முத்துக்குமார் ஆவணத் திரைப்படத்தின் வெளியீட்டு விழா..!

02-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2009, ஜனவரி 29. மறக்க முடியுமா இந்த நாளை..!?


முத்துக்குமார் என்னும் தமிழ் மாவீரன், தமிழீழத்திற்காக அக்னியில் தன்னை மாய்த்துக் கொண்டு சோம்பேறிகளாகவும், உணர்ச்சியற்றவர்களாகவும் இருந்த கொஞ்சநஞ்ச உணர்வாளர்களையும் "இன்னும் ஏன் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்காமல் கேட்ட  கொடிய நாள்..! 

தனது மரணத்தை உயிராயுதமாக ஏந்திய முத்துக்குமாரின் மரண சாசனம் அன்றைக்கு தமிழக மாணவர்கள் மத்தியில் மாபெரும் கொந்தளிப்பை
உருவாக்கியது. அவரது இறுதி ஊர்வலத்தில்  ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழகம் முழுதுவதிலிருந்தும் வந்து உணர்ச்சிப் பெருக்கோடு கலந்து கொண்டார்கள்.


தற்போது முத்துக்குமாரின் இந்த தியாகத்தை ‘ஜனவரி 29’ என்ற தலைப்பில் ஆவணப் படமாக எடுத்திருக்கிறார்கள்  தஞ்சையைச் சேர்ந்த   நல்லதுரையும் மற்றும் அவரது நண்பர்கள் செல்வராஜ் மற்றும் முருகேசன் ஆகியோர். இந்த ஆவணப் படத்தை இயக்கி இருப்பவர்  பிரகதீஸ்வரன்.

இதன் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 3 மணிக்கு நடந்தது.. இயக்குநர் அமீர், நடிகர் சத்யராஜ் ஆகியோர் இந்த ஆவணப் படத்தினை வெளியிட்டு பேசினார்கள். மேலும் கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் புகழேந்தி, சிபிசந்தர் ஆகியோரும் பேசினார்கள்.

எப்படியும் போலீஸ் உளவுத்துறையினர் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்ததினால் வாசலிலேயே அனைவரிடமும் பெயர், சார்ந்த அமைப்பின் பெயர், தொலைபேசி எண்ணைக் கேட்டுப் பதிவு செய்துவிட்டு கழுத்தில் தொங்க ஒரு அடையாள அட்டையும் கொடுத்தனுப்பினார்கள்.

டூவீலர்களை பார்க் செய்யுமிடத்தில் இருந்து அரங்கத்தை நோட் செய்து கொண்டிருந்த இரண்டு உளவுத்துறை புலிகள் நிகழ்ச்சி தொடங்கவிருந்த கடைசி நிமிடத்தில்தான் உள்ளே வந்தார்கள்.

ரிஜிஸ்தரில் பெயரை எழுதுவதற்காக பேனாவை வாங்கியவர்கள் என்ன பெயர் எழுதுவது என்று ஒரு நொடி தயங்கி பின்பு பெயரை எழுதிவிட்டு போன் நம்பர் கேட்டபோது “இது வேணாம்.. நாங்க நம்பர் மாத்தப் போறோம்..” என்று ஒரே வாய்ஸில் சொல்லிவிட்டு எஸ்கேப்பானார்கள்.

அரங்கம் நிரம்பி வழிந்து நிற்கக்கூட இடமில்லாமல் இருந்தது..! முத்துக்குமார் என்னும் பெயர் இன்றைய ஈழ ஆதரவு இளைஞர்களிடத்தில் எந்த அளவுக்கு ஒரு மந்திரச் சொல்லாக இருக்கிறது என்பதை அன்றைய கூட்டத்தை நேரில் பார்த்தபோது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. செந்தமிழனின் ஆதரவாளர்களும் நிறைய வந்திருந்தார்கள். சீமானின் பெயரைச் சொன்னபோதெல்லாம் அரங்கம் அதிர கை தட்டல் கிடைத்தது.

முதலில் ஆவணப் படத்தைத் திரையிட்டுக் காண்பித்தார்கள். 70 நிமிடங்கள் ஓடிய அந்தப் படத்தின் மீதிருந்த ஒரு ஈர்ப்பு துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் மறையவே இல்லை. அவ்வளவு வேகம்.. உருக்கம். படம் முடிந்தபோது ஒன்றுபோல் அரங்கத்தில் இருந்த அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் தேங்கி நின்றிருந்தது..!

தொடர்ந்து சிறிது இடைவேளைவிட்டு வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. 


முன்‌னதா‌க நடி‌கர்‌ சத்‌யராஜூம், வி.ஐ.பி.க்களும், முத்துக்குமாரின் குடும்பத்தினரும் சேர்ந்து‌ முத்‌துக்‌குமா‌ரி‌ன்‌ படத்‌தி‌ற்‌கு தீ‌பம்  ஏற்‌றி‌னா‌ர்கள்‌. ஒரு நி‌மி‌டம்‌  மவு‌ன அஞ்‌சலி‌க்‌கு பி‌றகு நி‌கழ்‌ச்‌சி‌  தொ‌டங்‌கி‌யது.  ‌

ஆவணப் படத்தினை சத்யராஜூம், அமீரும் சேர்ந்து வெளியிட்டார்கள்.


‘ஜனவரி‌ 29′ ஆவணப் ‌பட இயக்‌குநர்‌ பி‌ரகதீ‌ஸ்‌வரன்‌,  தயா‌ரி‌ப்‌பா‌ளர்கள் ‌நல்‌லதுரை‌, செ‌ல்‌வரா‌ஜ்‌ செ‌.முருகை‌யன்‌ மற்‌றும்‌ தொ‌ழி‌ல்‌நுட்‌ப கலை‌ஞர்‌களுக்‌கு பொ‌ன்‌னா‌டை‌ அணி‌வி‌த்‌து நி‌னை‌வு‌ கே‌டயம்‌ வழங்‌கப்‌பட்‌டது.

முதலில் ‘காற்றுக்கென்ன வேலி’ படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தீப்பொறியாகப் பேசினார்.

“முத்துக்குமாரின் உடலுக்குத் தீ வைத்த அதேவேளையோடு தமிழ் ஈழ விடுதலை என்ற உணர்வுக்கும் சேர்த்தே நாம் கொள்ளி வைத்துவிட்டோமா என்கிற கவலை எனக்கு வந்துள்ளது. அன்றைய நிகழ்ச்சியோடு இது முடிந்தவிட்டதே என்றெண்ணி துயரப்படும் அதே வேளையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் செய்யும் தியாகத்தால்தான் இந்த ஈழம் பற்றிய பிரச்சினை நீர்த்துவிடாமல் செய்து வருகிறார்கள்.

பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்களும் தங்களுடைய சொந்த சம்பாத்தியத்தில் 50 சதவிகிதத்தை ஈழ விடுதலைக்காக இயக்கத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். தமிழர்களின் ஒரே தலைவனான பிரபாகரனைத் தவிற வேறு யாருமில்லை. தமிழ் ஈழக் கனவை சிதைத்தது துரோகி கருணாநிதிதான்” என்றார். 


இவரையடுத்து பேச வந்தார் 'கவிஞர்களின் வேடந்தாங்கலான'  கவிஞர் அறிவுமதி..!

என் வாழ்க்கையில் நான் கலந்து கொண்ட மிகப் பெரிய கூட்ட நிகழ்ச்சி தந்தை பெரியாரின் இறுதி ஊர்வல நிகழ்ச்சி. தன்னுடைய 95 வயது வரையிலும் ஊர், ஊராக, தெருத் தெருவாக தான் சார்ந்த இயக்கத்திற்காக, இந்தத் தமிழ் மண்ணிற்காக உழைத்த தந்தை பெரியாரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டத்தை.. தம்பி முத்துக்குமார் ஒரே நாளில் கூட்டிவிட்டான்.

அவனது உடல் வைக்கப்பட்டிருந்தபோது கூடியிருந்த மாணவர்கள் கூட்டத்தைப் பார்த்தும், வந்திருந்த அரசியல் தலைவர்களின் கூட்டத்தைப் பார்த்தும் கொஞ்சம் மகிழ்ச்சியோடு இருந்தேன். இனி ஈழம் பற்றிய உணர்வு தமிழகத்தில் மென்மேலும் வளரப் போகிறது என்று. ஆனால் முத்துக்குமாரின் முதல் நினைவு தினத்தன்று தனித்தனியாக நடத்தப்பட்ட விழாக்கள் என்று பத்திரிகைகளில் படித்தபோது இது முத்துக்குமாருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமானமாக கருதுகிறேன்.

