கூடங்குளம்-அரசுகளின் அலட்சியத்திற்கு நாம் பலியாக வேண்டுமா..?

26-03-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்களுக்காக ஆட்சியா அல்லது ஆட்சியினருக்காக மக்களா என்ற கேள்விக்கு தற்போது நம் கண் முன்னே ஒரு காட்சி நடந்து கொண்டிருக்கிறது..!

சட்டமன்றத்தில் 'மாண்புமிகு அம்மா புரட்சித் தலைவி' என்று 500 முறை ஒப்பாரி வைத்தபடியே மாநிலத்தின் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் கொடுமை நடக்கும் அதே நேரம்.. 500 கி.மீ. தள்ளி.. தங்களது வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள பல மக்கள் கொடும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டினியை சட்டமன்றத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் உணரவில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். எப்படியும் அந்த மக்களே தங்களுக்குத் தாங்களே ஒரு முடிவைத் தேடிக் கொள்ளட்டும் என்ற முடிவுக்கே அவர்கள் வந்துவிட்டார்கள்.

கிட்டத்தட்ட 200 நாட்களுக்கும் மேலாக அறப் போராட்டம் தொடர்கிறது.. ஒரு சைக்கிளின் கண்ணாடிகூட சிதறிவிடாமல் கவனத்துடன் தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் அந்த மக்கள்..! 


தங்களது கிராமங்களுக்கு அருகில் இருக்கும் அணு உலையால் எதிர்காலத்தில் தங்களது வாரிசுகளுக்கோ தங்களுக்கோ எந்தவிதத்திலும் ஆபத்து நேரக் கூடாது என்ற உறுதிமொழியை அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசுகளிடம் கேட்கிறார்கள்..!

அவர்களுடைய சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு ஐயம் திரிபுற பதிலளித்து அவர்களது கவலையைப் போக்க வேண்டியது அரசுகளின் கடமை.. உலகம் முழுவதுமே அணு உலைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளும் மூடி வரும் நேரத்தில், நமது நாட்டில் மட்டும்தான் ஆரத்தி எடுத்து வரவேற்று குடி வைத்திருக்கிறார்கள். இதோ இப்போது கடைசியாக ஜப்பானில் கடைசி அணு உலைகளையும் மூடப் போகிறார்கள்..! அவர்களுடைய அணு உலைகளில் லேசாக கசிந்த வாயுவினால் எழுந்த பூகம்பத்தையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்களா..? தொழில் நுட்பமா..? என்ற கேள்விக்கு அவர்கள் மக்கள்தான் என்பதைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் அப்படியே நேருக்கு மாறாக இருக்கிறது. ஏற்கெனவே கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அணு உலையால் பாதிக்கப்பட்ட சுற்றுப்புற மக்களின் பரிதாப நிலைகள் பல குறும்படங்களாகவும், ஆவணப் படங்களாகவும் வெளிப்பட்டு அணுக் கதிர்வீச்சின் தீமையைச் சொல்லியிருக்கிறது. ஆனால் அவைகள் அத்தனையும் படிப்பறிவே இல்லாத, வெளியுலகம் அறியாத கிராமப்புற மக்களைத் தாக்கியிருப்பதால், இது சொந்த நாட்டு மக்களாலேயே அந்நியத்தனமாகப் பார்க்கப்படுகிறது..!

15000 கோடிகளைக் கொட்டியிருப்பதால் இதனை நடத்தியே தீருவோம் என்பதெல்லாம் சொத்தை வாதம்..! முதலிலேயே இந்த மக்களின் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு கொடுத்து தடுத்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு போயிருக்காது.. அப்போது ஒருங்கிணைப்பு செய்யவும் ஆட்கள் இல்லை.. அணு உலை பாதுகாப்பின்மை பற்றி அந்தப் பகுதி மக்களிடம் எடுத்துச் சொல்லவும் பொறுப்பானவர்கள் இல்லை..! 

இந்திய ஏகாதிபத்தியத்தில் டெல்லி சுல்தான்களாக அமர்ந்திருக்கும் மோடி மஸ்தான்கள் என்ன சொல்கிறார்களோ.. அதனை அப்படியே காலால் செய்து முடிக்கும் வெட்கம்கெட்ட மாநிலத்து அரசியல் நாய்கள், தங்களது அரசியல் பதவிக்காக, கட்சிப் பதவிக்காக, சொத்து, சுகத்திற்காக தன் சொந்த இனத்து மக்களையே புறக்கணிப்பது மகா கேவலம்..! 

இப்போது எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என இரண்டையுமே இணைத்துப் பிடித்து ஒரு வரிசையில் நிறுத்தியிருக்கிறது மத்திய கபோதி அரசு.. அவர்களுக்குத் தேவை வாங்கின கமிஷனுக்கு ஏற்றாற்போல் வேலை நடக்க வேண்டும்.. மாநில அரசுக்குத் தேவை.. தான் எதிர்காலத்தில் இருக்கப் போகும் அதியுயர் செல்லில் கொஞ்சம் காற்று வெளிப்பட வேண்டும்.. எதிர்க்கட்சிக்கு தங்களது பேரன்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்க வேண்டும்.. இந்த இரண்டு வெட்கங்கெட்ட அரசியல்வியாதிகள்தான் தமிழ் மண்ணின் மிகப் பெரிய சாபக்கேடு என்பதை நம் மக்கள் என்றைக்குத்தான் உணரப் போகிறார்கள்..?

சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் வாக்குப் பதிவுக்காகக் காத்திருந்து, அதன் பின்பு தனது முடிவைச் சொன்ன ஆத்தாவின் செயல் சத்தியமாக வேசித்தனம்தான்..! தனது பேரன்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, கட்சிக்கு இருக்கும் பெயரும் போய்விடக் கூடாது என்பதற்காக அணு உலையைத் திறக்க வேண்டும் என்று அறிக்கைவிட்ட உலக மகா யோக்கியர் மஞ்சத் துண்டு செய்ததும் பச்சை வேசித்தனம்தான்..! 

ஆனாலும் மக்களுக்கு புரிய வேண்டுமே..? தூத்துக்குடியில் இருந்து சங்கரன்கோவில் ஏதோ 1000 கிலோ மீட்டர் தள்ளியிருப்பது போல் நினைத்து வாங்கின காசுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்த இந்த மக்களையும் நினைத்தால் கோபம் வரத்தான் செய்கிறது..! தன் வீட்டு வாசலுக்கு தானே புயல் வந்தால்தான் தான் கதறி அழுவேன்.. பக்கத்து தெருவில் எவன், எப்படி செத்தாலும் எனக்கு கவலையில்லை என்பதும் நமது பண்பாடாகிவிட்டது..! சுயநலம் சார்ந்தே நாம், நமது குடும்பம், நம் பிள்ளைகள்.. நமக்காக என்று இதற்காகவே குடும்பத்தை வளர்த்தெடுக்கும் நமது வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்..? 

மாவட்ட மக்கள் அங்கே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதுவும் இன்றோடு சேர்த்து 8 நாட்கள் ஆயிற்று.. அந்த ஊரையே போலீஸ் படையை வைத்து முற்றுகையிட்டு சொந்த நாட்டு மக்களையே பட்டினி போட்டிருக்கிறோம் என்ற ஒரு சிறிய குற்றவுணர்ச்சியைக்கூட வெளிக்காட்டிக் கொள்ளாத இந்த அரசையும், அதற்குத் தலைமை தாங்குபவரையும் கண்டிக்கவோ, திட்டவோ வார்த்தைகளே கிட்டவில்லை..!


