தயாநிதி மாறன் இப்போது செய்ய வேண்டியவைகள்..!

04-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 2-ம் தேதியன்று 'தினமணி' மற்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகள் வெளியிட்ட தயாநிதியின் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஊழல் பற்றிய செய்திக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணி புரியும் மீனலோசனி என்ற உயரதிகாரி ஒருவர் மறுப்பு அறிக்கை வெளியிட்டார்..!

தயாநிதி மாறனின் வீட்டில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு இருந்தது என்றும், அந்த இணைப்பின் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உச்சக்கட்ட அளவை விடவும் குறைவாகத்தான் தயாநிதி மாறன் பேசியிருப்பதாகச் சான்றிதழ் வழங்கியிருந்தார்.

இச்செய்தி வெளியான பின்பு 2-ம் தேதி காலையில் இருந்தே தயாநிதியை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்த டெல்லிவாலா டிவிக்கள் அவர் கையில் சிக்காததால் "தயாநிதி தலைமறைவு" என்றெல்லாம் நியூஸ் போட ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் அன்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது 'தினமணி'யில் வந்த செய்தி முற்றிலும் தவறு என்று மறுத்தார் தயாநிதி.

“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வீண் பழி சுமத்துவதற்காக பொய்யான குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி இருக்கிறார்கள். 2008-ம் ஆண்டு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி பதவியை நான் ராஜினாமா செய்த பிறகு, அப்போது விசாரணை நடத்தி இருக்க முடியும். அந்த சமயத்தில் நான் அரசியலில் தீண்டத்தகாதவனாக இருந்தேன். நான் மந்திரி பதவியில் இல்லாத அந்த சமயத்தில், யாரும் என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.

யாருக்கும் நான் ஒரு போதும் எந்த உதவியும் செய்தது கிடையாது, எந்த சலுகையும் பெற்றது கிடையாது. அரசியல் வட்டாரத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டு இருந்தேன். நான் ஏதாவது தவறு செய்து இருப்பதாக கருதினால் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்.

எனது குடும்ப தொழில் சம்பந்தமாக எனது சென்னை இல்லத்துக்கு 300-க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது ஆகும். இது தொடர்பாக எழுப்பும் கேள்விகள் மூலம் எனது நேர்மையை மட்டு-ன்றி எனது குடும்பம் மற்றும் எனது கட்சியின் நேர்மையையும் பற்றி சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் இருந்தது. எனக்குள்ள குறிப்பிட்ட தொகையை காட்டிலும் குறைவான தொகைக்குத்தான் நான் பேசினேன். இதை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து எனக்கு வந்துள்ள கடிதம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எனது போட் கிளப் இல்லத்தில் எத்தனை தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளருக்கு நான் கடிதம் எழுதினேன். மந்திரி என்ற முறையில் எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் (எண் 24375100) வழங்கப்பட்டு இருந்தது.

நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன். யாருடைய தயவையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். நான் ஒரு அப்பாவி. என்னையும் எனது நேர்மையையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும் எனக்கு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.

இந்த விளக்கத்தை அளித்துவிட்டு கூடவே 'தினமணி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார் தயாநிதி மாறன்..!

ஏற்கெனவே 'ஏர்செல்' கம்பெனி சன் டி.டி.ஹெ.ச்சில் முதலீடு செய்தது சம்பந்தமாக செய்தியை வெளியிட்ட தெஹல்கா மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். (கவனிக்க : வெறும் நோட்டீஸ்தான். கோர்ட்டில் வழக்குத் தொடரவில்லை)

தயாநிதி அளித்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கும்விதமாக இன்றைய 'தினமணி' மற்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அது இங்கே பாலோ அப்புக்காக..!

"தூங்குகிறது சிபிஐ அறிக்கை'  (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐ.எஸ்.டி.என். இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.

தயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சி.பி.ஐ. அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சி.பி.ஐ.-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சி.பி.ஐ. தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.

மூன்றாவதாக, மத்திய அரசின் சி.பி.ஐ. அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட 'தினமணி' மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.

தான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன்.

இந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பி.எஸ்.என்.எல். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐ.எஸ்.டி.என்.-பி.ஆர்.ஏ. என்றும், வேறு எந்த பி.எஸ்.என்.எல். இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள்வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் 'தினமணி'யில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்.

சி.பி.ஐ. அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பி.எஸ்.என்.எல்., ஐ.எஸ்.டி.என். இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.

சென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய அதன் இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம்.

ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை.

இதே இணைய பக்கத்தில் சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை - 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று தெரிய வருகிறது.

24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடிதத் தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.

24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சி.பி.ஐ. பட்டியலிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் சி.பி.ஐ. மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் கொண்ட தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்பதை உணரலாம்.

48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சி.பி.ஐ. ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம்.

மேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையத்தளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி..? ஏனெனில் இந்த எண் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா..? மேலும் பார்க்கலாம்.

"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சி.பி.ஐ. முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.

சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது…? அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.

அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.

மேலும் சி.பி.ஐ. அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.

ஆனால் அவை எங்கே இருக்கின்றன..? தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி..? அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது.

இந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.

இனி, தயாநிதி மாறன் தாராளமாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.

நன்றி:  எஸ். குருமூர்த்தி. , தினமணி-04-06-2011

இதற்கிடையில்  அன்றைய தினமே தி.மு.க. தலைமையில் இருந்து ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ளது.

அதில், “நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக, அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி, சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகாவிட்டால் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

ஜெயலலிதா இன்றும் அவர் மீது பெங்களூர் நீதிமன்றத்தில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு, ஊழல் வழக்குகளின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், இவர் தன்னுடைய முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டுத்தான் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்தாரா? என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக, அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க மாட்டார்.

ஆனால் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்திக்க வேண்டுமா? மக்கள் இந்த விதண்டாவாதத்தை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தில் ஒரு பழமையான முதுமொழி உண்டு. அதுதான் ‘தன்னைப் பார்த்து பின்னே பேசு...’ என்பதாகும். ஜெயலலிதா இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும் முன், தன்னை பற்றியும் தன் மீது உள்ள ஊழல் வழக்குகள் பற்றியும் சிந்திக்காமல் பேட்டியளிப்பது அறிவுடைமையாகாது..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக.. வழக்கம்போல இந்தப் பிரச்சினை தீர்வு வேண்டி கோர்ட்டுக்கு போவதற்கு முன்பாகவே அவதூறு வழக்குகளுக்காக கோர்ட் படியேறும்போல தோன்றுகிறது..!

