11-09-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மீண்டும் தனது அரசியல் சர்வாதிகாரத்தை லத்திகளின் துணையோடு செய்து காட்டியிருக்கிறார் தமிழகத்து புரட்சித் தலைவி..! இவருக்கும் ஜனநாயகத்திற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்பதை இவரது முதல் ஆட்சிக் காலத்தில் இருந்தே நாம் பார்த்துதான் வருகிறோம். ஆனாலும் கேவலங்கெட்ட இந்திய அரசியல் முறையினால் மிக மோசமான அரசியல்வியாதிகளில் ஒருவராக இருக்கும் இந்த தாய்தான் மீண்டும், மீண்டும் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்..!
மீன் பிடிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாத மீனவர்கள் தாங்கள் காலம், காலமாக வாழ்ந்து வரும் அதே இடத்தில்தான் தங்களது சந்ததிகளும் வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்..? நாளைய பொழுதுகளில் தங்களது பரம்பரையினருக்கு மீன் வலைகளையும், படகுகளை மட்டுமே சொத்தாக வைத்துவிட்டுப் போகவிருக்கும் இந்த குடும்பத் தலைவர்கள், தங்களுடைய நலனுக்கு குந்தகம் விளைவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்..? அந்த வகையில்தான் என்றோ ஒரு நாள் அவர்களுடைய உயிரைக் கொள்ளையாக அடித்துப் போகக் காத்திருக்கும் அணு உலையை எதிர்த்து அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்..!
திருவள்ளுவருக்கு எந்த “ள்” போட வேண்டும் என்றுகூட தெரியாத கட்சி பிரமுகருக்காக பஸ் மீது கல்லெடுத்து அடிக்கும் கட்சிக்காரர்களை பார்த்திருக்கும் தமிழகத்து மக்கள் கடந்த சில ஆண்டுகளாக மெளனமாக, அற வழியில்.. உண்மையான சத்தியாக்கிரக முறையில் போராட்டம் நடத்தி வரும் இந்த கூடங்குளம் அணு மின் நிலைய திட்ட எதிர்ப்புகளை கவனித்தே வந்திருக்கிறார்கள்..!
ஊர்வலம் நடத்திக் காண்பித்தார்கள். ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் காட்டினார்கள்.. நீண்ட, நெடிய உண்ணாவிரத்த்தைக்கூட நடத்தினார்கள்.. ஆனாலும் கல்நெஞ்சக்காரர்களையே அரசியல்வியாதிகளாக நாம் பெற்றிருக்கும் காரணத்தினால் இன்றுவரையில் இந்த மக்களின் சக்தியை உடைக்கும் வேலையிலேயே ஈடுபடுகிறார்கள் இந்த ஈனப் பிறவிகள்..!
முறையாகத் தகவல் சொல்லிவிட்டு, ஊர்வலமாக வந்த மக்களிடத்தில் சமாதானம் பேசுவதற்கு ஒரு அமைச்சரைக்கூட அனுப்பத் தெரியாத முக்கா லூஸு முதலமைச்சரை வைத்துக் கொண்டு நாம் என்னதான் செய்வது..? மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு இதுதான் என்று முன்பே சொல்லப்பட்டிருந்தாலும், இந்த ஆலையின் துவக்கமே சர்வாதிகாரத்தில்தானே துவங்கியிருக்கிறது..! எங்கோ டெல்லியில் உட்கார்ந்து கொண்டு அதை செய். இதைச் செய்.. அதை இங்கே வை.. இதை அங்கே வை என்று ஆணையிடுபவர்கள் இந்த ஆலையை டெல்லியிலேயே அமைத்திருக்கலாமே..? ஜனாதிபதி மாளிகையை இடித்துக்கூட கட்டியிருக்கலாமே..? இந்திய ஜனநாயகத்திற்கு பலிகடா அப்பாவி மக்கள்தானா..? அரசியல்வியாதிகளுக்கு இல்லையாமா..?
