The Friend - சுவிட்சர்லாந்து திரைப்படம்

12-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

11-02-2009 செவ்வாய்கிழமை, ICAF அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டுத் திரைப்படம் The Friend.

தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்கு தேவையான ஒரு கதைக் கரு இப்படத்தில் உள்ளது. படித்து வைத்துக் கொள்ளுங்கள்.

எமில். வயது 22 இருக்கும். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். இதுவரையில் கேர்ள் பிரெண்ட் என்று யாரும் இவனுக்குச் சிக்கவில்லை. காரணம் சின்னதுதான். ஆளே பார்க்க ‘கோண்டு' போல் இருப்பான். நடந்து வரும்போதே “பேக்கு வருதுடோய்..” என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட தோற்றம். நடத்தை. சுருக்கமாக, 'காதல் கொண்டேன்' ஹீரோ போல்..


வீட்டில் அவனை விடவும் ‘பேக்கான' ஒரு அம்மா. பைபூன் நடுநசியில் வீடு திரும்பிக் கொண்டிருக்க, அவ்வளவு நேரம் கண் விழித்து டிவி பார்த்துவிட்டு “சாப்பிட்டாயாப்பா.. சாப்பிடுறியா கண்ணு..?” என்று அக்கறையாக விசாரிக்கும் குணம்.

எமில் ஒரு விடுதியில் ஒய்யராமாக மதுவோ, தேநீரோ அருந்திக் கொண்டிருக்கும் வேளையில் மேடையில் ஒரு கிடாரை வைத்துக் கொண்டு சோலோவாக பாடிக் கொண்டிருக்கும் லாரஸ்ஸியைப் பார்க்கிறான். பார்த்தவுடன் அவள் முகம் எமிலின் இதயத்தில் 'பச்சக்' என்று ஒட்டிக் கொள்கிறது.

அவளிடம் பேச முயல்கிறான். அவள் அவனைத் தவிர்த்துவிட்டுச் செல்கிறாள். மறுநாள் அவளைப் பார்க்கவும், பின் தொடரவும் செய்கிறான். இஇரண்டு நாள் விட்டு மூன்றாம் நாள் மான், புலியைப் பார்த்துவிடுகிறது. 'ஒரே போடாக போடுவோம்' என்று நினைத்து, “எனக்கு பாய் பிரண்டாக இஇருக்க முடியுமா..?” என்று கேட்கிறாள் லாரஸ்ஸி.

பழம் நழுவி பாலில் விழுந்த கதை நம்ம எமிலுக்கு. இதற்குத்தானே பின்னாலேயே சுற்றி வந்து தவம் கிடக்கிறான். ஒத்துக் கொள்கிறான். லாரஸ்ஸி பூடகமாகவே பேசுகிறாள். “நாளைக்கு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். என் அம்மா, அப்பாகிட்ட 'நான் நல்லா இருக்கேன்..' 'சந்தோஷமா இருக்கேன்'னு மட்டும் சொல்லணும்.. என்ன தெரியுதா..?” என்று கேட்க.. பலியாடு போல் தலையாட்டுகிறான் எமில்.

அடுத்தக் காட்சி வாய் பேச முடியாத சில இளைஞர், இளைஞிகளோடு வாசம் செய்து வரும் ஒரு பெண்ணிடமிருந்து துவங்குகிறது.

இஇவள் பெயர் நோரா. லாரஸ்ஸியின் அக்கா. நோராவுக்கு ஒரு போன் வருகிறது. போன் செய்தி கேட்டதும் கலங்கிப் போய் நிற்கிறாள். உடனேயே தனது துணிமணிகளை பேக்கப் செய்து கொண்டு டிரெயின் ஏறுகிறாள். மறு ஸ்டேஷனில் அவளது அம்மா வாசலில் காரில் காத்திருக்கிறாள்.

லாரஸ்ஸி விபத்தில் பலியாகிவிட்டதாக கொடூரச் செய்தி கேட்டுத்தான் கிளம்பி வந்திருக்கிறாள் நோரா. வீட்டுக்கு வருகிறார்கள் இஇருவரும். அங்கே அப்பா இறுக்கத்துடன் அமர்ந்திருக்கிறார். மகளும், அப்பாவும் ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்கள்.

எமில் லாரஸ்ஸியிடம் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்கிறான். வரவில்லை. அவள் வழக்கமாகப் பாடும் விடுதிக்குச் சென்று விசாரிக்கிறான். அவள் வரவில்லை என்கிறார்கள். வேறு ஒரு கோஷ்டி அகோரமாக பாடிக் கொண்டிருக்க.. கூட்டம் அலை மோதி நடனமாடிக் கொண்டிருக்கிறது.

சூழ்நிலையே வேறாக இருக்க சோகத்துடன் வீடு திரும்புகிறான். லாரஸ்ஸியின் பழைய ஆல்பத்தை எடுத்துப் பார்ப்பவன் அதில் இருக்கும் மொபைல் போன் நம்பரை பார்த்து டயல் செய்கிறான்.

