11-02-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'இரண்டு ஆடுகள் முட்டிக் கொண்டால் நரிக்குக் கொண்டாட்டம்' என்பார்கள். அதையே கொஞ்சம் மாற்றிப் போட்டுப் படியுங்கள். 'இரண்டு நரிகள் முட்டிக் கொண்டால் ஆட்டிற்குக் கொண்டாட்டம்' என்று..!!!
நேற்றைக்கு ஜெயலலிதா விடுத்திருக்கும் ஒரு அறிக்கையைப் படித்தபோது இதுதான் எனக்குத் தோன்றியது.. கருணாநிதி ஜெயலலிதாவைத் திட்ட, ஜெயலலிதா பதிலுக்கு கருணாநிதியைத் திட்ட.. இப்படி இரண்டு பேரும் மாறி, மாறி ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு காட்டிக் கொடுப்பதால், இவர்கள் செய்த அரசியல் கொள்ளைகளும், தில்லுமுல்லுகளும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே வருகின்றன.
அந்த வரிசையில் ஜெயலலிதா நேற்று விடுத்திருக்கும் அறிக்கையினால் கருணாநிதியை “விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தவர்” என்று நீதிபதி சர்க்காரியா ஏன் குறிப்பிட்டார் என்பதற்கான ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. நீங்களும் படித்துப் பாருங்கள்..!
"மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில் மட்டும் பாராட்டுப் பெற தகுதியுடையவர் ஆகிறார். விஞ்ஞானப்பூர்வமான ஊழல் என்று வருகிறபோது, 1969-ம் ஆண்டு முதன் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்றுவரை, அனைவரும் வியக்கும் வகையில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடித்து வருகிறார் கருணாநிதி.
ஒரு சிறிய உதாரணத்தை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ராசாத்தி என்று தற்போது அழைக்கப்படும் கருணாநிதியின் மூன்றாவது மனைவியான திருமதி தர்மா வாங்கிய வீடு தொடர்பான ஏழாவது குற்றச்சாட்டு குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53-லிருந்து ஒரு சில பகுதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

கதவு எண். 9, முதல் குறுக்குத் தெரு, ராசா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை திருமதி இ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 20.1.1969 அன்று ரூ.57,000 விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் திருமதி தர்மா.
இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே.கபாலிக்கு விற்றுவிட்டார் திருமதி தர்மா. இந்த வீட்டை வாங்கிய டி.கே.கபாலி, விற்பனையாளரான ராசாத்தி என்கிற திருமதி தர்மாவுக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன்னால் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார்.
அதே நாளன்று, டி.கே.கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ.300 என்கிற அடிப்படையில் அதே வீடு திருமதி தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது.
அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்கியம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். திருமதி தர்மாவின் தாயார்தான் இந்த சிவபாக்கியம்!! அதாவது கருணாநிதியின் மாமியார். இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது.
20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் தர்மா மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்கியம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ 40,000 கடனாகப் பெற்றேன் என்றும், தன்னுடைய சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் கையிருப்புத் தொகை ரூ 63,000 என்றும் திருமதி தர்மா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ரூ.57,000 கொடுத்துதான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது.
கடனாகப் பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஆவணத்தின்படி, கடனாக வாங்கப்பட்ட பணம், ரூ. 15,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என்று மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில், மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான வாக்குறுதி பத்திரம் தயாரிக்கப்பட்டு அதில் 21.8.1970 அன்று தர்மா கையெழுத்திட்டு இருக்கிறார்.
பின்னர், அந்த வாக்குறுதி சீட்டில் திருமதி தர்மாவிடமிருந்து ரூ 40 ஆயிரத்தை பெற்றுக் கொண்டுவிட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி. இந்த வாக்குறுதி சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.
11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில், திருமதி தர்மாவிற்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி. அதாவது, ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயாரிடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார்!!.
நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத்தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளி விவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது! எனவே, “விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்” என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
2-ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞானபூர்வமான ஊழல்கள்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மும்பை கட்டுமானத் துறையைச் சேர்ந்த டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனத்தால் புதிதாக தொடங்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்திற்கு, அரிதான 2-ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலையான ரூ. 1,537 கோடிக்கு முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அளித்தார். இதற்குப் பிறகு, டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனம் தன்னுடைய 45 விழுக்காடு பங்குகளை யு.ஏ.இ. நாட்டைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ 4,200 கோடிக்கு விற்றது.