நம் தலைவன் பிரபாகரனை நாம் உள் வாங்கிக் கொண்டு அவன் காட்டிய வழியில் தமிழர்களுக்காக ஒற்றுமையாக வாழ்கிறோமா? வாழ நினைக்கிறோமா..? முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில்கூட மாணவர்கள் கேட்டார்கள்.. அரசியல்வாதிகளே வெளியேறி விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று..! ஆனால் நடக்கவில்லை.

பலரும் சொல்வதைப் போல பிரபாகரன் ரத்த வெறி பிடித்தவனல்ல.. கலை வெறி பிடித்தவன். நான் அவரை கடைசியாகச் சந்தித்தபோது ஈழம் பற்றி நேர்த்தியாக ஒரு நல்ல திரைப்படத்தை எடுங்களேன் என்று என்னிடம் கேட்டார். இப்போது தமிழ்ச் சினிமாவுலகில் பாலா, அமீர், சேரன் என்று பல தம்பிகள் தங்களது முத்திரையைப் பதித்து வருகிறார்கள்.

தம்பி முத்துக்குமார்கூட என்னைச் சந்திக்க வந்து முடியாமல், எனக்காக ஒரு கடிதமெழுதி அதனைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறான். அதனை நான் எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. அவன் மட்டும் அன்றைக்கு என் கையில் கிடைத்திருந்தால் பாலா அளவுக்கு அவனையும் ஒரு சிறந்த இயக்குநராக உருவாக்கியிருப்பேன்.! என்றார்.

அடுத்து பேச வந்தார் இயக்குநர் சிபிசந்தர். எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்குப் போய்விட்டார். இவர் சீமானின் உற்ற நண்பர். சீமான் கட்சிப் பிரமுகரும்கூட..

“பதவியில் இருக்கும்போதே செத்துவிட வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இறந்து சிம்மாசனம் ஏறியவன் முத்துக்குமார் ஒருவன்தான். தனக்குத்தானே சிலை வைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகள்தான் இங்கு இருக்கிறார்கள். இவர்கள்தான் நமது கரும்புலி முத்துக்குமாருக்கு சிலை வைக்கத் தடை போடுகிறார்கள்.

இறக்கும்வரை யார் என்றே தெரியாத இளைஞன் முத்துக்குமார். ஒரே நாளில் அள்ளிக் கொட்டிக் கொண்ட அந்த உணர்ச்சி நெருப்பை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது. அந்தத் தியாக தீபத்தை எதை வைத்தும் ஊதியணைக்க முடியாது.

யாரை எல்லாம் நடிகன் என்று நாம் நினைத்தோமோ அவர்களெல்லாம் மனிதர்களாகிவிட்டார்கள். யாரையெல்லாம் மனிதர்களாக நாம் நினைத்தோமோ. அவர்களெல்லாம் நடிகர்களாக மாறிவிட்டார்கள். இதுதான் இங்கே நடந்தது.

மருத்துவமனையில் உயிர் கசிந்து வெளியேறுகின்ற வேளையிலும்கூட நீ என்ன சாதி என்று கேட்ட தாதிப் பெண்ணிடம் “அம்மா.. நான் தமிழ்ச் சாதி என்று எழுதுங்கள்” என்று சொல்லி மறைந்தானே முத்துக்குமார்.. அவனையா மனநலம் இல்லாதவன் என்கிறீர்கள்..?” என்று உச்சஸ்தாயி குரலில் கர்ஜித்துவிட்டுப் போனார்..

அடுத்துப் பேச வந்தார் இயக்குநர் அமீர்.

“இந்த விழாவுக்கு என்னைக் கூப்பிடும்போதே என்னை தயவு செய்து பேசச் சொல்லிராதீங்கன்னு  கேட்டுக்கி்ட்டேன்.. அரங்கத்துல நுழையறதுக்கு முன்னாடி விழாவின் அமைப்பாளர்கள்கிட்டேயும்., டாக்குமெண்ட்ரியை எடுத்த இயக்குநர்கிட்டேயும் ஒரு மணி நேரம் என்னோட குமுறலையெல்லாம் கொட்டிட்டுத்தான் உள்ள வந்தேன். அதையெல்லாம் இப்போ இங்க பேசினா.. சத்தியமா நான் நாளைக்கு வெளில இருக்க முடியாது..

முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் ஒரு நாள் கலந்து கொண்டதைத் தவிர நாம் வேறு என்ன செய்தோம் என்ற ஒரு குற்றவுணர்வு எனக்கு இன்னிக்கும் இருக்கு. வெறும் 11 பேர்தான் பாரதியின் உடல் அடக்கத்தின்போது கலந்துக்கிட்டாங்களாம். ஆனாலும் அந்த எழுச்சிக் கவிஞனின் வீரியம் இன்னும் அடங்கவில்லையே.. இந்த நிலைமையில் இத்தனை லட்சம் மக்களுக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட முத்துக்குமாரின் லட்சியம் உணர்வும் அவ்வளவு எளிதில் ஓய்ந்துவிடுமா..?

மாவீரன் என்றால் அது முத்துக்குமார் மட்டும்தான். அவனை மட்டும்தான் இனிமேல் 'மாவீரன்' என்றுதான் அழைக்க வேண்டும்.

ஒரு சாமியார் படத்தை ரெண்டு நிமிஷம்தான் டிவில காட்டினாங்க.. அதைப் பத்தி நாள் முழுக்க எல்லாருமே விழுந்து, விழுந்து பேசினோம்.. அதேபோல் முத்துக்குமார் ஊர்வலத்தை ஒரு அஞ்சு நிமிஷம் காட்டியிருந்தால் தமிழகமே கொந்தளிச்சிருக்குமே..?

60 வருஷமா அடுக்குத் தமிழில் பேசிப் பேசியே ஆட்சியிலும் உட்கார்ந்துவிட்டார்கள். அதெல்லாம் முடிஞ்சுபோன பழைய கதை. அதனால் நாமாவது அறிவூப்பூர்வமாகப் பேசுவோம். அறிவு, உழைப்பு, பணம்.. அவரவருக்கு என்ன முடியுமோ, எப்படி முடியுமோ.. அந்த வழியில் நாம் நம் இனத்துக்காக போராடுவோம். அதையும் தாண்டி அரசியலால்தான், போராட்டத்தால்தான் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க முடியும் என்ற நிலை வந்தால், அதையும் செய்வோம்..”  என்றார்.

அடுத்துப் பேச வந்தார் புரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜ்.

“அனை‌‌த்‌து தமி‌ழ்‌ உணர்‌வா‌ளர்‌களுக்‌கும் ‌வணக்‌கம்‌. இந்‌த அரி‌ய வா‌ய்‌ப்‌பி‌னை‌ எனக்‌கு தந்‌த அனை‌வருக்‌கும் ‌நா‌ன்‌  நன்‌றி‌யை‌ தெ‌ரி‌வி‌த்‌துக் ‌கொ‌ள்‌கி‌றே‌ன்‌.

இந்‌த மா‌தி‌ரி‌ ஒரு படம்‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு என்‌ன பே‌சுவது என்‌று தெ‌ரி‌யவி‌ல்‌லை‌. இந்‌த படம்‌ நி‌றை‌ய பே‌சி‌யி‌ருக்‌கி‌றது, அதற்‌கா‌க இந்‌த படத்‌தி‌ன்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌கள் ‌நல்‌லதுரை‌, செ‌ல்‌வரா‌ஜ்‌, முருகை‌யன்‌ அவர்‌களுக்‌கும்‌, படத்‌தி‌ன்‌ இயக்‌குநர்‌ பி‌ரகதீ‌ஸ்‌வரன்‌ அவர்‌களுக்‌கும் ‌என்‌னுடை‌ய மனமா‌ர்‌ந்‌த நன்‌றி‌யை‌ தெ‌ரி‌வி‌த்‌துக்‌ கொ‌ள்‌கி‌றே‌ன்‌. முத்‌துக்‌குமா‌ரி‌ன்‌ கோ‌டி‌க்‌கணக்‌கா‌ன சகோ‌தரர்‌களி‌ல்‌ ஒருவரா‌க இருந்‌து இந்‌த நன்‌றி‌யை‌ நா‌ன்‌ தெ‌ரி‌வி‌த்துக்  ‌கொ‌ள்‌கி‌றே‌ன்‌.