இங்கே லாரஸ்ஸியின் வீட்டில் அவளுடைய மொபைல் போன் ஒலிக்கிறது. போனை எடுக்கும் நோரா “யார்..?” என்று கேட்கிறாள். தான் லாரஸ்ஸியைக் கேட்பதாகச் சொல்கிறான் எமில். அவள் “லாரஸ்ஸி இறந்துவிட்டாள். ஆக்ஸிடெண்ட்..” என்கிறாள் நோரா. அதிர்ச்சியோடு போனை வைக்கிறான் எமில்.

லாரஸ்ஸியின் அம்மா “யார் போன் செய்தது..?” என்று நோராவிடம் கேட்க “தெரியாது..” என்கிறாள். “யாருன்னு கேட்டிருக்கலாமே..?” என்று பதைபதைக்கிறாள். அவளே போனை எடுத்து டயல் செய்ய எமில் போனை எடுக்கிறான். தான் லாரஸ்ஸியின் பாய்பிரெண்ட் என்கிறான். அவனை உடனடியாக வரச் சொல்கிறாள் லாரஸ்ஸியின் தாயார். “அவன் வரட்டும்.. அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்..” என்கிறாள் தாய்.

நம்மாளு.. எமிலு.. அதான் பேக்குன்னு சொல்லிட்டமோ.. நேராக பூக்கடைக்குச் சென்று “முதல் முதல்லா ஒருத்தர் வீட்டுக்குப் போறேன்.. எந்த மாதிரியான பூச்செண்டு கொண்டு போகணும்..” என்கிறான். வெள்ளை நிறப் பூக்களை வாங்கிக் கொண்டு லாரஸ்ஸியின் வீட்டுக்கு வருகிறான்.

கால நேரம் தெரியாமல் வாங்கி வந்திருக்கும் பொக்கே அவனது குணத்தைக் காட்டிவிடுகிறது லாரஸ்ஸியின் குடும்பத்தினருக்கு. அவனை அமர வைத்து லாரஸ்ஸி பற்றி கேட்கிறார்கள். லாரஸ்ஸி மின்சார கிடாரை பயன்படுத்தும்போது ஏற்பட்ட மின்கசிவால் அதிர்ச்சிக்குள்ளாகி இறந்துவிட்டாள் என்கிறாள் லாரஸ்ஸியின் தாய். லாரஸ்ஸி தன்னை அன்று மாலைதான் சந்திப்பதாக வாக்கு கொடுத்திருந்தாள். ஆனால் அதன் பிறகு அவளிடமிருந்து தகவலே இல்லை என்கிறான் எமில். அவர்களால் நம்ப முடியவில்லை. குறிப்பாக நோராவால். “தங்கச்சி பாய்பிரெண்ட் வைத்திருந்தால் என்னிடம் சொல்லியிருப்பாளே..” என்று கிசுகிசுக்கிறாள்.

ஈமக்கிரியைகளை எப்படி நடத்துவது என்று ஆலோசிக்கிறார்கள். அதற்காகவே காத்திருஇருக்கும் ஒரு ஏஜென்ஸிக்காரனிடம் கலந்து பேசுகிறார்கள். “உடலை எரித்து சாம்பலை ஆஷ் மலைத்தொடரில் விமானத்திலிருந்து வீசலாம்..” என்கிறான். இல்லாவிடில் நாடு முழுவதும் பல பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று வீசலாம்” என்கிறான். “நகரின் பெரிய, பணக்காரத்தனமான கார்களையெல்லாம் வாடகைக்கு எடுத்து கோலாகலமாகக் கொண்டு போகலாம்..” என்கிறான் ஏஜென்ஸிக்காரன்.

நம்ம எமிலுக்கு இதுவெல்லாம் மிக மிக சீப்பாகத் தோன்றுகிறது. அவன் ஒரு கதை சொல்றான் பாருங்க.. “எங்க அப்பா இறந்தப்ப ரொம்ப சிம்பிளா நாலே பேர் நடந்து போய் புதைச்சிட்டு சத்தமில்லாம வந்துட்டோம்..” என்கிறான். ஏஜென்ஸிக்காரனின் முகம் போன போக்கை பார்க்கணுமே..? முடிவாக இஅதே ஊரிலேயே அடக்கம் செய்துவிடலாம் என்று தீர்மானிக்கிறார்கள்.

நோராவும், எமிலும் லாரஸ்ஸியைப் பற்றிப் பேசுகிறார்கள். நெருங்குகிறார்கள். அவளுக்கோ தங்கையை மறக்க முடியவில்லை. எமிலுக்கு தன்னையும் ஒரு மனிதனாக நினைத்து அழைத்துப் பேசுகிறார்களே என்ற பெருமிதம்.

அடக்கத்திற்கு முன்பாக சடலம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்து லாரஸ்ஸியை பார்க்கிறான் எமில். நோராவும், எமிலும் சேர்ந்து பூதவுடலை பெட்டிக்குள் வைத்து பூட்டுகிறார்கள். ஊர்வலமாகச் சென்று அடக்கம் செய்கிறார்கள். அங்கேயே ஒரு சிறிய பிரேயர் நடக்கிறது. நோரா துக்கம் தொண்டையை அடைக்க தனது சகோதரி பற்றிய செய்திகளை வந்திருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்கிறாள். எமில் துக்கத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறான்.

