துரோகி - சினிமா விமர்சனம்

30-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'நண்பேன்டா' என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி 'பாஸ் என்கிற பாஸ்கரன்' சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்க.. அதே வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதைத்தான் இதில் சொல்லியிருக்கிறார்கள்.


சிறு வயதில் நெருங்கிய நண்பனாக இருந்தும் தனக்கு எதிராக பேசிவிட்டானே என்ற ஒரு காரணத்திற்காக வன்மம் கொண்டலையும் இரண்டு நண்பர்கள் விஷ்ணுவும், ஸ்ரீகாந்தும். பெரியவர்களான பின்பும் ஆளுக்கொரு ஆள், அம்பு, சேனை படையுடன் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தாதா குரூப்புகள் இவர்களை மோத வைத்து மூழ்கடிக்கப் பார்க்க.. இறுதியில் பிழைக்கிறார்களா அல்லது இது போன்ற படங்களின் வழக்கமான பார்முலா படி இறைவனடி சேர்கிறார்களா என்பதுதான் கதை..


இதுவரையில் தமிழ்ச் சினிமாவில் பங்களித்திருக்கும் பெண் இயக்குநர்களில் கமர்ஷியலை முழுமையாகக் கொடுத்திருப்பவர் இத்திரைப்படத்தின் இயக்குநர் சுதாதான். மணிரத்னத்தின் சீடராம். படம் முழுகத் தெரிகிறது. குறிப்பாக வசனத்திலும், ஒலிப்பதிவிலும்.. திருந்தவே மாட்டார்கள் போலிருக்கிறது அந்த டீம்.

திரைக்கதை மிக சுவாரஸ்யம்.. சிறு வயதில் நடந்தவைகளை முதலிலேயே காட்டிவிடுவதால் பிற்காலத்திய மோதலில் நாமும் தூசி பறக்க அவர்களுடன் ஓட முடிகிறது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் ட்விஸ்ட்டுகள்தான் திரைக்கதையின் பலமே..


பூஜாவின் கதையும், அந்தப் பள்ளிக்கூடத்தின் காட்சிகளும் வெகு இயல்பாக, அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படியொரு டீச்சரெல்லாம் எனக்குக் கிடைச்சிருந்தா, நான் ஒழுங்கா படிச்சு இந்நேரம் எங்கயோ போயிருந்திருப்பேன்.

இப்போதெல்லாம் சிறு வயதுப் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக இமாஜின் செய்தோ, வயதை மீறிய பேச்சை அவர்களை பேச வைப்பதும் தமிழ்ச் சினிமாவுக்கு வழக்கமாகிவிட்டது. அது போலவே இதிலும்.. சின்ன வயது விஷ்ணு பேசுகின்ற பேச்சு ஒரு உதாரணம்.. பிளேடை வைத்து ஆளையே கொலை செய்யும் அளவுக்குப் போவது கொஞ்சம் டூ மச்சான திரைக்கதைதான். பிற்காலத்திய சண்டைக்கு வலுவாக்க வேண்டி வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

அம்மணமாக பள்ளியை ஒரு ரவுண்டு ஓடி வந்தால் பேசுவதாக சின்ன வயது விஷ்ணு சொல்ல.. இதை நம்பி ஓடிவந்துவிட்டு, பின்பு அவன் வார்த்தை மீறியவுடன் சின்ன வயது ஸ்ரீகாந்தின் எக்ஸ்பிரஷனும், அதைத் தொடர்ந்து தியாகராஜனுடன் போய்ச் சேரும் காட்சிகளும் ரொம்பவே ஸ்பீடு. ஆனாலும் இந்தக் காலத்திலேயும் இப்படி பட்டப் பகல்ல கொலை செஞ்சுட்டு ஹாயா வீட்ல இருக்கிற மாதிரி காட்டுறது அவ்வளவு நல்லாயில்லை.

ஸ்ரீகாந்த் இதுவரையில் சாக்லேட் பையனாக கஷ்டப்படாமல் நடித்திருந்தவர் இந்தப் படத்தில்தான் கொஞ்சம் உயிரைக் கொடுத்து நடித்திருப்பதுபோல் தெரிகிறது. விஷ்ணுவை வெறுப்பேற்ற அவனது தங்கையுடன் உறவில் இருப்பதைப் போல் செல்போனில் ஆக்ட்டிங் கொடுப்பது உவ்வே ரகம் என்றாலும், அந்தக் காட்சியில் இருக்கும் வெறுப்புணர்வு டபுள் ஓகே.

