எங்கே செல்கிறார்கள் மாணவர்கள்..?

25-08-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது எனது வீடு இருந்த தெரு முழுவதும் வீட்டு வாசலில் அந்தந்த வீட்டுப் பெண்கள் குசுகுசுவென்று பேசியபடியே நின்று கொண்டிருந்தார்கள்.

வீட்டு வாசலில் நின்று அட்டெண்டெண்ஸ் கொடுத்துக் கொண்டிருந்த எனது அக்காவிடம் என்ன விஷயம் என்று கேட்டேன். "நம்ம கெளரியம்மா வீடு இருக்குல்லே. அதுல ஒரு டாக்டர் குடி வந்திருக்கார்.. இப்பத்தான் சாமான்லாம் வந்து இறங்குச்சு.." என்றார். அப்போதைய எனது வயதில் அது சாதாரண ஒரு விஷயம் என்றாலும், அதன் பின் அந்தத் தெருவிலும், என் வீட்டிலும் அந்த வீட்டைப் பற்றியும், அந்த டாக்டரைப் பற்றியும் பேசப்பட்ட பேச்சுக்கள் ஏதோ வானத்திலிருந்து வந்த ஒருவர்தான் அந்த டாக்டர் என்பதைப் போல் இருந்தது.

நாளாக, நாளாக அந்த டாக்டர் தொழில் மீதும், டாக்டர்கள் மீதும் சமூகத்தின் மிடில் கிளாஸ் மன்னர்களுக்கு இருக்கின்ற மரியாதையும், மதிப்பும் தெரிந்தது. ஒரு மருத்துவரை நாடி வருகின்ற சாமான்யனுக்கு அம்மருத்துவரே தெய்வம். அப்படித்தான் அவனும் நினைக்கின்றான். அரசு பொது மருத்துவமனைகளுக்குச் சென்று பாருங்கள்.. கண் கூடாகப் பார்க்கலாம்..

அந்த வெள்ளை கோட்டுக்கு இருக்கின்ற மரியாதையை மருத்துவமனைகளில் பார்த்தால், இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம் மனதில் தோன்றும்..

தெய்வத்திற்கு அடுத்த நிலை தெய்வமாகத் திகழும் மருத்துவத் தொழிலுக்கு இப்போது என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. வருங்கால இந்திய இளைஞர்கள் அதைப் புறக்கணிக்கவும் செய்கிறார்கள் என்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

இன்றோ, நாளையோ சாகக்கூடிய நிலையில் இருப்பவர்கள்கூட இன்றைக்கும் தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காமல் போய்விட்டதை அங்கலாய்க்காமல் இருப்பதில்லை. அவ்வளவு தூரம் நுழையவே கடினமான கல்லூரி மருத்துவக் கல்லூரி.. முடியவே முடியாது என்று கையில் காசில்லாமல் சத்தியம் செய்தவர்களே, இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு இன்றைக்கு அதே கையால் வாயைப் பொத்திக் கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார்கள்.

இந்தாண்டு ப்ளஸ்டூ முடித்து மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வான மாணவர்களில் 58 பேர் டாக்டர் சீட் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பொறியியல் கல்லூரிகளுக்குத் தாவியிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றபோது இதை நம்பலாமா வேண்டாமா என்று என் மனது பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறது.

அப்படியென்ன மருத்துவப் படிப்புக்கு மவுசு குறைவு என்று பார்த்தால், கரன்ஸி நோட்டை மையமாக வைத்துத்தான் இந்த இடப்பெயர்ச்சி என்பது தெரிகிறது.

டாக்டர் படிப்பு ஐந்தரை வருடங்கள். முடித்துவிட்டு ஏதாவது ஒரு மருத்துவனையில் உதவி மருத்துவராகச் சேர வேண்டும். அல்லது தனியாக மருத்துவமனை வைக்கலாம். தனியாக வைத்தால் இப்போது தெருவுக்குத் தெரு மருத்துவர்களைப் போல், தெருவுக்குத் தெரு மருந்து கடைகளும் வந்துவிட்டன.

முன்பெல்லாம் மருந்துகளை மட்டுமே விற்றுக் கொண்டிருந்த மருந்து கடைகள் இப்போது மருத்துவர்களுக்கு கஷ்டம் வைக்காமல் தாங்களே பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் மருத்துவம் பார்க்கத் தொடங்கிவிட்டன. மருந்து கடைகளிலேயே தன் நோயைச் சொல்லி ஒரு மாத்திரையையோ, டானிக்கையோ வாங்கிக் கொண்டு வீடு செல்கிறது இன்றைய இளைய சமுதாயம். நேரத்திற்கும் நேரம் மிச்சம். பணத்திற்கு பணமும் மிச்சம் என்று இதற்கும் காரணம் சொல்கிறது அவசர யுகம்.