சுற்றுப்புற மக்களிடம் கருத்து கேட்காமல், அவர்களுடைய ஆதரவைப் பெறாமல் அவர்களுக்கு அறிவுறுத்தாமலேயே அவர்களுடைய உயிருடன் விளையாடும் ஆபத்துக்குரிய அந்த ஆலையை அங்கே கொண்டு வந்து அமைத்ததே ஜனநாயகமானதல்ல..! அந்த மக்களை முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லையெனில் அப்படியொரு ஆலைதான் அங்கே எதற்கு..? கல்பாக்கத்தின் அருகே குடியிருக்கும் மக்களில் 100-ல் ஒருவர் ஏதோ ஒரு இனம் புரியாத நோயால் இன்னமும் பாதிக்கப்படுகிறார்..! அங்கே அணு மின் நிலையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னமும்கூட சொன்னபடியாக செட்டில்மெண்ட்டும், வேலையும் தரப்படவில்லை. போபால் விஷ வாயு கசிவுக்கு பின்பு இப்போதுவரையிலும் எத்தனையோ குழந்தைகள் உடல் குறைபாட்டுடன் பிறந்து வருகின்றன.. இதையும் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த நாயும் கேட்டபாடில்லை.. இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய நிதியுதவியைக்கூட வாங்கித் தர வக்கில்லாத பரதேசிகள்தான் இப்போதும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்..! இப்படிப்பட்ட அரசியல் சூழலில், இந்த மக்களின் இந்தக் கோரிக்கை மிக, மிக நியாயமானதுதான்..
நேற்று ஊர்வலத்தில் வந்தவர்கள் எங்களுக்கு ஒரு இறுதி முடிவு தெரியும்வரையில் இடத்தைக் காலி செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு இரவில் கடலோரத்தின் தாலாட்டலில் அங்கேயே உறங்கியிருக்கிறார்கள். அந்த மக்களின் ஒத்துழைப்பையும், பயத்தையும், போராட்ட உணர்வையும் புரிந்து கொள்ளாத இந்த ஜெயலலிதாவின் பாசிஸ அரசு.. விடிந்தபோது தனது காவலாட் படைகளைக் கொண்டு நாயை விரட்டியடிப்பது போல சொந்த நாட்டு மக்களையே பந்தாடியிருப்பது கேவலமானது..!
இன்றைக்கு நடந்த இந்தக் கொடூரத்தின் மூலம் இந்த மக்களை ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நிச்சயம் பலிக்காது..! தங்களுடைய எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை அந்த மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.. எந்த சதிவேலையை செய்தும் அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நேற்றைய அவர்களது போராட்டமும் வெளிப்படுத்திவிட்டது. தமிழகத்தின் எந்தப் பகுதி மக்களுக்கும் இல்லாத அளவுக்கான கூடங்குளம் மக்களின் போராட்ட வெறியும், நேர்மையான வழிமுறையைப் பின்பற்றிய அவர்களது குணமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. அவர்களுக்கு எனது சல்யூட்..!
அதே சமயம் அதிகார வர்க்கம் தனது ஆக்டோபஸ் கரங்களால் ஊடகங்களையும் வளைத்துவிட்டது என்பதும் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது..! எல்லோருக்கும் நான் நட்ட நடுநிலையாளன் என்று தன்னைத் தானே புகழ்ந்து சொல்லிக் கொண்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று காலையில் இருந்து தனது ஒளிபரப்பில் சொல்லிக் கொண்டிருந்த கூடங்குளம் பற்றிய செய்திகளும், முறைகளும் அதன் உரிமையாளரின் குடுமி டெல்லிக்கும், சென்னைக்குமாக மாட்டியிருப்பதால் அரசுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்த்துகிறது..! இந்தக் கேவலத்திற்கு இந்த்த் தொலைக்காட்சியைத் துவக்கிய காசில் மேலும் 2 கல்லூரிகளைத் துவங்கி அங்கேயாவது கொள்ளையடித்து மொத்தமாக பாவத்தில் மூழ்கியிருக்கலாம்..!
தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு தி.மு.க. தொண்டன் போலீஸால் மிரட்டப்பட்டான் என்றாலே ஆண்டி போண்டியிலும், சிந்து, பொந்துவிலும் பஞ்ச் வசனம் பேசியும், முழுப் பக்கத்துக்கு ஒப்பாரியும் வைக்கும் மஞ்சத்துண்டு மைனர்.. இந்தக் கொடூரத்தை டிவியில் பார்த்து பேதி கண்டு வீட்டில் அமைதியாகப் படுத்திருக்கிறார்.. இதில் ஏதாவது வாயைக் கொடுத்து டெல்லியை பகைத்துக் கொண்டால், தனது அருமை மகளும், மகனும், பேரன்களும் தப்பிக்க முடியாதே என்று பச்சையான தனது சுயநல நோக்கத்தை வெளிக்காட்டிவிட்டார்..!
