ஈழப் பிரச்சினை-மூன்றாவது தீக்குளிப்பு - தொடர்கிறது வேதனை..!

08-02-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

சிங்கள இனவாத அரசு ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்றுகுவித்து வரும் நேரத்தில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தம்பி முத்துக்குமாரும், மதுரையில் ரவி என்பவரும் தீக்குளித்து இறந்து போயினர்.

இப்போது மூன்றாவது நபராக நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன், இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைப்பதாக கூறி இன்று காலையில் தீக்குளித்துள்ளார்.

சீர்காழி நகர 17-வது வார்டு காங்கிரஸ் இணை செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். தலைஞாயிறு என்னும் ஊரில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இன்று அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடி வந்தவர், “இலங்கையில் போரை நிறுத்து.... தமிழ் வாழ்க..” என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு கொளுத்திக் கொண்டுவிட்டார்.

உடனே ரவிச்சந்திரனின் உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், உடனடியாக ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கும் அவரது உடல் நிலை மோசமடைந்ததால், தஞ்சைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் டாக்டர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறி விட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை மூன்றே முக்கால் மணியளவில் ரவிச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ்காரர்தான். மகளிர் காங்கிரஸ் உறுப்பினராக உள்ளார்.

ரவிச்சந்திரன் உடலுக்கு இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினரும், பெரும் திரளான தமிழ் உணர்வாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக ரவிச்சந்திரன் தீக்குளித்த தகவல் பரவியதும், காங்கிரஸ் நிர்வாகிகள், பெரும் திரளான தொண்டர்கள் மயிலாடுதுறை மருத்துவமனை முன்பு திரண்டனர்.

அதேபோல, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரும் திரண்டு வந்தனர்.

காங்கிரஸாரைப் பார்த்த அவர்கள், ரவிச்சந்திரனைப் பார்க்கக் கூடாது என்று கூறி தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட போலீஸார் இரு தரப்பினரையும் விலக்கி அமைதிப்படுத்தினர். இந்த மோதலில் டி.எஸ்.பி. ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனால் சீ்ர்காழி, மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

முன்னதாக மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டிடம் ரவிச்சந்திரன் கொடுத்த மரண வாக்குமூலத்தில்,

“ஈழத் தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் (காங்கிரஸ்) முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இந்தியா இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் அமைதி வேண்டும்.. போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னையில் தி.மு.க. கட்சியினரோடு காங்கிரஸாரும் சேர்ந்து அமைதி ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் பேராசிரியர் அன்பழகனோடு, தங்கபாலு, வாசன் ஆகியோரும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் சீர்காழியில் நடந்துள்ள இந்த துயரச் சம்பவம் காங்கிரஸ் கட்சியினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

“யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.. தீக்குளிப்பு வேண்டவே வேண்டாம்..” என்று பல தலைவர்கள் சொல்லியும், கெஞ்சியும் இந்தக் கொடூரம் தொடர்வது வருத்தமளிக்கிறது.

வயதான அவரது தாயாரின் கதறலை பத்திரிகைகளில் பார்த்து, இரவு சாப்பாடு உள்ளேயே இறங்கவில்லை. வேதனையாக இருக்கிறது.

இந்த தீக்குளிப்பு என்னும் கொடூரம் இத்தோடு முற்றுப் பெற வேண்டும் என்றே விரும்புகிறேன்..

ரவிச்சந்திரனின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி : தேட்ஸ்தமிழ்.காம்

61 comments:

மருள்நீக்கி said...

ரவிச்சந்திரனின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்

காட்டாமணக்கு said...

//
ஈழத்தில் அமைதி வேண்டும்.. போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னையில் தி.மு.க. கட்சியினரோடு காங்கிரஸாரும் சேர்ந்து அமைதி ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் பேராசிரியர் அன்பழகனோடு, தங்கபாலு, வாசன் ஆகியோரும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.
//

நிறுத்துங்கடா நாடகத்தை. இந்த நாடகத்தை நம்பற காலத்தை எல்லாம் தமிழன் கடந்து விட்டான்.

தமிழகத்தில் காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் அழிக்கப்படும். அது காலத்தின் நியதி.

Anonymous said...

Due to self immolation of few people in the 60s, Congress lost the opportunity to rule TN. By the recent self immolations, congress will lose its opportunity to exist in TN. The congress leaders who were bribed by Rajapakshe and claims that they can't forget Rajiv, will be forgotten by the people of TN! Congress's doomsday is not far!
-Krishnamoorthy

Anonymous said...

Again, this is from Krishnamoorthy. It is for your information, not necessarily for a comment.

Sri Lanka: India's Moment Of Truth

By B. Raman

(Text of an interview through E-mail given by me to a Russian journal)

(a). Sri Lanka is less developed than India because even though the percentage of literacy in Sri Lanka is high, it does not as yet have educational institutions of excellence like the Institutes of Technology in India. India has better human and material resources than Sri Lanka. The Indian economy is highly diversified. The Sri Lankan economy is still a
three-item economy---tea, rubber and tourism.

(b). Its economy is dependent on tea, rubber and tourism. The main tea and rubber growing areas are in the South where the Sinhalese are in a majority and not in the North and the East where the Tamils are in a majority. The insurgency has, therefore, not badly affected these three items. Iran, Pakistan and China are funding its arms purchases. Teheran has been supplying oil at concessional prices and giving it cheap credit to enable it to pay for the arms purchases. Pakistan and China sell arms at concessional rates and provide low-interest credit to enable Sri Lanka to pay for them.

(c). India's interest in the island is partly emotional and partly strategic. The emotional interest arises from the fact that India has a large Tamil population in Tamil Nadu, a southern province, who have ethnically and linguistically much in common with the Tamils of Sri Lanka. Any policies of the Government of Sri Lanka, which affect the Sri Lankan Tamils, have an echo in Tamil Nadu. Hence, the close Indian interest in the problems and the well-being of the Sri Lankan Tamils. Strategically, the Sri Lankan Government has been cultivating China and Pakistan to keep India in check. It has good political and economic relations with China. It has invited China to construct a modern port in Hambantota in southern Sri Lanka. It has invited the Chinese to help it in gas exploration in areas which are close to India. Similarly, there is a growing military-military relationship between Sri Lanka and Pakistan, which worries India.

(d). Indian aid is partly economic and partly military. The economic aid is in the form of cheap credit to enable Sri Lanka to import from India what it needs. India has been helping in gas exploration and has taken on lease the large number of oil storage tanks in Trincomallee in the Eastern Province, which were constructed by the British during the Second World War. India is hoping to play an important role in the economic development of the Tamil areas in the North and the East when the LTTE is defeated by the Sri Lankan Army. The military aid is in the form of supply of defensive equipment such as radars at concessional prices and training to the Sri Lankan Armed Forces and Police in India.