மீனலோசனி என்ற அந்த ஜெனரல் மேனேஜர் வெளியிட்ட தகவலே பாதி பொய்யாக இருக்கிறதே..! டெலிபோன் டைரக்டரியிலும், இணையத்தளத்திலும் பொய்யான எண்களையா வைத்திருப்பார்கள்...? இப்போதும் பொதுமக்கள் அதைத்தானே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. பின்பு எப்படி இது பொய்யாகும்..?

இந்த ஒரேயொரு நம்பர்தான் தயாநிதி மாறனின் வீட்டில் உள்ளது திரும்பத் திரும்ப மீனலோசனி பொய்யை உரைத்திருக்கிறாரே..? அவரை இப்படி பொய் சொல்ல வைத்திருப்பது யார்? எது..? ஏன்..? எதனால்..?

ஒரே மாதத்தில் 48 லட்சம் யூனிட் பேசியிருக்கிறார்கள் என்றால் இதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது. அதுவும் வீட்டில்.. அந்த வீட்டில் இருப்பதே 4 பேர். ஒரு யூனிட் என்பது 3 நிமிடங்கள். 48 லட்சம் யூனிட்டுகள் என்றால் 1 கோடியே 44 லட்சம் நிமிடங்கள் வருகின்றன. இவைகளை நேரக் கணக்கில், நாள் கணக்கில் வகுத்தால்..?  ம்ஹும்.. தலை சுற்றுகிறது..!

இந்த ஒரு துப்பை வைத்துதான் சி.பி.ஐ., தோண்டித் துருவி சன் டிவி தனது ஒளிபரப்புகளுக்காக தயாநிதியின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த இந்த தனி டெலிபோன் எக்சேஞ்சின் உயர்தர கேபிள் கனெக்ஷனை பயன்படுத்தியிருக்கிறது என்று கண்டறிந்து அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறது..!

தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டுவிட்டார்கள் என்று இன்று கதறும் தயாநிதி மாறன் 'தினமணி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மீது கோபப்படும் முன் வேறு சில வேலைகளை அவர் செய்தாக வேண்டும்..!

1. தன் மீது இந்தப் புகாரை எழுப்பி சி.பி.ஐ. மூலமாக விசாரிக்கச் சொன்ன தனது சக அமைச்சர்களில் ஒருவராக இருந்த ஆ.ராசா மீதுதான் முதலில் வழக்குத் தொடர வேண்டும்..!

2. அடுத்து சி.பி.ஐ. தன்னைப் பற்றி அவதூறாக, தப்புத் தப்பாக அறிக்கையைத் தயார் செய்து கொடுத்திருக்கிறது என்று சி.பி.ஐ. மீதுதான் தயாநிதி மாறன் வழக்குத் தொடர வேண்டும்..! இந்த  அறிக்கையை மையமாக வைத்துதான் இப்போது  தினமணியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன..!

3. மூன்றாவது, 2009-ம் ஆண்டே இச்செய்தியை தனது கட்சிப் பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரிலும், ஜெயா டிவியிலும் ஒளிபரப்பி, வெளியாகச் செய்து பல கூட்டங்களில் இது பற்றிப் பேசிய ஜெயலலிதா மீதுதான் மான நஷ்ட வழக்கு போட வேண்டும்..!

4. சி.பி.ஐ. பதில் அளிக்கவில்லையெனில் அதற்குப் பொறுப்பான பிரதமர் மீதுதான் தயாநிதி மாறன் குற்றம் சுமத்த வேண்டும்..!

5. தனது ஆதரவை வைத்துக் கொண்டு ஆட்சியில் அமர்ந்திருந்தும் தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்திய சி.பி.ஐ.யை கண்டிக்கத் தவறிய பிரதமர் மன்னமோகனசிங்கை தயாநிதி மாறன் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்..!

6. தங்களது கட்சியின் ஆதரவினால் வாழ்ந்து கொண்டு லீகலாக நீங்களே கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எகத்தாளத்துடன் கூறியிருக்கும் பிரதமர், இந்தியாவின் அன்னை சோனியா ஆகிய இருவரையும் தனது கட்சி ஏன் கண்டிக்கவில்லை என்று தனது கட்சித் தலைவரான தாத்தாவின் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும்..!

7. தனது கூட்டணி கட்சியை இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் சர்வாதிகார காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து தி.மு.க. கழகம் விலக வேண்டும் என்று தயாநிதி மாறன் அக்கட்சித் தலைவர்களிடம் போராட வேண்டும்..!

8. தாத்தாவும் கண்டு கொள்ளவில்லையெனில் தன்னை தேர்ந்தெடுத்த கட்சியே தன்னை கைவிட்டுவிட்டது. தாத்தாவே புறந்தள்ளுகிறார். தனக்கு மரியாதை இல்லை. தான் திருடன் என்று தனது கட்சியை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறது என்று பத்திரிகைகளிடம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்..!

இவைகளைச் செய்து முடித்துவிட்டு பின்பு கடைசியாக 'தினமணி,' 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மீது பாய்வதுதான், தயாநிதி மாறனின் நேர்மையான செயலாக இருக்கும்..!

40 comments:

பெம்மு குட்டி said...

ஆனாலும் உங்களுக்கு பயங்கர பேராசைண்ணா !!!!!!!

என்னதோ அவங்க மான மரியாதை உள்ளவங்க மாதிரியும், நியாய அநியாயங்களுக்கு பயப்படுறவங்க மாதிரியும் நினைச்சிக்கிட்டு அவங்களுக்கு அட்வைஸ் வேற பண்ணுறிங்க நீங்க :-))))))))

Banureka said...

ada ponga boss, aduthatha "dayanidhi maran" thaan tihar jail ku "gate pass" vangi erukurar nu sona pothatha... Banu

NAGA INTHU said...

ஜெ.மீது வழக்கு போட்டது மு.க. அப்போது ஜெ.பதவியில் இல்லை.ஆனால் ஜெ.பதவிக்கு வந்ததது கேஸ் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்.இது புரியாமல் ஜெ.பதவி விலகினாரா என தி.மு.க.கேட்பது முட்டாள்தனமானது மட்டுமில்லை,மக்களை ஏமாற்றும் களவாணிதனமாகும்
அரவரசன்.

Samy said...