அதனைத் தொடர்ந்து விருந்தோம்பல் நடக்க.. அங்கே சும்மா சுற்றிக் கொண்டிருக்கும் எமிலை லாரஸ்ஸியின் தந்தை மோப்பம் பிடிக்கிறார். பாத்ரூம் கதவைச் சாத்திக் கொண்டு வாய் விட்டு கதறியழும் அவளது அப்பா தனக்கு ஆறுதல் சொல்ல வரும் எமிலை மடக்குகிறார். அவன் ஒரு நாளும் தன் மகளுக்கு பாய்பிரெண்ட்டாக இருந்திருக்க முடியாது என்கிறார். பேக்கு எமில் மாட்டிக் கொண்டதை உணர்ந்து அதனை ஒப்புக் கொள்கிறான். “ஆமா மாமா.. சும்மா ஒரு நாள் பழக்கம்தான்..” என்கிறான். “இது நமக்குள்ளேயே இருக்கட்டும்..” என்கிறார் அப்பா.

லாரஸ்ஸியின் அம்மா தன் தாய், தந்தையிடம் லாரஸ்ஸியின் சாவு பற்றிப் பேசுபவள் இப்போதுதான் உண்மையைச் சொல்கிறாள் ‘லாரஸ்ஸி தற்கொலை செய்து கொண்டாள்'என்று. இதனைக் கேட்டுவிடும் நோரா கோபப்படுகிறாள். தன்னிடம் ஏன் முன்பே இதனைச் சொல்லவில்லை என்று கோபப்படுகிறாள். காரியம் முடிந்த பின்பு சொல்லலாம் என்று நினைத்ததாக அம்மா சொல்ல நோராவால் அதனை ஏற்க முடியவில்லை. கோபமாக கத்திவிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறாள்.

இதுவரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எமிலும் இனியும் அங்கேயிருந்தால் நமக்கு மரியாதை இல்லை என்று உணர்ந்து வெளியேறுகிறான். பஸ்ஸ்டாப்பில் அமர்ந்திருக்கும் நோராவிடம் “வெளியில் போலாமா..?” என்று கேட்க இருவரும் அதே விடுதிக்குச் செல்கிறார்கள். அரங்கத்தின் உள்ளே இபோது ஆட்டமும், பாட்டமுமாக ‘மானாட மயிலாட' சீன்ஸ் நடந்து கொண்டிருக்கிறது.

இருக்கின்ற சோகத்தையெல்லாம் குப்பி, குப்பியாகக் குடித்தே தீர்க்கிறார்கள் இருவரும். நோரா பாட்டுக்கும், இசைக்கும் ஏற்றாற்போல் நடனமாட விரும்புகிறாள். எமிலை கட்டாயப்படுத்தி நடனமாட வைக்கிறாள். நம்மாளு ஏதோ ‘தத்தக்கா, பித்தக்கா..' என்று ஆடி சமாளிக்கிறான்.

உள்ளே போன சரக்கு வாய் வழியாக வெளியே வந்த பின்பு சுய நிலைமைக்கு வருகிறாள் நோரா. தான் இப்படியே வீட்டுக்குப் போக விரும்பவில்லை என்கிறாள். லாரஸ்ஸி முன்பு தங்கியிருந்த அறைக்கு வருகிறார்கள். படுக்கையில் சாய்கிறாள். அவனையும் தன்னுடனேயே தங்கச் சொல்கிறாள் நோரா.

எமில் பின்நவீனத்துவத்தின் அடையாளமாக சட்டையைக் கழட்டிவிட்டு அவளருகே வந்து படுத்தவன், திடீரென்று முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக மாறி போர்வையைப் போத்திக் கொண்டு பின்பு தனது பேண்ட்டை அவிழ்த்தெடுத்து வெளியில் போடுகிறான்.
இருவரின் கைகளும் ஒரு சந்தர்ப்பத்தில் பட்டுக் கொள்ள.. பின்பு அது தொட்டுக் கொள்ள.. தொடர்ந்து கட்டிக் கொள்கின்றன. இருவருக்குமே அது முதல் அனுபவம் என்பதைப் போல் கைகளிலேயே கண்ணாமூச்சி விளையாடிவிட்டு இரண்டு நொடி இடைவெளியில் இருவரும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொள்கிறார்கள்.

ஆலீங்கனம் அலங்கோலமாக அரங்கேறத் துவங்க முக்கால் நிர்வாணமாகிறார்கள் இருவரும். அந்த நேரத்தில் எமிலின் தலைக்குள் ஏதோ ஒரு இடத்தில் லைட் எரிந்துவிட.. பட்டென்று பிரிகிறான்.. பின் எழுகிறான். வேகவேகமாக தனது உடைகளை அணிந்து கொண்டு அவளுக்கு குட்பை சொல்லிவிட்டுப் போக நோரா திகைத்துப் போகிறாள்.

வீட்டுக்கு வந்து மோட்டுவளையைப் பார்த்தபடியே யோசிக்கிறான் எமில். “நாம எந்த வகையில் தப்பு பண்ணிட்டோம்..?” என்று சிந்திக்கிறான். விடிகிறது. காலையில் நோரா தன் வீட்டுக்குத் திரும்புகிறாள். அவளைக் காணாமல் இரவெல்லாம் தவித்துப் போய்விட்டதாக அவளது அம்மா சொல்கிறாள். தான் லாரஸ்ஸியின் இடத்தில் தங்கியிருந்ததாகச் சொல்கிறாள் நோரா.