(e). The Sri Lankan President Mahinda Rajapaksa comes from a party (the Sri Lanka Freedom Party (SLFP), which is left of centre and has been traditionally friendly to India. He has been warm to India and claims to be attentive to India's strategic interests. At the same time, he has been determined to crush the LTTE not only as a terrorist organisation, but also as a Tamil political movement with assistance from India, if possible, and from China and Pakistan, if necessary. Sensitivities of Tamil public opinion in Tamil Nadu have put limits on the kind of military assistance that India can give to Sri Lanka. He has tried to make up for this by seeking assistance from China and Pakistan and credit from Iran. Thus, the strategic space for India in Sri Lanka is slowly getting reduced due to the increasing presence of not only China, Pakistan and Iran, but also the US. In the past, India was concerned over the US presence in Sri Lanka. It is no longer so since Dr. Manmohan Singh became the Prime Minister in 2004. He does not share the traditional concerns of India over the impact of the US presence in the Indian neighbourhood on the regional influence of India. As a result of the victories of the Sri Lankan Army, there has been an increase in Sinhalese pride and chauvinism. Just now, Rajapaksa has been assuring India that once he crushes the LTTE, he would give to the Tamils a federal set-up which will satisfy their political aspirations. It is doubtful whether he would keep his word In view of the increased influence of Sinhalese extremism on policy-making, he is likely to go back on his word and give the Tamils something less than what he had promised. It would have been in India's interest to help him in destroying the LTTE's capability for insurgency and terrorism, while at the same time preserving its potential and strength as a political movement which would safeguard the interests of the Tamils.

Of all the Tamil organisations in Sri Lanka, the LTTE was the most motivated. Many of its young cadres, who fought ferociously against the SL Army, joined it long after the assassination of Rajiv Gandhi in 1991. They had no role in his assassination. India should have made a distinction between those who had a role in his assassination and those who did not and tried to wean away the latter to India's side. It did not do so. It was a very short-sighted policy. Rajapaksa has skillfully and cunningly used Indian support and ambivalence to destroy not only the capability of the LTTE for terrorism, but also its potential and usefulness to India in future as a political strategic asset. Indian political class never understands the importance of identifying and preserving our strategic assets in the neighbourhood. Jawaharlal Nehru let go our strategic assets in Tibet. I. K.Gujral, who was the Prime Minister in 1997, unwisely and in a moment of misplaced generosity let go our strategic assets in Pakistan. Manmohan Singh, the present Prime Minister, has let go our strategic assets in Nepal and Sri Lanka. It could be a great tragedy.

(The writer is Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai. E-mail: seventyone2@gmail.com)

Anonymous said...

முத்துகுமாரனை புகழ்ந்து கொண்டிருந்தால் இப்படி தான் நடக்கும். வெளிநாடுகளில் மிக வசதியாக இருந்து புல்லரிக்க தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதும் இலங்கை தமிழர்கள் இப்படி செய்வதில்லை ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இப்படி?

Anonymous said...

I don't understand.

In one country, there are Tamils being killed by a racist government.

In another country, Tamils get emotional and kill themselves. Why? Isn't there enough life being lost?

-Kajan

Anonymous said...

//முத்துகுமாரனை புகழ்ந்து கொண்டிருந்தால் இப்படி தான் நடக்கும். வெளிநாடுகளில் மிக வசதியாக இருந்து புல்லரிக்க தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதும் இலங்கை தமிழர்கள் இப்படி செய்வதில்லை ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இப்படி?//

தமிழ்நாட்டுத் தமிழன் என்றால் இலங்கை தமிழனுக்கு மட்டுமல்ல மலேசியா சிங்கப்பூர் என எல்லாத் தமிழனுக்கும் எளக்காரம். இங்கிருந்து போன தமிழர்கள் இந்த வெளிநாட்டுத் தமிழர்களால் அவமானப் படுத்தப்படுவது பற்றி பலமுறை கேள்விப்பட்டதுண்டு.இதெல்லாம் இந்திய சற்று முன்னேறி விட்டால் குறைந்துவிட்டது. இதெல்லாம் தெரியாம முத்துக்குமார் மாதிரி கிறுக்குபய புள்ளைக வீணா உயிர விடுதுக. (ஆயிரந்தான் இருந்தாலும் ஈழத்தமிழனுக மேல பாசந்தான், இருந்தாலும் அவனுவ நம்ம தாய்நாட்டை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் போது நமக்கு இப்படியெல்லாம் தோணுது என்ன செய்ய? காங்கிரஸை என்ன வேணா சொல்லுங்க, ஆனா இந்தியாவை... )

Anonymous said...

நான் ஒரு புலம்பெயர் ஈழத்தமிழன் ஜயா நான் கேட்பதெல்லாம் தமிழக உறவுகளே உங்கள் உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள், உங்கள் கோரிக்கையை ஏற்காத, வேடதாரிகளை தீயில் போட்டு கொழுத்துங்கள்.. நீங்கள் வாழவேண்டும் ஜயா, உங்களால்தான் எமது இனத்துக்கு விடிவு.

Payam Ariyan said...

நாங்கள் போரை சந்தித்தது இல்லை, நாங்கள் இன்னும் ஜனநாயகத்தை நம்புகிறோம், அதனால்தான் இந்த தற்கொலை.

Anonymous said...

நிறுத்துங்கடா நாடகத்தை. இந்த நாடகத்தை நம்பற காலத்தை எல்லாம் தமிழன் கடந்து விட்டான்.

தமிழகத்தில் காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் அழிக்கப்படும். அது காலத்தின் நியதி//

Unmai.miga unmai .intha tamilargal congree and dmk podura nadagathai nabura alavukku onnum muttalgal illai.ellavartayum kadthu viitom.
correct

Anonymous said...

நன்றே நடக்க வேண்டும் அதுவும் இன்றே நடக்க வேண்டும்

புலிகளும் ராணுவமும்

ஒழிந்துவிட்டால் இலங்கையில்

அமைதிபிறக்கும்

Anonymous said...

கேடுகெட்ட பிரபாகரன் பதுங்கு குழி ஆடம்பர பங்களாவில் இருந்துவிட்டு புலிகளை இயக்குகிறார் .புலிகளின் பெயரில் போரிடுவது சினனசிறார்கள் திகுளிப்பது அரசியல் வாதிகள் நடத்தும் நாடகத்தை விட இது பெரிய நாடகம் .

Anonymous said...

