02-06-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
2 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜெயலலிதா கூறியிருந்த குற்றச்சாட்டு ஒன்றினை அத்தனை பேரும் மறந்து போயிருந்தோம். நிஜமாகவே நானும் மறந்துவிட்டேன். ஆத்தாவும் மறந்துவிட்டதோ என்னவோ, கடந்த தேர்தல் பிரச்சாரத்திலும் இந்தச் செய்தியைப் பற்றி யாரும் குறிப்பிடவில்லை.
ஆனால் இன்றைய தினமணியில் முதல் பக்கத்தில் வெளியாகியிருக்கும் இச்செய்தியைப் பார்த்தவுடன் பழைய ஞாபகம் வந்தது..! இந்தச் செய்தியை முதலில் ஜெயா டிவியும், ஆத்தாவும் சொன்னபோது, “சி.பி.ஐ. எங்களை விசாரித்தால் நாங்கள் பதில் சொல்லிக் கொள்கிறோம்.. அதைப் பற்றிய கவலை அம்மையாருக்குத் தேவையில்லை..” என்று தாத்தா கூறியிருந்தார். அதன் பின்பு இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்ட 2-ஜி வழக்கு வெளியாகி இந்தச் செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது..! இப்போது மறுபடியும் வெளியாகியிருக்கிறது..
முதலில் தினமணி கட்டுரையைப் படியுங்கள்.. பின்பு மீண்டும் பேசுவோம்..!

ஏர்செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல் தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார்.
இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பி.எஸ்.என்.எல்.லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. கணக்கிட்டுள்ளது.
இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது. இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.
இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.
இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.

ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.
இது குறித்து விசாரித்த சி.பி.ஐ. இது தொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.
என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து தி.மு.க. தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.

தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன்.
இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐ.எஸ்.டி.என். இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களைவிட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச் சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.
டிஜிடல் தகவல்களைக் கொண்டு போய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.
இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசாகூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.
வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
சி.பி.ஐ. இது குறித்து புகார் கூறியும்கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.
சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும்கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அது குறித்து தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
தயாநிதி மாறனின் குடும்ப வர்த்தக நோக்கத்துக்காக இந்த தனி இணைப்பகம் பயன்பட்டது என்ற மோசடியை சி.பி.ஐ. எப்படி, எதனால் விசாரிக்க நேரிட்டது என்பது தனிக்கதை. அதைத் தெரிந்து கொள்வதற்கு, சில சம்பவங்களை நினைவு கூர்வது அவசியம்.
திமுக தலைவர் மு. கருணாநிதியின் அக்கா பேரனான தயாநிதி மாறன் 2004 ஜூன் முதல் 2007 மே வரையில் மத்திய அரசில் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கருணாநிதி குடும்பத்தில் ஹிந்தி மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்த அவர்தான் கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் இடையில் கண்களாகவும் காதுகளாகவும் - தொடர்பாளராக - செயல்பட்டார். இளமையும் துடிப்பும் மிக்க தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தார். அந்தக் கூட்டணியில் திமுகவின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்பட்டது.
அப்போது மாறன் எவ்வளவு செல்வாக்குடன் திகழ்ந்தார் என்பதற்கு சான்று வேண்டுமா? டி.டி.எச். நிறுவனத்தில் ரத்தன் டாடாவுக்கு இருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பங்கைத் தங்களுடைய குடும்ப நிறுவனத்துக்குத் தர வேண்டும், இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரத்தன் டாடாவையே மிரட்டினார் என்று பேசப்பட்டது. அத்தோடு மட்டும் அல்ல, நான் மிரட்டினேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது என்று கூடுதலாக வேறு மிரட்டியிருக்கிறார்.
அப்படி இருந்த மாறன் திடீரென கோபுரத்திலிருந்து குப்பைமேட்டுக்கு வந்துவிட்டார். எல்லாம் குடும்ப ஊடகங்கள் மிதமிஞ்சிய கர்வத்தில் செய்த கோளாறுதான். தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யார் என்று வாசகர்களிடையே கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி, அதில் கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க. அழகிரிக்கு மு.க. ஸ்டாலினைவிட செல்வாக்கு மிகவும் குறைவு என்று முடிவை வெளியிட்டது.
இந்த முடிவு வெளியான 9.5.2007-ல் மதுரையில் மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகை அலுவலகத்துக்குள் அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி, பொருள்களைச் சேதப்படுத்தி வன்முறையில் இறங்கியது. அதில் அப்பாவிகளான 3 பேர் உயிரிழந்தனர்.

கருணாநிதி உடனே அழகிரிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தயாநிதி மாறனை மத்திய அரசிலிருந்து விலக்கினார். அந்த நேரத்தில்தான் மத்தியப் புலனாய்வுக் கழகம்(சி.பி.ஐ.) தயாநிதி மாறன் தன்னுடைய குடும்ப வியாபார நோக்கத்துக்குப் பயன்படுத்திய இந்த தனி இணைப்பகம் குறித்த தகவல்களைச் சேகரித்தது.
மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2007 செப்டம்பர் மாதமே சி.பி.ஐ. பரிந்துரைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்த 44 மாதங்களாக சி.பி.ஐ. இந்த விஷயத்தில் கும்பகர்ண தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.
