பெட்ரோல் விலை உயர்வில் புதைந்துள்ள மர்மங்கள்..!


26-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வார துக்ளக்(29-09-2010) பத்திரிகையில் வெளியாகியிருக்கும் இரண்டு கட்டுரைகள் நாம் கண்டிபபாக அறிந்து கொள்ள வேண்டியவையாக உள்ளன. அதில் ஒரு கட்டுரையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தின் பின்னணியில் உள்ள பல மர்மமான விஷயங்கள் விரிவாக அலசப்பட்டிருக்கின்றன.

அதனை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அந்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யின் விலை உயர்வையே காரணமாக அரசு காட்டுகிறது. ஆனால் முழுமையான காரணம் அதுவல்ல.

 

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையில், அரசு விதித்த வரிகளே பாதிக்கும் அதிகமாகும். வரி வசூல் மூலம் நிதி திரட்ட உகந்த ஒன்றாக பெட்ரோலை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

எல்லா நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் விலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக வரிகளுக்கே செல்கிறது. கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி, மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம், துறைமுகக் கட்டணம், மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி(தமிழ்நாட்டில் இது 30 சதவிகிதம்) கல்வி வரி, மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகளின் மூலமே பெட்ரோலின் விலை பூதாகாரமாக உயர்கிறது.

 

அரசு தனது சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வரி விதிப்பின் மூலம்தான் வருவாய் திரட்ட முடியும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. என்ன நோக்கங்களுக்காக வரி விதிப்பின் மூலம் வருவாய் திரட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றனவா?

உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. 2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.

அதே 2009-2010-ல் பெட்ரோலிய நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன்(ONGC) ரூ.16,767 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.10,220 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1301 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1,837 கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.2,610 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த நிறுவனங்களின் ஒட்டு மொத்த லாபம் ரூ.32,735 கோடி ரூபாய். இது இறுதியில் அறிவிக்கப்பட்ட லாபம். ஆனால் உண்மையான லாபம் இதைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. அந்தத் தொகை எங்கே போயிற்று..?

எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் ஆடம்பரமான செலவுகளைச் செய்கின்றன. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் வேறு எந்தத் துறையிலும் கற்பனை செய்ய முடியாதது. 

உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.

எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.

மக்களுக்கு மான்ய விலையில் தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள். அரசுக்கு நிதிச் சுமை என்கிறார்கள். கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களின் மீது சுத்திகரிப்புச்செலவு, அவற்றின் மதிப்புக்குரிய வகையில் பிரித்து, மதிப்புக் கூட்டப்படுகிறதா..?

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..?

 

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..!?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 5,515 கோடி ரூபாயை மான்யமாகத் தந்திருப்பதாக அறிவிக்கிறார்.

எண்ணெய் விநியோக நிறுவனங்கள் 3,661 கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ள காலாண்டில் எதற்காக மான்யம் தரப்பட வேண்டும்..? கூடுதலான விலையில் விற்றிருக்கும் எண்ணெயை குறைந்த விலையில் அந்த நிறுவனங்கள் விற்றனவாம். அதனால் அந்த இழப்பை ஈடுகட்ட ONGC மான்யம் தருகிறதாம்.

விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?

மான்யம் என்பது என்ன..? அதிக விலைக்கு ஒரு பொருளை கொள்முதல் செய்து, அதைக் குறைந்த விலைக்கு மக்களுக்கு விநியோகம் செய்யும்போது ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்றுக் கொள்வதுதானே மான்யம்..

உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரிசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட தெளிவான முறை பெட்ரோலியப் பொருட்களின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், இவ்விஷயத்தில் மான்யம் என்று எதையும் அரசு தரவில்லை. மாறாக, வரிகள் என்ற பெயரால் லாபம் மட்டுமே அடைகிறது. அதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில், உண்மை நிலை என்ன என்பதை நிபுணர்கள் ஆராய்வது அவசியம்.

பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுப்பாட்டை இப்போது அரசு நீக்கிவிட்டது. அதனால் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இனி பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்கிறது அரசு. கச்சா எண்ணெய் விலை ஏறினால், பெட்ரோல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று இதற்கு அர்த்தம்.

ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.

- எஸ்.புஷ்பவனம்
செயலாளர்
தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு
திருச்சி.

நன்றி : துக்ளக் இதழ் - 29-09-2010

30 comments:

அபி அப்பா said...

\\உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.
\\

கொஞ்சம் விம் ப்ளீஸ்??? இதை துக்ளக் எழுதி இருந்தாலும் சரி நீங்க துக்ளக்குக்கு எழுதியிருந்தாலும் சரி நைசா ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு எழுதியிருந்தாலும் சரி... கொஞ்சம் விம் போட்டு விளக்க முடியுமா?

இதிலிருக்கும் தொனி 1 ரூபாய் அரிசி திட்டம் பத்தி ஒரு தவறான தகவலாக பரப்பப்படும் விதத்தில் இருக்குன்னு நினைக்கிறேன்!

தீப்பெட்டி said...

நல்ல வேலை செஞ்சீங்க பாஸ்..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

நாளைக்கு கமெண்ட் போடுறேன் ...,ரொம்ப விஷயத்துல விளையாடுது நம்ம மாநில அரசு ..சொல்றேன் ..,

என்னை சார் ..என்று ஏக வசனத்தில் அழைக்க வேண்டாம் தமிழன் ...,சும்மா வாட போடா என்று சொல்லவும்

R. Gopi said...

தலைவரே, நீங்க கொடுத்திருப்பது எல்லாம் ஆண்டு சம்பளமா இல்ல ஆயுள் சம்பளமா? நான் வேற மாதிரி இல்ல படிச்சேன்?

http://www.iocl.com/Talktous/RTIIOCManual.aspx#10

\\உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.\\

இந்தக் கணக்கு எடுபடாது தலைவரே. ஒங்ககிட்ட இருந்து ஒரு எட்டு லட்சம் வருமான வரி அரசாங்கம் வசூல் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அரசு உங்களுக்கே அதை செலவு செய்ய வேண்டுமா அல்லது வருமான வரி இலாகாவிற்கு செலவு செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா? அப்புறம் ராணுவ செலவு யார் செய்றது? பார்லிமென்ட் நடத்துற செலவ யார் செய்றது?

\\விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?\\

நம் நாட்டில் APM என்று சொல்லப்படுகிற administered pricing mechanism என்ற முறையில் தான் பெட்ரோல், டீஸல் விலைகள் இதுவரை நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளன. மேலதிகத் தகவலுக்கு இங்கே சென்று பார்க்கவும்.

http://www.petroleum.nic.in/apppric.htm

அந்த மானியமும் பணமாகக் கொடுக்கப்படுவதில்லை. இந்திய அரசாங்கத்தின் கடன் பாத்திரங்களாக வழங்கப்படுகின்றன. எண்ணெய் நிறுவனகள் அதை சந்தையில் விற்றுப் பணமாக எடுத்துக் கொள்கின்றன.

\\ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.\\

இதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. வரி வசூலிக்காமல் அரசு இயங்க முடியாது. அல்லது கடன் வாங்க வேண்டும். அதற்கு வட்டி கட்ட வேண்டும். அதற்கு மறுபடியும் கடன் வாங்க வேண்டும் அல்லது வரி விதிக்க வேண்டும்.

எஸ்.கே said...

பெட்ரோல் மட்டுமில்லாம எல்லா பெட்ரோலியப் பொருட்களும் விலை ஏறிடுச்சு! அரசில் இருப்பவர்கள் ஏன் இப்படி செய்கிறார்களோ!

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...

\\உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரிசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.\\

கொஞ்சம் விம் ப்ளீஸ்??? இதை துக்ளக் எழுதி இருந்தாலும் சரி நீங்க துக்ளக்குக்கு எழுதியிருந்தாலும் சரி நைசா ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எழுதியிருந்தாலும் சரி. கொஞ்சம் விம் போட்டு விளக்க முடியுமா?