யு.பி.எஸ்.சி. இண்டர்வியூ அறைக்குள் நுழையும் முன் இது மாதிரியான சோதனை உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? அத்தோடு அந்த இண்டர்வியூவில் வைத்திருக்கும் ட்விஸ்ட்டு.. படத்தின் இறுதியில்தான் உடைக்கப்படுகிறது. ஒரு லாஜிக் எர்ரர்.. இன்ஸ்பெக்டராக இருந்தவர், யு.பி.எஸ்.சி. சேர்மனாக வர முடியுமா..? அவரே தனது பழைய பகையை வைத்து "அவனை கொலை செய்துவிட்டு வா.." என்று சொல்வதும், இதை விஷ்ணு ஏற்றுக் கொள்வதும் என்னமோ மாதிரியிருக்கு.

இதுதான் இப்படியென்றால் "கையைப் பிடிச்சு இழுத்தியா..?" ஸ்டைலில், "என் இடுப்பை பார்த்தியா...?" என்று நட்ட நடு ரோட்டில் அம்மா பூனம் பஜ்வா சவுண்டு விடுவதும் ஓவரப்பா.. அவருடைய திருமணத்தின்போது சின்ன வயது விஷ்ணு, குணா ஸ்டைலில் கியூவில் நின்று பூனத்தின் கன்னத்தில் வைக்கின்ற முத்தமும், "புள்ளை பொறந்தா அழகா இருக்கும்" என்ற சின்ன வயதுப் பேச்சும் படத்தின் இயக்குநர் ஒரு பெண்மணி என்பதையே சுத்தமாக மறக்கடித்துவிட்டது.

போதாக்குறைக்கு படத்தின் பல இடங்களில் வசனத்தில் சென்சார் போர்டு வைத்திருக்கும் கத்திரியைப் பார்த்தால் சுதா, பல ஆண் இயக்குநர்களுக்கு சவால் விட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

சின்ன அசின் என்று பூர்ணாவை எதற்காகச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் பூர்ணா சின்ன அசின்தான் என்பதை இந்தப் படத்தைப் பார்த்தாவது ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவ்வளவு வளர்சிதை மாற்றம், உடையிலும், பேச்சிலும், ஆக்ட்டிங்கிலும்.. அசத்தல்.. ஏதோ ஒரு மாற்றத்தை விரும்பும் இயக்குநரிடம்தான் இது போன்று செய்ய முடியும்.. அசினின் மேனரிஸம் ஒத்துப் போகுமளவுக்கு பூர்ணாவின் நடிப்பு இருப்பது அவர் செய்த பாக்கியம்.. நாம் செய்த புண்ணியம்..


இன்னொரு கதாநாயகி பூனம் பஜ்வா. அழகாக இருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் அம்மா பஜ்வா தனது இடுப்பைக் காட்டுவதற்காக நொடியில் அவிழ்ந்துவிடும் அளவுக்கு சேலையை இறக்கிக் கட்டி கொஞ்சம் கிக்கை ஏற்றியிருக்கிறார். வாழ்க இயக்குநர் சுதா. பெண் கேட்க வந்த இடத்தில் மாப்பிள்ளையை பார்த்து அம்மா ஜொள்ளு விடுவதையெல்லாம் பார்த்தால், தமிழ்ச் சினிமா ரொம்பவே வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது என்று ஒத்துக் கொள்ள வேண்டும்.


தாதாவாக மம்பட்டியான் தியாகராஜன். வழக்கமான எல்லா தாதாவுக்கும் இருப்பதைப் போல இவருக்கென்று தனி ஸ்டைல் இல்லை என்பதால் குறிப்பிடும்படி எதுவும் சொல்ல முடியவில்லை. ஸ்ரீகாந்துடன் பேசியபடியே மொட்டை மாடிக்கு வந்த பின்பு காந்துக்கு கார் வாங்கிக் கொடுத்திருப்பதை குறிப்பால் உணர்த்தும்போது அதே ஆக்ஷன். இறுதியில் ஸ்ரீகாந்தை கொல்வதற்காக துப்பாக்கியைத் தூக்கும்போதும் அதே இறுக்கம்தான். ஆமாம். இவர் என்றைக்கு வேறு விதமாக நடித்திருக்கிறார்? 'கொம்பேறி மூக்கனில்' 14 ரீலிலும் இப்படியேதான் வருவார். ஆனாலும் படம் ஓடியதே..!