தனியாக மருத்துவமனை வைத்தால் மெட்ரோபாலிட்டன் நகர்களின் மத்தியப் பகுதிகளில் அதிகப்பட்சம் 50 முதல் 150 வரை கன்ஸல்டிங் பீஸ் வாங்கலாம். கிடைக்கும். கொஞ்சம் ஒதுக்குப்புறமாகச் சென்றால் 50 ரூபாயை டாக்டர்தான் கொடுத்து தன் மருத்துவமனைக்கு ஆள் பிடிக்க வேண்டும். ஆங்காங்கே 10, 20, 30 என்று புடவை கடை வியாபாரம் போல் ரேட்டைக் குறைத்துக் கொண்டு ஸ்டதெஸ்கோப்பைக் கையில் எடுத்தும் மருத்துவர்கள் அதிகம் உள்ளனர்.

இவர்களுக்கு ஈடு கொடுத்து மருத்துவம் பார்க்க வேண்டுமெனில் 5 ரூபாய் கொடுத்தால்கூட அதை கோடியாக நினைத்து வாங்கினால்தான் அடுத்த நாளும் அந்த நோயாளி வருவார். இல்லையெனில் அந்த நோயாளியின் காம்பவுண்டில் குடியிருக்கும் ஒருவரும் வர மாட்டார்கள். பற்ற வைப்பதில் இந்த விஷயத்தில் மட்டும் மக்கள் ஒருவருக்கொருவர் வஞ்சகம் செய்வதில்லை.

ஒரு நாளைக்கு 10 பேர் வந்தாலும் அதிகபட்சம் 200 அல்லது 300 ரூபாய் தேறும். சில நாட்கள் அதுவும் இல்லை எனும்பட்சத்தில் ஒரு சாதாரண சராசரி மருத்துவரின் மாத வருமானம் அதிகபட்சம் 7000 ரூபாயிலிருந்து 9000 ரூபாய் வரைக்கும் வரும்.

அரசு மருத்துவமனை மருத்துவர் தேர்வுக்கு நுழைவுத் தேர்வு உண்டு. இதில் மதிப்பெண்ணே பிரதானம் என்பதால் போட்டிகள் அதிகம். தேர்வானாலும் சம்பளம் என்னவோ 15,000 ரூபாய்தான். மாலை வேளைகளில் இந்த மருத்துவர்களும் கிளினீக் வைத்தாலும்கூட ஒரு 9000 ரூபாய் சேர்த்து மொத்தம் 24000 என்று வைத்துக் கொள்ளலாம்..

அது சரி.. எத்தனையோ மருத்துவர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்களே? அது எப்படி? அவர்கள் மேற்படிப்பை முடிக்கிறார்கள். மேலும், மேலும் ஒரு குறிப்பிட்டத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு நிபுணர்களாக மாறுகிறார்கள். மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான இடங்களும் மருத்துவக் கல்லூரிகளில் குறைவு. இதற்கும் பலத்த போட்டிகள் உண்டு. நுழைவுத் தேர்வும் உண்டு. ஜெயிக்க வேண்டுமே.. ஈஸியாக ஜெயிக்கலாம் என்பதற்கு அதென்ன கந்த சஷ்டி கவசமா.. தினமும் காலை எழுந்து மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கு..

ஒவ்வொரு புத்தகமும் தலைக்கு வைத்துத் தூங்கலாம் என்பதைப் போல் அத்தனை கனமாக உள்ளன. எப்படி படிக்கிறார்களோ என்பதைவிட எப்படித் தூக்குகிறார்கள் என்றே நான் நினைத்துள்ளேன்.

சில மருத்துவமனைகளில் கூட்டம் அலை பாய.. சிலவற்றில் காத்தாடும். எல்லாவற்றிற்கும் ஒரு ராசி உண்டு என்பார்கள். இந்த மருத்துவத் தொழிலில் மட்டுமே கைராசி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனது இளம் பிராயத்தில் எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர் வீரமணியும் அதே வகைப்பாட்டில் வந்தவர்தான். இவரிடம் சிகிச்சை பெற 15 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் கிராமத்தில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