இதிலிருக்கும் தொனி 1 ரூபாய் அரிசி திட்டம் பத்தி ஒரு தவறான தகவலாக பரப்பப்படும் விதத்தில் இருக்குன்னு நினைக்கிறேன்!]]]

என்ன தவறு இருக்கிறது இதில். மத்திய அரசின் தொகுப்பில் இருந்து அரிசியை மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது.

நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து அதனை அரவை செய்து அரிசியாக்கி குடோனுக்கு கொண்டு வந்து வைக்கின்றவரையில் ஆகின்ற செலவு 12 ரூபாய். இதனை மாநில அரசுகளுக்கு 9 ரூபாயை தள்ளுபடி செய்து 3 ரூபாய்க்கு மத்திய அரசு கொடுக்கிறது.

இப்படி 3 ரூபாய்க்கு வாங்கிய அரிசியில் 2 ரூபாயை தள்ளுபடி செய்து 1 ரூபாய்க்கு மக்களுக்கு வழங்குகிறது மாநில அரசு.

இதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். இவர்கள் மான்யம், தள்ளுபடி என்று சொன்னாலும் இதில் நஷ்டமாகும் தொகை மக்களுடைய பணம்தான்.. நஷ்டமானாலும் அந்தத் தொகை போய்ச் சேரும் இடம் பாதி இடைத் தரகர்களுக்கும், பாதி தொழிலாளி மக்களுக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...
நல்ல வேலை செஞ்சீங்க பாஸ்..]]]

அப்படியா? நன்றிங்க பாஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[பனங்காட்டு நரி said...
நாளைக்கு கமெண்ட் போடுறேன். ரொம்ப விஷயத்துல விளையாடுது நம்ம மாநில அரசு. சொல்றேன்.

என்னை சார் என்று ஏக வசனத்தில் அழைக்க வேண்டாம் தமிழன். சும்மா வாட போடா என்று சொல்லவும்]]]

கமெண்ட் போடுறதுக்கே ஒரு நாளா..? ம்.. காத்திருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Gopi Ramamoorthy said...

தலைவரே, நீங்க கொடுத்திருப்பது எல்லாம் ஆண்டு சம்பளமா இல்ல ஆயுள் சம்பளமா? நான் வேற மாதிரி இல்ல படிச்சேன்?

http://www.iocl.com/Talktous/RTIIOCManual.aspx#10]]]

எனக்கொன்றும் தெரியாது அப்பனே.. அந்த நண்பர் எழுதியிருப்பதைத்தான் டைப்பியுள்ளேன்..! நம்பித்தான் ஆக வேண்டும்..!

\\உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.\\

இந்தக் கணக்கு எடுபடாது தலைவரே. ஒங்ககிட்ட இருந்து ஒரு எட்டு லட்சம் வருமான வரி அரசாங்கம் வசூல் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அரசு உங்களுக்கே அதை செலவு செய்ய வேண்டுமா அல்லது வருமான வரி இலாகாவிற்கு செலவு செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா? அப்புறம் ராணுவ செலவு யார் செய்றது? பார்லிமென்ட் நடத்துற செலவ யார் செய்றது?]]]

எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சி நிதி என்று சொல்லித்தான் நிதியை கலெக்ட் செய்திருக்கிறார்கள். பின்பு அந்தப் பணத்தைத் தராமல் வைத்திருந்தால் என்ன அர்த்தம்..?

இப்போது உங்கள் வார்டு பகுதியில் கக்கூஸ் கட்ட என்று 2 லட்சம் ரூபாயை மாமன்றத்தில் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கக்கூஸ் கட்டும்போது இதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வைத்து மாமன்ற உறுப்பினர்கள் இன்பச் சுற்றுலா செல்வதாகத் தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?