விஷ்ணுவின் தோற்றம் தாதா போல் இருந்தாலும் இடையிலேயே அவர் ஐ.பி.எஸ். ஆபிஸராகி யமஹா பைக்கில் வந்து செல்வதுமாக காட்சியை வைத்து கொஞ்சம் சிதைத்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்துக்கு இந்த வேடத்தைக் கொடுத்துவிட்டு விஷ்ணுவிற்கு தாதா வேடத்தைக் கொடுத்திருக்கலாம். எத்தனையோ போலீஸ் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இதில்.. கொடுமை.. மற்றபடி நன்றாகவே நடித்திருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் வரும் அந்த தண்டவாளக் காட்சிகளும், அதைத் தொடர்ந்து வாய்ஸ் மைண்ட்டில் கதை நகர்த்திய போக்கும், உச்சக் கட்டக் காட்சிகளும் எதிர்பார்ப்பை வெகுவாகத் தூண்டியிருந்தது.

இத்தனை படுகொலைகள் செய்தும், லோக்கல் போலீஸ் ஆதரவுடன் தியாகராஜன் அண்ட் கோ தைரியமாக வெளியில் நடமாடுவது கொஞ்சம் சிரிப்பைத் தந்தாலும், எதிரணியுடன் சேர்த்து வைக்க போலீஸே அல்லாடுவதாக இன்றைய ராயபுரம் ஏரியாவை அப்படியே கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் சுதா.

காட்சிக்குக் காட்சி வேறு வேறு லொகேஷன்கள்.. குறிப்பான, ஷார்ட்டான, ஷார்ப்பான வசனங்கள்.. எதிர்பார்க்க வைத்திருக்கும் திரைக்கதை என்று நன்றாகவே கொண்டு சென்றிருக்கிறார் சுதா.

கிளைமாக்ஸில் "உன்னைத்தான் கொல்ல வந்தான்" என்று ஸ்ரீகாந்திடம் சொல்கின்ற காட்சியும், தொடர்ந்து தியாகராஜனை போட்டுத் தள்ளும் காட்சியும் ட்விஸ்ட்டுகளின் உச்கக்கட்டம்.. படம் நெடுகிலும் கேமிராமேன் கூடவே ஓடி வந்திருக்கிறார் போலும்..! நல்ல அருமையான பதிவு..! ஸ்ரீகாந்தும், விஷ்ணுவும் மோதிக் கொள்ளும் காட்சி படமாகக்ப்பட்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது..!

பெண் இயக்குநர் என்றாலென்ன..? நாங்களும் வைப்போம்ல்ல என்பதைப் போல ஒரு குத்துப் பாடலை வைத்து அசத்தியிருக்கிறார் சுதா. இயக்குநருக்கு தேங்க்ஸுங்கோ. இதையே மற்ற பெண் இயக்குநர்களும் பாலோ செய்தால் என்னைப் போன்ற அப்பாவி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். வாழ்க சுதா..


ஒரு நல்ல கமர்ஷியல் கம்மர்கட்டை கொடுத்திருக்கிறார். ஆனாலும் இன்றைய வழக்கப்படியான தமிழ்ச் சினிமா ரிசல்ட்டைத்தான் இது கொடுத்திருக்கிறது. எந்திரன் பீவரில் சுமாராகத் தப்பித்து இரண்டாவது வாரமும் கணிசமாக காசை சம்பாதித்திருக்கிறது.

ஆண் இயக்குநர்களுக்கு சுதா கொடுத்திருக்கும் சவால்தான் இந்தத் துரோகி..

ஒரு முறை பார்க்கலாம்..

புகைப்பட உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

36 comments:

நசரேயன் said...

மொத வெட்டா ?

நசரேயன் said...

