01-04-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பசங்க, வம்சம், மெரீனா என்று வேறு வேறு எளிய கதைகளில் யதார்த்தமான நகைச்சுவையுடன், சுவாரஸ்யமான திரைக்கதையுடன், அழுத்தமான இயக்கத்துடன் நம்மைச் சந்தித்த இயக்குநர் பாண்டிராஜ், தற்போதைய டிரெண்ட்டுக்கு ஏற்றாற்போல் திசைதிரும்பி புல் அண்ட் புல் காமெடி கச்சேரியை கொடுத்திருக்கிறார்..!
இரண்டு மணி 10 நிமிடங்கள் உங்களுக்காக.. அதையும் தாண்டிய கடைசி 10 நிமிடங்கள் எனக்காக இந்தப் படத்துல எடுத்திருக்கிறேன் என்று பேட்டிகளில் கூறிய பாண்டிராஜின் கூற்று சரியானதுதான் என்றாலும், படத்தைக் கொடுத்திருக்கும்விதம் அந்தக் கடைசி பத்து நிமிடத்தை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்..!
இரண்டு வெட்டி ஆபீஸர்கள்.. அரசியலில் நுழைந்து கவுன்சிலராகி பணம் பார்க்க வேண்டும் என்பதே ஆயுட்கால லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்..! அவர்களது கனவு பலித்ததா இல்லையா என்பதுதான் கதை..!
இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் அவர்களை பிரதிபலிக்கும் ஹீரோக்களாக சிவகார்த்திகேயன் மற்றும் விமல். சிவகார்த்திகேயனின் அப்பாவான இயக்குநர் மனோஜ்குமார், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்.. விமலின் அப்பாவான டெல்லி கணேஷ் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும், தன் மகன் சொந்தக் காலில் நின்று வாழ்க்கையில் ஜெயித்துவிட மாட்டானா என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்.. இரண்டு அப்பாக்களின் அறிவுரைகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்க.. வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடத்தின் மூலம் இவர்கள் உண்மையை உணர்ந்து வாழ்க்கையைத் துவங்கும்போது இருவரது குடும்பத்திலும் ஏற்படும் இழப்பையும், சோகத்தையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்..!
இவர்களுக்குள் ஏற்படும் காதலைக்கூட மிக இயல்பாக ஆரம்பித்துவைத்து படம் முழுக்க வரும் நகைச்சுவையில் இவர்களது காதல் கொடுக்கும் டைமிங்சென்ஸ் காமெடியும் படத்துக்கு மிகப் பெரிய பலம்..! இந்தக் காதல் டிராக்குகள்தான் தியேட்டர்களில் அதிகமாகவே கைதட்டலை வாங்குகின்றன..! விமல்-பிந்து மாதவி ஜோடியைவிடவும் சிவகார்த்திகேயன்-ரெஜினா ஜோடி கொஞ்சம் கூடுதலாகவே ஸ்கோர் செஞ்சிருக்காங்க..!
சிறந்த நடிகையாக தெரிய வேண்டுமெனில் சிறந்த இயக்குநரால் ஆட்டுவிக்கப்பட வேண்டும் என்பது சினிமா நியதி. 'கண்ட நாள் முதல்' படத்தில் கேட்பாரற்று கிடந்த ரெஜினாவை இப்போது தமிழகமே பாப்பா என்கிறது..! பாண்டிராஜுக்கு நீதான் தேங்க்ஸ் சொல்லணும் பாப்பூ..! தர்மத்தின் தலைவன் ரஜினி ஸ்டைலில் கார்த்திகேயன் செய்யும் அலப்பறைதான் மிக அதிகம்..! டைமிங்சென்ஸ் உள்ள செய்தித் தொகுப்பாளராகவும் வேலை பார்த்த அனுபவம் இருக்க.. ஏற்ற இறக்கத்துடன் எங்கே கடி ஜோக்காக உருமாறுமோ அதே இடத்தில் அதே பாணியில் வசனங்களை பேசியிருக்கிறார் சிவா.. மிகச் சிறந்த தேர்வு இவர்தான்..!