இந்த அளவுக்கு லாபம் பெற உதவி புரிந்ததற்காக, ராசாவின் எஜமானரும், குருவுமான கருணாநிதிக்கு டைனமிக்ஸ் பால்வா அதிபர் லஞ்சம் கொடுத்தார். ஆனால், இந்தப் பணம் நேரடியாக கொடுக்கப்படவில்லை. வருமான வரித் துறையினரின் கண்களிலிருந்து தப்புவதற்காக, தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் 11 நிறுவனங்களிலிருந்து ரூ 25 லட்சம் முதல் ரூ 100 கோடி வரை, சேர்த்து, மொத்தம் ரூ 209.25 கோடியை ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான குசேகான் ஃப்ரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ் என்ற நிறுவனத்திற்கு பால்வா மாற்றியிருக்கிறார்.
குசேகான் நிறுவனம் இதிலிருந்து ரூ. 206.25 கோடியை பால்வாஸ் மற்றும் மொரானிக்கு சொந்தமான சினியுக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கொடுத்து இருக்கிறது. இந்த சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-2010ம் ஆண்டைய இருப்பு நிலைக் குறிப்பை பார்க்கும்போது, கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழியும் சேர்ந்த 80 விழுக்காடு பங்குகளை பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த கலைஞர் டி.வி.க்கு உத்திரவாதமற்ற கடனாக ரூ. 206 கோடி கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.
சர்க்காரியா ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணப் பரிமாற்றமும், கலைஞர் டி.வி. பணப் பரிவர்த்தனையும் ஒத்திருப்பதுதான் இதில் விசேஷமான ஒன்று. அதே குழப்பமான கணக்கு முறை. பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு நேர்மையற்ற முறை. அதே மூளைதானே இந்த சதித் திட்டத்தையும் தீட்டி இருக்கிறது!.
கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்களே. இதைச் செய்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். அப்பொழுதுதான் நீதி நிலைநாட்டப்படும்..”
- இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
திருமதி தர்மா, சிவபாக்கியம், டி.கே.கபாலி ஆகியோர் இணைந்த கூட்டணியின் விற்றல், வாங்கல் கதையை பதினைந்து முறைக்கு மேல் படித்துப் பார்த்துவிட்டேன். தலைதான் சுற்றுகிறது..!
யாரேனும் அறிவுஜீவிகள் அதனைப் படித்து அதற்குச் சரியான விளக்கமளித்தால் சந்தோஷப்படுவேன்..!
இதுக்கெல்லாம் எங்கிட்டு போய் விஞ்ஞானத்தைப் படிச்சிட்டு வர்றது..? சொல்லுங்க..!!!

|
Tweet |
48 comments:
2g enakku
இனிமே அண்ணன் கடைல வடைக்கு பதில் 2g கிடைக்கும்.
தப்பை, ஜெயலலிதாவை போல் தப்பு தப்பா செஞ்சா தான் தப்பு. மாட்டிக்கிட்டு வருஷக்கணக்கா கோர்ட்டுக்கு அலையணும். கலைஞரை போல் அறிவுப்பூர்வமா, விஞ்ஞானப்பூர்வமா செஞ்சா மாட்டுறதுக்கு சான்ஸே இல்ல. கூட இருக்கிறவங்க தப்பு தப்பா செஞ்சதாலத் தான் இன்னிக்கு இவ்வளவு சிக்கல். எல்லாத்துக்கு பயிற்சி போதாது.
அன்றைக்கு மனைவி துணைவி மட்டுமே.... இன்றைக்கு பேரன்கள் பேத்திகள் பெருகிவிட்டனரே..... அனைவருக்கும் சம்பாதிக்க வேண்டாமா ???? தாத்தா-வுக்கு வயசாயிடுச்சுன்ன கனியே சொல்லியாச்சு...விழமாட்டேங்குறாரே....
அலிபாபாவும் 41 திருடர்களும் படத்தை அப்படியே கலைஞர் குடும்பத்தை வச்சு ரீமேக் பண்ணலாம்
ஏம்பா ...,புண்ணியவான்களே இந்த ஊழல எப்படி செயந்தாங்கனு வந்து சொல்லுங்கப்பா !
