என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அல்லா ரக்கா ரஹ்மானின் பெயர் இந்தியத் திரைப்பட உலகில் முதன்மைப் பெயராகப் பொறிக்கப்பட்டுவிட்டது. இந்த இமாலய வெற்றிக்கு அடிப்படை காரணங்களாக வெற்றியாளரான ரஹ்மான் சொல்கின்ற இரண்டு விஷயங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
1.இறைவனின் கருணை.
2. கடுமையான உழைப்பு.
"இறைச்செயல் என்ற ஒன்றே இல்லை. எல்லாமே நமது உழைப்பில்தான் உள்ளது" என்கிறது நாத்திகம். ஆனால் இந்த அனுபவஸ்தர் தனக்கு கிடைத்திருக்கும் வெற்றியினால், இந்த உலகத்திற்குச் சொல்லியிருக்கும் விஷயம் "எந்தவொரு செயலாக இருந்தாலும், அதற்கு இறைச்செயலின் ஆசி வேண்டும்" என்பதே.
‘ஆஸ்கார்’ மேடையில் அவர் தமிழில் பேசியதைவிடவும், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று சொன்னதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதுதான் உண்மையும்கூட.
உண்மையான ஆத்திகம் என்றைக்கும் பொய்க்காது. தூய்மையான பக்திக்கு இறைவனின் கொடை நாம் எதிர்பார்க்காததாகத்தான் இருக்கும். இங்கே ஆத்திகம்தான் ஜெயித்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் அடிப்படை கடவுள் பக்தி. அது மனிதர்களிடத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். இதைத்தான் ரஹ்மானின் இந்த வெற்றி உணர்த்துகிறது..
"கடுமையாக உழை.. உழைத்துக் கொண்டே இரு.. உன்னுடைய உழைப்பு 99 சதவிகிதம் நிறைவு பெறுமானால், மிச்சமிருக்கும் அந்த 1 சதவிகிதத்தை நீ வணங்கும் இறைவன் தான் அளித்து உன்னை வெற்றி பெறச் செய்வான்.." என்பது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கை. இதற்கு முழு முதற் உதாரணம் நமது ‘ஆஸ்கார்’ ரஹ்மான்.
அவர் இன்னும் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்..!
|
Tweet |
21 comments:
கடவுள் நம்பிக்கை அவர்நம்பிக்கை அதற்காக வெற்றிக்கு கடவுள்தான் காரணமுனு சொன்னா... எலோரும் வெற்றிப்பெறவேண்டியதுதானே!..
எல்லா புகழும் இறைவனுக்கே எனும் எண்ணம் வந்தாலே தான் என்ற அகம்பாவம் அழிந்துவிடும்...அந்த அடக்கத்தை தன்னகத்தே கொண்ட ரஹ்மான் இன்னும் இன்னும் பல விருதுகளுக்கு சொந்தக்காராவார் என்பது மறுக்க இயலாத உண்மை (த் தமிழா)
ஒத்துக்கறேன்! நீங்க சொன்னதை ஒத்துக்கறேன்!
ஆனா வலைப்பூக்கள் அய்யா வர வர "மீ த பஷ்ட்டா" வர்ரதை தான் ஒத்துக்க மாட்டேன்:-))
உண்மைத்தமிழன்!
”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று ரஹ்மான் சொன்னது சரி.
இந்தப் புகழ் அவருக்கும், நமக்கும், இசைக்குமானது என்று நாம் சொல்ல வேண்டாமா?
//எல்லா புகழும் இறைவனுக்கே எனும் எண்ணம் வந்தாலே தான் என்ற அகம்பாவம் அழிந்துவிடும்//
வழிமொழிகிறேன்
என்னைப்பொருத்த வரை இந்த ஆஸ்கார் விருதுகள் பூவோட சேர்ந்த நாறு மாதிரிதான் நமக்கு கிடைத்துள்ளது. ஒரு சுத்தமான முழுக்க முழுக்க இந்தியர்களால் எடுக்கப்பட்ட படத்திற்கு கிடைந்திருந்தால் பெருமை பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் இந்தப்படத்தைப் பார்க்கும் போது, பூவோடு சேர்ந்த நாறு மாதிரியில்லை, பண்றியோடு சேர்ந்த எதோ மாதிரிதான் எனக்கு தெரியுது.