உதயகுமார் என்னும் தோழர், தனது குடும்பத்தையெல்லாம் மறந்துவிட்டு பொது நலத்துடன் அரை ஆண்டாக இடிந்தகரை மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து நடத்திவரும் இந்தப் போராட்டத்தை ஊடகங்களும், சக்தி பெற்ற ஸ்தாபனங்களும் முடிந்த அளவுக்கு திசை திருப்பி வந்தன.. இப்போதும் அதையேதான் செய்து வருகின்றன..! 

நிபுணர் குழு முன்பாக அமைதிக் குழு வைத்த கேள்விகளுக்கும், எழுப்பிய கோரிக்கைகளுக்கும் பதில் இல்லை..! அவர்கள் சொல்வது மின் தட்டுப்பாடு.. ஆகவே இது அவசியம் தேவை..! தேவைதான்.. வீட்டில் கரப்பான் பூச்சி அதிகம் இருந்தால், பூச்சி மருந்து அடிக்கத்தான் வேண்டும். ஆனால் எப்போது அடிப்பார்கள் தெரியுமா..? வீட்டில் யாரும் இல்லாத பொழுது.. அதுவும் குழந்தைகள் அந்த மருந்தை கொஞ்சம்கூட ஸ்மெல் செய்துவிட முடியாத நேரத்தில்.. அவர்கள் பள்ளிக்குச் சென்ற காலை நேரத்தில்.. வீட்டை பூட்டி விட்டுச் செல்லும் நேரத்தில்தான் மருந்தடிப்பது வழக்கம்.. 

டைனிங் டேபிளில் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. வீட்டில் மருந்தடிக்கும் பைத்தியங்களை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா..? இங்கேதான்.. தமிழ்நாட்டில் இப்போது இதுதானே நடக்கிறது..? அது அதற்கு இடம், பொருள், ஏவல், வேலை, நேரம் பார்த்துச் செய்யப்பட வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு தோதான இடம் கிடைத்தவுடன் செய்திருக்கிறேன் என்கிறார்களே.. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..?

பக்கத்தில் கடல் இருக்க வேண்டுமா..? ஏன் கொச்சிக்கு போகலாமே..? மும்பையில்கூட இன்னொரு அணு உலையை அமைக்கலாமே..? ஆந்திராவின் நெல்லூர் பக்கத்தில் போய் வைக்கலாமே..?  வங்காளத்தின் கடற்கரைப் பகுதிக்கு போகலாமே.. ஆனால் எதற்கு தமிழகம்..? இங்கேதான் டெல்லி போடும் பிச்சைக் காசை பொறுக்கித் தின்னும் கேவலங்கெட்ட அரசியல் நாய்கள் நிறையவே இருக்கின்றன.. கையது, வாயது பொத்தி.. தனக்கும், தன் குடும்பத்திற்கும் தேவையானதை மட்டும் பெற்றுக் கொண்டு, இவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களைத்தான் சுடுகாட்டில் வசிக்கச் சொல்கிறார்கள்..! உலகில் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் இருந்திருக்காது..! 

8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் உதயகுமார் மற்றும் அவரது தோழர்களின் நிலைமை இப்போது கவலையாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.. அவர்களது உயிருக்கு இனி யார் பொறுப்பு..? எந்த அமைச்சராவது இதனைக் கண்டு கொண்டாரா..? அவர்களுக்கோ யார் மாண்புமிகு புரட்சித் தலைவி என்ற வார்த்தையை அதிகம் தடவை சொல்வது என்பதிலேயே கவனம் இருக்கிறது..! இந்தக் கேடு கெட்டவர்கள் முதலில் தங்களது குடும்பத்தினரை அந்த அணு உலையின் பக்கத்தில் கொண்டு போய் வைத்துக் காட்டட்டுமே..? மக்களே.. எமது குடும்பத்தினரும் இங்கேதான் குடியிருக்கப் போகிறார்கள். பயப்பட வேண்டாம் என்று.. முடியுமா அவர்களால்..?

ஒரு அமைச்சர் ஊதுகுழல் ஊதுகிறார். விமானத்திலேயே வந்து மோதினால்கூட அணு உலை உடையாது என்று.. “ஐயா அமைச்சரே.. நீரும் உம் பிரதம அமைச்சரும் அவர்தம் குடும்பத்தினரும் ஒரே விமானத்தில் வந்து மோதிக் காட்டுங்களேன்.. அதன் பின்பு இந்த போராட்டத்தை நாங்கள் கை விடுகிறோம்..” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தாகிவிட்டது.. சூடு, சொரணை என்றால் என்னவென்றே தெரியாத இந்த அரசியல் ஓநாய்களிடம் வேறு எந்த மொழியில் சொன்னால்தான் புரியும் என்றே தெரியவில்லை..!

20 ஆண்டுகளுக்கு முன்னால் தீபாவளிக்கு வாங்கிய வெடிகள் ஒரு மாதம் வரையிலும் வீட்டில் வைத்திருந்து வெடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. காலம் மாறி, சூழலும் மாறி, தட்பவெப்ப நிலையும் மாறி, சுற்றுப் புறச் சூழல் மாசுபடுகிறதே என்பதற்காக வெடி வெடிப்பதற்கும் ஒரு நேரத்தை ஒதுக்கி இந்த நேரத்தில் வெடித்துக் கொள்ளுங்கள் என்று அரசு சொன்னதற்கு யாராவது மறுப்புத் தெரிவித்தார்களா..? போராட்டம் நடத்தினார்களா..? இல்லையே..? வெடிகள் வாங்குவதையே கொஞ்சம், கொஞ்சமாக நிறுத்தி வருகிறார்கள் மக்கள். அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.. 2 நிமிட கொண்டாட்டத்திற்கு எதற்காக அழுக வேண்டும் என்று..! மக்கள் காலத்திற்கேற்றாற்போல் இது போன்று மாறவும் தயங்கவில்லை..!

ஆனால் இதே மக்கள்தான் நமது அரசுகளின் சர்வ அலட்சியத்தையும் மனதில் வைத்து அந்த அணு உலை தங்களுக்குத் தேவையில்லை என்கிறார்கள்.. இதனை ஏற்றுக் கொள்வதுதான் அரசுகளின் கடமை.. பொறுப்பு..! உலக அரசியல் அரங்கில் நடைபெறும் பனிப்போரில் தங்களது குடும்பத்தினரை பணயம் வைக்கவா தமிழகத்து மக்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள்..? அவர்கள்தான் சாக வேண்டுமா என்ன..? அரசியல்வியாதிகளின் பிள்ளைகளையும், அணு உலை வேண்டும் என்பவர்களின் பிள்ளைகளையும் அங்கே வேலைக்கு சேரச் சொல்லுங்களேன்.. பார்க்கலாம்..!?