விமல்.. இனியும் முழித்துக் கொள்ளாவிட்டால் ரொம்பவும் கஷ்டம்தான்..! பிந்துமாதவியிடம் அடி உதை வாங்கிவிட்டு அதனை வெளியில் சொல்லாமல் நாகரிகமாகச் சொல்லி சமாளிக்கின்ற காட்சியில் மட்டுமே இவரை நடிகராகப் பார்க்க முடிந்தது.. இறுதிக் காட்சியில் டெல்லி கணேஷிடம் பேசும்போதுகூடவா அப்படியே இருக்க வேண்டும்..? இது போன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டேயிருந்தாலும், போகப் போக ரசிகர்களுக்கு போரடித்துவிடும்..!
தனது மூலதனமான கண்ணை வைத்தே சீன் வைத்த பாண்டிராஜுக்கு பிந்துமாதவியும் ஒரு தேங்க்ஸ் சொல்லணும்..! நொடியில் இவர்களது பேச்சும், காதலும் வளர்வதும், அதற்கு கண்ணை வைத்தே கொண்டு சென்றிருக்கும் திரைக்கதையும் சூப்பர்..! இவருடைய குடும்பத்தினரின் கேரக்டர் ஸ்கெட்ச்.. பிந்து மாதவியின் அப்பா போடும் கண்டிஷன்கள்.. அவரது அம்மாவின் பேச்சுக்கள் என்று நகைச்சுவையை கலந்து கட்டியடித்திருக்கிறார் இயக்குநர்..!
வீட்டோடு மாப்ளையாகி வேலை வெட்டியில்லாமல் ஊரைச் சுத்தும் சூரி போன்று நாட்டுல நிறைய பேர் இருக்கத்தான் செய்றாங்க..! எப்போதெல்லாம் விமலும், சிவகார்த்திகேயனும் போரடிக்கத் துவங்குகிறார்களோ அப்போதெல்லாம் சூரிதான் இடையில் புகுந்து நம்மையும் சமாளிக்கிறார்.. அவர்களையும் சமாளிக்கிறார்..! மனைவியிடம் 'வாடா' 'போடா' என்ற பேச்சையும் கேட்டுவிட்டு அப்படியும் கடைசியாய் பணத்தை வாங்கிக் கொண்டே வெளியேறும் அந்தப் ‘பொறுப்பு’ள்ள இளைஞன் கேரக்டராகவே இருந்து காட்டியிருக்கிறார் சூரி...!
இவ்வளவு சிறந்த நகைச்சுவை வசனங்களை எழுதும் திறமையுள்ள பாண்டிராஜ் இதனை தேக்கிவைத்துவிடாமல் மீண்டும் தனது நகைச்சுவை ராஜபாட்டையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றே விரும்புகிறேன்.. இதன் உச்சக்கட்ட காமெடி, ஓட்டு எண்ணிக்கை அன்று நடக்கும் அடிதடி காட்சிதான்..! இதைக்கூட இவ்வளவு நகைச்சுவையாக எடுக்க முடியுமா என்று ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்..!
எப்போதெல்லாம் இளைஞர்கள் தியேட்டர்களில் சோர்வடைவார்களோ அந்தந்த இடங்களில் எல்லாம் அவர்களுக்காகவே ஸ்பெஷல் பூஸ்ட்டாக காமெடி வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்..! பாராட்டுக்கள்..! இதேபோல் பிந்து மாதவியும், விமலும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள முனையும் காட்சிகளெல்லாம் வயிறே புண்ணாகிவிட்டது..! எப்படிங்கய்யா இப்படியெல்லாம் ஐடியா வருது..?
மானம், ரோஷம், வெக்கமெல்லாம் நண்பர்களுக்குள் பார்க்கவே கூடாது என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால் எந்தவொரு லாஜிக்கையும் நாமும் பார்க்காமலேயே இருக்கலாம்..! இறுதிக் காட்சியில் மனோஜ்குமாரின் அந்த விபரீத முடிவும், அதன் உண்மைத்தன்மை பற்றி பின்பு விவரிக்கும் காட்சியும் நூறு சீரியல்களுக்கு சமம்.. 500 எபிசோட்களில் சொல்லி முடிக்க வேண்டிய கதையை கடைசி 10 நிமிடங்களில் மட்டுமே சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர்..!
