புழல் - சினிமா விமர்சனம்

15-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படத்தின் பெயரைப் பார்த்தவுடனேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். சென்னை மத்திய சிறை அமைந்திருக்கும் இடத்தின் பெயரான புழலின் வரலாற்றையோ அல்லது புழல் மத்திய சிறையை கதைக் களனாக வைத்து எடுத்திருப்பார்களோ என்று நீங்கள் நினைத்திருக்கலாம். உண்மையில் இந்த இரண்டுமில்லாமல் ரெண்டுங்கெட்டானாக பிப்ட்டி, பிப்ட்டியாக எடுத்திருக்கிறார்கள்.


 
முத்துப்பாண்டி, ஜான், இன்னொரு முஸ்லீம் இளைஞன் மூவரும் வேறுவேறு குற்றச் செயல்களுக்காக புழல் சிறைக்குள் வருகிறார்கள் அங்கே அவர்கள் சில கர்மங்களைச் சந்தித்து கோபப்பட்டு பொங்கி எழுவதைத்தான் பொங்காத பொங்கல் பானையில் பொங்கல் வைத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.


 
முத்துப்பாண்டிக்கு பிரச்சினை கல்லூரிக்கு பீஸ் கட்ட பணமில்லை. அவனது தாயார் பெரும் முயற்சி செய்து அவனைக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறாள். கட்ட வேண்டிய பீஸுக்காக அவனது தாயாரையே பீஸாகக் கேட்கிறான் தாளாளர்.. வேறு வழியில்லாமல் தாயாரும் இதற்கு உடன்படுகிறாள். ஆனால் தற்செயலாக முத்துப்பாண்டி இதைப் பார்த்துவிட தாய் தற்கொலை செய்து கொள்கிறாள். பதிலுக்கு தாளாளரை பரலோகம் அனுப்பிவிட்டு வீட்டிலிருந்து புழலுக்கு டிரான்ஸ்பராகி வருகிறான் முத்துப்பாண்டி.


தனது காதலியைத் திருமணம் செய்திருப்பவனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகத் தெரிய வந்து அவசரத்தில் அவளது முதலிரவை நிறுத்துவதற்காக ஜன்னல் கதவைத் திறக்கும் ஜான்(என்னவொரு கதை ஐடியா) காதலியை எழுப்பவதற்காக கோடாரி கம்பியை உள்ளேவிட.. அது அவசரத்தில் காதலியின் கணவனின் “அது”வை கட் செய்து அவனை பரலோகத்திற்கு அனுப்பிவிட.. ஜான் தம்பியும் புழலுக்கு பிரமோஷனில் வருகிறார்.

இன்னொரு முஸ்லீம் தம்பி.. தனது அக்கா பக்கத்து வீட்டில் இருக்கும் இன்னொரு பெண்ணின் கணவனைத் தள்ளிக் கொண்டு போனதைப் பொறுக்க முடியாமல் கோவில் கருவறையின் அருகிலேயே அவளைக் கொலை செய்துவிட்டு டெபுடேஷனில் புழல் சிறைக்கு வந்திருக்கிறான்.


மூன்று பேருக்குமே காதலிகள் உண்டு. டூயட்டுகள் உண்டு. முத்துப்பாண்டியின் காதலி லொட.. லொட.. சகிக்க முடியாத பேச்சு.. திட்டக்குடி படத்தின் கதாநாயகிதான். அளவுக்கதிகமாக முத்துப்பாண்டியின் மீது பாசத்தைக் கொட்டி அவனை வம்பிழுப்பதும், இழுத்து இழுத்துப் பேசுவதும், ராகிங் செய்வது மாதிரியுமான காட்சிகள் சகிக்க முடியாததாக இருந்தது.