தயாநிதி மாறன் துறைக்கு ஆ. ராசா அமைச்சரானார். ஆ. ராசாவிடம் ஒப்புதல் பெற்று மேல் நடவடிக்கைக்கு வழி செய்யுமாறு தொலைத் தொடர்புத் துறை செயலருக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது.

இதற்கிடையே 2009-ல் மக்களவை பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்ததால் கருணாநிதியின் குடும்பத்தில் சமாதானக் கொடி ஏற்றப்பட்டது. மகன்களுக்கும் அக்கா பேரன்களுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தி மீண்டும் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டினார் கருணாநிதி. அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் இக்காட்சியைக் காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது, கண்கள் பனிக்கின்றன என்று உருகினார் கருணாநிதி. ஒரு வேளை சி.பி.ஐ.யின் அந்த கடிதத்தைக் காட்டித்தான் அக்கா பேரன்களை வழிக்குக் கொண்டு வந்தாரோ என்னவோ?
2009 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொலைத் தகவல் தொடர்புத் துறையைப் பெற தயாநிதி மாறன் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார், இன்றுவரை அந்தப் பதவியில் நீடிக்கிறார்.
குடும்பத்துக்குள் பூசல் தணிந்துவிட்டபடியால் சி.பி.ஐ. கடிதமும் கவனிக்கப்படாமல் தொலைத் தகவல் தொடர்புத் துறையில் எங்கோ தூங்குகிறது. 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் காரணமாக 2010 நவம்பரில் ஆ.ராசா பதவியை ராஜிநாமா செய்தார். கபில்சிபல் அத்துறை அமைச்சரானார். அன்றிலிருந்து கபில் சிபலும் சி.பி.ஐ.யின் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சும்மாவே இருக்கிறார்.
ஜவுளித்துறை அமைச்சர் என்ற வகையில் தயாநிதி மாறனும் கபில் சிபலோடு சேர்ந்து மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். சி.பி.ஐ. கடிதம் எழுதி 44 மாதங்களாகியும் ஒரு நடவடிக்கையும் இல்லை.
எங்காவது ஊழல் நடந்தால் கணமும் தாமதிக்காமல் மிகத் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்று ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டும் யோகாசன குரு பாபா ராம்தேவுக்குக் கடிதம் எழுதுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
தயாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் சோனியா காந்தியோ இன்னமும் ஒருபடி மேலேபோய், ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது - அதாவது மற்றவர்களின் ஊழலை - சகித்துக் கொள்ளவே முடியாது என்பதை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.
ஊழலுக்கு எதிராக சோனியா விடுத்துள்ள போர்ப் பரணியும், காலதாமதம் செய்யாமல் ஊழலை ஒழித்தே தீருவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் செய்துள்ள கர்ஜனையும் நம்மை விலா நோகச் சிரிக்க வைக்கின்றன.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியவரை எதிரில் வைத்துக் கொண்டே இவர்கள் செய்யும் அட்டகாச அறிவிப்புகளைக் கண்டு வேறு என்னதான் செய்வது?
பின்குறிப்பு: தயாநிதி மாறன் கடந்த சில நாள்களில் சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தனித்தனியே சந்தித்து நீண்டநேரம் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. ஊழல் செய்தவரைப் போலவே இவர்களுக்கும் வெட்கம் இல்லை என்று தெரிகிறது.
இனி நான்..!
தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கிறது தினமணி.
ஒரு மத்திய அமைச்சருக்காக இத்தனை டெலிபோன் கனெக்ஷன்களை கொடுத்துவிட்டு இத்தனை கோடி ரூபாயை ஏப்பம் விடும் அளவுக்கு தரம் தாழ்ந்த நிலையில் ஆட்சி நடத்தியிருக்கும் இவர்கள்தான் இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியாளர்களாம். தாத்தா எதற்காக ஆட்சிப் பொறுப்பில் இருந்தாரென்றால், தனது குடும்பத்திற்காக மட்டுமே என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம்..!
உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்த நிலையில், ஆசியாவின் மிகப் பெரும் 4-வது பணக்காரர்களாக உருவெடுத்த நிலையிலும் அவருடைய தந்தை முரசொலி மாறனின் சிகிச்சைக்காக மத்திய அரசு செலவிட்ட சில கோடிகளைச் செலவிட்டது.
அந்தச் சில கோடிகளைக் கொடுப்பதினால் இவர்களொன்றும் தெருவுக்கு வந்துவிடப் போவதில்லை..! ஆனாலும் கொடுக்க மனமில்லாத புண்ணிய ஆத்மாக்கள்தான் இவர்கள்..! எப்பாடுபட்டாவது தங்களது தொழிலை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஒரேயொரு அம்சக் கோரிக்கையோடு அரசியல் களத்தில் குதித்த மாறன்கள் இன்றுவரையிலும் அதை நோக்கியே பயணித்தும் வருகின்றனர்.
ஏதோ சன் தொலைக்காட்சியின் நிர்வாகத் திறமையினால்தான் அந்தத் தொலைக்காட்சி முன்னுக்கு வந்தது என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள் சிலர்..! ஆனால் மற்ற சேனல்களைவிடவும் தரத்திலும், காட்சிப்படுத்ததிலும் சன் டிவி எப்படி முதலிடத்தில் இருந்தது என்பதைத்தான் இந்தக் கட்டுரையும் விளக்கியிருக்கிறது..!