// இப்படியொரு டீச்சரெல்லாம் எனக்குக் கிடைச்சிருந்தா, நான் ஒழுங்கா படிச்சு இந்நேரம் எங்கயோ போயிருந்திருப்பேன்.//

நானும் தான்

க ரா said...

அண்ணாச்சி எப்படி இருக்கீங்க :)

நசரேயன் said...

//The website at truetamilans.blogspot.com contains elements from the site ulavu.com//

சரி பண்ணுங்க .. இல்லைனா கூகிள் ஆண்டவர் மறுபடியும் உங்க கடைய ஆட்டையப் போட்டு விடுவாரு..

Please remove ulavu.com toolbar related code

Madurai pandi said...

some problem happening while openinng your site.... check tamilan....

பித்தன் said...

innaikku iruthe enthiran fever athigarichchiduchchi, naanum innaikku night show pogiren. Vimarsanam arumai aanaa naalaikku padam theatre'la irukkumaaaa

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
மொத வெட்டா?]]]

yes.. yes.. yes..

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//இப்படியொரு டீச்சரெல்லாம் எனக்குக் கிடைச்சிருந்தா, நான் ஒழுங்கா படிச்சு இந்நேரம் எங்கயோ போயிருந்திருப்பேன்.//

நானும்தான்]]]

ஹி.. ஹி.. எப்படிண்ணே நமக்குள்ள ஒத்துப் போகுது..! நீங்களும் என்னை மாதிரிதானா?

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...
அண்ணாச்சி எப்படி இருக்கீங்க :)]]]

ஏம்ப்பா அதுக்குத்தான் மெயில் வசதி இருக்குல்ல.. அதுல குசலம் விசாரிக்கலாம்ல்ல..

இதுக்குப் பேரு கமெண்ட்டா..?

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//The website at truetamilans.blogspot.com contains elements from the site ulavu.com//

சரி பண்ணுங்க. இல்லைனா கூகிள் ஆண்டவர் மறுபடியும் உங்க கடைய ஆட்டையப் போட்டு விடுவாரு..

Please remove ulavu.com toolbar related code]]]

போச்சுடா.. ஒண்ணொண்ணையும் தூக்கச் சொல்றீங்களே சாமி.. செஞ்சர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை பாண்டி said...
some problem happening while openinng your site. check tamilan.]]]

ஓகே.. ஓகே..

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
innaikku iruthe enthiran fever athigarichchiduchchi, naanum innaikku night show pogiren. Vimarsanam arumai aanaa naalaikku padam theatre'la irukkumaaaa.]]]

இருக்காது.. இன்னிக்கே பார்த்தாதான் உண்டு..!

எஸ்.கே said...

எப்படியும் கொஞ்ச நாளில் டிவியில் போட்ருவாங்கல்ல? அப்ப பார்த்துக்கலாம்!

Thomas Ruban said...

நடுநிலையான விமர்சனம் வாழ்த்துகள்.

//இப்படியொரு டீச்சரெல்லாம் எனக்குக் கிடைச்சிருந்தா, நான் ஒழுங்கா படிச்சு இந்நேரம் எங்கயோ போயிருந்திருப்பேன்.//
இப்ப மட்டும் என்னண்ணே... இந்த நல்ல நிலையில்யாவது வைத்திருப்பதற்கு முருகர்க்கு நன்றி சொல்லுங்க...

எந்திரன் டிக்கெட் சனிக்கிழமை ஷோது இருக்கு வேண்டுமானால் பெங்களூர் வாங்க.
உங்களுக்கு சிறப்புக் காட்சிக்கு அழைப்பு வரவில்லையா அண்ணே...என்னண்ணே பதிவுலக பவர காட்டுங்க...

நையாண்டி நைனா said...

/*இப்படியொரு டீச்சரெல்லாம் எனக்குக் கிடைச்சிருந்தா, நான் ஒழுங்கா படிச்சு இந்நேரம் எங்கயோ போயிருந்திருப்பேன்.*/

வேணாம்.... வேணாம்.... அடுத்த.... பகுதிக்கு போறேன்...

நையாண்டி நைனா said...