தக்காளி கடைக்கு அனுபிச்ச பத்து ரூபாயா ஆட்டைய போடுறதுக்குள தாவு தீருது ..,அப்படியும் வீட்ல மாட்டிகரேன் ..,
//// அதே நாளன்று, டி.கே.கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ.300 என்கிற அடிப்படையில் அதே வீடு திருமதி தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது.////
இங்கன ஆரம்பிக்குது குழப்பம் ...,
///// அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்கியம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். திருமதி தர்மாவின் தாயார்தான் இந்த சிவபாக்கியம்!! ///
அட்ரா சக்கை !!!!!! தல அது நஷ்டம் இல்ல லாபம் ..,( ஏன்யா நான் கரெக்டா போய்ண்டுருகேனா !! போவோம் போய்தான் பார்ப்போம் )
///// நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத்தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளி விவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது ///
அந்த சர்க்காரியா யாருன்னே !! ஊரை விட்டே ஓடி போயிருபானுவே !! படிச்ச என்னகே ரெண்டு சோடா வேணும் போல இருக்குதே ..,இந்த வழக்கை டீல் பண்ண சர்க்காரியா வேலைய ரெசிக்ன் பண்ணிட்டு ஓடிபோயிருபான்
ரிலேடிவிட்டி தேற்றத்தையே ஈசி யா புரிஞ்சிக்கலாம் போல ..,
ரமேஷு ..,தக்காளி என்னக்கு தாண்டி 3g
///// யாரேனும் அறிவுஜீவிகள் அதனைப் படித்து அதற்குச் சரியான விளக்கமளித்தால் சந்தோஷப்படுவேன்..!//////
ஒ !! புரியாமலே பதிவு போட்டிருக்கீங்க ..,உங்களுக்கும் புரியல ,எங்களையும் குழப்பி !!!!! ஆண்டவா!!!!!! முருகா !!!!
இதுக்கு பதில் சொல்ல ஐஸ்டீந்தான் திரும்ப பிறந்து வரனும் ..இல்லாட்டி ராமானுஜம் வரனும் ..இவங்க ரெண்டு பேருமே வராம ஒன்னியும் செய்ய முடியாது :-(
ஏதோ சர்க்காரியா ஒரு பெரிய 'இன்டெல்லிஜென்ட்' மனுசன் மாதிரியும் அவருக்கே புரிய வில்லை
என்றால் யாருக்கும் புரியாது என்ற ரீதியில் எழுதுகிறார்கள். சர்க்காரியா ஒரு ரிடையரான் நீதித்துறை கிழம். நீதிமன்றத் திண்ணை தேய்த்து
ரிடயரானவர் விசாரித்தால் இப்படித்தான் இருக்கும்.
இது மாதிரியான தில்லு முல்லுகள் நடப்பதற்குக் காரணம் நமது நாட்டுச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே காரணம்.
கர்ணாநிதி, தர்மா, சிவபாக்கியம், கபாலி, கனிமொழி போன்ற ப்ராடுகளை சரியாக கவனித்து போலிசார் விசாரித்திருந்தால்
வீடு விவகாரம் எப்போதோ துலங்கியிருக்கும்.
அதை விட்டு விட்டு கருணாநிதியின் கூத்தாடி வசனத்தைக் கேட்டு விட்டு அவருக்கு ஓட்டுப் போட்ட கும்பல் தானே நாம்.
அண்ணே இண்டேளிஜன்ட் ரங்குடு அண்ணே ,
நீங்க தயவு செய்ஞ்சி இதை விளக்கிடீங்கான நாங்க அடுத்த தேர்தல்ல வோட்டு போட்டு எங்க வருங்கால சந்ததியர்க்கு தெரிவிசுடுவோம் ..அவங்களும் உங்க பதில படிச்சி தெளிவா நடந்துக்குவாங்க ( சார் ..,கடைசிவரைக்கும் நீங்களும் விலக்கலையே சார் )
முந்நாள் முதல்வர் பக்தவசலம் திமுக பற்றி கூறியது 'விஷகிருமிகள்' பெருகிவிட்டன.
சர்காரியா, இன்றைய முதல்வரின் அப்போதைய பல ஊழல் பற்றிய அறிக்கையில் கூறியது 'விஞ்ஞானபூர்வமா ன ஊழல்' நடத்தியவர். நாம் இந்த நச்சு சொடிகளை அப்போதே புடுங்கி எறியாமல், வாக்கு அளித்து ஆதரவு தண்ணீர் வார்த்து வளர்த்து விட்டோம். இன்று அந்த நச்சு தமிழகத்தின் வரும் தலைமுறையின் வாழ்வைக் கூட பாதிக்கும் அளவு, கல்வி, சுகாதாரம், நீர், நிலம்,சாராயக் கடை, தொலைகாட்சி, திரைக்காட்சி, செய்திதாள்கள் மற்றும் எல்லா துறைகளிலும் ஊடுறுவி, தமிழகம் முழுமைக்கும் (சென்னை முதல் கன்னியாகுமரி வரை) வரைமுறையற்ற ஆக்கிரமிப்பில் இருண்டு கிடக்கிறது. தமிழர்களோ காலை முதல் மாலைவரை டாஷ்மாக்கில் குடித்து விட்டு, உள்ளூர் அரசியல் பேசி, வோட்டுக்கு ஆயிரம், குவட்டர், ஆஃப் பிரியாணி என இலவசங்களுக் காய் கைகளில் திருவோடு இல்லாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்ற ானர். அடிமைகளாய்,சுய சிந்தனையற்று, நம்பிக்கையிழந் த கூட்டங்களாய் மக்கள். இதற்குத் தானே ஆசைப் படுகிறது திட்டமிட்டு திளைக்கிறது ஆளும் வர்க்கம்.