இந்த அளவுக்கு முறைகேடுகளையெல்லாம் செய்துவிட்டு இவர்களால் மக்களுக்காக, நல்லதொரு மக்களாட்சியைத்தான் நாங்கள் நடத்தினோம் என்று எப்படி சொல்ல முடிகிறது..?
இந்த அளவுக்கு நடந்திருக்கும் முறைகேடுகளைக்கூட கண்டறியாமல், தெரிந்த பின்பும் கண்டு கொள்ளாமல் ஆட்சி செய்த கலைஞரின் நிர்வாகத் திறமை லட்சணத்தைக் கண்டு, இனியும் கழகத்தினர் நிச்சயம் பெருமைப்படலாம்..!
நன்றி : தினமணி - 02-06-2011

|
Tweet |
60 comments:
இந்த லட்சணத்துல தாத்தாவுக்கு
பொறந்த நாள் கொண்டாட்டம் வேறு
நன்றி
தயாநிதி மாறன இப்பொழுது ஜவுளித்துறை அமைச்சர்.... இப்ப என்ன கூத்து நடக்குதோ?
Today Dayanidhi Maran has sent legal notice to Gurumoorthy, Dinanamani and Express Group to Publish Excuse message for the subject; else he’ll file defamatory case against them.
Also Dayanithi has mentioned that defamatory case against Jaya is pending in court on the same allegation.
பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் பெயரில் வாங்கியிருக்கிறார் என்றால் அவரையும்தானே தூக்கி உள்ளே போடவேண்டும்? தயாநிதியை அலேக்காக தூக்கும்போது அந்த நபரையும் தூக்க வேண்டும். இது நிரூபணம் ஆகும்பட்சத்தில் சன் டிவியிடமிருந்து ஆயிரம் கோடிகளை தண்டத்தொகையாக வசூலிக்க வேண்டும்.
//Prakash said...
Today Dayanidhi Maran has sent legal notice to Gurumoorthy, Dinanamani and Express Group to Publish Excuse message for the subject; else he’ll file defamatory case against them.
Also Dayanithi has mentioned that defamatory case against Jaya is pending in court on the same allegation.//
சுப்பிரமணியசாமி மீது துரைமுருகன் மூலம் கருணாநிதி அவதூறு வழக்கு போட வைத்தாரே! அது என்னாச்சு?
சுப்பிரமணியசாமி ஜெயிச்சாரா? இல்ல கருணாநிதி ஜெயிச்சாரா? பதில் : ரெண்டு பேருமே ஜெயிக்கல சாமி.. நீதிதான் தோத்துப்போச்சு!!
//Also Dayanithi has mentioned that defamatory case against Jaya is pending in court on the same allegation.//
ஆ..ஊன்னா.. ஒரு கேஸை ஃபைல் பண்ணிடறானுங்கப்பா..!! பதில் கேட்டா சொல்றதில்ல.. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எதுவும் பேசக்கூடாதாம்!! அது "நிரந்தர நிலுவை"யில் இருக்குங்கிறது எங்களுக்கு மட்டும்தானே தெரியும்!
இந்த மன்மோகன் பேசாம சும்மா இருந்தாக்கூட பரவாயில்லை. நல்லா திட்டிட்டு விட்டிரலாம். ஊழலைப் பொறுத்துக்க முடியாதுன்னு ஃபீஸு போன பல்பு மாதிரி மினுக்குறதுதான் எரிச்ச்ச்சலா வருது!
in one hour trading today morning, Kalanidhi maran's assets came down 3000 crore. Image how much money they swindled in the names of SUn+ extra businesses using political influence.
As far as documented in the history in the world there is only one family which looted illegally using political power is Karuna's family. It is sad still some people support them
டன் டனா டன் இதுக்கு என்னா அர்த்தம்ண்ணே?
படம் ஆரம்பிச்சு இரண்டு நாளாச்சு.எங்கே பதிவுலக கதாநாயகனை இன்னும் சீன்ல காணோமேன்னு நினைச்சேன்:)
//சுப்பிரமணியசாமி மீது துரைமுருகன் மூலம் கருணாநிதி அவதூறு வழக்கு போட வைத்தாரே! அது என்னாச்சு?//
ரிஷி!சும்மா பாவ்லா காட்டினது அது.கேஸ் போட்டா அது குப்பைத் தொட்டிக்குத்தான் போகும் என்று சுப்ரமணி சாமி சொல்ல அதற்கு பிறகு அடங்கிப் போச்சுன்னு நினைக்கிறேன்.
ஆறுன வடையை விட்டுட்டு அண்ணன் கடைல போட்ட சூடா வடை சாப்பிடுங்க.
தயாநிதி மாறன் வக்கீலோட வர்றதுக்குள்ள நான் எஸ்கேப்....