முத்துப்பாண்டியின் கல்லூரி மோனோ ஆக்ட்டிங் ஒன்று மட்டும் பரவாயில்லை. அதிலும் ஒவ்வொரு பிரச்சினையையும் சொல்லிச் சொல்லி அதற்கு நியாயம் கேட்கும்போது கொஞ்சம், கொஞ்சம் பொதுப் பிரச்சினையைத் தொட்டுத்தான் போகிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் அத்தனையும் விழலுக்கு இழைத்த நீராகிவிட்டதுதான் சோகம்..


இரண்டாவது கதையில் இதைவிட அட்டூழியம். அப்பாவும், மகனும் ஒரே விபச்சாரப் பெண்ணிடம் படுக்கப் போகிறார்களாம். கொடுமைய்யா கொடுமை. இதுல அப்பன் கேரக்டர் மனோபாலா. மீனவர் குப்பத்து பஞ்சாயத்து தலைவராம்.. அவரது மகன் ரவுடி. இங்கே ஜானை தற்செயலாகச் சந்தித்து பேசும் இரண்டாவது ஹீரோயின் அவனை விரும்புவதாகச் சொல்லி முடித்து ஒரு ரீல் ஓடுவதற்குள் அந்த ரவுடியையே திருமணமே செய்து கொள்கிறாள்.  திரைக்கதைல என்ன ஸ்பீடு பாருங்க..? எப்படி எடுத்தாலும் நம்மாளுக பார்ப்பாங்கன்னு முடிவே பண்ணிட்டாங்கப்பா..!

மூணாவது கதையும் இதேதான். ஏதோ டபுள் எக்ஸ் போர்னோ படம் மாதிரி பக்கத்து வீட்டு ஆம்பளையின் கட்டுடலைப் பார்த்தவுடன் கட்டுண்ட மசக்கைப் பெண்ணைப் போல அக்காவின் செய்கையிருக்க.. மச்சான் கட்டுறதுக்காக தாலியோடு வரும் தம்பி, அதே தாலியை வைத்து அக்காவின் கழுத்தை நெரிச்சுக் கொல்றாருன்னா... இப்படி சீன் வைக்கிறதுக்கு இயக்குநருக்கு எவ்ளோ தில்லு இருக்கணும் பாருங்க..?

வைச்சுட்டாரே.. புழல் ஜெயில்ல நடக்கிற அநியாயத்துக்கு காதல் சுகுமாரின் செல்போன் காமெடி.. கொஞ்சமும் சிரிப்பு வராத காட்சிகளையெல்லாம் காமெடி என்ற பெயரில் வைத்து நம்மை கொடுமைப்படுத்துகிறார்கள்.

நிஜத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி ஹோமோசெக்ஸ் எப்படி செய்கிறார்கள் என்பதை 90 சதவிகிதம் தத்ரூபமாக செய்து காட்டியிருக்கும் இந்த இயக்குநரை புழல் ஜெயில்வாசிகள் சார்பாக நான் மனதார வாழ்த்துகிறேன். இவர் ஒரு நாளைக்கு அங்க போனா தெரியும் சேதி..!

இதுல கவர்ச்சிக்கு மட்டும் பஞ்சமேயில்லை.. இதய தெய்வம் ஷகிலா, பத்மா அய்யங்கார் ரெண்டு பேரும் வந்து தலையைக் காட்டிட்டு ஒரே சீன்ல ஓடிர்றாங்க.. அப்புறம் ரெண்டு, மூணு இளசுகள் குத்தாட்டம் போட்டு படத்தை நகர்த்திருக்காங்க..! எப்படியோ அவங்களுக்குத் துட்டு வந்திருந்தா சந்தோஷம்தான்..


 
படத்திலேயே ஒரேயொரு ஆச்சரியமளித்த விஷயம்.. ஜெயிலுக்குள் நடக்கும் சண்டைக் காட்சி.. ஏதோ வித்தியாசமாக இயல்பாக இருந்தது.. இது ஒண்ணுக்காக இரண்டரை மணி நேரம் உக்காந்து வாங்கிக் கட்டிக்கிட்டு வரணுமான்னு நீங்க கேக்குறீங்களா..? வேணாம் கண்ணுகளா.. விட்ருங்க.. அந்தப் பாவம் எங்களோடவே போகட்டும்..!