//திருமதி தர்மா, சிவபாக்கியம், டி.கே.கபாலி ஆகியோர் இணைந்த கூட்டணியின் விற்றல், வாங்கல் கதையை பதினைந்து முறைக்கு மேல் படித்துப் பார்த்துவிட்டேன். தலைதான் சுற்றுகிறது..!//
உண்மை தான்....
ஆண்டவா!!!!!! முருகா!!!!
[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
2g enakku]]]
அடங்க மாட்டியா நீயி..!?
[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இனிமே அண்ணன் கடைல வடைக்கு பதில் 2g கிடைக்கும்.]]]
ஆமாம்.. விளம்பரத்துக்கு நன்னி தம்பி..!
[[[ஒசை said...
தப்பை, ஜெயலலிதாவை போல் தப்பு தப்பா செஞ்சாதான் தப்பு. மாட்டிக்கிட்டு வருஷக்கணக்கா கோர்ட்டுக்கு அலையணும். கலைஞரை போல் அறிவுப்பூர்வமா, விஞ்ஞானப்பூர்வமா செஞ்சா மாட்டுறதுக்கு சான்ஸே இல்ல. கூட இருக்கிறவங்க தப்பு தப்பா செஞ்சதாலத்தான் இன்னிக்கு இவ்வளவு சிக்கல். எல்லாத்துக்கும் பயிற்சி போதாது.]]]
வாஸ்தவம்.. இந்தத் தடவை ஆத்தா ஆட்சிக்கு வந்த பின்னாடி பாருங்க.. அம்மாவும் விஞ்ஞானத்துல தேறிருவாங்க..!
[[[Ponchandar said...
அன்றைக்கு மனைவி துணைவி மட்டுமே. இன்றைக்கு பேரன்கள் பேத்திகள் பெருகிவிட்டனரே. அனைவருக்கும் சம்பாதிக்க வேண்டாமா? தாத்தா-வுக்கு வயசாயிடுச்சுன்ன கனியே சொல்லியாச்சு. விழ மாட்டேங்குறாரே....]]
அதுக்கப்புறம் இருக்கு வேடிக்கை..!
[[[நாஞ்சில் பிரதாப்™ said...
அலிபாபாவும் 41 திருடர்களும் படத்தை அப்படியே கலைஞர் குடும்பத்தை வச்சு ரீமேக் பண்ணலாம்.]]]
ஹா.. ஹா.. ஹா.. செம கமெண்ட்டு..!
[[[தில்லு முல்லு said...
ஏம்பா, புண்ணியவான்களே இந்த ஊழல எப்படி செயந்தாங்கனு வந்து சொல்லுங்கப்பா! தக்காளி கடைக்கு அனுபிச்ச பத்து ரூபாயா ஆட்டைய போடுறதுக்குள தாவு தீருது. அப்படியும் வீட்ல மாட்டிகரேன்.]]]
நானும்தான்.. நிறைய வாட்டி சிக்கியிருக்கேன்..! சின்ன வயசுல..!
அண்ணா, தமிழக ஊழல் பெருச்சாளிகளைப் பற்றி ஒரு பிளாக்குல படிச்சேன், வேதனையான விடயம்னாலும், வயிறுவலிக்க சிரிச்சேன்!
\\
ஒரு வீட்டில் புகுந்து திருடுவது என முடிவு செய்தபின், உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக்கொண்டு ஜட்டி அல்லது லங்கோடு மட்டும் அணிந்து, வீட்டுக்குள் புகுந்து, கொண்டுபோன சாக்கு நிறைய திருடுவது. மாட்டினாலும் வழுக்க முடியும்..குறைந்தது சாக்குப் பையைத் தூரப்போட்டாவது நிற்க முடியும். கேட்டால் ‘இன்னைக்கு தீபாவளின்னு நினைச்சு எண்ணெய் தேச்சேன்’ எனலாம். இதுவே கலைஞர் ஸ்டைல் விஞ்ஞான ரீதியிலான ஊழல்!
ஒரு வீட்டிற்கு எண்ணெய் கூட தேய்க்காமல் திருடப்போய், கொஞ்சம் ஆசை அதிகமாகி சாக்கு நிரப்பியது மட்டுமல்லாது பீரோவையும் தூக்கி மாட்டிக்கொள்வது ஜெயலலிதா& சசிகலா க்ரூப்பின் ஸ்டைல்.
