 'ஹயாத் ஹோட்டல்’ குரூப்புடன் ஒப்பந்தம் போட்டு, இந்தத் தொழில்காரர்கள் அத்தனை பேரையும் மூச்சடைக்க வைத்தார்!*/

இரண்டு மடங்கு என்றால் 250 மாடிகள். ஆனால் 'ஹயாத் ஹோட்டல்' இன் மொத்த எண்ணிக்கையே 125 தான்.
http://en.wikipedia.org/wiki/India_Tower

உண்மைத்தமிழன் said...

[[[Breeze said...

/*'லோடா குழுமம்’ என்ற நிறுவனம் 127 மாடிகள் கொண்ட ஒரு கட்டடத்தை மும்பையில் கட்டப் போவதாக அறிவிக்க.... பால்வா, தன்னை இந்தத் தொழிலின் பிஸ்தா என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு, அதைவிட சுமார் இரண்டு மடங்கு உசரக் கட்டடம் கட்டுவதற்கு 'ஹயாத் ஹோட்டல்’ குரூப்புடன் ஒப்பந்தம் போட்டு, இந்தத் தொழில்காரர்கள் அத்தனை பேரையும் மூச்சடைக்க வைத்தார்!*/

இரண்டு மடங்கு என்றால் 250 மாடிகள். ஆனால் 'ஹயாத் ஹோட்டல்' இன் மொத்த எண்ணிக்கையே 125தான்.
http://en.wikipedia.org/wiki/India_Tower]]]

ரொம்ப உன்னிப்பா கவனிக்கிறீங்க போல.. ஜூனியர்விகடன்காரர்கள் இதைக் கொஞ்சம் கவனித்தால் நல்லது.!

உண்மைத்தமிழன் said...

[[[அசோக்.S said...
இணைப்பு கொடுத்துள்ளேன் அய்யா நன்றாக இருக்கிறது என்று http://enjoymails.blogspot.com/]]]

மி்க்க நன்றி அசோக்..!