போய்ப் பொழைப்பைப் பாருங்க..! போங்க..!

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

39 comments:

எறும்பு said...

Me first

எறும்பு said...

வடை கொத்தி பறவை ராமசாமி.. இந்த தடவை வடை எனக்குதான்..

:)

எறும்பு said...

அண்ணே, உங்களுக்கு மட்டும் இந்த "மாதிரி" படம் எப்படி மாட்டுது??

நசரேயன் said...

//போய்ப் பொழைப்பைப் பாருங்க//

சரிண்ணே ,இருந்தாலும் உங்க கடமை உணர்ச்சி பாராட்ட௬டிய விஷயம்

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.ஸ்டில்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு,படம் சரி இல்லைனி சொல்லீட்டீங்க.நீங்க சொல்லி தட்ட முடியுமா? ரிஜக்ட் பண்ணிட்டேன்

R. Gopi said...

\\போய்ப் பொழைப்பைப் பாருங்க..! போங்க..!\\

சரிங்க ஆபீசர்.

யாராவது போன் பண்ணா எப்படி இருக்க எப்ப சென்னை வர அப்படின்னு கேளுங்க. பதிவப் படிச்சியா ஓட்டுப் போட்டியான்னு அதுலயே குறியா இருக்காதீங்க:)

எறும்பு said...

//யாராவது போன் பண்ணா எப்படி இருக்க எப்ப சென்னை வர அப்படின்னு கேளுங்க. பதிவப் படிச்சியா ஓட்டுப் போட்டியான்னு அதுலயே குறியா இருக்காதீங்க:) //

கோபி உங்ககிட்டயுமா,, அண்ணன் எல்லார்கிட்டயும் ஒரே மாதிரிதான் போலிருக்கு..

:))

சிவராம்குமார் said...

அய்யோ அய்யோ! உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு ;-)

damildumil said...

வரவர தமிழ் பதிவுகள் எதையுமே அலுவலகத்திலோ அல்லது விட்டிலோ யாரும் இருக்கும் போது படிக்கவே முடிகிறதில்லை. முன்பெல்லாம் லக்கி மட்டும் தான் இந்த மாதிரி படத்தை பதிவில் போடுவார் இப்போ எல்லாருமே இப்படி கிளம்பிட்டீங்களா? கேட்டா உன்னை யாரு கூப்பிட்டதுன்னு சொல்லுவீங்க, அதனால சங்க ஊதிட்டு நான் கிளம்புறேன்.

சசிகுமார் said...

நான் தப்பிதேண்டா சாமி. கோடாரி கதை தான் ஹைலைட்

உண்மைத்தமிழன் said...

எறும்பு தம்பி..

முதல் வருகைக்கும் நன்றி..!

இராமசாமி கண்ணனுக்கு உதார் விடுவது ஓகேதான்..! அவரை இன்னிக்கு என்னமோ காணலை..!

இந்த மாதிரி படமெல்லாம் தியேட்டர்லதான் கண்ணுல படுது..

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//போய்ப் பொழைப்பைப் பாருங்க//

சரிண்ணே, இருந்தாலும் உங்க கடமை உணர்ச்சி பாராட்ட௬டிய விஷயம்.]]]

ரைட்டு. எல்லாம் உங்களுக்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே.ஸ்டில்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு, படம் சரி இல்லைனி சொல்லீட்டீங்க.நீங்க சொல்லி தட்ட முடியுமா? ரிஜக்ட் பண்ணிட்டேன்.]]]

இந்த ஸ்டில்ஸுக்காக படம் பார்க்கணுமா..? லூஸ்ல விடு செந்திலு..!

உண்மைத்தமிழன் said...

[[[இரா கோபி said...