காலை வரையிலும் யோசித்துக் கொண்டிருக்கும் எமிலுக்கு திடீரென்று தான் செய்தது முட்டாள்தனமாகத் தெரிந்துவிட்டது. பட்டென்று எழுந்து நிமிடத்தில் நோராவின் வீட்டிற்கு வந்து நிற்கிறான். அவளுடன் பேச வேண்டும் என்கிறான். இருவரும் வெளியில் செல்ல.. கடைசியில் லாரஸ்ஸியின் படுக்கையிலேயே வந்து விழுகிறார்கள்.

நேற்றைக்கும் சேர்த்து விட்ட குறையை முழுமையாகப் பூர்த்தி செய்து மூச்சிரைக்க தனது கன்னித்தன்மையை நோராவிடம் இழக்கிறான் எமில். அந்த நேரத்தில்தான் சிவபூஜையில் புகுந்த கரடியாக நோராவின் பெற்றோர் அங்கே வருகிறார்கள்.


எமில் அலறித் துடித்து தனது நிர்வாணத்தை மறைக்க படாபாடுபட்டு உடைகளை அணிகிறான். நொடியில் வெளியில் போன பெற்றோர் கோபத்துடன் மறுபடியும் உள்ளே வந்து நோராவுடன் சண்டையிடுகிறார்கள்.

“இவனையே இப்பத்தான் பார்த்த.. அதுக்குள்ளஇவ்ளோ தூரமா..?” என்கிறாள் அம்மா. நோரா பதில் சொல்லாமல் இருக்க.. எமிலை “லாரஸ்ஸியின் பாய்பிரெண்ட்..” என்று சொல்லி சொல்லி அம்மா குத்திக் காட்ட.. எமில் பட்டென்று “அது பொய்” என்கிறான். இப்போது நோராவும் அதிர்ச்சியடைகிறாள்.

“எனக்கும் லாரஸ்ஸிக்கும் இஇடையே ஒரு நாள் மட்டும்தான் பழக்கம்..” என்று சொல்ல நோராவால் இதனை நம்ப முடியவில்லை. பெற்றோர் பேச முடியாமல் மெளனமாக இருக்க.. அவனைத் திட்டித் தீர்க்கிறாள். “ஒரு நாள் உறவை வைத்துக் கொண்டு எப்படி அவனால் இவ்வளவு தூரம் நுழைய முடிந்தது..?” என்கிறாள். பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் எமில் பேசாமல் இஇருக்க.. அனைவரும் பிரிகிறார்கள்.

சோர்வுடன் வீடு திரும்பும் எமிலுக்கு அதிசயத்தில் அதிசயமாக அவனுடைய அம்மா கதவை பூட்டியிருப்பது தெரிகிறது. தன் சாவியால் கதவைத் திறந்து உள்ளே வருபவன் தன் அம்மா நிம்மதியாகத் தூங்குவதைப் பார்த்து நிம்மதிப்படுகிறான். அவனுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு புது திருப்பம் இன்றைக்கு நிகழ்ந்திருப்பது அவனுக்குள் புரிகிறது.

மறுநாள் நோரா தன்னுடைய வேலைக்குப் புறப்பட அவள் அம்மா அவளை வழியனுப்பி வைக்கிறாள். தன்னுடைய இடத்திற்கு வந்தவுடன் அவளுக்கு வந்திருக்கும் பழைய கடிதங்களைப் பார்க்கிறாள். அதில் ஒன்று லாரஸ்ஸி எழுதியது. தான் யாருக்கும் தொந்தரவாக இருக்க விரும்பவில்லை என்றும், ஒரு தீர்மானமான முடிவை எடுத்திருப்பதாகவும், போய் வருவதாகவும் எழுதியிருக்க கண்ணீர் விடுகிறாள் நோரா.

இங்கே சோகத்துடன் இஇருக்கும் எமில், இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவது என்கிற மனநிலைக்கு சட்டென வருகிறான். டிரெயினைப் பிடிக்கிறான். தனது வீட்டு வாசலில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் நோரா எமில் வந்து நிற்பதைப் பார்க்கிறாள். அவனருகே வருகிறாள்.

எமில் இப்போதுதான் ஹீரோவைப் போல் பேசுகிறான். தனக்கு அவள் மேல் காதல் பிறந்துவிட்டதாகவும், தன்னால் அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று பதட்டத்துடன் தனது உறுதியான காதலைத் தெரிவிக்கிறான். நோரா அவனது கன்னத்தைத் தொட்டு அவனது உணர்ச்சியைத் தடுத்துவிட்டு தனக்கு காதல் இல்லை என்று சொல்ல.. எமில் சோகத்துடன் திரும்பி நடக்கிறான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்கும் நோராவுக்குள்ளும் மீண்டும் ஒரு மனப்போராட்டம்..

விதியை நொந்து, வாழ்க்கையை நொந்து, சோகத்துடனும், வெறுப்புடனும் கடற்கரையில் நடக்கும் எமில் தனது கோபத்தை கடற்கரை மணலிலும், கடல் நீரிலும் காட்டுகிறான். அலைக்கழிக்கிறான். ஆனால் ஒரு சில வினாடிகள்தான். அவனைப் பின் தொடர்ந்து வந்து நிற்கிறாள் நோரா. இருவரும் கடற்கரை மணலில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பதோடு திரைப்படம் நிறைவடைகிறது.

