கழுகு-சினிமா விமர்சனம்

16-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் பெயருக்கும் படத்திற்கும் எந்தச் சம்பந்தமில்லை..! ஆனாலும் ஏதாவது வித்தியாசமாக வைத்தால்தான் படம் போணியாகும் என்பதால் வைத்திருக்கிறார்கள்..!

ஹனிமூன் கொண்டாட மூணாறு செல்பவர்கள் உண்டு. இன்பச் சுற்றுலா செல்பவர்களும் உண்டு.. கணவரைக் கொலை செய்ய மனைவிகளும், மனைவியைக் கொலை செய்ய கணவன்களும், மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்ய கணவர்மார்களும், கணவரின் கள்ளக்காதலியை கொலை செய்ய மனைவிமார்களும் மூணாறுக்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு.. இவர்களில்லாமல் எப்போதுமே மாதத்திற்கு ஒன்றாக தேடி வந்து விழுபவர்கள் காதலர்கள்தான்..!

 

இப்படி மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்பவர்களையும், கொலை செய்யப்படுவர்களையும் பிணமாகத் தூக்கி வரும் வேலையைச் செய்து வரும் கூட்டத்தில் ஹீரோவான கிருஷ்ணா, கருணாஸ், தம்பி இராமையா, மற்றொரு ஊமை கேரக்டரும் அடக்கம்..!

ஹீரோயின் பிந்து மாதவியின் தங்கை, தனது காதலனுடன் தற்கொலை செய்து கொள்ள.. அதில் ஹீரோயினின் தங்கையின் உடலை மட்டும் தேடியெடுத்து வருகிறார்கள். அதில் கவரப்பட்ட பிந்துவிக்கு ஹீரோவின் முரட்டு குணம், குடிகாரன் பட்டம் எல்லாம் வழக்கம்போல கவர்ந்துவிட ஹீரோவை லுக்கு விடுகிறார். அதற்குள்ளாக தங்கையின் உடலில் இருந்து உருவப்பட்ட மோதிரத்தையும், செயினையும் கிருஷ்ணா திருப்பிக் கொடுத்ததால் லுக்கு சைட்டாகி பின்பு லவ்வாகிவிடுகிறது.. இடையில் தேயிலை எஸ்டேட் முதலாளியான ஜெயப்பிரகாஷை ஒரு வழக்கில் இந்த டீம் சிக்க வைத்துவிட.. ஜெயப்பிரகாஷ் 1990 பட வில்லன் மாதிரி நான் வெளில வர்றதுக்குள்ள முடிச்சிரு என்று 4 பேருக்கும் சங்கு ஊதுகிறார்..! அது முடிந்ததா இல்லையா என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

கிருஷ்ணா நடிக்கும் 3-வது படம் இது. முடிந்த அளவுக்கு அவரது முகவெட்டுக்கு ஏற்ற வேடம்தான் என்பதால் சமாளித்திருக்கிறார்..! லவ்வுன்னா என்னன்னுகூட தெரியாத  அப்பாவி என்ற ஸ்கெட்ச்சுதான் கொஞ்சம் ஓவரா இருக்கு.. எப்பவும் பீடியை வலித்துக் கொண்டு ஒரே பாவனையுடன் இருப்பது கொஞ்சம் சலிப்புத் தட்டுகிறது..!

ஏதோ பிந்து மாதவி இருப்பதால் பாடல் காட்சிகளில் ஒரு அட்ராக்ஷன் இருக்குன்னு நினைக்கிறேன்..! ஆனாலும் பல காட்சிகளில் முணுக்கென்றால் அழுக வைப்பது போல் நடிக்க வைத்திருப்பது சகிக்கவில்லை..! தங்கையிடம் கொடுத்த மோதிரத்தை கிருஷ்ணாவின் கையில் பார்த்தவுடன் அதில் தனது தலையை வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் போகும் அந்தக் காட்சி ஒரு கிளாஸ்..! பிந்துவின் திரும்பிப் பார்க்கும் அந்த ஷாட் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.. விபத்தில் சிக்கியது கிருஷ்ணாதானோ என்றெண்ணி அவருடைய பதட்டமும், ஓட்டமும், கடைசியில் அவரைப் பார்த்தவுடன் காட்டும் ஆக்சனும் அருமை..! கேமிராவும், இயக்கமும் ஏதோ ஒன்றைச் செய்கின்ற இந்த ஒரு இடத்தில். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை உண்டாக்கியது இதுதான் என்பதால் கனகச்சிதம்..! பிந்துவிக்கு இன்னும் சிறந்த இயக்குநர்கள் கிடைத்து ஒரு ரவுண்ட்டு வந்தால், ஒண்ணுமே இல்லாமல் கோடிகளைச் சுருட்டும் தமன்னா போன்ற சப்போர்ட்டாக்களை ஓரம்கட்டலாம்..!