ஐயோ!!!!!!!!!! ராஜுவ் காந்தியை போட்டுத்தான்க்கலாம் என்று ஒருவர் பதிவு எழுதி இருந்தார் அவரிருக்கும் இடம் குளுகுளு ஜிர்மனியில் ஏன் அவருக்கு LTTE இல் சேரவேண்டியது தானே .இப்படி கொஞ்ச பேர் விட்டுக்கு உள்ளே இருந்து ஆதரவு கொடுபாஹ ......... கிறுக்கு தமிழன் தீ குளிப்பான்................அரசியல் வாதி எவனுக்கும் மண்டையில் மசாலாவே கிடையாது .............
அட ..........தூ ...துப்பு கெட்டவனுவோ ...

உண்மைத்தமிழன் said...

///காட்டாமணக்கு said...
//ஈழத்தில் அமைதி வேண்டும்.. போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னையில் தி.மு.க. கட்சியினரோடு காங்கிரஸாரும் சேர்ந்து அமைதி ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் பேராசிரியர் அன்பழகனோடு, தங்கபாலு, வாசன் ஆகியோரும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.//
நிறுத்துங்கடா நாடகத்தை. இந்த நாடகத்தை நம்பற காலத்தை எல்லாம் தமிழன் கடந்து விட்டான். தமிழகத்தில் காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் அழிக்கப்படும். அது காலத்தின் நியதி.///

காட்டாமணக்கு ஸார்..

மக்கள் ஏமாறவில்லை.. நம்பவில்லை.. ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால், தமது சொந்தப் பிரச்சினைகள்.. தொகுதிகளை முன் வைத்துத்தான் வாக்குகளை வழங்குகிறார்கள்.

அதுதான் இங்கு பிரச்சினை..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Due to self immolation of few people in the 60s, Congress lost the opportunity to rule TN. By the recent self immolations, congress will lose its opportunity to exist in TN. The congress leaders who were bribed by Rajapakshe and claims that they can't forget Rajiv, will be forgotten by the people of TN! Congress's doomsday is not far!
-Krishnamoorthy//

கிருஷ்ணமூர்த்தி ஸார்..

காங்கிரஸிற்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு என்பது குறைவுதான்..

கூட்டணியில் இருப்பதால்தான் மத்தியில் ஆட்சியில் இருக்க முடிகிறது. இதுதான் உண்மை.

தேர்தலில் ஈழத்துப் பிரச்சினையை மையமாக வைத்து மக்கள் வாக்களித்தால் மட்டுமே தி.மு.க., காங்கிரஸ் இரண்டையும் ஒழிக்க முடியும்.

இதனை மக்கள்தான் முன் வந்து செய்ய வேண்டும்.. வருவார்களா என்பதுதான் சந்தேகம்..

உண்மைத்தமிழன் said...

கிருஷ்ணமூர்த்தி ஸார்..

திரு.ராமன் ஏற்கெனவே இதே கருத்துடைய கட்டுரையை தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் எழுதியிருந்தார்.

இப்போதும் அதே பத்திரிகையில் எழுதி வருகிறார்.

படித்தேன்.. அறிந்தேன்.. தெளிந்தேன்.. ஒவ்வொருவருக்கும் இலங்கை பிரச்சினையில் பார்வை வேறுவேறாக உள்ளது.

ஒரு மித்தக் கருத்து ஒன்றுதான்..

பிரச்சினையை ஆரம்பித்தது இலங்கை அரசுதான். ஆகவே இலங்கை அரசு நினைத்தால் இந்தப் பிரச்சினையை ஒரு நாளில் தீர்த்துவிடலாம். தமிழ் இனத்தையே அழித்துவிட்டு சிங்களவர்கள் மட்டுமே இலங்கையில் வாழ வழி செய்யும் வகையில் பேரினவாத அரசாக மட்டுமே இலங்கையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு அரசுகளும் இருப்பதால்தான் நமது தமிழர்களுக்கு இநதக் கொடுமை..

தங்களது தகவலுக்கு எனது நன்றி..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
முத்துகுமாரனை புகழ்ந்து கொண்டிருந்தால் இப்படிதான் நடக்கும். வெளிநாடுகளில் மிக வசதியாக இருந்து புல்லரிக்க தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதும் இலங்கை தமிழர்கள் இப்படி செய்வதில்லை ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இப்படி?//

அதீத பாசத்துடன் ஆட்படும் தொண்டர்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளனர்.

தமிழ்நாட்டில் அது கொஞ்சம் அதிகம்.

தனி நபர் துதிபாடுதலும், மனிதர்களை தெய்வமாக்கும் பாமரத்தனமும் சேர்ந்ததுதான் சாதாரணத் தொண்டனின் மனம்.

இதுதான் இந்தத் தீக்குளிப்புகளுக்கு முக்கியக் காரணம்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
I don't understand. In one country, there are Tamils being killed by a racist government. In another country, Tamils get emotional and kill themselves. Why? Isn't there enough life being lost?
-Kajan//

கஜன்..

முந்திய பி்ன்னூட்டத்தைப் பார்க்கவும்..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//முத்துகுமாரனை புகழ்ந்து கொண்டிருந்தால் இப்படிதான் நடக்கும். வெளிநாடுகளில் மிக வசதியாக இருந்து புல்லரிக்க தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதும் இலங்கை தமிழர்கள் இப்படி செய்வதில்லை ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இப்படி?//
தமிழ்நாட்டுத் தமிழன் என்றால் இலங்கை தமிழனுக்கு மட்டுமல்ல மலேசியா சிங்கப்பூர் என எல்லாத் தமிழனுக்கும் எளக்காரம். இங்கிருந்து போன தமிழர்கள் இந்த வெளிநாட்டுத் தமிழர்களால் அவமானப்படுத்தப்படுவது பற்றி பலமுறை கேள்விப்பட்டதுண்டு. இதெல்லாம் இந்திய சற்று முன்னேறிவிட்டால் குறைந்துவிட்டது. இதெல்லாம் தெரியாம முத்துக்குமார் மாதிரி கிறுக்குபய புள்ளைக வீணா உயிர விடுதுக. (ஆயிரந்தான் இருந்தாலும் ஈழத்தமிழனுக மேல பாசந்தான், இருந்தாலும் அவனுவ நம்ம தாய்நாட்டை தொடர்ந்து அசிங்கப்படுத்தும்போது நமக்கு இப்படியெல்லாம் தோணுது என்ன செய்ய? காங்கிரஸை என்ன வேணா சொல்லுங்க, ஆனா இந்தியாவை... )///

அனானி.. இதென்ன பகடியோ..?

இந்த நேரத்தில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நாம் பெரிதாக்கக் கூடாது. இது குடும்பத்திற்குள் இருக்கின்ற பிரச்சினைகள் போலத்தான்.. நாமே தீர்த்துவிடலாம்.