அரசியல் காட்சிகளில் இத்தனை அழுத்தமாக கூட்டத்தைக் கூட்டி படத்தைக் கொடுத்திருக்கும் பாண்டிராஜின் சிரத்தையை பாராட்டத்தான் வேண்டும்..! வனவாசத்தில் வரும் ஒரு காட்சியை இதில் நைஸாக புகுத்தியிருக்கும் பாண்டிராஜுக்கு எனது பாராட்டுக்கள்..! கவுன்சிலராக பிளான்போட்டு ஒவ்வொரு ஓட்டாக கவர் செய்யும் அந்த நகைச்சுவைகள் ரொம்பவே சுவாரஸ்யம்.. இவர்கள் கொடுத்த பில்டப்பை பார்த்தபோது நிஜமாகவே ஜெயித்துவிடுவார்களோ என்ற எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது..! விழுந்தது வெறும் 31 ஓட்டுகள் என்பதையும், அதற்கு விமல் கொடுக்கும் சமாதானத்தையும் இப்போது நினைத்தாலும்..?????
கேர்லெஸ்ஸாக வேட்பாளர் விண்ணப்பத்தை பதிவு செய்திருப்பது.. இதனைத் தெரிந்துகூட விமல் முகத்தில் தெரியும் அந்த சாந்த சொரூபம்.. அதைவிட அதிர்ச்சி..! வேட்பாளர் பரிசீலனையில் வேட்பாளர் உடன் இருக்க வேண்டு்ம் என்பதுகூடவா இவர்களுக்குத் தெரியாது..! நினைத்த மாத்திரத்தில் டாஸ்மாக்கில் பழைய பாட்டில்களை விமல் அண்ட் கோ கையகப்படுத்துவது என்பதெல்லாம் படத்திற்காக திணிக்கப்பட்ட அவசர கதைகள் என்று தெரிவதால் மன்னிக்கலாம்..!
எல்லாம் சரிதான்.. ஆனால் எனக்குள் இந்தப் படம் கொடுத்த ஒரு ஏமாற்றமும் மிகப் பெரியது.. இன்றைய இளைய சமுதாயத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களே மது அருந்துவது பரவி வரும் வேளையில் இப்படி நிமிடத்துக்கு நிமிடம் தண்ணியடிப்பது போன்ற காட்சிகளை வைத்திருக்கத்தான் வேண்டுமா..? அது அவசியம்தானா..? ஏதோ ஒரு காட்சி.. இரண்டு காட்சியென்றால் ஓகே.. படம் முழுவதிலும் அப்படியே என்றால், படம் பார்க்கும் சிறார்களுக்கு இதெல்லாம் சகஜம்தானே என்ற எண்ணமும் வந்துவிடாதா..? கடைசியாக டைட்டில்போடும்போது பாண்டிராஜும் சேர்ந்து தண்ணியடிப்பதுபோல காட்சிகள் வர.. ரொம்பவே வெறுத்துப் போனேன்..! இவ்வளவு சிறந்த நகைச்சுவைப் படத்திற்கு விழுந்த திருஷ்டிப் பொட்டுவை போல இந்தக் காட்சியும் அமைந்துவிட்டது..!
குடியினால் வரும் தீமைகள் பற்றி இரண்டு அப்பன்களுமே படத்தில் பேசவில்லை.. சொல்லவில்லை.. இயக்குநரும் சொல்லவில்லை.. ஆக, குடியை நியாயப்படுத்தும்விதமாக அமைந்துவிட்டது இப்படம்..! இத்தனை குடிகார காட்சிகளைக் கொண்ட இப்படத்திற்கு நியாயமாக ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும்.. ஆனால் ‘யு’ கொடுத்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது சென்சார் போர்டு..! இதற்கு இந்த போர்டு இருந்தாலென்ன..? இல்லாமலேயே போனால்தான் என்ன..?
|
Tweet |
20 comments:
குடிமகன்கள் தான் இப்போ அதிகம்...அதனால் அதிக காட்சிகளை வைத்து இருப்பாங்களோ...