எத்தனை ஆயிரம் கோடிகளை [குறுக்கு வழியில்] சேர்த்தாலும், இன்னமும் எங்கேயாவது அரசுப் பணத்தை ஆட்டையை போடலாமா என்ற பிச்சைக் கார புத்தி இவனுங்களை விட மாட்டேன்கிறது. இவர்கள் மற்ற சேனல்களில் இருந்து நிகழ்சிகளைத் திருடுதல், இவர்கள் நிகழ்சிகளே அதிகம் பார்க்கப் படுவதாக போலியான புள்ளி விவரம் வருமாறு மின்னணு கருவிகளிலேயே குளறுபடி செய்தல், கடவுள் இல்லை என்ற கோட்பாடு கொண்ட கட்சியில் இருந்து கொண்டே ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய செய்திகளை இவர்களது பத்திரிகைகளிலும் தொலைக் காட்சியிலும் காட்டுதல், பெங்களூரில் உள்ள இவர்களது சேனலில், "காவிரி பிரச்சினையில் தமிழர்கள் செய்வது அட்டூழியம்" என்று ஒளிபரப்புதல், ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஹிந்தியில் சரளமாக பேசக் கற்று வைத்திருத்தல் இவையெல்லாம் பணம் சம்பாதிக்க எந்த மாதிரியான கீழ்த்தரமான வேலைக்கும் தயாராய் இருக்கும் விபச்சாரி புத்தி இவர்களிடம் இருப்பதற்கான சில உதாரணங்கள். இவனுங்களுக்கு சரியா ஆப்பு யார் அடிப்பார்களோ தெரியவில்லை.
SPLIT HIS NAME AND READ LIKE THIS:
DAY ANITHI MARAN(டேய் அநீதி மாரன்)
தயாநிதிமாறனின் நடத்தை மூன்றாம் தரமான நடத்தை:(
உண்மையான பிச்சைக்காரர்கள் இவர்கள்தான்.
இந்த மாதிரி எக்ஸ்க்ளூசிவ் கட்டுரையை பிரபல டாட் காம்களில் கூட பார்த்ததில்லை. தூள் பண்ணியிருக்கிங்க.
கீப் இட் அப்!
[[[udhavi iyakkam said...
இந்த லட்சணத்துல தாத்தாவுக்கு
பொறந்த நாள் கொண்டாட்டம் வேறு
நன்றி]]]
வருஷக் கணக்கா கொண்டாடுறவர்.. நிறுத்த முடியுமா..?
[[[creasen said...
தயாநிதி மாறன இப்பொழுது ஜவுளித் துறை அமைச்சர். இப்ப என்ன கூத்து நடக்குதோ?]]]
இப்ப நடக்குற கூத்து அடுத்த ஆட்சி அமையும்போது தெரிய வரும். அப்பவும் இதே மாதிரி போஸ்ட்டும் வரும்..!
[[[Prakash said...
Today Dayanidhi Maran has sent legal notice to Gurumoorthy, Dinanamani and Express Group to Publish Excuse message for the subject; else he’ll file defamatory case against them.
Also Dayanithi has mentioned that defamatory case against Jaya is pending in court on the same allegation.]]]
வழக்குதானே.. தாராளமா போடலாம்.. எந்தக் கேஸ்ல எந்த அரசியல்வியாதிகள் கோர்ட்ல வந்து ஆஜராயிருக்காங்க.. இதெல்லாம் ச்சும்மா ஷோ காட்டுற வேலை ஸார்..!
[[[ரிஷி said...
பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் பெயரில் வாங்கியிருக்கிறார் என்றால் அவரையும்தானே தூக்கி உள்ளே போடவேண்டும்? தயாநிதியை அலேக்காக தூக்கும்போது அந்த நபரையும் தூக்க வேண்டும்.]]]
சி.பி.ஐ.க்கு வழக்கை விசாரிக்கும்படி உத்தரவு வந்தால் மட்டும்தான் இது நடக்கும்..!
[[[இது நிரூபணம் ஆகும்பட்சத்தில் சன் டிவியிடமிருந்து ஆயிரம் கோடிகளை தண்டத் தொகையாக வசூலிக்க வேண்டும்.]]]
எனக்கும் ஆசைதான் ரிஷி. ஆனால் நடக்கணுமே..?
ரிஷி said...
சுப்பிரமணியசாமி மீது துரைமுருகன் மூலம் கருணாநிதி அவதூறு வழக்கு போட வைத்தாரே! அது என்னாச்சு?
சுப்பிரமணியசாமி ஜெயிச்சாரா? இல்ல கருணாநிதி ஜெயிச்சாரா? பதில் : ரெண்டு பேருமே ஜெயிக்கல சாமி.. நீதிதான் தோத்துப் போச்சு!!]]]
அதுனாலதான் இப்போ சு.சாமி வெளுத்துக் கட்டுறாரு..! துரைமுருகனுக்கு இது தேவையா..?
[[[ரிஷி said...
ஆ.. ஊன்னா.. ஒரு கேஸை ஃபைல் பண்ணிடறானுங்கப்பா..!! பதில் கேட்டா சொல்றதில்ல.. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எதுவும் பேசக் கூடாதாம்!! அது "நிரந்தர நிலுவை"யில் இருக்குங்கிறது எங்களுக்கு மட்டும்தானே தெரியும்!]]]
தப்பிக்க வேண்டாமா? அதுக்காகத்தான்..!
[[[ரிஷி said...