முதலில் நமது சகோதரர்களுக்கு வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தியாக வேண்டும். அதுதான் தற்போதைக்கு அவசியமானது..

நமக்கிடையே இருக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச இது உகந்த நேரமல்ல..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
நான் ஒரு புலம்பெயர் ஈழத்தமிழன் ஜயா நான் கேட்பதெல்லாம் தமிழக உறவுகளே உங்கள் உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள், உங்கள் கோரிக்கையை ஏற்காத, வேடதாரிகளை தீயில் போட்டு கொழுத்துங்கள்.. நீங்கள் வாழ வேண்டும் ஜயா, உங்களால்தான் எமது இனத்துக்கு விடிவு.//

அனானி ஐயா..

நாங்களும் வேண்டுகோள்களை வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்..

இப்படி ஏதாவது ஒன்று நடந்துதான் விடுகிறது..

உண்மைத்தமிழன் said...

//palZ said...
நாங்கள் போரை சந்தித்தது இல்லை, நாங்கள் இன்னும் ஜனநாயகத்தை நம்புகிறோம், அதனால்தான் இந்த தற்கொலை.//

பால்ஸ்..

ஜனநாயகத்தை நம்புபவர்கள் போராட்டத்தைத்தான் துவக்க வேண்டும். தங்களது வாழ்க்கையே முடித்துக் கொள்ளக்கூடாது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
நிறுத்துங்கடா நாடகத்தை. இந்த நாடகத்தை நம்பற காலத்தை எல்லாம் தமிழன் கடந்து விட்டான்.
தமிழகத்தில் காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் அழிக்கப்படும். அது காலத்தின் நியதி//
Unmai. miga unmai. intha tamilargal congree and dmk podura nadagathai nabura alavukku onnum muttalgal illai. ellavartayum kadthu viitom. correct.//

அனானி.. எல்லாம் சரிதான்.. மக்களின் இந்தக் கோபம் எப்போது, எந்த வகையில் வெளிப்படும்..?

இதுதான் இப்போதைய கேள்வி..? பதில் இருக்கிறதா..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
நன்றே நடக்க வேண்டும் அதுவும் இன்றே நடக்க வேண்டும். புலிகளும் ராணுவமும்
ஒழிந்துவிட்டால் இலங்கையில்
அமைதி பிறக்கும்.//

ஒழிந்துவிட்டால் அல்ல..

"அமைதி காத்து ஒதுங்கிவிட்டால்" என்று இருந்தால் சரியாகத்தான் இருக்கும்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
கேடுகெட்ட பிரபாகரன் பதுங்கு குழி ஆடம்பர பங்களாவில் இருந்துவிட்டு புலிகளை இயக்குகிறார். புலிகளின் பெயரில் போரிடுவது சினனசிறார்கள். திகுளிப்பது அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தை விட இது பெரிய நாடகம்.//

என்ன அனானி என்ன பேசுகிறீர்கள்..?

தீக்குளித்து இறப்பது நாடகமா..? சிரிப்புதான் வருகிறது.

அவரவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் செய்கின்ற செயல் இது.. இதனைப் போய் இப்படியா கொச்சைப்படுத்துவது..?

கண்டிக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ஐயோ! ராஜுவ்காந்தியை போட்டுத் தாக்கலாம் என்று ஒருவர் பதிவு எழுதி இருந்தார். அவரிருக்கும் இடம் குளுகுளு ஜிர்மனியில். ஏன் அவருக்கு LTTE-ல் சேரவேண்டியதுதானே?//

யார் அவர்..?

//இப்படி கொஞ்ச பேர் விட்டுக்கு உள்ளே இருந்து ஆதரவு கொடுபாஹ. கிறுக்கு தமிழன் தீ குளிப்பான். அரசியல்வாதி எவனுக்கும் மண்டையில் மசாலாவே கிடையாது. அட தூ துப்பு கெட்டவனுவோ.//

))))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

ஆமா..

இதென்ன கொடுமை..?

இந்தப் பதிவுக்குப் போய் வெறியா மைனஸ் குத்து குத்திருக்காங்க..

ஒண்ணும் புரியல..

Anonymous said...

//உண்மைத் தமிழன் - ஆமா..
இதென்ன கொடுமை..?
இந்தப் பதிவுக்குப் போய் வெறியா மைனஸ் குத்து குத்திருக்காங்க..
ஒண்ணும் புரியல..//
இறந்தவரின் செயலை தியாகம் என்று நீங்கள் புகழ வேண்டும். அதோடு சேர்த்து புலியையும் பிரபாகரனையும் புகழ்ந்து இரண்டுவரியாவது எழுத வேண்டும். புலி ஆதரவாளர்களிடம் இருந்து உங்களுக்கு பிளஸ் குத்து குவியும்.

Anonymous said...

Look at pichumama's comment in katamanaku blog.

Anonymous said...

//அனானி.. இதென்ன பகடியோ..?//

அட போங்க சார், நாட்டை பத்தி கேவலம எழுதறாங்கன்னு ஆதங்கத்துல சொன்னா அது உங்களுக்கு பகடியா?

//இந்த நேரத்தில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நாம் பெரிதாக்கக் கூடாது. இது குடும்பத்திற்குள் இருக்கின்ற பிரச்சினைகள் போலத்தான்.. நாமே தீர்த்துவிடலாம்.//

அப்படிதான் நானும் நினைச்சேன், ஆனா பயபுள்ளைக ரொம்ப கேவலப்படுத்துறாங்களே?

டில்லியில் சிலர் பண்ணுற தவறுக்கு நாடு என்ன சார் பண்ணும்? ஈழத்தில் சிலர் முஸ்லிம்களுக்கு கொடுமை செய்தனர் என்பற்காக ஈழத்தையே அசிங்கப்படுத்தினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? இதுதான் முறையா?

Anonymous said...

உண்மையை சொன்னால் மைனஸ்ல குத்து விழாமல் எப்படி? Anonymous சொன்னதையெல்லாம் இப்படி சொன்னாள் அவ்ஹ கோவபடாம என்ன செவாஹ?ஒரு சில தவகள்களை Anonymous இருந்துதான் சொல்லமுடயும்

malar said...

நன்றே நடக்க வேண்டும் அதுவும் இன்றே நடக்க வேண்டும்
புலிகளும் ராணுவமும்"அமைதி காத்து ஒதுங்கிவிட்டால் amaithi pirakkum

malar said...

நன்றே நடக்க வேண்டும் அதுவும் இன்றே நடக்க வேண்டும்

புலிகளும் ராணுவமும் அமைதி காத்து ஒதுங்கிவிட்டால்" என்று இருந்தால் சரியாகத்தான் இருக்கும்..

malar said...

nan +l than kuthi erukan .kavalai padathengka

malar said...