அண்ணாச்சி.... கண்டேன் காதலை என்பது பரத், தமன்னா நடித்த ஹிந்தி ரீமேக் படம்... பாப்பா நடித்தது கண்டநாள் முதல்... நாங்க அப்போல இருந்தே கண்டுக்கினு தான் இருக்கோம்... என்ன புரயோசனம் இயக்குனருங்க கண்டுக்கனுமே...
அண்ணாச்சி,
சென்சார் போர்டு இருந்தா என்ன இல்லாட்டி என்ன , அப்போ மட்டும் யோக்கியமா படம் எடுக்க போறாங்களா?
இல்லை படத்துக்கு விமர்சனம் மட்டும் யோக்கியமா எவனாவது எழுதி இருக்கானா?
எல்லாருமே நாதாரிங்க தான் :-))
என்னையும் சேர்த்து தான்!
#
//நினைத்த மாத்திரத்தில் டாஸ்மாக்கில் பழைய பாட்டில்களை விமல் அண்ட் கோ கையகப்படுத்துவது என்பதெல்லாம் படத்திற்காக திணிக்கப்பட்ட அவசர கதைகள் என்று தெரிவதால் மன்னிக்கலாம்.//
டாஸ்மாக்ல பழைய பாட்டில் எடுக்கிற காண்ராக்ட் ஐ என்னமோ நாசாவுக்கு ராக்கெட் செய்ய காண்ட்ராக்ட் எடுத்தாப்போல சொல்லுறிங்க?
சரக்கு பாட்டில் எடுக்க காண்ட்ராக்ட் விட யாருக்குமே உரிமையில்லை, ஏன் எனில் எல்லா பாட்டிலும் சரக்கு வாங்கினவங்களுக்கே சொந்தம், பாட்டிலுக்கும் சேர்த்து தான் காசு கொடுக்கிறோம்.
உண்மையில டாஸ்மாக்கில் பாட்டில் சேகரிப்பது ஒரு அதிகாரப்பூர்வமற்ற வேலை. இதுக்கெல்லாம் காண்ட்ராக்ட் என டெண்டரே கிடையாது.
ஆனால் பழைய பாட்டில்களை வாங்க என டாஸ்மாக் ஒரு டெண்டர் விடும், அதை வைத்துக்கொண்டு ,எல்லா பாருக்கும் போய் பாட்டில் வாங்குவார்கள்.
ஒவ்வொரு பாரிலும் சேரும் பாட்டில்கள் அந்த பார் ஏலம் எடுத்தவனுக்கும்,அங்கு இருக்கும் டாஸ்மாக் ஊழியருக்கும் சொந்தம், எனவே அவர்கள் வருவாயை பிரித்துக்கொண்டு ,பழைய பாட்டில்கள் வாங்கி ,டாஸ்மாக்கிற்கு விற்க டெண்டர் எடுத்தவனுக்கு கொடுப்பார்கள்.
இப்போ எல்லாம் லோக்கல் ஆளுங்கட்சி ஆட்கள் ஒரு கமிஷன் இதுக்கும் கேட்கிறார்கள். மற்றபடி அதிகாரப்பூர்வ காண்டராக்ட் எல்லாம் இல்லை.
எனவே ஒரு ஊரில் இருக்கும் பார்களில் இருந்து பாட்டில் சேகரிப்பது என்பது குப்பை பொறுக்குவது போலத்தான்.
பார் ஏலம் எடுத்தவன் மற்றும் டாஸ்மாக் ஊழியர் ஒத்துக்கொண்டால் போதும் எல்லா பாட்டிலும் உங்களுக்கு தான்.
நீங்க சொன்னது எல்லாம் ஊரில் இருக்கும் கடைக்கு என சொன்னால் போங்காட்டம், மாநில /மாவட்ட அளவில் என்றாலும் அது கடையில் பாட்டில் சேகரிக்க அல்ல, டாஸ்மாக் நிறுவனத்திற்கு விற்கவே, சேகரிப்பது என்பது தனிச்செயல். ஒவ்வொரு பாட்டிலும் குடிமகனுக்கு சொந்தம், குடிச்சவன் எல்லாம் பாட்டிலை கையோட எடுத்து போயீட்டால் பாரில் ஏது பாட்டில் ,எனவே அப்படி உரிமையில்லாத பாட்டிலுக்கு சேகரிக்க டெண்டர் விட சட்டத்தில் இடமில்லை.