இந்த மன்மோகன் பேசாம சும்மா இருந்தாக்கூட பரவாயில்லை. நல்லா திட்டிட்டு விட்டிரலாம். ஊழலைப் பொறுத்துக்க முடியாதுன்னு ஃபீஸு போன பல்பு மாதிரி மினுக்குறதுதான் எரிச்ச்ச்சலா வருது!]]]
அடுத்தத் தேர்தல்ல பார்த்துக்குவோம் ரிஷி.. நிச்சயமா இந்தாளே தோக்கணும்..!
[[[Unmai said...
in one hour trading today morning, Kalanidhi maran's assets came down 3000 crore. Image how much money they swindled in the names of SUn+ extra businesses using political influence.]]]
பழி ஓரிடம்.. பாவம் வேறிடம் என்பார்களே. அது போலத்தான்.. பங்குகளை வாங்கியவர்கள் நிலை பரிதாபம்தான்..!
[[[Unmai said...
As far as documented in the history in the world there is only one family which looted illegally using political power is Karuna's family. It is sad still some people support them.]]]
அது இருக்கத்தானே செய்வார்கள்.. நம்ம மக்கள் ஊழலை சகித்துக் கொண்டு போக பழகிவிட்டார்கள்..!
[[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
டன் டனா டன் இதுக்கு என்னா அர்த்தம்ண்ணே?]]]
நீங்கதான் தமிழ்ப் புலவர்.. நீங்கதான் விளக்கம் சொல்லணும்..!
[[[ராஜ நடராஜன் said...
படம் ஆரம்பிச்சு இரண்டு நாளாச்சு. எங்கே பதிவுலக கதாநாயகனை இன்னும் சீன்ல காணோமேன்னு நினைச்சேன்:)]]]
ஹி.. ஹி.. பக்கத்துலதான இருக்கோம்..! எல்லாத்தையும் படிக்க வேணாமா? அதாண்ணே கொஞ்சம் லேட்டு.. ஆனாலும் தொடர்ச்சியான உங்களது பேராதரவுக்கு எனது நன்றிகள்ண்ணா.. நிச்சயம் மறக்கவே மாட்டேன்..!
[[[ராஜ நடராஜன் said...
//சுப்பிரமணியசாமி மீது துரைமுருகன் மூலம் கருணாநிதி அவதூறு வழக்கு போட வைத்தாரே! அது என்னாச்சு?//
ரிஷி! சும்மா பாவ்லா காட்டினது அது. கேஸ் போட்டா அது குப்பைத் தொட்டிக்குத்தான் போகும் என்று சுப்ரமணி சாமி சொல்ல அதற்கு பிறகு அடங்கிப் போச்சுன்னு நினைக்கிறேன். ஆறுன வடையை விட்டுட்டு அண்ணன் கடைல போட்ட சூடா வடை சாப்பிடுங்க. தயாநிதி மாறன் வக்கீலோட வர்றதுக்குள்ள நான் எஸ்கேப்.]]]
கேஸ்ன்னா வக்கீல் நோட்டீஸ் மட்டும்தான்.. கோர்ட்ல பைல் செய்யலை..! வழக்கு கோர்ட்டுக்கு போனால் அங்கே கேட்கும் பல கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது.. அதனால் ச்சும்மா பாவ்லா காட்டுவார்கள்..!
[[[Jayadev Das said...
எத்தனை ஆயிரம் கோடிகளை [குறுக்கு வழியில்] சேர்த்தாலும், இன்னமும் எங்கேயாவது அரசுப் பணத்தை ஆட்டையை போடலாமா என்ற பிச்சைக்கார புத்தி இவனுங்களை விட மாட்டேன்கிறது. இவர்கள் மற்ற சேனல்களில் இருந்து நிகழ்சிகளைத் திருடுதல், இவர்கள் நிகழ்சிகளே அதிகம் பார்க்கப்படுவதாக போலியான புள்ளி விவரம் வருமாறு மின்னணு கருவிகளிலேயே குளறுபடி செய்தல், கடவுள் இல்லை என்ற கோட்பாடு கொண்ட கட்சியில் இருந்து கொண்டே ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய செய்திகளை இவர்களது பத்திரிகைகளிலும் தொலைக் காட்சியிலும் காட்டுதல், பெங்களூரில் உள்ள இவர்களது சேனலில், "காவிரி பிரச்சினையில் தமிழர்கள் செய்வது அட்டூழியம்" என்று ஒளிபரப்புதல், ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஹிந்தியில் சரளமாக பேசக் கற்று வைத்திருத்தல் இவையெல்லாம் பணம் சம்பாதிக்க எந்த மாதிரியான கீழ்த்தரமான வேலைக்கும் தயாராய் இருக்கும் விபச்சாரி புத்தி இவர்களிடம் இருப்பதற்கான சில உதாரணங்கள். இவனுங்களுக்கு சரியா ஆப்பு யார் அடிப்பார்களோ தெரியவில்லை.]]]
முருகன் நிச்சயம் தண்டிப்பான்.. எனக்கு நம்பிக்கை இருக்கிறது..!
[[[SANKAR said...
SPLIT HIS NAME AND READ LIKE THIS:
DAY ANITHI MARAN(டேய் அநீதி மாரன்)]]]
ஹா.. ஹா.. இது நல்லாயிருக்கே..!