உண்மை சுடும்

malar said...

உண்மை சுடும்............
அந்த உண்மை அதிகாரத்திலிருக்கும் எஜமானர்களைச் சுடட்டும்

malar said...

Your comment has been saved and will be visible after blog owner approval.

plz removev this

Anonymous said...

///கிருஷ்ணமூர்த்தி ஸார்..

காங்கிரஸிற்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு என்பது குறைவுதான்..

கூட்டணியில் இருப்பதால்தான் மத்தியில் ஆட்சியில் இருக்க முடிகிறது. இதுதான் உண்மை.

தேர்தலில் ஈழத்துப் பிரச்சினையை மையமாக வைத்து மக்கள் வாக்களித்தால் மட்டுமே தி.மு.க., காங்கிரஸ் இரண்டையும் ஒழிக்க முடியும்.

இதனை மக்கள்தான் முன் வந்து செய்ய வேண்டும்.. வருவார்களா என்பதுதான் சந்தேகம்..///

I completely agree with you. When people go to vote, religion & caste of the candidate also come into picture amongst many other factors. But, there are occasions, people went to vote with a common goal. An example is 1996 assembly elections. During that time, the propaganda of opposition was focused on JJ's corruption. The situation can be similar in the coming general elections. Now,The ball is in the court of "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்". In 1991, ADMK lead aliance used the poster showing Rajiv's body to sweep the poll. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் should use visuals of Muthukumar, Ravi, Ravichandran's dead body. Photographs of the Kids injured in SL should also be used to wipe out congress from TN. Relatives of my sister's inlaws family live in colombo. My sister's inlaws had gone to meet their relatives in Colombo. While they were at home, the army had entered the house. They didn't wait for permission, they just intruded the house. My relatives were watching watching Rajapakshe's speech. So the army was happy! They stayed in the house for 30 min and left. According to my relatives, depending on the mood of army men, anything can happen to tamils. This incident is an indication as how Tamils are treated by the Sinhala racist government! I also heard another shocking thing from them. They said the 3000 Indian army men who went to SL during the SAARC meet didn't come back. They are fighting alongwith SL army against LTTE. It is the reponsibility of all Tamils in TN to work towards a common goal of wiping out Congress from TN. - Krishnamoorthy

Anonymous said...

தங்கள் கட்டுபாடுகளில் இருந்து மக்கள் வெளியேறுவதை விரும்பாத புலிகள் மக்கள் கூட்டத்தோடு ஓரு பெண் புலியை அனுப்பி குண்டை வெடிக்க பண்ணியுள்ளனர்.
மக்கள் மீது புலிகளுக்கு என்றுமே அக்கறை இருந்தது இல்லை.
http://thesamnet.co.uk/?p=7330

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//உண்மைத் தமிழன் - ஆமா..
இதென்ன கொடுமை..? இந்தப் பதிவுக்குப் போய் வெறியா மைனஸ் குத்து குத்திருக்காங்க.. ஒண்ணும் புரியல..//
இறந்தவரின் செயலை தியாகம் என்று நீங்கள் புகழ வேண்டும். அதோடு சேர்த்து புலியையும் பிரபாகரனையும் புகழ்ந்து இரண்டு வரியாவது எழுத வேண்டும். புலி ஆதரவாளர்களிடம் இருந்து உங்களுக்கு பிளஸ் குத்து குவியும்.//

அப்போ புலி ஆதரவாளர்கள்தான் மைனஸ் குத்து குத்துறாங்கன்னு சொல்றியா அனானி..

இதுல புலியை பத்தி நான் ஒண்ணுமே சொல்லலியே.. அப்புறம் எப்படி..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Look at pichumama's comment in katamanaku blog.//

பார்த்தேன்.. படித்தேன்.. புரிந்தேன்.. கருத்து சுதந்திரம் என்பதனால் புன்முறுவல் பூக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//அனானி.. இதென்ன பகடியோ..?//
அட போங்க சார், நாட்டை பத்தி கேவலம எழுதறாங்கன்னு ஆதங்கத்துல சொன்னா அது உங்களுக்கு பகடியா?///

அதுக்கென்ன செய்யறது..? நாட்டை ஆளுகின்றவர்கள் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது அது ஒட்டு மொத்த நாட்டுக்கே அசிங்கமாகத்தான் இருக்கிறது.. நமக்குத் தெரியுது.. நம்ம அரசியல்வியாதிகளுக்குத் தெரிய வேண்டுமே..?

///இந்த நேரத்தில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நாம் பெரிதாக்கக் கூடாது. இது குடும்பத்திற்குள் இருக்கின்ற பிரச்சினைகள் போலத்தான்.. நாமே தீர்த்துவிடலாம்.//
அப்படிதான் நானும் நினைச்சேன், ஆனா பயபுள்ளைக ரொம்ப கேவலப்படுத்துறாங்களே?
டில்லியில் சிலர் பண்ணுற தவறுக்கு நாடு என்ன சார் பண்ணும்? ஈழத்தில் சிலர் முஸ்லிம்களுக்கு கொடுமை செய்தனர் என்பற்காக ஈழத்தையே அசிங்கப்படுத்தினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? இதுதான் முறையா?///

அதுதான் சொன்னேன்.. இன்றைய இளைஞர்கள் எடுத்தேன்.. கவிழ்த்தேன் என்று எதற்கெடுத்தாலும் இளமைத் துடிப்பில் எதையாவது செய்துவிடுகிறார்கள்.

பின்பு காலம் போய் அனுபவப்பட்ட பின்பு என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். இடைப்பட்டக் காலத்தில் அதன் பலன்களை அனுபவிப்பவர்கள்.. அனுபவித்தவர்கள் அப்பாவி பொதுமக்கள்தான்.. இதுதான் இப்போதும் ஈழத்தில் நடைபெறுகிறது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உண்மையை சொன்னால் மைனஸ்ல குத்து விழாமல் எப்படி? Anonymous சொன்னதையெல்லாம் இப்படி சொன்னாள் அவ்ஹ கோவபடாம என்ன செவாஹ?ஒரு சில தவகள்களை Anonymous இருந்துதான் சொல்லமுடயும்.//

சரிங்க அனானி..

நாமதான் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாச்சே.. தாங்கிக் கொள்கிறேன்..

ஆறுதலுக்கு மிக்க நன்றி..

உண்மைத்தமிழன் said...

//malar said...
நன்றே நடக்க வேண்டும் அதுவும் இன்றே நடக்க வேண்டும். புலிகளும் ராணுவமும் அமைதி காத்து ஒதுங்கிவிட்டால் amaithi pirakkum.//

நிச்சயம் பிறக்கும். பின்பு அரசுகளும், மக்கள் பிரதிநிகளும் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

ஆனால் இந்தக் கதை இப்போதைக்கு ஈழத்தில் சாத்தியமா என்பது 300 சதவிகிதம் கேள்விக்குறி..