ஹீரோத்தனமும் இல்லாமல் வில்லத்தனமும் இல்லாமல் நடுவாந்திர குணத்துடன் பிறந்து தொலைத்துவிடும் சராசரி இளைஞன் ஒருவனின் மனப்போராட்டத்தை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

அதிகமான உணர்ச்சிவசப்படுதலோ, மிகையான நடிப்போ இல்லாமல் நடிகர்கள் காட்டியிருக்கும் நடிப்புதான் படத்தினை வெகுவாக ரசிக்க வைக்கிறது.

படத் துவக்கத்தில் எமிலின் மீது பார்வையாளர்களுக்கு உண்டான அனுதாபத்தை கடைசி வரையிலும் நீர்த்துப் போக வைக்காமல், நாரோ அவளை புறக்கணித்தவுடன் நம் மனதுக்குள்ளேயே அவளை வையும் அளவுக்கு எமிலின் மீதான ஒரு பிடிப்பை பார்வையாளர்களிடம் உருவாக்கி வைத்திருந்த இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும்.

இத்திரைப்படத்தின் இயக்குநர் MICHA LEWINSKY. இவர் இயக்கியிருக்கும் முதல் திரைப்படமே இதுதானாம். படத்தில் புதுமுக இயக்குநருக்கான அடையாளம் கொஞ்சம்கூட இல்லை.

சென்ற மாதம்தான் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. அதற்குள்ளாக ஜனவரி 15ம் தேதியிலிருந்து 21-ம் தேதி வரையிலும் சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான பார்வையாளர்கள் விருதை இத்திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

மேலும் இந்தாண்டு பல திரைப்பட விழாக்களில் பல விருதுகளை இத்திரைப்படம் பெறுவதற்கான வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்.

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்கள்..

நன்றி

வணக்கம்.

32 comments:

மணிகண்டன் said...

என்ன மொழி படம் இது ?

உண்மைத்தமிழன் said...

//மணிகண்டன் said...
என்ன மொழி படம் இது?//

மணிகண்டன் ஸார்..

என்ன இது? இப்படி காமெடி பண்றீங்க..?

'சுவிட்சர்லாந்து திரைப்படம்' என்று தலைப்பிலேயே குறிப்பிட்டுள்ளேனே..?

கவனிக்கவில்லையா..?

benza said...

படத்தை போலவே உங்களது விமர்சனமும் >>>
வழமையான காந்த ஈர்ப்பு இல்லாது மெதுமையான விட்டுவிடும் போன்ற
கவரும் தன்மை >>>
இருந்தும் படம்போலவே கடைசி வரை வாசிக்க வைத்தது சொல்லாட்சி >>>
அதென்ன இடையிடையே ''இ'' கள் எக்ஸ்ட்ரா வா தந்திருக்குது ???
நித்திரை தூக்கமோ ???
படம் பாத்ததும் மறக்க முதல் விமர்சனம் எழுதினால் இப்படியே வருமோ ???
மனதில் உள்ளதை ரெகார்ட் பண்ணிட்டு காலையில் எழுதினால்
உடம்புக்கும் நல்லது > எமக்கும் நீண்டகாலம் உங்களது விபரிக்கும்
விமர்சனத்தை வசிக்கும் வாய்ப்பு கிட்டும் >>>
சொல்லாண்மை ஆச்சரியமாயிருக்குதையா > நன்றி

benza said...

உண்மை சார் நான் follow பண்ணறதுக்கு ரெண்டொரு websites தாங்களேன் ப்ளீஸ்

benza said...

இன்னொரு விஷயம் > உங்களது Blog என்னுடைய ''கவனித்த'' blog ல் வருவதுபோல
என்னுடைய Blog உங்களுக்கு வருகுதா சார் ?
வருகுதானால் என்ன சார் செயிரிங்க ? ஸ்டாண்டர்ட் மிச்சம் கம்மியா சார் ?
இல்லையானால் > அவ்வாறு வரவைக்க என்ன செய்ய வேண்டும் ?
லிங்க் குடுகொனும்மேன்றால் அதை எவ்வாறு செய்வது என விளக்குங்கள் ப்ளீஸ்

benza said...

சுவிஸ் நாட்ல பிரெஞ்சு ஜேர்மன் இங்கிலீஷ் இருக்கும் போல

அதுதான் மணிகண்டன் கேள்வி என்று நினைக்கிறேன்

நையாண்டி நைனா said...

எல்லா படத்திற்கும் போறது சரி... நம்ம வீட்டுக்கும் கொஞ்சம் வந்துட்டு போகலாமே.

நையாண்டி நைனா said...

/*தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்கு தேவையான ஒரு கதைக் கரு இப்படத்தில் உள்ளது. படித்து வைத்துக் கொள்ளுங்கள்.*/

சரிதான். ஆனா செல்வராகவனையும், தனுசையும் மட்டும் தூர இருக்க சொல்லுங்க, இந்த படமும் தப்பிக்கும் கூடவே நாமளும்.

நித்யன் said...