[[[நிகழ்காலத்தில்... said...
தயாநிதி மாறனின் நடத்தை மூன்றாம் தரமான நடத்தை:(]]]
கீழ்த்தரமானது. பிச்சைக்காரத்தனம்..! படித்தவர்கள் பாழும் செய்தால் பாழாய்ப் போவார்கள்..!
[[[ramalingam said...
உண்மையான பிச்சைக்காரர்கள் இவர்கள்தான்.]]]
உண்மையான வார்த்தைகள் ராமலிங்கம்..!
[[[சித்தூர்.எஸ்.முருகேசன் said...
இந்த மாதிரி எக்ஸ்க்ளூசிவ் கட்டுரையை பிரபல டாட் காம்களில் கூட பார்த்ததில்லை. தூள் பண்ணியிருக்கிங்க.
கீப் இட் அப்!]]]
எதுக்கு எனக்கு பாராட்டு.. இந்தக் கட்டுரையை நான் தினமணி பத்திரிகையில் இருந்துதான் எடுத்துக் கையாண்டுள்ளேன் ஸார்.. உண்மையான பாராட்டு அவர்களைத்தான் சேரும்..!
ஜெனரல் மானேஜர் பெயரில் இருந்தால் தவறில்லை.அது அலுவலக பணிக்காக என்று சொல்லிவிடுவார்கள்.அதற்காகத்தான் அப்படி.மாறனா!கொக்கா!
////////
[[[ரிஷி said...
இந்த மன்மோகன் பேசாம சும்மா இருந்தாக்கூட பரவாயில்லை. நல்லா திட்டிட்டு விட்டிரலாம். ஊழலைப் பொறுத்துக்க முடியாதுன்னு ஃபீஸு போன பல்பு மாதிரி மினுக்குறதுதான் எரிச்ச்ச்சலா வருது!]]]
அடுத்தத் தேர்தல்ல பார்த்துக்குவோம் ரிஷி.. நிச்சயமா இந்தாளே தோக்கணும்..!
///////
டெல்லியில் ஒரு முறை நின்று தோத்துபோயிட்டேன். இனி மக்களவை தேர்தலில் போட்டி போடுவனா? போட்டாதானே தோற்கடிப்பிங்க. இப்ப என்னா செய்விங்க? இப்ப என்னா செய்விங்க? ...
//சித்தூர்.எஸ்.முருகேசன் said...
இந்த மாதிரி எக்ஸ்க்ளூசிவ் கட்டுரையை பிரபல டாட் காம்களில் கூட பார்த்ததில்லை. தூள் பண்ணியிருக்கிங்க.
கீப் இட் அப்
//
www.tamilleader.in
www.viruvirupu.com
of course
www.savukku.net
பூலான் தேவிக்கும் கேடி ப்ரதர்ஸ்க்கும் உள்ள வேறு பாடு என்ன?
பூலான் தேவி----- கொள்ளைக்காரியாக இருந்து அரசியலுக்கு வந்தார்
கேடி ப்ரதர்ஸ் -------அரசியலுக்கு வந்து கொள்ளைகாரர்கள் ஆகிட்டாங்க
sir how r u
எனக்கு இங்க ஒரு மாசத்துக்கு 30 euros ( land line ) பணம் கட்டுறத்துக்கே கண்ண கட்டுது
[[[thamizhan said...
ஜெனரல் மானேஜர் பெயரில் இருந்தால் தவறில்லை. அது அலுவலக பணிக்காக என்று சொல்லிவிடுவார்கள். அதற்காகத்தான் அப்படி. மாறனா! கொக்கா!]]]
திட்டம் போட்டு திருடியிருக்கானுக திருடனுங்க..!
[[[குறும்பன் said...
அடுத்தத் தேர்தல்ல பார்த்துக்குவோம் ரிஷி.. நிச்சயமா இந்தாளே தோக்கணும்..!//
டெல்லியில் ஒரு முறை நின்று தோத்து போயிட்டேன். இனி மக்களவை தேர்தலில் போட்டி போடுவனா? போட்டாதானே தோற்கடிப்பிங்க. இப்ப என்னா செய்விங்க? இப்ப என்னா செய்விங்க?]]]
வரலாற்றில் உனது பெயர் மகா திருடன் என்றும், திருட்டுக்குத் துணை போனவன் என்றும் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்..! இது போதுமா..?
[[[Gujaal said...
//சித்தூர்.எஸ்.முருகேசன் said...
இந்த மாதிரி எக்ஸ்க்ளூசிவ் கட்டுரையை பிரபல டாட் காம்களில் கூட பார்த்ததில்லை. தூள் பண்ணியிருக்கிங்க. கீப் இட் அப்//
www.tamilleader.in
www.viruvirupu.com
of course
www.savukku.net]]]
தலை வணங்குகிறேன்..!
[[[smiley said...
பூலான் தேவிக்கும் கேடி ப்ரதர்ஸ்க்கும் உள்ள வேறு பாடு என்ன?