I get more news from your blog. Please continue you service.Samy

ConverZ stupidity said...

Check at the below link

Dayanidhi Telephone Connections

ராம்ஜி_யாஹூ said...

பெம்முகுட்டி மற்றும் சாமி யின் மறுமொழிகள் அருமை

pichaikaaran said...

போஃபர்ஸ் காலத்தில் காட்டிய வேகத்தை இப்போது காட்ட ஆரம்பித்து இருக்கிறார் குருமூர்த்தி

மு.சரவணக்குமார் said...

மாறன் சகோதரர்கள் கலைஞரை விட மிக ஆபத்தான ஊழல் பேர்வழிகள்.

கூடாநட்பு என இவர்களைத்தான் கலைஞர் கூறியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

Jayadev Das said...

\\2008-ம் ஆண்டு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி பதவியை நான் ராஜினாமா செய்த பிறகு, அப்போது விசாரணை நடத்தி இருக்க முடியும்.\\
அதானே, அப்போ அவர் மேல் ஏன் விசாரணை செய்ய வில்லை? மேலும் அப்போது சன் TV யில் ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போட்டு கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்தார்கள், அதற்க்கு பழி வாங்கும் நடவடிக்கையாகக் கூட இவர் மீது CBI யின் இந்த அறிக்கையை வைத்து எந்த நடவடிக்கையுமே எடுக்க வில்லையே? ஏன்?

\\யாருக்கும் நான் ஒரு போதும் எந்த உதவியும் செய்தது கிடையாது, எந்த சலுகையும் பெற்றது கிடையாது. \\ அடேங்கப்பா, ஹரிச்சந்திரனையே மிஞ்சும் நேர்மையாளரா இருப்பாரு போல இருக்கே, காந்தியோட வாரிசா,இவரைச் சொல்லலாமோ?


தயாநிதி மாறனை பதவி விலகி வழக்குகளைச் சந்திக்கச் சொல்லும் அம்மா தேர்தலுக்கு நிற்கவே தகுதியில்லை என்று சொன்ன பிறகும் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார், அப்புறம் கோர்ட்டு காரி உமிழ்ந்த பின்னர் பதவி விலகினார். ஊருக்கு உபதேசம் என்பதில் இவர் மட்டும் விதி விலக்கா என்ன?

Anonymous said...

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some important modifications in adding a label feed in google reader ....see it....d...

South-Side said...

பக்கம் பக்கமாக இதை எழுதித்தள்ளும் உண்மைத் தமிழன் , தினமணி இவைகள் ஆயிரக்கணக்கான கோடிகள் மக்கள் பணத்தை அன்றாடம் விரயம் செய்து துக்ளக் தர்பார் நடத்தும் ஜெயலலிதாவை கண்டிக்காமல் விடுவது ஏன்? தினமணிக்குத் தான் சாதிப்பாசம்...ஊரில் உத்தமன் என்று சொல்லிக்கொண்டு , கருணாநிதியையும் , அவர்தம் குடும்பத்தையும் திட்டுவதையே முழுநீள பதிவுலக சாதனையாக கருதிக்கொள்ளும் தாங்களுமே அம்மாவின் அழிச்சாட்டியத்தை கண்டுக்காமல் விடுவது அரசியல் லாபம் கருதியோ?


1200 கோடி தலைமைச்செயலகம் ,
300 கோடி சமச்சீர்கல்வி + புதிதாக புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவு
வாய்ப்பேயில்லாத மோனோ ரயிலுக்காக மெட்ரோ ரயில் திட்டம் அம்போ..

ராஜரத்தினம் said...

//1200 கோடி தலைமைச்செயலகம் ,
300 கோடி சமச்சீர்கல்வி + புதிதாக புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவு
வாய்ப்பேயில்லாத மோனோ ரயிலுக்காக மெட்ரோ ரயில் திட்டம் அம்போ..//

1.1200 கோடி வீணானது எப்படி? கட்டிடத்தை இடிக்க போகிறார்களா?
2.200 கோடி புத்தகம் எப்படி அழித்தார்கள்?
3.மோனோ ரயிலில் மெட்ரோ ரயிலைவிட லாபகரமானதா?

தெளிவான விளக்கங்கள் தரவும். அப்புறம் திமுகவுக்காக பரிதாபப்படலாம்/.

உண்மைத்தமிழன் said...

[[[பெம்மு குட்டி said...
ஆனாலும் உங்களுக்கு பயங்கர பேராசைண்ணா! என்னதோ அவங்க மான மரியாதை உள்ளவங்க மாதிரியும், நியாய அநியாயங்களுக்கு பயப்படுறவங்க மாதிரியும் நினைச்சிக்கிட்டு அவங்களுக்கு அட்வைஸ் வேற பண்ணுறிங்க நீங்க:-))))))))]]]

ஓ.. நான் யோசிக்கலையே..? பெம்மு குட்டி ஐ லைக் திஸ் கமெண்ட்.. தேங்க்யூ ஸோ மச்..!

South-Side said...

திரு.ராஜரத்தினம் : செய்தித்தாள்களை அடிக்கடி படிக்கவும்.பதில் கிடைக்கும்.

புதிய தலைமைச்செயலகத்தை அம்மா புறக்கணித்ததை ஊரே தெரிந்துகொண்டாலும் , தெரியாத படியே நடிப்பதற்கு வாழ்த்துக்கள் ...ஆஸ்கார் கிடைக்கும்!
200 கோடி புத்தகங்களை அருங்காட்சியகத்தில் வைக்கப்போகிறார்களா இல்லை பள்ளிக்குழந்தைகளின் மலம் துடைக்கப் பயன்படுத்தப்போகிறார்களா?

மோனோ ரயில் என்றால் என்னவென்று தெரிந்துகொண்டபின் ( செயலலிதாவிற்கே தெரியாவிட்டாலும் ) பேசலாம்...இந்தியா போன்ற மக்கட் நெருக்கம் மிகுந்த நகரங்களுக்கு மோனோ ரயில் தேவைதான்..ஆனால் , நமது பொருளாதாரத்திற்கும் அதற்கும் வெகுதொலைவு..அதனால் , மெட்ரோ ரயில் தான் சரி , ஏனென்றால் செலவும் குறைவு , சாத்தியப்பாடும் அதிகம்...பெரியபெரிய நாடுகள் , வளர்ச்சியடைந்த நாடுகள் கூட திட்டமிட்டபடி மோனோ ரயில் திட்டங்களை முடிக்கவியலாமல் தடுமாறுகின்றன. இன்னுஞ்சொல்லப்போனால் , மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் பல முடிவடைந்தபிறகு அதை நிறுத்துவது என்பது பணவிரயம்! ஓட்டுப்போட்ட மக்கள்தான் பாவம்....