இந்த ராசிக்காரர் என்ற பெயர் அனைவருக்கும் கிடைத்துவிடாதே.. "ஏதோ எமதர்மராஜனுக்கு இந்த டாக்டர் மச்சான் போல இருக்கு. இவர்கிட்ட வந்தா எமன் இப்போதைக்கு பக்கத்துலேயே வர மாட்டான்.." என்று நினைத்துத்தான் அனைவரும் தத்தமது கைராசி மருத்துவர்களிடம் ஓடுகிறார்கள். ஒரு நாள் அந்த கைராசிக்காரரே தனது மச்சானிடம் 'போய் சேர்ந்த' பிறகு 'ஏதோ சொத்து தகராறு ஆயிருச்சாம். எமன் முந்திக்கிட்டான்'னு என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு அடுத்த கைராசி பட்டத்தை யாருக்குக் கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பிக்கிறது பொதுஜனம். இதுதான் நம் தமிழகத்தின் எல்லா ஊரிலும் நடக்கும் சாதாரண விஷயம்.

இன்னும் சில பணக்கார மருத்துவர்கள், பரம்பரை மருத்துவர்கள் பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி ஆஸ்பத்திரியை கட்டி வைத்துக் கொண்டு சாதாரண ஊசிக்கே முன்னூறு ரூபாய் கலெக்ஷன் செய்து கல்லாப் பெட்டியை நிரப்பிவிடுவார்கள். இன்னும் சிலர் உலகத்திலேயே என்னை மாதிரி பத்து பேர்தான் இருக்கோம். எல்லாருமே சிவனின் நேரடிப் பார்வையில் பிறந்தவர்கள் என்ற தோற்றத்தில் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிப்பார்கள். தினமும் ஊர், ஊராகப் பறந்து சிகிச்சையளித்துக் கொண்டிருப்பார்கள்.

இவர்களைப் போல் அனைத்து மருத்துவர்களாலும் பறக்கவும் முடியாது. 'கைராசிக்காரன்' என்ற பெயரையும் பெற முடியாது.. ஆனாலும் சமூகத்தில் டாக்டர் என்ற சோஷியல் ஹீரோ பட்டத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவர்கள் படும்பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.

ஆனால் பொறியியல் துறை அப்படியல்லவே. தெளிவாகத் தெரிந்துவிட்டது. அருமைப் புதல்வன் கேம்பஸ் இண்டர்வியூவில் பாஸ் செய்து விட்டாலே போதும், கம்பெனிக்காரனே நேரில் வந்து தூக்கிப் போய் தலையில் வைத்துக் கொள்வான். நாம் அவன் தலையில் உட்கார்ந்து கொள்வதற்கு, அவனே லம்பமாக 40000 ரூபாய் முதல் 50000 ரூபாய்வரைக்கும் எடுத்த எடுப்பிலேயே கொட்டுவான்.. நாமும் மகனை படிக்க வைக்கச் செய்யும் செலவை சீக்கிரத்திலேயே எடுத்துவிடலாம் என்று அனைத்து தகப்பனார்களும் கணக்குப் போட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அதுதான் இந்தக் கட்சித் தாவலுக்குக் காரணம்..

ஒரு பக்கம் அப்பாவி மாணவர்கள், கல்விக் கட்டணம் என்ற அரக்கனைக் கையில் வைத்து பூச்சாண்டி காட்டும் கல்லூரிகள்.. கோடீஸ்வரர்களுக்கு ஒரு போன் தகவலை வைத்தே, கோடிகளை கடனாக கொட்டும் வங்கிகள், ஏழை மாணவர்களின் படிப்புக்கு 68 விதிமுறைகளையும், உத்தரவாதங்களையும் கேட்டுக் கழுத்தைப் பிடிக்கின்றன. அவர்கள் என்ன செய்வார்கள்? போட்ட காசை எடுக்க வேண்டாமா? சாதாரண மக்களை குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?

ஆக மருத்துவம் என்பது உயிர் காக்கும் புனிதமான துறை என்பதிலிருந்து மெல்ல, மெல்ல நழுவி காசு சம்பாதிப்பதில் இரண்டாம் இடம் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. இதனால் யாருக்கு என்ன லாபம்?

ஏற்கெனவே தமிழகத்தின் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கிராமப்புறங்களில் பணியாற்றுவதையே மருத்துவர்கள் முதலில் வெறுக்கிறார்கள். அங்கே தனியாக கிளினீக் வைத்தால் காசு அதிகம் பார்க்க முடியாது என்பது அவர்களது கருத்து.

