நான் கடவுள் - விமர்சனம்


06-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

மூன்று வருட உழைப்பு.

சூர்யா, விக்ரம், அஜீத், ஆர்யா என்று நான்கு கதாநாயகர்கள்.

பாவனா, கார்த்திகா, பூஜா என்ற மூன்று கதாநாயகிகள் மாற்றப்பட்ட செய்தியினால், தமிழ்த் திரையுலகை பதைபதைக்க வைத்தத் திரைப்படம்.

சமீப காலமாக இத்திரைப்படம்போல் வேறு எந்தத் திரைப்படமும் பரபரப்பை ஏற்படுத்தியதில்லை.

முதலில் 7 கோடி பட்ஜெட் என்று சொல்லி துவங்கி, கடைசியில் 15 கோடியில் வந்து முடிந்திருக்கும் மெகா பட்ஜெட் திரைப்படம்.

இத்திரைப்படத்தினால் மூன்று வருடம் தாடி வளர்த்த புண்ணியத்தையும், மூன்று கதாநாயகிகளுடன் ஒரே காட்சியை மாற்றி, மாற்றி நடித்ததையும் ஆர்யா தன் எதிர்காலத் திரை வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளலாம்.

மற்றபடி அவருடைய முந்தையத் திரைப்படங்களில் அவர் நடித்து கஷ்டப்படுத்தியது போன்று இதில் எதுவும் இல்லை. அனைத்துமே ஆக்ஷன்தான்.

அவர் பேசும் மொத்த வசனங்களை ஒரு A4 பேப்பரில் எழுதிவிடலாம். அவ்வளவுதான்.. ஆனால் மனிதர் ஓடுவது, நடப்பது.. அடிப்பது, துரத்துவது என்பதையெல்லாம் கணக்கில் எடுத்தால் ஷாட்டுகளின் எண்ணிக்கை 400 வரும்.

வலையுலகில் சமீபத்தில் நான் படித்த “நான் கடவுள்” படத்தின் கதையைப் போலவேதான் திரைப்படமும் உள்ளது. ஒரே ஒரு சின்ன மாறுதல்தான்.. ஆகவே நான் எதிர்பார்த்ததுதான் நடந்துள்ளது.

டைட்டில் காட்சியில் துவங்கி, இறுதிக் காட்சி வரை எங்கும் காவிக்கொடிகள்.. பக்தி, ஆன்மீகம்.. ஜோதிடம், சாஸ்திரம், சடங்குகள், சமஸ்கிருதம், கேள்விகள்.. கடவுளைத் தேடும் பணி என்று படம் முழுவதும் இந்துத்துவா மயம்தான். வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.

இந்துக் கடவுள் கைவிட்டவுடன் அன்னியக் கடவுளான இயேசுவை உடனடி தெய்வமாக கருதி அழைக்கும் பட்டென்ற மாறுதல்.. உச்சக்கட்டமாக கடவுளை, “அந்தத் தேவடியா பையன்” என்று செல்லமாக அழைக்கின்ற பாங்கு..

இதையெல்லாம் பார்த்த பின்பும் இது நிச்சயமாக ஜெயமோகனின் கதை இல்லை.. வசனம் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. வாழ்த்துக்கள் ஜெயமோகன் ஸார்..

உடல்மொழியைத் தவிர வேறு நாகரிக மொழி தெரியாது. ஆனால் ஆம்பளை.. சினிமா ஹீரோவின் வயது. ஏதோ ஒரு மன அழற்சி நோய் என்பது போல் நமக்குத் தெரிகிறது. எந்த நேரத்தில் என்ன செய்வான் என்பது தெரியாது. ஆனால் உக்கிரமானவன். அடி என்றால் அடி பின்னுவான்.. பத்து பேர் சேர்ந்தாலும் அவன் எதிரில் நிற்க முடியாது.. இது போன்ற கதாநாயகர்கள்தான் பாலாவின் ஹீரோக்கள். இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல.. ஆர்யா இதில் அப்படித்தான் இருக்கிறார்.

சிக்ஸ் பேக் என்பார்களே.. அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்விதமாக சிக்ஸ்ட்டீன் பேக்கில் இருக்கிறார் ஆர்யா. எனக்குத் தெரிந்து “பதினாறு வயதினிலே” படத்திற்குப் பிறகு, ஒரு ஹீரோ கோவணத்துடன் பல காட்சிகளில் இடம் பெறுவது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன்.



இந்தப் பையனால் வீட்டிற்கு ஆகாது.. குடும்பத்திற்கு ஆகாது என்ற நன்கு மறை கழன்ற நான்கு ஜோதிடர்களின் அறிவுறுத்தலால் காசியில் கொண்டு போய் தொலைத்துவிட்டு வந்த பையனை 15 வருடம் கழித்து தேடிப் பிடித்து சொந்த ஊருக்கு அழைத்து வரும் அப்பா..

சுடுகாட்டில் மோப்பம் பிடிக்கும் வராக சாமியார்களோடு இணைந்து பிணைந்து பழகி, பிணம் எரிகின்றபோது வெளிப்படும் வாயுவைப் பிடித்து பிடித்தே தங்களது உடலையும், மனதையும் இறுக்கி வைத்திருக்கும் வராக சாமியாரான அந்த மகன் தனது சொந்த ஊருக்கு வந்த பின்பு தன் போக்கில் போவது..

உடல் ஊனமுற்றவர்கள்.. முக அழகைத் தொலைத்து அவலட்சணமானவர்கள்.. பிச்சைக்காரர்கள்.. என்று விளிம்பு நிலை மனிதர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு பிச்சைக்கார மனதுடைய மனிதன். அவன் கட்டுப்பாட்டில் வந்து சிக்கும் கண் பார்வையிழந்த அம்சவல்லி என்கிற கதாநாயகி.