அரசுகள் எந்த வழிகளில் நம்மை மடக்கப் பார்க்கிறார்களோ.. அதே வழியில் நாமும் அவர்களுடன் மோதுவோம்..! நாம் குனிந்தே இருந்தால் குட்டத்தான் செய்வார்கள்.. நிமிர்ந்தே நிற்போம்.. எப்போது குனிவோம் என்று அவர்கள் காத்திருக்கட்டும்..! ஆனால் நமது பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கும். அந்த எல்லையை அரசுகள் தொடும்வரையிலும் இந்த அறப் போராட்டம் நீடிக்க வாழ்த்துகிறேன்..! ஏதோ ஒரு முடிவுக்கு வராமல் இப்பிரச்சினைக்கு தீர்வு என்பது சாத்தியமில்லை..! அந்த முடிவு நாம் எடுத்ததாகவே இருக்க வேண்டும்..!

அதற்காகவே இந்த நேரத்தில் அண்ணன் உதயகுமாரிடம் நாம் வேண்டிக் கொள்கிறேன்.... இந்தச் சோற்றால் அடித்த பிண்டமாக சூடு, சொரணையில்லாத வெட்கங்கெட்ட அரசியல் ஜென்மங்களை நம்பி நமது உயிரைப் பணயமாக்குவது வீண் விரயம்.. அதுவும் உதயகுமார் போன்ற போராளிகள் நீண்ட பயணம் செய்ய வேண்டியுள்ளது. மக்கள் நலப் பணிகளில் அவர் ஆற்ற வேண்டிய செயல்கள் நிறையவே உண்டு. ஆகவே, அவரும் அவரது குழுவினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடாக அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை வேறு வழிகளில் தொடர வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

55 comments:

muthukumaran said...

பேய் அரசாளும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள்

வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை..

ஆர்வா said...

பதிவு ரொம்ப ஹார்ஷா இருக்கு.. ஆனாலும் உண்மைதான்.. ஒரு சைக்கிள் கண்ணாடி கூட உடையாமல் என்று அவர்கள் போராட்டத்தை சொல்லியது, அவர்களின் அகிம்சை மன உறுதிக்கு அக்மார்க் சான்று.. நம்மால் இதற்கு என்ன உதவி செய்ய முடியும்? அவர்களின் துயரை துடைக்க எதாவது செய்ய முடியுமா?அதுவும் இத்தனை வலிமை வாய்ந்த அரசை எதிர்த்து? ஆனாலும் செய்ய வேண்டும் என்ற ஒரு வேட்கை... என்ன செய்ய, அவர்களின் பார்வையில் நாம் ஆஃப்டர்ஆல் பொதுஜனம்...

பலசரக்கு said...

அருமையான பதிவு. பெங்களூருவில் ஜெயலலிதா தண்டனை அடைய வேண்டும், இந்த அப்பாவி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தமைக்கு. "உங்களில் ஒருத்தி" என்றார்!!! தான் ஒரு சிறந்த நடிகை என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார். மக்களின் பாவம் சும்மா விடாது...

bandhu said...

அதிலும் தினமும் ஒரு மிஸ்லீடிங் தலைப்பு தரும் தினமலர் இருக்கிறதே.. கொடுமை. இவர்களுக்கெல்லாம் பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருப்பதே தெரியாதா?

smart said...

Plz read below blogs
http://naanoruindian.blogspot.com/
http://jayabarathan.wordpress.com/

உலக சினிமா ரசிகன் said...

லட்சக்கணக்கான உண்மைத்தமிழர்களின் நேர்மையான கொதிப்பை பதிவாக்கி உள்ளீர்கள்.
அன்னா ஹசாரே போன்ற கார்ப்பரேட் காந்திகளுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் உதயகுமாருக்கு கிடைக்காது.
நாம் ஊதும் சங்கு மத்திய,மாநில செவிடர்களுக்கு கேட்காது.

[கேட்கும் திறனிருந்தும்...
கேட்காது போல் நடிக்கும் ஜென்மங்களைத்தான் நான் செவிடன் என்றழைப்பது வழக்கம்]

G.Ganapathi said...

அணு உலைகளில் லேசாக கசிந்த வாயுவினால் எழுந்த பூகம்பத்தையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
///

அண்ணே அதித உணர்சிவயத்துல சிக்கிட்டிங்கனு நினைக்கறேன் ... இது எல்லாம் தப்பான தகவல் அண்ணே :( நாம எதனை பதிவு செய்கிறோம் மிகவும் முக்கியம் எதிர்கால நலனுக்கு .)

Unknown said...

அணு உலைகளில் லேசாக கசிந்த வாயுவினால் எழுந்த பூகம்பத்தையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
///

அண்ணே அதித உணர்சிவயத்துல சிக்கிட்டிங்கனு நினைக்கறேன் ... இது எல்லாம் தப்பான தகவல் அண்ணே :( நாம எதனை பதிவு செய்கிறோம் மிகவும் முக்கியம் எதிர்கால நலனுக்கு .)ஆனாலும் மக்களுக்கு புரிய வேண்டுமே..? தூத்துக்குடியில் இருந்து சங்கரன்கோவில் ஏதோ 1000 கிலோ மீட்டர் தள்ளியிருப்பது போல் நினைத்து வாங்கின காசுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்த இந்த மக்களையும் நினைத்தால் கோபம் வரத்தான் செய்கிறது..! தன் வீட்டு வாசலுக்கு தானே புயல் வந்தால்தான் தான் கதறி அழுவேன்.. பக்கத்து தெருவில் எவன், எப்படி செத்தாலும் எனக்கு கவலையில்லை என்பதும் நமது பண்பாடாகிவிட்டது..! சுயநலம் சார்ந்தே நாம், நமது குடும்பம், நம் பிள்ளைகள்.. நமக்காக என்று இதற்காகவே குடும்பத்தை வளர்த்தெடுக்கும் நமது வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்..?// unga judgement romba thappunne/romba sari/konjam mikai/romba unarchchi

RAVI said...

மீடியா பன்னிப்பயலுகளும், பன்னிப்பய அரசுகளும் உதயகுமாரை கொச்சைப் படுத்தியது உண்மைதான்.
உங்கள் கட்டுரயின் கடைசிவரிகள் அருமை.
உதயகுமாரே உண்ணாவிரத்தை கைவிடு.ஏனென்றால் உன்னை மாதிரி உண்மை ஆட்கள் நீண்டநாட்கள் வாழவேண்டும்.

உண்மைத்தமிழன் said...

[[[Muthukumaran Devadass said...

பேய் அரசாளும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.]]]

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே சொல்லிக் கொண்டிருப்பது..? பெருவாரியான மக்கள் தங்களைச் சுரண்டியெடுப்பது யார் என்பதை எப்போதுதான் உணர்வார்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[கவிதை காதலன் - மணிகண்டவேல் said...
பதிவு ரொம்ப ஹார்ஷா இருக்கு.. ஆனாலும் உண்மைதான்..]]]

இதுக்குத்தான் இதுவரைக்கும் எழுதாம இருந்தேன். எனக்கு இப்படித்தான் வரும்..!

[[[ஒரு சைக்கிள் கண்ணாடி கூட உடையாமல் என்று அவர்கள் போராட்டத்தை சொல்லியது, அவர்களின் அகிம்சை மன உறுதிக்கு அக்மார்க் சான்று.. நம்மால் இதற்கு என்ன உதவி செய்ய முடியும்? அவர்களின் துயரை துடைக்க எதாவது செய்ய முடியுமா? அதுவும் இத்தனை வலிமை வாய்ந்த அரசை எதிர்த்து? ஆனாலும் செய்ய வேண்டும் என்ற ஒரு வேட்கை... என்ன செய்ய, அவர்களின் பார்வையில் நாம் ஆஃப்டர்ஆல் பொதுஜனம்...]]]

