நடுநசி நாய்கள் - பார்க்கக் கூடாத சினிமா..!

18-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது..! இயக்குநர்கள் சங்க ஆண்டு விழா மேடையில் “இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்” என்று அறிவித்தவுடன் பாரதிராஜாவே புருவத்தை உயர்த்தும்வகையில் கேலரியில் கை தட்டல் தூள் பறந்தது..!

இன்றைக்கு கமலா தியேட்டரில் எழுத்து-இயக்கம் கெளதம் வாசுதேவ் மேனன் என்பதை டைட்டிலில் பார்த்தவுடனும் ரசிகர்களின் கை தட்டல் அசத்தல்..!


எல்லாம் கொஞ்ச நேரம்தான். படம் துவங்கி முதல் அரை மணி நேரத்திற்குள் அத்தனை பேரும் புஸ்ஸாகிப் போனார்கள். இடைவேளையிலேயே முணுமுணுத்தார்கள். “என்ன ஸார் இது? கெளதமா இப்படி எடுத்திருக்காரு?” என்று வாங்கிய பாப்கார்னை சாப்பிடக்கூட பிடிக்காமல் தயங்கி நின்றார்கள்.

மொத்தமாக படம் முடிந்தவுடன் தயக்கத்துடனேயே பெரும் வருத்தத்துடன் வெளியேறினார்கள்..! நம்பவே முடியவில்லை.. இப்படியொரு படத்தை இப்படியொரு இயக்குநர் எடுத்துக் கொடுப்பார் என்று..!

சிறு வயதில் தந்தையின் காமக் களியாட்டங்களை ஒளிந்திருந்து பார்த்து, பின்பு தந்தையாலேயே வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கூட்டுக் கலவியில் தந்தையாலேயே வற்புறுத்தி இயக்கப்பட்ட ஒரு சிறுவன், பெரியவனான பின்பு அதன் காரணமாகவே மனச்சிதைவுக்குள்ளாகி பெண்களைக் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்வதுதான் இத்திரைப்படத்தின் கதை..!

படத்தின் முதல் அதிர்ச்சியே தனது தந்தையின் மரணத்திற்குப் பின்பு தனக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்த பெண்ணையே கற்பழிக்கும் கொடூரம். இதற்குக் காரணமாக அவன் நினைப்பது பாலியல் வேட்கையில் சிக்கிக் கொண்டானாம்.. இதன் பின்பு இந்தப் பெண்மணி இவனது சதியால் இறந்த பின்பு “மீனாட்சியம்மா” என்று அழைக்கும்போதெல்லாம் எட்டி செவுட்டில் நாலு அறை, அறையலாமா என்று தோன்றுகின்ற அளவுக்கு வெறியை ஏற்படுத்தியிருக்கிறார் கெளதம். ஒருவேளை இதைத்தான் அவர் எதிர்பார்த்தாரோ என்னவோ..? நான் கோபப்படுவது.. அவனது கற்பழிக்கும் செயலுக்காக அல்ல.. “மீனாட்சியம்மா..” என்று கூப்பிடுவதற்காக..!

சிகப்பு ரோஜாக்கள், டியூஷன் டீச்சர், ரதி, ரதி நிர்வேதம், மழு என்று பல படங்களில் இருந்து நிறைய பாடம் படித்திருக்கிறார் கெளதம். ஆனால் இது நிச்சயம் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. தாலி செண்டிமெண்ட்டில் உருகிக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில்கூட அந்த விரகத்தை எல்லை மீறாமல் ஏன் கமலுக்கு இந்த நிலைமை என்பதை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் எல்லை மீறாமல்..!

சம்பவம் நடக்கும் இடம் மும்பை என்று பெயர் மாற்றி.. அங்கே இதெல்லாம் ரொம்பவே சகஜம் என்பதைப் போல் சொல்லாமல் சொல்லி எடுத்திருக்கிறார்கள். 8 வயது, 9 வயது 13 வயது என்றெல்லாம் வயது வாரியாகப் பிரித்த நிலையிலும் அந்தப் பையன் செக்ஸூவல் அட்டாக்கை தனது தந்தையிடம் இருந்தே பெறுகிறான் என்பதை இவ்வளவு விரிவாகக் காட்டத் தேவையே இல்லை..! இதுதான் கதை என்றால் இது தியேட்டர்களில் வருவதற்குத் தேவையா..?  போர்னோ டிவிடிக்களில்கூட இது தடை செய்யப்பட்ட ஒன்று..! பெரிய திரைகளில் சென்சார் போர்டுகாரர்களின் புண்ணியத்தால் நாம் பார்த்து மகிழ வேண்டிய கட்டாயம்..!

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் விஜய் டிவியில் பாரதிராஜா அப்படி பேசினாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கொடூரமானது இது..! என்னதான் ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தாலும் தனி நபராகக் கூட காணச் சகிக்கவில்லை..!

வீரா என்ற ஹீரோவின் செயல் முட்டாள்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும், அருவருப்பாகவும் உள்ளது. எந்தவிதத்திலும் இப்படம் சமூக நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை..! திகில் பட வரிசையில்கூட இதனைச் சேர்க்க முடியாது..

ஏதோ செக்ஸூவல் அத்துமீறல்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி சில போன் நம்பர்களை இறுதி டைட்டிலில் காட்டுகிறார்கள். முதலில் இப்படம் ஓடும் தியேட்டர்களை குற்றம் சுமத்திதான் புகார் செய்ய வேண்டும்..!

முன்னொரு காலத்தில் இடைவேளைக்கு முன்பு ஒரு பிட்டு காட்சி, இடைவேளைக்கு பின்பு இரண்டு பிட்டு காட்சிகள், இறுதியில் ஒரு டாக்டர் வந்து இப்படி அடுத்த பொண்ணு மேல கண்ணு வைக்குறது தப்பு. எய்ட்ஸ் வரும் என்று சொல்லி முடித்து வைப்பாரே பிட்டு படங்களில்.. அது போலத்தான் இருக்கிறது கெளதமின் இறுதி டைட்டில் சொற்பொழிவு..!