தமிழகம் என்பது வெறும் மெட்ரோபாலிட்டன் நகரங்கள் மட்டுமல்லவே.. வருசநாட்டின் மலை மீது பத்து கிலோ மீட்டர் கழுதை மீது கற்பாதையில் நடந்து சென்றால்தான் ஒரு கிராமத்தையே அடைய முடியும். அந்த ஊரில் யாருக்கு என்னவோ என்றாலும் தொட்டில் கட்டி அவர்களை பத்து கிலோ மீட்டர் தூரம் தூக்கித்தான் மருத்துவமனைக்குக் கொண்டு வருகிறார்கள்.

அவர்களைக் கேட்டால், "இது நாங்கள் பிறந்த மண். எதற்காக மலையிலிருந்து இறங்கி இங்கே வர வேண்டும். இங்கே வந்தாலும் நாங்கள் என்ன தொழில் செய்ய முடியும்? எங்களது நிலம் மலையில் அல்லவா இருக்கிறது.." என்பார்கள். மருத்துவர்களைக் கேட்டால், "எங்களைப் போல் எங்களது பிள்ளைகளும் மருத்துவர்களாக வேண்டாமா? அதற்காக நன்கு படிக்க வேண்டாமா? அந்தப் படிப்பைக் கற்றுக் கொடுக்கும் நல்ல பள்ளிகளில் சேர்க்க வேண்டாமா? அந்தப் பள்ளிகள் உள்ள ஊர்களில்தானே நான் பணியாற்ற முடியும்.." என்பார்கள். இது சுவாசம் மாதிரி சுழற்சியான ஒரு பதிலாகிவிட்டது. யாரையும் குற்றம் சொல்ல இயல்வதில்லை.

மருத்துவம் என்பது முதலில் ஒரு தொழில் அல்ல.. அது ஒரு தவம் என்று நாம் மட்டும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். மருத்துவம் படிக்கும் மாணவர்களின் முதலாமாண்டில் முதல் வகுப்பே மருத்துவம் சார்ந்த அறிவைப் புகட்டுவதுதானாம். எடுத்த எடுப்பிலேயே நாம் போற்றும் தவத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுத்துவிடுவதால், ஐந்தாண்டுகள்வரை அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களா என்ன..?

இப்போது நாடும், அரசும், மக்களும் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே பல ஊர்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை. இருப்பவர்களும் ராஜினாமா செய்துவிட்டு தனியார் மருத்துவமனைகளுக்குத் தாவிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் பெருத்த சம்பளம்.

இந்த ரீதியில் இன்றைய வருடத்தில் ஆரம்பித்த இந்த தாவல் சம்பவம் தமிழகத்தில் மேலும் தொடருமேயானால், நாடு முழுவதும் மருந்து கடைகள்தான் ஏழை மக்களுக்கு மருத்துவமனைகளாக இருக்கும்.

இதைத் தடுக்க வேண்டுமெனில் முதலில் மாணவப் பருவத்திலிருந்தே மருத்துவத் தொழிலை ஒரு சமூக அக்கறையுள்ள தொழில் என்ற எண்ணத்தை இளைஞர்களுக்குப் புகட்ட வேண்டும். இந்தத் தொழிலில் பணம் கிடைக்காமல் போனாலும், மனிதர்களின் பாராட்டுக்களும், ஆசிகளும் மருத்துவர்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் நல்வாய்ப்பை அவர்களுக்கு விளக்க வேண்டும்.

இந்தச் சமூகம் நல்வழி காண மருத்துவர்கள்தான் பெரும் பங்கு ஆற்றப் போகிறார்கள். அவர்கள்தான் ஏழை மக்களின் நிகழ் கால கடவுள்கள். அந்த வாய்ப்பை ஒரு போதும் நழுவவிடக்கூடாது..

மருத்துவர்கள் செய்வது தொழில் அல்ல. ஒரு கடமை.. அதிலும் இந்தத் தேசத்திற்கு அவர்கள் ஆற்றுகின்ற ஒரு கடமை..

ஆசாத் காஷ்மீரின் நுழைவாயிலில் பனிப்புயலில் காவல் காக்கும் ராணுவ வீரனும், இங்கே ஆண்டிப்பட்டியில் ஒரு ஏழையின் உயிரைக் காப்பாற்ற அவன் வீடு நோக்கி டூவிலரில் பயணிக்கும் ஒரு மருத்துவனும் ஒன்றுதான் என்கின்ற உண்மையை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும்.

தங்களது பிள்ளைகளை மருத்துவப் படிப்பில் சேர்ப்பது நாட்டிற்கு நாம் செய்கின்ற மிகப் பெரும் பெரும் உதவி என்று பெற்றோர்களும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பது, நூறு கோவில்களை ஆண்டாண்டு காலமாகச் சுற்றினாலும் கிடைக்காத புண்ணியத்தைத் தானே தேடி கொள்வது என்ற உண்மையை அம்மருத்துவரும் உணரும் காலம் வந்தால்..