அவர்கள் செயலலிதாவிடமும் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது..உங்களை மாதிரி அரைகுறை மக்கள் நல விரும்பிகளிடமும் சேர்த்து கஷ்டப்பட வேண்டி இருக்கிறது..

வாழ்க வளமுடன்.......

உண்மைத்தமிழன் said...

[[[Banureka said...

ada ponga boss, aduthatha "dayanidhi maran" thaan tihar jail ku "gate pass" vangi erukurar nu sona pothatha... Banu]]]

அட புரிஞ்சுக்கிட்டீங்களா பானு.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[NAGA INTHU said...

ஜெ. மீது வழக்கு போட்டது மு.க. அப்போது ஜெ. பதவியில் இல்லை. ஆனால் ஜெ.பதவிக்கு வந்ததது கேஸ் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில். இது புரியாமல் ஜெ. பதவி விலகினாரா என தி.மு.க. கேட்பது முட்டாள்தனமானது மட்டுமில்லை, மக்களை ஏமாற்றும் களவாணிதனமாகும்
அரவரசன்.]]]

ஹி.. ஹி.. அதெல்லாம் தெரிஞ்சா சொல்லியிருக்க மாட்டாங்களே..!

உண்மைத்தமிழன் said...

[[[Samy said...

I get more news from your blog. Please continue you service.

Samy]]]

வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[ConverZ stupidity said...

Check at the below link

Dayanidhi Telephone Connections.]]]

செக் பண்ணிப் பார்த்துட்டேண்ணே.. தப்பு செஞ்சா தெரியாம செய்யத் தெரியலைன்னு நினைக்கிறேன்..! அகம்பாவம், திமிர், அலட்சியம் இதெல்லாம் ஒண்ணா சேர்ந்து இப்போ வரிசைல நிக்குது..! பதில் சொல்லித்தான் ஆகணும் மாறன்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

பெம்முகுட்டி மற்றும் சாமி யின் மறுமொழிகள் அருமை.]]]

உங்க செலக்ஷனும் சூப்பர்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

போஃபர்ஸ் காலத்தில் காட்டிய வேகத்தை இப்போது காட்ட ஆரம்பித்து இருக்கிறார் குருமூர்த்தி.]]]

செய்யட்டும். நடத்தட்டும். விவரம் தெரிந்தவர் சொல்கிறார். கேட்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

மாறன் சகோதரர்கள் கலைஞரைவிட மிக ஆபத்தான ஊழல் பேர்வழிகள்.
கூடாநட்பு என இவர்களைத்தான் கலைஞர் கூறியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.]]]

மாறன்களின் எதிர்கால அரசியலைப் பொறுத்து இந்த வார்த்தைகள் மாறலாம் சரவணா..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\2008-ம் ஆண்டு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி பதவியை நான் ராஜினாமா செய்த பிறகு, அப்போது விசாரணை நடத்தி இருக்க முடியும்.\\

அதானே, அப்போ அவர் மேல் ஏன் விசாரணை செய்ய வில்லை? மேலும் அப்போது சன் TV யில் ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போட்டு கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்தார்கள், அதற்க்கு பழி வாங்கும் நடவடிக்கையாகக் கூட இவர் மீது CBI-யின் இந்த அறிக்கையை வைத்து எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லையே? ஏன்?]]]

அதற்குள்ளாகத்தான் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்களே..! அதனால் சி.பி.ஐ.யின் அந்த அறிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்கள்..!

\\யாருக்கும் நான் ஒரு போதும் எந்த உதவியும் செய்தது கிடையாது, எந்த சலுகையும் பெற்றது கிடையாது. \\

அடேங்கப்பா, ஹரிச்சந்திரனையே மிஞ்சும் நேர்மையாளரா இருப்பாரு போல இருக்கே, காந்தியோட வாரிசா, இவரைச் சொல்லலாமோ?]]]

காந்தி பாவம்ண்ணே.. விட்ருங்க..

[[[தயாநிதி மாறனை பதவி விலகி வழக்குகளைச் சந்திக்கச் சொல்லும் அம்மா தேர்தலுக்கு நிற்கவே தகுதியில்லை என்று சொன்ன பிறகும் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார், அப்புறம் கோர்ட்டு காரி உமிழ்ந்த பின்னர் பதவி விலகினார். ஊருக்கு உபதேசம் என்பதில் இவர் மட்டும் விதி விலக்கா என்ன?]]]

இப்போதுகூட அவர் முதல்வர் பதவியை ஏற்றிருக்கவே கூடாதுதான்..! ஆனால் அரசியல் சட்டம் இவரைப் போன்ற ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக இருப்பதினால் நாம் எதுவும் செய்ய முடியவில்லையே..?

உண்மைத்தமிழன் said...

[[[d said...

http://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some important modifications in adding a label feed in google reader. see it.... d...]]]

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[['ழ'கரம் said...

பக்கம் பக்கமாக இதை எழுதித் தள்ளும் உண்மைத் தமிழன் , தினமணி இவைகள் ஆயிரக்கணக்கான கோடிகள் மக்கள் பணத்தை அன்றாடம் விரயம் செய்து துக்ளக் தர்பார் நடத்தும் ஜெயலலிதாவை கண்டிக்காமல் விடுவது ஏன்? தினமணிக்குத்தான் சாதிப் பாசம். ஊரில் உத்தமன் என்று சொல்லிக் கொண்டு, கருணாநிதியையும், அவர்தம் குடும்பத்தையும் திட்டுவதையே முழு நீள பதிவுலக சாதனையாக கருதிக் கொள்ளும் தாங்களுமே அம்மாவின் அழிச்சாட்டியத்தை கண்டுக்காமல் விடுவது அரசியல் லாபம் கருதியோ?]]]

நான் உத்தமன் என்று என்றைக்கு உங்களிடம் சொன்னேன்..? ஆதாரம் தர முடியுமா..? தனிப்பட்ட ஒருவரைக் குற்றம் சொல்லும் முன் ஆழ்ந்து யோசித்துச் சொல்லுங்கள் நண்பரே..! நான் ஒருபோதும் என்னை நல்லவன் என்றோ, உத்தமன் என்றோ சொல்லிக் கொண்டதேயில்லை. இதோ இப்போது இங்கேயும் சொல்லிக் கொள்கிறேன்.. நானும் ஒரு கழிசடைதான்.