நேற்று 'நந்தி' என்றொரு படத்தை பார்த்தேன். கெளதமின் இந்தப் படத்திற்கு அது எவ்வளவோ பரவாயில்லை போல் தோன்றியது..!

அவசியம் சினிமாவுக்குப் போக வேண்டும் என்று தோன்றினால் 'சிறுத்தை' படத்தைக்கூட இரண்டாவது முறையாகப் போய்ப் பாருங்கள். புண்ணியமாகப் போகும்..

இது அவசியம் பார்க்கக் கூடாத, வேண்டாத திரைப்படம்..!

87 comments:

Unknown said...

என்னன்னே இப்படிச்சொல்லீட்டிங்க!இதையே ஆங்கிலத்தில் எடுத்திருந்தால் (மொழிமாற்றம்)இதையேதான் சொல்லுவீங்களா?

செங்கோவி said...

//முன்னொரு காலத்தில் இடைவேளைக்கு முன்பு ஒரு பிட்டு காட்சி, இடைவேளைக்கு பின்பு...// முன்னொரு காலத்தில்...முன்னொரு காலத்தில்...முன்னொரு காலத்தில்..!!!

Sukumar said...

நீங்க இவ்வளோ சின்னதா பதிவு எழுதியிருப்பதிலிருந்தே உங்க கோவம் எனக்கு புரியுது..

பரிசல்காரன் said...

அடி பலமா அண்ணாத்தே?

@சுகுமார்

:-)))

Rafeek said...

சரவணின் ஆதங்கம் நியாமானது. கண்டிப்பாக இது ஒரு அருவெறுப்பான உணர்வை அளிக்கும் திரைப்படம் என்பதில் மாற்று கருத்தே இல்லை எனலாம்.. ஆர்வத்துடன் கெளதம் படம் பார்க்க வந்து.. இனம் புரியாத அருவெறுப்போடு ஆடியன்ஸ் போவதை சத்யம் தியேட்டரில் காணமுடிந்தது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னனே நாய் கடிச்சிடுச்சா..

இந்த படம் நடுநிசி நாய்கள். அதனால் பகல் காட்சில பார்க்க கூடாது.

Bibiliobibuli said...

உண்மைத்தமிழன் நல்லா இருக்கீங்களா!

நான் ஒரு காலத்தில் வேறு வழியில்லாமல் புலம் பெயர் தேசத்தில் தமிழ் சினிமாவை விழுந்து, புரண்டு பார்த்தவள் தான். இப்போவெல்லாம் அது தவிர்க்க முடியாத காரணங்களால் மிக குறைந்துவிட்டது.

இதையும் (இனிமேலும்) பார்ப்பேனா தெரியாது. நான் சொல்ல வந்ததது இந்த சினிமா பற்றியல்ல. மனநோய் பற்றி தமிழ் சமூகத்தில் புரிதல் மிகக் குறைவே என்பது என் கருத்து. மனித மனம் மிக, மிக விந்தையானது. அது தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் போது தான் பெரும்பாலும் மற்றவர்களால் அறியப்படுகிறது. அது எல்லாவகையிலும் தடுத்து நிறுத்தப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ (மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை சாதரணமாக சட்டத்தால் தண்டிக்க முடியாது என்பது வேறு விடயம்) வேண்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகளை எந்தவிதத்திலும் துன்புறுத்துபவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே.

மனநோயும் ஓரளவுக்கு குணப்படுத்தக்கூடியதே. அது குடும்பத்தாலோ அல்லது நண்பர்களாலோ ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டால். அதற்குரிய திட்டங்கள் அரசுகளால் வைக்கப்படவேண்டும். புரியுது, நீங்க இதெல்லாம் நடக்கிற கதையா என்று நினைப்பது.

shortfilmindia.com said...

அண்ணே இது ஏ படம்.. தெரியுமில்ல.. எப்படி ?

வருண் said...

இந்தத் தலைப்புக்காகாவே இந்தப படத்தை புறக்கணிக்கனும்!

படம் மண்னைக்கவுச்சுனா நல்லதுதான்!

இல்லைனா த்ரில்லர் த்ரில்லர்னு அடுத்து நடுநிசி பன்னிகள் னு ஒரு படம் எடுத்து நாசம் பண்ணிடுவானுக தமிழ் சினிமாவை!

Prasanna Rajan said...

கள்ளக்காதலனுக்காக மகனின் தலையை வெட்டி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்த கதை தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது. நம்மில் பெரும்பாலானோர் இது பற்றி பேசத் தயங்குகிறோம். அதை கெளதம் கொஞ்சம் தைரியமாக எடுத்துள்ளார். Schizophrenia எனப்படும் மனநோயில் இதை விட தீவிரமான கேஸ்கள் உள்ளன...

மதுரை சரவணன் said...

காசு தப்பிச்சிறுச்சு... தலைவா நன்றி.

Unknown said...

These kind of movies are very important because every one shoudld be aware of the bad people around us. Have a unique view point.

Riyas said...

//இது அவசியம் பார்க்கக் கூடாத, வேண்டாத திரைப்படம்//

அவ்வ்வ்வ்வ்ளவு மோசமாவா இருக்கு...

Bibiliobibuli said...

// Schizophrenia எனப்படும் மனநோயில் இதை விட தீவிரமான கேஸ்கள் ...//

பிரசன்னா ராஜன், Schizophrenia பல theory களால் விளக்கப்படுகிறது. அதில் சில குறிப்பிட்ட வகைகள் தான் பெரும்பாலும் Extreme Case ஆகிறது. தவிர, மனநோய் என்பது கூட ஓர் தவறான வார்த்தைப் பிரயோகம் என்பது என் கருத்து. நானும் அதைத்தான் பாவித்து எழுதியிருக்கிறேன்.