ஹி...ஹி நான் எல்லாம் பாரிலேயே பாட்டிலை ஒரு மூலையில் தூக்கிப்போட்டு உடைத்துவிடுவேன் எவனும் கேட்க முடியாது ,கேட்டால் பாட்டிலுக்கு உனக்க்கும் என்ன சம்பந்தம்னு திருப்பி கேட்போம்ல.இதனால சில பார்களில் இருந்து டிபார் ஆனவன் :-))
[[[கோவை நேரம் said...
குடிமகன்கள்தான் இப்போ அதிகம்... அதனால் அதிக காட்சிகளை வைத்து இருப்பாங்களோ?]]]
எதுக்காக வைச்சிருந்தாலும் சரி.. அது தப்புன்னு சொல்ல வேண்டாமா..? சின்னப் புள்ளைக படத்தை பார்த்தா என்னன்னு நினைப்பாங்க..?
[[[Philosophy Prabhakaran said...
அண்ணாச்சி.
கண்டேன் காதலை என்பது பரத், தமன்னா நடித்த ஹிந்தி ரீமேக் படம். பாப்பா நடித்தது கண்டநாள் முதல். நாங்க அப்போல இருந்தே கண்டுக்கினுதான் இருக்கோம்... என்ன புரயோசனம் இயக்குனருங்க கண்டுக்கனுமே.]]]
அட ஆமாம்ல்ல.. எழுதுறவரைக்கும் நியாபகம் இருந்தது.. எழுதும்போது மாறிருச்சே..! அதோட குறும்படத்துலகூட இந்தப் பொண்ணு நடிச்சிருக்குன்னு சொன்னாங்க..! தேடுவோம்..!
[[[வவ்வால் said...
அண்ணாச்சி,
சென்சார் போர்டு இருந்தா என்ன இல்லாட்டி என்ன, அப்போ மட்டும் யோக்கியமா படம் எடுக்க போறாங்களா? இல்லை படத்துக்கு விமர்சனம் மட்டும் யோக்கியமா எவனாவது எழுதி இருக்கானா? எல்லாருமே நாதாரிங்கதான் :-)) என்னையும் சேர்த்துதான்!]]]
என்னையும் சேர்த்துதான்..! கொஞ்சம் கொஞ்சம் பாலீஷாத்தான் தாக்க வேண்டியிருக்கு.. அரசியல் மாதிரி சினிமாவை நினைக்க முடியல பாஸ்..!
[[[//நினைத்த மாத்திரத்தில் டாஸ்மாக்கில் பழைய பாட்டில்களை விமல் அண்ட் கோ கையகப்படுத்துவது என்பதெல்லாம் படத்திற்காக திணிக்கப்பட்ட அவசர கதைகள் என்று தெரிவதால் மன்னிக்கலாம்.//
டாஸ்மாக்ல பழைய பாட்டில் எடுக்கிற காண்ராக்ட் ஐ என்னமோ நாசாவுக்கு ராக்கெட் செய்ய காண்ட்ராக்ட் எடுத்தாப்போல சொல்லுறிங்க?
சரக்கு பாட்டில் எடுக்க காண்ட்ராக்ட் விட யாருக்குமே உரிமையில்லை, ஏன் எனில் எல்லா பாட்டிலும் சரக்கு வாங்கினவங்களுக்கே சொந்தம், பாட்டிலுக்கும் சேர்த்து தான் காசு கொடுக்கிறோம்.
உண்மையில டாஸ்மாக்கில் பாட்டில் சேகரிப்பது ஒரு அதிகாரப்பூர்வமற்ற வேலை. இதுக்கெல்லாம் காண்ட்ராக்ட் என டெண்டரே கிடையாது.
ஆனால் பழைய பாட்டில்களை வாங்க என டாஸ்மாக் ஒரு டெண்டர் விடும், அதை வைத்துக்கொண்டு ,எல்லா பாருக்கும் போய் பாட்டில் வாங்குவார்கள்.