நம்மால் முடிந்த எதிர்ப்புகளை, முடிந்த வழிகளில் தெரிவிப்போம் நண்பரே..!? வேறு என்ன செய்வது..?

Unknown said...

”நெஞ்சு பொறுக்குதில்லையே”

உண்மைத்தமிழன் said...

[[[arunrajamani said...

அருமையான பதிவு. பெங்களூருவில் ஜெயலலிதா தண்டனை அடைய வேண்டும், இந்த அப்பாவி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தமைக்கு. "உங்களில் ஒருத்தி" என்றார்!!! தான் ஒரு சிறந்த நடிகை என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார். மக்களின் பாவம் சும்மா விடாது.]]]

ஹா.. ஹா.. நடிப்புத் திறமையை ஆத்தா என்னமாய் வெளிப்படுத்துகிறார் என்பது இந்த 2 மாதங்களில் கண்கூடாகப் பார்த்தாகிவிட்டது..! இந்தம்மா ஜெயிலுக்குப் போனாலாவது தமிழகத்து அரசியலில் ஏதாவது மாற்றம் நிகழுமா என்று பார்ப்போம்..!

James Anand said...

ஜப்பான் தன் அனு உலைகளை மூட போகிறது என நீங்களே தவறான செய்திகளை பரப்பி கொண்டு இருக்கிறீர்காள்.

ஜப்பான் தன் அனு உலைகளை தற்காலிமாக மூடி பின் சோதனைக்கு பின்னர் திறக்க முடிவு செய்து இருக்கின்றனர்.

எதுக்கு இந்த பிழைப்பு

James Anand said...

முதலில் போராட்டமே தவறு , போராட்ட தலைவரும் ஏதோ விஞ்சானி போல உளருகிறார். இவங்களுக்கு பிராஜ்க்ட் மேப் வேண்டுமாம் .

எந்த போராட்டமாக இருந்தாலும் உண்மை இருந்தால் தான் வெற்றி பெறும்

James Anand said...

இப்படி உணர்ச்சி வசபட்டு தப்பு தப்பான எழுதினா இனி நீங்க எந்த பதிவும் நம்பிக்கை இல்லாம தான் மக்கள் படிப்பார்கள்.

சீனாவில் 32 அனு உலைகள் கட்டபட்டு வருகின்றன.அப்ப அவங்க கேனை பசங்களா?

ராஜ் said...

அண்ணே....
பொத்தாம் பொதுவா சொல்லி இருக்கேங்க...

//15000 கோடிகளைக் கொட்டியிருப்பதால் இதனை நடத்தியே தீருவோம் என்பதெல்லாம் சொத்தை வாதம்..//
இதை ஏத்துக்க முடியாது... 15000 கோடி நம்ப பணம்.....அதை எப்படி போன போகட்டும்னு விட முடியும்.... 1988-ல ஆரம்பிச்சு 2004-ல கட்டி முடிக்க பட்ட ப்ராஜெக்ட்..அதை போய் எப்படிங்க கவர்மென்ட் மூடும்....
தோத்து போயிடுவோம்னு தெரிஞ்சே உதயகுமார் போராட்டம் பண்ணி இருக்கார்....
ஜெ முதல்வன் ரகுவரன் சொல்லற மாதிரி """"அகலாது அணுகாது ஒரு தொலை நோக்கு பார்வையோட பாத்து ஒரு தீர்க்கமான முடிவாத்தான் எடுத்து இருகாங்க""""
முதலயே ஜெ உதயகுமாரை கால்ல விழ வச்சு இருப்பாங்க..(இப்ப பண்ணுன மாதிரி, இப்ப அவரு கால்ல விழுந்து அழுதாலும் அவர்க்கு கண்டிப்பா திகார் ஜெயில் தான், மொத்தம் 156 கேஸ் இருக்கு அவர் மேல, முக்காவாசி நான்-பெயில்பல்)...
ஆனா 2 மணி நேரம் இருந்த மின் வெட்டை 10 மணி நேரம் ஆக்கி மக்களுக்கு கூடங்குளம் இருந்தா தான் உங்களுக்கு கரண்ட் என்கிற மாதிரி ஒரு என்னத்தை விதைச்சங்க... கூடங்குளம் மக்கள், அப்புறம் உங்களை மாதிரி கொஞ்சம் பேரை தவிர எல்லோருக்கும் கூடங்குளம் வேணும்..கரண்ட் இல்லாம இருக்க முடியாது பாருங்க...
எங்க ஊருல (தேனி மாவட்டம்) நான் நிறைய பேரு கிட்ட பேசுன அப்ப இந்த விஷயம் தெரிஞ்சுது...3 மாசத்துக்கு முன்னாடி கூடங்குளம் போராட்டத்தை ஆதரிச்சு பேசுன எங்க ஊரு ஆளுங்க இப்ப 10 மணி நேரம் கரண்ட் கட்க்கு அப்புறம் உதயகுமாரை புடிச்சு ஜெயில் போடணும்ன்னு பேசுறாங்க.. அது தான் ஜெ கிடைச்ச வெற்றி...
அப்புறம் கவர்மென்டை எதிர்த்து யாராலுமே ஜெய்க முடியாதுன்னு மறுபடியும் நிரூபணம் ஆகி இருக்கு.....
உ.தா: அண்ணா ஹசாரே, இன்னும் லோக்பால் வரலை...
உதயகுமார்: என் மீது போட பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றால் போராட்டத்தை கை விடுவேன்....
கவர்மென்ட்/ போலீஸ் சப்போர்ட் இல்லாமல் எந்த போராட்டமும் வெற்றி பெற்றதாய் நவீன காலத்தில் வரலாறு கிடையாது.

rasikan said...

//சீனாவில் 32 அனு உலைகள் கட்டபட்டு வருகின்றன.அப்ப அவங்க கேனை பசங்களா?//
மனித உரிமைகள் மறுக்கப் படும் சீனாவில் புதிய அணு உலைகள் கட்டுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது.

rasikan said...

//15000 கோடிகளைக் கொட்டியிருப்பதால் இதனை நடத்தியே தீருவோம் என்பதெல்லாம் சொத்தை வாதம்..//
இதை ஏத்துக்க முடியாது... 15000 கோடி நம்ப பணம்.....அதை எப்படி போன போகட்டும்னு விட முடியும்.... //
தனி மனிதனால் ஒரு லட்சத்தி 27 ஆயிரம் கோடி பணம் லஞ்சமாய் களவாடப் படும் ஒரு நாட்டில் பல லட்சம் மக்களுக்காக 15000 கோடியை முடக்குவதில் என்ன தவறு.

rasikan said...

raaj
தினமலரை மட்டும் வாசிக்கும் உண்மை வாசகன் என்று தெரிகிறது

rasikan said...
This comment has been removed by the author.
rasikan said...

we use cobalt 60 to take radiography in pressure vessels. There is a possibility for death if any leakage occurred during radiography. cobalt 60 are nothing when compared to uranium. See the below link how an Indian University handled a radiography material.

http://www.allvoices.com/contributed-news/5712624-radiation-from-cobalt60-kills-delhi

சிவானந்தம் said...

