கொந்தளித்த ஆ.ராசாவின் மனைவி!

30-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டெல்லி திகார் சிறை வட்டாரத்தில் உலா வந்த ஆ.ராசாவின் உறவுக்காரர்களை, திருச்சி வருமானவரித் துறை விசாரணைக்காக அழைத்தது! 

ஜூன் 24-ம் தேதி, காலை 10.35-க்கு ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆ.ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், அக்கா மகள் வித்யா, அக்கா மகன்கள் பரமேஸ்வரன், வெங்கடேசன் ஆகியோர் இரண்டு கார்களில் வந்து இறங்கினர்.

அவர்களைச் சூழ்ந்து பளிச், பளிச்சென ப்ளாஷ் அடிக்க... இத்தனை மீடியாக்களை எதிர்பாராத அவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். ''அவரைப் பத்தித்தான் இஷ்டத்துக்கும் எழுதி ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்க... அப்புறம் இன்னும் ஏன் எங்களைத் தொல்லை பண்றீங்க..?'' என்று சீறியபடி, அலுவலகத்தின் உள்ளே சென்றார் பரமேஸ்வரி.

அடுத்து வந்த ராமச்சந்திரனை சூழ்ந்து​ கொண்ட நிருபர்கள், ''எதற்காக ஆஜராகச் சொல்லி உத்தரவு வந்துள்ளது? யார் யார் ஆஜர் ஆகிறீர்கள்?'' என்று கேட்க, ''உங்களுக்கு யார் தகவல் சொன்னார்களோ, அவர்களிடமே போய் விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று முறைத்தார்.

சற்று நேரத்துக்குப் பின்னர் அவர்களுடன் வந்த ஆடிட்டர்கள், ''வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ததில் சில சந்தேகங்கள் என்று பரமேஸ்வரியையும் ராமச்சந்திரனையும் வரச் சொல்லி இருக்கிறார்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை வருமானவரித் துறையினர் வரச் சொல்லி விசாரிப்பது சாதாரண விஷயம்தான்...'' என்று விளக்கம் சொன்னார்கள்.

பரமேஸ்வரி விசாரணைக்காகச் சென்ற சிறிது நேரத்திலேயே, வித்யாவும் வெங்கடேசனும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். பரமேஸ்வரியிடம் மதியம்வரையும், ராமச்சந்திரனிடம் மாலைவரையும் விசாரணை நடந்தது. 

இது தொடர்பாக விவரம் அறிந்த வட்டாரத்தில் பேசியபோது, ''இருவரிடமும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் இருக்கின்றன. ஆகவே, அவர்களிடம் ஆரம்பத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆ.ராசா கைதுக்கு முன்னர், பெரம்பலூர் மற்றும் திருச்சியில் அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் புகுந்து ரெய்டு நடத்திய சி.பி.ஐ. டீம், பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றது. சொத்துகள் வாங்குவதற்கான வருமானம் எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடந்தது. பரமேஸ்வரி மற்றும் ராமச்சந்திரன் சொன்ன பதில்களில் விசாரணை அதிகாரிகளுக்கு முழுத் திருப்தி ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விரைவில் மற்ற உறவுகளையும் அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பார்கள்!'' என்றனர்.

இது குறித்து நாம் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் செல்போனில் தொடர்பு கொண்டோம். அது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. திருச்சியில் இருக்கும் ராசாவின் சகோதரர் கலியபெருமாளிடம் பேசினோம். ''உங்களிடம் பரமேஸ்வரி எதுவும் பேச மாட்டார். எங்கள் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை!'' என்று கூறினார்.

வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்திருந்த ஆ.ராசாவின் குடும்ப உறுப்பினர்களைப்  பற்றி சிறு குறிப்புகள்.

பரமேஸ்வரி: ஆ.ராசாவின் மனைவி. சாதிக் பாட்சா நிர்வாக இயக்குநராக இருந்த க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அதன் டைரக்டர் பொறுப்பில் இருந்தார். பின்னர் விலகிவிட்டார்.