தம்பி ராமையாவும், கருணாஸும்தான் கிருஷ்ணாவை பாதி காப்பாற்றியிருக்கிறார்கள். கருணாஸின் இந்த குணச்சித்திர வேட முடிவு பாராட்டுக்குரியதுதான்.. அம்பாசமுத்திரம் அம்பானிக்கு பிறகு அடுத்தப் படத்துக்கு பூஜையை போட்டுவிட்டு தொடர்ந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமாததால்  புத்திசாலித்தனமாக வரும் வேடத்தைத் தொடர்வோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்..! இதையே தொடர்ந்தால் நலமாக இருக்கும்..!

தம்பி ராமையாவின் நடிப்பு வழக்கம்போலத்தான்.. அவருடைய தலையை வைத்துச் சொல்லப்படும் வசனங்களை எந்தப் படத்தில்தான் நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை..? தொடர்ந்து கேட்க எரிச்சலாக இருக்கிறது..! 

ஜெயப்பிரகாஷ் போலீஸ் ஸ்டேஷனில் கையொப்பமிடும் அளவுக்கு குற்றவாளியாக இருக்கிறார் என்பதை முதல் காட்சிலேயே பதிவு செய்யும் இயக்குநர், அவர் மீதான பார்வையை அழுத்தமாக பதிவு செய்யவில்லை..! கடத்தல் தொழில் செய்பவராக இருக்கட்டும்..! லோக்கல் போலீஸுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை என்பது தனுஷ்கோடியில் இருப்பவனுக்குத் தெரியும்.. அப்படியிருக்க.. ஏதோ அவர் யாருக்குமே தெரியாமல் செய்கிறார் என்பது போல் காட்டி படத்தின் முடிவுக்கு அவரை பயன்படுத்திருப்பது வீண்தான்..!

இந்த நால்வர் கூட்டணியில் கடைசி ஆள் ஊமை என்பதே இடைவேளைக்கு பின்புதான் தெரிகிறது..! இந்த சஸ்பென்ஸ் எதற்கும் உதவவில்லை என்பது சோகம்தான்..! தங்களுக்கு உதவியாக இருப்பவர்களையே போலீஸ் ஸ்டேஷனில் வைத்து வெளுத்துக் கட்டுவதும், இன்ஸ்பெக்டர் அவர்களைவிடச் சொல்லும் காரணமும் ஏற்கக் கூடியதே.. தொடர்ச்சியான காட்சிகளில் போலீஸ் திருடன் விளையாட்டு மாதிரி இருவரும் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வதெல்லாம் ஏக பொருத்தம்தான்..! 

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒளிப்பதிவுதான்.. மூணாறு என்பதால் இயற்கை தந்த அழகோடு, கேமிராமேன் சத்யா படமாக்கிய விதமும் காட்சிக்கு காட்சி கவிதையாக இருக்கிறது..! இப்போது வரக் கூடிய அனைத்து படங்களிலுமே ஒளிப்பதிவை ரம்மியமாகத்தான் செய்து வைக்கிறார்கள். ஆனால் கதையில்..? இசை யுவன்சங்கர்ராஜா...! ஆத்தாடி மனசுதான் பாடலும், பாதகத்தி கண்ணுபட்டு பாடலும் கண்ணைத் தொடுகின்றன..! பாடல் காட்சியிலேயே காதல் காட்சிகளை வரிசைப்படுத்தி சென்று கொண்டு கொஞ்சம் மூச்சுவிட வைத்திருக்கிறார் இயக்குநர்..!

படத்தின் துவக்கத்திலேயே கருணாஸ் சொல்லும் ஒரு வசனத்தின் மூலமே படத்தின் கிளைமாக்ஸ் புரிந்துவிட்டது. இது என் போன்றோருக்கு மட்டுமே..! வெகுஜன ரசிகர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனாலும் இறுதிக் காட்சி மனதுக்குள் பதியும் அளவுக்கு எடுக்கப்படவில்லை என்பது மட்டும் தெரிகிறது..! 