’அடடா வீட்டிலுள்ள பொருள் மட்டுமல்லாது வீடே நல்லாயிருக்கே ‘ என பேராசைப்பட்டு வீட்டையே நகர்த்தி தப்பமுடியாமல் மாட்டிக்கொண்டது கனிமொழி & கோ-வின் ஸ்டைல்.
// For more:
http://sengovi.blogspot.com/2011/01/blog-post_10.html
[[[தில்லு முல்லு said...
//அதே நாளன்று, டி.கே.கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ.300 என்கிற அடிப்படையில் அதே வீடு திருமதி தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது.////
இங்கன ஆரம்பிக்குது குழப்பம்.]]]
ஆமாமாம்.. அதுக்கப்புறம் கடைசிவரைக்கும் குழப்பம்தான்..!
[[[தில்லு முல்லு said...
//அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்கியம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். திருமதி தர்மாவின் தாயார்தான் இந்த சிவபாக்கியம்!! ///
அட்ரா சக்கை!!!!!! தல அது நஷ்டம் இல்ல லாபம்.(ஏன்யா நான் கரெக்டா போய்ண்டுருகேனா !! போவோம் போய்தான் பார்ப்போம்)]]]
கரீக்ட்டு.. இவங்களே காசு கொடுத்து வாங்கச் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.. கரீக்ட்டா..?
[[[தில்லு முல்லு said...
///// நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத்தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளி விவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது ///
அந்த சர்க்காரியா யாருன்னே!! ஊரைவிட்டே ஓடி போயிருபானுவே!! படிச்ச என்னகே ரெண்டு சோடா வேணும்போல இருக்குதே. இந்த வழக்கை டீல் பண்ண சர்க்காரியா வேலைய ரெசிக்ன் பண்ணிட்டு ஓடி போயிருபான்]]]
இல்லை. முழுசா முடிச்சு வைச்சுட்டுத்தான் போனாராம்..!
[[[தில்லு முல்லு said...
ரிலேடிவிட்டி தேற்றத்தையே ஈசியா புரிஞ்சிக்கலாம் போல.]]]
இவுங்க கொள்ளை டெக்னிக்கை புரிஞ்சுக்குறது அவ்ளோவ் கஷ்டமா இருக்கு..
[[[தில்லு முல்லு said...
ரமேஷு. தக்காளி என்னக்குதாண்டி 3g]]]
கொடுத்துட்டேன்.. வாங்கிட்டுப் போங்க..!
[[[தில்லு முல்லு said...
///// யாரேனும் அறிவுஜீவிகள் அதனைப் படித்து அதற்குச் சரியான விளக்கமளித்தால் சந்தோஷப்படுவேன்..!//////
ஒ!! புரியாமலே பதிவு போட்டிருக்கீங்க. உங்களுக்கும் புரியல, எங்களையும் குழப்பி !!!!! ஆண்டவா!!!!!! முருகா !!!!]]]
அவனை எதுக்குக் கூப்பிடுறீங்க..? எல்லாம் அவன் செயல்தான்..!
[[[ஜெய்லானி said...
இதுக்கு பதில் சொல்ல ஐஸ்டீந்தான் திரும்ப பிறந்து வரனும். இல்லாட்டி ராமானுஜம் வரனும். இவங்க ரெண்டு பேருமே வராம ஒன்னியும் செய்ய முடியாது :-(]]]
அச்சச்சோ.. அவ்ளோவ் பெரிய பிரச்சினையா..? எடிசனையும், மார்க்ஸையும் கூப்பிட்டா நடக்குமா..? யோசியுங்க..!
[[[ரங்குடு said...
ஏதோ சர்க்காரியா ஒரு பெரிய 'இன்டெல்லிஜென்ட்' மனுசன் மாதிரியும் அவருக்கே புரியவில்லை
என்றால் யாருக்கும் புரியாது என்ற ரீதியில் எழுதுகிறார்கள். சர்க்காரியா ஒரு ரிடையரான் நீதித்துறை கிழம். நீதிமன்றத் திண்ணை தேய்த்து
ரிடயரானவர் விசாரித்தால் இப்படித்தான் இருக்கும். இது மாதிரியான தில்லு முல்லுகள் நடப்பதற்குக் காரணம் நமது நாட்டுச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே காரணம். கர்ணாநிதி, தர்மா, சிவபாக்கியம், கபாலி, கனிமொழி போன்ற ப்ராடுகளை சரியாக கவனித்து போலிசார் விசாரித்திருந்தால் வீடு விவகாரம் எப்போதோ துலங்கியிருக்கும்.
