கீற்று இணையத்தளத்திற்கு உதவுங்கள் தோழர்களே..!

13-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த ஐந்தாண்டு காலத்திற்குள்தான் தமிழில் பல சிற்றிதழ்கள் மிக அதிகமாக வெளி வரத் துவங்கின என்று நினைக்கிறேன். அவைகளைப் பற்றிய விளம்பரங்களே அதிகம் வெளிவராத சூழலில் சிற்றிதழர் ஆர்வலர்களும், படிப்பாளர்களும் அவற்றை முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

அப்படியான காலக்கட்டத்தில்தான் இது போன்றவைகள்  அனைத்திற்குமான ஒரு முகவரித் தளமாக, இருப்பிட முகவரியாகத் திகழ்ந்து வந்தது கீற்று.காம். அனைத்து வகை சிற்றிதழ்களுக்கு இடமளித்து, அவைகளைப் பற்றிய தள முகவரிகளைத் தனக்குள் வைத்திருந்து சேவையளித்த கீற்றுவை மறுப்பதற்கில்லை.
 

 கீற்றுவில் வெளி வந்த சில கட்டுரைகளில், அதில் பொதிந்திருந்த விஷயங்களின் பின்னணியில் முழுமையாக எனக்கு உடன்பாடில்லை என்றாலும், கீற்றுவில் நடந்து வந்த விவாதங்கள் அத்தனையும் படிப்பதற்குரியவைதான். கீற்றுவின் சேவை, தமிழ் இலக்கிய உலகத்திற்கு மிகத் தேவையான ஒன்று என்றே நான் கருதுகிறேன்..!

சிறந்த விவாத மேடையாகத் திகழ்ந்த கீற்றுவில் இருந்து இப்படியொரு கடிதம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 
எனது ஜி.மெயிலுக்கு வந்த கடிதம்  இது..

அன்புடையீர்..!

கீற்று இணையதளம் இதுவரை shared server-ல் இயங்கி வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வரும் கீற்று வாசகர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் வெளியான படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் பாதுகாத்து வருவதால் அதிகரித்திருக்கும் Memory usage & MySQL usage காரணமாக‌ dedicated server-க்கு மாறியாக வேண்டியுள்ளது. Dedicated server என்றால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்ட‌வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பதிவு செய்வதாக இருந்தால் இரண்டு லட்சம் வேண்டும். இது கீற்று இணையத்தளத்திற்கு மிகப் பெரிய தொகை.

கீற்றில் இணையும் சிற்றிதழ்களின் எண்ணிக்கையும், கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. முழு நேர ஊழியர் இல்லாமல், இவற்றை எல்லாம் வலையேற்றுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. முழு நேர ஊழியர் என்றால், குறைந்தது மாதம் ரூபாய் ஐயாயிரம் சம்பளம் தர வேண்டும்.

கடந்த ஜூலை மாதம் ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ கருத்தரங்கை நடத்திய வகையில் ரூ.10,000 கடன் என்பதுதான் கீற்றின் நிதிநிலைமை. எனவே கீற்று தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் கையில்தான் உள்ளது. கீற்று வெளிவருவது அவசியம் என்று கருதும் வாசகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகிறோம்.

தற்காலிகமாக கீற்றின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளோம். கீற்று இணையதளத்தின் படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் backup எடுத்துள்ளோம். போதிய அளவு நன்கொடை கிடைத்தால், நிச்சயம் கீற்று பழையபடி வெளிவரும் என்று நம்புகிறோம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு:

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண்: 603801511669

கணக்கு வைத்திருப்பவர் பெயர்: இரமேஷ்

வங்கிக் கிளை: அண்ணா சாலை, சென்னை

IFSC Code / MICR Code: ICIC0006038 / 600229017

Credit card மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், paypal-ஐ பயன்படுத்தவும்.



Cheque / DD அனுப்ப வேண்டிய முகவரி:

Ramesh,

22/34, Saraswathi Nagar 5th street,

Adambakkam

Chennai - 88

நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து editor@keetru.com ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

என்றும் அன்புடன்

கீற்று நந்தன்.
கைப்பேசி: 99400 97994

கடந்த ஐந்தாண்டு காலமாய் இலக்கியம், அரசியல், புனைவு என்று அனைத்துத் தளங்களிலும் பயணப்பட்டிருக்கும் இந்தக் கீற்றுவை நாம் மனம் வைத்தால் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறேன்..!

நம்மில் பலருக்கும் இது போன்ற இலக்கிய ஆர்வங்கள் இருக்கலாம்.. படிப்பார்வம் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கலாம். ஆனால் முழு மூச்சாக செயல்படுத்த விடாத அளவுக்கு பிரச்சினைகளால் ஆழ்ந்திருக்கலாம். ஆனால் செயல்படுத்தும் ஒரு இடம் இருக்கின்றபோது அதனை நாம் ஆதரிப்பதுகூட நாமே அதனுள் பங்கு பெறுவது போலத்தான்..!

உங்களுடைய ஆதரவுகளை கீற்றுக்கு கொடுங்கள்..! உங்களால் முடிந்த உதவிகளை கீற்றுவுக்கு அளிப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவிகளைப் போலத்தான்..!

நன்றி..!


10 comments:

R. Gopi said...

நான் என்னால் இயன்றதை அளிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

புரட்சித்தலைவன் said...

என்னால் இயன்றதை அளிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி. support keetru

உண்மைத்தமிழன் said...

[[[இரா கோபி said...
நான் என்னால் இயன்றதை அளிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.]]]

முன் வந்த கொடைத் தன்மைக்கு மிக்க நன்றி கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[புரட்சித்தலைவன் said...
என்னால் இயன்றதை அளிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி. support keetru]]]

புரட்சித் தலைவா.. இந்தப் பெயரை வைத்துக் கொண்டு கொடுக்காமலா இருப்பது..?

நன்றியோ நன்றி..!

Anonymous said...

கீற்று மீண்டும் துளிர் விடும்.என நம்புகிறேன்,நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்வோம்

உண்மைத்தமிழன் said...

[[[ஆர்.கே.சதீஷ்குமார் said...
கீற்று மீண்டும் துளிர் விடும்.என நம்புகிறேன், நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்வோம்.]]]

உங்களது நம்பிக்கை பலிக்கட்டும் சதீஷ்..!

ராஜரத்தினம் said...

சொன்னால் ஆச்சர்யபடுவீர்கள். இதை ரெண்டு வருஷம் முன்னாடியே எதிர்பார்த்தேன். எந்த ஒரு மானமுள்ள இந்துவும் இதற்கு ஒரு பைசா தரக்கூடாது.

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...
சொன்னால் ஆச்சர்யபடுவீர்கள். இதை ரெண்டு வருஷம் முன்னாடியே எதிர்பார்த்தேன். எந்த ஒரு மானமுள்ள இந்துவும் இதற்கு ஒரு பைசா தரக் கூடாது.]]]

அட அப்படியா.. அப்போ நான் மானங்கெட்ட இந்துவாகவே இருந்து கொள்கிறேன்.. நன்றி..!

ராஜரத்தினம் said...

//அட அப்படியா.. அப்போ நான் மானங்கெட்ட இந்துவாகவே இருந்து கொள்கிறேன்.. நன்றி..!//

ஹி..ஹி அதான் இந்த பதிவை போட்டபோதே தெரிந்து விட்டதே? அப்புறம் ஏன் அப்பன் குதிருக்கிள்ள இல்லனு...

மரா said...

murukan thaan kapathonum :)