Psychiatric Disorder என்கிற பதம் Schizophreinia யாவுக்கு அதிகமாக பொருந்தும் என்று நினைக்கிறேன். தமிழில் "மன நலம் குன்றிய" என்பது பொருந்துமா?

ஸ்ரீநாராயணன் said...

Idhu different genre,

If you are able to Charunivedita in books why are you not able to accept this movie...

Not able to understand ...

Unknown said...

நல்லா இருங்க சார் நீங்க நல்லா இருங்க சார் ... உங்கள மாதிரி ஆளுங்கள தான் சார் தேடிகிட்டு இருக்காய்ங்க சார் ...

வருண் said...

***ஸ்ரீநாராயணன் said...

Idhu different genre,

If you are able to Charunivedita in books why are you not able to accept this movie...

Not able to understand ...***

And who is CN fan here? I think truetamilan is not one of them. So, I understand at least his verdict for this movie! :)

Philosophy Prabhakaran said...

// எந்தவிதத்திலும் இப்படம் சமூக நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை..! //

வழிமொழிகிறேன்...

படம் முழுவதும் முடிந்ததும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைப் பற்றி இரண்டு ஸ்லைட் காட்டினார்கள். (மெசேஜ் சொல்றாராம்). அந்த கருத்தை சொல்வதற்கு இரண்டு மணிநேரம் கருமத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

தமிழ் அருவா! said...

//படம் துவங்கி முதல் அரை மணி நேரத்திற்குள் அத்தனை பேரும் புஸ்ஸாகிப் போனார்கள்//

அய்யா. இன்று முதல் தமிழில் ஏற்படும் பிழைகளை திருத்த அவதாரம் எடுத்திருக்கிறேன். //புஸ்ஸாகிப் போனார்கள்// என்று கேப் விட்டு எழுதாம புஸ்ஸாகிப்போனார்கள் என்று எழுதவும்.

//இப்படியொரு இயக்குநர் எடுத்துக் கொடுப்பார்// எடுத்துக்கொடுப்பார். இப்படி பல.


“அவசரத்தில் எழுதியது. இதெல்லாம் சகஜம்” என்று சொன்னால் தப்பு என்று நினைக்கிறேன். சின்னவனை தப்பா நினைக்க வேண்டாம்.

shanmugavel said...

பணம் கொடுத்து இதையெல்லாம் பார்க்கத்தான் வேணுமா?சும்மா கூப்பிட்டாலும் வேணாம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

முதலில் இப்படம் ஓடும் தியேட்டர்களை குற்றம் சுமத்திதான் புகார் செய்ய வேண்டும்..!//

:)) கோபம் புரியுது..

கெளதம் க்கும் மனநோய் தான் னு சமீப படங்களை பார்க்கும்போது தெரியுது.. நல்ல டாக்டரை பார்க்க சொல்லலாம்..

தமிழினியன் said...

Sukumar Swaminathan said...
நீங்க இவ்வளோ சின்னதா பதிவு எழுதியிருப்பதிலிருந்தே உங்க கோவம் எனக்கு புரியுது..

:):):)

சி.பி.செந்தில்குமார் said...

>>>>....நான் கோபப்படுவது.. அவனது கற்பழிக்கும் செயலுக்காக அல்ல.. “மீனாட்சியம்மா..” என்று கூப்பிடுவதற்காக..!


super annae

உண்மைத்தமிழன் said...

[[[thamizhan said...
என்னன்னே இப்படிச் சொல்லீட்டிங்க!இதையே ஆங்கிலத்தில் எடுத்திருந்தால் (மொழிமாற்றம்) இதையேதான் சொல்லுவீங்களா?]]]

சாப்ட் போர்னோ படம் என்று சொல்லியிருப்பேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

//முன்னொரு காலத்தில் இடைவேளைக்கு முன்பு ஒரு பிட்டு காட்சி, இடைவேளைக்கு பின்பு...//

முன்னொரு காலத்தில்...முன்னொரு காலத்தில்...முன்னொரு காலத்தில்..!!!]]]

ஆமா தம்பி.. பத்து வருஷத்துக்கு முன்னால..!

உண்மைத்தமிழன் said...

[[[Sukumar Swaminathan said...
நீங்க இவ்வளோ சின்னதா பதிவு எழுதியிருப்பதிலிருந்தே உங்க கோவம் எனக்கு புரியுது..]]]

போதும்.. போதும். இந்தப் படத்துக்கு இது போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பரிசல்காரன் said...

அடி பலமா அண்ணாத்தே?

@சுகுமார்

:-)))]]]

ரொம்ப பரிசலு..!

Prasanna Rajan said...

@ Rathi

மனநலம் குன்றிய என்பதை விட மனநலம் தவறிய என்ற வார்த்தை ப்ரயோகம் சரியாக இருக்கும். காரணம் நிறைய Schizophrenicகளுக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரியாது. ஆளவந்தான் கமல் கதாப்பாத்திரம் ஒரு சிறந்த உதாரணம்...

உண்மைத்தமிழன் said...

[[[Rafeek said...
சரவணின் ஆதங்கம் நியாமானது. கண்டிப்பாக இது ஒரு அருவெறுப்பான உணர்வை அளிக்கும் திரைப்படம் என்பதில் மாற்று கருத்தே இல்லை எனலாம். ஆர்வத்துடன் கெளதம் படம் பார்க்க வந்து இனம் புரியாத அருவெறுப்போடு ஆடியன்ஸ் போவதை சத்யம் தியேட்டரில் காண முடிந்தது.]]]

எல்லா தியேட்டர்களிலும் இதே நிலைமைதான் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னனே நாய் கடிச்சிடுச்சா.. இந்த படம் நடுநிசி நாய்கள். அதனால் பகல் காட்சில பார்க்க கூடாது.]]]

நான் ஈவினிங் ஷோதான் பார்த்தேன் தம்பி..

உண்மைத்தமிழன் said...

