23-02-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
''தி.மு.க. இம்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்லூரி நடத்தியது எ.வ.வேலு மட்டும்தான். ஆனால், இன்று பெரும்பாலான அமைச்சர்கள் கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல. அனைவரும் அதைக் கட்சிக்கு எழுதிவைத்துவிடுங்கள்!'' என்று ஒரு நாள் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி சீறினார். அவரே அதிர்ச்சியடையும் அளவுக்கு தமிழக அமைச்சரவையில் இப்போது கல்வித் தந்தைகள் அதிகம்!
ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், வேலூர் விஸ்வநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் கடைக்கண் பார்வையால் கல்வி நிறுவனங்களை அமைத்து வளர்ந்தவர்கள் என்றால், கருணாநிதியின் ஆசீர்வாதம் காரணமாக... வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரிணமித்து இருக்கிறார்கள். சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், கோவை நகர்ப் பகுதியில் வலம் வந்தால், இவர்களது பிரமாண்டமான கல்லூரிக் கட்டடங்களைத் தரிசிக்கலாம்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் பிரமாண்டமாக உருவாகிறது தயா இன்ஜினீயரிங் கல்லூரி. மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து செயல்படத் துவங்குமாம்.
''அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மனைவி சாந்தா ஆகியோர் இணைந்து நாராயணா அறக்கட்டளை வைத்துள்ளனர். அதன் சார்பாக ஒரு கல்லூரி நடத்துகின்றனர். அந்தக் கல்லூரிக்காக ஏழை, எளிய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு 100 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த நிலங்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிலங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, இப்போது புங்கனூரில் இருக்கும் ஏரியை வளைத்து தேசிய நெடுஞ்சாலைக்குப் பாதை அமைத்து வருகின்றனர். இது என்ன தர்மம்?'' என்று கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முழங்கினார்.

ஜெயலலிதா குறிப்பட்டது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூர் கிராமத்தில் இயங்கி வரும் கேர் இன்ஜினீயரிங் கல்லூரி பற்றித்தான். அந்தக் கல்லூரியின் சேர்மனாக இருப்பவர் நேருவின் தம்பி ராமஜெயம். நேருவின் அக்காள் மகனும், மாப்பிள்ளையுமான செந்தில் இதன் நிர்வாக அதிகாரி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இன்ஜினீயரிங் கல்லூரி, நேருவின் தந்தை பெயரில் இயங்கி வரும் நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல, நேருவின் மனைவி சாந்தாவும் சகோதரர் ரவிச்சந்திரனும் டிரஸ்ட்டை நடத்த, குடும்ப உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ஊரகத் தொழில் மற்றும் கால்நடைத் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கல்லூரியைக் கட்டி இருக்கிறாராம் பழனிச்சாமி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார்.
''கருணாநிதிக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்துகொண்டு, அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் அமைச்சர்கள் யாரும், நன்றிக் கடனாகக்கூட கருணாநிதியின் பெயரை வைக்கவில்லை. ஆனால், பொங்கலூரார்தான் தலைவரின் பெயரைச் சூட்டி தன்னுடைய நன்றி உணர்ச்சியைக் காட்டி இருக்கிறார்...'' என்று பொங்கலூராரின் கோஷ்டி பெருமை அடித்துக்கொள்கிறது.

'கனிமொழிக்கு சொந்தமானது இந்தக் கல்லூரி. பொங்கலூர் பழனிச்சாமியின் பெயரை இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்!’ என்று சொல்பவர்களும் உண்டு. நீலகிரி தொகுதியின் எம்.பி-யாக ஆ.ராசா வந்து உட்கார்ந்த சில காலங்களிலே, இந்தக் கல்லூரி அவரது பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற லெவலுக்குக்கூட லோக்கல் தி.மு.க-வுக்குள் புகைந்தது. ஆனால், பொங்கலூரார் தரப்போ... எல்லாவற்றையும் அடியோடு மறுத்துச் சிரிக்கிறது.
