உதயம் NH4 - சினிமா விமர்சனம்

24-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உண்மையா இந்தப் படத்துக்குத்தான் கெளரவம்ன்னு பேரு வைச்சிருக்கணும்.. கெளரவக் கொலைக்கான அத்தனை அம்சங்களும் இந்தப் படத்துல இருக்கு..!




பெரிய அரசியல்வாதி, கோடீஸ்வரரின் மகளான ஹீரோயினை, சாதா ஹீரோ சித்தார்த் லவ் பண்றாரு.. பெங்களூர்ல இருந்து சென்னைக்கு கூட்டிட்டு போயி கல்யாணம் பண்ண பிளான் பண்றாரு.. கோடீஸ்வர அரசியல்வாதி அதனைத் தடுக்க நினைக்கிறாரு.. சித்தார்த் அதனை முறியடிச்சாரா இல்லையான்றதுதான் படம்..! தேசிய நெடுஞ்சாலையில் தென்னக மாநிலங்களை ஒன்றிணைக்கும் 4-வது புறவழிச் சாலையிலேயே படத்தை எடுத்திருப்பதால் இந்தப் பெயராம்..! 

இந்தியால காலேஜ்ல சேர்றதுன்னா 18 வயசு தொடங்கியிருக்கணும்ன்றது உறுதியான ஒரு விஷயம்.. இதை நல்லா ஞாபகத்துல வைச்சுக்குங்க.. இந்தப் படத்துல ஹீரோவும், ஹீரோயினும் காலேஜ் பைனல் இயர் படிக்கிறாங்களாம்.. ஆனா பொண்ணுக்கு இன்னும் 18 வயசு ஆகலையாம்.. ஓடிப் போற மறுநாள்தான் 18 வயசு முடியுதாம்.. அதுனால அதுக்குள்ள அந்தப் பொண்ணை மீட்டிரணும்னு அப்பன்காரன் அவினாஷ் ஒரு மொள்ளமாரி போலீஸ்காரனுக்கு வேலை கொடுக்குறார்.. தனக்கு டிபார்ட்மெண்ட்ல ஒரு சஸ்பெண்ட்ல இருந்து காப்பாத்தினாரேன்னுட்டு எஃப்.ஐ.ஆர்.கூட போடாம காதலர்களை தேடுறாரு போலீஸ் கே.கே.மேனன்.. தேடுறாரு.. தேடிக்கிட்டே இருக்காரு.. இவங்களும் ஓடுறாங்க.. ஓடுறாங்க.. ஓடிக்கிட்டே இருக்காங்க.. இதுதாங்க படம்..!

ஹீரோ சித்தார்த்துக்கு பேக்கிரவுண்ட்டில் என்ன பெரிய சோகம்ன்னு தெரியலை.. படம் முழுக்கவே இறுக்கமாவே வர்றாரு.. போதாக்குறைக்கு வசனம் வேற மணிரத்னம் ஸ்டைல்லயே பேசுறாரு.. இவர் மட்டுமில்ல.. அத்தனை பேருமே இதே ஸ்டைல்ன்றதால படம் முடியறவரைக்கும் யார் இப்போ டயலாக் பேசுறான்னு கண்டுபிடிக்கவே முடியாம, குத்துமதிப்பா புரிஞ்சுக்க வேண்டியிருக்கு..! கோபம் வர்ற சீன்லேயும் அப்படியேதான் இருக்காரு சித்தார்த்.. லவ் மூடுலேயும் அதே மாதிரிதான்.. எப்பத்தான் இவர் வித்தியாசத்தைக் காட்டுவாருன்னு கடைசிவரைக்கும் காத்திருந்து வேஸ்ட்டானதுதான் மிச்சம்..! 

ஹீரோயின் அம்சமான பொண்ணு. பேரு அஷ்ரிதா ஷெட்டியாம். உருவாக்கிய அந்த ஷெட்டிக்கு ஒரு தேங்க்ஸு..! இந்தப் பொண்ணை எதுக்காக லவ் பண்றாரு.. எப்படி லவ் ஆரம்பிக்குதுன்றதையெல்லாம் அப்பப்போ ஆளாளுக்கு வந்து வந்து சொல்லிட்டுப் போறதால அந்த பீலிங்கே வராம கடைசீல தப்பிச்சிருவாங்களான்றது மட்டும்தான் நினைவுல இருந்தது..!