அதை விட்டு விட்டு கருணாநிதியின் கூத்தாடி வசனத்தைக் கேட்டு விட்டு அவருக்கு ஓட்டுப் போட்ட கும்பல்தானே நாம்.]]]
அரசமைப்புச் சட்டத்தை இயற்ற வேண்டியவர்களே திருடர்களாக இருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும்..?
[[[தில்லு முல்லு said...
அண்ணே இண்டேளிஜன்ட் ரங்குடு அண்ணே, நீங்க தயவு செய்ஞ்சி இதை விளக்கிடீங்கான நாங்க அடுத்த தேர்தல்ல வோட்டு போட்டு எங்க வருங்கால சந்ததியர்க்கு தெரிவிசுடுவோம். அவங்களும் உங்க பதில படிச்சி தெளிவா நடந்துக்குவாங்க (சார், கடைசிவரைக்கும் நீங்களும் விலக்கலையே சார் )]]]
தில்லுமுல்லு ஸார்..
ரங்குடு ஸார் சரியாத்தான் சொல்லியிருக்காரு.. தப்பு நம்ம மேலத்தான்.. நாம கரீக்ட்டா ஆள் பார்த்து செலக்ட் செஞ்சிருந்தா இந்த கருணாநிதி இப்படி கொள்ளையடிச்சிருக்க முடியுமா..?
[[[Indian Share Market said...
முந்நாள் முதல்வர் பக்தவசலம் திமுக பற்றி கூறியது 'விஷகிருமிகள்' பெருகிவிட்டன.
சர்காரியா, இன்றைய முதல்வரின் அப்போதைய பல ஊழல் பற்றிய அறிக்கையில் கூறியது 'விஞ்ஞானபூர்வமான ஊழல்' நடத்தியவர். நாம் இந்த நச்சு சொடிகளை அப்போதே புடுங்கி எறியாமல், வாக்கு அளித்து ஆதரவு தண்ணீர் வார்த்து வளர்த்து விட்டோம். இன்று அந்த நச்சு தமிழகத்தின் வரும் தலைமுறையின் வாழ்வைக்கூட பாதிக்கும் அளவு, கல்வி, சுகாதாரம், நீர், நிலம், சாராயக் கடை, தொலைகாட்சி, திரைக்காட்சி, செய்திதாள்கள் மற்றும் எல்லா துறைகளிலும் ஊடுறுவி, தமிழகம் முழுமைக்கும் (சென்னை முதல் கன்னியாகுமரி வரை) வரைமுறையற்ற ஆக்கிரமிப்பில் இருண்டு கிடக்கிறது. தமிழர்களோ காலை முதல் மாலைவரை டாஷ்மாக்கில் குடித்து விட்டு, உள்ளூர் அரசியல் பேசி, வோட்டுக்கு ஆயிரம், குவட்டர், ஆஃப் பிரியாணி என இலவசங்களுக் காய் கைகளில் திருவோடு இல்லாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்ற ானர். அடிமைகளாய்,சுய சிந்தனையற்று, நம்பிக்கையிழந்த கூட்டங்களாய் மக்கள். இதற்குத்தானே ஆசைப்படுகிறது திட்டமிட்டு திளைக்கிறது ஆளும் வர்க்கம்.]]]
பத்து நிமிஷம் தொடர்ந்து கை தட்டினேன்னு நினைச்சுக்குங்க.. சூப்பருங்கண்ணா..!
[[[பாரத்... பாரதி... said...
//திருமதி தர்மா, சிவபாக்கியம், டி.கே.கபாலி ஆகியோர் இணைந்த கூட்டணியின் விற்றல், வாங்கல் கதையை பதினைந்து முறைக்கு மேல் படித்துப் பார்த்துவிட்டேன். தலைதான் சுற்றுகிறது..!//
உண்மைதான்....]]]
நீங்களுமா..? அப்போ யார்தான் என் சந்தேகத்தை கிளியர் பண்றது..?
[[[பாரத்... பாரதி... said...
ஆண்டவா!!!!!! முருகா!!!!]]]
அவனைக் கூப்பிட்டு என்ன செய்ய? எல்லாம் அவனாலதான..!
[[[Jayadev Das said...
அண்ணா, தமிழக ஊழல் பெருச்சாளிகளைப் பற்றி ஒரு பிளாக்குல படிச்சேன், வேதனையான விடயம்னாலும், வயிறுவலிக்க சிரிச்சேன்!