போன வருஷம், ஜனவரி 30-ம் தேதி காலை பத்‌தி‌ரி‌க்‌கைல‌ முத்‌துக்‌குமா‌ர்‌னு ஒரு இளை‌ஞன்‌ சா‌ஸ்‌தி‌ரி‌ பவனுக்‌கு முன்‌னா‌டி ‌தீ‌க்‌குளி‌ச்‌சி‌ட்‌டா‌ர்‌ங்‌றதை ‌நா‌ன்‌ பா‌ர்‌த்‌தே‌ன்‌. ‘அட, என்‌னப்‌பா‌ இந்‌த தம்‌பி, தமி‌ழர்‌களை‌ப் பற்‌றி‌ தெ‌ரி‌யா‌மல்‌ இப்‌படி‌ ஒரு முடி‌வு‌ எடுத்‌தி‌ட்‌டா‌ரே‌, ஒரு உயி‌ர்‌ வே‌ஸ்ட்‌டா ‌போ‌யி‌டி‌ச்‌சே‌’ன்‌னு கவலை‌ப்‌பட்‌டே‌ன்‌. ஒரு தம்‌பி‌ அவசரப்‌பட்‌டுட்‌டா‌ர்‌னு நி‌னை‌த்‌தே‌ன்‌. அதன் ‌பி‌றகு  அவருடை‌ய அறி‌க்‌கை‌யை‌ படி‌த்‌தபோ‌துதா‌ன் ‌தெ‌ரி‌ந்‌தது, ‘அவர்‌ பெ‌ரி‌ய அரசி‌யல்‌‌ஞா‌னி‌யா‌க வந்‌தி‌ருக்‌க வே‌ண்‌டி‌யவர்‌, இப்‌படி‌ அவசரப்‌பட்‌டு தீ‌க்‌குளி‌ச்‌சி‌ட்‌டா‌ரே’ன்‌னு நி‌னை‌த்‌தே‌ன்‌.

இப்‌போ‌து, பு‌கழே‌ந்‌தி‌ தங்‌கராஜ்‌பே‌சி‌யதை‌ கே‌ட்‌டபோ‌துதா‌ன்‌ தெ‌ரி‌ந்‌தது, அந்‌த தி‌யா‌கம்‌ எங்‌கே ‌போ‌ய்‌ சே‌ர்‌ந்‌தி‌ருக்‌கி‌றது என்‌று. ஒரு பெ‌ரி‌யா‌ரோ, கார‌ல்‌மா‌ர்‌க்‌ஸோ‌, அம்‌பே‌த்‌கா‌ரோ‌ அவசரப்‌பட்‌டு தீ‌க்‌குளி‌த்‌தி‌ருந்‌தா‌ல் ‌எப்‌படி ‌இருக்‌குமோ‌ இப்போ  அப்‌படி‌ இருக்‌கு.
 
அடுத்‌த தலை‌முறை‌க்‌கு இந்‌த போ‌ரா‌ட்‌டத்‌தோ‌ட வலி‌தெ‌ரி‌யா‌ம போ‌டி‌யி‌டி‌ச்‌சி‌ன்னு நா‌ன்‌ பல சி‌னி‌மா‌  நி‌கழ்‌ச்‌சி‌களி‌ல்‌  பே‌சி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌. ஏன்‌னா‌, அகதி‌களா‌க வெ‌ளி‌நா‌ட்‌டுக்‌கு போ‌ன தமி‌ழர்‌களி‌ன்‌ அடுத்‌த தலை‌முறை‌க்‌கு இந்‌த  வலி‌ தெ‌ரி‌யு‌மா‌ என்‌கி‌ற சந்‌தே‌கம் ‌எனக்‌கு இருந்‌தது.
 
ஏன்‌ கஷ்‌டப்‌பட்‌டு சம்‌பா‌திப்‌பதை‌ இயக்‌கத்‌துக்‌கு அனுப்‌பு‌றீ‌ங்‌கன்‌னு அந்‌த தமி‌ழர்‌களை‌ பா‌ர்‌த்‌து கே‌ட்‌ட குழந்‌தை‌களை‌ப்‌ பற்‌றி‌ய வி‌ஷயம்‌ எல்‌லா‌ம்‌ எனக்‌கு தெ‌ரி‌யா‌து. அவர்‌களுக்‌கு தெ‌ரி‌ய ‌வா‌ய்‌ப்‌பு‌ம்‌ இல்‌லை‌. கி‌ரா‌மத்‌தி‌ல் ‌இருந்‌து செ‌ன்‌னை‌க்‌கு வந்‌த பி‌றகு பொ‌றந்து, வளர்‌ந்‌த நம்‌மோ‌ளோ‌ட குழந்‌தை‌கள் கி‌ரா‌மத்‌துக்‌குப் போ‌கமா‌ட்‌டே‌ன்‌‌கி‌றா‌ங்‌க. நமக்‌கு அந்‌த பொ‌ங்‌க சோ‌று வை‌த்‌து சா‌ப்‌பி‌டணும்‌, மா‌ட்‌டு வண்‌டி‌யி‌ல போ‌வணும்‌, டூ‌ரி‌ங் ‌ டா‌க்‌கீ‌ஸ்‌ல உட்‌கா‌ர்‌ந்‌து வா‌த்‌தி‌யா‌ர்‌ படம்‌ பா‌ர்‌த்‌தும்‌ நா‌ம ரசி‌க்‌கலா‌ம்‌. ஆனா‌ல் ‌குழந்‌தை‌கள் ‌ரசி‌க்‌க மா‌ட்‌டங்‌கி‌றா‌ங்‌க. அவங்‌களுக்‌கு சத்‌யம் ‌கா‌ம்‌ப்‌ளக்‌ஸ்‌ல  படம்‌ பா‌ர்‌த்‌தா‌தா‌ன்‌  பி‌டி‌க்‌குது.

அப்‌படி‌ இருக்கும்‌போ‌து, போ‌ரா‌ட்‌ட கா‌லத்‌தி‌ல்‌ பு‌லம்‌ பெ‌யர்‌ந்‌து போ‌ன தமி‌ழர்‌களுக்‌கு அந்‌த உணர்‌வு‌  இருக்‌கதா‌ன்‌ செ‌ய்‌யு‌ம்‌. ஆனா‌ல்‌, அமெ‌ரி‌க்‌கா‌, ஜெ‌ர்‌மனி‌யி‌லயு‌ம் ‌பி‌றந்‌த குழந்‌தை‌கள்‌ நுனி‌நா‌க்‌கி‌ல்‌ ஆங்‌கி‌லம்‌பே‌சக் ‌கூடி‌யவர்‌கள்‌. 

ஏன்னா‌? என்‌னோ‌ட சொ‌ந்‌தகா‌ரங்‌களை‌ப் பா‌ர்‌க்‌க நா‌ன்‌ வெ‌ளி‌நா‌டு போ‌யி‌ருந்‌தபோ‌து அவங்‌களே‌ தமி‌ழை‌ மறந்‌தி‌ட்‌டி‌ருக்‌கா‌ங்‌க. அப்‌படி ‌இருந்‌த தமி‌ழர்‌களை‌ இந்‌த முத்‌துக்‌குமா‌ரி‌ன்‌  தி‌யா‌கம்‌ மா‌ற்‌றி‌யி‌ருக்‌கி‌றது என்‌றா‌ல்‌,  நி‌ச்‌சயம்‌ இந்‌த  முத்‌துக்‌குமா‌ருடை‌ய உயி‌ர்  ‌வீ‌ணா‌ப் போ‌கல.

முத்‌துக்‌குமா‌ர்‌ தோ‌த்‌துட்‌டா‌ருன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. கண்‌‌டி‌ப்‌பா ‌முத்‌துக்‌குமா‌ர் ‌தோ‌ற்‌கவி‌ல்‌லை‌. எப்‌போ‌ முத்‌துக்‌குமா‌ருக்‌கு சி‌லை‌  வை‌க்‌க பயப்‌படுறா‌ங்‌களோ‌ அப்‌பவே‌  முத்‌துக்‌குமா‌ர்‌  ஜெ‌யி‌ச்‌சி‌ட்‌டா‌ர்‌.