[[[Rathi said...
உண்மைத்தமிழன் நல்லா இருக்கீங்களா! நான் ஒரு காலத்தில் வேறு வழியில்லாமல் புலம் பெயர் தேசத்தில் தமிழ் சினிமாவை விழுந்து, புரண்டு பார்த்தவள்தான். இப்போவெல்லாம் அது தவிர்க்க முடியாத காரணங்களால் மிக குறைந்துவிட்டது. இதையும் (இனிமேலும்) பார்ப்பேனா தெரியாது. நான் சொல்ல வந்ததது இந்த சினிமா பற்றியல்ல. மன நோய் பற்றி தமிழ் சமூகத்தில் புரிதல் மிகக் குறைவே என்பது என் கருத்து. மனித மனம் மிக, மிக விந்தையானது. அது தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் போதுதான் பெரும்பாலும் மற்றவர்களால் அறியப்படுகிறது. அது எல்லாவகையிலும் தடுத்து நிறுத்தப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ (மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை சாதரணமாக சட்டத்தால் தண்டிக்க முடியாது என்பது வேறு விடயம்) வேண்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகளை எந்தவிதத்திலும் துன்புறுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. மனநோயும் ஓரளவுக்கு குணப்படுத்தக் கூடியதே. அது குடும்பத்தாலோ அல்லது நண்பர்களாலோ ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டால். அதற்குரிய திட்டங்கள் அரசுகளால் வைக்கப்படவேண்டும். புரியுது, நீங்க இதெல்லாம் நடக்கிற கதையா என்று நினைப்பது.]]]

மனநோய் பாதித்தவர்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் அதற்காக அவனது சொந்தக் கதையைச் சொல்கிறேன் என்று படம் பார்ப்பவர்களுக்கே மனநோய் வருவதைப் போல் படமெடுத்து காட்டினால் எப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[shortfilmindia.com said...
அண்ணே இது ஏ படம். தெரியுமில்ல. எப்படி?]]]

கேபிளு.. அது தெரிஞ்சுதானே உன்னைக் கூப்பிடாம தனியா போனேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...
இந்தத் தலைப்புக்காகாவே இந்தப படத்தை புறக்கணிக்கனும்! படம் மண்னைக் கவுச்சுனா நல்லதுதான்! இல்லைனா த்ரில்லர் த்ரில்லர்னு அடுத்து நடுநிசி பன்னிகள்னு ஒரு படம் எடுத்து நாசம் பண்ணிடுவானுக தமிழ் சினிமாவை!]]]

படம் தோல்வியடையும் என்றுதான் நினைக்கிறேன்..! பி அண்ட் சி-யில் இப்படம் ஓடாது.. ஏ சென்டர்களில் கெளதம்மேனனுக்காக பார்ப்பார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Prasanna Rajan said...
கள்ளக் காதலனுக்காக மகனின் தலையை வெட்டி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்த கதை தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது. நம்மில் பெரும்பாலானோர் இது பற்றி பேசத் தயங்குகிறோம். அதை கெளதம் கொஞ்சம் தைரியமாக எடுத்துள்ளார். Schizophrenia எனப்படும் மனநோயில் இதைவிட தீவிரமான கேஸ்கள் உள்ளன.]]]

சரி.. இவர்களை பகிரங்கப்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால் அதற்கு முறை இருக்கிறது.. எல்லாவற்றையும் படம் போட்டு விளக்கினால் எப்படி?

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை சரவணன் said...

காசு தப்பிச்சிறுச்சு... தலைவா நன்றி.]]]

நன்றி சரவணன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jegarajasingam said...
These kind of movies are very important because every one shoudld be aware of the bad people around us. Have a unique view point.]]]

அப்ப நீங்க அவசியம் குடும்பத்தோட போய் பாருங்க ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Riyas said...

//இது அவசியம் பார்க்கக் கூடாத, வேண்டாத திரைப்படம்//

அவ்வ்வ்வ்வ்ளவு மோசமாவா இருக்கு...]]]

ஆமாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Rathi said...

//Schizophrenia எனப்படும் மனநோயில் இதை விட தீவிரமான கேஸ்கள்//

பிரசன்னா ராஜன், Schizophrenia பல theoryகளால் விளக்கப்படுகிறது. அதில் சில குறிப்பிட்ட வகைகள்தான் பெரும்பாலும் Extreme Case ஆகிறது. தவிர, மனநோய் என்பது கூட ஓர் தவறான வார்த்தைப் பிரயோகம் என்பது என் கருத்து. நானும் அதைத்தான் பாவித்து எழுதியிருக்கிறேன்.
Psychiatric Disorder என்கிற பதம் Schizophreinia யாவுக்கு அதிகமாக பொருந்தும் என்று நினைக்கிறேன். தமிழில் "மன நலம் குன்றிய" என்பது பொருந்துமா?]]]

-))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீநாராயணன் said...
Idhu different genre... If you are able to Charunivedita in books why are you not able to accept this movie. Not able to understand.]]]

ஹா.. ஹா.. ஹா.. ஓ.. அதுனாலதான் சாருவுக்கு இப்போ கெளதம் மேனன் பிடிச்சுப் போனாரா..?

நாராயணன் ஸார்.. சாருவின் தேகம் நாவல் எனக்குப் பிடிக்கலை. அதேபோல் இந்தப் படமும் எனக்குப் பிடிக்கவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[புகழேந்தி said...
நல்லா இருங்க சார் நீங்க நல்லா இருங்க சார். உங்கள மாதிரி ஆளுங்களதான் சார் தேடிகிட்டு இருக்காய்ங்க சார்.]]]