[[[1200 கோடி தலைமைச் செயலகம்,
300 கோடி சமச்சீர்கல்வி + புதிதாக புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவு
வாய்ப்பேயில்லாத மோனோ ரயிலுக்காக மெட்ரோ ரயில் திட்டம் அம்போ..]]]

விரைவில் வரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

1.1200 கோடி வீணானது எப்படி? கட்டிடத்தை இடிக்க போகிறார்களா?
2.200 கோடி புத்தகம் எப்படி அழித்தார்கள்?
3.மோனோ ரயிலில் மெட்ரோ ரயிலைவிட லாபகரமானதா?

தெளிவான விளக்கங்கள் தரவும். அப்புறம் தி.மு.க.வுக்காக பரிதாபப்படலாம்.]]]

-))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[['ழ'கரம் said...

திரு.ராஜரத்தினம் : செய்தித் தாள்களை அடிக்கடி படிக்கவும். பதில் கிடைக்கும்.

புதிய தலைமைச் செயலகத்தை அம்மா புறக்கணித்ததை ஊரே தெரிந்து கொண்டாலும், தெரியாதபடியே நடிப்பதற்கு வாழ்த்துக்கள். ஆஸ்கார் கிடைக்கும்!

200 கோடி புத்தகங்களை அருங்காட்சியகத்தில் வைக்கப் போகிறார்களா இல்லை பள்ளிக் குழந்தைகளின் மலம் துடைக்கப் பயன்படுத்தப் போகிறார்களா?

மோனோ ரயில் என்றால் என்னவென்று தெரிந்து கொண்ட பின் (செயலலிதாவிற்கே தெரியா விட்டாலும்) பேசலாம். இந்தியா போன்ற மக்கட் நெருக்கம் மிகுந்த நகரங்களுக்கு மோனோ ரயில் தேவைதான். ஆனால், நமது பொருளாதாரத்திற்கும் அதற்கும் வெகு தொலைவு. அதனால், மெட்ரோ ரயில்தான் சரி, ஏனென்றால் செலவும் குறைவு, சாத்தியப்பாடும் அதிகம். பெரிய பெரிய நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள் கூட திட்டமிட்டபடி மோனோ ரயில் திட்டங்களை முடிக்கவியலாமல் தடுமாறுகின்றன. இன்னுஞ் சொல்லப்போனால், மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் பல முடிவடைந்த பிறகு அதை நிறுத்துவது என்பது பண விரயம்! ஓட்டுப் போட்ட மக்கள்தான் பாவம்.

அவர்கள் செயலலிதாவிடமும் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. உங்களை மாதிரி அரைகுறை மக்கள் நல விரும்பிகளிடமும் சேர்த்து கஷ்டப்பட வேண்டி இருக்கிறது..

வாழ்க வளமுடன்.]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

South-Side said...

நான் உத்தமன் என்று என்றைக்கு உங்களிடம் சொன்னேன்..? ஆதாரம் தர முடியுமா..? தனிப்பட்ட ஒருவரைக் குற்றம் சொல்லும் முன் ஆழ்ந்து யோசித்துச் சொல்லுங்கள் நண்பரே..! நான் ஒருபோதும் என்னை நல்லவன் என்றோ, உத்தமன் என்றோ சொல்லிக் கொண்டதேயில்லை. இதோ இப்போது இங்கேயும் சொல்லிக் கொள்கிறேன்.. நானும் ஒரு கழிசடைதான். //

நன்றி........செயலலிதாவின் துக்ளக் தர்பாரைப் பற்றிய பதிவுகளோ செய்திகளோ இன்றி நித்தமும் திமுகவைச் சாடி மட்டுமே நீங்கள் பதிவினைச் சுட்டப் பயன்படுத்திய வாக்கியமது....உள்நோக்கமேதுமில்லை...... அதற்கான வருத்தங்கள் நண்பரே....

***

விரைவில் வரும்..!//

கண்டிப்பாக வரும் என்பது தெரியும்..சமாளிக்கவாவது வரவேண்டுமே.....

வாழ்க வளமுடன்

ராஜரத்தினம் said...

நான் கேட்டதற்கு இன்னும் பதில் இல்லை. தலைமை செயலகத்தை மாற்றியது தவறு என்கிறீர்களா? எப்படி 1200 கோடி வீணானது ?
ஒரு சின்ன analysis.

1.இப்ப புதிய கட்டடத்தை தொடர்ந்து உபயோகித்தாலுமே கூட அந்த 17ம் நூற்றாண்டு கட்டடத்திற்கும் சேர்த்துதான் வாடகை தரப்போகிறோம்.(நம் பணம்தான்)

2. புதிய கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும். அதற்கும் பணம் வேண்டும். (நம் பணம்தான்)

3. புதிய கட்டிடத்தை இடிக்க வில்லை. அப்படி எதுவும் கவர்னர் சொல்லவில்லை. உங்கள் தலைவர் சொன்னாரா? அதை நம்பாதீர்கள். அவர் தோற்றதே அவரை அறைகுறை மக்கள் நம்பாததால்தான்.

4. மீண்டும் அந்த கட்டிடத்தை வேறு
அலுவலகத்திற்கு பிற்காலத்தில் யார் வேண்டுமானலும் பயன்படுத்தி கொள்ளலாம் எனும் போது 1200 (600 கோடி already lost) கோடி எப்படி வீண்? எனக்கு புரியவில்லை. அது மட்டுமல்லாமல் அதன் மீதான விசாரணை வரும்போது அதை முடக்கி வைப்பதுதானே நியாயம். ஜெயலலிதாவின் நகைகள் இன்னும் கோர்ட்டிடம்தானே இருக்கிறது.

5. 200 கோடி புத்தகம் என்கிறீர்கள்? தவறென்றாலும் கூட 200 கோடிக்காக வேறு கொள்கை அரசும் அதை தொடர வேண்டிய அவசியம் என்ன? இது வேறு அரசு. திமுக -2 அல்ல. pls understand.

6. 176000 கோடியை தாங்கிய எங்களால் இதை தாங்க முடியாதா?

7.கருணாநிதி எந்த அறிஞர் குழுவுக்கு ஏற்ப இதை கொண்டுவந்தாரோ அவரே இது முழுமையில்லை என்கிறாரே?