உண்மைத்தமிழன் said...

//malar said...
nan +l than kuthi erukan .kavalai padathengka.//

நல்லது மலர்..

இது மாதிரியே ஒவ்வொரு பதிவுக்கும் வந்து ஒரு குத்து குத்துனீங்கன்னா ரொம்பவே நல்லாயிருக்கும்..

உண்மைத்தமிழன் said...

//malar said...
உண்மை சுடும்//

இந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டுமே மலர்..?

உண்மைத்தமிழன் said...

//malar said...
உண்மை சுடும். அந்த உண்மை அதிகாரத்திலிருக்கும் எஜமானர்களைச் சுடட்டும்.//

உங்களுடைய எதிர்பார்ப்பு ஜெயிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை..

இன்னொரு மிலோசெவிக்காக ராஜபக்சே சகோதரர்கள் உலக சமுதாயத்தின் கண்களுக்குத் தெரிய வேண்டும்..

உண்மைத்தமிழன் said...

//malar said...
Your comment has been saved and will be visible after blog owner approval.
plz removev this.//

இல்லம்மா..

அது எனக்கு நல்லதல்ல..

சில சமயங்களில் பின்னூட்டங்களில் கிஞ்சித்தும் நாகரிகம் இல்லாமல் எழுதுகிறார்கள். பயமாக இருக்கிறது. அதனால்தான் அதனை வைத்துள்ளேன்..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//கிருஷ்ணமூர்த்தி ஸார்..
காங்கிரஸிற்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு என்பது குறைவுதான்.. கூட்டணியில் இருப்பதால்தான் மத்தியில் ஆட்சியில் இருக்க முடிகிறது. இதுதான் உண்மை.
தேர்தலில் ஈழத்துப் பிரச்சினையை மையமாக வைத்து மக்கள் வாக்களித்தால் மட்டுமே தி.மு.க., காங்கிரஸ் இரண்டையும் ஒழிக்க முடியும். இதனை மக்கள்தான் முன் வந்து செய்ய வேண்டும்.. வருவார்களா என்பதுதான் சந்தேகம்//
I completely agree with you. When people go to vote, religion & caste of the candidate also come into picture amongst many other factors. But, there are occasions, people went to vote with a common goal.///

உண்மைதான் ஸார்..

ஜாதி இல்லை.. ஜாதி இல்லை என்று சொல்லும் அரசியல்வியாதிகள் தொகுதியில் யார் மெஜாரிட்டியாக இருக்கிறார்களோ அந்த ஜாதிக்காரனைத்தான் வேட்பாளராக நிறுத்துவார்கள்.. ஆனால் வெளியில் தாங்கள் ஜாதியை எதிர்ப்பதாகவும் சொல்லிக் கொள்வார்கள்.

//An example is 1996 assembly elections. During that time, the propaganda of opposition was focused on JJ's corruption. The situation can be similar in the coming general elections.//

மறுக்க முடியாத உண்மை. ஜெயலலிதா தான் செய்த அதிகாரத் துஷ்பிரயோகங்கினால்தான் அந்தச் சமயத்தில் ஆட்சியை இழந்தார்.

//Now,The ball is in the court of "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்". In 1991, ADMK lead aliance used the poster showing Rajiv's body to sweep the poll. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் should use visuals of Muthukumar, Ravi, Ravichandran's dead body. Photographs of the Kids injured in SL should also be used to wipe out congress from TN.//

அதுதான் நான் முன்பே சொன்னனே ஸார்..

இலங்கை தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து தமிழக மக்கள் ஓட்டளிக்க முன் வந்தால் காங்கிரஸுக்கு எந்தத் தொகுதியிலும் டெபாஸிட்கூட கிடைக்காது.. மக்கள் முன் வருவார்களா என்பதுதான் சந்தேகமாக உள்ளது..

இப்போதைக்கு எல்லா நாட்டிலும் நடப்பதைப் போல தமிழ்நாட்டிலும் மக்களின் மனோபாவம் மாறிவிட்டது.

பணம், பணம், பணம் என்று அலைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். நமக்கு யார் உதவி செய்வார்கள். கூப்பிட்ட குரலுக்கு வருவார்கள், யார் அதிகமாக பணம் தருவார்கள் என்றுதான் பார்க்கிறார்களே தவிர.. தங்களைத் தவிர மற்றவர்களை நினைத்துப் பார்ப்பது என்பது அறவே இல்லை. இதுதான் பயமாக இருக்கிறது..

//Relatives of my sister's inlaws family live in colombo. My sister's inlaws had gone to meet their relatives in Colombo. While they were at home, the army had entered the house. They didn't wait for permission, they just intruded the house. My relatives were watching Rajapakshe's speech. So the army was happy! They stayed in the house for 30 min and left. According to my relatives, depending on the mood of army men, anything can happen to tamils. This incident is an indication as how Tamils are treated by the Sinhala racist government!//

கொடுமையாக இருக்கிறது..

//I also heard another shocking thing from them. They said the 3000 Indian army men who went to SL during the SAARC meet didn't come back. They are fighting alongwith SL army against LTTE.//

உண்மையா என்று தெரியவில்லையே.. ஆனால் அனுப்பினாலும் அனுப்பியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது நேற்றைய பிரணாப் முகர்ஜியின் பேச்சைக் கேள்விப்பட்ட பிறகு..

//It is the reponsibility of all Tamils in TN to work towards a common goal of wiping out Congress from TN. - Krishnamoorthy.//

பார்க்கலாம் ஸார்.. அது எங்களுடைய தமிழ்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது.. பார்ப்போம்..

வருகைக்கும், பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
தங்கள் கட்டுபாடுகளில் இருந்து மக்கள் வெளியேறுவதை விரும்பாத புலிகள் மக்கள் கூட்டத்தோடு ஓரு பெண் புலியை அனுப்பி குண்டை வெடிக்க பண்ணியுள்ளனர். மக்கள் மீது புலிகளுக்கு என்றுமே அக்கறை இருந்தது இல்லை.
http://thesamnet.co.uk/?p=7330//

கேள்விப்பட்டேன்.. படித்தேன்.. வேதனையாக உள்ளது..

இதன் விளைவை அனுபவிக்கப் போவது என்னவோ அப்பாவி பொதுமக்கள்தான்..

என்ன செய்ய..? யாரை நோவுவது..? இருவருமே அவனை மொதல்ல நிறுத்தச் சொல்லு என்றுதான் சொல்கிறார்கள்..

வெறுப்பாக உள்ளது..

Anonymous said...