/*ஆனாலும் இந்தக் காலத்திலேயும் இப்படி பட்டப் பகல்ல கொலை செஞ்சுட்டு ஹாயா வீட்ல இருக்கிற மாதிரி காட்டுறது அவ்வளவு நல்லாயில்லை.*/

ஒருவேள அவங்க உங்களுக்கு ஆகாத "அந்த" பெரிய வீட்டு ஆளா இருப்பாங்களோ...

நையாண்டி நைனா said...

/*அவ்வளவு வளர்சிதை மாற்றம், உடையிலும், பேச்சிலும், ஆக்ட்டிங்கிலும்.. அசத்தல்..*/

வளர்சிதை மாற்றம் தானா??

வளர்"இடை" மாற்றம் இல்லியா

நையாண்டி நைனா said...

/*இதையே மற்ற பெண் இயக்குநர்களும் பாலோ செய்தால் என்னைப் போன்ற அப்பாவி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். வாழ்க சுதா..*/


நானும் ஒரு வாழ்க போட்டுக்கறேன்...

வாழ்க

நையாண்டி நைனா said...

/*ஆண் இயக்குநர்களுக்கு சுதா கொடுத்திருக்கும் சவால்தான் இந்தத் துரோகி..*/

எங்கள்ட்டையும் திறமை இருக்கு தெரிஞ்சுக்கங்கடா.. துரோகிகளா... என்றும் சொல்கிறார். குறிப்பா...

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
எப்படியும் கொஞ்ச நாளில் டிவியில் போட்ருவாங்கல்ல? அப்ப பார்த்துக்கலாம்!]]]

எஸ்.கே. ரொம்பத் தெளிவாத்தான் இருக்கீங்க..!

கீப் இட் அப்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...

நடுநிலையான விமர்சனம் வாழ்த்துகள்.

//இப்படியொரு டீச்சரெல்லாம் எனக்குக் கிடைச்சிருந்தா, நான் ஒழுங்கா படிச்சு இந்நேரம் எங்கயோ போயிருந்திருப்பேன்.//

இப்ப மட்டும் என்னண்ணே. இந்த நல்ல நிலையில்யாவது வைத்திருப்பதற்கு முருகர்க்கு நன்றி சொல்லுங்க.]]]

நிச்சயம்.. அதான் எந்த நேரமும் அவனை நினைச்சுக்கிட்டிருக்கேன்..!

[[[எந்திரன் டிக்கெட் சனிக்கிழமை ஷோது இருக்கு வேண்டுமானால் பெங்களூர் வாங்க. உங்களுக்கு சிறப்புக் காட்சிக்கு அழைப்பு வரவில்லையா அண்ணே. என்னண்ணே பதிவுலக பவர காட்டுங்க.]]]

இங்க கிடைக்கிறது கஷ்டம்.. இது கொஞ்சம் பெரிய இடம்.. பெரிய படம்.. அதுனாலதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...

/*இப்படியொரு டீச்சரெல்லாம் எனக்குக் கிடைச்சிருந்தா, நான் ஒழுங்கா படிச்சு இந்நேரம் எங்கயோ போயிருந்திருப்பேன்.*/

வேணாம்.... வேணாம்.... அடுத்த.... பகுதிக்கு போறேன்...]]]

உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன் நைனா..!

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...

/*ஆனாலும் இந்தக் காலத்திலேயும் இப்படி பட்டப் பகல்ல கொலை செஞ்சுட்டு ஹாயா வீட்ல இருக்கிற மாதிரி காட்டுறது அவ்வளவு நல்லாயில்லை.*/

ஒரு வேள அவங்க உங்களுக்கு ஆகாத "அந்த" பெரிய வீட்டு ஆளா இருப்பாங்களோ.]]]

இருக்கலாம் நைனா.. யார் கண்டது..? நிறைய நடந்திருக்கே..?

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...

/*அவ்வளவு வளர்சிதை மாற்றம், உடையிலும், பேச்சிலும், ஆக்ட்டிங்கிலும்.. அசத்தல்..*/

வளர்சிதை மாற்றம்தானா?? வளர்"இடை" மாற்றம் இல்லியா?]]]

இடையா..? அப்படீன்னா..?

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...

/*இதையே மற்ற பெண் இயக்குநர்களும் பாலோ செய்தால் என்னைப் போன்ற அப்பாவி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். வாழ்க சுதா..*/


நானும் ஒரு வாழ்க போட்டுக்கறேன்...