8. உங்கள் கவலை 200 கோடியை தலைவர் இழந்துவிட்டாரே என்ற வருத்தமா?

9.மோனோ ரயில் வரட்டும். பிறகு இதை பற்றி விவாதிப்போமே? அதுதானே அறிவுடையவர்கள் செயல்.
வீராணம் திட்டம் ஆரம்பிக்கும்போது இதை திமுக அல்லகைகள் சட்டசபையில் எதிர்த்தது. ஆனால் அதை வெற்றிகரமாக முடித்த காரணத்தில்தான் சென்னையை அதிமுக கோட்டையாக மாற்றினார் (2006, 2009, 2011) இதில் சொதப்பினால் சென்னை தோற்கடித்துவிடுமெ என்ற எண்ணம் இல்லாமலா இதை ஆரம்பித்து இருப்பார்?

10. கண்ணகி சிலையை திமுக ஏன் மீண்டும் அதே இடத்தில் முதல் வேலையாக கொண்டுவைத்தார்கள்? கொள்கை முடிவு என்பது இரண்டு அரசுக்கும் எப்படி ஒன்றாக இருக்கமுடியும்? உங்கள் தலைவரை போல குழந்தைதனமாக யோசிக்கிறீர்களே?

South-Side said...

மன்னிக்கவும் ராஜரத்தினம்.......நான் உங்களுடைய குழந்தைத்தனமான வாதத்திற்குள் வர விரும்பவில்லை...உங்களின் மக்கள் சேவையைத் தொடருங்கள்.

ராஜ நடராஜன் said...

படிச்சிகிட்டே வந்து கீழே விகடன் போட்டிருக்கீங்களான்னு பார்த்தேன்:)

ஊரே கூடி தயாநிதி மாறனை கும்மிகிட்டுருக்கும் போது விகடன் சீமான் வில்லனா என முகப்பு கட்டுரை போடுவதின் மர்மம் என்ன?

ராஜ நடராஜன் said...

//கருணாநிதியையும் , அவர்தம் குடும்பத்தையும் திட்டுவதையே முழுநீள பதிவுலக சாதனையாக கருதிக்கொள்ளும் தாங்களுமே அம்மாவின் அழிச்சாட்டியத்தை கண்டுக்காமல் விடுவது அரசியல் லாபம் கருதியோ?//

அதானே!எப்ப பார்த்தாலும் தி.மு.கவையே கிள்ளிகிட்டிருந்தா கழக கண்மணிகளுக்கு எவ்வளவு மன வருத்தமாயிருக்கும்.ஜெயலலிதாவையும் ஒரு கிள்ளு கிள்ளுங்கண்ணே!அப்படியாவது மகிழட்டும்:)

ஒரு ஆட்சியை அதன் கால ஓட்டத்தில் மட்டுமே மதிப்பீடு செய்ய இயலும்.ஜெயலலிதா இதுவரைக்கும் அடக்கி வாசிக்கிற மாதிரிதான் தெரியுது.சரியோ தவறோ விமர்சித்தே தீர வேண்டுமென்ற பக்கசார்பு மனோபாவமே சிலரை கட்சி அடிமைகளாக்கி விடுகிறது.

ஜெயலலிதாவை விமர்சிக்க இது வரையிலுமான ஒரே விதி விலக்காக சமச்சீர் கல்வியை வேண்டுமானால் விமர்சிக்கலாம்.

உண்மைத்தமிழன் said...

[[['ழ'கரம் said...

செயலலிதாவின் துக்ளக் தர்பாரைப் பற்றிய பதிவுகளோ செய்திகளோ இன்றி நித்தமும் திமுகவைச் சாடி மட்டுமே நீங்கள் பதிவினைச் சுட்டப் பயன்படுத்திய வாக்கியமது. உள்நோக்கமேதுமில்லை. அதற்கான வருத்தங்கள் நண்பரே.

விரைவில் வரும்..!//

கண்டிப்பாக வரும் என்பது தெரியும். சமாளிக்கவாவது வரவேண்டுமே..

வாழ்க வளமுடன்]]]

சமாளிப்புக்கு இல்லை. நிசமாகவே வரும். ஜூன்-16-க்கு பிறகு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

நான் கேட்டதற்கு இன்னும் பதில் இல்லை. தலைமை செயலகத்தை மாற்றியது தவறு என்கிறீர்களா? எப்படி 1200 கோடி வீணானது ?
ஒரு சின்ன analysis.

1.இப்ப புதிய கட்டடத்தை தொடர்ந்து உபயோகித்தாலுமே கூட அந்த 17ம் நூற்றாண்டு கட்டடத்திற்கும் சேர்த்துதான் வாடகை தரப்போகிறோம்.(நம் பணம்தான்)

2. புதிய கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும். அதற்கும் பணம் வேண்டும். (நம் பணம்தான்)

3. புதிய கட்டிடத்தை இடிக்க வில்லை. அப்படி எதுவும் கவர்னர் சொல்லவில்லை. உங்கள் தலைவர் சொன்னாரா? அதை நம்பாதீர்கள். அவர் தோற்றதே அவரை அறைகுறை மக்கள் நம்பாததால்தான்.

4. மீண்டும் அந்த கட்டிடத்தை வேறு
அலுவலகத்திற்கு பிற்காலத்தில் யார் வேண்டுமானலும் பயன்படுத்தி கொள்ளலாம் எனும் போது 1200 (600 கோடி already lost) கோடி எப்படி வீண்? எனக்கு புரியவில்லை. அது மட்டுமல்லாமல் அதன் மீதான விசாரணை வரும்போது அதை முடக்கி வைப்பதுதானே நியாயம். ஜெயலலிதாவின் நகைகள் இன்னும் கோர்ட்டிடம்தானே இருக்கிறது.

5. 200 கோடி புத்தகம் என்கிறீர்கள்? தவறென்றாலும் கூட 200 கோடிக்காக வேறு கொள்கை அரசும் அதை தொடர வேண்டிய அவசியம் என்ன? இது வேறு அரசு. திமுக -2 அல்ல. pls understand.

6. 176000 கோடியை தாங்கிய எங்களால் இதை தாங்க முடியாதா?

7.கருணாநிதி எந்த அறிஞர் குழுவுக்கு ஏற்ப இதை கொண்டுவந்தாரோ அவரே இது முழுமையில்லை என்கிறாரே?

8. உங்கள் கவலை 200 கோடியை தலைவர் இழந்துவிட்டாரே என்ற வருத்தமா?