\\ஒரு வீட்டில் புகுந்து திருடுவது என முடிவு செய்த பின், உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக் கொண்டு ஜட்டி அல்லது லங்கோடு மட்டும் அணிந்து, வீட்டுக்குள் புகுந்து, கொண்டு போன சாக்கு நிறைய திருடுவது. மாட்டினாலும் வழுக்க முடியும். குறைந்தது சாக்குப் பையைத் தூரப் போட்டாவது நிற்க முடியும். கேட்டால் ‘இன்னைக்கு தீபாவளின்னு நினைச்சு எண்ணெய் தேச்சேன்’ எனலாம். இதுவே கலைஞர் ஸ்டைல் விஞ்ஞான ரீதியிலான ஊழல்!]]]
வித்தியாசமான ஐடியா.. சூப்பர்ப்.. நீங்க கருணாநிதிகிட்ட வேலைக்குப் போகலாமே..?
[[[ஒரு வீட்டிற்கு எண்ணெய் கூட தேய்க்காமல் திருடப் போய், கொஞ்சம் ஆசை அதிகமாகி சாக்கு நிரப்பியது மட்டுமல்லாது பீரோவையும் தூக்கி மாட்டிக் கொள்வது ஜெயலலிதா& சசிகலா க்ரூப்பின் ஸ்டைல்.]]]
சூப்பர்.. இது அம்மாவுக்குத் தெரியாமத்தான் மாட்டிக்கிட்டாங்க.
[[[’அடடா வீட்டிலுள்ள பொருள் மட்டுமல்லாது வீடே நல்லாயிருக்கே‘ என பேராசைப்பட்டு வீட்டையே நகர்த்தி தப்ப முடியாமல் மாட்டிக்கொண்டது கனிமொழி & கோ-வின் ஸ்டைல்.
// For more:
http://sengovi.blogspot.com/2011/01/blog-post_10.html]]]
ம்.. என்னத்தச் சொல்ல..? நாம இப்படி கடைசிவரைக்கும் புலம்பியே சாகணும் போலிருக்கு..!
Just trying to understand:
visuvasam slod tharma for 57000 in Jan-69
tharma sold kabali ( total not mentioned?) but paid 14000 in Aug-70
kabali rented tharma -300
kabali sold sivapackiam for 45000 in jan-72
sivapakiam setttled the property to her legal heirs ie tharma and kanimozhi in march-72
tharma borrowed 40000 from kabali for initial puchase 57000 in jan-70 (one year later the purchase)
tharma repaid that money to kabali in march-76
Kabali borrowed 20000 from sivapackiam to lend tharma
*missing question is sivapackiam is the ultimate lender, what is the source of income of her
*kabali as a security in 1970 might be earning Rs.200 to 300 how he could lend another 20000 to his owner
*what is the source of income for tharma to repay 40000 to kabali (40000 could be equalent to 4 crore in 1970)
*what is the source of income for sivapackiam to buy land from kabali for 25000 leaving initial 20000 credit to him
with immense politcal pressure and shrewd shuffle of money it is really a tough job for justice zacaria poorman and poor people
//வித்தியாசமான ஐடியா.. சூப்பர்ப்.. நீங்க கருணாநிதிகிட்ட வேலைக்குப் போகலாமே..?// என் பதிவைக் குறிப்பிட்ட ஜெயதேவ் தாஸ்க்கு நன்றி. அப்ளிகேஷன் அனுப்பிட்டேன்.
அண்ணே, இதெல்லாம் இருக்கட்டும்ணே, என்னமோ ‘காதல் உதிரும் காலம்’னு ஒரு படம் வந்திருக்காம்..காதலர் தின ஸ்பெஷலா அதுக்கு விமர்சனம் போடுங்கண்ணே!
சும்மா.. டைம் பாஸ் said...
Just trying to understand:
* missing question is sivapackiam is the ultimate lender, what is the source of income of her.
* kabali as a security in 1970 might be earning Rs.200 to 300 how he could lend another 20000 to his owner.
* what is the source of income for tharma to repay 40000 to kabali. (40000 could be equalent to 4 crore in 1970)
* what is the source of income for sivapackiam to buy land from kabali for 25000 leaving initial 20000 credit to him.
with immense politcal pressure and shrewd shuffle of money it is really a tough job for justice zacaria poorman and poor people.]]]
நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கும் உமக்கு எனது பாராட்டுக்கள்..!
இந்தக் கேள்விகள் தாத்தாவுக்கு அனுப்பப்படுகிறது.. பதில் கிடைத்தவுடன் இங்கே பதிவிடப்படும்..!
இதுதான் விஞ்ஞானப்பூர்வமான ஊழலோ..?
[[[செங்கோவி said...
//வித்தியாசமான ஐடியா.. சூப்பர்ப்.. நீங்க கருணாநிதிகிட்ட வேலைக்குப் போகலாமே..?//
என் பதிவைக் குறிப்பிட்ட ஜெயதேவ் தாஸ்க்கு நன்றி. அப்ளிகேஷன் அனுப்பிட்டேன்.]]]