\\விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?\\

நம் நாட்டில் APM என்று சொல்லப்படுகிற administered pricing mechanism என்ற முறையில்தான் பெட்ரோல், டீஸல் விலைகள் இதுவரை நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளன. மேலதிகத் தகவலுக்கு இங்கே சென்று பார்க்கவும்.

http://www.petroleum.nic.in/apppric.htm

அந்த மானியமும் பணமாகக் கொடுக்கப்படுவதில்லை. இந்திய அரசாங்கத்தின் கடன் பாத்திரங்களாக வழங்கப்படுகின்றன. எண்ணெய் நிறுவனகள் அதை சந்தையில் விற்றுப் பணமாக எடுத்துக் கொள்கின்றன.]]]

எப்படியோ காசை அடிக்கத்தான செய்றானுங்க..?

\\ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.\\

இதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. வரி வசூலிக்காமல் அரசு இயங்க முடியாது. அல்லது கடன் வாங்க வேண்டும். அதற்கு வட்டி கட்ட வேண்டும். அதற்கு மறுபடியும் கடன் வாங்க வேண்டும் அல்லது வரி விதிக்க வேண்டும்.]]]

இதையெல்லாம் திறம்பட செய்து முடிக்கும் அளவுக்குத் திறமைசாலியான அரசியல்வியாதிகள் யாரும் இங்கே இல்லை என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்..!

பிரபல பதிவர் said...

தமிழா.... எந்திரன் டிக்கெட் முன்பதிவு செஞ்சீங்களா.... இல்லையா

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
பெட்ரோல் மட்டுமில்லாம எல்லா பெட்ரோலியப் பொருட்களும் விலை ஏறிடுச்சு! அரசில் இருப்பவர்கள் ஏன் இப்படி செய்கிறார்களோ!]]]

ஏன் இப்படி கொள்ளையடிக்கிறார்களோ என்று கேளுங்கள் எஸ்.கே.

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...
தமிழா.... எந்திரன் டிக்கெட் முன் பதிவு செஞ்சீங்களா.... இல்லையா]]]

இதுவரைக்கும் இல்லண்ணே.. கிடைக்கலையே..?

ராஜ நடராஜன் said...

//பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்//

ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ10ன்னு 77 லிட்டர் முழுசா அடைக்கிறேன்.லூப்ரிகேன் ஆயில் ஒரு லிட்டருக்கு சுமார் ரூ200ன்னு 6 லிட்டர்,அப்புறம் ஆயில் பில்டர் ரூ 260.இந்த கணக்குல எத்தனை ரூபாய் அங்கே வரியாகப் போகிறது என்று கணக்கு பார்த்து சொல்லுங்க!

pichaikaaran said...

"சும்மா வாட போடா என்று சொல்லவும்"

என்னை வாடா என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்... ஆனால் போடா என சொல்லிவிட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்..

கட்டுரை நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனால் அதை அப்படியே தரமால், உங்கள் கருத்தையும் கலந்து இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்..

அஹோரி said...

அரசுக்கு நல்ல கொள்கைகள் "மெயின் கேட்" மாதிரி

ஊர அடிச்சி ஓலைல போடுற கொள்கைகள் "சைடு கேட்" மாதிரி .

கண்ணுங்களா இப்ப சொல்லுங்க .. அரசு எந்த "கேட்" வழியா போகுது ?

உண்மைத்தமிழன் said...

ராஜ நடராஜன் said...

//பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்//

[[[ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ10ன்னு 77 லிட்டர் முழுசா அடைக்கிறேன். லூப்ரிகேன் ஆயில் ஒரு லிட்டருக்கு சுமார் ரூ200ன்னு 6 லிட்டர், அப்புறம் ஆயில் பில்டர் ரூ 260. இந்த கணக்குல எத்தனை ரூபாய் அங்கே வரியாகப் போகிறது என்று கணக்கு பார்த்து சொல்லுங்க!]]]

ஏற்கெனவே வயிறு எரியுது. இதுல இன்னும் கொஞ்சம் பெட்ரோலை ஊத்துறீங்களே சாமி..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
"சும்மா வாட போடா என்று சொல்லவும்"

என்னை வாடா என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் போடா என சொல்லிவிட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.]]]