இவரது குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் தக்காளி சூஸ்தான் உடலில் இருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கும் இந்த முத்தமிழ் வித்தகர் தமிழர்களின் முதல் துரோகி பட்டியலில் இருந்து இறங்க மறுத்து அடம் பிடிப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஆட்சிக் கட்டில் இருந்தபோதுதான் அப்படியென்றால், இப்போதும்கூடவா..?
இவர்களுடைய கலைஞர் தொலைக்காட்சியிலும், சன் தொலைக்காட்சியிலும் சுப.உதயகுமார் தப்பி ஓட்டம் என்று பிளாஷ் நியூஸ் போட்டுத் தாளித்தார்கள். அட பக்கிகளா..? கிரானைட் ஊழல் வழக்கில் இவரது அருந்தவ புத்திரனின் மகன் தயாநிதி அழகிரி ஒரு மாதமாக தலைமறைவாகத்தானே இருக்கிறார்.. அதைப் பற்றி போட வக்கில்லாமல், உண்மையான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவரைப் பற்றி பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி அந்த மக்களின் உண்மையான உணர்வுகளை கேவலப்படுத்தும் இந்தப் பொழைப்பெல்லாம் தேவைதானா..?
ஆத்தாவுக்கு எப்போதுமே மக்கள் பிரச்சினைகள் என்றால் என்னவென்றே தெரியாது..? முன்பே தெரியாது.. இப்போது மட்டும் என்ன தெரிந்துவிடவா போகிறது..? எப்படியாவது பெங்களூர் வழக்கில் இருந்து தப்பித்தாக வேண்டும் என்கிற பயத்துடன் இருக்கும் அம்மையார், நேற்றைக்கு ஊருக்குள்கூட வராத ஒண்ணுமில்லாத மண்ணுமோகனசிங்கை விமான நிலையத்தில் பார்த்து வணக்கம் சொல்கிறார்.. தானும், தனது கட்சிக்காரர்களும் ஓட்டே போடாத ஜனாதிபதியை பார்த்து வணங்கியும் இருக்கிறார்.. கூடவே பாஜகவுடன் இணக்கமாகவும் இருக்கிறார். இத்தாலிய மம்மியை பற்றி கிண்டலடித்தவர் தற்போதெல்லாம் தி.மு.க.வை மட்டுமே தாக்கிவிட்டு மற்றவர்களை சைக்கிள்கேப்பில்கூட கண்டு கொள்வதில்லை..!
“நான் உன் ஊழலை கண்டு கொள்ள மாட்டேன்.. நீ என் ஊழலை கண்டு கொள்ளக் கூடாது..” என்ற ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்படி இனி காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி ஓஹோவென வளரும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் இந்தப் போராட்டத்தை எந்த வகையிலாவது ஒடுக்கி சுத்தமாக இல்லாமல் செய்தால் ஒருவேளை ஆத்தா ஜெயில் கம்பி எண்ண வேண்டிய சூழலில் இருந்து 2 பெரிய கட்சிகளும் சேர்ந்து காப்பாற்றலாம்... இந்த காரணத்துக்காகவே ஆத்தா பொதுமக்களுடன் இப்படி மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார்..!
இவரே அடித்து கொலை செய்ய போலீஸை அனுப்புவாரம்.. யாராவது செத்து போனால் உடனேயே நம்முடைய பணத்தில் இருந்து 5 லட்சம் கொடுப்பாராம்.. இவரை யாராவது கொலை செய்துவிட்டு, இவருக்கே 5 லட்சம் கொடுத்தால் ஒருவேளை நரகத்தில் இருந்தபடியே ஏற்றுக் கொள்வாரோ..?
மண்ணை வாரி தூற்றி வீசியிருக்கும் அந்தச் சாபக் குரல்களுக்கு சக்தி இருக்கோ இல்லையோ.. அரசியல்வியாதிகள் கோவில், கோவிலாக சுத்தும் அந்த பக்திக்கு பலன் கிடைக்குமோ கிடைக்காதோ..? இந்தக் கேடு கெட்டவர்கள் விரைவில் மாண்டொழிந்தால்தான் இந்தப் பிரச்சினைக்கெல்லாம் விடிவு கிடைக்கும்.. இல்லாவிடில் அதுவரையில் இது போன்ற பலிகளில் நாம் நமது குடும்பத்தினரை இழந்துதான் ஆக வேண்டும்..!
இது நமக்குக் கிடைத்திருக்கும் சாபக்கேடு..!
|
|
Tweet |