புகழ்.. யார் என்னைத் தேடுறா..? அதைச் சொல்லுங்க முதல்ல..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

***ஸ்ரீநாராயணன் said...
Idhu different genre,
If you are able to Charunivedita in books why are you not able to accept this movie...
Not able to understand ...***

And who is CN fan here? I think truetamilan is not one of them. So, I understand at least his verdict for this movie! :)]]]

கரீக்ட்டு வருண்..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

//எந்தவிதத்திலும் இப்படம் சமூக நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை..! //

வழிமொழிகிறேன். படம் முழுவதும் முடிந்ததும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைப் பற்றி இரண்டு ஸ்லைட் காட்டினார்கள். (மெசேஜ் சொல்றாராம்). அந்த கருத்தை சொல்வதற்கு இரண்டு மணி நேரம் கருமத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.]]]

அப்பாடா இந்த விஷயத்தில் நமக்குள் ஒற்றுமையா தம்பி.. வாழ்க வளமுடன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கொண்டே..புடுவேன்! said...

//படம் துவங்கி முதல் அரை மணி நேரத்திற்குள் அத்தனை பேரும் புஸ்ஸாகிப் போனார்கள்//

அய்யா. இன்று முதல் தமிழில் ஏற்படும் பிழைகளை திருத்த அவதாரம் எடுத்திருக்கிறேன்.

//புஸ்ஸாகிப் போனார்கள்// என்று கேப் விட்டு எழுதாம புஸ்ஸாகிப்போனார்கள் என்று எழுதவும்.

//இப்படியொரு இயக்குநர் எடுத்துக் கொடுப்பார்//

எடுத்துக் கொடுப்பார். இப்படி பல.

“அவசரத்தில் எழுதியது. இதெல்லாம் சகஜம்” என்று சொன்னால் தப்பு என்று நினைக்கிறேன். சின்னவனை தப்பா நினைக்க வேண்டாம்.]]]

ஓகே.. ஓகே.. அடுத்த தபா திருத்திக் கொல்லுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[shanmugavel said...
பணம் கொடுத்து இதையெல்லாம் பார்க்கத்தான் வேணுமா? சும்மா கூப்பிட்டாலும் வேணாம்.]]]

வேணாம்.. வேண்டாவே வேணாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பயணமும் எண்ணங்களும் said...

முதலில் இப்படம் ஓடும் தியேட்டர்களை குற்றம் சுமத்திதான் புகார் செய்ய வேண்டும்..!//

:)) கோபம் புரியுது..

கெளதம்க்கும் மனநோய்தான்னு சமீப படங்களை பார்க்கும்போது தெரியுது.. நல்ல டாக்டரை பார்க்க சொல்லலாம்..]]]

எதுக்கு..? இந்தப் படத்தின் ரிசல்ட் அவரைத் தெளிய வைச்சிரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[சுப.தமிழினியன் said...

Sukumar Swaminathan said...
நீங்க இவ்வளோ சின்னதா பதிவு எழுதியிருப்பதிலிருந்தே உங்க கோவம் எனக்கு புரியுது..

:):):)]]]

இந்தப் படத்துக்கு இது போதும்னு நினைச்சேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...

>>>>....நான் கோபப்படுவது.. அவனது கற்பழிக்கும் செயலுக்காக அல்ல.. “மீனாட்சியம்மா..” என்று கூப்பிடுவதற்காக..!

super annae.]]]

கோபம் வருமா? வராதா?

உண்மைத்தமிழன் said...

[[[Prasanna Rajan said...
@ Rathi
மனநலம் குன்றிய என்பதை விட மனநலம் தவறிய என்ற வார்த்தை ப்ரயோகம் சரியாக இருக்கும். காரணம் நிறைய Schizophrenicகளுக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரியாது. ஆளவந்தான் கமல் கதாப்பாத்திரம் ஒரு சிறந்த உதாரணம்...]]]

இரண்டுமே சரிதான். மூன்றாவதாக "பிறழ்ந்த" என்றும் சொல்வார்கள்..!

Prasanna Rajan said...

//

சரி.. இவர்களை பகிரங்கப்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால் அதற்கு முறை இருக்கிறது.. எல்லாவற்றையும் படம் போட்டு விளக்கினால் எப்படி?
//

என்ன முறை என்கிறீர்கள்? நம்முடைய சமூகத்தில் வெளிப்படையாக சொல்லாத, பேசாத காரணத்தினால் தான் இத்தனை குற்றங்கள் நிகழ்கிறது. அதற்காகத் தானே 'ஏ' சர்ட்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். கண்டிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. அப்பொழுது தான் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்கும். பெண்களுக்கும் இது போன்றவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள உதவும்...

ரிஷி said...

படத்தில் சமீரா ரெட்டி எப்படி இருக்கிறார்? படம் வந்தால் தன் கேரக்டர் பிரமாதமாகப் பேசப்படும் என்று பேட்டிகளில் சொல்லியிருந்தாரே!! அதைப் பத்தி நீங்கள் ஒண்ணு கூட சொல்லலியே!! என்ன கொடுமை சரவணன் இது??

பிரபல பதிவர் said...

என்ன தமிழா இப்பல்லாம் சின்னதா விமர்சனம் போடுறீங்க...

butterfly Surya said...

அப்பாடா..

ஆனால் எந்த படத்டோட காப்பின்னு சொல்லவேயில்லையே..?

ஆர்வா said...

விண்ணைத்தாண்டி வருவாய மாதிரி ஒவ்வொரு பிரேமையும் ரசிக்க வெச்ச கவுதம் மேனனா இந்தப்படத்தை எடுத்தது? புகழ், சில பைத்தியக்காரத்தனத்தை செய்ய வைக்கும் அப்படிங்கிறதுக்கு இதோ இன்னொரு உதாரணம்.. இந்த வருடத்தோட மிகப்பெரிய ஏமாற்றமான படம்..

கவிதை காதலன்

உண்மைத்தமிழன் said...

[[[Prasanna Rajan said...