சரவணன் உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆனால் இந்த பதிவு வருத்தமளிக்கிறது.

இப்போது அணு உலை எதிர்பாளர்கள் ஜப்பானைதான் கெட்டியாக பிடித்துக் கொண்டிருகிறார்கள். ஆனால் நிஜத்தில் ஜப்பானுக்கு பக்கத்திலேயே இருக்கிற சவுத் கொரியா இதை பார்த்து பயந்த மாதிரி தெரியல. அதேபோல் வியட்நாம் நாடும் அணுஉலை ஆரம்பிக்க ஜப்பானிடமே ஒப்பந்தம் போட்டிருக்கு.

இது எப்படி இருக்குன்னா, ஒரு வீடு பத்தி எரியும் போது பக்கத்து வீட்டுகாரங்களே இதை ஒரு விபத்தா பார்க்க, அதாவது அபாயமா நினைக்காம தைரியமா இருக்க, எங்கியோ தூரமா இருகிறவன் லபோ திபோன்னு கத்தற கதைதான். கூடங்குளம் போராட்டம் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

“Nuclear power is important for Vietnam’s energy security, but, like fire, it has two sides,” said one of the students, Nguyen Xuan Thuy, 27. “We have to learn how to take advantage of its good side.”- இது நியுயார்க் டைம்ஸில் சமீபத்தில் படித்தது.

ஒரு பெண்ணை பற்றி அந்த பெண்ணை பெற்றவ்னுக்கும், கட்டியவனுக்கும் தெரியாத விஷயங்களா மற்றவர்களுக்கு தெரிந்து விடப்போகிறது? அதேபோல் அணுவினால் ஏற்படக்கூடிய ஆபத்தை, அணுகுண்டை போட்ட அமெரிக்காவுக்கோ அல்லது அதை வாங்கிக் கொண்ட ஜப்பானுக்கா தெரியாது? அவர்களே இந்த சனியனை கட்டி அழும்போது, `அவர்களுக்கு அறிவில்லை, எங்களுக்குத்தான் இருக்கிறது` என்று சிலர் சொன்னால், இதற்கு எப்படி பதிலளிப்பது? - இது எனது பதிவில் நான் எழுதியது.

இதற்கு மேல் பதில் சொல்லத் தெரியவில்லை.யதார்த்தமாக சிந்திக்காமல் உணர்சிவசபடுபவர்களிடம் வாதம் பண்ணுவது சிரமம். நானும் இது குறித்து சில பதிவுகள் போட்டிருக்கிறேன் நேரம் இருந்தால் வந்து பாருங்கள்.

ராஜ் said...

@rasikan
////தினமலரை மட்டும் வாசிக்கும் உண்மை வாசகன் என்று தெரிகிறது///
////தனி மனிதனால் ஒரு லட்சத்தி 27 ஆயிரம் கோடி பணம் லஞ்சமாய் களவாடப் படும் ஒரு நாட்டில் பல லட்சம் மக்களுக்காக 15000 கோடியை முடக்குவதில் என்ன தவறு./////

ஏங்க இப்படியே அவன் 1.76 லட்சம் கோடி கொள்ளை அடிச்சான், இவன் 20 லட்சம் கோடி கொள்ளை அடிச்சான்னு, பேசிகிட்டேன் இருந்தா ஒன்னுமே நடக்காது... கம்பேர் பண்ணுறது வேலைக்கே ஆகாது...

நம்ப ஊருல லஞ்சம ஊழல்களை ஒழிக்கவே முடியாது... அதை எல்லாம் 2 வருஷத்துக்கு ஒரு தடவை ஷங்கர் தன்னோட படத்துல மட்டும் தான் ஒழிப்பார்......

நான் சொல்ல வரது ஒன்னு தான்... கவர்மென்ட் ரொம்ப பவர்புல்..அதை எதிர்த்து பதிவு வேணா போடலாம் (அதுவே பெரிய சலுகை நமக்கு, ஏனா சைனால பிளாக்கர் , பேஸ் புக் எல்லாமே பிளாக் (Blocked)..) அங்க கவர்மென்ட்க்கு எதிரா பேசுனாலே ஜெயில் தான். அது போக அங்க எலெக்ஷன்னு ஒன்னு கிடையவே கிடையாது.. இங்க எவ்வளவோ பரவாயில்ல...

இப்படி அவங்க ஊரையும் நம்ப ஊரையும் கம்பேர் பண்ணி சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்..

ஆமாங்க நான் தினமலரை தான் படிக்கிறேன்...முன்னாடி தினகரன் வாங்கிட்டு இருந்தேன்..விளம்பரம் ரொம்ப ஜாஸ்தியா இருந்திச்சு..இப்ப தினமலர் தான் வாங்குறேன்....

rasikan said...

//ஒரு பெண்ணை பற்றி அந்த பெண்ணை பெற்றவ்னுக்கும், கட்டியவனுக்கும் தெரியாத விஷயங்களா மற்றவர்களுக்கு தெரிந்து விடப்போகிறது?//

இதப் படிச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது..எந்த உலகத்துல சார் இருக்கீங்க ... ஊர்ல கள்ளகாதல் விவகாரம் எல்லாம் பக்கத்து வீட்டுக்காரனும் , சொந்தக்காரனும் சொல்லித் தான் புருஷனுக்கே தெரியுது. நீங்க இன்னும் வளரனும் தம்பி..

Rajaraman said...

ஏம்ப்பா தம்பி சரவணா உன்னுடைய பிதற்றலில் அணு உலை எதிர்ப்பை விட ஜெயலலிதா அவர்களை தாக்கும் எண்ணமே மேலோங்கியுள்ளது. இது எப்படியிருக்குன்னா எதையோ பார்த்து ஏதோ குலைத்து போலுள்ளது..

Rajaraman said...

நீயெல்லாம் சினிமா செய்தி எழுத தான் லாயக்கு.. போ போய் அத செய் அத விட்டுட்டு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி வாந்தி எடுக்காதே

சிவானந்தம் said...

@rasikan

//இதப் படிச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது..எந்த உலகத்துல சார் இருக்கீங்க ... ஊர்ல கள்ளகாதல் விவகாரம் எல்லாம் பக்கத்து வீட்டுக்காரனும் , சொந்தக்காரனும் சொல்லித் தான் புருஷனுக்கே தெரியுது. நீங்க இன்னும் வளரனும் தம்பி..//

நினைச்சேன். லாஜிக்கா பேசாமா குதர்க்கமா பேசறவங்க கிட்ட இப்படிதான் பதில் வரும்.

சோத்துலதான் ஒரு சோற பதம் பாத்தா போதும். ஆனா ஊர்ல ஒருத்தி படி தாண்டறத வச்சி எல்லோரையும் குறை சொல்லக் கூடாது. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளால், அணு உலைகள் ஆபத்தானவை என தெரிந்தும், இதை கைவிட முடியவில்லை. ஆனா இதையெல்லாம் மக்களிடம் யாரும் சொல்வதில்லை. இது மக்களுக்கு தேவை இல்லாத விஷயம். ஏதோ ஒரு நாடு கை விடப்போறேன்னு சொன்னத மட்டும் விடாப்பிடியா மக்கள் கிட்ட சொல்லி அவங்களை பயமுறுத்தனும்.

