11-08-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் திரு.ஹமீத் அன்சாரி, ஒரு பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குடும்பத்தில் உ.பி. மாநிலத்தில் உள்ள காசியாப்பூரில் 1937-ம் ண்டு ஏப்ரல் 1-ம் தேதி பிறந்தவர்.
உத்திரப்பிரதேசத்தில் பிறந்தாலும், வளர்ந்தது எல்லாமே பிற மாநிலங்களில்தான். சிம்லாவில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார்.
1961-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி (IFS) தேர்வில் வெற்றி பெற்று வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு குடியரசு, ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றியுள்ளார்.
இவரது சிறந்த சேவைகளைப் பாராட்டி 1984-ம் ஆண்டில் 'பத்மஸ்ரீ' பட்டம் அவருக்குக் கிடைத்தது.
கடந்த 2000-வது ஆண்டு மே மாதம் முதல் 2002 மார்ச் மாதம் வரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றினார்.
சிறந்த ராஜதந்திரியும் கல்வியாளருமான ஹமீத் அன்சாரி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஈரான், ஈராக் உள்ளிட்ட மேற்காசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி என்பது பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
2006-ம் ஆண்டில் காஷ்மீர் தொடர்பான 2-வது வட்டமேஜை மாநாடு டெல்லியில் நடந்தது. இதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் இவர்தான். 2007-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த காஷ்மீர் தொடர்பான 3-வது வட்ட மேஜை மாநாட்டின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும், இவரது லோசனைப்படிதான் இயற்றப்பட்டனவாம்.
மேலும், காஷ்மீர் இந்துக்களை மீண்டும் அங்கு குடியமர்த்தவும் பெருமுயற்சி செய்து வந்த ஹமீத் அன்சாரி, கடந்தாண்டு மார்ச் 6-ம் தேதி முதல் தற்போது வரையிலும் தேசிய சிறுபான்மைக் கமிஷன் தலைவராக பணியாற்றி வந்தவர்.
தற்போது மாநிலங்களவைத் தலைவராகவும், இந்தியத் துணை ஜனாதிபதியாகவும் பதவியேற்க உள்ளார்.
வாழ்த்துவோம்..
|
Tweet |
3 comments:
உண்மை தமிழரே,
இது உண்மையாக உங்களின் பதிவுதானா? அன்சாரியை பற்றி சோமாறிகள் எதுவும் வாந்தி எடுக்கவில்லையா?
அருண்மொழி
மாற்றுக் கருத்து கொண்டவர்களை அநாகரிகமாக அழைப்பது தவறு. உங்களுடைய 'சோமாறி' என்கிற வார்த்தை என்னையும் சேர்த்து குறிப்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்.
திரு.ஹமீத் அன்சாரி சுமார் 35 ஆண்டு காலமாக வெளிநாடுகளிலேயே பணியில் இருந்துவிட்டதால் உள் நாட்டில் அவரால் எவ்வித சர்ச்சையும் இதுவரையில்லை.
வந்தாலும் உடனே தெரிவிக்கிறேன்.
See who owns multiply.com or any other website:
http://whois.domaintasks.com/multiply.com
Post a Comment