கோவில் படிக்கட்டுகளில் பிச்சையெடுக்க வந்தவர்கள் கஞ்சா சுகத்தில் மூழ்கியிருக்கும் ஹீரோவுடன் அறிமுகமாகி ஹீரோயின் அவனுக்கு அறிவுரை சொல்லப் போய் அடி வாங்கி ஓட... இது ஒன்றுதான் ஹீரோயினுக்கும், ஹீரோவுக்குமான தொடர்பு.

ஆனால் இதுதான் படத்தின் முடிவுக்கும் கொண்டு செல்கிறது. அது எப்படி என்பதுதான் படத்தின் முடிச்சு.

பின்னணி இசையில் பல இடங்களில் தனியாகத் தெரிகிறார் இசைஞானி. மறுப்பதற்கில்லை.

வசனத்தில் ஜெயமோகன் தனித்தே தெரிகிறார். இவ்வளவு சமஸ்கிருத வார்த்தைகளை மனனம் செய்ய வைத்து, ஆர்யாவை பக்தி பழமாக்கியிருக்கிறார் ஜெயமோகன். இதற்காக ஸ்பெஷலாக அவரைப் பாராட்டலாம். மறுக்கவில்லை.. “மாட்டுக் கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை” என்கிற வசனத்தில் ஜெயமோகனின் மூளை பளிச்சிடுகிறது. மறுக்கவில்லை.

“பிச்சைப்பாத்திரம்..” பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. மற்றவைகள் அப்போதைக்கு மனதை வருடுகின்றன. மறுக்கவில்லை..

காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் தனித்துவம் வாய்ந்துதான் உள்ளார். காசி காட்சிகள் அசத்தல். பிணக் கூட்டங்களுக்கு மத்தியிலான காசியின் சகஜ வாழ்க்கையைப் படமாக்கியிருக்கும் விதம் புதுமைதான்.. மறுக்கவில்லை..

பூஜா என்கிற அம்சவல்லி கண் பார்வையில்லாதவராக நடிப்பில் உருக்கியிருக்கிறார். அதிலும் கடைசிக் காட்சியில் அவருடைய நீண்ட வசனமும், பேசும்விதமும் லேசான உருக்கத்தைக் கொடுத்தாலும் அவர் அளவுக்கு இதுதான் முதல் நடிப்பு என்று சொல்லலாம். மறுக்கவில்லை..



சென்ற வாரம்தான் Slumdog Millonaire படத்தினைப் பார்த்துத் தொலைத்துவிட்டதனால், இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.

சின்னச் சின்ன கேரக்டர்கள்.. உடல் ஊனமுற்றவர்களின் முக பாவனைகள்.. அவர்களது தேர்வுகள்.. பிச்சைக்காரர்களை வேலை வாங்குபவன் என்றாலும் அவனுக்குள் இருக்கும் மனோபாவம்.. அவர்களைத் தூக்கிச் செல்லும் ஒரு திருநங்கை என்று இந்த சாக்கடை உலகத்தில் சிக்கிக் கொண்டவர்களின் நிஜ வாழ்க்கையை அப்பட்டமாக்கியிருக்கும் விதம்.. எந்த வார்த்தைகளைக் குவித்தும் சொல்லிவிட முடியாது.. மறுக்கவில்லை..

பாலாவுக்கு பழைய திரைப்படப் பாடல்கள் மீதிருக்கும் பாசவுணர்ச்சியில் தாளம் போட வைத்த பழைய திரைப்பாடல்கள் மீண்டும் இங்கே ஒளிபரப்பாகி தூங்குபவர்களைத் தட்டி எழுப்புகின்றன. அங்கதம் என்பதை எந்தவித சோகத்திலும் அனுபவிக்க வேண்டும் என்கிற கவலையற்ற மனிதனின் தனது மனோபாவத்தை நம்மிடமும் திணித்திருக்கிறார் பாலா.

பிச்சைக்காரர்களின் அவல நிலையில் அவர்களது கூத்தும், பேச்சும், பாட்டும் அவர்கள் மேல் பரிதாபத்தைத் தவிர மற்ற அனைத்தையும் கொண்டு வந்து கொட்டிவிட்டது. போதாக்குறைக்கு நடிகர்களின் நடிப்பு பற்றியும், நடிகைகள் தொழிலதிபர்களைத் திருமணம் செய்து கொள்வது பற்றியும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார். பாலா என்பதால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியம்..

ரயிலும், ரயில் பயணமும், ரயில் பயணிகளும், கஞ்சா அனுபவிக்கும் பின்நவீனத்துவ காட்சிகளும் வழக்கம்போல இது பாலா படம் என்பதை நிரூபிக்கின்றன.

அவ்வப்போது பாலாவின் இயக்கம் பலவிடங்களில், பலவிதங்களில் பளிச்சிடுகிறது.. மறுக்கவில்லை.. ஆர்யாவின் கோபம் கொண்டு குடும்பத்தினர் பயப்படுவது. போலீஸ் கான்ஸ்டபிள் ஒரு சவுண்ட்டிற்கே கக்கத்தில் தொப்பியை வைத்துக் கொண்டு ஓடி வந்து விழுவது.. கோர்ட்டில் நீதிபதி இன்ஸ்பெக்டரை எடக்கு, மடக்காகக் கேட்டு இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடப்பது என்று அனைத்துவித குசும்புகளையும் உள்ளடக்கியது பாலாவின் இயக்கம்.

வழமையான பாலாவின் திரைப்படம்போல் சண்டைக் காட்சிகள்.. “சொத்..” “சொத்..” என்ற தாக்குதல்கள். கண்மூடித்தனமான பேயாட்டாங்கள்.. 24 நாட்கள் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் என்று வெறித்தனமான சண்டைக் காட்சிகள்.. பாலாவால் மட்டுமே இதனை எடுக்க முடியும் என்பது தெளிவு.

எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்.. ஏதோ ஒன்று.. ஏதோ ஒன்று..

எனது வழக்கமான விமர்சனப் பதிவுகளின்படி 15 பக்கங்களுக்கு “நான் கடவுள்” என்கிற இந்தக் காவியத்தின் வரலாற்றை எழுத வைக்காமல் தடுத்துவிட்டது.

அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை..

ஆகவே அன்பு பதிவர்களே.. தப்பித்தீர்கள்.. சந்தோஷப்படுங்கள்..

தயவு செய்து திருட்டு விசிடியில் படத்தைப் பார்த்துத் தொலைக்காமல், திரையரங்குகளுக்கு தைரியமாகச் சென்று படத்தைப் பார்த்துவிட்டு, என்னை ஏமாற்றிய அந்த ஒன்று எது என்பதனைக் கண்டுபிடித்து எழுதுங்கள்..

தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்..

நன்றி

வணக்கம்..

75 comments:

Gajen said...

6 ஆம் திகதி அல்லவா ரிலீஸ்?? அதுக்குள்ள........??

Bleachingpowder said...

கொஞ்சம் நேரம் எடுத்து விமர்சணம் எழுதியிருக்கலாமென்று தோனுகிறது. எதோ மாலை முரசு, மாலை மலர் ரேஞ்சிற்க்கு இருக்கிறது உங்கள் விமர்சணம்.

வழக்கமான பாலா படம்னு சொல்லி பொத்தாம் பொதுவாக நாங்க எழுதலாம்,மூத்த பதிவர் நீங்களும் அப்படியே எழுதலாமா?

//பின்னணி இசையில் பல இடங்களில் தனியாகத் தெரிகிறார் இசைஞானி. மறுப்பதற்கில்லை//

//மாட்டுக் கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை” என்கிற வசனத்தில் ஜெயமோகனின் மூளை பளிச்சிடுகிறது. மறுக்கவில்லை.//

//“பிச்சைப்பாத்திரம்..” பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. மற்றவைகள் அப்போதைக்கு மனதை வருடுகின்றன. மறுக்கவில்லை//

//சகஜ வாழ்க்கையைப் படமாக்கியிருக்கும் விதம் புதுமைதான்.. மறுக்கவில்லை//

//அவர் அளவுக்கு இதுதான் முதல் நடிப்பு என்று சொல்லலாம். மறுக்கவில்லை//


//அவ்வப்போது பாலாவின் இயக்கம் பலவிடங்களில், பலவிதங்களில் பளிச்சிடுகிறது.. மறுக்கவில்லை//

என்னங்க இது மறுக்கவில்லை மறுக்கவில்லை மறுக்கவில்லைன்னு. நிஜமா இந்த பதிவை நீங்க தான் எழுதினீங்களா உண்மை தமிழன். எவ்வளவு ஆசையா வந்தேன், படத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு மேஞ்சுருப்பீங்கன்னு, இப்படி ஏமாத்தீட்டீங்களே :(. சரி விடுங்க பராவில்லை எதோ நைட் ஷோவில் படம் பார்த்துட்டு அப்படியே தூக்க கலகத்தில பதிவ போட்டுட்டீங்க. நல்லா குளிச்சிட்டு திரும்பவும் ஃபிரஷ்ஷா போய் படத்தை பார்த்துட்டு உங்க ஸ்டைலில் ஒரு பத்து பக்கம் விமர்சணம் எழுதுங்கள் :)

Arun Kumar said...

நேத்திக்கு பார்த்தீட்டீங்களா?
விமர்சனம் முழுசா படிக்கவில்லை...இன்று இரவு நான் படத்தை பார்த்து விட்டு முழுதாக படிக்கிறேன்.

அண்ணா அப்படியே விமர்சனத்தில் படத்திற்க்கு மார்க்கு போட்டு விட்டு விடுங்க.

Senthuran said...

//தயவு செய்து திருட்டு விசிடியில் படத்தைப் பார்த்துத் தொலைக்காமல், திரையரங்குகளுக்கு தைரியமாகச் சென்று படத்தைப் பார்த்துவிட்டு, என்னை ஏமாற்றிய அந்த ஒன்று எது என்பதனைக் கண்டுபிடித்து எழுதுங்கள்..//


மறுக்கவில்லை

ஸ்ரீதர்கண்ணன் said...

வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.

:)))))))))

Athisha said...

அண்ணே இவ்ளோ பாஸ்ட்டு ஆகாது..

இன்னும் ரெண்டு நாள் பொறுத்திருந்து .. இல்லாட்டி படத்தை இன்னொரு வாட்டி பாத்துட்டு எழுதிருக்கலாம்..

ஷண்முகப்ரியன் said...

படத்தில் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து ஏமாந்திருக்கும் உங்கள் தவிப்பு எனக்குப் புரிகிறது.சரி, நான் எதையும் எதிர்பார்க்காமல் படம் பார்த்து விட்டு வந்து உங்களுக்குப் பதில் சொல்ல முயல்கிறேன்.

Boston Bala said...

ஹ்ம்ம்ம்!

ஸ்பாய்லரே இல்லாத விமர்சனம் :)

கார்க்கிபவா said...

//காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் தனித்துவம் வாய்ந்துதான் உள்ளா//

பாலசுபரமணியம் தானே??????

butterfly Surya said...

சின்ன பதிவு போட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டதா..??

Simple.. But Nice..

நன்றி தல...

பரிசல்காரன் said...

You disappointed us.

narsim said...

எனது எண்ணம்: ஒரு படத்தை முதலில் பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறதோ அதுதான் உண்மை.. ஆக, படம் அந்த அளவிற்கு/எதிர்பார்த்த, இல்லை என்றே படுகிறது.

நல்ல விமர்சன்ம்..மறுபதற்கில்லை.

MSATHIA said...

முந்திக்கொண்டு போடவேண்டிய பதிவுன்னு போட்டிட்டீங்களோ?

காட்சி காட்சியாக விமர்சனமின்றி விவரணை தேவையான அளவுக்கு கொடுத்து இருக்கிறீர்கள்.

சில இடங்களில் உங்கள் விமர்சனம் பளிச் ;-)) உதாரணத்துக்கு..