அவர்கிட்ட போனா சம்பளம் பிச்சை மாதிரிதான் கிடைக்கும். பரவாயில்லையா..?
[[[அண்ணே, இதெல்லாம் இருக்கட்டும்ணே, என்னமோ ‘காதல் உதிரும் காலம்’னு ஒரு படம் வந்திருக்காம். காதலர் தின ஸ்பெஷலா அதுக்கு விமர்சனம் போடுங்கண்ணே!]]]
நான் இந்த மாதிரி சினிமாவுக்குப் போறதை நிறுத்திட்டேன் தம்பி.. உங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது..!
//அவர்கிட்ட போனா சம்பளம் பிச்சை மாதிரிதான் கிடைக்கும். பரவாயில்லையா..?// அது பரவாயில்லை, இதயத்துல இடம் கொடுத்துட்டா என்ன பண்றது..
//நான் இந்த மாதிரி சினிமாவுக்குப் போறதை நிறுத்திட்டேன் தம்பி..// என்னண்ணே, இப்படிச் சொல்லிப்புட்டீங்க!!!!!
தலைவா...
கிணறு வெட்ட பூதம் கிளம்பும்னு சொல்வாங்க...
வர வர எவ்ளோ கிணறு, எவ்ளோ பூதம்..
தமிழ்நாட்டையே ஆட்டை போட்டாச்சு.. இனி மிச்சம் ஏதாவது இருக்கா நம்ம நாட்டுல ஆட்டைய போட...
கோடி பேர் வந்தாலும் “தல”யோட டெக்னிக்ல ஆட்டைய போட ஒரு பயலால முடியாதுங்கோ...
விஞ்ஞான பூர்வ ஊழல்ல உலகத்தின் அனைத்து விஞ்ஞானிகளையும் நம்ம “தல” மிஞ்சிட்டாரு...
[[[செங்கோவி said...
//அவர்கிட்ட போனா சம்பளம் பிச்சை மாதிரிதான் கிடைக்கும். பரவாயில்லையா..?//
அது பரவாயில்லை, இதயத்துல இடம் கொடுத்துட்டா என்ன பண்றது..]]]
ஹா.. ஹா.. ரொம்ப சுதாரிப்பாத்தான் இருக்கீங்க தம்பி.. பொழைச்சுக்குவீங்க..!
//நான் இந்த மாதிரி சினிமாவுக்குப் போறதை நிறுத்திட்டேன் தம்பி..//
என்னண்ணே, இப்படிச் சொல்லிப்புட்டீங்க!!!!!]]]
பின்ன..? இப்போ காசை மிச்சம் செய்ய வேண்டிய கட்டாயம். அதுனாலதான்..!
[[[R.Gopi said...
தலைவா. கிணறு வெட்ட பூதம் கிளம்பும்னு சொல்வாங்க. வர வர எவ்ளோ கிணறு, எவ்ளோ பூதம். தமிழ்நாட்டையே ஆட்டை போட்டாச்சு. இனி மிச்சம் ஏதாவது இருக்கா நம்ம நாட்டுல ஆட்டைய போட.
கோடி பேர் வந்தாலும் “தல”யோட டெக்னிக்ல ஆட்டைய போட ஒரு பயலால முடியாதுங்கோ.
விஞ்ஞானபூர்வ ஊழல்ல உலகத்தின் அனைத்து விஞ்ஞானிகளையும் நம்ம “தல” மிஞ்சிட்டாரு...]]]
விஞ்ஞானிகளை மிஞ்சிய விஞ்ஞானி கலைஞர் கருணாநிதி..! ஒத்துக்குறேன் கோபி..!
Very sad that Such people are ruling our State.. We have voted them to power last time with some good Intent. They have spoiled that intent badly. Really very pathetic condition. Let us teach a good lesson to these parties in the forth coming elections.
http://anubhudhi.blogspot.com/
[[[Sankar Gurusamy said...
Very sad that Such people are ruling our State.. We have voted them to power last time with some good Intent. They have spoiled that intent badly. Really very pathetic condition. Let us teach a good lesson to these parties in the forth coming elections.
http://anubhudhi.blogspot.com/]]]
வருடாவருடம் வரும் புது புது கொள்ளைக்காரர்களை சமாளிக்கவே முடியலை.. இதுக்கெல்லாம் ஒரே வழி.. தயவு தாட்சண்யம் இல்லாமல் இந்த அரசியல்வியாதிகளைத் தண்டிக்க ஒரு வழியை நாம் கண்டறிய வேண்டும். அதுதான் அடுத்தத் தலைமுறைக்கு நாம் கொடுக்கப் போகும் பரிசாக இருக்க வேண்டும்.!
Post a Comment