மக்களுக்கு இப்படியே வழி காட்டுங்க. நாடு சீக்கிரம் முன்னேறிடும்.

Rajasankar said...

உதய குமார் என்ன விஞ்ஞானியா அணு உலை பத்தி எல்லாம் ஆராய்ந்து சொல்வதற்கு? உடனே எங்களுக்கு எல்லாமே தெரிந்தாகவேண்டும் என்பீர்கள். காய்ச்சல், சளி வந்தா சாப்பிடுறீங்களே குரோசின், விக்ஸ் 500 அதெல்லாம் எப்படி ஒழுங்கா தயாரிக்கபடுதுன்னு தெரியுமா? நூடுல்ஸ் இருந்து எல்லாமே எப்படி தயாரிக்கறாங்க அப்படீன்னு தெரிஞ்சுட்டு தான் சாப்பிடறீங்களா?

சும்மா அணு உலை == அணு குண்டு ந்னு பயம் காட்டி கொஞ்ச நாள் ஒட்டினது முடிஞ்சி போச்சு. ஆட்டம் காலி படுதா மிச்சம் என அவுங்க அவுங்க வேலைய பார்க்க போகவேண்டியது தான்.

Anonymous said...

நாள் முழுக்க சீரியல் பார்த்து வளரும் நம் தமிழ் சமூகம் வளர எந்த அறிகுறியும் இல்லை...எக்கேடும் கெட்டு போகட்டும் என்ற நிலை தான் இப்போது என்னது...

உங்கள் கோரிக்கை நிறைவேறிற்று...

வருண் said...

***குரோசின், விக்ஸ் 500 அதெல்லாம் எப்படி ஒழுங்கா தயாரிக்கபடுதுன்னு தெரியுமா?***

WoW!!!

அண்ணே அறிவியலோட கலந்து "ஆத்தாயிஷம்" பேசுது!!!

க்ரோசின், விக்ஸ்ல எல்லாம் வேற எதையும் கலந்தா அதோட அந்த கம்பெனிக்காரனுக பிச்சை எடுக்க வேண்டியதுதான். தெரியுமா?

அது உங்க "ஆத்தா கம்பெனி" இல்லை. தோண்டிப் பார்த்தால் ஏதாவது வெள்ளைக்காரன் இண்வெஸ்ட் பண்ணியிருப்பான். அதனால அவன் பில்லியன் டாலர் சம்பாரிச்சுக்கிட்டு இருப்பான். உங்களொட சேர்ந்து பிச்சை எல்லாம் எடுக்க அவன் தயாரா இல்லை.

சும்மா எதையாவது ஒளறக்கூடாது ஆமா!

வருண் said...

சும்மா அணு உலை == அணு குண்டு

அணு குண்டு எனபது உங்களை நான் கொலை பண்ணுவது போல!

அணு உலை என்பது நீங்களே உங்களை தீயை வச்சு கொளுத்தி தற்கொலை பண்ணிக்கிறது.

In reality for sensible people, they are not same or equal. But for morons like you, because of lack of brain in your head, they both are "equal".

In other words, in either case you are dying (suicidal or murder) and your value is zero as you are a dud, so your logic works in the example I quoted at least! :)))

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...

அதிலும் தினமும் ஒரு மிஸ்லீடிங் தலைப்பு தரும் தினமலர் இருக்கிறதே.. கொடுமை. இவர்களுக்கெல்லாம் பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருப்பதே தெரியாதா?]]]

அதுபாட்டுக்கு ஒரு ஓரத்தில் இருக்கிறது..! இவர்கள் பாட்டுக்கு தங்கள் பொழைப்பை பார்க்கிறார்கள். மளிகைக் கடை வியாபாரம்போல் பத்திரிகையுலகம் மாறி ரொம்ப நாளாச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[smart said...

Plz read below blogs
http://naanoruindian.blogspot.com/
http://jayabarathan.wordpress.com/
]]]

படித்தேன். உங்களுடைய பார்வையில் கிடைக்கவிருக்கும் மின்சாரமும், பணமுமே பெரிதாகத் தெரிகிறது. எங்களுக்கு மனித உயிர்கள்தான் முக்கியம்..!

உண்மைத்தமிழன் said...

[[[உலக சினிமா ரசிகன் said...
லட்சக்கணக்கான உண்மைத் தமிழர்களின் நேர்மையான கொதிப்பை பதிவாக்கி உள்ளீர்கள். அன்னா ஹசாரே போன்ற கார்ப்பரேட் காந்திகளுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் உதயகுமாருக்கு கிடைக்காது. நாம் ஊதும் சங்கு மத்திய, மாநில செவிடர்களுக்கு கேட்காது.]]]

நமக்கு செவிமடுக்காத அவர்களை நாம் வீட்டுக்குத் துரத்த வேண்டாமா..? யார் செய்வது..? இப்போது சங்கரன்கோவிலில் பணத்தை வாங்கிக் கொண்டு ஜனநாயகத்துக்கு பட்டை நாமம் போட்டது அரசியல்வியாதிகள் இல்லை.. பொதுமக்கள்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

அணு உலைகளில் லேசாக கசிந்த வாயுவினால் எழுந்த பூகம்பத்தையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.///

அண்ணே அதித உணர்சிவயத்துல சிக்கிட்டிங்கனு நினைக்கறேன் ... இது எல்லாம் தப்பான தகவல் அண்ணே :( நாம எதனை பதிவு செய்கிறோம் மிகவும் முக்கியம் எதிர்கால நலனுக்கு .)]]]

தம்பி.. அணுக் கதிர் வீச்சினால்தான் ஜப்பானில் பூகம்பம் நிகழ்ந்ததாக கருதி நான் எழுதவில்லை. அணுக் கதிர் வீச்சைத்தான் "பூகம்பம்" என்று உவமை கொடுத்து உச்சரித்துள்ளேன்.. அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ssr sukumar said...

ஆனாலும் மக்களுக்கு புரிய வேண்டுமே..? தூத்துக்குடியில் இருந்து சங்கரன்கோவில் ஏதோ 1000 கிலோ மீட்டர் தள்ளியிருப்பது போல் நினைத்து வாங்கின காசுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்த இந்த மக்களையும் நினைத்தால் கோபம் வரத்தான் செய்கிறது..! தன் வீட்டு வாசலுக்கு தானே புயல் வந்தால்தான் தான் கதறி அழுவேன்.. பக்கத்து தெருவில் எவன், எப்படி செத்தாலும் எனக்கு கவலையில்லை என்பதும் நமது பண்பாடாகிவிட்டது..! சுயநலம் சார்ந்தே நாம், நமது குடும்பம், நம் பிள்ளைகள்.. நமக்காக என்று இதற்காகவே குடும்பத்தை வளர்த்தெடுக்கும் நமது வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்..?

// unga judgement romba thappunne/romba sari/konjam mikai/romba unarchchi]]]

எதுவாக இருந்தாலும் இதுதான் உண்மை. காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் ஜனங்கள் இருக்கின்ற நாட்டில் அரசியல்வியாதிகளும் இப்படித்தான் இருப்பார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...