9.மோனோ ரயில் வரட்டும். பிறகு இதை பற்றி விவாதிப்போமே? அதுதானே அறிவுடையவர்கள் செயல்.
வீராணம் திட்டம் ஆரம்பிக்கும்போது இதை திமுக அல்லகைகள் சட்டசபையில் எதிர்த்தது. ஆனால் அதை வெற்றிகரமாக முடித்த காரணத்தில்தான் சென்னையை அதிமுக கோட்டையாக மாற்றினார் (2006, 2009, 2011) இதில் சொதப்பினால் சென்னை தோற்கடித்துவிடுமெ என்ற எண்ணம் இல்லாமலா இதை ஆரம்பித்து இருப்பார்?

10. கண்ணகி சிலையை திமுக ஏன் மீண்டும் அதே இடத்தில் முதல் வேலையாக கொண்டு வைத்தார்கள்? கொள்கை முடிவு என்பது இரண்டு அரசுக்கும் எப்படி ஒன்றாக இருக்கமுடியும்? உங்கள் தலைவரை போல குழந்தைதனமாக யோசிக்கிறீர்களே?]]]

ராஜரத்தினம் புல் பார்ம்ல இருக்கீங்க..! அடிச்சு ஆடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[['ழ'கரம் said...

மன்னிக்கவும் ராஜரத்தினம். நான் உங்களுடைய குழந்தைத்தனமான வாதத்திற்குள் வர விரும்பவில்லை. உங்களின் மக்கள் சேவையைத் தொடருங்கள்.]]]

இதென்ன குழந்தைத்தனம்..? அவர் கேட்ட கேள்வியிலும் நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பதில் இல்லை என்றவுடன் இப்படி தப்பித்துக் கொள்வதுதான் குழந்தைத்தனம்..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

படிச்சிகிட்டே வந்து கீழே விகடன் போட்டிருக்கீங்களான்னு பார்த்தேன்:)
ஊரே கூடி தயாநிதி மாறனை கும்மிகிட்டுருக்கும் போது விகடன் சீமான் வில்லனா என முகப்பு கட்டுரை போடுவதின் மர்மம் என்ன?]]]

சமாளிப்புதான்.. சம்பாதிக்கிறதுக்கு அவங்களும் துணையா இருக்காங்கள்ல.. காட்டிக் கொடு்கக முடியுமா..? ராசாவை குறி வைத்து தாக்கியதே மாறன் பிரதர்ஸின் தூண்டுதலால்தான் என்பது மீடியா உலகத்திற்கே தெரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//கருணாநிதியையும் , அவர்தம் குடும்பத்தையும் திட்டுவதையே முழுநீள பதிவுலக சாதனையாக கருதிக்கொள்ளும் தாங்களுமே அம்மாவின் அழிச்சாட்டியத்தை கண்டுக்காமல் விடுவது அரசியல் லாபம் கருதியோ?//

அதானே! எப்ப பார்த்தாலும் தி.மு.கவையே கிள்ளிகிட்டிருந்தா கழக கண்மணிகளுக்கு எவ்வளவு மன வருத்தமாயிருக்கும். ஜெயலலிதாவையும் ஒரு கிள்ளு கிள்ளுங்கண்ணே! அப்படியாவது மகிழட்டும்:)

ஒரு மாதம் போகட்டும்..!

[[[ஒரு ஆட்சியை அதன் கால ஓட்டத்தில் மட்டுமே மதிப்பீடு செய்ய இயலும். ஜெயலலிதா இதுவரைக்கும் அடக்கி வாசிக்கிற மாதிரிதான் தெரியுது. சரியோ தவறோ விமர்சித்தே தீர வேண்டுமென்ற பக்கச் சார்பு மனோபாவமே சிலரை கட்சி அடிமைகளாக்கி விடுகிறது.
ஜெயலலிதாவை விமர்சிக்க இதுவரையிலுமான ஒரே விதி விலக்காக சமச்சீர் கல்வியை வேண்டுமானால் விமர்சிக்கலாம்.]]]

-))))))))))))

Kite said...

மோனோ ரயில் வரட்டும். பிறகு இதை பற்றி விவாதிப்போமே? அதுதானே அறிவுடையவர்கள் செயல்.
வீராணம் திட்டம் ஆரம்பிக்கும்போது இதை திமுக அல்லகைகள் சட்டசபையில் எதிர்த்தது. ஆனால் அதை வெற்றிகரமாக முடித்த காரணத்தில்தான் சென்னையை அதிமுக கோட்டையாக மாற்றினார்//

ஜெயலலிதா இதுவரை ஆட்சியிலிருந்த பத்து வருடங்களில் அவர் செய்த நல்ல விடயங்கள் மிகக்குறைவு. அவையும் தொலைநோக்குப் பார்வை இல்லாதவை. என்ன செய்வது அ.தி.மு.க ஜால்ராக்கள் அதை வைத்துதானே காலம் தள்ள முடிகிறது.

முதலில் மோனோ ரெயிலைக் கொண்டு வந்துவிட்டு பின்னர் சாதக பாதகங்களை ஆராய வேண்டுமாம். என்ன ஒரு அறிவு?

சுருக்கமாகச் சொன்னால் மெட்ரொ ரயிலை விட மோனோ ரயிலை அமல்படுத்தும் செலவு குறைவு. ஆனால் அதில் 700 பேர்தான் போக முடியும். மெட்ரோவில் 1200 பேர் போகலாம். உலகம் முழுவதும் மோனோ ரெயிலை சுற்றுலாத் தளங்களில் குறைந்த தூரத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். மோனோ ரெயில் இன்றைய கூட்டத்தைச் சமாளிக்க வேண்டுமானால் மட்டும் சரியாக இருக்கும். இருபது வருடத்தில் சென்னை மக்கள்தொகை இரண்டு கோடி ஆகும்போது வேலைக்கு ஆகாது. அப்பொழுது என்ன மோனோவை எடுத்து விட்டு மெட்ரோ அமைப்பீர்களா?

வீராணம் திட்டம் என்ற பெயரில் வீராணம் ஏரி வரண்டதுதான் மிச்சம். அது அவ்வளவு தண்ணீரைக் கொடுக்கிறதென்றால் ஏன் கிருஷ்ணா நதிநீர் கேட்டு ஆந்திராவை இப்போது கெஞ்சிக் கொண்டிருக்கிறார். போரூர் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இவர் காலத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்? இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரைத் தேக்கி இருந்தாலே தண்ணீர் பிரச்சினையைச் சமாளித்திருக்கலாம். கலைஞர் காலத்தில்தான் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு ஒரு இடத்தில் செயல்படவும் தொடங்கியது. ஜெயலலிதா மத்திய அரசு அதற்காகக் கொடுத்த நிதியை வீம்புக்காகப் பயன்படுத்தாமல் இருந்தார்.