சி‌ல  பே‌ர்‌தா‌ன்‌ போ‌ரா‌டுவா‌ங்‌க. அவங்‌க எல்‌லா‌ம் ‌பல நூ‌ல்‌களை‌யு‌ம்  ‌படி‌த்து ஆழமா‌ தெ‌ரி‌ஞ்‌சி‌கி‌ட்‌டவங்‌க. ஆனா‌ல்‌ நா‌ன்‌ அப்‌படி  ‌இல்‌லை‌. பல படம்‌ சம்‌பந்‌தப்‌பட்‌ட நி‌கழ்‌ச்‌சி‌களி‌ல் ‌நா‌ன்  ‌பே‌சும்‌போ‌து தமி‌ழி‌ன உணர்‌வை‌  பற்‌றி‌  நா‌ன்  ‌பே‌சும்‌போ‌து அங்‌க நா‌ன்‌  பு‌த்‌தி‌சா‌லி‌ மா‌தி‌ரி‌யு‌ம்‌, பெ‌ரி‌ய ஆள்‌  மா‌தி‌ரி‌யு‌ம்  ‌தெ‌ரி‌யு‌ம்‌. ஆனா‌ல்‌, இங்‌கே‌  அப்‌படி‌  தெ‌ரி‌யா‌து. ஏன்‌னா‌? இங்‌க இருக்‌குறவங்‌கி‌ட்‌டதா‌ன்‌ நா‌ன்‌  நி‌றை‌ய வி‌ஷயங்‌களைக்  ‌கத்‌துகி‌ட்‌டே‌ன்‌. இவங்‌க எல்‌லா‌ம்‌ என்‌னுடை‌ய ஆசி‌ரி‌யர்‌கள்‌.

இந்‌தப் படம் ‌எடுத்‌த பி‌ரகதீ‌ஷ்‌வரனுக்‌கு கோ‌டா‌ன கோ‌டி‌  நன்‌றி‌களை‌ தெ‌ரி‌வி‌த்‌துக் ‌கொ‌ள்‌கி‌றே‌ன்‌. நம்‌முடை‌ய இயக்‌குநர்‌அமீ‌ர்‌  சா‌ர்‌ சொ‌ன்‌ன மா‌தி‌ரி, ஒவ்‌வொ‌ருத்‌தருக்‌கும்‌  ஒவ்‌வொ‌ரு தி‌றமை‌  இருக்‌கும்‌. ஒரு மா‌தி‌ரி‌யா‌ன தை‌ரி‌யம்  ‌இருக்‌கும்‌. சி‌றை‌க்‌கு செ‌ல்‌கி‌ன்‌ற அளவி‌ற்‌கு தை‌ரி‌யம்  ‌என்‌  தம்‌பி‌  செ‌ந்‌தமி‌ழன்‌  சீ‌மா‌னுக்‌குதா‌ன்‌ இருக்‌கு.  சத்‌தி‌யமா‌  சொ‌ல்‌றே‌ன்  ‌எனக்‌கில்லை.

இப்‌போ‌ பே‌சும்‌போ‌துகூட மனசுல கணக்‌கு போ‌ட்‌டுத்தா‌ன்  ‌பே‌சி‌கி‌ட்‌டு இருக்‌கே‌ன்‌. எங்‌கயா‌வது கொ‌ஞ்‌சம்‌  பே‌சி‌ட்‌டா‌லும்‌ மா‌ட்‌டி‌க்‌குவோமேன்னு..‌. வெ‌ளி‌ப்‌படை‌யா‌க சொ‌ல்‌‌றனே..  ‌நா‌ன்‌ சொ‌குசா‌  பொ‌றந்‌து வசதி‌யா‌  வளர்‌ந்‌தவன்‌‌.  அதனா‌ல்‌  என்‌னா‌ல கண்‌டி‌ப்‌பா  ‌ஜெ‌யி‌லுக்‌கெல்லாம் போ‌க முடி‌யா‌து. அதனா‌ல்‌தா‌ன்‌, அமீ‌ர்‌  சொ‌ன்‌ன மா‌தி‌ரி‌  என்‌  மனதி‌ல்‌  உள்‌ளதை‌ எல்‌லா‌ம்‌, சொ‌ன்‌னா‌ல்  ‌இந்‌த ஜெ‌ன்‌மத்‌தி‌ல்  ‌நா‌ன்  ‌வெ‌ளி‌யவே‌  வரவே‌ முடி‌யா‌து. ஒரு வருடம்  ‌எல்‌லா‌ம்  ‌கி‌டை‌யா‌து. நா‌ன்‌  அங்‌கே‌யே‌தா‌ன்‌  இருக்‌கணும்‌. என்‌னை‌  அறி‌யா‌ம  எம்‌ஜி‌ஆர்  ‌பா‌ட்‌டை‌  முணுமுணுப்‌பே‌ன்‌, அதே‌மா‌தி‌ரி‌  இருந்‌தி‌ருப்‌பே‌ன்‌. நா‌ன்  ‌நடி‌த்‌த கடை‌சி ‌படம்‌ வெ‌ளி‌வரப்‌ போ‌கி‌ற ‘இரண்‌டு முகம்’‌படமாத்‌தா‌ன்‌  இருக்‌கும்‌.

அதனா‌ல்‌ யா‌ர்  ‌யா‌ர்  ‌எங்‌க நி‌ன்‌னு போ‌ரா‌டணுமோ‌அவங்‌க, அவங்‌க அங்‌க நி‌ன்‌னு போ‌ரா‌டணும்‌. போ‌ரா‌ட்‌டங்‌களுக்‌கு பலவி‌தமா‌ன ஒத்‌துழை‌ப்‌பு ‌தே‌வை‌படுது. பொ‌ருளா‌தா‌ர ஒத்‌துழை‌ப்‌பு‌, கவி‌ஞர்‌களுடை‌ய ஒத்‌துழை‌ப்‌பு‌ தே‌வை‌படும்‌. தட்‌டி  ‌எழுப்‌பு‌ம்‌  படங்‌களை‌  எடுக்‌கும்  ‌இயக்‌குநர்‌கள்‌   இங்க இருக்‌குறா‌ங்‌க.  முத்‌துக்‌குமா‌ர்  ‌இருந்‌தா‌ர்‌னா‌  நி‌னை‌த்‌து பா‌ருங்‌கள்‌. அவர்‌  ஒரு ஐந்‌து படம்  ‌எடுத்‌தி‌ருந்‌தா‌ல்  ‌எப்‌படி‌ இருந்‌தி‌ருக்‌கும்‌. உலகத்‌தையே‌  பு‌ரட்‌டி  ‌போ‌ட்‌டி‌ருப்‌பா‌ர்‌.

இந்‌த ஆவண படத்‌தை  ‌நா‌ன் ‌பா‌ர்‌த்‌துட்‌டே‌ன்‌. எனக்‌கு கடவு‌ள்  ‌நம்‌பி‌க்‌கை‌ கி‌டை‌யா‌து. கடவு‌ள்‌  நம்‌பி‌க்‌கை  ‌இருக்‌குறவங்‌களுக்‌கு சொ‌ல்‌றே‌ன்‌. இந்‌த ஆவணப் படத்‌தை‌  இந்‌துக்‌கள்‌அவங்‌க வீ‌ட்‌ல  ‌பகவத்‌கீ‌தை‌ பக்‌கத்‌தி‌லும்‌, இஸ்‌லா‌மி‌யர்‌கள்‌  குர்‌ஆன்‌  பக்‌கத்‌தி‌லும்‌, கி‌றி‌ஸ்‌தவர்‌கள்‌  பை‌பி‌ள்  ‌பக்‌கத்‌தி‌லும் வை‌க்‌க வே‌ண்‌டும்‌. தந்‌தை‌  பெ‌ரி‌யா‌ரி‌ன்  ‌வழி‌  நடப்‌பவர்‌கள்‌  பெ‌ரி‌யா‌ர்‌ களஞ்‌சி‌யத்‌தி‌ன்  ‌பக்‌கத்‌தி‌ல்  ‌வை‌யு‌ங்‌கள்‌. கம்‌யூ‌னி‌ச வழி பி‌ன்‌பற்‌றுவர்‌கள்  ‌மா‌ர்‌க்‌ஸ்‌ன்‌  அந்‌த நெ‌டுவழி‌பயணத்‌தி‌ன்‌ பக்‌கத்‌தி‌ல்  ‌வை‌யு‌ங்‌கள்‌.