//சரி.. இவர்களை பகிரங்கப்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால் அதற்கு முறை இருக்கிறது.. எல்லாவற்றையும் படம் போட்டு விளக்கினால் எப்படி?//

என்ன முறை என்கிறீர்கள்? நம்முடைய சமூகத்தில் வெளிப்படையாக சொல்லாத, பேசாத காரணத்தினால்தான் இத்தனை குற்றங்கள் நிகழ்கிறது. அதற்காகத்தானே 'ஏ' சர்ட்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். கண்டிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்கும். பெண்களுக்கும் இது போன்றவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள உதவும்.]]]

அப்படியா..? பெண்கள் தற்காத்துக் கொள்ள வேண்டியது பற்றி இந்தப் படத்தில் எந்தக் காட்சியில், என்னவிதமாக கிளாஸ் எடுத்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
படத்தில் சமீரா ரெட்டி எப்படி இருக்கிறார்? படம் வந்தால் தன் கேரக்டர் பிரமாதமாகப் பேசப்படும் என்று பேட்டிகளில் சொல்லியிருந்தாரே!! அதைப் பத்தி நீங்கள் ஒண்ணுகூட சொல்லலியே!! என்ன கொடுமை சரவணன் இது??]]]

பாவம் அந்தப் பொண்ணு.. கெளதம் படம்ன்றதால வந்து மாட்டிக்கிச்சு போலிருக்கு..! இந்த நேரத்துல வேற ஏதாவது படத்துல நடிச்சிருந்தாலும் காசாவது நிறைய கிடைச்சிருக்கும்.

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...
என்ன தமிழா இப்பல்லாம் சின்னதா விமர்சனம் போடுறீங்க...?]]]

படத்துக்கு ஏத்தாப்புலதான் போட முடியும் மாப்ளே..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
அப்பாடா.. ஆனால் எந்த படத்டோட காப்பின்னு சொல்லவேயில்லையே..?]]]

அதான் தேடிக்கிட்டிருக்கேன். கிடைச்சவுடனேயே சொல்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கவிதை காதலன் said...
விண்ணைத் தாண்டி வருவாய மாதிரி ஒவ்வொரு பிரேமையும் ரசிக்க வெச்ச கவுதம்மேனனா இந்தப் படத்தை எடுத்தது? புகழ், சில பைத்தியக்காரத்தனத்தை செய்ய வைக்கும் அப்படிங்கிறதுக்கு இதோ இன்னொரு உதாரணம். இந்த வருடத்தோட மிகப் பெரிய ஏமாற்றமான படம்.
கவிதை காதலன் ]]]

எனக்கும்தான் ஸார்..!

Unknown said...

உருப்படியா வேலை இருந்தா,பாருங்க சகோதர்களே! நாம் நம்முடைய மக்களுக்கு எதாவது நல்லது செய்ய யோசிப்போம்.

ஜெட்லி... said...

ரொம்ப நன்றி
அண்ணே..

Subramanian said...

Hi Unmai Tamilan,

I felt this way even about vettaiyadu vilayadu. It is disgusting to watch such stuff on the big screen.Somehow Gautam has a fixation on this and keeps repeating the same theme.sarakku avvalavu than pola.

Subramanian

சீனு said...

கவுதம் மேனனோட வக்கிரம் வே.வி.லேயே தெரிந்து விட்டது. அதுக்கபுறம் அவரோட படங்களை பாக்குறதையே நிறுத்திட்டேன். நான நெனச்சது சரிதான்னு இந்த படம் மூலமா தோனுது.

வருண் said...

***Prasanna Rajan said...
என்ன முறை என்கிறீர்கள்? நம்முடைய சமூகத்தில் வெளிப்படையாக சொல்லாத, பேசாத காரணத்தினால் தான் இத்தனை குற்றங்கள் நிகழ்கிறது. அதற்காகத் தானே 'ஏ' சர்ட்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். கண்டிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. அப்பொழுது தான் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்கும். பெண்களுக்கும் இது போன்றவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள உதவும்...***

கண்டிப்பாகப் பார்க்கனும்!! Is that some kind for joke? LOL

வருண் said...

**அப்படியா..? பெண்கள் தற்காத்துக் கொள்ள வேண்டியது பற்றி இந்தப் படத்தில் எந்தக் காட்சியில், என்னவிதமாக கிளாஸ் எடுத்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா..?***

இதுபோல் குப்பைகளை பார்க்காமல் இருக்கது நலல்து! The probability of meeting such psychos in your life is what?!!

It is ridiculous ts say this film as a must watch! LOL

Indian said...

//நடுநசி நாய்கள் - பார்க்கக் கூடாத சினிமா..!//

பாத்துத் தொலைச்சிட்டனே.

நல்ல வேளை, 'புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆற்ற' உதவியது இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.

// எந்தவிதத்திலும் இப்படம் சமூக நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை..! //

திரையரங்குகளில் பாடம் படிக்க மக்கள் விரும்பும்/இருக்கும் வரை இம்மாதிரியான படங்கள் சமூகத்திற்கு ஆபத்தானவைதான்.

//திகில் பட வரிசையில்கூட இதனைச் சேர்க்க முடியாது..
//

திகில் படங்கள் அவ்வளவாகப் பார்த்திருக்காவிட்டாலும் இப்படத்தில் பெரிதாக திடுக்கிடும் நிகழ்வுகள் தெரியவில்லை. படத்தில் ஒட்டாத மனது, காரின் டோர்லாக்கை சமீராவை திறக்காமல் தடுத்தது அவரின் அறியாமையா, பதட்டமா, இல்லை இருட்டா என விவாதம் நடாத்திக் கொண்டிருந்தது.

//என்னதான் ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தாலும் தனி நபராகக் கூட காணச் சகிக்கவில்லை..! //

என்னால் சகிக்க முடியாதது, நான் பார்த்த பெங்களூர் திரையரங்கிற்கு மக்கள் சிறார்களைக் கூட்டி வந்திருந்தது மற்றும் திரையரங்கு அவர்களை காட்சியைக் காண அனுமதித்தது.