வேளாண் துறை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமாக உத்தம சோழபுரத்தில் வி.எஸ்.ஏ. குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் (இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ.) இருக்கிறது. வி.எஸ்.ஏ. என்றால் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்று அர்த்தம். அமைச்சரின் மகனான எம்.எல்.ஏ.ராஜா இதன் சேர்மன். இந்தக் கல்லூரியைக் கட்டுவதற்காக அருகில் இருந்த கஞ்ச மலையை சேதம் செய்தார்கள் என்றொரு புகார் எழுந்து அடங்கியது. இந்தக் கல்லூரி தவிர ஆட்டையாம்பட்டியில் பழைய ஸ்கூல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் விலைக்கு வாங்கி, வி.எஸ்.ஏ. மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க-வின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவருடைய சித்தப்பா தெய்வசிகாமணி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் காட்டுமன்னார்கோவிலில், சந்திரவதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மற்றும் சந்திரவதனம் ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரே சேர்மனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
2008-ம் ஆண்டு மேலபழஞ்சநல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் மூன்று ஏக்கரிலும், 2009-ம் ஆண்டு வீராணம் நல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றை சுமார் 20 ஏக்கரிலும் நடத்தி வருகிறார். இதை பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் நிர்வகித்து வருகிறார். கதிரவன்தான் சேர்மன். நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்வி நிறுவனத்துக்காக கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஆர்.கே. கல்வி அறக்கட்டளைக்கு பன்னீர்செல்வத்தின் சித்தப்பா தெய்வசிகாமணி சேர்மனாக இருக்கிறார்.
சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது மகன் கதிர்ஆனந்த் பெயரில் கிங்ஸ்டன் கலை மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். காட்பாடியில் இருந்து சித்தூர் போகும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகில்தான் அரசின் வெடி மருந்துத் தொழிற்சாலை நடந்து வருகிறது. இதன் அருகில் எந்தவொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்பது அரசு விதி. அதையும் மீறி இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதனால், 'அரசு வெடி மருந்துத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றலாமா...’ என்ற அளவுக்கு ஆலோசனைகள் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பொன்முடி, சிகா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம், சிகா மேலாண்மைக் கல்லூரி, மற்றும் சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி ஆகியவற்றை கப்பியாம்புலியூர் என்ற இடத்தில் நான்கு ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டி அருகே சூர்யா பொறியியல் கல்லூரி ஒன்றையும் மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சூர்யா பொறியியல் கல்லூரி பொன்முடியின் மகன்களான பொன்.கௌதமசிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் பெயரில் நடத்தப்படுகிறது.

முன்னரே சொன்னது மாதிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் ஐ.டி.ஐ., ஜீவா வேலு உறைவிடப் பள்ளி ஆகியவற்றை வேலு நடத்தி வருகிறார்.
ஆக மொத்தம், தமிழக அமைச்சரையில் நான்கில் ஒரு பங்கு மந்திரிகள் கல்வித் தந்தையராக வளர்ந்திருக்கிறார்கள்.
''இது பொற்கால ஆட்சி!'' என்று சமீபத்தில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ''பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கிற நிலைமை ஏற்படுகிறதோ, அதுதான் பொற்காலமாகும்!'' என்று சொன்னார்.

இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது!
- நன்றி : ஜூனியர்விகடன் - 27-02-2011
|
Tweet |
51 comments:
நல்லதுதானே செய்கிறார்கள்.ஒரு நாள் வங்கிகள் மாதிரி எல்லாவற்றையும் அரசுடமைன்னு அறிவிச்சுட்டாப் போகுது.இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?
இந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு அருமை நண்பா...
தமிழர்கள் திருந்தட்டும்...
பார்த்தீகளா!தி.மு.கவுக்கு வக்காலத்து வாங்கினதும் எனக்கு பின்னூட்ட முன்னுரிமை:)
உ.த அண்ணனுக்கும் பொற்கால ஆட்சிதானே? தினமும் ஒன்னை எடுத்து வுட முடியுது அல்லவா?? இஃகிஃகி!!
பார்த்து சூதானமா இருந்துகுங்கண்ணே!! சென்னையில வேற இருக்கீங்க?? நெம்ப நல்லவராவும் இருக்கீங்க?? அவ்வ்வ்....
தலைவரே.. சவுக்கு இதே பதிவு பண்ணியிருக்கிறார் ...நீங்க வேற மாதிரி துப்பு துலக்கி புலனாய்வு செய்து எழுதலாமே ....
முதலில் பணம் சம்பாதிக்க மட்டுமே என்ற குறிக்கோளுடன் தொடங்கிய அம்மா ஆட்சி முன்னாள் அமைச்சர் ஜி விஸ்வநாதன் (வேலூர்) கல்லூரி இன்று தரத்தில் ஓரளவு சிறந்து விளங்குகிறது. மாணவர்கள் மத்தியில் நல்ல கல்லூரி என்ற பெயர் பெற்றுள்ளது.