//அப்போ புலி ஆதரவாளர்கள்தான் மைனஸ் குத்து குத்துறாங்கன்னு சொல்றியா அனானி..
வேறு யார் மைனஸ் குத்துவது? கவனித்து பாருங்கள் உப்பு சப்பில்லாத பதிவுகளுக்கெல்லாம் புலி, பிரபாகரன் என்று புகழ்ந்திருப்பதனால் என்னதாய் பிளஸ் குத்து விழுந்துள்ளது.
//இதுல புலியை பத்தி நான் ஒண்ணுமே சொல்லலியே.. அப்புறம் எப்படி..?//
சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

Anonymous said...

மன்னிக்க வேண்டும் என் ரத்தங்களே......... மன்னிக்க வேண்டும்.....

உலக தமிழ் தலைவனின் நிலை :

1. எதிர் கட்சி யா இருக்கும் போது : போராட்டம், பொது கூட்டம், உண்ணா விரதம் எல்லாம்
2. ஆளுங் கட்சி யா இருக்கும் போது : வெறும் அறிக்கை, தீர்மானம் ... எல்லாம் காகிதத்தில் மட்டுமே. இவர் எண்ணம் எல்லாம் ஆட்சி, பதவி, பணம், குடும்பம், சொத்து மட்டுமே....
3. இவர் மிக பெரிய நடிகர் .... ராஜா தந்திரி ...
4. இவருக்கு இப்போதைய பட்டம் : தமிழின துரோகி .....

புரட்சி தலைவி நிலை ; தொழில் செய்ய நல்ல இடம் தமிழ் நாடு. வந்தமா ... சம்பதிச்சம ... எம். ஜி.ர படத்த தேர்தல் முன்னாடி காமிச்சி ஒட்டு வங்குனமா ... அவ்ளோ தான். இவருக்கு தமிழர் பத்தி கொஞ்சம் கூட எள் அளவும் எண்ணம் இல்லை. மேல் தட்டு மகாராணிக்கு மக்கள் கஷ்டம் எப்படி புரியும் ?.


அன்னை சோனியா : கணவனை கொன்றதுக்கு ஒரு இனத்தையே அழிக்கிறார் இவர் என எல்லோரும் சொல்வதற்கு ஏற்ப இந்திய உதவி செய்கிறது இலங்கைக்கு ....

காங்கிரஸ்காரர்கள் நிலை : இவர்கள் தமிழன் தனா இல்லை வேற்று நாட்டவரா இல்லை வேற்று மாநிலத்தை சேர்ந்தவரா ? கொஞ்சம் கூட உணர்ச்சி இல்லாமல் .. வெறும் பதவி காக எல்ல வற்றையும் விட்டு கொடுத்து .... ச்ச .... இதில் மேடை பேச்சு வேறு ... மக்களை திசை திருப

்ப பேரணி வேறு ... காந்தி யுன் காங்கிரஸ் இவ்வளவு கேவல படுத்து .... பதவி மட்டுமா இவர்கள் குறி...
தமிழன் வெக்க பட வேண்டிய நிலை , கேவல பட வேண்டிய நிலை .......

முட்டாள் தமிழன் ...செம்பரி ஆடாய் வெறும் சோற்றுக்கும், சாராயத்திற்கும் கொடி பிடிக்கும் வரை .....நம் தலையை செருப்பாய் யார் வேணுமானாலும் அணிவார்கள் .... அவர்களை சொல்லி குத்தமில்லை ....


மன்னிக்க வேண்டும் என் ரத்தங்களே......... மன்னிக்க வேண்டும்.....

முட்டாள் தமிழன்

Anonymous said...

இலங்கை தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி கேட்டுள்ளார் அப்பாவி தமிழ்மக்களை விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, யப்பான், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் விடுதலைப் புலிகளை வேண்டியுள்ளன. தமிழ்நாடு விடுதலைப் புலிகளிடம் இத்தகைய வேண்டுகோள்களை விடுக்கவில்லை. அதைவிடுத்து அவர்கள் இன்றும் வெளியிட்டுள்ள முட்டாள்தனமான அறிக்கை அதிர்ச்சியைத் தருகிறது என்கிறார். நியாயம் தானே. ஏங்க இப்படி? இலங்கை தமிழரை வைத்து ஒரு நாடகம்தானே தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள்.

Anonymous said...

http://www.parliamentlive.tv/Main/VideoPlayer.aspx?meetingId=3258&st=13:23:02

Please watch it.
-Krishnamoorthy

உண்மைத்தமிழன் said...

///அப்போ புலி ஆதரவாளர்கள்தான் மைனஸ் குத்து குத்துறாங்கன்னு சொல்றியா அனானி..//
வேறு யார் மைனஸ் குத்துவது? கவனித்து பாருங்கள். உப்பு சப்பில்லாத பதிவுகளுக்கெல்லாம் புலி, பிரபாகரன் என்று புகழ்ந்திருப்பதனால் என்னதாய் பிளஸ் குத்து விழுந்துள்ளது.///

அந்த அளவுக்கு நான் இந்த விஷயத்தை அவதானிக்கவில்லை.

///இதுல புலியை பத்தி நான் ஒண்ணுமே சொல்லலியே.. அப்புறம் எப்படி..?//
சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.///

முருகா.. எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பயபுள்ளைக..?

தகவலுக்கு நன்றி அனானியாரே..

உண்மைத்தமிழன் said...