இதை விட சிறப்பான இசை,பாடல்கள் நிறைந்த எத்தனையோ இந்தியப்படங்கள் வந்துள்ளன, அதெற்கெல்லாம் விருதுகிடைத்துவிட்டதா என்ன?
//ஆ.ஞானசேகரன் said...
கடவுள் நம்பிக்கை அவர் நம்பிக்கை. அதற்காக வெற்றிக்கு கடவுள்தான் காரணமுனு சொன்னா... எல்லோரும் வெற்றி பெற வேண்டியதுதானே!..//
ஆனால் ரஹ்மான் உழைத்த உழைப்பு போல் உழைக்கவும் வேண்டுமே..
இங்கு இரண்டுமே ஒன்று சேர்ந்திருக்கிறது. அதனால்தான் வெற்றி கிடைத்திருக்கிறது.
//கீழை ராஸா said...
எல்லா புகழும் இறைவனுக்கே எனும் எண்ணம் வந்தாலே தான் என்ற அகம்பாவம் அழிந்துவிடும்...//
நூற்றுக்கு நூறு உண்மை..
//அந்த அடக்கத்தை தன்னகத்தே கொண்ட ரஹ்மான் இன்னும் இன்னும் பல விருதுகளுக்கு சொந்தக்காராவார் என்பது மறுக்க இயலாத உண்மை(த் தமிழா)//
இறைவன் கொடுக்க விரும்புவதை யாராலும் தடுக்க முடியாது..
அவன் கொடுக்க விரும்பாததை யாராலும் கொடுக்கவும் முடியாது..
வருகைக்கு நன்றி கீழைராசா..
//அபி அப்பா said...
ஒத்துக்கறேன்! நீங்க சொன்னதை ஒத்துக்கறேன்!
ஆனா வலைப்பூக்கள் அய்யா வர வர "மீ த பஷ்ட்டா" வர்ரதைதான் ஒத்துக்க மாட்டேன்:-))//
எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.. ஆனா என்ன பண்றதுன்னே தெரியலை..
//மாதவராஜ் said...
உண்மைத்தமிழன்! ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று ரஹ்மான் சொன்னது சரி.
இந்தப் புகழ் அவருக்கும், நமக்கும், இசைக்குமானது என்று நாம் சொல்ல வேண்டாமா?//
ஆனால் யாரால் கிடைத்தது என்பதை பெருமைக்குரியவர் அனுபவ ரீதியாக உணர்ந்து சொல்கிறாரே..
அப்போது அதனை நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும். இங்கு அவர் இறைவனை அனுபவத்தால்தான் உணர்ந்திருக்கிறார்..
மாதவராஜ் ஸார்.. தங்களின் முதல் வருகைக்கு நன்றி..!
///புருனோ Bruno said...
//எல்லா புகழும் இறைவனுக்கே எனும் எண்ணம் வந்தாலே தான் என்ற அகம்பாவம் அழிந்துவிடும்//
வழி மொழிகிறேன்///
டாக்டர்..
மொதல்ல முன் மொழியணும்.. அதுக்கப்புறம்தான் வழி மொழியணும்..
//Anonymous said...
என்னைப் பொருத்தவரை இந்த ஆஸ்கார் விருதுகள் பூவோட சேர்ந்த நாறு மாதிரிதான் நமக்கு கிடைத்துள்ளது. ஒரு சுத்தமான முழுக்க முழுக்க இந்தியர்களால் எடுக்கப்பட்ட படத்திற்கு கிடைந்திருந்தால் பெருமைபட்டுக் கொள்ளலாம்.//
அப்படி எடுக்கத்தான் ஆள் இல்லையே.. நாம என்ன பண்றது..?
//ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும் போது, பூவோடு சேர்ந்த நாறு மாதிரியில்லை, பண்றியோடு சேர்ந்த எதோ மாதிரிதான் எனக்கு தெரியுது.