இப்போதைய டிரெண்ட்டில் ஜெயிக்க வேண்டும். காதல் தேவை. நண்பர்கள் தேவை.. சிறந்த ஒளிப்பதிவும், பாடல்களும் இருக்கின்றன.. ஆனால் இதையும் தாண்டிய ஏதோ ஒன்று தேவை.. அது மனதிற்குள் படத்தை பதிய வைக்க இருந்த இடங்களிலெல்லாம் நகைச்சுவை போல தாவிச் சென்றுள்ளது படத்தின் மிகப் பெரிய மைனஸ். 

எழுந்திரிக்க முடியாமல் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் கிருஷ்ணா ஒரு கப் தண்ணி பட்டவுடன் டி.ராஜேந்தர் அளவுக்குத் தெளிவாக, தெனாவெட்டாக பேசுவதெல்லாம் ஒட்டவேயில்லை.. அதேபோல் காரணமேயில்லாமல் பிந்துவிடம் முதலில் அலட்டிக் கொள்வதும், பின்பு நண்பர்களின் நிலைமை பார்த்து உடனுக்குடன் ஆவேசப்படுவதும் படத்தை முடிக்கும் அவசரத்தில் திரைக்கதை இருப்பதுபோல் தெரிகிறது..!

பணம் இருக்கிறது.. படம் எடுக்கலாம்.. திறமைசாலி இயக்குநர் கிடைத்துவிட்டால் போதும்.. ஆனாலும் இதற்கு மேலும் கண்ணுக்குத் தெரியாத ஒன்று சினிமாவுலகத்துக்குத் தேவை.. அதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம்.. அல்லது முருகனின் ஆசி என்றும் சொல்லலாம்.. அதில் ஒன்று இவர்களுக்குக் கிடைத்தால் இயக்குநரும், கிருஷ்ணாவும் பிழைத்துக் கொள்வார்கள்..! 

25 comments:

கோவை நேரம் said...

உங்களின் கழுகு பார்வையில் கழுகு பட விமர்சனம் அருமை..அப்புறம்...தமன்னா வை சபோட்டா என்று சொன்னதை வன்மையாய் கண்டிக்கிறேன்

Cable சங்கர் said...

//படத்தின் துவக்கத்திலேயே கருணாஸ் சொல்லும் ஒரு வசனத்தின் மூலமே படத்தின் கிளைமாக்ஸ் புரிந்துவிட்டது. இது என் போன்றோருக்கு மட்டுமே..!

Read more: http://truetamilans.blogspot.com/2012/03/blog-post_16.html#ixzz1pFMrveb2//

oo அப்ப நீர் என்ன ரசிகர்?

CS. Mohan Kumar said...

அண்ணே லேபிளில் பிந்து மாதவி பேர் போட்டுருக்கீங்க :))

கேரளாக்காரன் said...

Munnar or kodai cable kodainnu solraaru

by
munnarkkaaran

ராஜ் said...

கொடைக்கானல தற்கொலை பண்ணிகிறவங்களை, பாடிகளைத் தேடி எடுத்து வருபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விஜய் டிவி "குற்றம் நடந்தது என்ன" நிகழ்ச்சியில் பார்த்து இருக்கேன். இந்த படத்துக்குகாண கதை களம், அத பத்தியது என்பதால், ரொம்ப புதுசா இருக்கேன்னு நினச்சேன். படம் சுமார் தான் போல..
மக்களுக்கும், உங்கள மாதிரி சினிமா விமர்சனர்களுக்கு பிடிக்கிற மாதிரி படம் எடுத்தாலே கண்டிப்பா அது வெற்றி படம் தான்.

rajamelaiyur said...

//இந்தப் பெயருக்கும் படத்திற்கும் எந்தச் சம்பந்தமில்லை..! ஆனாலும் ஏதாவது வித்தியாசமாக வைத்தால்தான் படம் போணியாகும் என்பதால் வைத்திருக்கிறார்கள்..!


//
நிறைய படத்துக்கு எப்படித்தான் பெயர் இருக்கு

rajamelaiyur said...

இன்று

நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாகாத காங்கிரஸ்யும்

மணிஜி said...

அண்ணே..பிணத்துக்கும் கழுகுக்கும் சம்பந்தம் இருக்கே :-))

உண்மைத்தமிழன் said...

[[[Kovai Neram said...

உங்களின் கழுகு பார்வையில் கழுகு பட விமர்சனம் அருமை. அப்புறம் தமன்னாவை சபோட்டா என்று சொன்னதை வன்மையாய் கண்டிக்கிறேன்]]]

வேறு எப்படி இருக்கிறார் அவர்.. பூசணிக்காய் மாதிரியா..

உண்மைத்தமிழன் said...

[[[சங்கர் நாராயண் @ Cable Sankar said...