//முட்டாள் தமிழன் said...
மன்னிக்க வேண்டும் என் ரத்தங்களே. மன்னிக்க வேண்டும்.
உலக தமிழ் தலைவனின் நிலை :
1. எதிர் கட்சியா இருக்கும்போது : போராட்டம், பொதுகூட்டம், உண்ணா விரதம் எல்லாம்..
2. ஆளுங் கட்சியா இருக்கும்போது: வெறும் அறிக்கை, தீர்மானம். எல்லாம் காகிதத்தில் மட்டுமே. இவர் எண்ணம் எல்லாம் ஆட்சி, பதவி, பணம், குடும்பம், சொத்து மட்டுமே.
3. இவர் மிக பெரிய நடிகர் .... ராஜா தந்திரி.
4. இவருக்கு இப்போதைய பட்டம்: தமிழின துரோகி.
புரட்சி தலைவி நிலை ; தொழில் செய்ய நல்ல இடம் தமிழ் நாடு. வந்தமா, சம்பதிச்சம, எம்.ஜி.ர படத்த தேர்தல் முன்னாடி காமிச்சி ஒட்டு வங்குனமா, அவ்ளோதான். இவருக்கு தமிழர் பத்தி கொஞ்சம்கூட எள் அளவும் எண்ணம் இல்லை. மேல் தட்டு மகாராணிக்கு மக்கள் கஷ்டம் எப்படி புரியும்?
அன்னை சோனியா : கணவனை கொன்றதுக்கு ஒரு இனத்தையே அழிக்கிறார் இவர் என எல்லோரும் சொல்வதற்கு ஏற்ப இந்திய உதவி செய்கிறது இலங்கைக்கு.
காங்கிரஸ்காரர்கள் நிலை: இவர்கள் தமிழன்தனா இல்லை, வேற்று நாட்டவரா இல்லை வேற்று மாநிலத்தை சேர்ந்தவரா? கொஞ்சம்கூட உணர்ச்சி இல்லாமல்.. வெறும் பதவி காக எல்லவற்றையும் விட்டு கொடுத்து, ச்ச .... இதில் மேடை பேச்சு வேறு ... மக்களை திசை திருபப பேரணி வேறு ... காந்தியுன் காங்கிரஸ் இவ்வளவு கேவலபடுத்து .... பதவி மட்டுமா இவர்கள் குறி... தமிழன் வெக்க பட வேண்டிய நிலை , கேவல பட வேண்டிய நிலை..
முட்டாள் தமிழன் ...செம்பரி ஆடாய் வெறும் சோற்றுக்கும், சாராயத்திற்கும் கொடி பிடிக்கும் வரை நம் தலையை செருப்பாய் யார் வேணுமானாலும் அணிவார்கள் .... அவர்களை சொல்லி குத்தமில்லை.
மன்னிக்க வேண்டும் என் ரத்தங்களே மன்னிக்க வேண்டும்.....
முட்டாள் தமிழன்//

முட்டாள் தமிழன் ஸார்..

நீங்கள் சொன்ன அனைத்துமே மறுக்க முடியாத உண்மைகள்..

தமிழ், தமிழன் என்று சொல்லிக் கொண்டு அனைவரும் தமிழகத்து மக்களை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்..

தமிழன் விழித்துக் கொள்ளவில்லையெனில்..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
இலங்கை தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி கேட்டுள்ளார் அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, யப்பான், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் விடுதலைப் புலிகளை வேண்டியுள்ளன. தமிழ்நாடு விடுதலைப் புலிகளிடம் இத்தகைய வேண்டுகோள்களை விடுக்கவில்லை. அதை விடுத்து அவர்கள் இன்றும் வெளியிட்டுள்ள முட்டாள்தனமான அறிக்கை அதிர்ச்சியைத் தருகிறது என்கிறார். நியாயம்தானே. ஏங்க இப்படி? இலங்கை தமிழரை வைத்து ஒரு நாடகம்தானே தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள்.//

இதில் என்ன சந்தேகம்..? எங்கட நாட்டு அரசியல்வியாதிகளுக்கு ஈழப் பிரச்சினை எப்போதுமே பயன்படுத்திக் கொள்ள உதவும் ஒரு கருவி மட்டுமே..

உணர்வுகளை மிக எளிதாகத் தூண்டிவிடுவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களுக்குக் காரியம் முடிந்ததும் மறந்தும் விடுவார்கள்.

இப்போது தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன் பின்பு பாருங்கள்.. என்னென்ன நடக்கிறது என்று..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
http://www.parliamentlive.tv/Main/VideoPlayer.aspx?meetingId=3258&st=13:23:02
Please watch it.
Krishnamoorthy//

கிருஷ்ணமூர்த்தி ஸார்..

எனது கணினியில் ஏனோ இது ஓப்பன் ஆக மறுக்கிறது. என்ன என்று தெரியவில்லை..

தாங்களே சொல்லிவிடுங்களேன் என்னவென்று..?

உண்மைத்தமிழன் said...

இதோ இங்கே சென்னையில் மற்றுமொரு தமிழன், அமரேசன் என்னும் நபர் தீக்குளித்து மாண்டுள்ளார்.

தமிழ்நாட்டிலேயே இதுவரையில் 4 பேரும், மலேசியாவில் ஈழத் தமிழர் ஒருவராக மொத்தம் 5 பேர் தங்கள் இன்னுயிரைப் பொசுக்கிக் கொண்டுள்ளார்கள்.

இந்தக் கொடூரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் அனைவரும் கோருகிறோம்..

முதலில் எதிரிகள் யார் என்று தெரியாமலேயே நாம் மோதக் கூடாது. கண்ணுக்குத் தெரியாமல் எதிரிகள் நம்மைச் சூழ்ந்திருக்கும்போது முதலில் யார், யாரென்று அவதானித்துவிட்டு பின்புதான் நாம் போரைத் துவக்க வேண்டும். வேறு வழியில்லை..

தமிழ் நெஞ்சங்களும், சொந்தங்களும் கொஞ்சம் யோசிக்கட்டும்..

Anonymous said...

I used google chrome to watch this. Just try with explorer, firefox and Chrome. One of them will work! I want you to watch it, because its a good debate. It si 90 min debate, but worth watching. Krishnamoorthy

Anonymous said...

It is a video of the debate in UK Parliament. All the members unanimously wanted immediate ceasefire. The key points mentioned by the members of house of commons were

1. The SL government labels all those who support tamils as Terrorist!
2. If LTTE lay down the arms, who will be responsible for their safety?
3. The people don't want to leave the conflict zone because they feel insecure in the government controlled area.
4. How can the peace process start, when the LTTE are proscribed?
5. The SL must be removed from the commonwealth.
6. UK must work with EU and USA to move a resolution in UN. Although, it will be opposed by China. It is Uk's responsibility to convince China and request it to support the resolution against SL.
7. Bring economic sanction against the SL.
8. The debate fully blamed the SL, which was drastically different from the previous debate, few months ago.

All of them said that just strong words in the House of Coomons is not sufficient and there has to be action. Interestingly, they also mentioned that India has ro play active role. I felt very bad while watching the debate. The westeners are so worried about the suffering tamils, but the Government of India is not. -Krishnamoorthy

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
I used google chrome to watch this. Just try with explorer, firefox and Chrome. One of them will work! I want you to watch it, because its a good debate. It si 90 min debate, but worth watching. Krishnamoorthy//

கிருஷ்ணமூர்த்தி ஸார்..

என்னுடைய கணினி மிகவும் குறைந்த வசதியுடையது.. இத்தளம் திறப்பதற்கே 10 நிமிடங்களாகிவிட்டது.

நீங்கள் சொல்லும் இந்தச் செய்தியினை டவுன்லோடு செய்துதான் பார்க்க வேண்டும். அப்படியே நிறுத்திப் பார்ப்பதற்கு ஒரு நாளாகிவிடும்..

நேரமிருக்கும்போது செய்கிறேன்.. தங்களது தகவலுக்கு நன்றி..