பணமே பிரதானம் என்ற எண்ணமும், உயர்வான வாழ்வே நிசமான வாழ்க்கை என்ற கானல் நீரும் அடுத்து வரும் சுபிட்சம் என்னும் பெரும் மழையில் நிச்சயம் காணாமல் போகும்..

21 comments:

Jobove - Reus said...

very good blog congratulations
regard from Catalonia Spain
thank you

Anonymous said...

வயாகரா வேணுமா? தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் எண் : 100

Nilofer Anbarasu said...

Hi Dude,
I am interested to write blog in tamil....due to lack of pateince in typing the same i posted so far in english. Yesterday I wrote a post in tamil using the Bamini plain font. but when i tried to paste the same in blog's compose page, it displays some scrap things instead of tamil words.....I could not able to trouble shoot this. How u r posting in tamil...do u use any tool.....please let me know...your input will help me a lot.....your help would be greatly appreciated....I posted in comments since I could not find ur mail id in ur blog. Sorry for the degresion...Thanks.

Anonymous said...

ஏன் இந்த பகல் கனவு? பகல் கனவு தான் பலிக்காதில்ல அப்பறம் ஏன்? போய் வேலையப் பாருங்கப்பூ :)

உண்மைத்தமிழன் said...

//Raja said...

Hi Dude,
I am interested to write blog in tamil....due to lack of pateince in typing the same i posted so far in english. Yesterday I wrote a post in tamil using the Bamini plain font. but when i tried to paste the same in blog's compose page, it displays some scrap things instead of tamil words.....I could not able to trouble shoot this. How u r posting in tamil...do u use any tool.....please let me know...your input will help me a lot.....your help would be greatly appreciated....I posted in comments since I could not find ur mail id in ur blog. Sorry for the degresion...Thanks.//
ராஜா பிரதர்,

நீங்கள் தமிழில் டைப் செய்த பிறகு http://www.suratha.com/reader.htm என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அங்கே இரண்டு பெட்டிகள் இருக்கும். முதல் பெட்டியில் தாங்கள் டைப் செய்த தமிழ் மேட்டரை Copy-Paste செய்யுங்கள். பின்பு இரண்டாவது பெட்டிக்கும், முதல் பெட்டிக்கு நடுவில் இருக்கும் இடத்தில் பாமினி என்று எழுதப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கும் வட்டத்தை கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்களது பாமினியில் டைப் செய்த மேட்டர்கள் கீழே உள்ள இரண்டாவது பெட்டியில் யுனிகோட் பாண்ட்டில் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கும். அதற்கும் கீழே இருக்கும் copy என்ற சிறு பெட்டியைக் கிளிக் செய்து பிளாக்கரின் data box-ல் சென்று Paste செய்யுங்கள். இப்போது அங்கே தமிழ் எழுத்துக்கள் அட்சரப் பிசகாமல் தெரியும்.

மேலும் தங்களுக்கு விளக்கம் வேண்டுமெனில் http://tamilblogging.blogspot.com என்ற ந்தத் தளத்திற்குச் சென்றீர்களானால் உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும்.

நேரமிருந்தால் தொலைபேசியில் அழைக்கவும்.

வாழ்க வளமுடன்

நளாயினி said...

ஆதங்கம் புரிகிறது. அதற்கு யார் என்ன செய்யமுடியும். யாராலுமே தீர்வு தரமுடியாத பிரச்சனை. இந்கு சுவிற்சலாந்தில் வருத்தம் வந்துதோ வரேலையோ மாதம் 800 சுவிஸ் பிராங் மருத்துவகாப்புறுதிக்கு கொடுத்தே ஆகவேணும். இதை விட சோகம் வருத்தம் வந்தால் மருத்துவச்செலவில் பத்து வீதம் நாம் கொடுக்க வேணும். பெரிய நோய் என்று இதுவரை இல்லை. அப்பப்போ இந்த காலநிலை மாறுகிறபோது இருமல் வரப்பாக்கும். வைத்தியருக்கு 50 சுவிஸ்பிராங். அது எமது செலவு. அவர் எழுதித்தாற மருந்து 25 சுவிஸ் பிராங். இந்தியன் பணத்தில் 28 ஆயிரம் இந்தின் ரூபா. அதில் பத்துவீதம் நாம் கொடுக்க வேணும். சில மருந்தகளுக்கு காப்புறுதி உதவி கிடையவே கிடையாது. இதை விட இந்த ரென்சனுகளை விட நாமே மருந்து கடைக்கு போனமாம். 25 சுவிஸ் பிராங்கை கொடுத்தமாம் மருந்தை வாங்கினமாம். போச்சுது இருமல். மாதம் மருத்துவகாப்புறுதி குடும்பத்திற்கு 800 சுவிஸ் பிராங் கொடுக்கிற நமக்கே இந்த நிலமை என்றால் கொஞ்சம் யோசித்தே தான் ஆக வேணும். யாரால் என்ன செய்து விட முடியும்.