\\
பாலாவுக்கு பழைய திரைப்படப் பாடல்கள் மீதிருக்கும் பாசவுணர்ச்சியில் தாளம் போட வைத்த பழைய திரைப்பாடல்கள் மீண்டும் இங்கே ஒளிபரப்பாகி தூங்குபவர்களைத் தட்டி எழுப்புகின்றன. அங்கதம் என்பதை எந்தவித சோகத்திலும் அனுபவிக்க வேண்டும் என்கிற கவலையற்ற மனிதனின் தனது மனோபாவத்தை நம்மிடமும் திணித்திருக்கிறார் \\

அதென்ன அங்கங்கு மறுக்கவில்லை?

\\\வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.\\

நுண்ணரசியல்.

Anonymous said...

6th release.

appa, you see the movie in thiruttu dvd or vcd?

Pls. unmaiya sollunka.

ஆதவா said...

படத்தைப் பார்த்துட வேண்டியதுதான்... என்னை ரொம்ப எதிர்பார்க்க வெச்ச படம்... பிதாமகன் போலவே இதிலும் ஹீரோ பேசறதில்லையா....

பார்ப்பொம்/..

Nilofer Anbarasu said...

நீங்கள் எப்படியும் முழுக்கதையையும் சொல்லியிருப்பீர்கள் அதனால், நான் விமர்சனத்தை படிக்கவில்லை. படம் பார்க்கும் வரை எந்த விமர்சனத்தையும் படிக்கப்போவதுமில்லை. சிஃபி.காமில் வெர்டிக்ட் மட்டும் பார்த்தேன். Outstanding என்று போட்டிருந்தார்கள். சமீபத்தில் எந்த படத்திற்கும் இப்படி போட்டதில்லை.

Anonymous said...

பாலாவின் படங்கள் எப்போதும் இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் தாக்கத்தை ஏற்படுத்தும்.

விமர்சனத்தில் அவசரம் தெரிகிறதே தவிர முதிர்ச்சி இல்லை.

Ganesan said...

மறுக்கவில்லை.

இதெல்லாம் போடாம, படம் தேறுமா , தேறாதா ஒத்த‌ வார்த்தையில‌ சொல்லுங்க‌ உ.த‌

வஜ்ரா said...

//
இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.
//

அனாடமி தப்பு.
நுரையீரலைத் தூக்கினால் தான் இதயத்தையே தொட முடியும்.

Anonymous said...

நல்ல விமர்சன்ம்..மறுபதற்கில்லை.

நாமக்கல் சிபி said...

//You disappointed us//

மறுக்கவில்லை

Anonymous said...

Ethavathu ontraippatri kurai solvathuthana intha inaiyathalaththin Velai
ungalamathiriyana manitharalthan muyatchi Eduppavanum mudanggip poraan
Idiat Follws
Paaraattu sollavillaiyentralum paravaayillai pali solla Ventam kadavule Saami
Muttalhala

Unknown said...

:))நல்ல விமர்சனம் :))

Anonymous said...

ஐயா, உங்களை நேராக ஜெயமோகனிடம் கொண்டு போய்
விட வேண்டும், விமர்சனம் படித்த
பின் அவர் உங்களை
என்ன செய்கிறார் என்று பார்க்க
வேண்டும் :).

பாலாவின் கதைக்கும் ஏழாம்
உலகிற்கும் ஏழாம் பொருத்தம்,
அதுதான் இப்படியாகிவிட்டது.
அதாவது திரைக்கதை என்பதை
வெறும் சம்பவங்கள், கருத்துக்களை வைத்து எழுதி, படமாக எடுத்தால்
அது கழுதை போல் உதைக்கும்.
திரைக்கதைக்கும் ஒரு தர்க்கம்
வேண்டும். பார்பவருக்கு அதே
இயக்குனரில் பழைய படங்களை
நினைவு படுத்தக் கூடாது.பாலாவின் நான் கடவுளில் அது மிஸ்ஸிங்.
சரிதானா?

Anonymous said...

'வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன'

இதை சுகுணா திவாகருக்கு குறுஞ்செய்தியாக
அனுப்புக :)

உண்மைத்தமிழன் said...

//observer said...
வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html.//

தங்களுடைய முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

//தியாகி said...
6 ஆம் திகதி அல்லவா ரிலீஸ்?? அதுக்குள்ள........??//

நேற்று இரவு 10.15 மணிக்கு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள். டிக்கெட் கிடைத்ததால் சென்றேன்.

உண்மைத்தமிழன் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Bleachingpowder said...
கொஞ்சம் நேரம் எடுத்து விமர்சணம் எழுதியிருக்கலாமென்று தோனுகிறது. எதோ மாலை முரசு, மாலை மலர் ரேஞ்சிற்க்கு இருக்கிறது உங்கள் விமர்சணம்.//

நன்றி பிளீச்சிங் ஸார்.

//வழக்கமான பாலா படம்னு சொல்லி பொத்தாம் பொதுவாக நாங்க எழுதலாம், மூத்த பதிவர் நீங்களும் அப்படியே எழுதலாமா?//

மூத்தப் பதிவரா..? வேணாம் சாமி.. என்னை விட்ருங்க.. நான் இந்த விளையாட்டுக்கு வரல..

வழககமான பாலா படம் என்றாலே பாதி பேருக்கு புரிந்துவிடும். அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன்.