\\போய்ப் பொழைப்பைப் பாருங்க..! போங்க..!\\

சரிங்க ஆபீசர். யாராவது போன் பண்ணா எப்படி இருக்க எப்ப சென்னை வர அப்படின்னு கேளுங்க. பதிவப் படிச்சியா ஓட்டுப் போட்டியான்னு அதுலயே குறியா இருக்காதீங்க:)]]]

மை காட்.. அவனா நீயி.. அந்த கோபியா நீயி..? இல்லையே.. வேற கோபிகிட்டதான பேசினேன்..!

ஏம்ப்பா சமயம் பார்த்து கோத்து விடுறீங்க..? சரி.. சரி.. இதுக்கு ஓட்டுப் போட்டாச்சா..?

உண்மைத்தமிழன் said...

[[[எறும்பு said...

//யாராவது போன் பண்ணா எப்படி இருக்க எப்ப சென்னை வர அப்படின்னு கேளுங்க. பதிவப் படிச்சியா ஓட்டுப் போட்டியான்னு அதுலயே குறியா இருக்காதீங்க:) //

கோபி உங்ககிட்டயுமா,, அண்ணன் எல்லார்கிட்டயும் ஒரே மாதிரிதான் போலிருக்கு..

:))]]]

அடேய்.. சின்னப் பய புள்ளைக சமயம் பார்த்து காலை வாரி விடுறானுகப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[சிவராம்குமார் said...
அய்யோ அய்யோ! உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு ;-)]]]

அனுதாபத்திற்கு நன்றி சிவராம்குமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[damildumil said...

வர வர தமிழ் பதிவுகள் எதையுமே அலுவலகத்திலோ அல்லது விட்டிலோ யாரும் இருக்கும்போது படிக்கவே முடிகிறதில்லை. முன்பெல்லாம் லக்கி மட்டும்தான் இந்த மாதிரி படத்தை பதிவில் போடுவார் இப்போ எல்லாருமே இப்படி கிளம்பிட்டீங்களா? கேட்டா உன்னை யாரு கூப்பிட்டதுன்னு சொல்லுவீங்க, அதனால சங்க ஊதிட்டு நான் கிளம்புறேன்.]]]

சரி.. சரி.. கூல் டவுன்.. அடுத்த பதிவு போடும்போது இதை மனசுல வைச்சுக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சசிகுமார் said...
நான் தப்பிதேண்டா சாமி. கோடாரி கதைதான் ஹைலைட்]]]

கோடாரி கதையா..? புரியலண்ணே..!

Jackiesekar said...

தலைவரே எப்படி இந்த மாதிரி படத்தை தேடி போய் பார்க்கிறீங்க...

Anonymous said...

http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_16.html

உண்மைத்தமிழன் said...

[[[ஜாக்கி சேகர் said...
தலைவரே எப்படி இந்த மாதிரி படத்தை தேடி போய் பார்க்கிறீங்க...]]]

வேற படம் இல்லையே..?

உண்மைத்தமிழன் said...

[[[d said...
http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_16.html]]]

தகவலுக்கு மிக்க நன்றிங்கண்ணா..! இதைத் துவக்கியது நீங்கள்தான் என்றால் எனது வாழ்த்துக்கள்.. வருக.. வருக..!

Anonymous said...

//எப்படி எடுத்தாலும் நம்மாளுக பார்ப்பாங்கன்னு முடிவே பண்ணிட்டாங்கப்பா..!//

நம்மாளுக பார்க்கிறாங்களோ இல்லையோ நீங்க கட்டாயம் இந்த மாதிரி படங்களை பார்த்துடுவீங்க :)

ஜெட்லி... said...

இன்னும் நிறைய படம் போட்டு இருந்தா...புண்ணியமா போயிருக்கும்....

பித்தன் said...

//போய்ப் பொழைப்பைப் பாருங்க..! போங்க..!//

Nalla manam vaazhga. aamaa eppadi thedippoyi aappula ukkaaruveengalaa illa appu thaanaa varuthaa....

எஸ்.கே said...