அந்‌த கா‌லத்‌தி‌ல்‌  அண்‌ணா‌.  ‌‘தமி‌ழனி‌ன்‌  ஒவ்‌வொ‌ரு வீ‌ட்‌டி‌லும்  ‌உலக வரை‌படம்‌  இருக்‌க வே‌ண்‌டும்‌’ என்‌று சொ‌ன்‌னா‌ர்‌. இந்‌த உலகம்  ‌உருவா‌ன கா‌லத்‌தி‌லே‌யே‌  எல்‌லா  ‌நா‌ட்‌டி‌லயு‌ம்‌ தமி‌ழனுடை‌ய வீ‌டு இருந்‌தி‌ருக்‌கும்‌னு நி‌னை‌ச்சுத்தா‌ன்  ‌அவர்‌ சொ‌ல்‌லி‌யி‌ருப்‌பா‌ர்‌னு நா‌ன்  ‌நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌.

அது மா‌தி‌ரி  ‌இந்‌த உலகத்‌தி‌ல்  ‌வி‌டுதலை‌  என்‌பது ரொ‌ம்‌ப ரொம்ப முக்‌கி‌யம்‌. அது இன வி‌டுதலை‌யா‌கட்‌டும்‌, பண வி‌டுதலை‌யா‌கட்‌டும்‌,  வஞ்‌சி‌க்‌கப்‌பட்‌ட   தலி‌த்  ‌இன மக்‌களி‌ன்  ‌வி‌டுதலை‌யா‌கட்‌டும்‌, அடி‌மை‌ப்பட்‌டி‌ருக்‌கும்‌   பெ‌ண்‌ணி‌ன்  ‌வி‌டுதலை‌யா‌க இருக்‌கட்‌டும்‌. இப்‌படி‌   வி‌டுதலை‌யை‌ நோ‌க்‌கி‌தா‌ன்‌  உலகம்‌   போ‌யி‌ட்‌டு இருக்‌கு. அந்‌த வி‌டுதலை‌யை‌ கண்‌‌டி‌ப்‌பா‌  அவர்‌கள்  ‌அடை‌வா‌ர்‌கள்‌.  


உலகம்  ‌உருவா‌னபோ‌து எல்‌லா‌ நா‌டுகளும்  ‌உருவா‌யி‌ட்‌டதா‌க இல்‌லை‌.. ஒவ்‌வொ‌ரு கா‌லக்கட்‌டத்‌தி‌லும்‌, ஒரு நா‌டு உருவா‌கி‌யி‌ருக்‌கி‌றது. சி‌ல கா‌லக்கட்‌டத்‌தி‌ல்‌  பல நா‌டுகள்‌ சே‌ர்‌ந்‌து ஒரு நா‌டா‌க உருவா‌கி‌யி‌ருக்‌கி‌றது.

பல குறுநி‌ல மன்‌னர்‌கள்‌  ஆண்‌ட நா‌டு இந்தியா. பி‌ரி‌ட்‌டி‌ஷ்‌கா‌ரனை‌  எதி‌ர்‌க்‌க பி‌ரி‌ட்‌டி‌ஷ்  ‌இந்‌தி‌யா‌வா‌க இது‌  உருவாகி‌யது இல்‌லை‌யா‌?. அதனா‌ல்‌, அத்‌தி‌யா‌வா‌சி‌யப்‌படும்போ‌து ஒரு பு‌து நா‌டே‌  உருவா‌கலா‌ம்‌   இல்‌லை‌யா‌? 35 லட்சம் பேர் இணைந்து போராடி இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தபோது, 35000 பேர் முனைந்து போராடினால் ஈழத்தை வாங்கிர முடியாதா..? இதுகூட நான் சொல்றதில்லை. நம்ம பாமரன் சொன்னதுதான்..!

இங்கே யா‌ருமே‌  துப்‌பா‌க்‌கி  ‌ஏந்‌துகி‌றதை‌  வி‌ரும்‌பு‌றதி‌ல்‌லை‌. வே‌லை‌க்‌கு போ‌றது, வீ‌ட்‌டுக்‌கு வர்‌றது, குழந்‌தை‌ங்‌க, மனை‌வி‌ இப்‌படி  ‌சந்‌தோ‌ஷமா‌க  வா‌ழ்‌வது. சனி‌, ஞா‌யி‌றுகளி‌ல்‌  பீ‌ச்,  ‌சி‌னி‌‌மா‌ இப்‌படி  ‌போ‌றதை‌தா‌ன்‌  வி‌ரும்‌பு‌வா‌ங்‌க.   ‌எந்‌த  நே‌ரம்  ‌வந்‌து நம்‌மளை‌ய எவனா‌வது சுட்‌டுடி‌டுவா‌னோ‌ங்‌ற   நி‌னை‌ப்‌பி‌ல்  ‌யா‌ரும்  ‌வா‌ழ மா‌ட்‌டா‌ர்‌கள்‌.  அதனா‌ல்  ‌கா‌ட்‌டுக்‌குள்‌  வா‌ழனும்‌னு யா‌ரும்‌ ஆசை‌ப்‌பட மா‌ட்‌டா‌ன்‌.  நா‌ன்  ‌போ‌கமா‌ட்‌டே‌ன்.‌  ஏன்?‌  அந்‌த வா‌ழ்‌க்‌கை‌  நல்‌லாயிருக்‌குமா‌?  அந்‌த நி‌லை‌க்‌கு தள்‌ளப்‌படுறதி‌னா‌லதா‌ன்‌  அப்‌படி  ‌ஆகுறா‌ன்‌. முடி‌யா‌தபட்‌சத்‌தி‌ல்‌தா‌ன்‌  அப்‌படிப் ‌போ‌றா‌ன்‌. அந்‌த முடி‌யா‌தபட்‌சம்‌ கண்‌‌டி‌ப்‌பா‌க அவனுக்‌கு வெ‌ற்‌றி‌யை‌த் தே‌டித் ‌தரும்‌.

அதனா‌ல்‌ முத்‌துக்‌குமா‌ருடை‌ய தி‌யா‌கம் நிச்சயம்  ‌வீ‌ண்  ‌‌போ‌கா‌து என்‌று கூறி‌. அவருடை‌ய தா‌ய்‌, தந்‌தை‌யருக்‌கும்‌, அவருடை‌ய சகோ‌தரி  ‌அவர்‌களுக்‌கும்‌, அந்‌தக் குடும்‌ப‌த்தினரும் எந்‌த நே‌ரத்‌தி‌ல்  ‌எந்‌த உதவி‌ வே‌ணும்‌னா‌லும்‌  என்‌னை‌க் கே‌ளுங்‌க அப்‌படி‌ன்‌னு சொ‌ல்‌லி‌க்‌கி‌றே‌ன்‌.

நான் முன்னாடியெல்லாம் போ‌னை‌ எடுத்தவுடனேயே ‘ஹலோ‌  சத்‌யரா‌ஜ்‌  பே‌சுறே‌ன்’‌னு சொ‌ல்‌வே‌ன்‌.  இப்‌போ‌  அதை‌  கொ‌ஞ்‌சம்  ‌மா‌ற்‌றி‌‘வணக்‌கம்’‌னு சொ‌ல்‌ல ஆரம்‌பி‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌. ஏன்‌னா‌? சி‌ல நே‌ரத்‌தி‌ல்‌  அந்‌த ஆங்‌கி‌ல வா‌ர்‌த்‌தை‌  வரும்‌போ‌து சீ‌மா‌ன்‌  முகம்‌  எதுக்‌க வந்‌து நி‌க்‌கும்‌.

இந்‌த ஆவணப் ‌படத்‌‌தி‌ல்‌ சொ‌ல்‌லி‌யி‌ருக்‌கா‌ங்‌க.. ‘முத்‌துக்‌குமா‌ர்‌  பே‌சும்போ‌து தூ‌ய தமி‌ழி‌ல்‌தான்  பே‌சுவா‌ர்‌. அவர்‌  பே‌சும்‌போ‌து எங்‌களுக்‌கு சி‌ரி‌ப்‌பா‌  வரும்’‌னு... அதை‌ப் பற்‌றியெல்‌லா‌ம்  ‌கவலை‌ப்‌படா‌மல்‌  கொ‌ள்‌கை‌யோ‌டு வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌  அந்‌த மனி‌தர்‌. அந்‌தத் தம்‌பி‌ வி‌ட்‌டுப்‌ போ‌ன பணி‌யை‌  ‘பருத்‌தி‌ வீ‌ரன்’‌ மூ‌லம்‌  பெ‌ரி‌ய பெ‌யர்  ‌வா‌ங்‌கி‌ய அமீ‌ர்‌ அவர்‌களி‌டம்‌  நா‌ன்  ‌ஒப்‌படை‌க்‌கி‌றே‌ன்‌.  உலக சி‌னி‌மா‌வை‌யே‌ தி‌ரும்‌பி‌  பா‌ர்‌க்‌க வை‌த்‌தவர்‌  அமீர்‌.