ஒவ்வொரு பாரிலும் சேரும் பாட்டில்கள் அந்த பார் ஏலம் எடுத்தவனுக்கும்,அங்கு இருக்கும் டாஸ்மாக் ஊழியருக்கும் சொந்தம், எனவே அவர்கள் வருவாயை பிரித்துக்கொண்டு ,பழைய பாட்டில்கள் வாங்கி ,டாஸ்மாக்கிற்கு விற்க டெண்டர் எடுத்தவனுக்கு கொடுப்பார்கள்.
இப்போ எல்லாம் லோக்கல் ஆளுங்கட்சி ஆட்கள் ஒரு கமிஷன் இதுக்கும் கேட்கிறார்கள். மற்றபடி அதிகாரப்பூர்வ காண்டராக்ட் எல்லாம் இல்லை.
எனவே ஒரு ஊரில் இருக்கும் பார்களில் இருந்து பாட்டில் சேகரிப்பது என்பது குப்பை பொறுக்குவது போலத்தான்.
பார் ஏலம் எடுத்தவன் மற்றும் டாஸ்மாக் ஊழியர் ஒத்துக்கொண்டால் போதும் எல்லா பாட்டிலும் உங்களுக்கு தான்.
நீங்க சொன்னது எல்லாம் ஊரில் இருக்கும் கடைக்கு என சொன்னால் போங்காட்டம், மாநில /மாவட்ட அளவில் என்றாலும் அது கடையில் பாட்டில் சேகரிக்க அல்ல, டாஸ்மாக் நிறுவனத்திற்கு விற்கவே, சேகரிப்பது என்பது தனிச்செயல். ஒவ்வொரு பாட்டிலும் குடிமகனுக்கு சொந்தம், குடிச்சவன் எல்லாம் பாட்டிலை கையோட எடுத்து போயீட்டால் பாரில் ஏது பாட்டில் ,எனவே அப்படி உரிமையில்லாத பாட்டிலுக்கு சேகரிக்க டெண்டர் விட சட்டத்தில் இடமில்லை.
ஹி...ஹி நான் எல்லாம் பாரிலேயே பாட்டிலை ஒரு மூலையில் தூக்கிப்போட்டு உடைத்துவிடுவேன் எவனும் கேட்க முடியாது ,கேட்டால் பாட்டிலுக்கு உனக்க்கும் என்ன சம்பந்தம்னு திருப்பி கேட்போம்ல.இதனால சில பார்களில் இருந்து டிபார் ஆனவன் :-))]]]
அப்பனே முருகா..!
2 வரி விமர்சனத்திற்கு 200 வரி விளக்கமா..? நன்றி..! இது போன்று உமது பொது அறிவு சேவையை என்றென்றும் தொடருமாய் கேட்டுக் கொள்கிறேன்..!
//ரெஜினாவை இப்போது தமிழகமே பாப்பா என்கிறது//
தமிழகமேவா?? அப்படி எல்லாம் இல்லியே...
படம் முழுவதிலும் அப்படியே என்றால், படம் பார்க்கும் சிறார்களுக்கு இதெல்லாம் சகஜம்தானே என்ற எண்ணமும் வந்துவிடாதா..?
மிக நல்ல கேள்வி.
அண்ணே முழு கதை சொல்லாம எப்படி விமர்சனம் எழுதுறதுன்னு பல தடவை சொல்வீங்க... இப்போ எப்படி எழுதிருக்கீங்க... ? இப்படியே கண்டினியூ பண்ணுங்க அண்ணே
//தனது மூலதனமான கண்ணை வைத்தே சீன் வைத்த பாண்டிராஜுக்கு பிந்துமாதவியும் ஒரு தேங்க்ஸ் சொல்லணும்..!//
அது பாண்டியராஜன். இவர் பாண்டிராஜ்? கன்பீஸ் ஆயிட்டீங்களா?
[[[! சிவகுமார் ! said...
//ரெஜினாவை இப்போது தமிழகமே பாப்பா என்கிறது//
தமிழகமேவா?? அப்படி எல்லாம் இல்லியே...?]]]
அப்படியா..? இன்னும் கொஞ்ச நாள்ல ரெஜினாவை என்ன பட்டப் பேர் வைச்சு கூப்பிடப் போறாங்கன்னு பாருங்கண்ணே..!
[[[மோகன் குமார் said...