பெற்றோர்களுக்கு தணிக்கைச் சான்றிதழைப் பற்றிய அறிவில்லை, அரங்கிற்கு விதிமுறைகளைப் பின்பற்றும் பொறுப்புமில்லை.
யாரை நோவதோ?

யோசித்துப் பார்த்தால், A சான்றிதழ் பெற்ற படத்தைப் பார்க்க விரும்பும் இந்தியப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எங்கு, யாரிடம் விட்டுச் செல்வார்கள்?

******************************

யுத்தம் செய் போன்று 2GB நினைவகம் தேவைப்படாத திரைக்கதை நிம்மதியைத் தந்தது.

ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது.

மீனாட்சியம்மா முடியக்கொண்டா, முடியக்கொண்டா என வேண்டும்போது silence of the lambs-ஐ சொல்லுதோ என ஐயுரும்போது நமக்குப் பழக்கமான அந்நியன் 'ஜானருக்கு' வந்துவிட்டது.

வயது வந்தோரும் நினைவுபடுத்திக் கொள்ளா வண்ணம் வசைச்சொற்களை 'ப்ளீப்பியதில்' தணிக்கைக் குழுவினரின் பொறுப்பு வெளிப்பட்டிருக்கிறது.

butterfly Surya said...

Partly from this...

http://www.imdb.com/title/tt0443446/

விஜய் மகேந்திரன் said...

தமிழ் சமூகத்துக்கு எவ்வகையிலும் தேவை இல்லாத இந்த படத்தை எடுத்ததற்கு கெளதம் வெட்கப்படவேண்டும்.பல தீய, தெரியாத விசயங்களை படம் எடுக்கிறோம் என்ற பேரில் அவிழ்த்து கொட்டுவது இயக்குனரின் வக்கிர புத்தியையே காட்டுகிறது,.

விஜய் மகேந்திரன் said...

''நடுநிசி நாய்கள் ''கண்டிப்பாக சென்சாரின் கண்ணில் மண்ணை தூவியிருக்கவேண்டும் இந்த படம்,அல்லது தெரிந்தே சிபாரிசால் சென்சாரால் இந்த படத்தை விட்டுருக்கவேண்டும்...இந்த படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும்..நியூ போன்ற படங்களையெல்லாம் தடை செய்ய கோரும் மகளிர் அமைப்புகள் இந்த பட விசயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?என தெரியவில்லை.

உண்மைத்தமிழன் said...

[[[BALA said...
உருப்படியா வேலை இருந்தா, பாருங்க சகோதர்களே! நாம் நம்முடைய மக்களுக்கு எதாவது நல்லது செய்ய யோசிப்போம்.]]]

அதுக்காகத்தான் இந்தப் பதிவு பாலா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...

ரொம்ப நன்றி. அண்ணே..]]]

தம்பி.. போயிராதப்பா.. நல்லாயிருப்ப..!

உண்மைத்தமிழன் said...

[[[subramanian said...
Hi Unmai Tamilan, I felt this way even about vettaiyadu vilayadu. It is disgusting to watch such stuff on the big screen. Somehow Gautam has a fixation on this and keeps repeating the same theme. sarakku avvalavu than pola.

Subramanian]]]

தான் எப்படி எடுத்துக் கொடுத்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்..! இதுதான் உண்மை சுப்ரமணியன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

கவுதம் மேனனோட வக்கிரம் வே.வி.லேயே தெரிந்து விட்டது. அதுக்கபுறம் அவரோட படங்களை பாக்குறதையே நிறுத்திட்டேன். நான நெனச்சது சரிதான்னு இந்த படம் மூலமா தோனுது.]]]

விண்ணைத் தாண்டி வருவாயா கூட காதல் பட வரிசையில் ஏறகக் கூடியதாக இருந்தது.. ஆனால் இதனை துளியும் ஏற்க முடியாது..!

aalunga said...
This comment has been removed by the author.
உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

***Prasanna Rajan said...

என்ன முறை என்கிறீர்கள்? நம்முடைய சமூகத்தில் வெளிப்படையாக சொல்லாத, பேசாத காரணத்தினால்தான் இத்தனை குற்றங்கள் நிகழ்கிறது. அதற்காகத்தானே 'ஏ' சர்ட்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். கண்டிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. அப்பொழுது தான் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்கும். பெண்களுக்கும் இது போன்றவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள உதவும்...***

கண்டிப்பாகப் பார்க்கனும்!! Is that some kind for joke? LOL]]]

மிகப் பெரிய ஜோக்..! இதில் ஒரு அறிவுரையும் இல்லை.. இவர் என்ன படம் பார்த்து எழுதினார் என்று எனக்குத் தெரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

**அப்படியா..? பெண்கள் தற்காத்துக் கொள்ள வேண்டியது பற்றி இந்தப் படத்தில் எந்தக் காட்சியில், என்னவிதமாக கிளாஸ் எடுத்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா..?***

இதுபோல் குப்பைகளை பார்க்காமல் இருக்கது நலல்து! The probability of meeting such psychos in your life is what?!! It is ridiculous ts say this film as a must watch! LOL]]]

நன்றி வருண்..!

சைக்கோத்தனம் என்று சொல்லி அந்தக் கொடூரத்தையே 14 ரீல்களில் எடுத்துக் கொடுத்திருப்பதை எப்படி சகித்துக் கொண்டு பார்ப்பது..?

உண்மைத்தமிழன் said...

இந்தியன் ஸார்..

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...

Partly from this...

http://www.imdb.com/title/tt0443446/]]]

எல்லாம் இங்கேயிருந்துதான் எடுக்கப்பட்டது. எதுவும் கெளதம் மேனனிடமிருந்து எடுக்கப்படவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[விஜய் மகேந்திரன் said...

தமிழ் சமூகத்துக்கு எவ்வகையிலும் தேவை இல்லாத இந்த படத்தை எடுத்ததற்கு கெளதம் வெட்கப்படவேண்டும். பல தீய, தெரியாத விசயங்களை படம் எடுக்கிறோம் என்ற பேரில் அவிழ்த்து கொட்டுவது இயக்குனரின் வக்கிர புத்தியையே காட்டுகிறது,]]]

-)))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[விஜய் மகேந்திரன் said...