நளாயினி said...

மருத்துவகாப்புறுதி குடும்பத்திற்கு 800 சுவிஸ் பிராங் கொடுக்கிற நமக்கே (இந்தியன் பணத்தில் 28 ஆயிரம் இந்தின் ரூபா.) 00 maare eluthe vedeen. eppo ok.

Anonymous said...

//ஆசாத் காஷ்மீரின் நுழைவாயிலில் பனிப்புயலில் காவல் காக்கும் ராணுவ வீரனும், இங்கே ஆண்டிப்பட்டியில் ஒரு ஏழையின் உயிரைக் காப்பாற்ற அவன் வீடு நோக்கி டூவிலரில் பயணிக்கும் ஒரு மருத்துவனும் ஒன்றுதான் என்கின்ற உண்மையை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும்.//

உண்மைத்தமிழரே,

இது மேட்டரு.. (இந்த ஒரு பாராவோடேயே முடிச்சிருக்கலாம்)-(((((((((

உண்மைத்தமிழன் said...

//நளாயினி said...
ஆதங்கம் புரிகிறது. அதற்கு யார் என்ன செய்யமுடியும். யாராலுமே தீர்வு தரமுடியாத பிரச்சனை. இந்கு சுவிற்சலாந்தில் வருத்தம் வந்துதோ வரேலையோ மாதம் 800 சுவிஸ் பிராங் மருத்துவகாப்புறுதிக்கு கொடுத்தே ஆகவேணும். இதை விட சோகம் வருத்தம் வந்தால் மருத்துவச்செலவில் பத்து வீதம் நாம் கொடுக்க வேணும். பெரிய நோய் என்று இதுவரை இல்லை. அப்பப்போ இந்த காலநிலை மாறுகிறபோது இருமல் வரப்பாக்கும். வைத்தியருக்கு 50 சுவிஸ்பிராங். அது எமது செலவு. அவர் எழுதித்தாற மருந்து 25 சுவிஸ் பிராங். இந்தியன் பணத்தில் 28 ஆயிரம் இந்தின் ரூபா. அதில் பத்துவீதம் நாம் கொடுக்க வேணும். சில மருந்தகளுக்கு காப்புறுதி உதவி கிடையவே கிடையாது. இதை விட இந்த ரென்சனுகளை விட நாமே மருந்து கடைக்கு போனமாம். 25 சுவிஸ் பிராங்கை கொடுத்தமாம் மருந்தை வாங்கினமாம். போச்சுது இருமல். மாதம் மருத்துவகாப்புறுதி குடும்பத்திற்கு 800 சுவிஸ் பிராங் கொடுக்கிற நமக்கே இந்த நிலமை என்றால் கொஞ்சம் யோசித்தே தான் ஆக வேணும். யாரால் என்ன செய்து விட முடியும்.//

நன்றி நளாயினி அவர்களே..

மருத்துவக் காப்புறுதி என்பது அங்கே கட்டாயமெனில் நல்ல விஷயம்தான்.. பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் காப்பாற்றுமே.. ஆனால் இங்கே அந்த நேரத்தில்தான் மக்கள் கந்துவட்டி, மீட்டர் வட்டி, தின வட்டி என்ற பயங்கரத்தில் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.

அதிலும் இதயம் போன்ற முக்கியமான நோய்களில் மருத்துவர்கள் அவசர அறுவைச் சிகிச்சை என்று சொல்லி பாடாய் படுத்துகிறார்கள். அறுவை சிகிச்சை செய்தும் அவர் பிழைப்பார் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்பதை மட்டும் அவர்கள் சொல்ல மாட்டார்கள். பின்பு விதிவிட்ட வலிதான்.. இங்கே குடும்பம்தான் முக்கியம் என்பதால் பெற்றோர்கள், உடன்பிறந்தோர், உற்றார், உறவினர்களுக்காக அனைவரும் படுகின்ற பாட்டிற்கு மருத்துவத் துறை பணக்காரர்களின் துறை என்பதைப் போல் தெரிகிறது.