மீடியா பன்னிப் பயலுகளும், பன்னிப் பய அரசுகளும் உதயகுமாரை கொச்சைப்படுத்தியது உண்மைதான். உங்கள் கட்டுரயின் கடைசி வரிகள் அருமை. உதயகுமாரே உண்ணாவிரத்தை கைவிடு. ஏனென்றால் உன்னை மாதிரி உண்மை ஆட்கள் நீண்ட நாட்கள் வாழவேண்டும்.]]]

இன்றைக்கு உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டார் உதயகுமார். அதற்காக அவருக்கு எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

”நெஞ்சு பொறுக்குதில்லையே”]]]

இந்த நிலை கெட்ட மாந்தர்களை நினைத்திட்டால்..!

உண்மைத்தமிழன் said...

[[[James Anand said...

ஜப்பான் தன் அனு உலைகளை மூட போகிறது என நீங்களே தவறான செய்திகளை பரப்பி கொண்டு இருக்கிறீர்காள். ஜப்பான் தன் அனு உலைகளை தற்காலிமாக மூடி பின் சோதனைக்கு பின்னர் திறக்க முடிவு செய்து இருக்கின்றனர். எதுக்கு இந்த பிழைப்பு..?]]]

விஷ வாயு கசிவின்போது ஜப்பானிய அரசு செயல்பட்ட விதத்தைக் கவனித்தீர்களா..? பூகம்பம், புயலால் பாதிக்கப்பட்ட ஊர்களை சீரமைத்த வேகத்தைப் பார்த்தீர்களா..? அவர்களால் மனித உயர் பலியைக் குறைக்க முடியும்..! இந்த நாய்களால் முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[James Anand said...

முதலில் போராட்டமே தவறு. போராட்ட தலைவரும் ஏதோ விஞ்சானி போல உளருகிறார். இவங்களுக்கு பிராஜ்க்ட் மேப் வேண்டுமாம். எந்த போராட்டமாக இருந்தாலும் உண்மை இருந்தால்தான் வெற்றி பெறும்.]]]

உங்களைக் கைது செய்தால், எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்கிறீர்கள் என்று கேட்கவே மாட்டீர்களா..? அது போலத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[James Anand said...

இப்படி உணர்ச்சிவசபட்டு தப்பு தப்பான எழுதினா இனி நீங்க எந்த பதிவும் நம்பிக்கை இல்லாமதான் மக்கள் படிப்பார்கள்.]]]

படிச்சிட்டுப் போறாங்க விடுங்க.. நான் எப்பவும் இப்படித்தான்..! ஆனால் தப்பு, தப்பான்னு உம்முடைய கொள்கையை எம்மிடம் திணிக்காதீர்..!

[[[சீனாவில் 32 அனு உலைகள் கட்டபட்டு வருகின்றன.அப்ப அவங்க கேனை பசங்களா?]]]

சீனால விஷ வாயு கசிவுன்னா ஊர் மேயர்ல இருந்து அதிகாரிகள் வரைக்கும் உள்ள தூக்கி வைச்சிருவான்.. இங்க செஞ்சீங்களா..? தனி பிளைட்ல மாலை, மரியாதையோட அனுப்பி வைச்ச கேட்டு கெட்ட நாடுல்ல இது..!

உண்மைத்தமிழன் said...

[[[அண்ணே....

//15000 கோடிகளைக் கொட்டியிருப்பதால் இதனை நடத்தியே தீருவோம் என்பதெல்லாம் சொத்தை வாதம்..//

இதை ஏத்துக்க முடியாது... 15000 கோடி நம்ப பணம். அதை எப்படி போன போகட்டும்னுவிட முடியும். 1988-ல ஆரம்பிச்சு 2004-ல கட்டி முடிக்க பட்ட ப்ராஜெக்ட். அதை போய் எப்படிங்க கவர்மென்ட் மூடும்.
தோத்து போயிடுவோம்னு தெரிஞ்சே உதயகுமார் போராட்டம் பண்ணி இருக்கார்.]]]

ஆரம்பத்தில் இதை துணிந்து, தலைமையேற்று நடத்த ஆட்கள் இல்லை. இப்போது கிடைத்திருக்கிறார்கள். செய்கிறார்கள். பாராட்டுவோம்..!

[[[கவர்மென்டை எதிர்த்து யாராலுமே ஜெய்க முடியாதுன்னு மறுபடியும் நிரூபணம் ஆகி இருக்கு..]]]

இதுதான் உண்மை.. உமக்கென்று ஏதாவது ஒரு பிரச்சினை வரும்போதுதான் அரசுகளும், ஆட்சியாளர்களும் யார் என்பது உமக்குப் புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[rasikan said...

//சீனாவில் 32 அனு உலைகள் கட்டபட்டு வருகின்றன. அப்ப அவங்க கேனை பசங்களா?//

மனித உரிமைகள் மறுக்கப் படும் சீனாவில் புதிய அணு உலைகள் கட்டுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது.]]]

கேலிக்கூத்தான ஜனநாயகம் இருக்கும் ஒரு அடிமை நாட்டில் இது நிச்சயம் சாத்தியமானதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[rasikan said...

//15000 கோடிகளைக் கொட்டியிருப்பதால் இதனை நடத்தியே தீருவோம் என்பதெல்லாம் சொத்தை வாதம்..//

இதை ஏத்துக்க முடியாது... 15000 கோடி நம்ப பணம்.....அதை எப்படி போன போகட்டும்னு விட முடியும்.... //

தனி மனிதனால் ஒரு லட்சத்தி 27 ஆயிரம் கோடி பணம் லஞ்சமாய் களவாடப்படும் ஒரு நாட்டில் பல லட்சம் மக்களுக்காக 15000 கோடியை முடக்குவதில் என்ன தவறு.]]]

யார், யார் வேணும்கிறாங்களோ அவங்களையெல்லாம் கூடங்குளம் பக்கத்துல போய் குடி வைங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[rasikan said...

raaj

தினமலரை மட்டும் வாசிக்கும் உண்மை வாசகன் என்று தெரிகிறது.]]]

எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஆனாலும் அதே கொள்கையுடன் இருக்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[rasikan said...

we use cobalt 60 to take radiography in pressure vessels. There is a possibility for death if any leakage occurred during radiography. cobalt 60 are nothing when compared to uranium. See the below link how an Indian University handled a radiography material.

http://www.allvoices.com/contributed-news/5712624-radiation-from-cobalt60-kills-delhi]]]

நல்லா விசாரிச்சுப் படிச்சிட்டு அப்புறமா இந்தச் சர்ச்சைக்குள்ள வர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சிவானந்தம் said...

சரவணன் உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆனால் இந்த பதிவு வருத்தமளிக்கிறது. இப்போது அணு உலை எதிர்பாளர்கள் ஜப்பானைதான் கெட்டியாக பிடித்துக் கொண்டிருகிறார்கள். ஆனால் நிஜத்தில் ஜப்பானுக்கு பக்கத்திலேயே இருக்கிற சவுத் கொரியா இதை பார்த்து பயந்த மாதிரி தெரியல. அதேபோல் வியட்நாம் நாடும் அணு உலை ஆரம்பிக்க ஜப்பானிடமே ஒப்பந்தம் போட்டிருக்கு. இது எப்படி இருக்குன்னா, ஒரு வீடு பத்தி எரியும் போது பக்கத்து வீட்டுகாரங்களே இதை ஒரு விபத்தா பார்க்க, அதாவது அபாயமா நினைக்காம தைரியமா இருக்க, எங்கியோ தூரமா இருகிறவன் லபோ திபோன்னு கத்தற கதைதான். கூடங்குளம் போராட்டம் அப்படிப்பட்ட ஒன்றுதான்.]]]