//படத்தின் துவக்கத்திலேயே கருணாஸ் சொல்லும் ஒரு வசனத்தின் மூலமே படத்தின் கிளைமாக்ஸ் புரிந்துவிட்டது. இது என் போன்றோருக்கு மட்டுமே..!

அப்ப நீர் என்ன ரசிகர்?]]]

சினிமா பார்ப்பதை தொழிலாக வைத்துள்ள ரசிகர்..!

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

அண்ணே லேபிளில் பிந்து மாதவி பேர் போட்டுருக்கீங்க :))]]]

தேடி வரட்டும்தாண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[மௌனகுரு said...

Munnar or kodai cable kodainnu solraaru

by
munnarkkaaran]]]

மூணாறுதான்..!

ஹாலிவுட்ரசிகன் said...

ஆரம்பக்கட்ட விமர்சனங்களே ரிசல்ட்டை சொல்லிவிடுகின்றன. உங்கள் விமர்சனம் வழக்கம் போல விரிவு, அருமை. நன்றி தமிழா.

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

கொடைக்கானல தற்கொலை பண்ணிகிறவங்களை, பாடிகளைத் தேடி எடுத்து வருபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விஜய் டிவி "குற்றம் நடந்தது என்ன" நிகழ்ச்சியில் பார்த்து இருக்கேன். இந்த படத்துக்கு காண கதை களம், அத பத்தியது என்பதால், ரொம்ப புதுசா இருக்கேன்னு நினச்சேன். படம் சுமார்தான் போல..
மக்களுக்கும், உங்கள மாதிரி சினிமா விமர்சனர்களுக்கு பிடிக்கிற மாதிரி படம் எடுத்தாலே கண்டிப்பா அது வெற்றி படம்தான்.]]]

எல்லா சமயங்களிலும் வெற்றிப் படங்களின் ரசனையோடு எனது ரசனை ஒத்துப் போகாது.. எனக்கு காஞ்சனா பிடிக்கவில்லை. ஆனால் வணிக ரீதியாக அது வெற்றி படம்தான்...! இது போன்றுதான் மக்களுக்காக எடுக்கப்படும், அவர்களால் விரும்பப்படும் படங்கள்தான் வசூலைக் குவிக்கும். கலைப் படைப்பாக கருதப்படுவைகள் அனைத்துமே நல்ல பெயரை மட்டுமே எடுக்கின்றன..!

உண்மைத்தமிழன் said...

[[["என் ராஜபாட்டை"- ராஜா said...

//இந்தப் பெயருக்கும் படத்திற்கும் எந்தச் சம்பந்தமில்லை..! ஆனாலும் ஏதாவது வித்தியாசமாக வைத்தால்தான் படம் போணியாகும் என்பதால் வைத்திருக்கிறார்கள்..!//

நிறைய படத்துக்கு எப்படித்தான் பெயர் இருக்கு]]]

ம்.. சில படங்களின் பெயர் பொருத்தம் மிகச் சரியாகத்தான் இருக்கும். இதற்கு ஏன் இந்தப் பெயர்..?

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜி...... said...

அண்ணே. பிணத்துக்கும் கழுகுக்கும் சம்பந்தம் இருக்கே :-))]]]

அண்ணே.. ஒருவகையில் கரீக்ட்டுதான்..! அப்போ கிருஷ்ணா கழுகு மாதிரியா..? முடியல..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் ரசிகன் said...

ஆரம்பக் கட்ட விமர்சனங்களே ரிசல்ட்டை சொல்லி விடுகின்றன. உங்கள் விமர்சனம் வழக்கம் போல விரிவு, அருமை. நன்றி தமிழா.]]]

நன்றி ரசிகன்ஜி.. தொடர்ச்சியான உமது விமர்சன பங்களிப்பு என்னை நெகிழ வைக்கிறது..!

Philosophy Prabhakaran said...

// இந்தப் பெயருக்கும் படத்திற்கும் எந்தச் சம்பந்தமில்லை..! ஆனாலும் ஏதாவது வித்தியாசமாக வைத்தால்தான் படம் போணியாகும் என்பதால் வைத்திருக்கிறார்கள்..! //

பிணமிருக்கும் பகுதியை கழுகு வட்டமிடும் தானே...

Philosophy Prabhakaran said...

// லுக்கு சைட்டாகி பின்பு லவ்வாகிவிடுகிறது.. //

great...!

Philosophy Prabhakaran said...