ஒரு படை‌ப்‌பு  ‌எப்‌போ‌தும்‌ வசூ‌லி‌ல்  ‌தோ‌ல்‌வி‌யடை‌யக்‌ கூடா‌து. அதே நே‌ரத்‌தி‌ல்  ‌அவா‌ர்‌டும்‌  வா‌ங்‌கணும்‌. இந்‌த மா‌தி‌ரி  ‌நே‌ரத்‌தி‌ல்‌  பு‌ரட்‌சித் ‌தலை‌வருடை‌ய பா‌டல்‌தா‌ன்‌ எனக்‌கு ஞா‌பகம்‌   வரும்‌.  ‘சி‌ரி‌த்‌து வா‌ழ வே‌ண்‌டும்’‌  பா‌டலி‌ல்‌  ஒரு   வரி‌  வரும்‌.  ‘ரசி‌கன்‌  இல்‌லா‌த   அழகும்  ‌கலை‌யு‌ம்  ‌தூ‌ய்‌மை‌  கொ‌ள்‌ளா‌த மா‌ன்’‌ அப்படீன்னு. அதனா‌ல்‌  ரசி‌கன்‌  இல்‌லா‌த  அழகு எதற்‌கு?

அதே‌மா‌தி‌ரி‌தா‌ன்‌ ‘பருத்‌தி‌ வீ‌ரன்’‌  300  நா‌ள்  ‌ஓடி‌யது, அதே‌  நே‌ரத்‌தி‌ல்  ‌அந்‌தப்  படம்‌ வி‌ருதுகளையும் வாங்கிக் குவித்தது. அதனா‌ல்‌தா‌ன்‌  அது எல்‌லோ‌ருக்‌கும்‌ தெ‌ரி‌ந்‌தது. வெ‌றும்‌  அவா‌ர்‌ட்  ‌மட்‌டும்  ‌வா‌ங்‌கியி‌ருந்‌தா‌ யாரு‌க்‌கு தெ‌ரி‌யு‌ம்‌.

அமீ‌ர்  ‌ஸா‌ர்‌… எந்‌த கமர்‌ஷி‌யல்‌ வி‌ஷயங்‌களை‌யு‌ம்  ‌வி‌ட்‌டுடா‌தீ‌ங்‌க. குத்‌து பா‌ட்‌டு ஒண்ணுக்‌கு பத்‌தா‌  வை‌ங்‌க. நா‌ம ஜெ‌யி‌க்‌கனும்‌, நா‌ம சொ‌ல்‌ற கருத்‌தும்  ‌மக்‌கள்‌ மத்‌தி‌யி‌ல்  ‌போ‌ய்ச் ‌சே‌ரனும்‌. அதை‌த்தா‌ன்  புரட்சித் தலைவர் ‌எம்‌.ஜி‌.ஆர். ‌செ‌ய்‌தா‌ர்‌.  அவருடை‌ய முகத்‌தி‌ன்  ‌வா‌யி‌லா‌க பட்‌டுக்‌கோ‌ட்‌டை‌யா‌ரி‌னுடை‌ய பா‌டல்‌ வரி‌கள்‌  வெ‌ளி‌வந்‌த பின்புதா‌ன்‌  இடுப்‌பி‌ல்  ‌இருந்‌த துண்‌டு, தோ‌ளுக்‌கு போ‌னது. அதுதா‌ன்  ‌சி‌னி‌மா‌க்கா‌ரனுடை‌ய பணி‌. அதை‌ இங்கேயுள்ள  அமீ‌ர்‌, சி‌பி‌சந்‌தர்‌  போ‌ன்‌றவர்‌கள்‌  ‌செ‌ய்‌யணும்‌.

யா‌ரையெல்‌லா‌ம்  ‌சர்‌வதே‌ச   நீ‌தி‌மன்‌றத்‌தி‌ல்  ‌நி‌றுத்‌தி‌ அவர்‌களுக்‌கு தண்‌டனை‌  வா‌ங்‌கி‌க்  ‌கொ‌டுக்‌கணும்னு உலகத் தமிழர்கள் நினைக்கிறாங்களோ, அதை‌  ஒரு தமி‌ழ்‌ சி‌னி‌மா  ‌செ‌ய்‌தது என்‌ற பெ‌ருமை‌  நமக்குக் கிடைக்கணும்‌. அந்‌த அளவி‌ற்‌கு நா‌ன்‌ ஒரு இயக்‌குந  ர்‌கி‌டை‌யா‌து. அதை‌  அமீ‌ர்தான்‌  செ‌ய்‌யணும்‌”  என்று சொல்லி முடித்தார்‌.

இதற்குப் பின்பு மீண்டும் மைக்கைப் பிடித்த கவிஞர் அறிவுமதி, “இங்கே சத்யராஜ் பேசும்போது ஈழப் போராட்டம் குறித்து உலக சினிமாவை அமீர் எடுக்க வேண்டும் என்றார். ஏற்கெனவே அது தயாராகிவிட்டது. சிறைக் கொட்டடியில் இருக்கும் எனது தம்பி சீமான், அந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டான். மிக விரைவில் உலகத் தமிழர்களுக்காக, ஈழத்திற்காக ஒரு பகலவன் வரப் போகிறான்.. காத்திருங்கள்..” என்று சொல்லி முடித்தார்.

கேட்டுக் கொண்டிருந்த சீமானின் ரசிகர்கள் கை தட்டினாலும், பொதுவானவர்கள் முகம் பேயறைந்தாற்போல் ஆனது.. பிரபாகரன் ஆசைப்பட்ட ஈழத்தின் உண்மைக் கதையை விஜய்யை வைத்து 'பகலவனாக' எடுக்கிறாரா சீமான்..!?     ம்ஹும்.. வெறுத்துவிட்டது..!

கூட்டம் துவங்கியது முதல் இறுதிவரையில் அரங்கத்தின் இரு புறங்களிலும் நின்றபடியே நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த அளவுக்கு தமிழ் ஈழத்து உணர்வாளர்களி்ன் வருகை கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தது..!

இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும்போது அடுத்த நிகழ்ச்சியாகத் திரையிட இருந்த ஒரு ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்க்க பல தமிழர்கள் குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக காத்துக் கொண்டிருந்ததை பார்த்தபோது, ஒன்றும் சொல்ல முடியவில்லை..!

முத்துக்குமாருக்கு வீர வணக்கம்..!


ஆக்கத்தில் உதவி : ஜூனியர் விகடன் 05-09-10, kodambakkamtoday.com

38 comments:

பாலா said...

அண்ணே... பாவம்ண்ணே நீங்க.

இப்படி தட்டி தட்டியே வீணா போறீங்க.

பாலா said...

முத்துக்குமார் விசயத்திலும் எனக்கு உங்க கருத்தில் உடன்பாடில்லை. விவாதமாக்கலாம். ஆனா மரணதண்டனை பதிவு மாறி இழுத்துட்டு போய்.. கடைசில..

நீங்க.. லட்சுமணன் - திரை விமர்சனம் -ன்னு முடிச்சிடுவீங்க.

அதனால...........

pichaikaaran said...

நல்ல விரிவான பதிவு... நன்றி ..
இந்த கூட்ட்த்தில் உணர்வுபூர்வமாக பேசியவர்களில் பலர் , நாளை ஒரு அரசியல்வாதியை பாராட்டி பேசினாலும் ஆச்சரியப்பட முடியாது... உண்மையான தமிழ் உணர்வாளர்களும் உண்டு என்பதை மறுக்க முடியாது...

மகேஷ்.வெ said...

திரு முத்துக்குமார் அவர்களுடைய முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை , காரணம் , இருந்து போராடவேண்டிய ஒரு விஷயத்திற்கு , தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டது வருந்த தக்க நிகழ்வு.... உயிரோடு இருகின்றவர்களையே மதிக்காத இந்த உலகமும், அரசியல்வாதிகளும் .. இறந்தவர்களுக்கா அழ போகிறார்கள்... அவருடைய குடும்பத்திற்கு மிக பெரிய இழப்பு... வருடா வருடம் இப்படி ஒரு கூட்டம் போட்டு , செயற்கையாக அழுது கலைந்து விடுவார்கள் .

a said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நெகிழ வைக்கும் பதிவு உண்மையாரே!