எங்களுக்கும் வரலாறு தெரியும். பழைய விடயங்களை யோசித்துப் பேசவும்.

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

ஜெயலலிதா இதுவரை ஆட்சியிலிருந்த பத்து வருடங்களில் அவர் செய்த நல்ல விடயங்கள் மிகக் குறைவு. அவையும் தொலை நோக்குப் பார்வை இல்லாதவை. என்ன செய்வது அ.தி.மு.க ஜால்ராக்கள் அதை வைத்துதானே காலம் தள்ள முடிகிறது.]]]

ஜெயலலிதா இன்றைக்கு ஆட்சிக்கு வந்தமைக்கு முக்கியக் காரணம் தி.மு.க. கட்சியினரின் அதிகார, ஆணவப் போக்குதான். ஜெயலலிதா தனது கட்சியினரை அடக்கி வைத்திருப்பார். தி.மு.க.வில் அது நடக்காது என்பது மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதுதான் உண்மை ஜெகன்னாத்..!

[[[முதலில் மோனோ ரெயிலைக் கொண்டு வந்துவிட்டு பின்னர் சாதக பாதகங்களை ஆராய வேண்டுமாம். என்ன ஒரு அறிவு? சுருக்கமாகச் சொன்னால் மெட்ரொ ரயிலை விட மோனோ ரயிலை அமல்படுத்தும் செலவு குறைவு. ஆனால் அதில் 700 பேர்தான் போக முடியும். மெட்ரோவில் 1200 பேர் போகலாம். உலகம் முழுவதும் மோனோ ரெயிலை சுற்றுலாத் தளங்களில் குறைந்த தூரத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். மோனோ ரெயில் இன்றைய கூட்டத்தைச் சமாளிக்க வேண்டுமானால் மட்டும் சரியாக இருக்கும். இருபது வருடத்தில் சென்னை மக்கள் தொகை இரண்டு கோடி ஆகும்போது வேலைக்கு ஆகாது. அப்பொழுது என்ன மோனோவை எடுத்து விட்டு மெட்ரோ அமைப்பீர்களா?
வீராணம் திட்டம் என்ற பெயரில் வீராணம் ஏரி வரண்டதுதான் மிச்சம். அது அவ்வளவு தண்ணீரைக் கொடுக்கிறதென்றால் ஏன் கிருஷ்ணா நதி நீர் கேட்டு ஆந்திராவை இப்போது கெஞ்சிக் கொண்டிருக்கிறார். போரூர் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இவர் காலத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்? இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரைத் தேக்கி இருந்தாலே தண்ணீர் பிரச்சினையைச் சமாளித்திருக்கலாம். கலைஞர் காலத்தில்தான் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு ஒரு இடத்தில் செயல்படவும் தொடங்கியது. ஜெயலலிதா மத்திய அரசு அதற்காகக் கொடுத்த நிதியை வீம்புக்காகப் பயன்படுத்தாமல் இருந்தார்.
எங்களுக்கும் வரலாறு தெரியும். பழைய விடயங்களை யோசித்துப் பேசவும்.]]]

போச்சுடா.. தனிப் பதிவு போடும்போது எனது கருத்துக்களை முன் வைக்கிறேன்.. நன்றி..!

சாமக்கோடங்கி said...

சமச்சீர் கல்வியில் ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.. மற்றபடி மாறன் பிரதர்ஸ் அடிபடுவது பற்றி..: ரெஸ்லிங்க் (wrestling)ஆட்டங்களில் இரண்டு பேருக்கு மேற்பட்டோர் ஆடும் ஒரு வித ஆட்டம் உண்டு.. அதில் ஒரு சூத்திரம் என்ன என்றால் பலமான ஆட்களை(தங்களுக்கு சரிசமமான பலமில்லாமல் அதை விட அதிகமான பலத்துடன் இருப்பவர்களை) மற்ற ஆட்டக்காரர்கள் ஒன்றாகச் சேர்ந்து(ஒற்றுமையுடன்..?!?!?)குண்டுக் கட்டாக வெளியில் தூக்கிப் போட்டு விடுவர். பிறகு கிட்டத்தட்ட ஒத்த பலமுடைய வீரர்கள் மட்டுமே களத்தில் இருப்பர்.. அப்போது தான் ஆட்டமும் முடியும். அதே போல பலசாலிகளான மாறன் பிரதர்சை வீழ்த்த ஜெயலலிதா, சிபிஐ மற்றும் ஒரு சில பத்திரிக்கைகள் ஒன்றிணைந்துள்ளன. இவைகள் இணையாவிட்டால் மாறர்களை தூக்க முடியாது. எனவே இவர்கள் உள்ளே போக வேண்டுமானால் (இப்போதைக்கு) ஜெயலலிதாவை விமர்சிப்பதை விட்டு விட்டு சற்றே தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான் நடுநிலையாளர்களுக்கு அழகு. அதை விடுத்து எதிர்க்கேள்வியை இப்போதே கேட்டால், அதனால் ஒரு பலனும் இல்லை. இப்போது விட்டால் இவர்களைப் பிறகு பிடிக்க முடியாது.. மாறன் பிரதர்ஸ் முடியட்டும்.. ஜெயலலிதா எங்கே போய் விடப் போகிறார்.. ஆட்டத்தில் ஒவ்வொருவராக வெளியே வரட்டும்..

Hariharasudhan said...

நண்பர்களே!

வணக்கம்.

தயவு செய்து எனக்கு ஒரு விஷத்தை விளக்கவும். மாறன் விஷயத்தில் டெலிபோன் இணையதளமும் சரியாக கூறுகிறதே? அது எப்படி? உண்மையின் நிதர்சனத்தை நிறைய பேர் ஏற்க மறுப்பதேன்?

நான் கேள்விப்பட்டவரை ஏற்கனவே திட்டமிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் திட்டமும் கூடுதலான வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டமும் ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இது உண்மையா ? பொய்யா?

தெளிவுபடுத்தவும்.

என்றும் கேள்விகளுடன்

பா. ஹரிஹரசுதன்