எதிர் காலத்தில் இந்தக் கல்லூரிகளும் சிறக்கலாம் என்று நம்புவோமாக.
கருணாநிதி சொல்வது போல் ஏழைகளுக்கு பொற்காலம் வர வேண்டுமானால், இவரின் ஊழல் ஆட்சி தமிழக வரலாற்றில் என்றுமே வராத வண்ணம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். சில தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு சில ஏழை மாணவர்களுக்கு இலவச உதவி செய்து வருகிறது. எதுவுமே ஏழை மாணவர்களுக்கு செய்யாத கல்வி நிறுவனகள் உள்ளது இந்த ஆட்சியினரின் கல்வி நிறுவனங்கள் தான். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல் கருணாநிதியால் இப்படி எல்லாம் எப்படி பேச முடிகிறது?
[[[ராஜ நடராஜன் said...
நல்லதுதானே செய்கிறார்கள். ஒரு நாள் வங்கிகள் மாதிரி எல்லாவற்றையும் அரசுடமைன்னு அறிவிச்சுட்டாப் போகுது. இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?]]]
அப்படி செய்றதுக்கு யாருக்காவது தைரியம் வரணுமே..? சாத்தியமில்லைன்னு நினைக்கிறேன். ஏனென்றால் கோடிக்கணக்கில் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்..!
[[[வேடந்தாங்கல் - கருன் said...
இந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு அருமை நண்பா... தமிழர்கள் திருந்தட்டும்...]]]
வருகைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!
என்ன சார் ! படிப்புத் தானே ரொம்ப முக்கியமுங்க ! விவசாயம் பார்த்துக் காசுப் பணம் பண்ண முடியுமா ? அதுவும் டொனேசன் கொடுத்துப் படிச்சாத் தானே மதிப்பாங்க ! அதுவும் இல்லாம , நாளைக்கே திமுக என்னும் கட்சியே இல்லாமலும் போச்சுனு, பிழைப்பு நடத்த வேண்டாமா சார்......... இதைப் போய் கவர் ஸ்டோரி பண்ணிக்கிட்டு. இன்னும் 250 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் இருக்காம், அதுல ஒரு லட்சம் காலேஜ் கட்டினாத் தானே, நல்லாப் படிச்சு இந்த நாடு முன்னேறும்.. என்னப் பாஸ்........... சரியா
[[[ராஜ நடராஜன் said...
பார்த்தீகளா! தி.மு.கவுக்கு வக்காலத்து வாங்கினதும் எனக்கு பின்னூட்ட முன்னுரிமை:)]]]
இன்னிக்கு முந்திக்கி்ட்டீங்க.. அவ்வளவுதான். நாளைக்குப் பாருங்க..!
[[[பழமைபேசி said...
உ.த அண்ணனுக்கும் பொற்கால ஆட்சிதானே? தினமும் ஒன்னை எடுத்து வுட முடியுது அல்லவா?? இஃகிஃகி!!]]]
இருக்கும்டி இருக்கும். நாட்டுப் பிரச்சினையைப் பத்திப் பேசினா உங்களுக்கு நக்கலா தெரியுதா..?
[[[பார்த்து சூதானமா இருந்துகுங்கண்ணே!! சென்னையில வேற இருக்கீங்க??]]]
எது வந்தாலும் வரட்டுமே..? இவுங்களுக்கெல்லாம் போய் பயப்படலாமா..?
[[[நெம்ப நல்லவராவும் இருக்கீங்க?? அவ்வ்வ்....]]]
இதுதான் ரொம்ப இடிக்குது.. நான் ரொம்பக் கெட்டவன் தம்பி.. நல்லவன் இல்லை. நம்புங்கப்பா..!
[[[ராம்ஜி_யாஹூ said...
முதலில் பணம் சம்பாதிக்க மட்டுமே என்ற குறிக்கோளுடன் தொடங்கிய அம்மா ஆட்சி முன்னாள் அமைச்சர் ஜி விஸ்வநாதன் (வேலூர்) கல்லூரி இன்று தரத்தில் ஓரளவு சிறந்து விளங்குகிறது. மாணவர்கள் மத்தியில் நல்ல கல்லூரி என்ற பெயர் பெற்றுள்ளது.
எதிர் காலத்தில் இந்தக் கல்லூரிகளும் சிறக்கலாம் என்று நம்புவோமாக.]]]