இதை விட சிறப்பான இசை, பாடல்கள் நிறைந்த எத்தனையோ இந்தியப் படங்கள் வந்துள்ளன, அதெற்கெல்லாம் விருது கிடைத்துவிட்டதா என்ன?//
அனானி, ஆஸ்கார் விருதுகள் ஆங்கிலப் படத்திற்காக கொடுக்கப்படுகின்றன. இந்த அடிப்படைகூட தெரியாமல் பேசக் கூடாது..
வேற்று மொழித் திரைப்படங்களுக்கான போட்டியிலும் பல ஆண்டு நமது இந்திய மொழித் திரைப்படங்கள் மோதிக் கொண்டுதான் உள்ளன. நிச்சயம் ஏதாவது ஒரு மொழி திரைப்படம் பதக்கம் வெல்லும்..
//டாக்டர்..
மொதல்ல முன் மொழியணும்.. அதுக்கப்புறம்தான் வழி மொழியணும்..//
கீழை ராஸா முன்மொழிந்தார், நான் வழி மொழிந்தேன் :)
அன்புள்ள அண்ணா...
மிகவும் அதிக தகவல்களை தாங்கி வந்திருக்கும் அருமையான படைப்பு. சுவை பட எழுதும் உங்கள் திறன் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
நன்றிகள் பல...
அன்பு நித்யன்
//ஆனா வலைப்பூக்கள் அய்யா வர வர "மீ த பஷ்ட்டா" வர்ரதை தான் ஒத்துக்க மாட்டேன்:-))//
வழிமொழிகிறேன்!
//மிகவும் அதிக தகவல்களை தாங்கி வந்திருக்கும் அருமையான படைப்பு//
இவரோட அனைத்து படைப்புகளுமே எக்கச்சக்க தகவல்களைத் தாங்கி பல பக்கங்களைத் தாண்டும் படைப்புகள் ஆகும்!
(பின் குறிப்பு: நான் முருகன் இல்லை, சிவபெருமான் குதிருக்குள்ளேயும் இல்லை)
///புருனோ Bruno said...
/டாக்டர்.. மொதல்ல முன் மொழியணும்.. அதுக்கப்புறம்தான் வழி மொழியணும்../
கீழை ராஸா முன்மொழிந்தார், நான் வழி மொழிந்தேன்:)//
அப்படீ்ன்னு அவர் சொல்லலையே..? சொன்னாத்தான் அது முன் மொழிவு..!
//நித்யகுமாரன் said...
அன்புள்ள அண்ணா...
மிகவும் அதிக தகவல்களை தாங்கி வந்திருக்கும் அருமையான படைப்பு. சுவை பட எழுதும் உங்கள் திறன் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
நன்றிகள் பல...
அன்பு நித்யன்//
மிக்க நன்றி ராசா..
ஏன் இப்பல்லாம் அடிக்கடி வர்றதில்ல..?
தோண்டுற வேலை அதிகமோ..?
//Namakkal Shibi said...
/ஆனா வலைப்பூக்கள் அய்யா வர வர "மீ த பஷ்ட்டா" வர்ரதைதான் ஒத்துக்க மாட்டேன்:-))/
வழிமொழிகிறேன்!//
முருகா.. இதை என்னதான் செய்யறது? நீயே சொல்லு..!
///உண்மை விளம்பி said...
//மிகவும் அதிக தகவல்களை தாங்கி வந்திருக்கும் அருமையான படைப்பு//
இவரோட அனைத்து படைப்புகளுமே எக்கச்சக்க தகவல்களைத் தாங்கி பல பக்கங்களைத் தாண்டும் படைப்புகள் ஆகும்!
(பின் குறிப்பு: நான் முருகன் இல்லை, சிவபெருமான் குதிருக்குள்ளேயும் இல்லை)///
சொல்லாமலேயே யாருன்னு தெரியுது முருகா..
எதுக்கு இந்த நடிப்பெல்லாம்..?
See who owns retrevo.com or any other website:
http://whois.domaintasks.com/retrevo.com
Post a Comment