ராமச்சந்திரன்: ஆ.ராசாவின் குடும்பத்தில் மூத்த ஆண். ஐ.எஃப்.எஸ். அதிகாரியான இவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி இருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றத் துறையின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

பரமேஸ்வரன்: ஆ.ராசாவின் மூத்த அக்காள் விஜயாவின் மகன். அம்மா விஜயா, அப்பா பச்சைமுத்து இருவரும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் சாதிக் பாட்சா எம்.டி-யாக இருந்தபோது, இவர் ஜே.எம்.டி. பொறுப்பில் இருந்தார். சாதிக் பாட்சாவின் மறைவுக்குப் பின்னர் இவர்தான் எம்.டி. சாதிக்பாட்சா தரப்பில் சுப்புடு என்கிற சுப்பிரமணியனுக்கும் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. செக்கில் கையெழுத்துப் போடும் அதிகாரம் இந்த இருவருக்கும்தான். இது வரை 2-ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் பரமேஸ்வரன் விசாரிக்கப்படாமல் இருப்பது, விவரம் அறிந்தவர்கள் வட்டாரத்தில் ஆச்சர்யமாக விவாதிக்கப்படுகிறது.

வித்யா: ஆ.ராசாவின் சகோதரி கமலாவின் மகள். தந்தை அரங்கராஜன், கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் சி.டாக் என்ற ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குத் தேவையான மென்​பொருட்களை உற்பத்தி செய்து தருகிறது.

வெங்கடேசன்: ஆ.ராசாவின் சகோதரி சரோஜாவின் மகன். பி.எஸ்.என்.எல். நிறுவன திருச்சி மண்டல அலுவலகத்தில் அக்கவுன்ட் ஆபீஸராகப் பணியாற்றுகிறார். ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது, இரண்டு வருட காலமாக டெலிகாம் டிபார்ட்மென்டில் அசிஸ்டென்ட் பிரைவேட் செக்ரெட்​டரியாக டெல்லியில் பணியாற்றினார்.

- ஆர்.லோகநாதன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

நன்றி : ஜூனியர்விகடன்-03-07-2011

11 comments:

pichaikaaran said...

அரசியல் பதிவுகளை தொடர்ந்து ரசித்த படிக்கிறேன் . உங்கள் உழைப்பை வணங்குகிறேன் . அதற்காக சினிமா பதிவை குறைக்கிறார்கள் . பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி இருக்கும் சின்னஞ் சிறுசுகள் படம் குறித்து விரிவான விமர்சனம் எதிர்பார்க்கிறோம்

சக்தி கல்வி மையம் said...

raittu..

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

அரசியல் பதிவுகளை தொடர்ந்து ரசித்த படிக்கிறேன். உங்கள் உழைப்பை வணங்குகிறேன். அதற்காக சினிமா பதிவை குறைக்கிறார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி இருக்கும் சின்னஞ்சிறுசுகள் படம் குறித்து விரிவான விமர்சனம் எதிர்பார்க்கிறோம்.]]]

பார்வை..

அடங்க மாட்டியா நீயி..? அது மாதிரி கெட்ட படங்களையெல்லாம் நான் எப்பவுமே பார்க்கிறது கிடையாது. ஆளை விடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[!* வேடந்தாங்கல் - கருன் *! said...

raittu..]]]

வருகைக்கு நன்றி கருன்..!

Sai said...

தொடர்ந்து ஓரு கட்சிக்கு எதிராக எழுதும் நீங்கள் ஏன் இந்த வார நக்கீரனில் வந்த தலைப்பு செய்தி பற்றி எழுதவில்லை
பயமா? பாசமா? விசுவாசமா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஓகே...ஓகே...

vivek kayamozhi said...

What Mr.Sai?...!!!!

Do you believe nakkiran even now?

Its a 3rd class cheep yellow book.
Pls try to quote any other genuine persons...

உண்மைத்தமிழன் said...

[[[Sai said...

தொடர்ந்து ஓரு கட்சிக்கு எதிராக எழுதும் நீங்கள் ஏன் இந்த வார நக்கீரனில் வந்த தலைப்பு செய்தி பற்றி எழுதவில்லை. பயமா? பாசமா? விசுவாசமா?]]]

பயம் கலந்த பாசவுணர்ச்சி மிகுந்த விசுவாசம்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...

ஓகே... ஓகே...]]]

நன்றி.. நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[vivek said...

What Mr.Sai?...!!!! Do you believe nakkiran even now? Its a 3rd class cheep yellow book. Pls try to quote any other genuine persons...]]]

சில சமயங்களில் உண்மையை கூடுதல் சவுண்டுகளோடு சொல்லும். பல சமயங்களில் பொய்களை மட்டுமே உரக்கச் சொல்லும்..!

ரிஷி said...

இப்போல்லாம் ஏண்ணே ஊழல் பதிவுகளுக்கு பின்னூட்டமே வர்றதில்ல?? திட்டி திட்டி எல்லோருக்கும் போரடிச்சிருச்சோ?!!