தரத்தை பணத்தைக் கொண்டுதான் வரவழைத்துள்ளார்கள் ஸார்..!
கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் பெரும்பாலானவை பொறம்போக்கு நிலங்கள். அரசு நிலங்கள். ஆட்டையைப் போட்டுட்டாரு விஸ்வநாதன்..! இதுதான் உண்மை. ஆட்சி மாறினாலும் காசு கொடுத்து கவுத்திருவாரு.. அவ்ளோதான்..!
[[[Indian Share Market said...
கருணாநிதி சொல்வது போல் ஏழைகளுக்கு பொற்காலம் வர வேண்டுமானால், இவரின் ஊழல் ஆட்சி தமிழக வரலாற்றில் என்றுமே வராத வண்ணம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். சில தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு சில ஏழை மாணவர்களுக்கு இலவச உதவி செய்து வருகிறது. எதுவுமே ஏழை மாணவர்களுக்கு செய்யாத கல்வி நிறுவனகள் உள்ளது இந்த ஆட்சியினரின் கல்வி நிறுவனங்கள்தான். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல் கருணாநிதியால் இப்படி எல்லாம் எப்படி பேச முடிகிறது?]]]
அதுதான் அவருக்குக் கை வந்த கலையாச்சே ஸார்..? அதை வைச்சுத்தானே இவ்வளவு நாளா அவர் கொள்ளையடிச்சிட்டிருக்காரு..!
[[[இக்பால் செல்வன் said...
என்ன சார் ! படிப்புத்தானே ரொம்ப முக்கியமுங்க! விவசாயம் பார்த்துக் காசுப் பணம் பண்ண முடியுமா ? அதுவும் டொனேசன் கொடுத்துப் படிச்சாத்தானே மதிப்பாங்க ! அதுவும் இல்லாம, நாளைக்கே திமுக என்னும் கட்சியே இல்லாமலும் போச்சுனு, பிழைப்பு நடத்த வேண்டாமா சார். இதைப் போய் கவர் ஸ்டோரி பண்ணிக்கிட்டு. இன்னும் 250 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் இருக்காம், அதுல ஒரு லட்சம் காலேஜ் கட்டினாத்தானே, நல்லாப் படிச்சு இந்த நாடு முன்னேறும். என்ன பாஸ். சரியா?]]]
ரொம்பச் சரி.. நம்மாளுகளும் எதுக்குப் படிக்கிறோம்னு தெரியாமலேயே படிச்சுட்டு திருடவனுக்கே ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்குறானுக.. அப்புறம் நாம என்னத்த சொல்றது..?
[[[கோவை நேரம் said...
தலைவரே.. சவுக்கு இதே பதிவு பண்ணியிருக்கிறார். நீங்க வேற மாதிரி துப்பு துலக்கி புலனாய்வு செய்து எழுதலாமே.]]]
துப்புத் துலக்குற அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லீங்கண்ணா..!
http://fouruseofgooglereaderintamil.blogspot.com/2011/02/google-reader-4.html
கோவிந்தராஜன் கமிட்டி ஏன் தலைதெறிக்க வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினார் என்பது இப்போது புரிகிறது. ஆமாம் இப்போது புதுசாக யாரோ கமிட்டித் தலைவராக வந்தாரே, அவர் என்னதான் பண்ணுகிறார்?
உண்மையான கல்வி புரட்சியை உருவாக்கி இருக்கிறார்கள் இவர்கள். வாழ்த்துக்கள். பின் குறிப்பு : தமிழ்நாடு எப்ப உருப்பட போகுதுன்னு தெரியலை.
ஜூனியர் விகடன்ல வேலைக்குச் சேர்ந்துட்டீங்களாண்ணே?
[[[d said...
http://fouruseofgooglereaderintamil.blogspot.com/2011/02/google-reader-4.html]]]
இது எதற்கு? புரியவில்லையே பிரதர்..!
[[[ramalingam said...
கோவிந்தராஜன் கமிட்டி ஏன் தலைதெறிக்க வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினார் என்பது இப்போது புரிகிறது. ஆமாம் இப்போது புதுசாக யாரோ கமிட்டித் தலைவராக வந்தாரே, அவர் என்னதான் பண்ணுகிறார்?]]]
அமைதியா தான் உண்டு. தனது வேலை உண்டுன்னு இருக்கார்.. அவ்ளோதான்..!