வாழ்க]]]

நன்றி நையாண்டி நைனாஜி அவர்களே..!

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...

/*ஆண் இயக்குநர்களுக்கு சுதா கொடுத்திருக்கும் சவால்தான் இந்தத் துரோகி..*/

எங்கள்ட்டையும் திறமை இருக்கு தெரிஞ்சுக்கங்கடா.. துரோகிகளா... என்றும் சொல்கிறார். குறிப்பா...]]]

கரீக்ட்டுத்தான்.. இந்த ஆம்பளை டைரக்டருங்க இனிமேலாச்சும் சுதாரிப்பா இருக்கோணும். இல்லைன்னா அவ்ளோதான்..!

க ரா said...

[[[இராமசாமி கண்ணண் said...
அண்ணாச்சி எப்படி இருக்கீங்க :)]]]

ஏம்ப்பா அதுக்குத்தான் மெயில் வசதி இருக்குல்ல.. அதுல குசலம் விசாரிக்கலாம்ல்ல..

இதுக்குப் பேரு கமெண்ட்டா..?

--
இந்த மாதிரி படம்லாம் பார்த்துட்டு வந்துருக்கீங்கல்ல அதுனால ஒரு அக்கறைல கேட்டது :)

Sugumarje said...

//என்னைப் போன்ற அப்பாவி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். வாழ்க சுதா..//

உ.த!... நான் உங்க பின்னாலதான் இருக்கேன்...ஞாபகம் வச்சிக்கோங்க...(அப்பாவி ரசிகர்கர்கள் கூட்டணி)

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...

[இராமசாமி கண்ணண் said...
அண்ணாச்சி எப்படி இருக்கீங்க :)]
ஏம்ப்பா அதுக்குத்தான் மெயில் வசதி இருக்குல்ல.. அதுல குசலம் விசாரிக்கலாம்ல்ல.. இதுக்குப் பேரு கமெண்ட்டா..?
--
இந்த மாதிரி படம்லாம் பார்த்துட்டு வந்துருக்கீங்கல்ல.. அதுனால ஒரு அக்கறைல கேட்டது :)]]]

ம்.. நல்ல படம்தாண்ணே.. அவசியம் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Sugumarje said...

//என்னைப் போன்ற அப்பாவி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். வாழ்க சுதா..//

உ.த!... நான் உங்க பின்னாலதான் இருக்கேன்... ஞாபகம் வச்சிக்கோங்க...(அப்பாவி ரசிகர்கர்கள் கூட்டணி)]]]

ஆஹா.. துணைக்கு ஒரு ஆளா.. வாங்க வாங்க.. வரவேற்கிறேன்.. ஞாபகம் வைச்சிக்கிறேன்..!

kanagu said...

adada... indha padam nalla irukkathu-nu sollitu paakama vittutane.. :(

Nalaila irundhu enthiran thavira endha padamum engayum odaliye..

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

adada... indha padam nalla irukkathu-nu sollitu paakama vittutane.. :(

Nalaila irundhu enthiran thavira endha padamum engayum odaliye..]]]

கனகு தம்பி.. எங்க ஆளை பார்க்க முடியலை.. ரொம்ப பிஸியா..?

அவசியம் இந்தப் படத்தைப் பாருங்க.. நல்ல எண்ட்டர்டெயிண்ட்மெண்ட்..!

Subramanian said...

Dear UT,

No one referred to the remarkable similarities (copy)between agni nakshatiram & this movie(including the scene where prabhu comes and meets karthik after assuming charge). The director may be was an assistant to Mani from that time.

உண்மைத்தமிழன் said...

[[[subramanian said...
Dear UT, No one referred to the remarkable similarities (copy) between agni nakshatiram & this movie (including the scene where prabhu comes and meets karthik after assuming charge). The director may be was an assistant to Mani from that time.]]]

எனக்கு அப்படித் தோன்றவில்லை..! அப்படிப் பார்த்தால் இன்றைக்கு வருகின்ற அத்தனை படங்களையும்தான் குற்றம் சொல்ல வேண்டி வரும்..!

abeer ahmed said...

See who owns wapedia.mobi or any other website:
http://whois.domaintasks.com/wapedia.mobi

abeer ahmed said...

See who owns uploadarticles.com or any other website.