''நடுநிசி நாய்கள் ''கண்டிப்பாக சென்சாரின் கண்ணில் மண்ணை தூவியிருக்க வேண்டும். இந்த படம், அல்லது தெரிந்தே சிபாரிசால் சென்சாரால் இந்த படத்தை விட்டுருக்கவேண்டும். இந்த படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும். நியூ போன்ற படங்களையெல்லாம் தடை செய்ய கோரும் மகளிர் அமைப்புகள் இந்த பட விசயத்தில் அமைதியாக இருப்பது ஏன்? என தெரியவில்லை.]]]

படத்துக்கு விளம்பரம் கொடுக்கணுமான்னு யோசிச்சுக்கிட்டிருக்காங்க..!

நம்ம பயலுகளைப் பத்திதான் தெரியுமே..? அப்படி என்னதான் எடுத்திருக்காருன்னு பார்க்கவாவது தியேட்டருக்கு ஓடிருவாங்களே..?

Anonymous said...

//இதற்குக் காரணமாக அவன் நினைப்பது பாலியல் வேட்கையில் சிக்கிக் கொண்டானாம்.//

ஆமா சிக்கிகொண்டான், கொண்டானாம் இல்ல. நீ நல்லா உங்கப்பேன் கொவனாடி முருகன் பயல நினைச்சிட்டு சரவணா பவன்ல போய் நல்லா தின்னு, அப்புறமா உன் கண்ணை நல்லா பொத்திகிட்டு உலகமே இருண்டு போச்சுன்னு சொல்லு.

அப்புறம், ஒரு திரைப்பட இயக்குனர் ஒரே மாதிரிதான் படம் எடுக்கணுமா.

//“என்ன ஸார் இது? கெளதமா இப்படி எடுத்திருக்காரு?” // இப்படின்னு பேசுன்ன பயலுகள போய் டி. ராஜேந்தர் காமடியை யு டுபில் பாத்து அரிப்பை அடக்கிக சொல்லு.

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...

//இதற்குக் காரணமாக அவன் நினைப்பது பாலியல் வேட்கையில் சிக்கிக் கொண்டானாம்.//

ஆமா சிக்கிகொண்டான், கொண்டானாம் இல்ல. நீ நல்லா உங்கப்பேன் கொவனாடி முருகன் பயல நினைச்சிட்டு சரவணா பவன்ல போய் நல்லா தின்னு, அப்புறமா உன் கண்ணை நல்லா பொத்திகிட்டு உலகமே இருண்டு போச்சுன்னு சொல்லு. அப்புறம், ஒரு திரைப்பட இயக்குனர் ஒரே மாதிரிதான் படம் எடுக்கணுமா.

//“என்ன ஸார் இது? கெளதமா இப்படி எடுத்திருக்காரு?” //

இப்படின்னு பேசுன்ன பயலுகள போய் டி. ராஜேந்தர் காமடியை யு டுபில் பாத்து அரிப்பை அடக்கிக சொல்லு.]]]

என்னடா அண்ணாச்சி இன்னும் வரலியே நினைச்சேன். வந்துட்டீங்க. நன்றி..!

kuchi said...

இவன் மலையாளத்தில் போய் இப்படி எடுக்கவேண்டியதுதானே ? தமிழ் படவுலகை மலையாளப்பட தரத்திற்கு மாற்றும் முயற்சிதான் இது. இந்த இயக்குனர் முதல் படத்தில் கௌதம் என்று பெயர் போட்டுவிட்டு படம் வெற்றியடைந்தவுடன் அடுத்த படங்களிருந் கௌதம் மேனன் என்று தன் மலையாள ஜாதி பெயருடன் போட்டு ஜாதிக்கு பெருமை சேர்த்தான். இந்த வந்தேறிகளை சொல்லி குற்றமில்லை எந்த வந்தேறி வந்தாலும் அவனுக்கு கை தட்டி தூக்கிவிடும் அறிவில்லாத தமிழனை தான் குறை சொல்ல வேண்டும். எப்போது தான் திருந்துவார்களோ !!!!

உண்மைத்தமிழன் said...

[[[kuchi said...

இவன் மலையாளத்தில் போய் இப்படி எடுக்க வேண்டியதுதானே? தமிழ் படவுலகை மலையாளப் பட தரத்திற்கு மாற்றும் முயற்சிதான் இது. இந்த இயக்குனர் முதல் படத்தில் கௌதம் என்று பெயர் போட்டுவிட்டு படம் வெற்றியடைந்தவுடன் அடுத்த படங்களிருந் கௌதம் மேனன் என்று தன் மலையாள ஜாதி பெயருடன் போட்டு ஜாதிக்கு பெருமை சேர்த்தான். இந்த வந்தேறிகளை சொல்லி குற்றமில்லை எந்த வந்தேறி வந்தாலும் அவனுக்கு கை தட்டி தூக்கிவிடும் அறிவில்லாத தமிழனைதான் குறை சொல்ல வேண்டும். எப்போதுதான் திருந்துவார்களோ !!!!]]]

எதற்கு இப்படி அவன், இவன் என்ற ஏக வசனம்.. தேவையில்லாதது நண்பரே..!

தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் நமக்குத் தேவையில்லை. சினிமாவை வைத்து விமர்சனத்தை சொன்னாலே போதுமானது..!

அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படியிருந்தால் நமக்கென்ன..?

JACK and JILLU said...

நம்பவே முடியல கெளதமா இப்படி

Adriean said...

மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[JACK and JILLU said...

நம்பவே முடியல கெளதமா இப்படி?]]]

உங்களை மாதிரியேதான் அத்தனை ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Chandran said...

மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.]]]

பரிந்துணர்வுக்கு மிக்க நன்றி சந்திரன் ஸார்..!