நன்றி!

R. Gopi said...

பகிர்வுக்கு நன்றி. ஹாலிவுட் பால சொல்வதுதான் என் கருத்தும்.

priyamudanprabu said...

திரு முத்துக்குமார் அவர்களுடைய முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை , காரணம் , இருந்து போராடவேண்டிய ஒரு விஷயத்திற்கு , தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டது வருந்த தக்க நிகழ்வு.... உயிரோடு இருகின்றவர்களையே மதிக்காத இந்த உலகமும், அரசியல்வாதிகளும் .. இறந்தவர்களுக்கா அழ போகிறார்கள்... அவருடைய குடும்பத்திற்கு மிக பெரிய இழப்பு... வருடா வருடம் இப்படி ஒரு கூட்டம் போட்டு , செயற்கையாக அழுது கலைந்து விடுவார்கள் .

//

same

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
அண்ணே... பாவம்ண்ணே நீங்க.
இப்படி தட்டி தட்டியே வீணா போறீங்க.]]]

இதுவா வீண்..? நம்ம கடமை பாலா..! எத்தனையோ மேட்டரை டைப் பண்ணும்போது இதனை அவசியம் சொல்லியே ஆகணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

முத்துக்குமார் விசயத்திலும் எனக்கு உங்க கருத்தில் உடன்பாடில்லை. விவாதமாக்கலாம். ஆனா மரணதண்டனை பதிவு மாறி இழுத்துட்டு போய்.. கடைசில..

நீங்க.. லட்சுமணன் - திரை விமர்சனம் -ன்னு முடிச்சிடுவீங்க.

அதனால...........]]]

அப்பாடா தப்பிச்சேன்.. இதுலேயும் வாதம்னா.. இப்பத்தான் குளிர் காய்ச்சல் வந்து எந்திரிச்சிருக்கேன்.. மறுபடியுமா..? முடியாதுடா சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
நல்ல விரிவான பதிவு... நன்றி ..
இந்த கூட்ட்த்தில் உணர்வுபூர்வமாக பேசியவர்களில் பலர் , நாளை ஒரு அரசியல்வாதியை பாராட்டி பேசினாலும் ஆச்சரியப்பட முடியாது... உண்மையான தமிழ் உணர்வாளர்களும் உண்டு என்பதை மறுக்க முடியாது...]]]

அது வேறு வழியில்லாமல்..! அவர்கள் சார்ந்த தொழிலுக்காக அவர்கள் செய்கின்ற ஒரு சமரசம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Arulmozhi Varmar said...

திரு முத்துக்குமார் அவர்களுடைய முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் , இருந்து போராட வேண்டிய ஒரு விஷயத்திற்கு, தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டது வருந்ததக்க நிகழ்வு. உயிரோடு இருகின்றவர்களையே மதிக்காத இந்த உலகமும், அரசியல்வாதிகளும் இறந்தவர்களுக்கா அழ போகிறார்கள். அவருடைய குடும்பத்திற்கு மிக பெரிய இழப்பு... வருடா வருடம் இப்படி ஒரு கூட்டம் போட்டு, செயற்கையாக அழுது கலைந்து விடுவார்கள்.]]]

நேற்று நடந்த கூட்டம் அப்படிப்பட்டது அல்ல..!

முத்துக்குமாரின் தீக்குளிப்பு பற்றி கேள்விப்பட்ட உடனேயே நானும் துவக்கத்தில் உங்களைப் போலவே மாற்றுக் கருத்துதான் வைத்திருந்தேன். பின்பு யோசித்துப் பார்க்கும்போது அவனுடைய உண்மையான நோக்கம் தெரிந்து அவன் செய்தது தியாகம் என்பது புரிந்தது..!

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
பகிர்வுக்கு நன்றி அண்ணே.]]]

வருகைக்கு நன்றி யோகேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நெகிழ வைக்கும் பதிவு உண்மையாரே!

நன்றி!]]]

நன்றி ஜோதியாரே..!

உண்மைத்தமிழன் said...

[[[R Gopi said...
பகிர்வுக்கு நன்றி. ஹாலிவுட் பால சொல்வதுதான் என் கருத்தும்.]]]

நன்றி கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் பிரபு said...

திரு முத்துக்குமார் அவர்களுடைய முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை காரணம், இருந்து போராடவேண்டிய ஒரு விஷயத்திற்கு , தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டது வருந்த தக்க நிகழ்வு.... உயிரோடு இருகின்றவர்களையே மதிக்காத இந்த உலகமும், அரசியல்வாதிகளும் .. இறந்தவர்களுக்கா அழ போகிறார்கள்... அவருடைய குடும்பத்திற்கு மிக பெரிய இழப்பு... வருடா வருடம் இப்படி ஒரு கூட்டம் போட்டு, செயற்கையாக அழுது கலைந்து விடுவார்கள்.//

same]]]

சரி.. உங்களுடைய கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன் பிரபு..!

Ganesan said...

இந்த நிகழ்வை எம் கண்முன்னே படம் பிடித்து காட்டியதற்கு மிக்க நன்றி

பிரபல பதிவர் said...

பாலாவை வழி மொழிகிறேன்

Sanjai Gandhi said...

//அதையெல்லாம் இப்போ இங்க பேசினா.. சத்தியமா நான் நாளைக்கு வெளில இருக்க முடியாது..//

அதாவது, கொடுத்த கால்ஷீட்டுகளையும் சொந்த ஷூட்டிங்குகளையும் விட முடியாது.

//முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் ஒரு நாள் கலந்து கொண்டதைத் தவிர நாம் வேறு என்ன செய்தோம் என்ற ஒரு குற்றவுணர்வு எனக்கு இன்னிக்கும் இருக்கு.//

இந்த பொடலங்கா குற்ற உணர்வை வச்சிட்டு என்ன செய்ய முடியும்?

//த்தனை லட்சம் மக்களுக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட முத்துக்குமாரின் லட்சியம் உணர்வும் அவ்வளவு எளிதில் ஓய்ந்துவிடுமா..?//

பாஸ்.. டேக் ரெடியாம்.. கூப்டறாங்க..

//அதையும் தாண்டி அரசியலால்தான், போராட்டத்தால்தான் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க முடியும் என்ற நிலை வந்தால், அதையும் செய்வோம்..” //
சீமானுக்கு நல்ல பிஸ்னஸ் போல.. போட்டிட்டு அண்ணன் அமீரு ரெடி ஆய்ட்டார்.. வாழ்த்துகள்..

Sanjai Gandhi said...

புரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜ். //

இப்டி சொல்ல வெக்கமா இல்லையா?

//இப்‌போ‌ பே‌சும்‌போ‌துகூட மனசுல கணக்‌கு போ‌ட்‌டுத்தா‌ன் ‌பே‌சி‌கி‌ட்‌டு இருக்‌கே‌ன்‌. எங்‌கயா‌வது கொ‌ஞ்‌சம்‌ பே‌சி‌ட்‌டா‌லும்‌ மா‌ட்‌டி‌க்‌குவோமேன்னு..‌. //

விபச்சார புரோக்கர் மாதிரி இருக்கு இந்த பேச்சி..

//வெ‌ளி‌ப்‌படை‌யா‌க சொ‌ல்‌‌றனே.. ‌நா‌ன்‌ சொ‌குசா‌ பொ‌றந்‌து வசதி‌யா‌ வளர்‌ந்‌தவன்‌‌. அதனா‌ல்‌ என்‌னா‌ல கண்‌டி‌ப்‌பா ‌ஜெ‌யி‌லுக்‌கெல்லாம் போ‌க முடி‌யா‌து.//
ஆமா, பெரியார் எல்லாம் பிச்சை எடுத்து தான் வாழ்ந்தார்.. அதானால தான் தைரியமா ஜெயிலுக்கு போனார்.

//அதனா‌ல்‌தா‌ன்‌, அமீ‌ர்‌ சொ‌ன்‌ன மா‌தி‌ரி‌ என்‌ மனதி‌ல்‌ உள்‌ளதை‌ எல்‌லா‌ம்‌, சொ‌ன்‌னா‌ல் ‌இந்‌த ஜெ‌ன்‌மத்‌தி‌ல் ‌நா‌ன் ‌வெ‌ளி‌யவே‌ வரவே‌ முடி‌யா‌து.//

சம்பாதிச்சதெல்லாம் வெளிய இருந்து அனுபவிக்காம உள்ள போக முடியுமா? எதோ கூப்ட்டாங்களா.. மைக் குடுத்தாங்களான்னு இல்லாம என்ன இது சின்னப் புள்ளத்தனமா..