உங்களுக்கு விரைவில் கல்யாணமாகி இந்தமாதிரி திரைப்படங்களைப் பார்க்கப்போக தடைவிதிக்கப்பட்டு, எங்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொள்ளாமல் இருந்து எல்லா வளமும் பெற காசியில் உள்ள எல்லா அகோரி பாபாக்களிடமும் வேண்டிக்கொள்கிறேன்.

அன்பு நித்யன்

மணிகண்டன் said...

********
'சுவிட்சர்லாந்து திரைப்படம்' என்று தலைப்பிலேயே குறிப்பிட்டுள்ளேனே..?

கவனிக்கவில்லையா..?
********

நானே google வழியா கண்டுபுடிச்சிக்கிட்டேன்.

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
படத்தை போலவே உங்களது விமர்சனமும் >>>
வழமையான காந்த ஈர்ப்பு இல்லாது மெதுமையான விட்டுவிடும் போன்ற
கவரும் தன்மை >>>
இருந்தும் படம் போலவே கடைசி வரை வாசிக்க வைத்தது சொல்லாட்சி >>>//

நமது எழுத்து இந்த மாதிரிதான் பென்ஸ் ஸார்..

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்..?

//அதென்ன இடையிடையே ''இ''கள் எக்ஸ்ட்ரா வா தந்திருக்குது??? நித்திரை தூக்கமோ ???//

அது ஒரு பெரிய கதை ஸார்.. எனது டைப்பிங்கில் இ என்கிற எழுத்து வர மறுக்கிறது.. அதனால் கேரக்டர் மேப்பில் இருந்து காப்பி செய்தேன். காப்பி செய்யும்போது கீ போர்ட் மிஸ்டேக்கால் இரண்டிரண்டாக விழுந்துவிட்டது. அவசரமாகவும் பதிவிட்டதால் அதனைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது.

//படம் பாத்ததும் மறக்க முதல் விமர்சனம் எழுதினால் இப்படியே வருமோ??? மனதில் உள்ளதை ரெகார்ட் பண்ணிட்டு காலையில் எழுதினால் உடம்புக்கும் நல்லது > எமக்கும் நீண்டகாலம் உங்களது விபரிக்கும் விமர்சனத்தை வசிக்கும் வாய்ப்பு கிட்டும் >>> சொல்லாண்மை ஆச்சரியமாயிருக்குதையா > நன்றி//

நேரம்தான் பிரச்சினை ஸார்.. எனக்கு ராத்திரி மட்டும்தான் இணையத்தில் முன் அமரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதனால்தான் இரவில் போஸ்ட் போட வேண்டிய கட்டாயம்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
உண்மை சார் நான் follow பண்ணறதுக்கு ரெண்டொரு websites தாங்களேன் ப்ளீஸ்.//

பெரிய லிஸ்ட்டே தருகிறேன்.. ஆனால் திங்கள்கிழமைதான்.. கோபிக்க வேண்டாம்..

உங்களுடைய ஆர்வத்திற்கு தலைவணங்குகிறேன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
இன்னொரு விஷயம் > உங்களது Blog என்னுடைய ''கவனித்த'' blogல் வருவதுபோல
என்னுடைய Blog உங்களுக்கு வருகுதா சார் ?
வருகுதானால் என்ன சார் செயிரிங்க? ஸ்டாண்டர்ட் மிச்சம் கம்மியா சார் ?
இல்லையானால் > அவ்வாறு வரவைக்க என்ன செய்ய வேண்டும் ?
லிங்க் குடுகொனும்மேன்றால் அதை எவ்வாறு செய்வது என விளக்குங்கள் ப்ளீஸ்..//

என்னைத் தொடர்பவர்கள் லிஸ்ட்டில் உங்களது பெயர் வருகிறது என்று நினைக்கிறேன்..

நான் திரட்டிகளின் மூலமே பதிவுகளைப் பார்ப்பதினால் திரட்டிகளில் உங்களுடைய புதிய பதிவுகள் வந்த பின்புதான் நான் பார்ப்பேன்.. அது ஒரு பதிவு இணைப்பிற்காக மட்டும்தான்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
சுவிஸ் நாட்ல பிரெஞ்சு ஜேர்மன் இங்கிலீஷ் இருக்கும் போல
அதுதான் மணிகண்டன் கேள்வி என்று நினைக்கிறேன்.//

சரியாகக் கவனித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்..

அவ்வளவுதான்.. அவரே இப்போது மறுபடியும் பின்னூட்டம் இட்டிருக்கிறார்.. கூகிளில் தேடி கண்டுபிடித்துவிட்டதாக..

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
எல்லா படத்திற்கும் போறது சரி... நம்ம வீட்டுக்கும் கொஞ்சம் வந்துட்டு போகலாமே.//

கோச்சுக்காத நைனா. நேரமில்லைன்றதுதான் முக்கியமாக்கும்..

இனிமே கண்டிப்பா உன்ற வூட்டுக்குள்ள வர்றேன்.. இது சத்தியம்..

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
/*தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்கு தேவையான ஒரு கதைக் கரு இப்படத்தில் உள்ளது. படித்து வைத்துக் கொள்ளுங்கள்.*/
சரிதான். ஆனா செல்வராகவனையும், தனுசையும் மட்டும் தூர இருக்க சொல்லுங்க, இந்த படமும் தப்பிக்கும் கூடவே நாமளும்.//

அது முடியாது.. இந்நேரம் டிவிடி அவுக கைக்குப் போயிருக்கும்னு நினைக்கிறேன்..