//பின்னணி இசையில் பல இடங்களில் தனியாகத் தெரிகிறார் இசைஞானி. மறுப்பதற்கில்லை//
//மாட்டுக் கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை” என்கிற வசனத்தில் ஜெயமோகனின் மூளை பளிச்சிடுகிறது. மறுக்கவில்லை.//
//“பிச்சைப்பாத்திரம்..” பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. மற்றவைகள் அப்போதைக்கு மனதை வருடுகின்றன. மறுக்கவில்லை//
//சகஜ வாழ்க்கையைப் படமாக்கியிருக்கும் விதம் புதுமைதான்.. மறுக்கவில்லை//
//அவர் அளவுக்கு இதுதான் முதல் நடிப்பு என்று சொல்லலாம். மறுக்கவில்லை//
//அவ்வப்போது பாலாவின் இயக்கம் பலவிடங்களில், பலவிதங்களில் பளிச்சிடுகிறது.. மறுக்கவில்லை//
என்னங்க இது மறுக்கவில்லை மறுக்கவில்லை மறுக்கவில்லைன்னு. நிஜமா இந்த பதிவை நீங்கதான் எழுதினீங்களா உண்மை தமிழன்?///

இவ்வளவு இருந்தும் ஏதோ ஒன்று மனதைத் தொட மறுத்துவிட்டது என்பதற்காககத்தான் இத்தனை மறுக்கவில்லையை சொல்லியிருக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//Arun Kumar said...
நேத்திக்கு பார்த்தீட்டீங்களா? விமர்சனம் முழுசா படிக்கவில்லை... இன்று இரவு நான் படத்தை பார்த்து விட்டு முழுதாக படிக்கிறேன்.
அண்ணா அப்படியே விமர்சனத்தில் படத்திற்க்கு மார்க்கு போட்டு விட்டு விடுங்க.//

தம்பீ..

மார்க்கெல்லாம் போடுவதென்றால் அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும். அது என்னிடம் இல்லை.. என் கருத்து இத்தோடு போகட்டும்.. இந்த அளவோடு இருக்கட்டும்.. அதுதான் எனக்கு நல்லது..

உண்மைத்தமிழன் said...

///Senthuran said...
//தயவு செய்து திருட்டு விசிடியில் படத்தைப் பார்த்துத் தொலைக்காமல், திரையரங்குகளுக்கு தைரியமாகச் சென்று படத்தைப் பார்த்துவிட்டு, என்னை ஏமாற்றிய அந்த ஒன்று எது என்பதனைக் கண்டுபிடித்து எழுதுங்கள்..//

மறுக்கவில்லை///

படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..

உண்மைத்தமிழன் said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.)))))))))//

உண்மைதான் ஸார்..

இந்தத் திரைப்படத்தை அக்குவேறு, ஆணி வேராகப் பிரித்து மேய்ந்தால் கிடைக்கப் போவது "அது"தான்.. வேறென்ன வேணும்ன்றீங்க..?

உண்மைத்தமிழன் said...

//அதிஷா said...
அண்ணே இவ்ளோ பாஸ்ட்டு ஆகாது..//

என்ன செய்ய? ஒவ்வொருவரின் சூழ்நிலை அப்படி..

//இன்னும் ரெண்டு நாள் பொறுத்திருந்து..//

அதுக்குள்ள எனக்கு மறந்து போச்சுன்னா.. இன்னொன்னு நான் முழுக் கதையையும் சொல்லலையே..

//இல்லாட்டி படத்தை இன்னொரு வாட்டி பாத்துட்டு எழுதிருக்கலாம்..//

இன்னொரு வாட்டியா.? தாங்குவேனா தம்பி..

உண்மைத்தமிழன் said...

//ஷண்முகப்ரியன் said...
படத்தில் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து ஏமாந்திருக்கும் உங்கள் தவிப்பு எனக்குப் புரிகிறது.சரி, நான் எதையும் எதிர்பார்க்காமல் படம் பார்த்து விட்டு வந்து உங்களுக்குப் பதில் சொல்ல முயல்கிறேன்.//

நன்றி ஷண்முகப்பிரியன் ஸார்..

சினிமாக்காரனை சினிமாக்காரனே புரிந்து கொள்ளாவிட்டால் எப்படி..?

உண்மைத்தமிழன் said...

//Boston Bala said...
ஹ்ம்ம்ம்! ஸ்பாய்லரே இல்லாத விமர்சனம்:)//

ஸ்பாய்லரே தேவையில்லை பாபா.. நேர்மையான விமர்சனமே போதும்..

உண்மைத்தமிழன் said...

///கார்க்கி said...
//காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் தனித்துவம் வாய்ந்துதான் உள்ளா//
பாலசுபரமணியம்தானே??????///

அல்ல.. ஆர்தர் வில்சன்தான்.

உண்மைத்தமிழன் said...

//பரிசல்காரன் said...
You disappointed us.//

Very Sorry..

Bala disappointed me..

உண்மைத்தமிழன் said...

//narsim said...
எனது எண்ணம்: ஒரு படத்தை முதலில் பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறதோ அதுதான் உண்மை.. ஆக, படம் அந்த அளவிற்கு/எதிர்பார்த்த, இல்லை என்றே படுகிறது.
நல்ல விமர்சன்ம்.. மறுபதற்கில்லை.//

நர்ஸிம்... உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை..

உண்மைத்தமிழன் said...

//Sathia said...
முந்திக்கொண்டு போடவேண்டிய பதிவுன்னு போட்டிட்டீங்களோ?//

இல்லை.. பகலில் என்னால் பதிவு போட முடியாது. அதனால்தான் இவ்வளவு அவசரமாக பதிவை வெளியிட்டேன்..

\\\வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.\\
நுண்ணரசியல்.///

அல்ல. பதிவரசியல்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
6th release. appa, you see the movie in thiruttu dvd or vcd? Pls. unmaiya sollunka.//

நேற்று இரவு 10.15 மணிக்கு சிறப்புக் காட்சியில் பார்த்தேன்..

உண்மைத்தமிழன் said...

//ஆதவா said...
படத்தைப் பார்த்துட வேண்டியதுதான்... என்னை ரொம்ப எதிர்பார்க்க வெச்ச படம்... பிதாமகன் போலவே இதிலும் ஹீரோ பேசறதில்லையா....
பார்ப்பொம்//

பாருங்க ஆதவா..

ஆனா பிதாமகனை நினைச்சுக்கிட்டே போயிராதீங்க..

ஏமாந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல..

M.Rishan Shareef said...