[[[பெயருள்ள என்னய்யா இருக்கு said...
உண்மையான கல்வி புரட்சியை உருவாக்கி இருக்கிறார்கள் இவர்கள். வாழ்த்துக்கள். பின் குறிப்பு : தமிழ்நாடு எப்ப உருப்பட போகுதுன்னு தெரியலை.]]]
ஆமாம்.. புரட்சிதான். கொள்ளையடிப்பதில் புரட்சிதான் செய்திருக்கிறார்கள்.. வாழ்த்துவோம்..!
[[[செங்கோவி said...
ஜூனியர் விகடன்ல வேலைக்குச் சேர்ந்துட்டீங்களாண்ணே?]]]
இனிமேல் எப்படிச் சேர முடியும்..? அதான் போச்சே..!
I am not getting what is the mistake in starting colleges? Did they stop you from doing something?
If they had grabbed lands, then you can prosecute them in the courts.
Our vote is for DMK only!!!
[ I am not getting what is the mistake in starting colleges? Did they stop you from doing something?
If they had grabbed lands, then you can prosecute them in the courts.
Our vote is for DMK only!!!
]
Dear Mr.N, Don't you still understand what is the problem behind these colleges? Thats why I said many people of Tamil Nadu, never care about whom this colleges are run by or how they acquire these agriculture lands or what motive for a politician to run a private college.
Of course it's democratic institution you can vote for whomever you like, but will you or your child get a free seat in these colleges, because you voted for those guys. Or atleast will you get donation free admission in these college being you voted for these DMK's people.
NEVER It's not DMK or ADMK we people striving for a transparent society here, never ever support a politicians building educational institution to make a good profit out of it. Also we are opposing strongly for acquiring agricultural land for purpose of other than the agricultural needs. Also we need a enquire how these guys get such a money to build a colleges or universities. Are they earning a high pay jobs or running a business. WE HAVE RIGHTS TO KNOW about these people who are in politics and how they earn such a big capital to estabilish colleges or universities or hospitals.
Still if you vote for DMK ! I'm sorry i have wasted a five mins in my life............
கல்லூரிகளின் முதல் போடுவது என்பது ஒரு மிகச்சிறந்த தொழில் உத்தி! சிறப்பாக நிர்வகிக்கும்பட்சத்தில் வருடாவருடம் பணம் அள்ளிக் கொட்டக் கூடிய ஒரு தொழில்தான் கல்வி நிறுவனத் தொழில்!
எளியோரை வலியோர் நசுக்கித் தள்ளுதல் என்பது ஓட்டை உடைசல் நிறைந்த நம் சட்டவிதிகளில் சுலபமாக நடக்கக்கூடிய ஒன்றுதான்!
விவசாய நிலங்களை வளைத்துப் போட்டு அதில் கான்கிரிட் மரங்களை நட்டு வைக்கும் செயல் - பசிக்கு நம் மலத்தையே அள்ளி சாப்பிடுவதற்கு ஒப்பாகும்!!!
இதில் DMK, ADMK, Congress என்று எந்த வித்தியாசமுமில்லை.
[[[N said...
I am not getting what is the mistake in starting colleges? Did they stop you from doing something? If they had grabbed lands, then you can prosecute them in the courts.
Our vote is for DMK only!!!]]]
தாராளமா ஓட்டுப் போடுங்க. நானா வேண்டாம்கிறேன். அது உங்க இஷ்டம்..! ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாள்ல.. கோடிக்கணக்குல பணத்தைச் செலவழிச்சு காலேஜ் கட்ட முடியுதுன்னா நிச்சயமா கள்ள நோட்டு அடிச்சாத்தான் முடியும்..!
இக்பால் ஸார்..!
மிக்க நன்றி.. ப்ரீ சீட் கொடுக்குறாங்களோ இல்லையோ.. அது அடுத்த விஷயம். முதல் விஷயமே.. இவ்வளவு பணம் இந்த நாய்களுக்கு எங்கேயிருந்து கிடைத்ததுன்னு தெரியணுமே..?
[[[ரிஷி said...