ஹா.. ஹா.. பார்வையாளன் ஸார்.. உங்களைப் போய் சொல்லுவேனா..?

[[[கட்டுரை நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனால் அதை அப்படியே தரமால், உங்கள் கருத்தையும் கலந்து இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்.]]]

எழுதலாம். ஆனால் மூலத்தை எழுதியவருக்கான கிரெடிட் கிடைக்காமல் போகும் சாத்தியக்கூறுகள் உண்டு. அதனால்தான்..!

காலப் பறவை said...

அருமையான பகிர்வு தல

மாலோலன் said...

""""8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்"""

45 லட்சத்து 99 ஆயிரத்து 234 ரூபாயா? அப்ப மாதத்திற்கு 3.75 லட்சமா? ஐ.டி கம்பேனி கூட அவளவு தர்மாட்டாங்கணே.புள்ளி விவரம் சரியா ? பாத்து சொல்லுங்கண்ணே!

Unknown said...

The monthly salary table in the link http://www.iocl.com/Talktous/RTIIOCManual.aspx#10 does not include da, lta, medical etc., They mentioned about this in the note below.

Look at this page for details on entry level engineer salary at IOCL http://www.iocl.com/PeopleCareers/Recruitment.aspx

If an entry level can about 7.6 lakhs per annum, I think 45 lakhs may be possible (including all benefits).

அபி அப்பா said...

உங்க விளக்கத்துக்கு நன்னி சரவணா! ஆனா நான் கேட்கும் கேள்விக்கு இப்ப வேண்டாம் விசாரிச்சு பதில் சொன்னா போதும்.

1. தமிழ்நாட்டில் விளையும் நெல் எல்லாம் நீங்க சொன்ன மாதிரி மத்திய அரசு தான் கொள்முதல் செய்யுதா? அப்படின்னா தம்மிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வைத்திருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மாதிரி தமிழ்நாட்டில் எத்தனை இடத்தில் மத்திய அரசு வச்சு கொள்முதல் செய்றாங்க?

2. அதை எங்கே பாதுகாத்து வைத்து எங்கே அரைத்து அரிசியாக்கி எங்கே பாதுகாத்து வைத்து இருக்காங்க? (இந்திய உணவு கழகம் தமிழ்நாட்டில் இருக்கே தவிர எப்படி செயல் படுதுன்னு தெரியுமா)

3. தமிழ்நாட்டில் அரிசி மான்யம் மத்திய அரசு எத்தனை கொடுக்குது? நிஇங்க சொன்ன கணக்கு சரியா? அது போல மத்திய அரசுக்கு தமிழ் நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு எத்தனை மெட்ரிக் டன் அரிசி போகுது?

4. தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் அரிசி தவிர ரேஷனைல் போடும் மத்த அரிசி விலை எல்லாம் என்ன தெரியுமா? உதாரணத்துக்கு போலீஸ் ரேஷன் அரிசி விலை எல்லாம் என்ன தெரியுமா?

இதுக்கு எல்லாம் பதில் எனக்கு சொல்ல வேண்டாம். நீங்க தெரிஞ்சு கிட்டு சும்மா கதை விடாம மத்தவங்களை குழப்பாம இருங்க தம்பி:-)

உண்மைத்தமிழன் said...

[[[அஹோரி said...

அரசுக்கு நல்ல கொள்கைகள் "மெயின் கேட்" மாதிரி

ஊர அடிச்சி ஓலைல போடுற கொள்கைகள் "சைடு கேட்" மாதிரி .

கண்ணுங்களா இப்ப சொல்லுங்க... அரசு எந்த "கேட்" வழியா போகுது?]]]

சைடு கேட்டுதான் தலீவா..! நேர் வழில போறதுக்குத்தான் இந்த அரசியல்வியாதிகளுக்குத் தெரியவே தெரியாதே..?!

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...
அருமையான பகிர்வு தல.]]]

நன்றி நண்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[மாலோலன் said...