//பூஜா என்கிற அம்சவல்லி கண் பார்வையில்லாதவராக நடிப்பில் உருக்கியிருக்கிறார். அதிலும் கடைசிக் காட்சியில் அவருடைய நீண்ட வசனமும், பேசும்விதமும் லேசான உருக்கத்தைக் கொடுத்தாலும் அவர் அளவுக்கு இதுதான் முதல் நடிப்பு என்று சொல்லலாம். மறுக்கவில்லை..//

'அபியும் நானும்' படத்துக்கு தனக்குத்தான் தேசிய விருது கிடைக்குமென த்ரிஷா சொல்லியிருந்தாரே..நீங்க சொல்றதைப் பார்த்தால் அவருக்குக் கிடைக்காது போலிருக்கே ?

உண்மைத்தமிழன் said...

//Nilofer Anbarasu said...
நீங்கள் எப்படியும் முழுக்கதையையும் சொல்லியிருப்பீர்கள் அதனால், நான் விமர்சனத்தை படிக்கவில்லை.//

இல்லை நிலோபர்.. இந்த முறை முழுக் கதையையும் நான் சொல்லவில்லை.

//படம் பார்க்கும் வரை எந்த விமர்சனத்தையும் படிக்கப் போவதுமில்லை.//

குட்.. வெரிகுட்.. இதையே அனைத்துத் திரைப்படங்களுக்கும் பின்பற்றுங்கள்..

//சிஃபி.காமில் வெர்டிக்ட் மட்டும் பார்த்தேன். Outstanding என்று போட்டிருந்தார்கள். சமீபத்தில் எந்த படத்திற்கும் இப்படி போட்டதில்லை.//

ஒவ்வொருவரின் அணுகுமுறையும், ரசனையும் வேறு, வேறல்லவா.. அப்படித்தான் இருக்கும்..

தங்களது வருகைக்கு நன்றி நிலோபர்..

உண்மைத்தமிழன் said...

//SIMBU said...
பாலாவின் படங்கள் எப்போதும் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தாக்கத்தை ஏற்படுத்தும்.//

எப்படி சிம்பு..?

படம் பார்த்து இரண்டு நாட்களுக்குப் பிறகா..?

அல்லது படம் வெளியாகி இரண்டு நாட்களுக்குப் பிறகா..?

//விமர்சனத்தில் அவசரம் தெரிகிறதே தவிர முதிர்ச்சி இல்லை.//

தங்களது கருத்துக்கு நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//KaveriGanesh said...
மறுக்கவில்லை. இதெல்லாம் போடாம, படம் தேறுமா, தேறாதா ஒத்த‌ வார்த்தையில‌ சொல்லுங்க‌ உ.த‌.//

அப்படியெல்லாம் ஒத்த வரியில சொல்ல முடியாதுங்க கணேஷ் ஸார்..

அந்த உழைப்புக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுத்தே தீர வேண்டும்..

உண்மைத்தமிழன் said...

///Vajra said...
//இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.//

அனாடமி தப்பு. நுரையீரலைத் தூக்கினால்தான் இதயத்தையே தொட முடியும்.///

நன்றி வஜ்ரா அவர்களே..

அந்த நேரத்தில் தோன்றியது எழுதிவிட்டேன். சரியா, தவறா என்று செக் செய்யவில்லை. மன்னிக்கவும்.

உண்மைத்தமிழன் said...

//Arya said...
நல்ல விமர்சன்ம்.. மறுபதற்கில்லை.//

முருகா.. எப்பவும் சொந்தப் பெயர்லதான முதல்ல வருவ..

இப்ப என்ன ஆர்யா பேர்ல மொதல்ல வந்து பாராட்டு..?

கொள்கையை மாத்திட்டியா..?

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//You disappointed us//
மறுக்கவில்லை.///

சிபி முருகா.. நான் உள்ளதைத்தான் சொல்றேன்.. வேறென்ன செய்யறது?

நல்லாயிருக்குன்னு பொய்யா சொல்ல முடியும்..?

பொய் சொல்லி எனக்குப் பழக்கமில்லையே முருகா.)))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Ethavathu ontraippatri kurai solvathuthana intha inaiyathalaththin Velai ungalamathiriyana manitharalthan muyatchi Eduppavanum mudanggip poraan
Idiat Follws Paaraattu sollavillaiyentralum paravaayillai pali solla Ventam kadavule Saami Muttalhala.//

அனானி.. இது விமர்சனம்.. விமர்சனம் என்றாலே தங்களுடைய பார்வையின் தென்படும் நிறை, குறைகளை சொல்லத்தான் செய்வார்கள்.

சொல்லக் கூடாது என்றால் பின்னர் விமர்சனமே செய்ய முடியாது..

ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்று கேட்டால் அப்படி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பதும் எனது பதில்..

உண்மைத்தமிழன் said...

//ஸ்ரீமதி said...
:))நல்ல விமர்சனம் :))//

நல்ல பின்னூட்டம்.. அருமையான கருத்துக்கள்.. ஆழ்ந்த சொற்றொடர்கள்.. பின்னி விட்டீர்கள்..

நன்றிகள்..)))))))))))))))

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ஐயா, உங்களை நேராக ஜெயமோகனிடம் கொண்டு போய்
விட வேண்டும், விமர்சனம் படித்த
பின் அவர் உங்களை என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும்:)//

ஏனய்யா இந்தக் கொலை வெறி..?

//பாலாவின் கதைக்கும் ஏழாம்
உலகிற்கும் ஏழாம் பொருத்தம்,
அதுதான் இப்படியாகிவிட்டது.
அதாவது திரைக்கதை என்பதை
வெறும் சம்பவங்கள், கருத்துக்களை வைத்து எழுதி, படமாக எடுத்தால்
அது கழுதை போல் உதைக்கும்.
திரைக்கதைக்கும் ஒரு தர்க்கம்
வேண்டும். பார்பவருக்கு அதே
இயக்குனரில் பழைய படங்களை
நினைவுபடுத்தக் கூடாது. பாலாவின் நான் கடவுளில் அது மிஸ்ஸிங்.
சரிதானா?//

ரொம்பச் சரி அனானியாரே..