வருமுன் காப்பது நலம் என்று அந்த மக்கள் நினைக்கிறார்கள். அவ்வளவுதான்..!

Raja said...

அண்ணே பதிவு ரொம்ப சூட இருக்கு...ஆனா பாத்து எழுதுங்கண்ணே ....பின்னாடி சிக்கல்ல மாட்டிகதீங்க....அரசாங்கம் , அரசியல் தலைவர்கள், மதம் ஆகியவற்றை பற்றி காத்திரமாக எழுதும் போது தக்க முன்னேற்பாடுகளுடன் எழுதுவது மிகவும் முக்கியம்...நாம் என்னதான் பதிவுலகில் கத்தினாலும் யாரும் கண்டு கொள்ளபோவதில்லை...நம்மால் எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்ய முடியும்...உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதம் இருப்பவர்களையே மயிராக நினைக்கும் அரசாங்கத்திடம் நமது பதிவு எந்த விதமாற்றத்தையும் கொண்டு வரத்து என்பது என் எண்ணம்

இதுவே எனது முதல் பின்னுட்டம்...பதிவின் தீவரம் என்னை பின்னூட்டம் இட தூண்டியது

scenecreator said...

அருமையான பதிவு. எதாவது பிரயோஜனம் இருக்கா?
தினமலர் பத்திரிக்கை உதயகுமாரை ஒரு தீவிரவாதி போல் சித்தரித்து விட்டது.
இன்று என் பதிவில்
வா தலைவா !
http://scenecreator.blogspot.in/2012/03/blog-post_27.html

சூனிய விகடன் said...

ரொம்ப ஆர்வமாக நிலக்கடலை சாப்பிடும் போது, சொத்தைக்கடலை ஒன்றை மென்றது போலாகிவிட்டது இந்தப் பதிவு.

ரௌத்திரம் பழகு..என்று பாரதி சொன்னார்.. பழகுங்கள் சகோதரரே..

நீங்கள் பயன்படுத்திய அத்தனை தகாத வார்த்தைகளையும் அணு உலை எதிர்ப்பு தரப்பின் மீதும் என்னால் பயன்படுத்த முடியும் ..............அதற்க்கான எல்லா நியாயங்களும் என் பார்வையிலும் இருக்கிறது ...ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை. எனது வருத்தமெல்லாம் எனது பின்னூட்டமொன்றில் " அவன் இவன் " என்று குறிப்பிட்டதற்காக அந்தப் பின்னூட்டத்தை நீக்கிய உண்மைத்தமிழன் கைகளா இது என்பது தான்.

அறச்சீற்றம் கொள்வதிலும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா....?

ஒன்று மட்டும் சொல்வேன்...இப்போது அங்கு நடப்பது அணு உலை வேண்டாம் ..அணுசக்தி வேண்டாம் என்ற கொள்கை ரீதியான போராட்டம் அல்ல...அது ஒரு முகமூடி தான்....மறைமுக நோக்கங்கள் ஏராளம் இருக்கின்றன.

நம்பள்கி said...

எப்படி இப்படி டைப் அடிக்கிறீர்கள். ஏதாவது மென்பொருளா? சொல்லித் தர முடியுமா?

Rajaraman said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

உண்மைத்தமிழன் அண்ணாச்சி!

நீங்க நியாயமாக, நல்லவராகவே, இருந்துட்டுப்போங்க. அநாகரிக காமெண்ட்களை அகற்றுவதில் எந்தத்தப்பும் இல்லைதான்.

***Blogger Rajaraman said...

ஏம்ப்பா தம்பி சரவணா உன்னுடைய பிதற்றலில் அணு உலை எதிர்ப்பை விட ஜெயலலிதா அவர்களை தாக்கும் எண்ணமே மேலோங்கியுள்ளது. இது எப்படியிருக்குன்னா எதையோ பார்த்து ஏதோ குலைத்து போலுள்ளது..

Tuesday, March 27, 2012 5:09:00 PM
Blogger Rajaraman said...

நீயெல்லாம் சினிமா செய்தி எழுத தான் லாயக்கு.. போ போய் அத செய் அத விட்டுட்டு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி வாந்தி எடுக்காதே

Tuesday, March 27, 2012 5:12:00 PM***

இந்த ரெண்டு காமெண்டும் எந்தவகையில் சரினு நீங்க அனுமதிக்கிறீங்க?

இந்த ராஜாராமன் ஐ டி காலங்காலமாக இருக்கு. அதாவது நீங்க கருணாநிதி (ஆளுங்)கட்சி ஆட்சியை தொடர்ந்து விமர்சிக்கும்போதும்கூட. அப்போலாம் இந்த மேதாவி மூடிக்கிட்டு இருந்தான், இன்னைக்கு ஆத்தாவின் power-less, unnecessary nuclear plant கொண்டு வரும் ஆட்சியை விமர்சிக்கும்போது, என்னவோ நீங்க இதைத்தான் முழுநேரம் நீங்க செய்வதுபோல உறருகிறான் இந்த ஆளு.

அண்ணே நியாயம்னு ஒண்ணு இருக்கு. எல்லாரும் ராஜாரம்னையும் உங்களையும் கவனிக்கிட்டுதான் இருக்கோம். ஆத்தாவையும், அதோட ஆட்சியையும் ஒரு வார்த்தை சொன்னா வந்துட்டான் தனிநபர் தாக்குதல் செய்ய!

தியாகி நீங்க, அவர் காமெண்ட்ஸ் ஏதோ தேவையானது போலவும் நியாயமானது போலவும் விட்டுட்டுப்போறீங்க.

So, you find these comments which provoked me as DECENT and POLITE and "acceptable"??

WHY???

I really don't understand why do you have to be gentle on this anonymous guy who has been doing personal attack and his comments are WORTHLESS??

I am not upset or anything for your moderation and I did read his response for my comments (I care less about such comments as I made my point correctly that he was literally "butter"ing JJ as if she is God or something).

நீங்க இதுக்கு பதிலெல்லாம் சொல்ல வேணாம். இது மாதிரி பொறம்போக்கு ஐ டி களுக்கெல்லாம் என்ன பெரிய மரியாதை வேண்டிக்கெடக்குனு சொல்லிட்டுப் போக்லாம்னு வந்தேன். அம்புட்டுத்தான்.

உண்மைத்தமிழன் said...

வருண்..

என்னைப் பற்றி ஏதாவது குற்றம், குறை கூறினால் அதனை அனுமதிப்பதுதான் கருத்து சுதந்திரம்..!

என் தளத்தில் வேறொரு பதிவரை நாகரிகமில்லாத வார்த்தைகளால் குறிப்பிடுவதை நான் விரும்பவில்லை. ஆகவேதான் நீக்கிவிட்டேன்..!

இதையே அனைவரும் பாலோ செய்தால் எப்படி இருக்கும்..? யோசித்துப் பாருங்கள்.. யாரோ, யாருக்கோ மேடை அமைத்துக் கொடுப்பதால்தான் வம்புகளே வருகின்றன.. அதற்கெதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டும்..?

தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்..!