வரட்டுமே.. பார்த்துக்கிடுவோம்.. இவுக எப்படி எடுத்து வைச்சிருக்காகன்னு..

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
உங்களுக்கு விரைவில் கல்யாணமாகி இந்தமாதிரி திரைப்படங்களைப் பார்க்கப்போக தடைவிதிக்கப்பட்டு, எங்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொள்ளாமல் இருந்து எல்லா வளமும் பெற காசியில் உள்ள எல்லா அகோரி பாபாக்களிடமும் வேண்டிக்கொள்கிறேன்.
அன்பு நித்யன்//

தம்பீ நித்யா..

உன் சாபம் நிச்சயம் பலிக்க வேண்டுமாய் என் அப்பன் முருகனை மனமுருகி வேண்டிக் கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//மணிகண்டன் said...
********
'சுவிட்சர்லாந்து திரைப்படம்' என்று தலைப்பிலேயே குறிப்பிட்டுள்ளேனே..?
கவனிக்கவில்லையா..?
********
நானே google வழியா கண்டுபுடிச்சிக்கிட்டேன்.//

நன்றி மணிகண்டன்..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

வெண்பூ said...

நல்ல விமர்சனம் உண்மைத்தமிழன்.. ஆனால் படத்தின் முழுக்கதையையும் சொல்வதற்கு பதில் கிளைமேக்ஸை மட்டுமாவது சொல்லாமல் தவிர்த்திருக்கலாம், அது படம் பார்க்கும் ஆவலை அதிகப்படுத்தும்..

உண்மைத்தமிழன் said...

//வெண்பூ said...
நல்ல விமர்சனம் உண்மைத்தமிழன்.. ஆனால் படத்தின் முழுக்கதையையும் சொல்வதற்கு பதில் கிளைமேக்ஸை மட்டுமாவது சொல்லாமல் தவிர்த்திருக்கலாம், அது படம் பார்க்கும் ஆவலை அதிகப்படுத்தும்..//

வெண்பூ அவர்களே..

தங்களது கருத்திற்கு நன்றி..

இருந்தாலும், இந்தப் படத்தின் கதை என்ன என்று தேடுபவர்களுக்கு எனது பதிவு முழுமையான பதிலைச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அதனால்தான் முழுக் கதையையும் சொல்லிவிடுகிறேன்..

எப்படியிருந்தாலும் ஹாலிவுட் ஆர்வலர்கள், உலக சினிமா ரசிகர்கள் அந்தப் படத்தினை பார்த்தே விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..

உண்மைத்தமிழன் said...

//Valaipookkal said...
Hi உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம். உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும். இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.//

ஏற்கெனவே இணைத்துவிட்டோம். மீண்டும், மீண்டும் இதனைத் தெரியப்படுத்த வேண்டுமா..? சற்று யோசியுங்கள்..

//நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்//

"குழுவினர்" என்று இருக்க வேண்டும். மாற்றிக் கொள்ளுங்கள்.

benza said...

உண்மை தமிழன் சார் எனக்கும் ஒரு நியாயமான ஒரு எரிச்சல் இந்த வலைபூக்களில் இருக்கு >>>

உங்களது பினூட்டம் உள்ளதாக வந்த ஈமைலில் வலைபூக்கள் தம்முடன்
என்னை இணைத்ததை சரி பார்க்கும் படி செய்தியும் வந்தது >>>

சென்று LOG IN செய்ய முடியவில்லை REGISTER செய்வோம் என்றால் எனது ஈமெயில் விலாசம் ஏற்கெனவே பதிவாகி உள்ளதாம் >>>

மறந்த PASSWORD ஐ எடுப்போம் என்று எனது ஈமெயில் விலாசத்தை கொடுத்தால் >>> SORRY THE USER NAME IS NOT IN OUR DATABASE போன்ற விபரம் வருகுது >>>

இதுக்குமேலாக என்ன செய்யலாம் சார் ?

அதெல்லாம் சரி சார் > தெரியாமல் தான் கேட்கின்றேன் > எனது அனுமதி இல்லாது வலைபூக்கள் என்னை தம்முடன் இணைத்தது முறையா சார் ?

இது முதலாம் தரம் நடந்தது இல்லை > ஏற்கனவே நடந்த சம்பவம் தான் >

இவர்களுக்கு பொழுது போகாவிடில் இணையத்தில் இருப்பவைகளை தேடி வாசிக்கலாம் > அல்லது >>>

benza said...

[[[ //நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்//

"குழுவினர்" என்று இருக்க வேண்டும். மாற்றிக் கொள்ளுங்கள்.]]]

உண்மை தமிழன்பா உங்களது அமைதியாக கோபத்தை எரிச்சலை
காட்டும் விதம் தனி அழகு >>>

என்ன பவ்யமாக வலைபூகளின் பிழையை சுட்டிகாட்டுகின்றீர்கள் >>>

இவ்வாறு அடிப்படை பிழை கவனிக்காதோர் செயலும் அவ்வாறே >>>

இவர்களுடன் இணைய தயக்கமாக உள்ளது > நியாயமா ?

benza said...