நன்றிகள் என் வேலையை சுலபமாக்கியதற்கு..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
'வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன'
இதை சுகுணா திவாகருக்கு குறுஞ்செய்தியாக அனுப்புக:)//

தேவையில்லை.. அடுத்த வாரம் அனைவரும் எழுத ஆரம்பித்துவிடுவார்கள்..

பார்ப்போம்.. ஜெ.மோ. என்ன ஆகிறார் என்று..?

ஷங்கர் Shankar said...

இந்த பதிவின் URL எனது பதிவில் இணைத்துள்ளேன்!

Naan Kadavul Review - நான் கடவுள் திரைவிமர்சனம்.

Anonymous said...

கதை மிஸ்ஸிங். கதை இருந்திருந்தால், இப்பதிவு இன்னும் 15 பக்கங்கள் இழுத்திருக்கும்.

சரியா முருகா?

Anonymous said...

'ஜெ.மோ. என்ன ஆகிறார்'


அவர் இந்தப் படத்தால் பணக்காரர் ஆகிவிட்டார்.அடுத்து வாய்ப்புகள் வரும் என்று நினைக்கிறார்.படம் பார்த்த நமக்கு ஏதாவது ஆகாமல்
இருந்தால் சரிதான் சாமி.

மணிகண்டன் said...

ஸ்பெஷல் ஷோல போய் பூஜாவ பாத்துக்கிட்டு இருந்தா எப்படி விமர்சனம் எழுதமுடியும். முதல்முறையா, கதை சொல்லாம விமர்சனம் எழுதி இருக்கீங்க. அதுக்கு என்னோட பாராட்டுக்கள் சார். அது மாதிரி எழுத வச்ச பாலாவுக்கு அந்த பழனியாண்டவன் சார்பா நன்றி.

விமர்சனம் சூப்பர்.

உண்மைத்தமிழன் said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...
//பூஜா என்கிற அம்சவல்லி கண் பார்வையில்லாதவராக நடிப்பில் உருக்கியிருக்கிறார். அதிலும் கடைசிக் காட்சியில் அவருடைய நீண்ட வசனமும், பேசும்விதமும் லேசான உருக்கத்தைக் கொடுத்தாலும் அவர் அளவுக்கு இதுதான் முதல் நடிப்பு என்று சொல்லலாம். மறுக்கவில்லை//
'அபியும் நானும்' படத்துக்கு தனக்குத்தான் தேசிய விருது கிடைக்குமென த்ரிஷா சொல்லியிருந்தாரே.. நீங்க சொல்றதைப் பார்த்தால் அவருக்குக் கிடைக்காது போலிருக்கே?//

ரிஷான் ஸார்..

த்ரிஷாவுக்கு வாய்ப்பே இல்லை..

பூஜாவிற்குத்தான் கிடைக்கும்..

உண்மைத்தமிழன் said...

//ஷங்கர் Shankar said...
இந்த பதிவின் URL எனது பதிவில் இணைத்துள்ளேன்!
Naan Kadavul Review - நான் கடவுள் திரைவிமர்சனம்.//

மிக்க நன்றி ஷங்கர் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//வெயிலான் said...
கதை மிஸ்ஸிங். கதை இருந்திருந்தால், இப்பதிவு இன்னும் 15 பக்கங்கள் இழுத்திருக்கும். சரியா முருகா?//

முருகா.. வெயிலான் முருகா..

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி.. நன்றி.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//'ஜெ.மோ. என்ன ஆகிறார்'//
அவர் இந்தப் படத்தால் பணக்காரர் ஆகிவிட்டார். அடுத்து வாய்ப்புகள் வரும் என்று நினைக்கிறார். படம் பார்த்த நமக்கு ஏதாவது ஆகாமல் இருந்தால் சரிதான் சாமி.///

ஆகட்டுமே அனானி..

திறமை இருக்கு. உழைச்சிருக்கார்.. பலன் கிடைக்குது.. இதுல நமக்கெதுக்கு பொறாமை..?

உண்மைத்தமிழன் said...

//மணிகண்டன் said...
ஸ்பெஷல் ஷோல போய் பூஜாவ பாத்துக்கிட்டு இருந்தா எப்படி விமர்சனம் எழுதமுடியும். முதல்முறையா, கதை சொல்லாம விமர்சனம் எழுதி இருக்கீங்க. அதுக்கு என்னோட பாராட்டுக்கள் சார். அது மாதிரி எழுத வச்ச பாலாவுக்கு அந்த பழனியாண்டவன் சார்பா நன்றி.
விமர்சனம் சூப்பர்.//

ஐயோ நன்றி மணிகண்டன்..

முதல் தடவையா கதை(?)யைச் சொல்லவிடாமல் தடுத்துவிட்ட இயக்குநர் பாலாவுக்கு எனது நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
சின்ன பதிவு போட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டதா..??
Simple.. But Nice.. நன்றி தல...///

பூச்சியாரே.. மன்னிக்கணும்.. மன்னிக்கணும்..

உங்களுடைய இந்தப் பின்னூட்டம் மாடரேஷனில் போய் அமர்ந்து கொண்டது.. கவனிக்கவில்லை.

அதுதான் இவ்வளவு தாமதமான நன்றி..

சின்னப் பதிவு போட வேண்டும் என்று நினைத்துப் போடவில்லை.

அப்படியொரு சூழ்நிலை உருவாகிவிட்டது.. வேறொன்றுமில்லை..

Anonymous said...

என்ன உண்மைத்தமிழரே..

இத்தனை விமர்சனம் வந்திருச்சே.. உங்களைத் தடுத்த அந்த ஏதோ ஒண்ணு என்னன்னு இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
என்ன உண்மைத்தமிழரே.. இத்தனை விமர்சனம் வந்திருச்சே.. உங்களைத் தடுத்த அந்த ஏதோ ஒண்ணு என்னன்னு இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே..?//

கண்டேன்.. கண்டேன்.. கண்டு கொண்டேன்..

தமிழ்ச் சினிமாவிற்கு என்றில்லை ஒரு திரைப்படத்திற்கே அதனுடைய கதை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டியது மிக, மிக அவசியம்.