""""8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்"""

45 லட்சத்து 99 ஆயிரத்து 234 ரூபாயா? அப்ப மாதத்திற்கு 3.75 லட்சமா? ஐ.டி கம்பேனி கூட அவளவு தர்மாட்டாங்கணே.புள்ளி விவரம் சரியா ? பாத்து சொல்லுங்கண்ணே!]]]

மறுபடியும் பார்த்தேண்ணே.. இதேதான் போட்டிருக்கு..! இத்தனை வருஷ சர்வீஸ்ன்றதால கூடிருக்கும்னு சொல்றாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[tamil said...

The monthly salary table in the link http://www.iocl.com/Talktous/RTIIOCManual.aspx#10 does not include da, lta, medical etc., They mentioned about this in the note below.

Look at this page for details on entry level engineer salary at IOCL http://www.iocl.com/PeopleCareers/Recruitment.aspx

If an entry level can about 7.6 lakhs per annum, I think 45 lakhs may be possible (including all benefits).]]]

நன்றி தமிழ்.. நமக்கு ஒரு சொந்தமும் அந்த ஆபீஸ்ல வேலை பார்க்காததால விசாரிக்க முடியலை..!

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...

உங்க விளக்கத்துக்கு நன்னி சரவணா! ஆனா நான் கேட்கும் கேள்விக்கு இப்ப வேண்டாம் விசாரிச்சு பதில் சொன்னா போதும்.

1. தமிழ்நாட்டில் விளையும் நெல் எல்லாம் நீங்க சொன்ன மாதிரி மத்திய அரசுதான் கொள்முதல் செய்யுதா? அப்படின்னா தம்மிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வைத்திருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மாதிரி தமிழ்நாட்டில் எத்தனை இடத்தில் மத்திய அரசு வச்சு கொள்முதல் செய்றாங்க?

2. அதை எங்கே பாதுகாத்து வைத்து எங்கே அரைத்து அரிசியாக்கி எங்கே பாதுகாத்து வைத்து இருக்காங்க? (இந்திய உணவு கழகம் தமிழ்நாட்டில் இருக்கே தவிர எப்படி செயல்படுதுன்னு தெரியுமா)

3. தமிழ்நாட்டில் அரிசி மான்யம் மத்திய அரசு எத்தனை கொடுக்குது? இங்க சொன்ன கணக்கு சரியா? அது போல மத்திய அரசுக்கு தமிழ் நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு எத்தனை மெட்ரிக் டன் அரிசி போகுது?

4. தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் அரிசி தவிர ரேஷனைல் போடும் மத்த அரிசி விலை எல்லாம் என்ன தெரியுமா? உதாரணத்துக்கு போலீஸ் ரேஷன் அரிசி விலை எல்லாம் என்ன தெரியுமா?

இதுக்கு எல்லாம் பதில் எனக்கு சொல்ல வேண்டாம். நீங்க தெரிஞ்சுகிட்டு சும்மா கதை விடாம மத்தவங்களை குழப்பாம இருங்க தம்பி:-)]]]

தகவல் உரிமை பெறும் சட்டத்தில் இதற்கெல்லாம் பதில் கேட்டு மூணு மாசத்துல பதில் சொல்றேன் பிரதர்..!

K.R.அதியமான் said...

//உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்///

நம்ப முடியல. நிருபியுங்களேன்.

உண்மைத்தமிழன் said...

[[[K.R.அதியமான் said...

//உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்///

நம்ப முடியல. நிருபியுங்களேன்.]]]

என்னாலேயும்தான் நம்ப முடியலை. டைப்பிங் மிஸ்டேக்கோன்னு திருப்பித் திருப்பி துக்ளக்கை பார்த்தேன். கரெக்ட்டாத்தான் இருக்கு..!

எதுக்கும் இங்க போய் பார்த்துட்டு நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்க. வருதான்னு..? http://www.iocl.com/PeopleCareers/Recruitment.aspx

abeer ahmed said...

See who owns superlocal.ch or any other website:
http://whois.domaintasks.com/superlocal.ch

abeer ahmed said...

See who owns ittelligence.co.za or any other website.