கல்லூரிகளின் முதல் போடுவது என்பது ஒரு மிகச்சிறந்த தொழில் உத்தி! சிறப்பாக நிர்வகிக்கும்பட்சத்தில் வருடா வருடம் பணம் அள்ளிக் கொட்டக் கூடிய ஒரு தொழில்தான் கல்வி நிறுவனத் தொழில்! எளியோரை வலியோர் நசுக்கித் தள்ளுதல் என்பது ஓட்டை உடைசல் நிறைந்த நம் சட்ட விதிகளில் சுலபமாக நடக்கக்கூடிய ஒன்றுதான்! விவசாய நிலங்களை வளைத்துப் போட்டு அதில் கான்கிரிட் மரங்களை நட்டு வைக்கும் செயல் - பசிக்கு நம் மலத்தையே அள்ளி சாப்பிடுவதற்கு ஒப்பாகும்!!! இதில் DMK, ADMK, Congress என்று எந்த வித்தியாசமுமில்லை.]]]
உண்மைதான் ரிஷி.. சென்னையைச் சுற்றி இவர்கள் கட்டியிருக்கும் கல்லூரிகள் அமைந்திருக்கும் இடங்கள் முழுவதும் விவசாய விளைநிலங்கள்தான்.
அப்பாவி விவசாயிகளை ஏமாற்றியும், மிரட்டியும், அதிகாரத்தைப் பயன்படுத்தியும் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள். ஆனால் இவர்கள்தான் கல்வித் தந்தையாக இப்போது சொல்லப்படுபவர்கள்..! எல்லாம் கொடுமைதான்..!
//நல்லதுதானே செய்கிறார்கள்.ஒரு நாள் வங்கிகள் மாதிரி எல்லாவற்றையும் அரசுடமைன்னு அறிவிச்சுட்டாப் போகுது.இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?//
முதல் கமெண்ட்டே நச்!
[[[ஜி கௌதம் said...
//நல்லதுதானே செய்கிறார்கள்.ஒரு நாள் வங்கிகள் மாதிரி எல்லாவற்றையும் அரசுடமைன்னு அறிவிச்சுட்டாப் போகுது. இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?//
முதல் கமெண்ட்டே நச்!]]]
வருகைக்கு மிக்க நன்றிகள் அண்ணே..!
அனைவருக்கும் கல்வி குடுக்க முனைந்தது குற்றமா? ஏன் உங்களுக்கு பொறாமை? ச்சே.. என்ன சமுதாயம் இது..இறைவா.
You are biased against DMK, everyone in Tamil Nadu knows that Private Engg Colleges were started by Politicians begin only in ADMK MGR/Janaki rule. Later many ADMK ministers have stared Engg colleges across TN.
http://powrnamy.blogspot.com
pls read and comment the relevant article
T.R பாலுவோட Kings Engineering College மறந்துட்டிங்களா?
படிப்பு அப்பாக்களைப் (கல்வித் தந்தை) பற்றி நல்லா வெவரமா எளுதிருகீக.... ஒரு பயலும் யோக்கியனில்ல இந்த விசயத்துல. ஆனா கருப்பு செவப்புக் காரவுக கொஞ்சம் ஓவராத்தான் போறாக. ஒரு வெவரமானவரு முன்ன ஒரு பின்னூட்டத்துல சொன்னாப்புல இனி திமுகவே இல்லன்னு ஆனப்பொறவு சோத்துக்கு சிங்கியா அடிப்பாக.... நாமள்ளாம் இருக்கம்ல அவுகள வாள வெக்ய.... அவுகளுக்கென்ன கவல!!
காமராசர் ஆட்சிகாலத்தில் ஊருக்கு ஒரு கல்வி சாலை தொடங்க உண்மையான கல்வித் தந்தைகள் வந்தனர். ஆனால் , காலம் மாற மாற கல்வி கடைச் சரக்காகி இன்று உயர்கல்வி வரை காசாகிப்போனதால், படிப்புக்கு மதிப்பு இல்லாமல் , வேலை யில்லாத் திண்டாட்டம் அதிகமாகி உள்ளது. அதனால் சமூக குற்றமும் பெருகி வருகிறது. உண்மையை வெளிச்சம் போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்
"ரிஷி பொறியியல் கல்லூரி" எதிர்காலத்தில் உருவாக வாய்ப்பிருக்கிறது.. முன்மாதிரியான ஒன்றாக!
[[[! சிவகுமார் ! said...
அனைவருக்கும் கல்வி குடுக்க முனைந்தது குற்றமா? ஏன் உங்களுக்கு பொறாமை? ச்சே. என்ன சமுதாயம் இது. இறைவா.]]]