பொண்ணு நல்ல கலரு.. எந்தக் கோணத்துல பார்த்தாலும் கேமிரால பளிச்சுன்னு இருக்கு.. என்ன அடிக்கடி பப்புலேயே சந்திக்கி வைக்கிறதால  கோப்பையும், கையுமா நிக்குற பொண்ணை ஹீரோயினா நினைக்க முடியலை.. பட்.. டூயட்டுகளில் மட்டும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் கைவண்ணத்தில் கண்ணுக்குள் ஊடுறுவுகிறார் அஷ்ரிதா..! 

பெங்களூரில் என்பதாலோ என்னவோ, இவுங்க காதல் வளர்றதே பப்புக்குள்ளதான்னு கதையை கொண்டு போயிருக்காங்க..! அதுலேயும் மங்களூர் பப்புல இந்து தீவிரவாதக் கும்பல்கள் நுழைஞ்சு அதகளம் செஞ்சதையும் இதுல ஒரு காட்சியா வைச்சிருக்காங்க..! அப்போ அந்தக் கும்பலை அனுப்பினதே அவினாஷுன்னுதான் சொல்றாங்க. ஸோ அவினாஷ் இந்தப் படத்தோட கதைப்படி பஜ்ரங்தள் போன்ற இந்து தீவிரவாத அமைப்போட  தலைவராம்..! இவரேதான் ஒரு இடத்துல சொல்றாரு, “என் பொண்ணை மீட்க முடியலைன்னா அவுங்க ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளிரு.. என் பொண்ணு எனக்கு வேணாம்.. எனக்கு என் கவுரவம்தான் முக்கியம்னு..” - அப்போ தில்லான தலைவருதான்..!

கே.கே.மேனன் சிற்சில ஹிந்தி படங்களில் பார்த்திருக்கிறேன்.. இந்தக் கதைக்கு இவர் எந்த விதத்தில் உதவியிருக்காருன்னு தெரியலை.. தெலுங்குல எடுத்து தமிழ்ல டப்பிங் செஞ்சிருக்கிறதால தமிழ் ரசிகர்கள் இப்போதான் முதல்முறையா இவரை பார்க்குறாங்கன்னு நினைக்கிறேன்.. உண்மையா பிரகாஷ்ராஜ் செஞ்சிருக்க வேண்டிய கேரக்டர்.. தவறி இவர்கிட்ட வந்திருச்சுன்னு நினைக்கிறேன்..!

கை ஒடிஞ்ச நிலைல அரசியல்வாதி அவினாஷுக்காக இந்தக் கேஸ்ல சிரத்தையெடுத்து கடுமையா உழைக்குறாரு.. வீட்ல இருந்து அவரோட காதல் மனைவி மகனோட பேர்த்டே இன்னிக்குன்னு சொல்லி கூப்பிட்டும் கடமை அழைக்கிறதுன்னு சொல்லியே சமாளிக்கிறாரு.. அவங்க ரெண்டு பேரோட செல்போன் பேச்சுலேயே அவங்க குடும்பத்தை பத்தியும், காதலைப் பத்தியும், கல்யாணத்தைப் பத்தியும் சொல்லி.. கிளைமாக்ஸ்ல ஒரு டர்னிங் பாயிண்ட்டை அடிக்க வைச்சிருக்குற திரைக்கதைக்காக வெற்றிமாறனுக்கு ஒரு சபாஷ் போடணும்..!

போலீஸ் கண்ணுலேயே படாமல் தப்பிக்குறதுக்கு நூறு வழியிருந்தும் சினிமாவுக்காக எளிதாகக் கேட்ச்சாகுற மாதிரியான திரைக்கதையையும், கொஞ்சம் கொஞ்சம் சப்பையான காரணத்தைச் சொல்லி மாட்டிக்கிறதும்தான் இந்தப் படத்தோட பேட் மார்க்.. பட்  இதைக்கூட படத்தோட மேக்கிங்குக்காக நாம மன்னிச்சு விட்ரலாம்..! 