பூலான் தேவி----- கொள்ளைக்காரியாக இருந்து அரசியலுக்கு வந்தார்
கேடி ப்ரதர்ஸ் -------அரசியலுக்கு வந்து கொள்ளைகாரர்கள் ஆகிட்டாங்க
sir how r u
எனக்கு இங்க ஒரு மாசத்துக்கு 30 euros ( land line ) பணம் கட்டுறத்துக்கே கண்ண கட்டுது]]]
நாமெல்லாம் கஷ்டப்படுறதுக்குன்னே பொறந்தவங்க.. அவங்க கொள்ளையடிக்கிறதுக்குன்னே பொறந்தவங்க.. அதனால இது மாதிரி நமது ஆற்றாமையை தெரிவிச்சுட்டு தலைல தண்ணி தெளிச்சுட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..!
உண்மைத்தமிழன் said...
[[[குறும்பன் said...
அடுத்தத் தேர்தல்ல பார்த்துக்குவோம் ரிஷி.. நிச்சயமா இந்தாளே தோக்கணும்..!//
டெல்லியில் ஒரு முறை நின்று தோத்து போயிட்டேன். இனி மக்களவை தேர்தலில் போட்டி போடுவனா? போட்டாதானே தோற்கடிப்பிங்க. இப்ப என்னா செய்விங்க? இப்ப என்னா செய்விங்க?]]]
இப்போது அவர் ராஜ்யசபா எம்.பி.தானே? தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நபர் பிரதமர் நாற்காலியை அலங்கரிப்பது வெட்கக்கேடு!
//உண்மைத்தமிழன் said...
[[[thamizhan said...
ஜெனரல் மானேஜர் பெயரில் இருந்தால் தவறில்லை. அது அலுவலக பணிக்காக என்று சொல்லிவிடுவார்கள். அதற்காகத்தான் அப்படி. மாறனா! கொக்கா!]]]
திட்டம் போட்டு திருடியிருக்கானுக திருடனுங்க..!//
அப்படியென்றால் தயாநிதி மீது போடப்படும் கேஸ் வலுவிழந்துவிடும்தானே?
//ஆறுன வடையை விட்டுட்டு அண்ணன் கடைல போட்ட சூடா வடை சாப்பிடுங்க//
அண்ணன் பதிவுகள்ல இப்போ யாரும் முத வடையே சாப்பிடுறதில்லையே!! :-)) சுடுசோறு சாப்பிடும் மதி.சுதாவையும் காணோம்! :-))
[[[ரிஷி said...
இப்போது அவர் ராஜ்யசபா எம்.பி.தானே? தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நபர் பிரதமர் நாற்காலியை அலங்கரிப்பது வெட்கக்கேடு!]]]
நமக்குத் தெரியுது. மன்மோகன்சிங்குக்கு இது தெரியணும்ல்ல. அவர் எதுக்கு வெட்கத்தைப் பத்திக் கவலைப்படறாரு..?
[[[ரிஷி said...
//உண்மைத்தமிழன் said...
[[[thamizhan said...
ஜெனரல் மானேஜர் பெயரில் இருந்தால் தவறில்லை. அது அலுவலக பணிக்காக என்று சொல்லிவிடுவார்கள். அதற்காகத்தான் அப்படி. மாறனா! கொக்கா!]]]
திட்டம் போட்டு திருடியிருக்கானுக திருடனுங்க..!//
அப்படியென்றால் தயாநிதி மீது போடப்படும் கேஸ் வலுவிழந்து விடும்தானே?]]]
ஆமாம்.. எல்லாத்தையும் ஜெனரல் மேனேஜர்தான் செஞ்சாருன்னு சொல்லிட்டு எஸ்கேப்பாகப் போறாரு..!
[[[ரிஷி said...
//ஆறுன வடையை விட்டுட்டு அண்ணன் கடைல போட்ட சூடா வடை சாப்பிடுங்க//
அண்ணன் பதிவுகள்ல இப்போ யாரும் முத வடையே சாப்பிடுறதில்லையே!! :-)) சுடுசோறு சாப்பிடும் மதி.சுதாவையும் காணோம்! :-))]]]
ஆமாம்.. அந்த நண்பர் இப்போ ஏன் வர்றதில்லை.. ஏதும் கோபமா..?
இதன் ஆங்கில விபரம் அடங்கிய இணைப்பு சாருவின் பதிவிலும் உள்ளது.
தயாநிதி மாறனுக்கு களி எப்போது?
இது விசயமாக தாயநிதி தினமணிக்கு மறுப்பு தெருவிச்சிருகிறார்..தினமணி மீது கேஸ்சும் போட்டு இருகிறார்.இன்று தினமணீயில் இதற்க்கு எந்த் பதிலும் தெரிவிக்கவில்லையே....
[[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இதன் ஆங்கில விபரம் அடங்கிய இணைப்பு சாருவின் பதிவிலும் உள்ளது.
தயாநிதி மாறனுக்கு களி எப்போது?]]]
கூடிய விரைவில் நிச்சயம் நடக்கும்..!
[[[malar said...
இது விசயமாக தாயநிதி தினமணிக்கு மறுப்பு தெருவிச்சிருகிறார். தினமணி மீது கேஸ்சும் போட்டு இருகிறார். இன்று தினமணீயில் இதற்க்கு எந்த் பதிலும் தெரிவிக்கவில்லையே....?]]]