[[[ நேரம்தான் பிரச்சினை ஸார்.. எனக்கு ராத்திரி மட்டும்தான் இணையத்தில் முன் அமரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதனால்தான் இரவில் போஸ்ட் போட வேண்டிய கட்டாயம் ]]]

ஆச்சரியமாக இருக்கு சார் > பகல்ல படம் பாக்கிறீங்க > அப்புறம் நையாண்டி நைனா வீடு போறீங்க > வேற என்ன செய்றீங்கன்னு கேட்கலாமா > இல்ல அது தனி மனித
உரிமை மீறல் என்கிறீங்களா சார் ?

benza said...

[[[ என்னைத் தொடர்பவர்கள் லிஸ்ட்டில் உங்களது பெயர் வருகிறது
என்று நினைக்கிறேன் ]]]

இருக்கேனே ஒரு இலை பிள்ளையார் வடிவத்தில் >>>

malar said...

திரட்டி என்றால் என்ன?

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
உண்மை தமிழன் சார் எனக்கும் ஒரு நியாயமான ஒரு எரிச்சல் இந்த வலைபூக்களில் இருக்கு >>>
உங்களது பினூட்டம் உள்ளதாக வந்த ஈமைலில் வலைபூக்கள் தம்முடன்
என்னை இணைத்ததை சரி பார்க்கும்படி செய்தியும் வந்தது >>>
சென்று LOG IN செய்ய முடியவில்லை REGISTER செய்வோம் என்றால் எனது ஈமெயில் விலாசம் ஏற்கெனவே பதிவாகி உள்ளதாம் >>>
மறந்த PASSWORD ஐ எடுப்போம் என்று எனது ஈமெயில் விலாசத்தை கொடுத்தால் >>> SORRY THE USER NAME IS NOT IN OUR DATABASE போன்ற விபரம் வருகுது >>>
இதுக்கு மேலாக என்ன செய்யலாம் சார்?//

ஒண்ணும் செய்ய வேண்டாம்.. அப்படியே விட்டுவிடுங்கள்.

அதிகமானத் திரட்டிகளில் சேருவதுகூட நன்மைக்குத்தான்.. இலவச விளம்பரம் கிடைக்கிறதே.. ஏன் விட வேண்டும்..?

//அதெல்லாம் சரி சார் > தெரியாமல்தான் கேட்கின்றேன் > எனது அனுமதி இல்லாது வலைபூக்கள் என்னை தம்முடன் இணைத்தது முறையா சார்? இது முதலாம் தரம் நடந்தது இல்லை > ஏற்கனவே நடந்த சம்பவம்தான் >
இவர்களுக்கு பொழுது போகாவிடில் இணையத்தில் இருப்பவைகளை தேடி வாசிக்கலாம் > அல்லது >>>//

எல்லாம் உங்க மேல இருக்குற நம்பிக்கைதான்..

விட்ருங்க..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
[[[//நட்புடன் வலைபூக்கள் குழுவிநர்//
"குழுவினர்" என்று இருக்க வேண்டும். மாற்றிக் கொள்ளுங்கள்.]]]
உண்மை தமிழன்பா உங்களது அமைதியாக கோபத்தை எரிச்சலை
காட்டும் விதம் தனி அழகு >>>
என்ன பவ்யமாக வலைபூகளின் பிழையை சுட்டிகாட்டுகின்றீர்கள் >>>
இவ்வாறு அடிப்படை பிழை கவனிக்காதோர் செயலும் அவ்வாறே இவர்களுடன் இணைய தயக்கமாக உள்ளது > நியாயமா?//

பரவாயில்லை.. இணைந்து விடுங்கள் ஸார்..

இதுவும் இலவச விளம்பரம்தான்.. நாம் முடிந்த அளவுக்கு பொதுவில் இருப்போம்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
[[[நேரம்தான் பிரச்சினை ஸார்.. எனக்கு ராத்திரி மட்டும்தான் இணையத்தில் முன் அமரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதனால்தான் இரவில் போஸ்ட் போட வேண்டிய கட்டாயம் ]]]
ஆச்சரியமாக இருக்கு சார் > பகல்ல படம் பாக்கிறீங்க > அப்புறம் நையாண்டி நைனா வீடு போறீங்க > வேற என்ன செய்றீங்கன்னு கேட்கலாமா > இல்ல அது தனி மனித
உரிமை மீறல் என்கிறீங்களா சார்?//

கேட்பதில் தப்பேயில்லை..

எல்லாம் ஒரு நேரம்தான்.. குத்துமதிப்பா ஓட்டிக்க வேண்டியதுதான்..

உண்மைத்தமிழன் said...

//malar said...
திரட்டி என்றால் என்ன?//

விளக்கமாக உனது பதிவில் எழுதியிருக்கிறேனே மலரு..

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
[[[ என்னைத் தொடர்பவர்கள் லிஸ்ட்டில் உங்களது பெயர் வருகிறது
என்று நினைக்கிறேன் ]]]
இருக்கேனே ஒரு இலை பிள்ளையார் வடிவத்தில் >>>///

ஓ.. அதெல்லாம் ஏற்கெனவே செக் பண்ணியாச்சா..?

நல்லாயிருங்க பென்ஸ் ஸார்..