கே.கே.மேனன் டிரெயினை பாலோ பண்ணித் துரத்த.. அந்த சேஸிங்கும், அதுக்கப்புறம் ஹீரோயினை சித்தார்த் ரயில்வே டிராக் பக்கத்துல மீட்குற அந்த சேஸிங்கும் பரபரப்புதான்..! இதுல இடைல இடைல குபீர் சிரிப்பை கொடுத்த அந்த சைபர்கிரைம் அப்பாவி கேரக்டரையும் கொஞ்சம் பாராட்டணும்.. “அவன் எதுக்கு ஸார் உங்களுக்கு ஷேவ் பண்ணி விடணும்”ன்ற டயலாக்கை கேட்டு சிரிக்காதவங்களே இருக்க முடியாது..! 

பிற்பாதியில் கொஞ்சம் கொஞ்சம் எடிட்டிங்கில் கையை வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் இறுக்கம் கிடைச்சிருக்கும். கிஷோரின் எடிட்டிங்கும் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலம்..! முன்பே சொன்னது மாதிரி அப்பன் பெத்த பார்ட்டியா இருந்தாலும், பெங்களூர்லேயே இவங்க கல்யாணம் செஞ்சிட்டாலும் எவனும் கேக்கப் போறதில்லை.. 18 வயசு ஆகிட்டதால எந்த அப்பனும் விட்டு வைக்கப் போறதில்லை..! சென்னைக்கு கூட்டிட்டு வந்தர்றதலேயே கோடீஸ்வர அப்பன்கள் வீட்ல சும்மா உக்கார போறதில்லை.. இப்படி இத்தனை கோணங்கள் இருந்தும், தாங்கள் நினைத்த சேஸிங் திரைக்கதையை வைச்சு ஜெயிக்கணும்னு நினைச்ச இவங்க நினைப்புக்கு ஒரு சல்யூட்.. இதுல முக்கால்வாசி ஜெயிச்சிட்டாங்கன்னே சொல்லலாம்..!

கண்டிப்பா படத்தோட கிளைமாக்ஸ்ல கை தட்டாதவங்க யாரும் தியேட்டர்ல இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்..! அப்படியொரு கிளைமாக்ஸ்.. அந்த கிஸ்ஸுக்கு இருக்குற உண்மைத்தனத்துனாலதான் சென்சார்ல அப்படியே விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.. அந்தக் காட்சில கே.கே.மேனன் காட்டுற பீலிங்கும் அந்தக் காட்சியோட ஹிட்டுக்கு ஒரு காரணம்..! வெல்டன் இயக்குநர் மணிமாறன்.. முதல் படத்திலேயே குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறார்.. தொடர்ந்து வித்தியாசமான படங்களை இவர் வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..!

12 comments:

maithriim said...

நான் சியாட்டிலில் திரை அரங்கத்துக்குச் சென்று மக்கள் வராததினால் படம் ரத்து செய்யப்பட்டு இந்தி படம் பார்த்துவிட்டு திரும்பினேன்.

சித்தார்த் எப்பவுமே இப்படியெ நடிக்கிறாரே, பிறகு தனக்கு தமிழில் வாய்ப்பே இல்லை என்று எதற்கு அழ வேண்டும்?

நல்ல விமர்சனம். நான் படம் பார்க்காத குறையைத் தீர்த்து விட்டீர்கள் :-)

amas32

பழமைபேசி said...

எல்லாப் படமும் பார்த்துடுறீங்கண்ணே நீங்க!!

உண்மைத்தமிழன் said...

[[[amas said...

நான் சியாட்டிலில் திரைஅரங்கத்துக்குச் சென்று மக்கள் வராததினால் படம் ரத்து செய்யப்பட்டு இந்தி படம் பார்த்துவிட்டு திரும்பினேன்.]]]

அண்ணே.. அங்கேயும் இதே நிலைமைதானா..? ஆச்சரியமா இருக்கு..! மார்க்கெட் இல்லாதவங்களை வைச்சு படமெடுத்தா என்னாகும்ன்னு தயாரிப்பாளர்கள் உணர்ந்து கொண்டால் சரி..!