தனியார் மருத்துவமனைகளின் வசதியை அரசு மருத்துவமனைகளுக்கும் செய்து கொடுத்தால் மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் அங்கேதான் உள்ளே நுழைந்தாலே கமிஷன்தான்.. ஏழை, எளிய மக்கள் எங்கேதான் செல்வார்கள். இதனால்தான் இன்றைக்கும் கைராசிக்கார மருத்துவர்களின் பீஸ் என்னவென்று விசாரித்துப் பாருங்கள்.. இந்திய ரூபாயில் 10 அல்லது 20தான் இருக்கும்.

உண்மைத்தமிழன் said...

//Tளூ la mதூ Maria - Reus said...
very good blog congratulations. regard from Catalonia Spain. thank you.//

மிக்க நன்றி ஸார். தங்களுடைய வலைப்பூவையும் பார்த்தேன்.. புகைப்படங்களுடன் அசத்தலாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்..

மஞ்சூர் ராசா said...

மிகவும் ஆதங்கத்துடன் எழுதியுள்ளீர்கள். யோசிக்கவேண்டிய விசயம்.
மேலும் தற்போது மருத்துவப்படிப்புக்கு அதிக ஆர்வம் இல்லாததற்கு காரணம் குறைந்தது +2 விற்கு பிறகு பத்துவருடமாவது படிக்கவேண்டும் என்னும் நிலை தான். வெளிநாட்டு பட்டம் ஒன்று இல்லையென்றால் வெளிநாடுகளில் எங்கேயும் வேலை கிடைக்காது.

உள்நாட்டிலெயே எம்டி இல்லையென்றால் மதிப்பில்லை.

அரசு வேலை கிடைக்கவும் நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டும்.

மேலும் ஆரம்பத்தில் கட்டவேண்டிய கட்டணமும் அதிகம்.
இதுப்போன்ற பல பிரச்சினைகளை சமாளிக்கவேண்டும். இதைத்தவிர மிக முக்கியமானது தெருவுக்கு தெரு பொறியியல் கல்லூரிகள் இருப்பது போல மருத்துவ கல்லூரிகளும் அதிகம் இல்லை. அதற்கான படிப்பும் கொஞ்சம் புத்திசாலி மாணவர்களால்தான் படிக்க முடியும் என்ற நிலை.

Unknown said...

உண்மை தமிழன்

நல்ல பதிவு.ஆனால் டாக்டர் தட்டுப்பாடு வந்துவிடுமோ என அச்சம் தெரிவித்திருக்க்றீர்கள்.அது சாத்தியமில்லை.டாக்டர் படிப்புக்கு தனியார் வாங்கும் டொனேஷன் 20 லட்சம்,25 லட்சம் என இருக்கிறது.அதை ஒழித்தாலே டாக்டர் மாணவர் எண்ணீக்கை அதிகரிக்கும்.

அதுபோக அரசு கல்லூரிகளில் இடம் விரிவுபடுத்தப்பட்டால் ஏராளமானோர் சேருவார்கள்.

துளசி கோபால் said...

அருமையான பதிவு.

ஆதங்கம் புரியுது, நீங்க அலசி இருக்கும் விதத்தில்.

ஆனா அவசர யுகத்தில், சீக்கிரம் நாலு காசைத் தேத்தணுமேன்ற ஓட்டம்தான்.

இங்கே மருத்துவக்காப்பு கட்டாயமுன்னு இல்லை. அரசாங்க மருத்துவமனைகளுக்குப் போகலாம்.
ஆனா பல அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளுக்கும், சில அவசியமான அறுவை சிகிச்சைக்கும்
கொஞ்சம் காத்திருக்கணும். வரிசைப்படித்தான் நடக்கும்.

SurveySan said...
This comment has been removed by a blog administrator.
உண்மைத்தமிழன் said...

//மஞ்சூர் ராசா said...
அரசு வேலை கிடைக்கவும் நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டும். மேலும் ஆரம்பத்தில் கட்டவேண்டிய கட்டணமும் அதிகம். இது போன்ற பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும். இதைத் தவிர மிக முக்கியமானது தெருவுக்கு தெரு பொறியியல் கல்லூரிகள் இருப்பது போல மருத்துவ கல்லூரிகளும் அதிகம் இல்லை. அதற்கான படிப்பும் கொஞ்சம் புத்திசாலி மாணவர்களால்தான் படிக்க முடியும் என்ற நிலை.//

உண்மைதான் மஞ்சூர் ஸார்.. கட்டணங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகம்தான்.. ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைவுதான்.. நியாயமானதுதான்.. ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். நான் சொன்னது.. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த முதல் 100 மாணவர்களுக்குள் 58 பேர் அதிலிருந்து விலகியுள்ளார்கள் என்பதுதான். அதான் என்னை யோசிக்க வைத்தது.