கல்வி குடுக்கவா இவங்க காலேஜ் கட்டியிருக்காங்க..? இப்படி நம்புற உங்களை மாதிரி நாலு பேர் சமுதாயத்துல இருந்தா போதும்.. இறைவா..!
[[[Prakash said...
You are biased against DMK, everyone in Tamil Nadu knows that Private Engg Colleges were started by Politicians begin only in ADMK MGR/Janaki rule. Later many ADMK ministers have stared Engg colleges across TN.]]]
உண்மைதான். இவர்கள் இருவரின் ஆட்சியிலும்தான் துவங்கினார்கள். இப்போது இதனைத் துவக்காதவர்கள் மந்திரிகளே கிடையாது என்பதுபோல் ஆடுகிறார்கள்..!
[[[நிலவு said...
http://powrnamy.blogspot.com
pls read and comment the relevant article]]]
கண்டிப்பாக பார்க்கிறேன் நண்பரே..! நன்றி..!
[[[Suresh.D said...
T.R பாலுவோட Kings Engineering College மறந்துட்டிங்களா?]]]
நான் மறக்கலீங்கண்ணா.. ஜூ.வி.ல மறந்துட்டாங்க..!
[[[Arun Ambie said...
படிப்பு அப்பாக்களைப் (கல்வித் தந்தை) பற்றி நல்லா வெவரமா எளுதிருகீக. ஒரு பயலும் யோக்கியனில்ல இந்த விசயத்துல. ஆனா கருப்பு செவப்புக் காரவுக கொஞ்சம் ஓவராத்தான் போறாக. ஒரு வெவரமானவரு முன்ன ஒரு பின்னூட்டத்துல சொன்னாப்புல இனி திமுகவே இல்லன்னு ஆனப் பொறவு சோத்துக்கு சிங்கியா அடிப்பாக. நாமள்ளாம் இருக்கம்ல அவுகள வாள வெக்ய. அவுகளுக்கென்ன கவல!!]]]
இது ஒண்ணு போதுமே..? ஏழு தலைமுறைக்கு உக்காந்தே திங்கலாம்..!
[[[மதுரை சரவணன் said...
காமராசர் ஆட்சி காலத்தில் ஊருக்கு ஒரு கல்வி சாலை தொடங்க உண்மையான கல்வித் தந்தைகள் வந்தனர். ஆனால், காலம் மாற மாற கல்வி கடைச் சரக்காகி இன்று உயர் கல்விவரை காசாகிப் போனதால், படிப்புக்கு மதிப்பு இல்லாமல், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி உள்ளது. அதனால் சமூக குற்றமும் பெருகி வருகிறது. உண்மையை வெளிச்சம் போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.]]]
எனக்கெதற்கு வாழ்த்துகள்.. எல்லாப் புகழும் ஜூவிக்கே போய்ச் சேரட்டும்..!
[[[ரிஷி said...
"ரிஷி பொறியியல் கல்லூரி" எதிர்காலத்தில் உருவாக வாய்ப்பிருக்கிறது. முன் மாதிரியான ஒன்றாக!]]]
இப்போதே வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..! அதுலயாவது எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுங்கப்பா..!
Hi TT,
Have a look at this link wherein Arun Shourie is accusing Dayanidhi Maran on 2G scam.
http://www.dailypioneer.com/320350/2G-scam-Shourie-blames-Maran-for-key-policy-manipulation.html
[[[San said...
Hi TT, Have a look at this link wherein Arun Shourie is accusing Dayanidhi Maran on 2G scam.
http://www.dailypioneer.com/320350/2G-scam-Shourie-blames-Maran-for-key-policy-manipulation.html]]]
தகவலுக்கு மிக்க நன்றி சான்..!
உலகின் ஒரே ஏழையான “தல”யையும் அவரின் ஏழை அடிபொடிகளையும் பற்றி அவதூறாகவே எழுதுறீங்ணா...
“தல” தன் வீட்டை கூட அஞ்சுகம் மருத்துவமனைக்கு இலவசமா தந்துட்டாராமாம்...
அவருக்கு தங்கறதுக்கு கூட வீடே இல்லையாமாம்..
இன்னிக்கு இருக்கற அரசியல்வியாதிகளை விட இவரே பொதுவாழ்வில் தூய்மையானவராமாம்
இன்னும் என்னன்னவோ சொல்றாய்ங்களேண்ணே!!!
See who owns thegioibep.com or any other website:
http://whois.domaintasks.com/thegioibep.com
See who owns abebooks.com or any other website.
Post a Comment