[[[சித்தார்த் எப்பவுமே இப்படியெ நடிக்கிறாரே, பிறகு தனக்கு தமிழில் வாய்ப்பே இல்லை என்று எதற்கு அழ வேண்டும்?]]]

இதெல்லாம் கொஞ்ச காலம்தான் ஓடும்.. வித்தியாசம் காட்டலைன்னா வீட்ல உக்கார வேண்டியதுதான்..!

[[[நல்ல விமர்சனம். நான் படம் பார்க்காத குறையைத் தீர்த்து விட்டீர்கள் :-)]]]

நேரம் கிடைத்தால், வாய்ப்பு கிடைத்தால் டிவிடிலயாச்சும் பாருங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

எல்லாப் படமும் பார்த்துடுறீங்கண்ணே நீங்க!!]]]

ஹி.. ஹி.. தொழில் அப்படீண்ணே.. வேலைக்காகவே எல்லா படத்தையும் பார்க்க வேண்டியிருக்கு..!

MANO நாஞ்சில் மனோ said...

அடடா நேற்றைக்கு இந்தப் படத்தை பார்க்காம மிஸ் பண்ணிட்டேனே அண்ணே...இனி டிவிடி"லதான் பார்க்கணும் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

puduvaisiva said...

அண்ணே 'வத்திக்குச்சி' படத்தின் கிளைமாக்ஸ்-இல் 36 பரோட்டோவை கதநாயகன் சாப்பிட்டபின் பஸ்கி மற்றும் அயிட் பார் செய்து எதிரிகளை பந்தாடும் அந்த கிளைமாக்ஸ்க்கு இனையானத இந்த படம் ???

Nondavan said...

//தெலுங்குல எடுத்து தமிழ்ல டப்பிங் செஞ்சிருக்கிறதால தமிழ் ரசிகர்கள் இப்போதான் முதல்முறையா இவரை பார்க்குறாங்கன்னு நினைக்கிறேன்..// டப்பிங் படமாண்ணே...???? தமிழ் இல்லியா...

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

அடடா நேற்றைக்கு இந்தப் படத்தை பார்க்காம மிஸ் பண்ணிட்டேனே அண்ணே...இனி டிவிடி"லதான் பார்க்கணும் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.]]]

கூட்டம் வரலைன்னா இதைத்தான் செய்வாங்க.. வேறென்ன செய்யறது..? அவசியம் டிவிடில பாருங்க தம்பீ..!

உண்மைத்தமிழன் said...

[[[puduvai siva said...

அண்ணே 'வத்திக்குச்சி' படத்தின் கிளைமாக்ஸ்-இல் 36 பரோட்டோவை கதநாயகன் சாப்பிட்ட பின் பஸ்கி மற்றும் அயிட் பார் செய்து எதிரிகளை பந்தாடும் அந்த கிளைமாக்ஸ்க்கு இனையானதா இந்த படம்???]]]

ம்ஹூம்.. இப்படியும் சொல்லலாம்தான்..! ஆனால் வத்திக்குச்சியைவிட மேக்கிங் நன்று..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

//தெலுங்குல எடுத்து தமிழ்ல டப்பிங் செஞ்சிருக்கிறதால தமிழ் ரசிகர்கள் இப்போதான் முதல்முறையா இவரை பார்க்குறாங்கன்னு நினைக்கிறேன்..//

டப்பிங் படமாண்ணே...???? தமிழ் இல்லியா.?]]]

ரெண்டு மொழிலேயும் ஒரே நேரத்துல எடுத்தோம்ன்னு சொல்றாங்க.. நமக்குத்தான் ஒத்துக்க மனசு வரலை..!

joe said...

அண்ணே, உன் ரசனை சரியில்லையே. சப்ப மூக்கு, குண்டு பொண்ணை சூப்பர்னு சொன்னா எப்படி?

உண்மைத்தமிழன் said...

[[[joe said...

அண்ணே, உன் ரசனை சரியில்லையே. சப்ப மூக்கு, குண்டு பொண்ணை சூப்பர்னு சொன்னா எப்படி?]]]

ஒவ்வொருவரின் ரசனையும் வேறு வேறு.. உனக்கு அது.. எனக்கு இது..!