// பிந்துவிக்கு இன்னும் சிறந்த இயக்குநர்கள் கிடைத்து ஒரு ரவுண்ட்டு வந்தால், ஒண்ணுமே இல்லாமல் கோடிகளைச் சுருட்டும் தமன்னா போன்ற சப்போர்ட்டாக்களை ஓரம்கட்டலாம்..! //

பிந்துவாவது பொந்துவாவது... நாலஞ்சு படத்துக்கு தாங்கினாலே பெரிய விஷயம்... நடிப்பெல்லாம் இந்த காலத்துல யாரு சாரே பாக்குறா... அந்த அம்மணி ஏற்கனவே சில விளம்பரங்களில் நடிச்சதால இமேஜ் சரிவுல இருக்கு... அதுவுமில்லாம பாக்குறதுக்கு ஹீரோயின் ஃபிரென்ட், அக்கா, அண்ணி கேரக்டரில் நடிக்கிற பீஸ் மாதிரி இருக்கு... இதெல்லாம் தமிழன் ரசனைக்கு செட் ஆகாது...

அதுவுமில்லாம நல்ல சினிமா வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் அம்மணி கவர்ச்சிக்களத்தில் குதித்து சிறந்த பிட்டுப்பட நடிகையாகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பட்சி சொல்கிறது...

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

// இந்தப் பெயருக்கும் படத்திற்கும் எந்தச் சம்பந்தமில்லை..! ஆனாலும் ஏதாவது வித்தியாசமாக வைத்தால்தான் படம் போணியாகும் என்பதால் வைத்திருக்கிறார்கள்..! //

பிணமிருக்கும் பகுதியை கழுகு வட்டமிடும்தானே...]]]

ம்.. வட்டமிடும்தான்.. பிணத்தைத் தூக்குவதில் இருக்கும் பிரச்சினைகளையே படத்தில் சொல்லியிருந்தால் இதற்குப் பொருத்தமாயிருக்கும். பாதி படத்திலேயே கதை மாறிவிட்டது..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

//லுக்கு சைட்டாகி பின்பு லவ்வாகிவிடுகிறது.. //

great...!]]]

ஹி.. ஹி.. உண்மைதானே தம்பி.. எனக்கு அனுபவமில்லை. நீதான் ரொம்ப அனுபவஸ்தானாச்சே..?

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

//பிந்துவிக்கு இன்னும் சிறந்த இயக்குநர்கள் கிடைத்து ஒரு ரவுண்ட்டு வந்தால், ஒண்ணுமே இல்லாமல் கோடிகளைச் சுருட்டும் தமன்னா போன்ற சப்போர்ட்டாக்களை ஓரம்கட்டலாம்..! //

பிந்துவாவது பொந்துவாவது... நாலஞ்சு படத்துக்கு தாங்கினாலே பெரிய விஷயம். நடிப்பெல்லாம் இந்த காலத்துல யாரு சாரே பாக்குறா... அந்த அம்மணி ஏற்கனவே சில விளம்பரங்களில் நடிச்சதால இமேஜ் சரிவுல இருக்கு. அதுவுமில்லாம பாக்குறதுக்கு ஹீரோயின் ஃபிரென்ட், அக்கா, அண்ணி கேரக்டரில் நடிக்கிற பீஸ் மாதிரி இருக்கு. இதெல்லாம் தமிழன் ரசனைக்கு செட் ஆகாது.]]]

அடப்பாவி தமிழா.. அழகு பொண்ணுகளையெல்லாம் விட்டுட்டு கண்றாவிகளையே ரசிக்கிறீங்களேடா..?

[[[அதுவுமில்லாம நல்ல சினிமா வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் அம்மணி கவர்ச்சிக் களத்தில் குதித்து சிறந்த பிட்டுப் பட நடிகையாகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பட்சி சொல்கிறது.]]]

இந்தப் பொண்ணு அப்படியெல்லாம் போகாது..! இதே சாயல்ல வேறு சில பொண்ணுக(மாதவி படத்து ஹீரோயின்) இருக்காங்க. அதை பார்த்துட்டு நீ கன்பியூஸ் ஆயிட்டன்னு நினைக்கிறேன்..!

sen said...

//மற்றொரு ஊமை கேரக்டரும் அடக்கம்..!//
vaai pesa mudiyaadhavar ena padhivittirukkalaam anna...

உண்மைத்தமிழன் said...

[[[creasen said...

//மற்றொரு ஊமை கேரக்டரும் அடக்கம்..!//

vaai pesa mudiyaadhavar ena padhivittirukkalaam anna...]]]

ஓகே.. மன்னிக்கணும். அவசரத்துல எழுதிட்டேன்.. மறந்திட்டேன்..! நன்றி..!