மலர்.. இதெல்லாம் ச்சும்மா சீன் காட்டுற வேலை. இது கோர்ட்டுக்கு வரும்ன்றீங்க.. அப்படியே அமைதியாயிருவாங்க..!
tan tana tan!!!
[[[vINoDIAN said...
tan tana tan!!!]]]
கவுண்ட் டவுன் ஆரம்பிச்சாச்சு..!
//2009 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொலைத் தகவல் தொடர்புத் துறையைப் பெற தயாநிதி மாறன் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார், இன்றுவரை அந்தப் பதவியில் நீடிக்கிறார்.//
தயாநிதி மாறன் இரண்டாவது முறைக்கு முயற்சி செய்தது நிலக்கரித் துறை அமைச்சராகத் தான். தகவல் தொழில்நுட்பத்தை அவரே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். நிரா ராடியா வும் பர்கா தத் உம் இவர்களுக்கு புரோக்கர் வேலை பார்த்த பொழுது பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடல்களில் இது தெளிவாகப் புரியும்.
வழிமொழிகிறேன்...
/*
Jayadev Das said...
எத்தனை ஆயிரம் கோடிகளை [குறுக்கு வழியில்] சேர்த்தாலும், இன்னமும் எங்கேயாவது அரசுப் பணத்தை ஆட்டையை போடலாமா என்ற பிச்சைக் கார புத்தி இவனுங்களை விட மாட்டேன்கிறது. இவர்கள் மற்ற சேனல்களில் இருந்து நிகழ்சிகளைத் திருடுதல், இவர்கள் நிகழ்சிகளே அதிகம் பார்க்கப் படுவதாக போலியான புள்ளி விவரம் வருமாறு மின்னணு கருவிகளிலேயே குளறுபடி செய்தல், கடவுள் இல்லை என்ற கோட்பாடு கொண்ட கட்சியில் இருந்து கொண்டே ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய செய்திகளை இவர்களது பத்திரிகைகளிலும் தொலைக் காட்சியிலும் காட்டுதல், பெங்களூரில் உள்ள இவர்களது சேனலில், "காவிரி பிரச்சினையில் தமிழர்கள் செய்வது அட்டூழியம்" என்று ஒளிபரப்புதல், ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஹிந்தியில் சரளமாக பேசக் கற்று வைத்திருத்தல் இவையெல்லாம் பணம் சம்பாதிக்க எந்த மாதிரியான கீழ்த்தரமான வேலைக்கும் தயாராய் இருக்கும் விபச்சாரி புத்தி இவர்களிடம் இருப்பதற்கான சில உதாரணங்கள். இவனுங்களுக்கு சரியா ஆப்பு யார் அடிப்பார்களோ தெரியவில்லை.
*/
[[[Sakthi Prakash N said...
//2009 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொலைத் தகவல் தொடர்புத் துறையைப் பெற தயாநிதி மாறன் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார், இன்றுவரை அந்தப் பதவியில் நீடிக்கிறார்.//
தயாநிதி மாறன் இரண்டாவது முறைக்கு முயற்சி செய்தது நிலக்கரித் துறை அமைச்சராகத்தான். தகவல் தொழில் நுட்பத்தை அவரே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். நிரா ராடியாவும் பர்கா தத்தும் இவர்களுக்கு புரோக்கர் வேலை பார்த்தபொழுது பேசிக்கொண்ட தொலைபேசி உரையாடல்களில் இது தெளிவாகப் புரியும்.]]]
ம்.. இந்த அளவுக்கு உன்னிப்பா கவனிச்சிருக்கீங்களே.. வாழ்க நீர்..!
[[[சாணக்கியன் said...
வழிமொழிகிறேன்...
/*Jayadev Das said...
எத்தனை ஆயிரம் கோடிகளை [குறுக்கு வழியில்] சேர்த்தாலும், இன்னமும் எங்கேயாவது அரசுப் பணத்தை ஆட்டையை போடலாமா என்ற பிச்சைக்கார புத்தி இவனுங்களைவிட மாட்டேன்கிறது. இவர்கள் மற்ற சேனல்களில் இருந்து நிகழ்சிகளைத் திருடுதல், இவர்கள் நிகழ்சிகளே அதிகம் பார்க்கப் படுவதாக போலியான புள்ளி விவரம் வருமாறு மின்னணு கருவிகளிலேயே குளறுபடி செய்தல், கடவுள் இல்லை என்ற கோட்பாடு கொண்ட கட்சியில் இருந்து கொண்டே ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய செய்திகளை இவர்களது பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் காட்டுதல், பெங்களூரில் உள்ள இவர்களது சேனலில், "காவிரி பிரச்சினையில் தமிழர்கள் செய்வது அட்டூழியம்" என்று ஒளிபரப்புதல், ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஹிந்தியில் சரளமாக பேசக் கற்று வைத்திருத்தல் இவையெல்லாம் பணம் சம்பாதிக்க எந்த மாதிரியான கீழ்த்தரமான வேலைக்கும் தயாராய் இருக்கும் விபச்சாரி புத்தி இவர்களிடம் இருப்பதற்கான சில உதாரணங்கள். இவனுங்களுக்கு சரியா ஆப்பு யார் அடிப்பார்களோ தெரியவில்லை.*/]]]
வருகைக்கு நன்றி சாணக்கியன்..!
Post a Comment