//ஒரு வருடம் ‌எல்‌லா‌ம் ‌கி‌டை‌யா‌து. நா‌ன்‌ அங்‌கே‌யே‌தா‌ன்‌ இருக்‌கணும்‌. என்‌னை‌ அறி‌யா‌ம எம்‌ஜி‌ஆர் ‌பா‌ட்‌டை‌ முணுமுணுப்‌பே‌ன்‌, அதே‌மா‌தி‌ரி‌ இருந்‌தி‌ருப்‌பே‌ன்‌. நா‌ன் ‌நடி‌த்‌த கடை‌சி ‌படம்‌ வெ‌ளி‌வரப்‌ போ‌கி‌ற ‘இரண்‌டு முகம்’‌படமாத்‌தா‌ன்‌ இருக்‌கும்‌. //

அதான.. இன்னும் எத்தனை நடிககளை கட்டி புடிக்கனும்.. எவ்ளோ காசு பார்க்கனும்.. அத விட்டு, ஈழமாம்.. முத்துகுமாராம்.. ஜெயிலாம்.. போங்கய்யா யோவ்..

மேலும் விவரங்களுக்கு
http://www.blog.sanjaigandhi.com/2010/09/blog-post.html

Thomas Ruban said...

//கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. புரியும்..!//

புரியுது அண்ணே..

பகிர்வுக்கு நன்றி அண்ணே.

Thomas Ruban said...

இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு பச்சவந்தி அரசியல்வாதிகள் மற்றும் நடிகை,நடிகர்களை கூப்பிடுவது தவறு என்பது என் கருத்து நன்றி .

Thomas Ruban said...

மற்றவர்கள் தியாகத்தில் தான் இந்த பச்சவந்தி அரசியல்வாதிகள் மற்றும் நடிகை,நடிகர்கள் குளிர் காய்வார்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[காவேரி கணேஷ் said...
இந்த நிகழ்வை எம் கண் முன்னே படம் பிடித்து காட்டியதற்கு மிக்க நன்றி]]]

வருகைக்கு நன்றி காவேரி..!

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...
பாலாவை வழி மொழிகிறேன்.]]]

அவருக்குச் சொன்ன பதிலையே உங்களுக்கும் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

//அதையெல்லாம் இப்போ இங்க பேசினா.. சத்தியமா நான் நாளைக்கு வெளில இருக்க முடியாது..//

அதாவது, கொடுத்த கால்ஷீட்டுகளையும் சொந்த ஷூட்டிங்குகளையும்விட முடியாது.]]]

உண்மைதான தம்பி.. நம்ம பொழைப்பையும் பார்க்கணும்ல்ல.. அதுக்காக அந்த விஷயம் பற்றிய தனது கருத்தை வெளியில் சொல்வதில் என்ன தப்பு..?

//முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் ஒரு நாள் கலந்து கொண்டதைத் தவிர நாம் வேறு என்ன செய்தோம் என்ற ஒரு குற்றவுணர்வு எனக்கு இன்னிக்கும் இருக்கு.//

இந்த பொடலங்கா குற்ற உணர்வை வச்சிட்டு என்ன செய்ய முடியும்?]]]

உனக்கு இல்லையா..? எனக்கும் நிறைய இருக்கு..? அட்லீஸ்ட் அவன் தீக்குளித்த காரணத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்..!

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

புரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜ். //

இப்டி சொல்ல வெக்கமா இல்லையா?]]]

எங்கிருந்த வந்த ஒரு அம்மாவை இந்தியாவின் தாய்ன்னு சொல்லும்போது இங்கேயே பிறந்து வளர்ந்த ஒரு தமிழனை புரட்சித் தமிழன்னு சொல்றது இன்னா தப்புண்ற..?

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...

//கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. புரியும்..!//

புரியுது அண்ணே..

பகிர்வுக்கு நன்றி அண்ணே.]]]

புரிஞ்சா சரிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...
இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு பச்சவந்தி அரசியல்வாதிகள் மற்றும் நடிகை, நடிகர்களை கூப்பிடுவது தவறு என்பது என் கருத்து நன்றி .]]]

அரசியல்வியாதிகளைவிட இவர்களை அழைத்தது நல்லது என்பேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...
மற்றவர்கள் தியாகத்தில்தான் இந்த பச்சவந்தி அரசியல்வாதிகள் மற்றும் நடிகை, நடிகர்கள் குளிர் காய்வார்கள்.]]]

எல்லாருமே இப்படியில்லை தாமஸ்..!

காலப் பறவை said...

அருமையான பதிவு...... நானும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன்....... வரும் 11ம் தேதி தேவநேய பாவாணர் அரங்கில் சந்திப்போம்

Unknown said...

சொரணை கேட்டுப் போன தமிழர்கள் வாழும் நாட்டில் வாழ்ந்து மறைந்த மாவீரன் முத்துகுமாருக்கு என் அஞ்சலிகள் ...

ராஜ நடராஜன் said...

உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு இந்த இடுகை இப்படியாவது ஒரு தூண்டுகோலாக ஒரு நிகழ்வு நிகழ்கிறதே என்கிற மாதிரியாகத்தான் இருக்கும்.எதிர்மறை பின்னூட்டங்கள் மாதிரி சிந்திப்பவர்களுக்கு நம்பிக்கையின்மையே இனிமேல் என்கிற மனோபாவம் தெரிகிறது.வரலாறுகள் என்பவை ஒரு சமூகம் எந்த திசையில் ஓடுகிறது என்பதைப் பொறுத்தது.திருப்பூர் குமரன் மாதிரி முத்துக்குமார் தமிழகத்தின் வரலாற்று முகத்தில் ஒட்டிகொண்ட பெயர்.

குமரன் கொடி பிடித்ததே தப்புங்கிற மாதிரி இருக்குது எதிர்மறைப் பின்னூட்டங்கள்.

நீங்க பின்னூட்ட பதிலடியில் பட்டைய கிளப்புங்கண்ணா!

அறிய தந்தமைக்கு நன்றி.

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...
அருமையான பதிவு...... நானும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன்....... வரும் 11-ம் தேதி தேவநேய பாவாணர் அரங்கில் சந்திப்போம்.]]]

நன்றி காலப்பறவை.. நிச்சயம் சந்திப்போம். அப்போதாவது நேரில் சந்தித்துப் பேசலாம்..! போன் செய்யுங்கள்..! 9840998725

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
சொரணை கேட்டுப் போன தமிழர்கள் வாழும் நாட்டில் வாழ்ந்து மறைந்த மாவீரன் முத்துகுமாருக்கு என் அஞ்சலிகள்.]]]

நன்றி செந்தில்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு இந்த இடுகை இப்படியாவது ஒரு தூண்டுகோலாக ஒரு நிகழ்வு நிகழ்கிறதே என்கிற மாதிரியாகத்தான் இருக்கும்.

எதிர்மறை பின்னூட்டங்கள் மாதிரி சிந்திப்பவர்களுக்கு நம்பிக்கையின்மையே இனிமேல் என்கிற மனோபாவம் தெரிகிறது.

வரலாறுகள் என்பவை ஒரு சமூகம் எந்த திசையில் ஓடுகிறது என்பதைப் பொறுத்தது.

திருப்பூர் குமரன் மாதிரி முத்துக்குமார் தமிழகத்தின் வரலாற்று முகத்தில் ஒட்டிகொண்ட பெயர்.

குமரன் கொடி பிடித்ததே தப்புங்கிற மாதிரி இருக்குது எதிர்மறைப் பின்னூட்டங்கள்.

நீங்க பின்னூட்ட பதிலடியில் பட்டைய கிளப்புங்கண்ணா!]]]

அறிய தந்தமைக்கு நன்றி.]]]

கட்சி சார்பாகவே சிலர் இதனைப் பார்ப்பதுதான் நமது துரதிருஷ்டம்..! வருகைக்கு நன்றி ராஜநடராஜன் ஸார்..!

தீப்பெட்டி said...

ரொம்ப நன்றி பாஸ்..

கந்தப்பு said...

உங்களின் உணர்வுக்கும் பதிவுக்கும் நன்றிகள்