உண்மைத்தமிழன் said...

//செல்வன் said...
உண்மை தமிழன் நல்ல பதிவு. ஆனால் டாக்டர் தட்டுப்பாடு வந்துவிடுமோ என அச்சம் தெரிவித்திருக்க்றீர்கள். அது சாத்தியமில்லை. டாக்டர் படிப்புக்கு தனியார் வாங்கும் டொனேஷன் 20 லட்சம், 25 லட்சம் என இருக்கிறது. அதை ஒழித்தாலே டாக்டர் மாணவர் எண்ணீக்கை அதிகரிக்கும். அதுபோக அரசு கல்லூரிகளில் இடம் விரிவுபடுத்தப்பட்டால் ஏராளமானோர் சேருவார்கள்.//

இல்லை செல்வன்..

இப்போதும் அரசு மருத்துவனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்களுக்குத் தட்டுப்பாடு உண்டு. மருத்துவர்கள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களை நியமிக்கக் கோரி மருத்துவத் துறையினர் இப்போதுதான் ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தியுள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும்தான் இவ்வளவு பெரிய டொனேஷன். இதை ஒழிக்க வேண்டுமெனில் அந்தக் கல்லூரிகளினால் முடியவே முடியாது. மருத்துவ உபகரணங்களின் விலை அதிகமாகிக் கொண்டே செல்கிறது ஒரு காரணம் எனில், இசிறந்த மருத்துவர்கள் தங்களுக்கான ஊதியத்தையும் உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள். இப்போதெல்லாம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணி புரிய அகிலஇ இந்திய மருத்துவ கவுன்சில் விதித்துள்ள நிபந்தனைப்படி நியமிக்க வேண்டுமெனில் அந்த மருத்துவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை கொடுத்தே தீர வேண்டும். இதை எங்கிருந்து தனியார் கல்லூரிகள் எடுப்பது? வேறு வழியில்லை. மாணவர்களின் மடியில்தான் கை வைக்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு.. அரசு மருத்துவமனைகள் உள்ள ஊர்களிலெல்லாம் மருத்துவக் கல்லூரிகள் துவக்குவது ஒன்றுதான்..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
அருமையான பதிவு. ஆதங்கம் புரியுது, நீங்க அலசி இருக்கும் விதத்தில். ஆனா அவசர யுகத்தில், சீக்கிரம் நாலு காசைத் தேத்தணுமேன்ற ஓட்டம்தான்.//

வாங்க டீச்சர்.. இதேதான்.. இதைத்தான் எல்லா மாணவர்களும், பெற்றோர்களும் சொல்றாங்க.. இப்ப நீங்களும் சொல்லிட்டீங்க..

//இங்கே மருத்துவக் காப்பு கட்டாயமுன்னு இல்லை. அரசாங்க மருத்துவமனைகளுக்குப் போகலாம். ஆனா பல அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளுக்கும், சில அவசியமான அறுவை சிகிச்சைக்கும் கொஞ்சம் காத்திருக்கணும். வரிசைப்படித்தான் நடக்கும்.//

வரிசைப்படிதான் நடக்கும்னா பரவாயில்லை.. ஆனா இங்கே அப்படியில்லே.. சிபாரிசு கடிதத்தோட வந்தா இன்னிக்கு மதியமே ஆபரேஷன்தான்..

அப்பாடா.. அடுத்து ஒரு பதிவுக்கு டீச்சர் மேட்டர் கொடுத்திட்டாங்க.. வாழ்க..

Nilofer Anbarasu said...

உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.

Anonymous said...

sir,

ur post is totally relevant and needs immediate attention for reasons:
there will be big shortfall in doctors i.e the backbone of the society may bend badly if not break.
today's strike in aiims also has relevance to ur post, as doctors saying its their birthright to go to foreign..which every aspiring parent/son want..
maybe the govt to recoganize the alternate to english medicine and provide help for its survival in rural/urban areas..
also govt to plan & pay well rural/urban doctors to motivate them to continue their service..
dr.anbumani to pay heed to these matters urgently

anon

Agathiyan John Benedict said...

முழுவதும் படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். எல்லோரும் டாக்டரிலிருந்து இஞ்சினியருக்கு மாறுவதாக ஒரு தகவல் சொல்கிறீர்கள். கேட்க புதிதாக இருந்தது. பாப்போம் எவ்வளவு தூரம் போகுதுன்னு...

abeer ahmed said...

See who owns shopping.com or any other website:
http://whois.domaintasks.com/shopping.com