அண்ணே முழு கதை சொல்லாம எப்படி விமர்சனம் எழுதுறதுன்னு பல தடவை சொல்வீங்க... இப்போ எப்படி எழுதிருக்கீங்க... ? இப்படியே கண்டினியூ பண்ணுங்க அண்ணே...]]]
ஐயையோ.. அப்போ நான் இதுல முழுக் கதையையும் சொல்லலியா..? சொதப்பிட்டனே..?!
[[[சீனு said...
//தனது மூலதனமான கண்ணை வைத்தே சீன் வைத்த பாண்டிராஜுக்கு பிந்துமாதவியும் ஒரு தேங்க்ஸ் சொல்லணும்..!//
அது பாண்டியராஜன். இவர் பாண்டிராஜ்? கன்பீஸ் ஆயிட்டீங்களா?]]]
இல்லீங்கண்ணா.. நான் சொன்னது பிந்துமாதவியைத்தான்..!
I am not satisfied in screenply. Only dialogues super otherwise not good this my feel . What happend pandiraj?
[[[vi jay said...
I am not satisfied in screenply. Only dialogues super otherwise not good this my feel . What happend pandiraj?]]]
காலத்தோடு ஒத்துப் போவோம் என்று நினைத்துவிட்டார்..! அவ்வளவுதான்..!
என்னண்ணே! ஒரு சில பிரபலபதிவர்கள் நெனச்சுச்சுண்டு திரிகிறவா, உங்க விமர்சனத்தை ஒரு வயித்தெரிச்சலுடன் விமர்சிக்கவே பின்னூட்டமிட வர்ர மாரி இருக்கு?
ஒரு சிலருக்கு ஒரு சிலர் பதிவைப்பார்த்தால்த்தான் எரியும்போல!!!இந்த வயித்தெரிச்சல் கோஷ்டில கடைசில எல்லா முண்டங்களையும் சேர்த்துப்புடலாம்போல!!!
உங்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப்போது, பாவம் அண்ணே நீங்க!
[[[வருண் said...
என்னண்ணே! ஒரு சில பிரபல பதிவர்கள் நெனச்சுச்சுண்டு திரிகிறவா, உங்க விமர்சனத்தை ஒரு வயித்தெரிச்சலுடன் விமர்சிக்கவே பின்னூட்டமிட வர்ரமாரி இருக்கு?
ஒரு சிலருக்கு ஒரு சிலர் பதிவைப் பார்த்தால்த்தான் எரியும்போல!!!இந்த வயித்தெரிச்சல் கோஷ்டில கடைசில எல்லா முண்டங்களையும் சேர்த்துப்புடலாம்போல!!!
உங்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போவுது, பாவம் அண்ணே நீங்க!]]]
யாரைச் சொல்றீங்கன்னு புரியல வருண்.. யாரும், யாரையும் பார்த்து எழுத்துல வயித்தெரிச்சல் படவே கூடாது.. முடியாது.. அவரவர்க்கு வருவதுதான் வரும்..!
சில கருத்து வேறுபாடுகளை நமக்கான எதிர்ப்புன்னும் எடுத்துக்க கூடாது..!
நல்ல படம் செமையா இருந்தது வயிறு வலிக்க சிரிச்சேன் .. நீங்கள் சொல்வது போல படம் முழுக்க ஹீரோக்கள் குடிக்கிறார்கள் என்பது நீங்கள் சொல்லும்போதுதான் எனக்கு உறுத்துகிறது . எனக்கு படம் பக்கும் பொது எதுவும் தெரியவில்லை. நான் எல்லா காட்சிகளிலும் நான் காமடி மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிந்தது.
[[[நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...
நல்ல படம் செமையா இருந்தது வயிறு வலிக்க சிரிச்சேன். நீங்கள் சொல்வது போல படம் முழுக்க ஹீரோக்கள் குடிக்கிறார்கள் என்பது நீங்கள் சொல்லும்போதுதான் எனக்கு உறுத்துகிறது. எனக்கு படம் பக்கும்பொது எதுவும் தெரியவில்லை. நான் எல்லா காட்சிகளிலும் நான் காமடி மட்டும்தான் என் கண்ணுக்கு தெரிந்தது.]]]
இதுதான் இயக்குநரின் திறமை..!
Post a Comment