பல பதிவர்கள் இதுவரையில் சொல்லாத இரண்டு விஷயங்களை பாலா செய்து காட்டியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அது மட்டுமே உண்மை.

மற்றபடிக்கு "நான் கடவுள் படத்தின் கதை என்ன?" என்று இன்னும் 20 வருடங்கள் கழித்து கேட்டாலும், மிகச் சரியாகச் சொல்வதற்கு யாருக்கும் நினைவிருக்காது என்பது மட்டும் உண்மை.

Anonymous said...

http://irapeke.blogspot.com/2009/02/blog-post_11.html என் விமர்சனம் எப்படினு சொல்லுங்க . உங்க blog தான் எனக்கு முன்னோடி.

உண்மைத்தமிழன் said...

//irapeke said...
http://irapeke.blogspot.com/2009/02/blog-post_11.html

என் விமர்சனம் எப்படினு சொல்லுங்க . உங்க blogதான் எனக்கு முன்னோடி.//

நன்று விஜய்..

படித்தேன்.. மகிழ்ந்து பின்னூட்டமிட்டுள்ளேன்..

இது போன்று நிறைய எழுதவும்..

வாழ்க வளமுடன்

Anonymous said...

ungal karuthirku Nanadri. innum avalavaga tamil typing palagavillai adanaal thaan avalavu pizhaligal. sari seithuvidugiren. velai palu adigam enbadhal adigam ezhudhamudiyavillai. ungal padhivugalai parthapin ezhudha vendum endra aasai vandhuladhu. nandri. meendum sandhikiren.

SurveySan said...

//என்னை ஏமாற்றிய அந்த ஒன்று எது என்பதனைக் கண்டுபிடித்து எழுதுங்கள்..

//

:) க்ளைமாக்ஸை நகர்த்திய விதமும், அதனை சுற்றி இருக்கும் கார்சிக் கோர்வைகளும் அபத்தமாய் சேர்க்கப்பட்டது.

உண்மைத்தமிழன் said...

//irapeke said...
ungal karuthirku Nanadri. innum avalavaga tamil typing palagavillai adanaal thaan avalavu pizhaligal. sari seithuvidugiren. velai palu adigam enbadhal adigam ezhudhamudiyavillai. ungal padhivugalai parthapin ezhudha vendum endra aasai vandhuladhu. nandri. meendum sandhikiren.//

நன்றி தம்பி..

கொஞ்சம், கொஞ்சமாக டைப்பிங் செய்யப் பழகுங்கள்.. தானாக வந்துவிடும்..

அப்பன் முருகன் அருள் புரிவான்..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

///SurveySan said...
//என்னை ஏமாற்றிய அந்த ஒன்று எது என்பதனைக் கண்டுபிடித்து எழுதுங்கள்..//
க்ளைமாக்ஸை நகர்த்திய விதமும், அதனை சுற்றி இருக்கும் கார்சிக் கோர்வைகளும் அபத்தமாய் சேர்க்கப்பட்டது.///

க்ளைமாக்ஸில் திடீர் சண்டையும், திடீர் கொலையும் அதன் பின்னான வீராதிவீர ஷாட்டும் பட்டென்று படத்தை முடித்துவிட்டதால் அதற்கு முன்புவரை மனதைகு குடைந்து கொண்டிருந்த சில கேள்விகள் அப்படியே மக்கிப் போயின.

அதனால்தான் எனது விமர்சனத்தில் அப்படியெழுதினேன்.

நீங்கள் ஒருத்தர்தான் ஞாபகம் வைத்திருந்து மறுபடியும் வந்து பின்னூட்டம் போட்டு உசுப்பியுள்ளீர்கள்..

மிக்க நன்றி சர்வேஸன் ஸார்..

K.R.அதியமான் said...

இதையும் படித்து சிரிங்க மக்கா :

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20902261&format=html

Thursday February 26, 2009

சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்


சேதுபதி அருணாசலம்

Unknown said...

சொந்த விருப்பங்களையும் வெறுப்புகளையும் பின்பற்றுதலையும் தவிர்த்துவிட்டு விமர்சனம் செய்வது கடினம் -நன்றி

உண்மைத்தமிழன் said...

K.R.அதியமான் said...

இதையும் படித்து சிரிங்க மக்கா :

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20902261&format=html

Thursday February 26, 2009

சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்


சேதுபதி அருணாசலம்//

படித்தேன்.. நன்றி அதியமான் ஸார்.. கருத்து சொல்ல முடியுமா என்ன..?

உண்மைத்தமிழன் said...

//krishnaaleelai said...
சொந்த விருப்பங்களையும் வெறுப்புகளையும் பின்பற்றுதலையும் தவிர்த்துவிட்டு விமர்சனம் செய்வது கடினம் - நன்றி//

விமர்சனம் என்பதே சொந்த விருப்பங்கள், பின்பற்றுதல்கள் அடிப்படையில்தானே அமைகிறது..!

நன்றி கிருஷ்ணலீலை..

S.Arockia Romulus said...

ungala pola irukiravangaluku.Rajini ,vijay pola MASALA padam edutha super nu soluveenga....."Komanam katura orula Pant shirt poduravan..paithiya karan " engirathu correcta iruku...

உண்மைத்தமிழன் said...

//S.Arockia Romulus said...
ungala pola irukiravangaluku. Rajini vijay pola MASALA padam edutha super nu soluveenga..... "Komanam katura orula Pant shirt poduravan.. paithiya karan " engirathu correcta iruku...//

ஆரோக்கியம் ஸார்..

எனது பதிவு முழுவதையும் படித்தீர்கள் அல்லவா..?

எதுவுமே நன்றாக இல்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா..?!

ஏதோ ஒன்று காணவில்லை என்றேன்.. கடைசியில் அது வடிவமைக்கபட்ட கதை என்பது தெளிவானது.. உங்களுக்குப் புரியவில்லையெனில் திரும்பவும் பதிவையும், பின்னூட்டங்களையும் படிக்கவும்..!