இந்த படம் டிரெய்லரே நல்லாயில்லை. ஆனால் முதல் படத்தில் முதலாவதா இருக்காரே அவர் மானாட மயிலாடயில் (அவரும் காதல் சுகுமாரும் அதில் காமெடி செய்தார்கள் கொஞ்ச நாளைக்கு) தான் ஒரு படத்தில் ஹீரோவ நடிக்கறதாகவும் அது ரொம்ப நல்லாயிருக்கும்னும் சொன்னாரு :-)

உண்மைத்தமிழன் said...

[[[பரிதி நிலவன் said...

//எப்படி எடுத்தாலும் நம்மாளுக பார்ப்பாங்கன்னு முடிவே பண்ணிட்டாங்கப்பா..!//

நம்மாளுக பார்க்கிறாங்களோ இல்லையோ நீங்க கட்டாயம் இந்த மாதிரி படங்களை பார்த்துடுவீங்க :)]]]

ஹி.. ஹி.. ஹி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...
இன்னும் நிறைய படம் போட்டு இருந்தா. புண்ணியமா போயிருக்கும்.]]]

தேடினேன். கிடைக்கலை..! ம்.. இது போதாதா உங்களுக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...

//போய்ப் பொழைப்பைப் பாருங்க..! போங்க..!//

Nalla manam vaazhga. aamaa eppadi thedippoyi aappula ukkaaruveengalaa illa appu thaanaa varuthaa....]]]

ஆப்பு தானா என்னைத் தேடி வருது பித்தன்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...

இந்த படம் டிரெய்லரே நல்லாயில்லை. ஆனால் முதல் படத்தில் முதலாவதா இருக்காரே அவர் மானாட மயிலாடயில் (அவரும் காதல் சுகுமாரும் அதில் காமெடி செய்தார்கள் கொஞ்ச நாளைக்கு) தான் ஒரு படத்தில் ஹீரோவ நடிக்கறதாகவும் அது ரொம்ப நல்லாயிருக்கும்னும் சொன்னாரு :-)]]]

நல்லாவே நடிச்சிருக்காரு..!

காலப் பறவை said...

செம நக்கல் அண்ணே.....

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...
செம நக்கல் அண்ணே.....]]]

இதுவா..? கிண்டல் பண்றீங்களா..?

Anonymous said...

பெண்களின் அடிப்படை குணங்கள்

http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_17.html

pichaikaaran said...

"இதய தெய்வம் ஷகிலா, பத்மா அய்யங்கார் ரெண்டு பேரும் வந்து தலையைக் காட்டிட்டு ஒரே சீன்ல ஓடிர்றாங்க."


தலைய காட்றாங்களா? அட்டே,, நாம் எதிர்பார்த்த்து வேறு ஒன்றாயிற்றே!!

உண்மைத்தமிழன் said...

[[[d said...

பெண்களின் அடிப்படை குணங்கள்

http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_17.html]]]

-))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"இதய தெய்வம் ஷகிலா, பத்மா அய்யங்கார் ரெண்டு பேரும் வந்து தலையைக் காட்டிட்டு ஒரே சீன்ல ஓடிர்றாங்க."

தலைய காட்றாங்களா? அட்டே,, நாம் எதிர்பார்த்த்து வேறு ஒன்றாயிற்றே!!]]]

"அது" இதுல இல்லை..!

R.Gopi said...

தலீவா.........

இந்த படம் பார்க்க போறவங்களுக்கு படம் பார்க்கறதுக்கு முன்னாடியே டிக்கெட்டோட சேர்த்து “கோடாரி தைலம்” தர்றாங்களாமே!!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
தலீவா, இந்த படம் பார்க்க போறவங்களுக்கு படம் பார்க்கறதுக்கு முன்னாடியே டிக்கெட்டோட சேர்த்து “கோடாரி தைலம்” தர்றாங்களாமே!!]]]

நான் போன தியேட்டர்ல கொடுக்கலை கோபி.. இப்பக் கொடுத்தாலும் தப்பில்லைன்னுதான் சொல்லுவேன்..!

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com